என் மலர்
கோவில்கள்
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், திருப்புனித்துறையில் அமைந்திருக்கிறது, தாமரம்குளங்கரா தர்மசாஸ்தா கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், திருப்புனித்துறையில் அமைந்திருக்கிறது, தாமரம்குளங்கரா தர்மசாஸ்தா கோவில். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஐயப்பன், தன்வந்திரியின் மறு தோற்றமாகக் கருதப்படுகிறார். இவரை வழிபடும் பக்தர்களுக்கு அனைத்து விதமான உடல் நோய்களும் நீங்கி நலம் பெறுவர் என்பது நம்பிக்கையாகும்.
தல வரலாறு :
சாம்ராவட்டம் சாஸ்தா (ஐயப்பன்) கோவிலில் பூஜைப் பணி செய்தவர்களில் ஒருவர், மொரக்காலா மணா. இவர் குறிப்பிட்ட சில காரணங்களால், திருப்புனித்துறை என்னும் ஊருக்கு இடம் பெயர்ந்து சென்றார். அப்போது சாம்ராவட்டம் சாஸ்தா ஒரு பல்லி வடிவிற்கு மாறி, அவர் எடுத்துச் சென்ற பனை ஓலையிலான குடையின் மேல் அமர்ந்து அவருடன் சென்றார்.
திருப்புனித்துறை அருகில் ஒரு இடத்தில் அவர் ஓய்வெடுத்த போது, அவரது குடையிலிருந்த பல்லி கீழேக் குதித்தது. அந்தப் பல்லி, தன்னுடைய சாஸ்தா உருவத்தைக் காட்டி மறைந்தது. இதைக் கண்டு ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்த மொரக்காலா மணா, பல்லி விழுந்த இடத்திலேயே சாஸ்தாவிற்கு சொந்தமாக ஒரு கோவிலை கட்டினார். தினமும் அந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபட்டு வந்தார்.
மொரக்காலா குடும்பத்திற்குப் போதிய வரு மானம் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானதை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் கோவிலை எப்படி பராமரிப்பது? என்றும் அவர் வருத்தம் அடைந்தார். 1930-ம் ஆண்டில் கொச்சி மன்னரைச் சந்தித்த அவர், தான் பராமரித்து வந்தக் கோவிலை மன்னரிடம் ஒப்படைத்துச் சிறந்த முறையில் பராமரிக்கும்படி வேண்டினார். மன்னரும் அவர் வேண்டுதலை ஏற்றுக் கொண்டு, அந்தக் கோவிலில் தினசரி வழிபாடுகளைச் செய்திடத் தேவையான நிதியுதவிகளைச் செய்தார்.
இந்தியா விடுதலை பெற்ற பின்பு, மன்னராட்சி முறையிலான சிற்றரசுகள் அனைத்தும் காலியான நிலையில், கோவில் பராமரிப்புக்கும், வழிபாட்டிற்கும் மீண்டும் சிக்கல்கள் எழுந்தன. அதன் பிறகு, 1953-ம் ஆண்டில் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் ஒன்று சேர்ந்து கோவில் வழிபாட்டுக்கும், திருவிழா நடத்துவதற்கும் தேவையான திருப்பணிகளைச் செய்யத் தொடங்கினர்.
அந்தக் குழுவினர், 1963-ம் ஆண்டில் தாமரம்குளங்கரா ஐயப்ப சேவா சமிதி எனும் அமைப்பை உருவாக்கி, கோவில் வழிபாடு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். அதன் பின்னர், 1984-ம் ஆண்டில் கேரள அரசின் ஊரன்மா தேவஸ்தான வாரியத்திடம் கோவில் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், கோவில் வழிபாட்டுப் பணிகளைத் தாமரம்குளங்கரா ஐயப்பா சேவா சமிதியினர் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்று இக்கோவில் அமைந்த தல வரலாறும், அதன் நிர்வாகம் தொடர்புடைய வரலாறும் தெரிவிக்கின்றன.
கோவில் அமைப்பு
சாம்ராவட்டம் சாஸ்தா கோவிலுக்கு இணையானதாகக் கருதப்படும் இந்த ஆலயத்தின் கருவறையில் இருக்கும் சாஸ்தா, இடது காலை மடித்து அமர்ந்த நிலையில், வலது கையில் அமிர்த கலசம் ஒன்றை வைத்திருக்கும் தோற்றத்தில் காட்சி தருகிறார். அதன் காரணமாகவே, இத்தலத்தில் வீற்றிருக்கும் சாஸ்தாவை, தன்வந்திரி பகவானின் மறு தோற்றமாக மக்கள் கருதி வழிபாடு செய்கிறார்கள். இந்த ஆலயத்தின் வளாகத்தில் கணபதி, பத்ரகாளி, நாகராஜா, பிரம்ம ராட்சசன் ஆகியோருக்கு தனித் தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இங்கு சாஸ்தா என்று அழைக்கப்படும் ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மலையாள நாட்காட்டியின்படி, தை மாதம் முதல் நாளில் மகர விளக்குத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகரவிளக்கு தினத்திற்கு, ஐந்து நாட்களுக்கு முன்பாகக் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இந்த விழா தொடர்ச்சியாக ஆறு நாட்கள் வரை நடைபெறுகிறது. பங்குனி மாதம் 11-ம் நாள் கொடிமரம் எழுப்பப்பெற்ற நாளாகவும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திர நாள் ஐயப்பன் அவதரித்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் முதல் நாள் விசுத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இங்குள்ள பத்ரகாளி அம்மன் சன்னிதியில் நவராத்திரித் திருநாட்களும், கார்த்திகை மாதம் முதல் வெள்ளிக் கிழமை நாளில் களமெழுத்துப் பாட்டு நிகழ்வும் சிறப்பு விழா நாட்களாக அமைந்திருக்கின்றன. இதேபோல், இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மலையாள நாட்காட்டியின்படி கார்த்திகை மாதம் முதல் நாளில் தொடங்கி 41 நாட்கள் மண்டலபூஜை நடத்தப்படுகிறது.
இந்தக் கோவிலில் இருக்கும் சாஸ்தா, தன்வந்திரி பகவானின் மறு தோற்றமாகக் கருதப்படுவதால், இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு உடலில் எந்தவிதமான நோய்கள் இருந்தாலும், அது உடனடியாக நீங்கி நலம் பெறுவர் என்பது ஐதீகம். அதை இங்கு வந்து குணம் பெற்ற பல பக்தர்களும் உறுதிபடுத்துகிறார்கள்.
சாஸ்தாம் பாட்டு
சாஸ்தாம் பாட்டு என்பது கேரளாவின் மத்தியப் பகுதியில் இருக்கும் ஒரு மரபு வழியிலான இசைக்கலை வடிவமாகும். இதனை ஐய்யப்பன் பாட்டு என்றும் சொல்கின்றனர். இந்த இசை நிகழ்வில், ஐயப்பன் பிறப்பு பற்றிய பாடலும், ஐயப்பனைப் போற்றிப் பாடும் பாடல்களும் குழுவாகப் பாடப்படுகின்றன. இப்பாடலுக்கு உடுக்கு எனப்படும் இசைக்கருவியைக் கொண்டு, ஏற்ற இசையை இசைக்கின்றனர். தாமரம்குளங்கரா ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் சனிக்கிழமை நாளில் சாஸ்தாம் பாட்டு நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த நாளில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
இந்த ஆலயமானது, தினமும் காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், கொச்சியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது திருப்புனித்துறை திருத்தலம். இங்குள்ள தாமரம்குளங்கரா சாஸ்தா கோவிலுக்குச் செல்ல எர்ணாகுளம், கொச்சி ஆகிய இரண்டு ஊர்களில் இருந்தும் ஏராளமான நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தேனி மு.சுப்பிரமணி.

வடமாத்தூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காஞ்சி கரைகண்டேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஜவ்வாதுமலையில் தோன்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் பாய்ந்து வளம் சேர்ப்பது, சேயாறு ஆகும். இது பாலாற்றின் துணை ஆறாக விளங்குகின்றது. இதற்கு புராணக்கதை உண்டு. முருகப்பெருமான் தன் அன்னை பார்வதிக்காக நீரூற்று ஒன்றை உருவாக்கினார். அவர் அம்பெய்தி வந்த நீரூற்று ஆறாக பெருக்கெடுத்தது. அந்த வெள்ளப் பெருக்கில் ஏழு ரிஷிகள் மாண்டு போனார்கள். அந்த தோஷம் நீங்கிட சேயாற்றின் கரையோரம் ஏழு சிவாலயங்களை நிறுவி வழிபட்டுவந்த முருகன், தன் தோஷம் நீங்கப்பெற்றார். அதன் முதல் தலம், வடமாத்தூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள காஞ்சி கரைகண்டேஸ்வரர் ஆலயமாகும்.
வடமாத்தூர் திருத்தலமானது, திருவண்ணாமலையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக் கிறது. இங்கு மாணிக்க விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.
தலவரலாறு :
சுமார் ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு இவ்வூரில் வாழ்ந்த, சீதாராமன் என்ற அடியாருக்கு, தனது ஊரில் வழிபட ஏதும் ஆலயம் இல்லையே என்ற குறை இருந்தது. அதனால் நெடுந்தொலைவில் இருந்து ஒரு விநாயகர் சிலையை எடுத்து வந்து, தன் வீட்டின் அருகே வைத்திருந்தார். அவரையே மூலவராக்கி ஆலயம் எழுப்பவும் முடிவு செய்திருந்தார். ஆனால், அன்று இரவு அவருக்கு கனவு தோன்றியது. அதில் விநாயகப் பெருமானே காட்சி தந்து, “உன் ஊரிலேயே பல நூறு ஆண்டு களாக நான் மண்ணில் மறைந்திருக்கிறேன். என்னை எடுத்து நீ ஆலயம் எழுப்பு. அதில் நான் வெளிப்படுவேன். நான் இருக்குமிடம் நீ ஏர் உழும்போது வெளிப்படும்” என்று கூறி, தான் இருக்கும் அமைவிடத்தைக் காட்டி மறைந்தார்.
கனவு கலைந்து எழுந்த சீதாராமன், விடிந்ததும் ஏர் கலப்பையை எடுத்துக் கொண்டு, வயலுக்குச் சென்றார். அங்கு மாடுகளைப் பூட்டி வயலை உழுதார். நெடுநேரம் உழுதும் ஏதும் தென்படவில்லை. என்றாலும், மனம் தளராமல் உழுதுகொண்டே வந்தார். அப்போது ஏர் கலப்பையை மூன்று கருங்கற்கள் தடுத்து நிறுத்தின. அதைத் தோண்டி எடுத்த போது, அவற்றில் இரண்டு உருண்டை வடிவிலும், மற்றொன்று சிறிய மூஞ்சூறு வடிவிலும் காட்சி தந்தன. இதனால் மனம் மகிழ்ந்த அடியார், அதனை தன் இல்லத்திற்குக் கொண்டு வந்தார். அவருக்கு மீண்டும் குழப்பம். ‘உருவமற்ற இதில் எதை விநாயகராக பாவிப்பது?’ என்ற சிந்தனையிலேயே அன்றிரவு கண் அயர்ந்தார்.
அன்று இரவும் விநாயகப்பெருமான், அவர் கனவில் தோன்றி, “உன் விருப்பப் படியே ஏதேனும் ஒரு கல்லை மூலவராக்கிக் கொள். அதில் இருந்து நான் என் உருவத்தை வெளிப்படுத்துவேன்” என்று கூறி மறைந்தார்.
மறுநாள் தன் வீட்டின் அருகே கிழக்கு நோக்கியவாறு தனக்குப் பிடித்த அந்த உருண்டைக் கல்லையும், அதன் எதிரே சிறிய மூஞ்சூறு கல்லையும் நிறுவினார். மற்றொரு கல்லைத் தனியே ஆலயத்திற்குள் வைத்திருந்தார். காலச் சக்கரத்தில் அந்த உருண்டைக் கல்லில் இருந்து விநாயகரின் உருவம் வெளிப்படத் தொடங்கியது. அது முதல் அடியார் மட்டுமே வழிபட்டு வந்த இந்த விநாயகர், அப்பகுதி மக்கள் மனதிலும் இடம் பிடித்தார். அத்துடன் வேண்டிய வரங்களையும் அள்ளித் தரும் வள்ளலாகவும் அவர் விளங்கத் தொடங்கினார். இவரே மாணிக்க விநாயகர். இவரை மையமாக வைத்தே மதுரநாதீஸ்வரர், மரகதாம்பிகை, வள்ளி- தெய்வானை சமேத முருகன் சன்னிதி என அனைத்தும் உள்ளடக்கிய பெரிய ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது.
ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கிய ஆலயம், எளிய நுழைவு வாசலைக் கொண்டு விளங்குகிறது. வாசலின் மேற்பகுதியில் விநாயகர், சிவபெருமான், முருகன் என சுதை வடிவங்கள் அழகுறக் காட்சி தருகின்றன. உள்ளே நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் காட்சி தர, நாம் மேலும் உள்ளே நுழைகிறோம். கருங்கல் கூரை கொண்ட கருவறை முன்மண்டபத்தை அடுத்து, இடதுபுறம் எளிய வடிவில், அழகுறக் காட்சி தருபவர் சுயம்பு மூர்த்தியான மாணிக்க விநாயகர். இவரே கல்லில் இருந்து பொலியாமல் தன் உருவத்தை மெல்ல மெல்ல வெளிப்படுத்தி, இன்று சுயம்பு மூர்த்தி விநாயகராக அருள் வழங்குகிறார். இவருக்கு வலதுபுறம், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் எளிய வடிவில் அருளாசி வழங்குகிறார்.
ஆலயத்தின் நடு நாயகமாக இறைவன் மதுரநாதீஸ்வரர் புதுப்பொலிவோடு கிழக்கு முகமாய் வாசலை நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, கஜலட்சுமி, சண்டிகேசுவரர் ஆகியோரது சிலா வடிவங்கள் உள்ளன. அன்னை மரகதாம்பிகை சன்னிதி கி.பி. 1921-ல் கட்டப்பட்டு, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அன்னை மரகதாம்பிகை நின்ற கோலத்தில் எளிய வடிவுடன் அருளாசி வழங்குகிறார். உற்சவமூர்த்திகள் காப்பறை, அம்மன் சன்னிதியின் இடதுபக்கமாக இருக்கிறது. மாணிக்க விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், சோமாஸ்கந்தர், பிரதோஷ நாயகர், மரகதாம்பிகை என உற்சவர் திருமேனிகள் அழகுற அமைந்துள்ளன. ஈசான்ய மூலையில் நவக்கிரக சன்னிதியும், அதன் அருகே மேற்கு பார்த்த கால பைரவர் சன்னிதியும் காட்சி தருகின்றன.
தொடர்ச்சியாக மூன்று சதுர்த்தி தினங்களில் இந்த ஆலயம் வந்து, மாணிக்க விநாயகரை வழிபட்டுச் சென்றால், அனைத்து விதமான கிரக தோஷங்களும் அகலும் என்கிறார்கள். திரு மணத்தடை நீங்கவும், கணவன் - மனைவி பிணக்கு தீரவும், தாலி பாக்கியம் நிலைத்திடவும் இத்தலம் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் அமைந்துள்ளது வடமாத்தூர். சென்னை தென்மேற்கே 210 கி.மீ, போளூருக்கு தெற்கே 43 கி.மீ, செங்கத்திற்கு கிழக்கே 24 கி.மீ, திருவண்ணாமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் வடமாத்தூர் திருத்தலம் இருக்கிறது. திருவண்ணாமலை - காஞ்சி (காஞ்சிபுரம் அல்ல) பேருந்து வழித்தடத்தில் பெரியகுளம் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. பயணம் செய்தால் வடமாத்தூரை அடையலாம்.
பனையபுரம் அதியமான்

மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது திருமங்கலம் விக்கிரம சோழீசுவரர் ஆலயம். தற்போது இந்த ஆலயம் ‘பூலோகநாத சுவாமி திருக்கோவில்’ என்று அழைக்கப்படுகிறது.
காவிரி ஆறு பாய்ந்து வளப்படுத்தும் தஞ்சைத் தரணியில், வரலாற்றுச் சிறப்பு மிக்க பல திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள திருமங்கலம் விக்கிரம சோழீசுவரர் ஆலயம். தற்போது இந்த ஆலயம் ‘பூலோகநாத சுவாமி திருக்கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. கல் வெட்டுகளில் ‘விக்கிரம சோழீசுவரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தின் மூலவர் ‘பூலோகநாத சுவாமி’, லிங்கத் திருமேனியாக உள்ளார். கோவிலின் இடதுபுறம் அம்மன் சன்னிதி தனிக்கோவிலாக உள்ளது.
பூலோகவாசிகளுக்கு, ஈசன் தனது திரு மணக் கோலத்தை தரிசிக்க அருள்புரிந்த தலம். திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்ய குபேரன், பொன் பெற்று மாங்கல்யம் செய்த தலம். வசிஷ்டர் - அருந்ததி தம்பதியர் ‘மிருத்யுஞ்ஜெய ஹோமம்’ செய்தபோது, பிரயோக கால சம்ஹார மூர்த்தியாக, எமன், மார்க்கண்டேயர் சகிதம் ஹோமத் தீயில் இருந்து ஈசன் வெளிவந்த தலம் என பல்வேறு சிறப்பு களைக் கொண்டதாக திருமங்கலம் திருத்தலம் விளங்குகிறது.
திருமணஞ்சேரியில் ஈசனுக்கும், தேவிக்கும் திருமணம் முடிகிறது. இந்த திருமணக் காட்சியை தரிசிக்க, தேவலோகமே திரண்டு விட்டது. எங்கு பார்த்தாலும் தேவர்கள்தான். பூலோகவாசிகளான, சாதாரண மக்களால் இறைவனின் திரு மணக் காட்சியைக் காண முடியவில்லை. அவர்களின் வருத்தத்தை புரிந்துகொண்ட அம்மையும், அப்பனும் ‘சப்தபதி’ என்ற சடங்கை நிறைவேற்றுவதுபோல், ஏழு அடி எடுத்து வைத்தனர். அப்படி அவர் ஏழு அடியில் வந்து நின்ற இடம் ‘திருமங்கலம்’ திருத் தலம். இங்குதான் இறைவனின் திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டது. மகாலட்சுமியே, திருமாங்கல்யத்திற்கான பொன்னை குபேரனிடம் கொடுத்ததாக ஐதீகம். எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால், திருமணம் கைகூடும். மாங்கல்ய தோஷம் இருந்தால் அகலும்.
ஈசனும், அம்பாளும் மக்களுக்கு அருள்பாலிக்க இங்கு வந்த அதே தருணத்தில், வசிஷ்டர்- அருந்ததி முதலானோரும் இங்கு வந்தனர். அவர்கள் ‘மிருத்யுஞ்ஜெய ஹோமம்’ செய்ய தலைப்பட்டனர். அதனை அவர்கள் செவ்வனே நடத்தி பூர்த்தி செய்யும் வேளையில், அந்த வேள்வித் தீயில் இருந்து, சிவபெருமான் ‘காலசம்ஹார மூர்த்தி’யாக காட்சி தந்தார். அதுவும் எமனை காலால் உதைத்து, சூலத்தால் குத்துவதற்கு எத்தனித்தபடியும், மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை தழுவியிருக்கும் நிலையிலும் அந்தக் காட்சி இருந்தது.
வசிஷ்டர் - அருந்ததி தம்பதியர் மற்றும் பூலோகவாசிகள் அனைவரும் இந்தக் காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார்கள். அவர்களின் வாய், சிவநாமத்தை உச்சரித்தபடி இருந்தது. இதன் காரணமாக இந்த ஆலயத்தில் காலசம்ஹார மூர்த்தி சன்னிதியில் வைத்து, சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்வுகள், வேள்விகளோடு நடத்தப்படுகிறது. சிவராத்திரி அன்று, முதல் ஜாம பூஜையை இந்த திருமங்கல பூலோகநாதர் சன்னிதியிலும், இரண்டாம் ஜாம பூஜையை அருகிலுள்ள மாங்குடியில் சிவலோகநாதர் ஆலயத்திலும், மூன்றாம் ஜாம பூஜையை அதற்கும் அருகிலுள்ளபொய்கைகுடி நாகநாதர் ஆலயத்திலும், நான்காம் ஜாம பூஜையை மீண்டும் இதே திருமங்கலம் பூலோக நாயகி சமேத பூலோகநாதர் சன்னிதியிலும் தரிசித்து வந்தால், மூவுலகிலும் உள்ள அனைத்து சிவலிங்கங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
இத்தலத்து முருகன் கையில் ஜெப மாலையுடன், மயில்மேல் அமர்ந்தபடி, ‘பிரம்ம சாஸ்தா’ நிலையில் காட்சி தருகிறார். இத் தலத்து நந்தியம் பெருமான் தனது வலது முன் காலை தூக்கி வைத்து, புறப்படுவதற்கு தயார் நிலையில் இருப்பது போல், எம்பெருமான் முன் அமர்ந்த நிலையில் உள்ளதும் மிகவும் விசேஷமானது.
அமைவிடம்
மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடு துறைக்கு அருகில் உள்ள குத்தாலம்- திருமணஞ்சேரி இடையே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திருமங்கலம் திருத்தலம் இருக்கிறது. இவ்வூரின் அருகாமையில் புகழ்பெற்ற திருமணஞ்சேரி (எதிர்கொள்பாடி), திருவேள்விக்குடி, முருகமங்கலம் போன்ற கோவில்களும் அமைந்துள்ளன.
அறந்தாங்கி சங்கர்

வேலூர் மாவட்டம், திருப்பாற்கடல் என்ற கிராமத்தில் காஞ்சிபுரம் அத்தி வரதரை போலவே, மிகவும் அபூர்வமான அத்தி மரத்தினால் ஆன அத்தி ரங்கநாத பெருமாள் கோவில் கொண்டிருக்கிறார்.
வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் திருப்பாற்கடல் என்ற ஊர் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் 107-வது திவ்யதேசமாக அழைக்கப்படுவது திருப்பாற்கடல். (திருமால் பள்ளிகொண்டிருக்கும் திருப்பாற்கடலை, 107-வது திவ்ய தேசமாக சொல்பவர்களும் உண்டு). இந்த கிராமத்தில் காஞ்சிபுரம் அத்தி வரதரை போலவே, மிகவும் அபூர்வமான அத்தி மரத்தினால் ஆன அத்தி ரங்கநாத பெருமாள் கோவில் கொண்டிருக்கிறார். ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட நிலையில் காட்சி தரும் இந்த பெருமாள் வீற்றிருக்கும் ஆலயமானது, சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ஆகும்.
கோவில் வரலாறு
திருப்பாற்கடலின் ஆதிசேஷன் மேல் சயனித்து கொண்டிருக்கும் திருமாலின், நாபிக் கமலத்தில் இருந்து தோன்றியவர் பிரம்மதேவன். பரம்பொருளின் நாபிக் கமலத்தில் இருந்து பிறந்ததால் பிரம்மனுக்கு அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரமே அவரை, திருமாலை தரிசிக்க முடியாத நிலைக்குத் தள்ளியது. இதனால் வருந்திய அவர், பூலோகம் வந்து காஞ்சிபுரத்தில் யாகம் செய்ய நினைத்தார். சரஸ்வதியை தன்னுடன் வந்து யாகத்தில் கலந்து கொள்ளும்படி அழைத்தார். ஆனால் பிரம்மனுடன் இருந்த பிணக்கு காரணமாக, யாகத்திற்கு வர சரஸ்வதி மறுத்து விட்டார். எனவே தன்னுடைய மற்ற மனைவியரான சாவித்திரி, காயத்ரி ஆகியோரோடு காஞ்சிபுரம் வந்து யாகத்தை தொடங்கினார், பிரம்மதேவன்.
இதனால் கடுங்கோபம் கொண்ட சரஸ்வதி, பிரம்மனின் யாகத்தை அழிக்கும் நோக்கில், வேகவதி நதியாக உருவெடுத்து யாகம் நடைபெற்ற இடத்தை நோக்கி ஓடிவந்தார். அப்போது பிரம்மதேவன், திருமாலை நோக்கி பிரார்த்திக்க, இறைவன் ஆதிசேஷன் மீது சயனித்த கோலத்தில் வெள்ளம் வரும் பாதையின் குறுக்கே படுத்து நதியை தடுத்தார். யாகமும் பூர்த்தியடைந்தது. பிரம்மாவின் பிரார்த்தனைக்கு இணங்கி பக்தர்களுக்கு நிரந்தரமாக சேவை சாதிக்க இறைவன் ஒப்புக்கொண்டார். ஷீராப்தி (திருப்பாற்கடல்)யில் உள்ள திருக்கோலத்துடனேயே இந்த தலத்திலும் இறைவன் காட்சி தருவதால், இறைவனுக்கு ‘ஷீரப்திநாதன்’ என்று பெயர். ஊரின் பெயரும் திருக்கரைபுரம் என்றானது. அதுவே மருவி தற்போது ‘திருப்பாற்கடல்’ என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக தாய்மார்களுக்கு பெற்ற மகன்களை விட, மகள்கள் இடத்தில்தான் பாசம் போகும் என்பார்கள். அதேபோல தான் இந்த தாயாருக்கு பெண்கள் இடத்தில் அதிக பாசம் உண்டு. திருமணமாகாத பெண்கள், இந்த ரங்கநாயகி தாயாரை தேன் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால், அன்னை மனம் குளிர்ந்து திருமணம் செய்து வைப்பாள் என்பது ஐதீகம். இதேபோல குழந்தை இல்லாதவர்கள், தாயாருக்கு பாலால் திருமஞ்சனம் செய்து சன்னிதி படியை நெய்யால் மொழுகி, சர்க்கரையால் கோலமிட்டால் குழந்தை பேறு என்னும் சந்தான பாக்கியத்தைத் தருகிறாள்.
ரங்கநாயகி தாயாரின் அனுமதி பெற்று அத்தி ரங்கநாதர் சன்னிதியை அடைந்தால், அங்கு மூலவர் ஆனந்த சயன கோலத்தில் சேவை சாதிக்கிறார். சுமார் 9 அடி நீளமும், 3 அடி உயரமும் உள்ள ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட நிலையில் இந்த பெருமாள் அருள்பாலிக்கிறார். அவரது திருமுடி அருகே ஸ்ரீதேவியும், திருவடி அருகே பூதேவியும் இருக்க, பெருமாளின் நாபியில் எழும் தாமரைத் தண்டின் மீது பிரம்மதேவன் அமர்ந்திருக்கிறார். இவை அனைத்துமே அத்தி மரத்தால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.
வைகுண்ட ஏகாதசியன்று அத்தி ரங்கநாத பெருமாளை தரிசனம் செய்தால், சொர்க்கத்திற்கு செல்லலாம் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
மூலவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால், அவருக்கு திருமஞ்சனம் கிடையாது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தைலக்காப்பு நடைபெறும். இந்த நாட்களில் பெருமாளின் முக தரிசனம் பார்த்தால் நினைத்த காரியம் கைகூடும். புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகளிலும் பூவங்கி சேவை நடைபெறுகிறது. நவராத்திரியில் 9 நாட்களும் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று பெருமாளுக்கும், தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இக்கோவிலின் தல விருட்சமாக வன்னி மரமும், பின்ன மரமும் இருந்து வருகிறது. திருமணம் ஆகாத பெண்கள், வன்னிமரத்தை 5 முறை வலம் வந்தால் தீய காற்றுகள் அண்டாது என்பது நம்பிக்கை.

வேகநதி என்ற பாலாற்றின் நடுவில் சயனித்து கொண்டு இருப்பதால், இத்தல இறைவனுக்கு ‘ரங்கநாதர்’ என்ற பெயர் வந்தது. இந்த பெருமாளை தரிசனம் செய்தால் சித்ரகுப்தன் எழுதி வைத்த நம்முடைய பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இத்தல மூலவரான அத்தி ரங்கநாதர், ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட நிலையில் காட்சி தருகிறார். 24 கால் மண்டபத்தை கடந்து உள்ளே சென்றதும் இடப்புறம் தாயார் சன்னிதி வருகிறது. அங்கு ரங்கநாயகி தாயார் அற்புதமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.
பன்னிரு கரங்கள் கொண்டு விளங்கும் இந்த அன்னையின் முன் இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரையும், மற்ற கரங்கள் தாமரை மலர்களைத் தாங்கியும் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ரங்கநாயகி தாயாருக்கு ‘பெரிய பிராட்டி’ என்ற பெயர் உண்டு. அதாவது ‘எல்லாத் தாயார்களுக்கும் பெரியவர் அல்லது மூத்தவர்’ என்று பொருள். திருப்பாற்கடல் ரங்கநாயகி தாயாரும், ஸ்ரீரங்கம் தாயார் போல ‘பெரிய பிராட்டி’யாகவே காட்சி தருகிறார்.
பொதுவாக தாய்மார்களுக்கு பெற்ற மகன்களை விட, மகள்கள் இடத்தில்தான் பாசம் போகும் என்பார்கள். அதேபோல தான் இந்த தாயாருக்கு பெண்கள் இடத்தில் அதிக பாசம் உண்டு. திருமணமாகாத பெண்கள், இந்த ரங்கநாயகி தாயாரை தேன் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால், அன்னை மனம் குளிர்ந்து திருமணம் செய்து வைப்பாள் என்பது ஐதீகம். இதேபோல குழந்தை இல்லாதவர்கள், தாயாருக்கு பாலால் திருமஞ்சனம் செய்து சன்னிதி படியை நெய்யால் மொழுகி, சர்க்கரையால் கோலமிட்டால் குழந்தை பேறு என்னும் சந்தான பாக்கியத்தைத் தருகிறாள்.
ரங்கநாயகி தாயாரின் அனுமதி பெற்று அத்தி ரங்கநாதர் சன்னிதியை அடைந்தால், அங்கு மூலவர் ஆனந்த சயன கோலத்தில் சேவை சாதிக்கிறார். சுமார் 9 அடி நீளமும், 3 அடி உயரமும் உள்ள ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட நிலையில் இந்த பெருமாள் அருள்பாலிக்கிறார். அவரது திருமுடி அருகே ஸ்ரீதேவியும், திருவடி அருகே பூதேவியும் இருக்க, பெருமாளின் நாபியில் எழும் தாமரைத் தண்டின் மீது பிரம்மதேவன் அமர்ந்திருக்கிறார். இவை அனைத்துமே அத்தி மரத்தால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.
வைகுண்ட ஏகாதசியன்று அத்தி ரங்கநாத பெருமாளை தரிசனம் செய்தால், சொர்க்கத்திற்கு செல்லலாம் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
மூலவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால், அவருக்கு திருமஞ்சனம் கிடையாது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தைலக்காப்பு நடைபெறும். இந்த நாட்களில் பெருமாளின் முக தரிசனம் பார்த்தால் நினைத்த காரியம் கைகூடும். புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகளிலும் பூவங்கி சேவை நடைபெறுகிறது. நவராத்திரியில் 9 நாட்களும் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று பெருமாளுக்கும், தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இக்கோவிலின் தல விருட்சமாக வன்னி மரமும், பின்ன மரமும் இருந்து வருகிறது. திருமணம் ஆகாத பெண்கள், வன்னிமரத்தை 5 முறை வலம் வந்தால் தீய காற்றுகள் அண்டாது என்பது நம்பிக்கை.
பனப்பாக்கம் நேதாஜி
நாகர்கோவில் பொற்றையடியில் இருக்கும் ஸ்ரீசீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம் சாய்பாபா பக்தர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மத பக்தர்களையும் வா...வா.. வென அழைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
கடல் அலை தாலாட்டும் கன்னியாகுமரியில் ஆன்மீக அன்பர்களின் மனம் கவர்ந்த கோவில்கள் ஏராளம் உள்ளன. இதில் நாகர்கோவிலில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொற்றையடியில் இருக்கும் ஸ்ரீசீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம் சாய்பாபா பக்தர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மத பக்தர்களையும் வா...வா.. வென அழைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த ஆலயம் அமைந்திருக்கும் இடம் குமரி மாவட்டத்தில் சித்தர்கள் வாழ்ந்த மருந்துவாழ் மலையின் அடி வாரத்தில் இருப்பது. இன்னொன்று ஆலயத் தின் எதிரே ரம்மியமாக காட்சி யளிக்கும் ஏரி. கோவிலை சுற்றி வளர்ந்து நிற்கும் அரிய வகை மரங்கள், பூஞ்சோலைகள் மனதை சுண்டி இழுப்பதாக இருப்பது. இவையே இந்த கோவிலை நோக்கி நம்மை நகர வைக்கிறது.
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருவோர் இக்கோவிலை கண்டதும் அவர்களாகவே இக்கோவிலுக்கு செல்வதன் மூலம் இதனை உண்மை என நாம் உணர்ந்து கொள்ளலாம்.
இத்தனை சிறப்புமிக்க இக்கோவில் இங்கு உருவாக காரணமானவர் யார்? என நாம் விசாரித்த போது நாகர்கோவிலை சேர்ந்த தொழில் அதிபர் நேப்பால் ராஜ் என்பவர் தான் இதனை உருவாக்கினார் என கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர். நேப்பால்ராஜ்ஜை சந்தித்து கோவில் உருவானவிதம் பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-
இக்கோவிலை கட்டும் முன்பு எனக்கு சீரடி சாய் பாபா பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஒரு முறை வியாபார விஷயமாக நான் மும்பை சென்றேன். அங்கிருந்து நான் அவுரங்காபாத் செல்ல வேண்டும். என்னுடன் ஆந்திராவை சேர்ந்த நண்பர் ஒருவரும் வந்தார். நாங்கள் அவுரங்காபாத் புறப்பட்ட போது நண்பர் என்னை சீரடி கோவிலுக்கு சென்று சாய்பாபாவை தரிசித்து விட்டு செல்லலாம் என கூறினார்.
அவரது விருப்பப் படிதான் நான் முதல்முறையாக சீரடி சென்றேன். அங்கு என் மனக்குறைகளை கூறி வேண்டிக்கொள்ளும்படி நண்பர் கூறினார். அவர் சொன்னபடி நானும் வேண்டிக்கொண்டேன். அதன்பின்பு தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. நான் வேண்டிக்கொண்ட காரியங்கள் நினைத்தபடி நடந்தது. அது என்னை சீரடி சாய்பாபாவின் பக்தனாக மாற்றியது. தொடர்ந்து ஒவ்வொரு காரியத்தையும் அவரை நினைத்தே செய்ய தொடங்கினேன். அவை அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறியது. என் மனைவியின் கனவிலும் சீரடி சாய்பாபா வந்து சென்றார். அவர் கொடுத்த தைரியத்தில் நாகர்கோவிலில் அவருக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
இது பற்றியும் நான் சீரடி சென்று சாய்பாபாவின் தீவிர பக்தரான டாக்டர் சந்திரபானு சத்பதியிடம் தெரிவித்தேன். அவர் இப்போது கோவில் அமைந்துள்ள இடம் விரைவில் உன் கைக்கு வரும். அந்த இடத்தில் கோவில் கட்டு என்று கூறினார். அவரே அதற்கான திட்டங்களையும் வகுத்து கொடுத்தார். அதன்படி பணி களை தொடங்கினேன்.
எங்கள் குடும்பத்தின் சார்பில் ஒரு அறக் கட்டளையை உருவாக்கி அதன்மூலம் கோவில் கட்டும் பணியை தொடங்கினேன். இங்குள்ள சத்குரு டி.கே.எஸ். அய்யாவின் வழிகாட்டுதலின் பேரிலும், அவரது முன்னி லையிலும் கோவில் உருவாக் கப்பட்டது.
2009-ம் ஆண்டு பூமி பூஜை நடந்தது. அதன்பின்பு விறுவிறுவென கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்றன. கோவிலின் கீழ் தளத்தில் தியான மண்டபமும், கோவிலின் வலது புறம் வெற்றி வினாயகர் சன்னதியும், இடது புறம் ஸ்ரீதத்தாத்ரேயர் சன்னதியும் அமைக்கப்பட்டது.
இது தவிர சீரடியில் இருப்பது போல சாய்பாபா பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் துவாரகமாயி மடமும் அமைக்கப்பட்டது. இங்கு 24 மணி நேரமும் எரியும் உதிபிரசாத மாடமும் உருவாக்கப்பட்டது. இந்த மாடத்தில் ஆல், வேம்பு, அரசு, பலா, மா, அத்தி, அருகம்புல் ஆகிய 7 வகை மரக்கட்டைகளை பயன்படுத்தி உதிபிரசாதம் தயாரிக்கப்படுகிறது. இது தான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
கோவிலின் கீழ் தளத்தில் இருந்து மேல் தளத்திற்கு சென்றால் அங்கு சீரடி சாய்பாபாவின் சன்னதி அமைந்துள்ளது. அங்கு பாபா அருட்பார்வையுடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் சிலை உள்ளது. இது ஜெய்ப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். சாய்பாபாவின் சிலை ஜெய்ப்பூரில் உருவாக்கப் பட்டதும், அதனை சீரடி கொண்டு சென்று அங்கேயே 9 மாதங்கள் வைத்திருந்தோம்.அதன்பின்பே இச்சிலை பொற் றையடி கொண்டு வரப் பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி நடைபெற்றது. அன்றிலிருந்து கோவி லுக்கு வரும் பக்தர்கள் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இக்கோவில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக் தர்கள் சாய்பாபாவின் ஈர்ப்பையும், அவரது அருளாசியையும் பெற்று செல்கிறார்கள். இவ் வாறு அவர் கூறினார்.
இக்கோவிலில் ஆண்டு தோறும் வருஷாபிஷேகம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். அன்று சாய்பாபாவுக்கு 3006 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்படும். இது போல சாய்பாபாவுக்கு மிகவும் பிடித்த ராமநவமி தினமும், குரு பூர்ணிமா நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறும். இதுபோல விஜயதசமி விழாவும் கோலாகலமாக கொண்டாடப்படும். இவ் விழாக்களில் ஏராளமானோர் கலந்து கொண்டு பாபா வின் அருளையும், ஆசி யையும் பெற்று செல்கிறார்கள்.
சூரிய காந்தக்கல்
அக்டோபர் 15-ந் தேதி சாய்பாபா ஜீவசமாதி அடைந்த நாளில் பொற் றையடி ஆலயத்தில் சூரியனின் ஒளிபடும் விதத்தில் சூரியகாந்த கல் அமைக்கப்பட்டு உள்ளது. பாபா சன்னதியில் அமைந்துள்ள இக்கல்லின் மீது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 15-ந் தேதி சூரியனின் ஒளிக் கதிர்கள் பட்டு அந்த கல் ஒளிருவதை பார்த்தால் பாபாவே நேரில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது போல இருக்கும். ஒளி விழும்போது கோவிலுக்குள் இந்திரலோக பிரகாசமும், திவ்ய அதிர்வுகளும் ஏற்படுவதை பக்தர்கள் உணர்ந்து உள்ளனர். இதனை காண கண்கோடி வேண்டும். பாபாவின் உடனிருப்பை உணர கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதற்காகவே பலரும் அக்டோபர் 15-ந் தேதி கோவிலுக்கு வர காத்திருப்பார்கள்.
வழிபாடுகள்
பொற்றையடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் தினமும் காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 6.45 மணிக்கு காலை ஆரத்தியும், 7.15 மணிக்கு மங்கல அபிஷேகமும், 7.45-க்கு 108 நாமவாரியும் நடக்கிறது.
பகல் 12 மணிக்கு மதியான ஆரத்தியுடன் நடை சாத்தப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 6.30 மணிக்கு மாலை ஆரத்தி, 8 மணிக்கு இரவு ஆரத்தி, 8.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
கூட்டு பிரார்த்தனை
ஒவ்வொரு வியாழக்கிழமையும் பகல் 11.45. மாலை 6.15, இரவு 7.45 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடைபெறுகிறது. சிறப்பு மிக்க இக்கோவிலுக்கு நாமும் ஒரு முறை சென்று வருவோம். சாய்பாபாவின் அருளாசியை பெற்று வரு வோம்.... கோவில் தொடர்பான மேலும் விவரங்களுக்கு செல்போன் எண்: 90030 24270.
குழந்தை வரம் அருளும் பாபா
சாய்பாபாவை பின் பற்றும் பக்தர்களுக்கு அவர் தொடர்ந்து ஆசி வழங்கி வருகிறார். இதுபோல பொற்றையடி சாய்பாபா ஆலயத்திற்கு வரும் பக்தர்களில் பலருக்கும் அவர் பல அற்புதங்களை செய்து வருகிறார். குறிப்பாக குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்களுக்கு மழலை பாக்கியம் கிடைப்பதாக இங்கு வந்து சென்ற பக்தர்கள் பலரும் உள்ளம் உருக தெரிவித்தனர்.
ஆயிரம் செல்வங்கள் இருந்தும் மழலை செல்வம் இல்லையே என்று ஏங்கும் பக்தர்களின் வேண்டு தல்களை பொற்றையடி ஆனந்த ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் சாய்பாபா தீர்த்து வைக்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திண்டுக்கல் வடமதுரையில் உள்ளது பிரசித்தி பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில். இந்த கோவிலில் சவுந்தரவள்ளி தாயார் உடனுறை சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
திண்டுக்கல் நகருக்கு கிழக்கே 20 கி.மீ தொலைவில் வடமதுரை உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சவுந்தரராஜ பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் சவுந்தரவள்ளி தாயார் உடனுறை சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வல்லக் கொண்டமநாயக்கர் மகன் ருத்ரப்ப நாயக்கரால் திருப்பணி நடைபெற்றதாக கல்வெட்டு கூறுகிறது. இந்த கோவிலில் விலை உயர்ந்த நகைகள் ஏராளமாக இருந்ததாம். அதை அறிந்த திருடர்கள் அந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அப்போது திப்பு சுல்தான், நகைகளை மீட்டுத் தந்ததாக செவிவழி செய்தி உலவுகிறது.
சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கோவிலில் 15 அடி உயரத்தில் பழங்கால சுற்றுச்சுவர் உள்ளது. இது கோவிலுக்கு அரணாக இருக்கிறது. இங்கு சவுந்தரராஜ பெருமாளுக்கும் சவுந்தரவள்ளி தாயாருக்கும் தனித்தனியாக சன்னதிகள் அமைந்துள்ளன. மேலும், கருடாழ்வார், விஷ்ணு, துர்க்கை, சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர் மற்றும் ஆண்டாளுக்கும் தனித்தனியாக சன்னதிகள் உள்ளன.
மேலும் வாகன மண்டபம், யாகசாலை, மடப்பள்ளி, கொடிக்கம்பம் மற்றும் கோவிலின் நுழைவு வாயிலின் முன்புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும், தீபக் கம்பமும் அமைந்துள்ளது. இது வைணவத்தின் தென்கலைக் கோவிலாகும். பாஞ்சராத்ர ஆகம முறைப்படி வழிபாடு நடைபெறுகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமாக பால் கேணி ஒன்று அமைந்துள்ளது. இது 10 அடி நீளமும், 10 அடி அகலமும், 10 அடி ஆழமும் உடைய இப்பால் கேணியில் வறட்சியான காலங்களில் கூட தண்ணீர் வற்றாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு ஒவ்வொரு ஆடி மாதமும் பிரமோற்சவத் திருவிழா நடைபெறுகிறது. 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் கொடியேற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் சாமி புறப்பாடு நடைபெறும். இதில் அனுமார், சிம்மம், கருடன், சேஷம், யானை உள்ளிட்ட வாகனங்களில் சவுந்தரராஜபெருமாள் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
மேலும் திருவிழாவின் 7-ம் நாளில் திருக்கல்யாணமும், ஆடிப் பவுர்ணமி நாளில் திருத் தேரோட்ட உற்சவமும் நடை பெறுகிறது. குதிரை வாகனத்தில் மின் அலங்காரத்துடன் வீதி உலா மற்றும் முத்துப் பல்லக்கில் பெருமாள் உற்சவம் வரும் நாட்களில் சுற்று வட்டார கிராமத்தினர் திரளாக வந்து பெருமாளை வழிபட்டு அருள் பெற்று செல்கின்றனர்.
அப்போது 8 நாட்கள் நடைபெறும் மாட்டுத்தாவணி நிகழ்ச்சியும் உண்டு. அதில் பல்லாயிரக்கணக்கில் கால்நடைகள் கூடி நிற்கும் கண்கொள்ளாக் காட்சியை பார்க்க பலரும் கூடுவார்கள். இந்த வந்து சவுந்தரராஜ பெருமாளை தரிசித்தால் தொழில்வளம் பெறும். அதேபோல் குடும்பம் செழித்தோங்கும், திருமண யோகம் கூடி வரும், நீண்ட ஆயுளுடன் எல்லா வளமும் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்.

தெலுங்கானா மக்களின் காவல் தெய்வம் என்ற சிறப்பை கொண்டதாக திகழ்கிறது, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்திருக்கக் கூடிய பெத்தம்மா திருக்கோவில்.
தெலுங்கானா மக்களின் காவல் தெய்வம், ஐதராபாத் நகரின் புகழ்பெற்ற திருக்கோவில், துர்க்கையின் அம்சமாகத் தோன்றிய அன்னை, அம்பாளின் கருணைக்காகவே திருவிழா எடுக்கப்படும் ஆலயம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்திருக்கக் கூடிய பெத்தம்மா திருக்கோவில்.
‘பெத்தம்மா’ என்பதற்கு ‘பெரிய அம்மன்’ என்று பொருள். இந்தத் திருக்கோவிலானது, ஐதராபாத் நகரிலேயே மிகவும் புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. சுமார் 200 ஆண்டு களுக்கு முற்பட்டதாக, இந்த துர்க்கை அம்மன் ஆலயம் கருதப்படுகிறது. மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு, பழமை வாய்ந்ததாக இருந்த இந்த ஆலயம் அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, புத்துணர்வு பெற்று நிற்கிறது.
இந்தக் கோவில் தோன்றியதற்கு பல்வேறு விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் தற்போது தல வரலாறாக இருக்கும் கதையை நாம் பார்ப்போம்.
தேவர்களுக்கும், முனிவர் களுக்கும், மக்களுக்கும் துன்பத்தை விளைவித்து வந்த ஒரு அசுரனுடன் துர்க்கை தேவி போரிட்டாள். அந்த அசுரனை வதம் செய்தபிறகு, அந்த களைப்பு நீங்க அவளுக்கு தண்ணீர் தேவைப்பட்டது. இதையடுத்து இந்தத் திருத்தலம் அமைந்த இடத்தில் இருந்த ஒரு கிணற்றின் நீரை அருந்தி, துர்க்கை அம்மன் தாகம் தணித்துக் கொண்டாள்.
அப்போது அந்த வழியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர், துர்க்கை அம்மனைக் கண்டான். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அன்னையின் திருவுருவம் மறைந்தது. தனக்கு தெய்வத்தின் அருள்காட்சி கிடைத்ததை நினைத்து மனம் மகிழ்ந்தார். மேலும் அன்னை காட்சி தந்த இடத்திலேயே ஒரு சிலை இருப்பதையும் கண்டார். அந்த சிலை இருந்த இடத்தை மையமாக வைத்து உருவானதே, தற்போது இருக்கும் ‘பெத்தம்மா ஆலயம்’ என்பது தலவரலாறு.
இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் 1993-ம் ஆண்டு கட்டப்பட்டது. இருப்பினும் அன்னை பெத்தம்மாவின் அளப்பரிய சக்தியின் காரணமாக, இந்த ஆலயம் ஐதராபாத் மக்களின் மனம் கவர்ந்த திருக்கோவிலாக திகழ்ந்து வருகிறது.
ஆலய அமைப்பு :
சாலையோரத்தில் பிரமாண்ட வளைவு நம்மை வரவேற்கிறது. அதைக் கடந்து சென்றால் ஆலயத்தின் 7 நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. ராஜகோபுர வாசலைக் கடந்து உள்ளே நுழைந்தால், கொடிமரம் காட்சி தருகிறது. அதை வணங்கிச் சென்றால், மகா மண்டபம் வண்ண சிற்பங்களால் மிளிர்வதைக் காணலாம். மகா மண்டபத்திற்கு நேர் எதிரில் கருவறை முன்மண்டபம் உள்ளது. கருவறையில் அன்னை பெத்தம்மா, அமர்ந்த நிலையில் எழிலாக காட்சி அருள்கிறாள். ஒளிவீசும் முகத்தில் புன்னகை தவழ, நான்கு கரத்தைக் கொண்டவளாக, சிம்ம வாகனத்தின் மீது அமர்ந்தபடி கம்பீரமாக அன்னை பெத்தம்மா காட்சிதருகிறாள். நான்கு கரங்களில் வலது மேல் கரத்தில் சக்கரமும், இடது மேல் கரத்தில் சங்கும், வலது கீழ் கரத்தில் வாளும், இடது கீழ் கரத்தில் சூலம் மற்றும் குங்குமக் கிண்ணமும் தாங்கி அன்னை அருளாசி வழங்குகிறாள்.
கோவிலின் வலது சுற்றில் கணபதி மற்றும் நவசக்தி தேவி களின் சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. கோவில் வளாகத்தின் வெளியே தனி கட்டிடத்தின் மாடியில் லட்சுமி, சரஸ்வதி தேவி சன்னிதிகளும், அதைத் தொடர்ந்து தரைப்பகுதியில் நாகங்களின் திருமேனிகளும் காணப்படுகின்றன. அதற்கடுத்தாற் போல் தியான மண்டபம், அன்னதானக் கூடம் போன்றவை அமைந்துள்ளன.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில் மகோற்சவம் மற்றும் ரத உற்சவம் போன்றவை சிறப்பாக நடைபெறு கின்றன. இந்த விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் செல்கிறாா்கள். இது தவிர அம்மனுக்குரிய அன்னை வழிபாடுகளும், இந்த ஆலயத்தில் சிறப்புடன் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆலயமானது, திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமையில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை தொடர்ச்சியாக தரிசனம் செய்ய முடியும்.
காசு வைத்து வேண்டுதல் :
ஆலயத்தின் கொடிமரத்து அடியில் உள்ள தரையில், பக்தர்கள் காசு வைத்து விநோதமான வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். அதாவது, ஒரு நாணயத்தை நிற்க வைத்து, தங்களது வேண்டுதலை அம்மனிடம் சொல்லி முறையிடுகிறார்கள். அப்படி பக்தர்கள் தங்கள் வேண்டுதலைச் சொல்லி வழிபட்டு முடிக்கும் வரை, அந்த நாணயம் கீழே விழாமல் இருந்தால், வேண்டுதல் மிக விரைவிலேயே நடைபெற்றுவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
போனாலு பண்டிகை :
தெலுங்கு ஆஷாட மாதத்தில் (ஜூலை மற்றும் ஆகஸ்டு), தெலுங்கானா முழுவதும் மகா காளிக்காக மிகப் பெரிய விழாக்கள் நடத்தப்படுகின்றன. கி.பி. 1813-ம் ஆண்டு ஐதராபாத், செகந்திராபாத் ஆகிய நகரங்களில் பிளேக் நோய் பாதிப்பு இருந்தது. அப்போது அந்த நோய் நீங்க, அங்குள்ள மக்கள் அனைவரும் உஜ்ஜயினி மகா காளியை பிரார்த்தித்தனர். இதையடுத்து நோயின் தாக்கம் குறையத் தொடங்கியதாம். இதனால் இரு நகரங்களின் பல பகுதிகளிலும் மகா காளிக்கு ஆலயம் எழுப்பி, நன்றிக் கடன் செலுத்து விழா ஒன்றை எடுத்தனர். இந்த விழாவைத் தான் ‘போனாலு பண்டிகை’ என்கின்றனர்.
அமைவிடம் :
தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபாத் நகரில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஹைசிட்டி சாலையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மகாத்மா காந்தி பஸ் நிலையத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.
-பனையபுரம் அதியமான்

தேவாரத் திருத்தலங்களில் 64-வது தலமாகவும், காவிரி தென்கரையில் முதல் தலமாகவும் விளங்குவது, குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை சுரும்பார்குழலி சமேத ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்.
சோழநாட்டின் காவிரி கரையில், 191 சிவ தலங்கள் இருக்கின்றன. அவற்றுள் காவிரி ஆற்றின் வட பகுதியில் 63 சிவ தலங்களும், தென்பகுதியில் 128 சிவ தலங்களும் உள்ளன. இதில் பாடப்பட்ட தேவாரத் திருத்தலங்களில் 64-வது தலமாகவும், காவிரி தென்கரையில் முதல் தலமாகவும் விளங்குவது, குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை சுரும்பார்குழலி சமேத ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்.
பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின்போது இங்கு தங்கி இருந்ததாகவும், அதனால் இந்த மலைக்கு ‘ஐவர்மலை’ என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுவே நாளடைவில் ‘அய்யர்மலை’ என்றானதாக சொல்கிறார்கள். பாண்டவர்கள் இங்கு தங்கியிருந்ததற்கு சான்றாக, மலையின் நடுப்பகுதியில் உள்ள சிறிய குகையில் 5 படுக்கைகள் உள்ளன. இந்த மலையின் பின்பகுதியில் உள்ள மற்றொரு சிறிய குகையில் கற்களால் வெட்டப்பட்ட மூன்று படுக்கைகள் காணப்படுகின்றன. இங்கு சமணர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று அறியப்படுகிறது.
அய்யர் மலை என்ற ஊரில் மலை மீதுள்ள ஆலயத்தில் ரெத்தினகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவரை வாட்போக்கிநாதர், ராஜலிங்கமூர்த்தி என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். அதே போல் இந்த ஊரும், சிவாயமலை, ரத்தினகிரி, ரத்தினாசலம், மணிகிரி, ரத்தின வெற்பு, சிவதை, மாணிக்க மலை, வாட்போக்கி மலை, பஞ்சாட்சர மலை உள்ளிட்ட பெயர்களில் வழங்கப்படுகின்றன.
ஆரிய நாட்டில் மங்கலமா நகரில் ஆரியராசன் என்பவன் ஆட்சி செய்து வந்தான். ஒரு முறை அரசனின் நவரத்தின கிரீடம் காணாமல் போக்கும்படி செய்தார், ரெத்தினகிரீஸ்வரர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அரசனின் முன்பாக தோன்றிய வேதியன் ஒருவன், “உன்னுடைய கிரீடம் ரெத்தினகிரீஸ்வரர் வசம் உள்ளது” என்று கூறினான்.
இதையடுத்து மன்னன், ரெத்தினகிரீசுவரரிடம் வந்து தமது மணிமுடியை தருமாறு வேண்டினான். அப்போது முதியவர் வடிவில் வந்த இறைவன் “இங்குள்ள கொப்பரையை முழுமையாக காவிரிநீர் கொண்டு நிரப்ப வேண்டும். அப்போதுதான் மணி முடியை உன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இறைவன் கூறியிருக்கிறார்” என்றார்.
மன்னன் எவ்வளவோ முயன்றும் கொப்பரையை நீர் கொண்டு நிரப்ப முடியவில்லை. ஒரு கட்டத்தில் கோபம் கொண்ட மன்னன், முதியவரை நோக்கி வாளை வீசினான். அப்போது முதியவர் சிவலிங்கத்திற்குச் சென்று மறைய, சிவலிங்கத்தின் மீது வாள் பட்டு, அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. தெய்வ குற்றத்துக்கு ஆளானதை எண்ணி அஞ்சிய மன்னன், தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள முயன்றான். அப்போது அவனை, இறைவன் தடுத்தாட்கொண்டு, மணிமுடியையும் வழங்கி அருளினார். இதற்கு சாட்சியாக இப்போதும், சிவலிங்கத்தின் மீது வெட்டு தழும்பு உள்ளதைக் காணலாம்.
இந்த நிகழ்வுக்குப் பின்னர் ரெத்தினகிரீஸ் வரரை வழிபட்ட ஆரியராசன், தன் குலத்தினர் பரம்பரை பரம்பரையாக தினமும் காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் நடைமுறை கொண்டு வந்தான். தற்போதும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக, சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து நாள்தோறும் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து, மலை உச்சியில் உள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்விக்கப்படுவது தனிச்சிறப்பாகும்.
சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான சுந்தரர், இந்த மலையை ரத்தின மலையாகவும், ஈசனை லிங்க வடிவமாகவும் கண்டு வழிபட்டதோடு, பொன் வேண்டி பாடியிருக்கிறார். தொடர்ந்து இறைவனின் ஆணைப்படி பூத கணங்கள், பாறையின் மேல் பொன்னை சொரிந்ததாகவும், இங்குள்ள ஒன்றுபாதி என்ற இடத்தில் ரெத்தினகிரீஸ்வரர், சுந்தரருக்கு காட்சி கொடுத்ததாகவும் தல வரலாறு சொல்லப்படுகிறது. சுந்தரருக்கு பொன் அளிக்கப்பட்ட இடம் தற்போது ‘பொன்னிடும் பாறை’ என்று அழைக்கப்படுகிறது. பொன்னிடும் பாறைக்கு முன்பு அமைந்துள்ள கற்கம்பத்தை சுற்றி நூலால் கட்டி, பில்லி, சூனியம், ஏவல், மற்றும் பல்வேறு தடங்கல் நீங்க பிரார்த்தனை செய்யப்படுகிறது. பொன்னிடும் பாறை அருகில் உள்ள சகுன குன்றின் கீழ் அமர்ந்து, காரியங்களைத் தொடங்குவதற்கான நற்சகுனம் பார்க்கவும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதும், 1,178 அடி உயரமும் கொண்டதுமான மலையின் மீது ரெத்தின கிரீஸ்வரர் கோவில் உள்ளது. மலை உச்சிக்கு சென்று சுவாமியை வழிபட 1017 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. பொன்னிடும் பாறையில் இருந்து 103 படிகள் மேல்நோக்கி ஏறினால், பதினெட்டு படிகள் வரும். இந்த பதினெட்டு படிகளும் சிறப்பு வாய்ந்தவை. பதினெட்டு படிகளின் நடுவில் ஒரு மலர் செதுக்கப்பட்டுள்ளது. வழக்கு மற்றும் பிரச்சினைகள் ஏற்படும் போது, நியாயம் உள்ளவர்கள் இந்த படிகளில் சூடர் ஏற்றி ‘நான் குற்றமற்றவன். என் பிரச்சினையை தீர்த்து வை இறைவா’ என்று பிரார்த்தித்தால், உடனடியாக தீர்வு கிடைக்குமாம். அதே நேரம் பொய் சத்தியம் செய்தால் அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என்பது கண்கூடாக நடைபெறும் நிகழ்வுகளாம்.
இந்த மலையை சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே இருக்கும் ஒன்பதாவது பாறையில், சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மாசி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சூரிய கதிர்கள், சுவாமி சன்னிதிக்கு எதிரே உள்ள நவ துவாரங்களின் வழியாக இறைவனின் மீது விழுகிறது. இக்கோவிலில் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்த பச்சைப்பால் மாலை வரை கெட்டுப்போகாது. அபிஷேகம் செய்த பால் பின்னர் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறிவிடுகிறது. இது இக்கோவிலில் இன்றுவரை நடக்கும் அதிசயமாகும். இத்தல இறைவனை, நான்முகன், திருமால், இந்திரன், வாயு, ஆதிசேஷன், சூரியன், அக்கினி, துர்க்கை, சப்த கன்னியர்கள், அகத்தியர் போன்றோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
இங்கு அருளும் இறைவனுக்கு, அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மணி விளக்குகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர். இறைவனுக்கு தூய உலர்ந்த வேட்டி சாத்தி வழிபடலாம். பால், எண்ணெய், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். விரதம் இருத்தல், தானதர்மம் செய்தல், வேள்வி புரிதல், தவம் செய்தல், தியானம் செய்தல் போன்றவற்றை இந்த ஆலயத்தில் செய்தால் பன்மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். திருவண்ணாமலையை போல அய்யர் மலையும் கிரிவலத்திற்கு சிறப்பானதாகும். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பல்லாயிரக்கணக்கானோர் இம்மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் 15 நாட்கள் தவிர கார்த்திகை சோமவாரங்கள், தைப்பூசம், போன்ற உற்சவங்களும் வெகு சிறப்பாக நடைபெறும். மூன்று நாட்களுக்கு நடைபெறும் தேரோட்டத்தின்போது பக்தர்கள் தேரோடும் வீதியிலும், மலை படிகளிலும், தமது வயல்களில் விளைந்த தானியங்களை தூவி வழிபட்டு செல்வர். இதனால் விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை. தேரோட்டத்திற்கு முதல் நாள் இரவு நடைபெறும் குதிரை தேர் புகழ்பெற்றதாகும். இவ்விழாவின்போது தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி தேரில் எழுந்தருள்வார். இங்குள்ள மலை அடிவாரத்தில் அமைந்துள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் வைரப்பெருமாள், கருப்பண்ணசுவாமி, ஆறுமுகப் பெருமான் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
காலையில் குளித்தலையில் உள்ள கடம்பவனேசுவரரையும், மதிய வேளையில் இத்தல ரெத்தினகிரீஸ்வரரையும், மாலையில் திருச்சி மாவட்டம் முசிறி அருகேஉள்ள திருங்கோய்நாதரையும், அர்த்தசாமத்தில் கருப்பத்தூரில் உள்ள சிம்மபுரீசுவரரையும் வழிபட்டால் முக்தி பேறு கிடைக்கும். மறு பிறவி கிடையாது என்பது ஐதீகமாகும்.
மலைக்காவல் தெய்வம்
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வைரப்பெருமாள் என்பவரின் தங்கை குழந்தை பாக்கியம் இன்றி தவித்து வந்தார். அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தால், தன்னுடைய சிரசை காணிக்கையாக வழங்குவதாக ரெத்தின கிரீஸ்வரரை வேண்டிக்கொண்டார் வைரப்பெருமாள். வேண்டுதலின்படி அவரது தங்கைக்கு குழந்தை பிறந்தது. தன் பிரார்த்தனை நிறைவேறியதால், வைரப்பெருமாள், தன் சிரசை அரிந்து சுவாமிக்கு காணிக்கையாகக் கொடுத்தார். இந்த ஆலயத்தின் அடிவாரத்தில் வைரப்பெருமாள் பாதமும், மலை மீது சிரசுடன் கூடிய முழு உருவ திருமேனியும் உள்ளது. சுவாமிக்கு தினந்தோறும் காலசந்தி, சாயரட்சை பூஜை முடிந்தபிறகு, வைரப்பெருமாளுக்கு தீபாராதனை செய்யப்படும். சுவாமியின் மாலையும் இவருக்கு அணிவிக்கப்படும். இத்தலத்தில் வைரப்பெருமாள் விசேஷமானவர். இவரை இந்தப் பகுதி மக்கள் மலைக் காவல் தெய்வமாக பார்க்கிறார்கள்.
அமைவிடம் :
கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையில், குளித்தலையில் இருந்து தெற்கே 8 கிலோமீட்டர் தூரத்தில் அய்யர்மலை உள்ளது.
ஆர்.பிரகாசம், குளித்தலை.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மருதூர் என்ற ஊர். இங்கு ராஜராஜேஸ்வரி ஆலயம் அமைந்திருக்கிறது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மருதூர் என்ற ஊர். இங்கு ராஜராஜேஸ்வரி ஆலயம் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர் ‘ராஜராஜேஸ்வரர்.’ இறைவியின் திருநாமம் ‘தேவநாயகி’ என்பதாகும். இந்த அன்னையின் அற்புத சக்தி பற்றி செவி வழி சம்பவம் ஒன்று சொல்லப்படுகிறது.
வயல்வெளியில் நாற்று நட்டுவிட்டு வீடு திரும்பிய பெண், தூளியில் படுத்திருந்த தனது இரண்டு வயது பெண் குழந்தையைப் பார்த்து பதறினாள். குழந்தை முனகிக் கொண்டிருந்தது. தொட்டுப் பார்த்தாள். காய்ச்சல் அனலாக அடித்தது. அப்போது மாலை 6 மணி. ஊரில் இருக்கும் நாட்டு மருத்துவரிடம் காட்ட குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடினாள். அங்கும் விதி விளையாடியது. மருத்துவர் ஊரில் இல்லை. அரசு மருத்துவமனை மயிலாடுதுறை என தற்போது அழைக்கப்படும் மாயவரத்தில்தான் இருந்தது. 9 கிலோமீட்டர் தூரம் போக வேண்டும். ‘என்ன செய்வது?’ புரியவில்லை அந்த இளம் தாய்க்கு.
“காலையில் போகலாம்” என்று கணவன் கூற, அந்த ஊரில் கோவில் கொண்டுள்ள அன்னை தேவநாயகியின் மேல் பாரத்தை போட்டுவிட்டு, குழந்தையை அணைத்தபடி படுத்தாள். சிறிது நேரத்தில் உறங்கிப்போனாள். அதிகாலை நேரத்தில் அவளுக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் ஒரு பெண் சிரித்த முகத்தோடு தோன்றினாள். “நான் இருக்க பயம் எதற்கு?” என்று கேட்டபடியே, குழந்தையின் நெற்றியில் திருநீற்றைப் பூசினாள். பின்னர் சிரித்தபடியே மறைந்து போனாள்.
திடுக்கிட்டு கண் விழித்த அந்த தாய். தன் குழந்தையை தொட்டுப் பார்த்தாள். காய்ச்சல் வந்ததற்கான அறிகுறியே இல்லாதது போல் குழந்தை நலமோடு இருந்தது. கனவில் வந்தது அன்னை தேவநாயகிதான் என்று உணர்ந்த அந்தப் பெண், தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டு ஆலயம் நோக்கிச் சென்றாள். அன்னையின் முன்பாக குழந்தையை கிடத்தியவள், கண்கள் கலங்க அன்னைக்கு நன்றி கூறியதாக அந்தச் செய்தி சொல்லப்படுகிறது.
இந்த ஆலயத்தினுள் நுழைந்ததும் மகாமண்டபத்தின் கீழ்திசையில் சூரியன், பைரவர் திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டப நுழைவு வாசலில் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். ஆலய கருவறையில் ராஜராஜேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். தனிச் சன்னிதியில் தேவநாயகி அம்மன் நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறாள். அன்னையின் மேல் இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரை காட்டி இருக்கின்றன. கீழ் இரு கரங்களை தொங்க விட்டபடி, நின்ற கோலத்தில் புன்னகை தவழ இருக்கும் அன்னையின் அழகே அழகு.
இந்த ஆலயமானது, 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கின்றனர், அங்குள்ள பக்தர்கள். ஆலயத்தின் தேவ கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமை தோறும் இந்த தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று தயிர் சாதம் பிரசாதமாக தரப்படுகிறது.
பிரகாரத்தின் மேற்கு பகுதியில் விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான், வடக்கில் சண்டிகேஸ்வரர் உள்ளனர். மேற்கு திசை நோக்கி சனீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இந்த அமைப்பு அபூர்வமானது என்கின்றனர் பக்தர்கள். சனிப் பெயர்ச்சியின் போது விசேஷ ஹோமம் இங்கு நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை.
சோழ மன்னன் ராஜராஜன் சபையில் லட்சுமண பண்டிதர் என்ற அமைச்சர் இருந்தார். அவர் இந்த ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெற பல நடவடிக்கைகள் மேற்கொண்டார். அவர் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை முறைப்படி கற்ற வேத விற்பன்னர்களைக் கொண்டு, ஒவ்வொரு கால பூஜையின் போதும் வேதங்களை ஓதச் செய்து இந்த ஆலயத்தில் நான்கு கால பூஜைகள் நல்ல விதமாக நடக்க ஏற்பாடு செய்தாராம். அந்த வழக்கம் மேலும் பல தலைமுறைகள் நடைமுறையில் இருந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆலயத்தில் நவராத்திரி, திருவாதிரை, மார்கழி 30 நாட்கள், திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
தற்போது இந்த ஆலயத்தில் தினசரி இரண்டு கால பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன. ஆலயத்தின் தலவிருட்சம் நெல்லி மற்றும் வன்னி மரம் ஆகும். ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
குழந்தைகளைக் காக்கும் அன்னையாய் தெய்வமாய் அன்னை தேவ நாயகி விளங்குவதாகவே பக்தர்கள் நம்புகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அருகன்குளம் என்னும் இடத்தில் தர்மபதி என்றழைக்கப்படும் ஸ்ரீஎட்டெழுத்து பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அருகன்குளம் என்னும் இடத்தில் தர்மபதி என்றழைக்கப்படும் ஸ்ரீஎட்டெழுத்து பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தோன்ற காரணமாக இருந்தவர் சித்தர் பெருமகனார் மாயாண்டி சித்தர். இவர் 1891-ம் ஆண்டு ஆனி மாதம் 18- ந்தேதி அருகன் குளத்தில் பிறந்தார். சிறு வயது முதலே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவராக வளர்ந்தார். அதன் தாக்கமாக வல்லநாட்டு மலைக்கு சென்று தியானம் செய்தார். அதன் பின்னர் நீண்டகாலமாக வீடு திரும்பவில்லை.
தியானத்தில் ஆழ்ந்திருந்த அவருடைய கனவில் ராமர் தோன்றினார். அவர், ‘தான் ராம அவதாரத்தின்போது ஜடாயுக்கு தாமிரபரணி கரையில் திதி செய்த பின் வந்து அமர்ந்து ஓய்வு எடுத்த இடம் அருகன் குளத்தில் உள்ளது. அதில் நான் எட்டெழுத்து பெருமாளாக இருந்து அருள் வழங்க உள்ளேன். எனக்கு அந்த இடத்தில் ஒரு கோவில் கட்டி வணங்கு’ என்றார். அதன்படி மாயாண்டி சித்தர் அருகன்குளம் வந்தார். அங்கு பெருமாளுக்கு கோவில் கட்டினார். ஓம் நாமோ நாராயணா என்ற 8 எழுத்து மந்திரத்தினை உச்சரிப்பதால் ஸ்ரீஎட்டெழுத்து பெருமாள் என பெருமாளுக்கு பெயர் சூட்டினார். இங்கு எட்டெழுத்து பெருமாள் ஸ்ரீராமர் மகா விஷ்ணுவாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
இந்த கோவிலில் கோசோலையும் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அன்பு, ஆர்வம், இரக்கம், கனிவு, கருணை போன்ற அணிகலன்கள் நிறைந்த கண்களைக் கொண்ட கண்ணனாக, மகாதேவராகிய சிவபெருமானுடனும், கோமாதாவாகிய பசுவோடும், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் புல்லாங்குழலுடன் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீமகாதேவ கோபாலகிருஷ்ணராக அருள்பாலிக்கிறார்.
உலகெங்கும் இருக்கும் ஆலயங்களில் கோசாலை உண்டு. ஆனால் கோசாலையில் ஆலயம் என்பது இங்கு மட்டுமே அமைந்துள்ளது. கோகுலத்தில் பசுக்களோடு கொஞ்சி விளையாடிய பாலகிருஷ்ணன் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். அதன்படி இந்த கோசாலையில் மகாதேவ கோபாலகிருஷ்ணன் இரு பக்கமும் பசுக்கள் சூழ, கோ-கால-கிருஷ்ணராக வீற்றிருக்கின்றார். ஒவ்வொரு மனிதனுக்கும் கோமாதா என்று அழைக்கப்படும் பசு ஏழாவது தாயாக விளங்குகின்றாள் என்று ஸ்ரீமத்பாகவதம் கூறுகின்றது. பசுக்கள் உலகின் அன்னை. இவை மங்களமானவை, புண்ணிய மயமானவை, அவை எல்லா விதமான புருஷார்த்தங்களையும், அறம், பொருள், இன்பம், வீடு போன்றவைகளை கொடுக்க வல்லவை.
பசுவைத் தரிசித்தல், பூஜை செய்தல், வணங்குதல் வலம் வருதல், தீவனம் புல் கொடுத்தல் முதலிய சேவைகளை செய்பவர்கள் உயர்ந்த சித்திகளை அடைகிறார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவின் சரீரத்தில் தங்கியுள்ளனர். ஸ்ரீமகாலட்சுமி கோவின் சரீரத்தில் இடம் வேண்டி வாசம் செய்கிறார். ரகு வம்சத்தில் திலீபச்சக்கரவர்த்தி பசுக்களைப் பராமரித்தும், பூஜித்தும் வந்ததால் தான் ஸ்ரீராமபிரான் அங்கு அவதாரம் செய்தார் என்பதன் மூலம் பசுவின் சிறப்புகளை புரிந்து கொள்ளலாம்.
இங்கு பசுக்களைப் பராமரிப்பவர்கள் மட்டுமின்றி கோபூஜையில் கலந்து கொள்பவர்கள் ஆயுள் விருத்தி, செல்வ விருத்தி, குலவிருத்தி என அனைத்தும் பெற்று உன்னதமான வாழ்க்கை வாழ்வார்கள் என்பது ஐதீகம். எனவே இக்கோவிலில் நடக்கும் கோசாலை பூஜையில் இந்தியா முழுவதும் இருந்து வந்து பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்தகோவிலில் அன்னதர்மம், திருமணி வெண்முத்திரை ஆகிய இரண்டு சிறப்புகள் உள்ளது. திருமணி வெண்முத்திரை என்பது மகாலட்சுமியின் பேரருளால் நிறைந்த வெண்முத்திரை என்ற திருமணி.
இந்த முத்திரை பக்தர்கள் நெற்றியில் இடப்படும். இதை பெறுபவர்கள் அனைத்து நன்மையையும் பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணம் ஆகாதவர்களுக்கு திருப்பூட்டு யாகம் மார்கழி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. வருடந்தோறும் விநாயக சதுர்த்தி அன்று குழந்தை செல்வம் இல்லாத தம்பதிகளுக்கு புத்திர காமேஷ்டி யாகம் நடக்கிறது. அதில் பங்கேற்பவர்கள் குழந்தை பாக்கியம் பெறுகிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. பள்ளி - கல்லூரி மாணவ மாணவியர்கள் தேர்வில் சிறப்பாக வெற்றிபெற வித்யா லட்சுமி வேள்வியும் நடைபெறுகிறது. இக்கோவிலில் துலாபாரம் மூலம் தங்களது பாரங்களை இறக்கி வைக்கவும் முடியும். ஆண்டு தோறும் திருவிழா காணும் கோவில் இது.
இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் இங்கு கிருஷ்ண கலய பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெறும். இந்த கலயத்தினை பெற்று கொள்ளும் பக்தர்கள் அதில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை போட்டு தங்களது வீட்டில் பூஜை அறையில் வைத்துக்கொள்வார்கள். அவர்கள் எந்த கோரிக்கையை முன்வைத்து கலய பிரசாதம் பெறுகிறார்களோ அந்த கோரிக்கை விஷ்ணுவால் உடனே கேட்கப்படும் என்பது ஐதீகம்.
ஆதலால் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று இங்கு வந்து கலய பிரசாதம் பெற்று செல்கிறார்கள். அத்துடன் செப்டம்பர் 1-ந்தேதி உறியடி திருவிழாவும் விமரிசையாக நடைபெறுகிறது. இந்த வேளையில் இங்கு வந்து மகாகிருஷ்ணரை வேண்டி நிற்போருக்கும் கேட்கும் வரம் கிடைக்கிறது.
கோவில் நடை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். இந்த கோவில் நெல்லை சந்திப்பு ரெயில் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு வந்து செல்ல மினிபஸ் வசதி மற்றும் ஆட்டோ வசதி உண்டு.
முத்தாலங்குறிச்சி காமராசு

சென்னை பாடி பகுதியில் பிரதான சாலை ஓரத்தில் இருக்கிறது இந்த பாடி படவேட்டம்மன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
250 வருடத்துக்கு முன்பு நடந்த சம்பவம் இது. அந்தக்காலத்தில் சென்னையில் இருந்து கூண்டு வண்டியில் திருப்பதிக்குப் போன சிலர், திரும்பிவரும் வழியில் சக்கரம் மாதிரியான ஒரு கல், உருண்டு போனதை பார்த்து உள்ளனர். அந்தக்கல் கொஞ்சதூரம் உருண்டு நடுசாலையில் வந்து நின்று உள்ளது. பாதையை மறித்து நின்ற கல்லை ஓரமாகபோட நினைத்து எடுத்து உள்ளனர். ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள். காரணம் அது சாதாரணக்கல் இல்லை. சிரசு வரைக்குமான அம்மன் சிலை.
அந்த சமயத்தில் அங்கே ஆடு மேய்த்து கொண்டு இருந்த ஒரு பெண்ணுக்கு அருள் வந்து “சோழ மன்னனோட போர்ப் பாசறையான படைவீட்டுல இருந்த அம்மன் நான், என் கோவில் காலப்போக்குல மறைஞ்சுட்டதால் எனக்கான இடத்தைத்தேடி இப்படி உருண்டு வந்துகிட்டு இருக்கேன். இன்னும் கொஞ்சம் தூரம் போனா சாலை ஓரத்தல ஒரு வேப்ப மரம் இருக்கும். அங்கே வைச்சு என்னை வழிபடுங்க. உங்க வேண்டுதலை நிறைவேற்றி என்றைக்கும் நான் துணை நிற்பேன். எல்லைத் தெய்வமாக இருந்து காப்பேன்”. என்று வாக்கு சொல்லியிருக்கிறது அம்மன்”.
அங்கேயிருந்து அம்மன் சிலையை எடுத்துவிட்டு புறப்பட்டவர்கள் வழியில் ஒரு வேப்பமரம் இருந்ததை பார்த்துவிட்டு அதோடு வேரடியில் அம்மனை வைத்து வழிபட்டார்கள். அன்றில் இருந்து இன்று வரைக்கும் அதே இடத்தில் அதே வேப்பமரத்தின் வேர்ப்பீடத்தில் இருந்து அருள் புரிகிறாள் படைவீட்டம்மன்.
மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த அந்தப்பகுதி இன்றைக்கு பரபரப்பான சென்னையின் முக்கியமான ஓர் இடமானது. படைவீட்டம்மன் என்ற அம்மனோட பெயர் மருவி படவேட்டம்மன் என்றானது. ஆனால் இப்பவும் தான் அமர்ந்த பீடத்தை மாற்றாமல் அதே வேப்பமரத்தின் வேரடி பீடத்தில்தான் அமர்ந்திருக்கிறாள் படை வீட்டம்மன்.
அம்மன், தானே விருப்பப்பட்டு வந்து அமர்ந்து இடம் என்பதை கேட்கவே பிரமிப்பாக இருக்கிறது. கோவிலைப் பற்றியும், இருப்பிடத்தையும் பார்போம்...
சென்னை பாடி பகுதியில் பிரதான சாலை ஓரத்தில் இருக்கிறது இந்த கோவில். ராஜகோபுரம் கிடையாது. ஆனால் உயர்ந்து நிற்கிற வேப்பமரம் அந்தக்குறையைத் தீர்க்கிறது.
வேம்புவின் வேரடியில் பீடமாக இருப்பதால் அதை மாற்றாமல் அப்படியே சிறிய கருவறை அமைத்து இருக்கிறார்கள்.சிரசு வரைக்கும் இருக்கிற அம்மனுடைய சிலையை பார்த்தால் ரேணுகா பரமேஸ்வரியை நினைவுக்குக் கொண்டுவருகிறது. ஆனால் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் அம்மனுடைய தலையில் அக்னி ஜுவாலை மகுடமும் நாகக்குடையும் இல்லாத வித்தியாசம் தெரியும். இந்த அமைப்பினாலும் போர் வீரர்களால் வணங்கப் பட்டதாலும் இவளை துர்க்கை அம்மன் என்றும் சொல்கிறார்கள்.
சக்கரம் மாதிரி உருண்டு வந்த அம்மன் முகம் வட்டமான சந்திரனுக்கு நடுவில் பதிந்த மாதிரி குளுமையான பிரகாசத்தோடு இருகிறது. தினமும் அபிஷேக நேரத்தில் மட்டுமே இந்த அம்மனை தரிசிக்க முடியும். பிறகு கவசம் சாத்திடுவார்கள். இன்னொரு முக்கியமான விஷயம் இங்கே தினமும் அபிஷேக பூஜை நடக்கிறது. முதல் நாள் பூஜையை முடிச்சுட்டு மறுநாள் காலையில் வழிபாடு நடத்த வரும்போது ரொம்பவே கவனமாக அம்மனுடைய வஸ்திரங் களையும் நிர்மால்யப் பூக்களையும் அகற்றுவார்கள். காரணம் பல நாட்களாக இங்கே அம்மனுக்குப் பக்கத்தில் பாம்பு வந்து படுத்திருக்குமாம்.
ஒரே சுற்றுள்ள கோவிலில் கணபதி, சிரசு அம்மன், மாரியம்மன், பால முருகன் மற்றும் உற்சவ படவேட்டம்மனும் முழுவடிவாக பூரண சந்திரன் மாதிரி அழகு மிளிர காட்சி தருகிறார்கள். படவேட்டம் மனை ஏராளமான பக்தர்கள் குலதெய்வமாக நினைத்து பொங்கலிட்டும் புடவை சாத்தியும் வணங்கு கிறார்கள். பக்தர்கள் பொங்கலிடுவதற்கு சிறப்பான தனி இட வசதி இருக்கிறது.

சென்னை கொரட்டூரில் சீயாத்தம்மன் ஆலயம் உள்ளது. கொரட்டூர் ஏரிக்கரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தலம் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சென்னை கொரட்டூரில் சீயாத்தம்மன் ஆலயம் உள்ளது. கொரட்டூர் ஏரிக்கரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தலம் உள்ளது. ஆனால் சென்னைவாசிகளில் 90 சதவீத பேருக்கு இந்த சீயாத்தம்மன் ஆலயம் பற்றியும் அவளது மகிமை பற்றியும் தெரியாமலேயே உள்ளது. கொரட்டூருக்கு மிக அருகில் உள்ள பகுதிகளில் வாழ்பவர்களுக்கு கூட சீயாத்தம்மன் அருமை இப்போதுதான் தெரிய தொடங்கி இருக்கிறது.
பல்லவ மன்னர்களான ராஜசிம்மன், நந்திவர்மன் காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இந்த ஆலயத்தில் திருவிழா உற்சவம் கோலகலமாக நடைபெறும். சீயாத்தம்மன் கொரட்டூருக்கும் செங்குன்றத்துக்கும் இடையில் உள்ள 7 ஊர் மக்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறாள். இதனால் இந்த அம்மனை ஏழுரின் எல்லையம்மா! எங்கள் குல தெய்வம்மா! ஏழுலகம் வணங்குதம்மா! ஏரிக்கரை சீயாத்தம்மா! என்று ஏழு ஊர் மக்களும் பக்தி பரவசத்துடன் பணிந்து போற்றி பாடுகிறார்கள்.
தமிழகத்தில் சக்தியின் வடிவங்கள் கணக்கிட முடியாத அளவுக்கு பல்வேறு பெயர்களில் பல்வேறு அவதாரங்களை சொல்லும் வகையில் உள்ளன. அந்த அடிப்படையில் சீயாத்தம்மன் ஆலயத்துக்கும் சிறப்பான வரலாற்று பின்னணி இருக்கிறது. தமிழ்நாட்டின் வட பகுதியில் பல்லவர் சாம்ராஜ்ஜியம் புகழ் பெற்று இருந்த காலத்தில் அவர்களுக்கும் சாளுக்கிய மன்னர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. ஒரு தடவை அப்படி பாலாற்றின் கரையில் மிகப்பெரிய போர் நடந்தது.
பல்லவ மன்னன் ராஜசிம்மன் படையின் சாளுக்கிய மன்னன் புலிக்கேசி படையும் நேருக்கு நேர் கடுமையாக மோதின. நீண்ட நாட்களாக இந்த போர் நீடித்தது. போருக்கு இடையே ஒருநாள் ராஜசிம்மன் ஒரு இடத்தில் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தான். அதாவது தற்போது கொரட்டூருக்கும் பாடிக்கும் இடையே ஒரு பகுதியில் அவன் ஓய்வில் இருந்தான். புலிகேசியிடம் தோற்று விடுவோமோ என்ற கவலை அவன் மனதில் ஆழமாக ஏற்பட்டது. அந்த கவலையிலேயே அவன் அப்படி தூங்கி போனான். அப்போது அவனுக்கு ஒரு கனவு ஏற்பட்டது.
ஏரிக்கரை ஒன்றின் ஓரத்தில் முனிவர்கள் சிலர் யாகம் செய்து கொண்டு இருந்தனர். அவர்களை அசுரர்கள் தொல்லை கொடுத்து யாகத்துக்கு இடையூறு செய்தனர். இதனால் முனிவர்கள் அனைவரும் சிவபெருமானை நோக்கி வேண்டினார்கள். இதையடுத்து பார்வதியை அழைத்த சிவபெருமான் உடனே நீ கொரட்டூர் ஏரி பகுதிக்கு சென்று அசுரர்களை அழித்து விடு என்று உத்தரவிட்டார். அதை ஏற்று பராசக்தி அந்த ஏரி பகுதிக்கு வந்தாள். அங்குள்ள மிகப்பெரிய ஆலமரத்து அடியில் அமர்ந்து தவம் செய்தாள்.
நீண்ட நாட்கள் தவத்தில் இருந்ததால் அவளை சுற்றி புற்று எழுந்தது. நாளடைவில் அந்த புற்று வளர்ந்து அவளை மூடி விட்டது. ஆனால் புற்றுக்குள் இருந்து மந்திர ஒலி மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. இதை கவனித்த அசுரர்கள் அந்த புற்றை இடித்து பராசக்தியை கொல்ல முயற்சி செய்தனர். இதனால் பார்வதி தேவி ஆவேசமானாள். பயங்கர சத்தத்துடன் புற்றில் இருந்து வெளிபட்டாள். அசுரர்களை கொன்று குவித்தாள்.
அப்போது அதை தடுத்த அரக்கி வயிற்றை கிழித்து அவளது குழந்தையை கையில் எடுத்து தன் காதில் மாட்டிக் கொண்டாள். இப்படி கனவு சென்று கொண்டு இருந்தபோது பல்லவ மன்னன் ராஜசிம்மன் திடுக்கிட்டு கண் விழித்தான். அவனுக்கு கனவில் வந்த அம்மன் யார் என்று தெரியவில்லை. என்றாலும் சேயை காத்த அம்மன் என்பதால் “சேய்காத்த அம்மன்” என்று கூறினான்.
சேய்காத்த அம்மனை மனதில் நிறுத்தி அவன் பிரார்த்தனை செய்தான். “அம்மா தாயே, நீ இந்த பகுதியில் மிகுந்த சக்தியுடன் இருப்பது எனக்கு தெரியும். எனக்கு உன் அருள் வேண்டும். புலிக்கேசிக்கு எதிரான போர் மிக கடுமையாக உள்ளது. அவன் இந்த நாட்டை கைப்பற்றி விடக்கூடாது. அதற்கு நீதான் எங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். போரில் எனக்கு வெற்றி கிடைத்தால் நீ தவம் செய்த பகுதியில் மிக சிறப்பான ஆலயம் அமைத்து உன்னை காலம் காலமாக மக்கள் வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்வேன்” என்று வேண்டிக் கொண்டான்.
சேய்காத்த அம்மனை அவன் வழிபட்ட பிறகு அவனுக்குள் புது தைரியமும், புத்துணர்ச்சியும் ஏற்பட்டு இருந்தது. அதே வேகத்துடன் அவன் தனது படையை நடத்தினான். அந்த போரில் அவனுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இந்த வெற்றி சேய்காத்த அம்மனால் கிடைத்த வெற்றி என்று அவன் உறுதியாக நம்பினான்.
போர் முடிந்த பிறகு அவன் கொரட்டூர் ஏரிக்கரையில் உள்ள அந்த ஆலமரத்து பகுதிக்கு வந்தான். அங்கு இருந்த புற்றை பார்த்தான். அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டான். அப்போது அங்கு சேய்காத்த அம்மன் சுயம்புவாக தன்னை வெளிப்படுத்தினாள். இதை கண்டதும் பல்லவ மன்னன் ராஜசிம்மனுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த பகுதியில் கற்கோவில் அமைத்தான். அந்த கோவிலுக்கு சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்தான். இதனால் சுற்றுப்பகுதி கிராம மக்கள் அந்த ஆலயத்துக்கு வரத் தொடங்கினார்கள்.
இதைத் தொடர்ந்து செங்குன்றம், மாதனாங்குப்பம், சூரப்பேடு, கச்சனாங்குப்பம், கள்ளிக்குப்பம், தாதங்குப்பம், கொரட்டூர் ஆகிய ஏழு ஊர்களுக்கு சேய்காத்த அம்மன் குல தெய்வமாக உருவெடுத்தாள். நாளடைவில் அவளுக்கு துணையாக சப்தமாதர்களும் அங்கிருந்து மக்களுக்கு அருள்பாலிக்க தொடங்கினார்கள்.
பல்லவ மன்னன் கொரட்டூர் ஏரிக்கரையில் ஆலயம் அமைத்த போது சேய்காத்த அம்மன் மிகவும் உக்கிரமாக காணப்பட்டாள். இதனால் பக்தர்கள் அந்த பகுதிக்கு செல்ல பயப்பட்டனர். இதையடுத்து விநாயகர் யானை வடிவம் எடுத்து தனது தாய் முன்பு வந்து நின்றார். மகனை கண்டதும் பராசக்தியின் உக்கிரம் தணிந்தது.
அன்று முதல் சேய்காத்த அம்மன் சாந்தசொரூபியாக அருள்பாலித்து வருகிறாள். அதை பிரதிபலிக்கும் வகையில் கருவறையில் அம்பாளின் காலடியில் ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் வந்து அமைதி ஏற்படுத்தியதால் அதை பிரதிபலிக்கும் வகையில் கருவறை சன்னதி முன்பு யானை வாகனம் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் சேய்காத்த அம்மனை அடிக்கடி வேகமாக சொல்லி சொல்லி அந்த பெயர் “சீயாத்தம்மன்” என்று மருவியது. தற்போது சேய்காத்த அம்மன் என்று இந்த அம்மனை யாரும் அழைப்பது இல்லை. “சீயாத்தம்மன்” என்றே அனைவரும் அழைக்கிறார்கள். சீயாத்தம்மனுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆலயங்கள் இருக்கிறது. ஆனால் கருவறையில் சீயாத்தம்மனுடன் சப்தமாதர்களும் சேர்ந்து இருப்பது மிக அபூர்வமாக கருதப்படுகிறது. குளித்தலையில் கடம்பவனேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சீயாத்தம்மன் சன்னதியில் சப்தமாதர்கள் இருக்கிறார்கள். அதே போன்ற அமைப்புடன் கொரட்டூர் சீயாத்தம்மன் கருவறையிலும் உள்ளது. இதுபோன்ற அமைப்பு தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லை.
கொரட்டூர் சீயாத்தம்மனை பாடலாத்திரி சீயாத்தம்மன் என்றும் அழைக்கிறார்கள். ஆலயத்தின் நுழைவாயிலிலும் பாடலாத்திரி சீயாத்தம்மன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பாடலாத்திரி என்பதற்கு சிவந்த மலை என்று அர்த்தமாகும். அருகில் உள்ள செங்குன்றத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த பெயர் அமைந்து இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இந்த ஆலயம் மிகச்சிறிய ஆலயமாக உள்ளது. ஆலயத்தின் பின்புறம் உள்ள ஆலமரம் வித்தியாசமானது. இந்த ஆலமரத்தில் விழுதுகள் இல்லை. அந்த மரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார். கோவிலை சுற்றி வரும் போது ஏரிக்கரையை நோக்கி துர்க்கை அம்மன் சன்னதி அமைந்துள்ளது. அந்த துர்க்கைக்கு பெண்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கத்தில் உள்ளது.
இந்த ஆலயத்திற்கு கொரட்டூர் ரெயில் நிலையத்தில் இருந்து அக்ரகாரம் பஸ் நிறுத்தத்தில் இருந்தும் செல்லலாம். சொந்த வாகனத்தில் செல்பவர்கள் பாடி ரெயில்வே மேம்பாலம் ஏறி இறங்கியதும் வரும் முதல் இடது பக்க பாதையில் சென்றால் வரதராஜ பெருமாள் ஆலயத்தை பார்க்கலாம். அந்த ஆலயத்தின் அருகில் உள்ள தெருவில் சென்றால் ஏரிக்கரை சீயாத்தம்மன் ஆலயத்திற்கு எளிதாக செல்ல முடியும்.