என் மலர்
கோவில்கள்
பஞ்சேஷ்டி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் 30 கி.மீ. தொலைவில் காரணோடை பாலம்-தச்சூர் கூட்ரோடு அருகில், தச்சூர் - பஞ்சேஷ்டி 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பஞ்சேஷ்டி சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் 30 கி.மீ. தொலைவில் காரணோடை பாலம்-தச்சூர் கூட்ரோடு அருகில், தச்சூர் - பஞ்சேஷ்டி 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இத்திருத்தலம் பிரம்மாவினால் மாமுனிவர்களான வசிஷ்டர், கவுதமர், கண்வர் ஆகியோருக்கு தவம் செய்வதற்கு ஏற்ற இடமாக காண்பிக்கப் பட்டது. அவர்கள் இங்கு தங்களின் தினசரி தவமுறைகளை கடைபிடித்தனர். அகஸ்திய முனிவரும் இங்கு தங்கியிருந்து கடைபிடிக்க வேண்டிய ஐந்து இஷ்டிகளை கடைபிடித்தார். அவைகள் தேவயக்ஞம், பித்ருயக்ஞம், பூதயக்ஞம், மானுஷ்ய யக்ஞம், பிரம்ம யக்ஞம் என ஐந்து வகைப்படும்.
இவையாவும் தடையறாது இங்கு நடைபெற்று வந்ததால் இந்த இடம் பஞ்சேஷ்டி (பஞ்ச + இஷ்டி) என வழங்கப்பட்டது. தற்போது பஞ்சட்டி என்றும் அழைக்கின்றனர்.
கோடை காலங்களில் இத்திருத்தலத்தை சுற்றி உள்ள ஊர்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும், இவ்வூரில் மேற்பரப்பிலேயே சுவையான நீர் கிடைக்கின்றது. அதனால் இத்தலம் பஞ்சம் தீர்க்கும் “பஞ்சேஷ்டி” என்றும் அழைக்கப்படுகிறது.
யட்ச ராஜனின் சாபவிமோசனம்
ஒருமுறை திருக்கயிலாயத்தில் சிவபெருமான் அங்கிருந் தோருக்கு சிவ தத்துவத்தைப் போதித்துக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமானின் அருகில் பார்வதி தேவியும் அமர்ந்திருந்தாள்.
அங்கிருந்த சுகேது என்ற யட்ச ராஜன் சிவபெருமானிடம் “பெருமானே, பார்வதிதேவியையும் அருகில் வைத்துக் கொண்டு சிவ தத்துவத்தை எங்களுக்கு கூறுவது சரியா?” என்று கேட்டார். சிவபெருமான் புன்னகைத்தார். ஆனால் அருகில் நின்று கொண்டிருந்த முருகப் பெருமானுக்கோ கோபம் வந்து சிவனும் சக்தியும் ஒருவரில் ஒருவர் பாதியென்று அறிந்த பின்னும் இக்கேள்வியைக் கேட்ட சுகேதுவை அசுரனாகப் பிறக்கும்படி சபித்தார்.
இவ்வாறு சுகேது என்ற யட்சராஜன் முருகக் கடவுளால் சபிக்கப்பட்டு அசுரனாகப் பிறந்தான். அவன் ஒரு அசுரப் பெண்மணியை மணந்து கொண்டு மூன்று மகன்களை பெற்று எடுத்தான். அவர்கள் தந்தையின் சாபத்தை பற்றி அறிந்து கொண்டு பார்வதிதேவியிடம் மிகுந்த பக்தி செய்து அரிய வரங்களைப் பெற்றனர். அவர்கள் தங்கள் ஆற்றலை தேவர்களிடத்தில் பரிசோதித்தும், அவர்களைத் துன்புறுத்தியும் வந்தனர். இதனால் தேவர்கள் சிவபெருமானை வேண்ட அவரும் அகஸ்திய முனிவரை சுகேது மற்றும் அவன் பிள்ளைகளுக்கு தக்க பாடம் புகட்டும்படி கட்டளையிட்டார்.
அந்த சமயம் சுகேது மூன்று அசுரர்களுடன் போரிட்டு அவர்களிடம் தோற்று பயந்து கடலின் அடியில் ஒளிந்து கொண்டான். சுகேதுவின் மகன்கள் கடலில் ஆழத்தில் ªன்று தனது தந்தையை தேடினர். கடல் உயிரினங்கள் அழிந்தும். கடல் கலங்கியும் பிரளயம் போல் ஆனது. அகஸ்தியர் அவர்களை கட்டுப்படுத்த அவர்களையும் சுகேதுவையும் கடல் நீரோடு விழுங்கி விட்டார். கடல் விழுங்கப் பட்டதால் பூமி வறண்டது. தேவர்கள் கடலை மீண்டும் உண்டாக்க அகஸ்தியரிடம் வேண்டினர். அவரும் கடல் நீரை கடல் இருந்த இடத்திலேயே உமிழ்ந்தார். தன் வாயில் இருந்த மிகுந்த நீரை உமிழ அந்த இடம் தற்போது அகஸ்தியர் தீர்த்தமாக அறியப்படுகிறது.
சுகேதுவும் அவன் புதல்வர்களும் தங்களை மன்னிக்கும்படியும் சாபவிமோசனம் ஏற்படுத்தவும் வேண்டினர். அகஸ்தியரும் அவர்களை இந்த தீர்த்தத்தில் நீராடச் செய்து ஐந்து விதமான வேள்விகளை செய்வித்து சாபவிமோசனம் ஏற்படச் செய்தார். வைகாசி மாத பவுர்ணமி அன்று இந்த தீர்த்தம் அகஸ்தியரால் உருவாக்கப்பட்டதால் ஒவ்வொரு வருடமும் அந்நாளில் அகஸ்தியர் இங்கு எழுந்தருளுவதாக நம்பப்படுகிறது.
விண்ணுலகில் இருந்து சாபம் பெற்று பூமிக்கு வந்த விண்ணோருக்கும், பூமியில் இங்கேயே பிறந்து வாழ்ந்த மக்களுக்கும் ஒருங்கே பிறவிப் பயன் அடையச் செய்த புனிதத்தலம் “பஞ்சேஷ்டி” ஆகும்.
மூலவர் அகஸ்தீஸ்வரர். இச்சிவ லிங்கம் சுயம்பு மூர்த்தியாகும். அகஸ்தியர் காலத்திற்கு முன்பே இங்கு இச்சிவலிங்கம் அமைந்துள்ளது. அம்பாள் ஆனந்தவல்லி முக்கண் உடையவள். திருமேனி பச்சை மரகதக்கல்லால் உருவாக்கப்பட்டது. தெற்கு நோக்கி அமர்ந்துள்ள திருக்கோலம். இடதுபாதம் முன் வைத்துள்ளவாறு காணப்படுகிறது.
அகஸ்தியரின் வேண்டுதலால் அவரது யாகங்களுக்கு இடையூறு செய்ய வந்த அசுர சக்திகளை அழிக்க, தன் இடது பாதத்தை முன்வைத்தும், மூன்று கண்களினால் அசுர, தீய சக்திகளையும் அழித்ததனால் அம்பாளின் இத்திருக்கோலம் சத்ருசம்ஹார திருக்கோலம் ஆகும். இங்கு யாகங்கள் செய்தால் பலன்கள் பல மடங்காக கூடும் என்று கூறப்படுகிறது. அம்பாளின் அருள் தீய சக்திகளையும் நம்முடைய செயல்களில் ஏற்படும் தடங்கல்கள், எதிர்ப்புகள் அனைத்தையும் விலக்கி விடும்.
இந்த சத்ருசம்ஹார அம்பாளை குளிர்விக்க அம்பாளுக்கு முன்புறம் மிகப்பெரிய “துர்க்காயந்திரம்” பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த யந்திரத்தின் அதிதேவதைகளின் சிற்ப வடிவம் ராஜகோபுர நுழைவாயில் மேல் முகப்பில் அமைந்துள்ளது. இந்த முக்கண் ஆனந்தவல்லி அம்பிகையை பற்றி கூறும் வகையில் அபிராமி அந்தாதியிலும், ஆதி சங்கரரின் சவுந்தர்ய லஹரியிலும் வரிகள் அமைந்துள்ளது அம்பாளின் சிறப்பை குறிக்கும்.
அகஸ்திய தீர்த்தத்தில் நீராடி கோவிலை அங்கப் பிரதட்சணம், அடிப்பிரதட்சணம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் நோய்கள் தீர்வதாக நம்பிக்கை உள்ளது.
அம்பிகையின் நேர்பார்வையில் நவக்கிரகங்கள், அஷ்ட திக்பாலகர்கள் அமைந்துள்ளதால் நம்முடைய அனைத்து நவக்கிரக, வாஸ்து தோஷங்கள் நீங்கி விடும். ராஜகோபுரம் தெற்கில் அம்பாளுக்காகவே அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பாகும்.
இதனால் இத்தலத்தை பரிகாரத் தலம் என்றும் கூறுகின்றனர். அகஸ்தியர் கடைபிடித்த ஐந்து வகையான இஷ்டிகளில் ஒன்று மானுஷ இஷ்டி. இது சகமனிதருக்கு உணவு, உடை அளிப்பதாகும். ஆகவே இங்கு உணவு அளிப்பது மிகச் சிறந்தது. இங்கு இப்படி உணவளித்தால் நமக்கு நன்மைகளும் பிறவிப் பயனும் கிடைக்கும் என்று அகஸ்தியரின் ஓலைச் சுவடிகளில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
திருமணத் தடை நீங்க துர்கா யந்திரம் அமைந்துள்ள சன்னதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லாவித திருமணத் தடைகளும் நீங்கும்.
ஒரு ஆலயத்தின் ராஜகோபுரம் தெற்குத் திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்தால், அத்திருத் தலம் பரிகாரத் தலமாகக் கருதப்படும் என்பது ஐதீகம்.
பஞ்சேஷ்டி திருக்கோவிலின் ராஜகோபுரமும் தெற்கு திசைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சத்ரு சம்ஹாரியாக விளங்கும் அன்னை ஆனந்தவல்லிக்காக அமைக்கப்பட்டுள்ளது. எனவே பஞ்சேஷ்டி திருத்தலம் பரிகாரத் தலமே ஆகும்.
இத்தலத்தில் வழிபாடு செய்தால், சத்ரு தோஷம், திருமண தோஷம், முன்னேற்றத் தடை தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்கள் நீங்குவதுடன், மீண்டும் பிறவாத பேறினையும் அளிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்த சிறந்த பஞ்சேஷ்டி திருத்தலம் அகத்தியர் நாடி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவில் திருக்குளத்தில் நீராடி கோவிலை வலம் வந்து தீபங்கள் ஏற்றி பரிகார சங்கல்பங்கள் செய்து அர்ச்சனை செய்ய வேண்டும். அகண்ட தீபமும் ஏற்ற வேண்டும்.

அருள்மிகு கற்பக சௌந்தரி அம்பாள் சமேத கற்பேகஸ்வரர் திருக்கோவில் 5-வது பிளாக் முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஸ்தல வரலாறு
முகப்பேர் மேற்கு பகுதியில் தமிழக அரசு வீட்டு வசதி வாரியத்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டு பூமியை சமப்படுத்தும் போது பூமிக்கடியில் அருள்மிகு கற்பேகஸ்வர பெருமாளின் திவலிங்கத் திருமேனி மற்றும் நந்தியெம்பெருமானின் சிவாவிக்ரஹங்கள் கிடைக்கப் பெற்றது. வீட்டுவசதி வாரியத்தால் குடியிருப்பு மனைகள் பகுதிவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்டது.
இப்பகுதிவாழ் மக்கள் இந்த இடத்தில் ஆலயம் அமைக்க வேண்டும் என எண்ணி "அருள்மிகு கற்பேகஸ்வர் ஆலய டிரஸ்ட்" என்ற பெயரால் ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதன் உறுப்பினர்கள் பொதுமக்கள் பேராதரவுடன் 12.06.1994 அன்று ஆலயம் அமைக்க பூமி பூஜை செய்து திருப்பணிகள் செய்தனர். மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் இந்த சிவலிங்கத் திருமேனியை பார்வையிட்டு ஆராய்ந்து சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சிவலிங்கம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
கோவிலில் கற்பகவிநாயகர், கற்பேகஸ்வரர், கற்பகசௌந்தரி அம்பாள், கனகதுர்க்கை, நவக்கிரஹ நாயககர்கள், சண்டிகேஸ்வரர், சுவாமி மோஸ்டத்தில் பால முருகன், ஐயப்பன், தட்சிணமூர்த்தி, மஹா விஷ்ணு, பிரம்மா, ஸ்தலவிருட்சம் அரசமரத்தில் விநாயகர், கருமாரி அம்மன், நாக கன்னிகள் மூவர், சுவாமிநந்தி, பலிபீடம், அம்பாள் நந்தி, பலிபீடம், மூஷகம், பலிபீடம் என பிரதிஷ்டை செய்து சாஸ்திரப்படி சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கற்பக்கிரஹ விமானங்கள் நிறுவி 02.06.1995 அன்று சுபவேளையில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் 06-02-2003 ஆண்டு காலபைரவர், நால்வர் பெருமக்கள் மற்றும் சேக்கிழார் பெருமானும் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 28-11-2007 ஆண்டு உற்ச மூர்த்திகள் பாதுகாப்பு அறை கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 06-12-2009 ஆண்டு துவஜஸ்தம்பம் நிறுவி, கொடிமர விநாயகரும் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

மேலும் விநாயகர், பிரதோஷ நாயகர், சோமால்கந்தர், தாய் அம்பிகை சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, சண்டிகேஸ்வரர், பள்ளியறை சந்திரசேகரர், அம்பாள், நடராஜர், சிவகாமி அஸ்திர தேவர், மாணிக்கவாசகர் முதலான மூர்த்திகளின் பஞ்சலோக விக்ரஹங்கள் பக்தகோடி பெருமக்களால் இத்திருக்கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்திற்கு என எவ்வித அசையும், அசையா சொத்துக்கள் இல்லாத நிலையில், பக்தகோடி பெருமக்களின் பேராதரவுடன் அனைத்து பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
இந்த கோவிலின் சிறப்புகள்:
* கேட்டவர்க்கு கேட்டதைக் கொடுக்கும் கற்பகேஸ்வரர் பெருமான் பக்தர்களின் வேண்டுகளை ஏற்று, கற்பக விருட்சமாக வாரி வழங்குகிறார். தங்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறியதாக பக்தர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
* குழந்தைப்பேறு கிடைக்காதவர்கள் ஆடிப்பூரத்தன்று கற்க சௌந்தரியை வழிபட்டு, அம்பிகையின்மடியில் வைத்த முளைப்பயிறு பிரசாதத்தினை சிவாச்சாரியார் அவர்களிடம் பெற்று அருத்தி குழந்தைப் பேறு பெற்று பலர் பயன்பெற்று வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
* திருமணம் தடைப்பட்டு வரும் ஆண், பெண் இருபாலரும் சுவாமி, அம்பாளை மனம் உருகி பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணத்தடை நீங்கி, சுபமாக திருமணம் நடைபெறும் என்பதும் உண்மை.
* தீராத நோய்களும் தீர்ந்துள்ளதாக பலர் தெரிவிக்கின்றனர்.
இத்தகு பெருமை வாய்ந்த இத்தலம் தமிழ்நாடு அரசு இந்திய சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்குட்பட்டு அறங்காவலர்களால் சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
கோவில் முகவரி
அருள்மிகு கற்பக சௌந்தரி அம்பாள் சமேத அருள்மிகு கற்பேகஸ்வரர் திருக்கோயில்
(தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்குட்பட்டது)
5-வது பிளாக் முகப்பேர் மேற்கு
சென்னை 600037

20-05-2018 ஆண்டு திருமாடப்பள்ளி, அபிஷேக பொருள்கள் வைக்கும் அறைகள், திருப்பள்ளியறை சிதிலமடைந்ததை புனர் அமைக்கப்பட்டு சுவாமி சந்நிதிகளின் தரைகளில் கற்கள் பதித்தும், சுற்றுப் பிரகாரங்களில் கருங்கல் பதித்தும், கற்பக்கிரஹ விமானங்களில் சுதை வேலைகள் புதுப்பிக்கப்பட்டு, வண்ணங்கள் பூசியும், ஆகமவிதிகளின்படி யாகசாலைகள் அமைத்து, வெகுவிமரிசையாக மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேலும் விநாயகர், பிரதோஷ நாயகர், சோமால்கந்தர், தாய் அம்பிகை சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, சண்டிகேஸ்வரர், பள்ளியறை சந்திரசேகரர், அம்பாள், நடராஜர், சிவகாமி அஸ்திர தேவர், மாணிக்கவாசகர் முதலான மூர்த்திகளின் பஞ்சலோக விக்ரஹங்கள் பக்தகோடி பெருமக்களால் இத்திருக்கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்திற்கு என எவ்வித அசையும், அசையா சொத்துக்கள் இல்லாத நிலையில், பக்தகோடி பெருமக்களின் பேராதரவுடன் அனைத்து பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
இந்த கோவிலின் சிறப்புகள்:
* கேட்டவர்க்கு கேட்டதைக் கொடுக்கும் கற்பகேஸ்வரர் பெருமான் பக்தர்களின் வேண்டுகளை ஏற்று, கற்பக விருட்சமாக வாரி வழங்குகிறார். தங்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறியதாக பக்தர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
* குழந்தைப்பேறு கிடைக்காதவர்கள் ஆடிப்பூரத்தன்று கற்க சௌந்தரியை வழிபட்டு, அம்பிகையின்மடியில் வைத்த முளைப்பயிறு பிரசாதத்தினை சிவாச்சாரியார் அவர்களிடம் பெற்று அருத்தி குழந்தைப் பேறு பெற்று பலர் பயன்பெற்று வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
* திருமணம் தடைப்பட்டு வரும் ஆண், பெண் இருபாலரும் சுவாமி, அம்பாளை மனம் உருகி பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணத்தடை நீங்கி, சுபமாக திருமணம் நடைபெறும் என்பதும் உண்மை.
* தீராத நோய்களும் தீர்ந்துள்ளதாக பலர் தெரிவிக்கின்றனர்.
இத்தகு பெருமை வாய்ந்த இத்தலம் தமிழ்நாடு அரசு இந்திய சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்குட்பட்டு அறங்காவலர்களால் சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
கோவில் முகவரி
அருள்மிகு கற்பக சௌந்தரி அம்பாள் சமேத அருள்மிகு கற்பேகஸ்வரர் திருக்கோயில்
(தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்குட்பட்டது)
5-வது பிளாக் முகப்பேர் மேற்கு
சென்னை 600037
திருவள்ளூர் மாவட்டம், சென்னை-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் பெரியபாளையம் அருகே செங்கரை ஊராட்சியில் காட்டுச் செல்லியம்மன் திருக்கோவில் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சென்னை-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் பெரியபாளையம் அருகே செங்கரை ஊராட்சியில் காட்டுச் செல்லியம்மன் திருக்கோவில் உள்ளது. 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கோவில் இது ஆகும்.
இப்பகுதி அடர்ந்த காடாக இருந்ததாம். இருளர் இன மக்கள் புற்றில் கைவிட்டு பாம்பு உள்ளதா? என பார்க்க முற்பட்டபோது ஏதோ? ஒரு கல் கையில் பட்டதாம். எனவே புற்றை உடைத்து பார்த்தபோது அதில் அம்மன் சிலை இருந்ததாம். இதனால் இருளர் இன மக்கள் ஊரில் சென்று புற்றின் உள்ளே அம்மன் சிலை இருப்பதை கூறினார்களாம். எனவே, கிராம மக்கள் திரண்டு வந்து அந்த அம்மன் சிலையை ஊரினுள் கொண்டு சென்று வைக்க முற்பட்டார்களாம். அப்போது சிறுமி மீது அம்மன் அருள் வந்து ஊரினுள் என்னைக் கொண்டு சென்று வைக்க வேண்டும் என்றால் ஒரு அடிக்கு,ஒரு காவு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாம்.
இதனை ஏற்று கிராம மக்கள் காவு கொடுத்த வண்ணம் அம்மனை ஊரினுள் கொண்டு செல்ல முயற்சித்தார்களாம்.ஊர் எல்லையில் உள்ள காவு கொள்ளை என்ற இடத்திற்கு வந்தபோது,காவு அனைத்தும் தீர்ந்து விட்டதாம். இதனால் அம்மன் மீண்டும் எடுத்த இடத்திற்கே சென்று அமர்ந்து விட்டதாம். இதனால் இந்த அம்மனை காட்டுச் செல்லியம்மன் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.அம்மன் இருக்கும் இடத்தில் வேத கொடி உள்ளது. இது இந்த அம்மன் கோவிலுக்கு பந்தல் போன்று படர்ந்துள்ளது. இந்த அம்மன் ஏழு ஊருக்கு கிராம தேவதையாக விளங்குவதாக கூறப்படுகிறது.
‘‘ராஜராஜ சோழனால் தோற்றுவிக்கப்பட்ட கோயில் இது. அதுக்கான வரலாற்று ஆதாரம் இருக்குன்னு சொல்றாங்க. போர் சமயங்களில், சோழ மன்னர்கள் இங்கே வந்து செல்லியம்மனைக் கும்பிட்டுத்தான் போருக்குப் போவாங்கன்னு, பெரியவங்க சொல்லுவாங்க. அன்னையின் நவசக்தி வடிவங்களில், இங்கே பத்ரகாளி வடிவத்தில் செல்லியம்மன் எழுந்தருளி இருக்கிறாள்.
பிரம்மாண்டமான உருவம். மெய்சிலிர்க்க வைக்கும் ஆகிருதி. ஏழரை அடி உயரம், ஆயுதங்கள் தாங்கிய பத்துக் கரங்கள், அசுரர்கள் மூவரை சம்ஹாரம் செய்த நிலையில் வீரத் திருக்கோலம் காட்டுகிறாள் செல்லியம்மன். அன்னையைத் தரிசிக்கும் அக்கணத்தில் நம்மையுமறியாமல் சிலிர்த்துப்போகிறது உடம்பு. பக்திப் பெருக்கில் கண்களில் நீர் சுரக்க, கரங்கள் இரண்டும் தாமாகவே இணைந்து வணங்குகின்றன அந்தத் தாயை!
‘‘பல பேருக்கு இது குலதெய்வம். அதனால் ஆண்டு முழுவதும் குலதெய்வ வழிபாடு நடக்கும். இங்கு ஆடியும் பங்குனியும் ரொம்ப விசேஷம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மாவுக்குச் சந்தனக் காப்பு அலங்காரம் ரொம்ப விசேஷம். அப்போ பார்க்கணுமே இந்த செல்லியம்மாவை... அவங்க உயரத்துக்கும் அந்த அலங்காரத்துக்கும் அப்படி ஓர் அழகா இருக்கும். முத்து முத்தாக அம்பாளுக்கு வியர்த்துக் கொட்டும். துண்டால் ஒற்றியெடுக்கும் அளவுக்கு வியர்த்தாலும், சந்தனம் கரையாது. அது ஓர் அதிசயம் இங்கே!
ஆடி மாசம் பல பேர், குலதெய்வ வழிபாட்டுக்கு வருவாங்க. நேர்த்திக் கடன்களைச் செய்து வழிபடுவாங்க. அப்புறம் இங்கேயே ஆலமரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கிளம்பிப் போவாங்க. திருமண பிராப்தி, குழந்தை வரம், தொழிலில் வெற்றின்னு பல பிரார்த்தனைகளுக்காகப் பக்தர்கள் இங்கே வந்தாலும், குழந்தைப்பேறு வேண்டி வர்றவங்க அதிகமாக உள்ளனர்.’’
இக்கோவிலின் அருகே உள்ள குளத்தில் தண்ணீர் கடுமையான வறட்சி காலத்திலும் வற்றுவது இல்லையாம். இந்தக் குளத்தில் நீராடி ஈரத்துணியுடன் 3,5,7,9,11 என்று தன்னால் முடிந்த அளவு கோவிலை வலம் வந்து இந்த அம்மனை தரிசிக்கும் ஆண் மற்றும் பெண் பக்தர்களுக்கு வேண்டுதல் நிறைவேறுவதாக கூறப்படுகிறது. அவ்வாறு வேண்டுதல் நிறைவேறும் ஆண் மற்றும் பெண் பக்தர்கள் இக்கோவிலுக்கு முறையே 3,5,7,9,11 வாரங்கள் வியாழக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை வந்து அம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.
இக்கோவிலுக்கு, வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.கோவில் குளத்தில் நீராடி வேப்பமர பிள்ளையாரை தரிசனம் செய்துவிட்டு காட்டுச்செல்லியம்மனை தரிசனம் செய்தோருக்கு குறைகள் நிவர்த்தி ஆவது உறுதியாம்.இதன் பின்னர் பக்தர்கள் இதற்குப் பரிகாரமாக யானை மற்றும் குதிரையை பரிவார மூர்த்திகளாக சமர்ப்பிப்பதும் உண்டாம்.
அசைவ பக்தர்கள் கடாவெட்டி, மொட்டையடித்து,பொங்கல் வைப்பதும்,சைவ பக்தர்கள் என்றால் பால் பொங்கல் வைத்து மொட்டை அடிப்பார்களாம். இக்கோவிலுக்கு காலையில் இருந்து மாலை 6 மணி வரையில் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருவார்களாம் அதன் பின்னர் அம்மன் வீதி உலா செல்வதாக கூறப்படுகிறது.
இதனால் இக் கோவிலுக்கு இரவு நேரங்களில் பக்தர்கள் வருவது இல்லையாம். கோவிலுக்கு கோபுரம் அமைக்கலாம் என்று கற்கள் கொண்டு வந்து நான்கு மூலைகளிலும் நட்டுவைத்து ஏற்பாடு செய்த போது அந்தக்கற்கள் அனைத்தும் சரிந்து விழுந்ததாம்.இதனால் இந்தக் கோவிலுக்கு கோபுரம் அமைக்கவில்லை. நுழைவு வாயில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. வேதக் கொடிப்பந்தலே தொடர்ந்து பக்தர்களுக்கு நிழல் தந்து வருகிறது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு நாள்தோறும் காலையில் மட்டுமே அபிஷேகம் ஆராதனை நடைபெறும். மற்றும் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.மேலும், ஜனவரி மாதம் முதல் நாள் மட்டும் சிறப்பு பூஜைகள்,சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.
கோயிலை விரும்பாத செல்லி
அம்மனுக்குக் கோயில் கட்ட உத்தரவு கேட்டபோது, அம்மனின் விருப்பம் கோயில் கட்டுவதல்ல என்பதை உணர்ந்தனர் மக்கள். புற்று நீக்கி தரிசனம் செய்ய அனுமதி கேட்டனர். அம்பாள் அனுமதிக்க, ஒரு வியாழக்கிழமையில் புற்றை சிறிது சிறிதாக அகற்ற தீச்சுடர் மகுடமும், நான்கு கரங்களும், சம்மணமிட்டு அமர்ந்த கோலத்தில் சர்வ ஆபரணம் சூடியவளாய் காட்சி தந்தாள்.
அன்று முதல் அந்த இடத்திலேயே வேதைக்கொடிப் பந்தலின் கீழ் ஜன்னி, கொஞ்சை, கருங்காலி, வில்வம், தும்பி போன்ற மூலிகைச் செடிகள் சூழ இருந்து, அருள் செய்துவருகிறாள். தினமும் அபிஷேகமும் ஒரு கால பூஜையும் நடைபெறும். ஆடி மாதம் காய்கறி சீர் கட்டு என்னும் காய்கறி அலங்காரமும் கூழ் வார்த்தலும், சித்திரை 1-&ந்தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று உளுந்தால் வடை செய்து மாலையாக்கி அம்பாளுக்குச் சார்த்தி வழிபட்டு பக்தர்களுக்கும் ஊருக்கும் விநியோகம் செய்யும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது.
இக்கோவிலின் பூசாரியாக சீனிவாசன் உள்ளார். சூளைமேனியிலிருந்து கோவிலுக்கு ஷேர் ஆட்டோ மட்டுமே இயக்கப்படுகிறது. சூளை மேனியிலிருந்து செங்கரை கோவில் வரையில் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த சிறப்பு பேருந்துகள் தற்போது நிறுத்தப் பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.எனவே இந்த சிறப்பு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று பக்தர்களும், இப்பகுதி கிராமம் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவிலின் செயல் அலுவலரின் செல்: 94980 70760,96771 55245.
ஞாயிற்றுக்கிழமை கூழ்வார்த்தல்
ஆடி மாதத்தை முன்னிட்டு காட்டுச் செல்லியம்மன் ஆலயத்தில் தினமும் பக்தர்கள் வேண்டி கொண்டு கூழ்வார்த்தல் செய்து வருகிறார்கள். இதனால் இந்த ஆடி மாதம் முழுவதும் காட்டுசெல்லியம்மன் ஆலயத்தில் திருவிழா கோலமாக உள்ளது.
ஆடி மாதம் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை கோவில் நிர்வாகம் சார்பில் கூழ்வார்த்து அதை அம்மனுக்கு நைவேத்தியம் செய்து பிறகு பக்தர்களுக்கு வினியோகம் செய்வார்கள். இந்த ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகம்
காட்டுசெல்லியம்மன் வியாழக்கிழமை அவதாரம் எடுத்தவள் என்று கருதப்படுகிறது. எனவே வியாழக்கிழமை தோறும் காட்டுசெல்லி அம்மனுக்கு காலை 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
பால், தயிர், தேன், சந்தனம், நல்லெண்ணை, வாசனை திரவியப் பொருட்கள், விபூதி, மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். விருப்பம் உள்ள பக்தர்கள் வியாழக்கிழமைகளில் அதிகாலையிலேயே அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

இந்த மகிஷாசுரமர்த்தியின் ஆலயம் திருத்தணியில் இருந்து திருப்பதி போகும் மார்க்கத்தில் 7 கி.மீட்டரிலும், பொன்பாடி ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கி.மீட்டரிலும் இருக்கிறது.
இந்த மகிஷாசுரமர்த்தியின் ஆலயம் திருத்தணியில் இருந்து திருப்பதி போகும் மார்க்கத்தில் 7 கி.மீட்டரிலும், பொன்பாடி ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கி.மீட்டரிலும் இருக்கிறது. இந்த அம்மன் மத்தூர் என்ற ஊரில்தான் உள்ளது.
அன்று யுகாந்த காலத்தில் மகிஷாசுரன் பிரம்ம தேவனிடம் ஏராளமான வரத்தைப் பெற்றுத் தேவர்களைத் துன்புறத்தி வந்தான். தான் எவராலும் கொல்லப்படக்கூடாது. ஆனால் ஒரு பெண்ணால் மட்டும் கொல்லப்பட வேண்டும் என வரம் கேட்டுப்பெற்றான்.
இவ்வாறு வரம் பெற்ற அவன் தேவர்களைத் துன்புறுத்தியதால் அவனை வதம் செய்ய மூம்மூர்த்திகளும் சேர்ந்து அம்மகிஷனைக் கொல்ல பேரொளி கொண்ட ஒரு பெண்ணைப் படைத்து அவளுக்குத் தங்கள் சக்தியை அளித்தனர். மற்ற தேவர்களும் தங்களது படைக்கருவிகளை அவளுக்குக் கொடுத்து உதவினர் என்பதை மார்க்கண்டேய புராணமும், துர்கா சப்தசதியும் கூறும். அவள் தான் மகிஷாசுரனைப் பின்னாளில் வதம் செய்து தேவர்களைக் காப்பாற்றினாள். அதனால் அவளுக்கு “மகிஷாசுர மர்த்தனி” என்ற பெயர் வழங்கலாயிற்று.
இந்த மகிஷாசுர மர்த்தினி தனது 8 கரங்களில் சங்கு, சக்கரம், வில் அம்பு, கத்தி, கேடயம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி ஏழு கபாலங்களுடன் மாலையையும் பூண்டு எட்டடி உயரமாகக் கம்பீர நிலையில் நின்று அருள் கடாட்சம் புரிவதைக் காணலாம்.
இந்த அம்பிகையின் பாதங்களின் கீழே திரிசூலம் குத்த எருமை உருவத்துடன் மனித முகம் உள்ள மகிஷாசுரன் இரு கரங்களோடு நின்ற நிலையில் உள்ளான். வலது பக்கம் அவனது துண்டு படுத்திய எருமைத் தலை கீழே கிடக்கிறது. வாலின் பக்கமாக அன்னையின் வாகனமான சிம்மன் அந்த அசுரனைத் தாக்குவது போன்ற காட்சி உள்ளது.
இவ்வம்பிகை புன் சிரிப்பு முகத்தில் தவழ ஈசான மூலையை நோக்கியபடி காட்சி தருகிறாள். நிற்க.
1962-ம் ஆண்டு இந்த பகுதியில் அரக்கோணத்திற்கும் ரேணுகுண்டாவிற்கும் உள்ள ரெயில் தடத்தை அமைத்திட முயற்சித்த போது பணியாட்களில் சிலர் மூர்ச்சையாகிக் கீழே சாய்ந்தனர். அதன் பின்னரே மேட்டுப் பாங்கான அவ்விடத்தில் சென்றவர்கள் மயங்கி விழுந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்த மத்தூர் மக்கள் அவ்விடத்திற்குச் “சக்திமேடு” என்று பெயரிட்டனர். மேலும் எவரும் அப்பக்கமாகச் செல்வதற்கும் பயங்கொண்டனர்.
மறுபடியும் கடவுளை வேண்டியபடியே சில ரெயில்வே பணியாளர்கள் அங்கு பாதை வெட்டினர். அப்பொழுது பள்ளம் தோண்டிய இடத்திலே மகிஷாசுரமர்த்தனியின் உருவச் சிலை குப்புறக் கவிழ்ந்து மண்ணால் மூடப்பட்டிருந்ததாம். மத்தூரில் உள்ள பக்தர்கள் அதை வெளியில் எடுத்து வந்து காஞ்சி ஆசார்யாளின் யோசனைப்படி அங்குக் கோவில் கட்டி அம்மனைப் பிரதிஷ்டை செய்தனராம். இங்கு சம்மமும், பலிபீடமும் உள்ளன.
மேலும் இங்குள்ள வடபுறப்பிராகாரத்தில் உள்ள மரத்தில் திருமணம் நடக்க வேண்டியும், பிள்ளைவரம் வேண்டியும் விதவிதமாகக் கலர்த் துணிகளைக் கட்டிவைப்பதுண்டு. செவ்வாயன்று சிறப்பு வழிபாடு உண்டு. நவராத்திரி காலத்திலும், பங்குனியிலும் இவ்வம்மனுக்கு திருவிழா நடைபெறும்.
இங்குள்ள அம்மனை பலர் வந்து வழிபட்டு வேண்டுதலை செய்து பலன் பல பெறுவதைக் காணலாம். ஆகவே நாமும் மத்தூர் சென்று மகிஷாசுரமர்தினியை வணங்கி வழிபட்டு வேண்டுவன பெற எம்மோடு வாருங்கள்.
துர்க்கைக்கு ராகுகால பூஜை
மகிஷாசுரனை வதம் செய்ய ஈசன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து அதில் இருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறிகளின் மூலம் வாமை, ஜயேஷ்டை, ரவுத்ரி, சர்வபூதமணி, மனோன்மணி என்னும் நவசக்திகளைக் கொண்ட நவதுர்க்கைகளைத் தோற்றுவித்தார்.
இந்த நவசக்திகளும் ஒன்றாகி துர்க்கா பரமேஸ்வரியாக வடிவெடுத்து சிம்ம வாகனத்தில் புறப்பாடு எருமை வடிவில் இருந்த மகிஷனை வதைத்தார். அதன் காரணமாக ‘மகிஷாசுர மர்த்தினி’ என்னும் திருநாமத்தைக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.
எருமை வாகனத்தில் சங்கு, சக்கரம், கதை, கத்தி, கலப்பை, உலக்கை, கேடயம், தோமரம், கோடாளி, கயிறு, குந்தாயுதம், திரிசூலம், ஒப்புறயர்வற்ற சாரங்கம் என்னும் வில்லுடன் துர்க்காதேவி காட்சியளிக்கிறாள்.
துர்க்கையைத் துதிக்க ராகுகாலமே சிறந்தது. ராகுகாலத்தில் பூஜை செய்வோமானால், அந்த பூஜை மற்ற நேரங்களில் செய்யப்படும் பூஜையைவிட பலன் மிகுந்ததாக இருக்கும். அதற்கு ஒரு காரணம் உள்ளது. செவ்வாய்க்கிழமைக்குரிய அங்காரகன் துர்க்கையை மங்கள சண்டிகையாக வழிபட்டு முழுபலனையும் அடைந்தவன்.
செவ்வாய்க்கிழமைகளில் செய்யும் ராகுகால துர்க்கா பூஜைக்கு பலன்கள் அதிகம். திருமணத்தடை நீங்குதல், செவ்வாய் தோஷம் அகலுதல், பீடைகள் விலகுதல், காரிய சித்தி, பகை விலகுதல் போன்ற நன்மைகள் ஏற்படும்.
செவ்வாய்க்கிழமைகளில் மஞ்சள் நிறப் பூக்களான தங்க அரளி, சாமந்தி, நந்தியாவட்டை ஆகிய மலர்களை அர்ச்சனைக்கும், மஞ்சள் நிற வாழைப் பழம், பலாச்சுளை, மாம்பழம், மஞ்சள் வண்ண வெண் பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நிவேதனத்திற்கும் பயன்படுத்தி ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரியைப் பூஜிக்க வேண்டும். எலுமிச்சம் பழங்களைக் கோர்த்த மாலை இந்த அம்மனுக்கு விசேஷம்.
செவ்வாய்க் கிழமையன்று 5 எலுமிச்சம் பழங்களை (நல்ல மஞ்சள் நிறம் உடையவை) எடுத்து இரண்டாக வெட்டிச் சாற்றைச் சிறுபாத்திரத்தில் வடித்து வைத்து விட்டு, இரு எலுமிச்சைத் தோல்களை எதிர்ப்புறமாக மடக்கிக் கிண்ணம் போல் அமைத்து, அதில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றித் திரியிட்டு அம்மன் சன்னதியில் வைக்க வேண்டும். இவ்வாறு 5 எலுமிச்சை மூடிகளில் மொத்தம் 10 விளக்குகள் செய்யலாம்.
ஆனால் ஒரு மூடியைத் தனியே வைத்துவிட்டு, 9 விளக்குகள் மட்டும் ஏற்ற வேண்டும். இந்த 9 விளக்குகளைத் துர்க்கை அம்மன் சன்னதியில் வைக்க வேண்டும். ஆயுள் பலம் பெருக நல்லெண்ணெய்க்குப் பதில் இலுப்பை எண்ணெயை உபயோகிக்கலாம்.
ராகு காலத்தில் துர்க்கை சன்னதியில் முதிய சுமங்கலிப் பெண்ணுக்கு (சுவாசினி) தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, பூ மற்றும் காணிக்கை கொடுத்து வணங்கினால், அவற்றை நேரடியாக சுவாசினி உருவில் துர்க்கா பரமேஸ்வரியே பெற்றுக்கொண்டு அருள் பாலிப்பாள் என்பது ஐதீகம். மேலும் துர்க்கை சன்னதியில் கன்னிப் பெண்களின் கால்களுக்கு நலுங்கிட்டு, கைகளில் வளையல் இட்டுப் பூச்சூட்டி பூஜித்தால் வாழ்க்கையில் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம்.
செவ்வாய்க்கிழமை ராகு கால பூஜையைச் சுமங்கலிப் பெண்கள் கடைப்பிடித்து வர கணவனுக்கு ஆயுள் பெருகும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும். செவ்வாய்க்கிழமை ஆண்கள் விரதம் இருந்து துர்க்கையை வழிபட்டால் கடன், நோய், தொழில் இடையூறுகள் போன்ற தொல்லைகளில் இருந்து பரிபூரணமாக விடுபடலாம்.
கசக்காத வேப்பிலை
அம்மன் வசீகர முகத்தோற்றத்துடன் காணக் காண கவர்ந்து இழுக்கும் உருவம். இக்கோவிலில் உள்ள வேப்ப மரத்தில் உள்ள இலை கசப்பதில்லை. வேப்ப இலையில் உள்ள கசப்பைத் அம்மன் ஈர்த்துக் கொண்டது போல் பக்தர்களின் துன்பத்தையும் அவள் ஈர்த்துக் கொள்வதே இதன் பொருள்.
அம்மனுக்குரிய நைவேத்யம்
ஞாயிறு - சர்க்கரைப் பொங்கல்
திங்கள் - பால் சாதம்
செவ்வாய் - வெண் பொங்கல்
புதன் - கதம்ப சாதம்
வியாழன் - எலுமிச்சம் பழ சாதம்
வெள்ளி - பால் பாயாசம்
சனி - புளியோதரை, தேங்காய் சாதம்.
மாரியம்மனுக்கு படைத்த பின், குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். எண்ணிய எண்ணம் விரைவில் நிறைவேறும்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ராமநந்தீஸ்வரம் என்னும் ராமனதீச்சரம், மிகவும் விசேஷமான தலமாகும். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ராமநந்தீஸ்வரம் என்னும் ராமனதீச்சரம், மிகவும் விசேஷமான தலமாகும். சீதையை கடத்திச் சென்று சிறை வைத்தான் ராவணன். அவன் மீது போர் தொடுத்து, அவனை அழித்தார் ராமன். ராவணனைக் கொன்றதால், ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த பாவம் நீங்குவதற்காக பல தலங்களுக்குச் சென்ற ராமன், அதன் ஒரு பகுதியாக இந்த தலத்திற்கும் வந்தார்.
அவர் இத்தலத்தில் உள்ள புஷ் கரணி தீர்த்தத்தில் நீராடி, பின் அய்யனை தரிசிக்க வரும் போது நந்தி தேவன் அவரை மறித்து நிற்கிறார். ‘ராவணனை கொன்ற பாவம் உங்களுக்கு நீங்கவில்லை. எனவே தாங்கள் உள்ளே செல்லக்கூடாது' என்பது அவரின் வாதம். ஆனால் அம்பிகை அந்த சம்பவத்தைப் பார்த்து திகைத்தார். உடனே அங்கு வந்து நந்தியை தனது திருக்கரத்தால் பிடித்து, ராமனை உள்ளே செல்ல வழி விடுகிறார். ராமபிரானும் உள்ளே சென்று லிங்கத்தை வழிபடுகிறார். அதன் பின் சாப விமோசனம் பெறுகிறார். ராமனுக்கு சாப விமோசனம் கொடுத்த ஈசன், ‘ராமநாதேஸ்வரர், ராமலிங்கேஸ்வரர்’ என பெயர் பெற்றார். நந்தி வழி மறித்தும் ராமன் உள்ளே வந்து சிவனை வணங்கி நின்ற காரணத்தினால், இந்த திருத்தலம் ‘ராமநந்தீஸ்வரம்’ என்று பெயர் பெற்றது. அதுவே நாளடைவில் மருவி தற்போது ‘ராமனதீச்சரம்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை உண்மை என நிரூபிக்கும் வகையில், சோமாஸ்கந்தர் உற்சவமூர்த்தியில் அம்பாள் தனது இடது திருக்கரத்தால் நந்தியை பிடித்துக்கொண்டு இருப்பது போன்ற காட்சி காணப்படுகிறது.
இந்தியாவில் பன்னிரு ஜோதிர்லிங்கங்கள் உள்ளன. இமயத்தில் கேதாரம், குஜராத்தில் சோமநாதம், உஜ்ஜனியில் மகாகாளேசம், காசியில் விசுவநாதம், மகாராஷ்டிரத்தில் வைத்தியநாதம், பீமநாதம், நாகேஸ்வரம், த்ரயம்பம், குசுமேசம், மத்தியப் பிரதேசத்தில் ஓங்காரேஸ்வரம், ஆந்திரா ஸ்ரீசைலத்தில் மல்லிகார்சுனம், தமிழ்நாடு ராமேஸ் வரத்தில் ராமநாதம் ஆகியவையே அந்த 12 தலங்கள்.
ராமபிரானால் வழிபாடு செய்யப்பெற்ற ராமேஸ்வரத்தைப் போல, ராமனதீச்சரமும் ராமனால் பூஜை செய்யப் பெற்றது. மேலும் இங்குள்ள சிவலிங்கத் திருமேனியில் ஜோதி புலப்படுவதாலும், ராமன தீச்சரமும் பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களுக்கு ஒப்பானதாக போற்றப்படுகிறது. இந்த தலத்தில் அருள்பாலிக்கும் இறைவனை வணங்கினால், இந்தியாவில் உள்ள பன்னிரு ஜோதிர் லிங்கங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.
இத்தல இறைவனை, ராமநந்தீஸ்வரர், ராமநாதேஸ்வரர், ராமலிங்கேஸ்வரர் போன்ற பெயர்களில் அழைக்கிறார்கள். அதே போல் இறைவியையும், கருவார்குழலியம்மை, சூளிகாம்பாள், சரிவார்குழலி என்ற திருநாமங்களில் போற்றுகிறார்கள். சூரிய புஷ்கரணி, சூரிய பூஜை ஆகியவை இந்த ஆலயத்தின் தீர்த்தங்கள் ஆகும். மகிழ மரம், ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது. அம்பாள் சன்னிதிக்கு நேரில் எதிரில் இரண்டாவது பிரகாரத்தில் இந்த தல விருட்சம் இருக்கிறது.
மகிழ மரத்தை தல விருட்சமாக கொண்டதால், இத்தல இறைவனுக்கு ‘மகிழம்பூவனநாதர்’ என்ற பெயரும் உண்டு. மகிழ மரத்துக்கு என்று தனிச் சிறப்புகள் பல இருக்கின்றன. திருவொற்றியூரில் சுந்தரமூர்த்தி சுவாமி களுக்காக சிவபெருமான் காட்சியளித்தது, மகிழ மரத்தின் அடியில் என்று பெரிய புராணம் கூறுகிறது. எனவே இந்த மரம் இருக்கும் இடத்தில் சிவபெருமானின் அருள் பல மடங்காக பெருகி இருக்கும் என்பது ஐதீகம். இத் தலம் ஞான சம்பந்தரால் பாடப்பட்ட தலமாகும். திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்தின் மூலமாக இந்தக் கோவில் பராமரிக்கப்பட்டு, அனைத்து பூஜைகளும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆலய அமைப்பு :

கோவிலைச் சுற்றி வந்தால் இரண்டு தூண்களைக் கொண்ட தனி மண்டபமாக, தட்சிணாமூர்த்தி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை இரண்டு யாழிகள் தாங்குவது போன்ற அமைப்பு சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது. சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும், சின்முத்திரையைக் காட்டி சிவ ரகசியத்தை அருளும் வண்ணம் வீற்றிருக்கிறார்கள். ஆலயத்தை பிரகார வலம் வந்தால், கணபதி, லிங்கோத்பவர், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான், மகாலட்சுமி, திருமால், பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவக்கிரகங்கள், பைரவர், துர்வாச முனிவர் வணங்கிய லிங்கம், மற்றொரு லிங்கம், அகத்தியர், அப்பர், திருஞானசம்பந்தர், காமதேனு, சூரியன் ஆகிய திருமேனிகள் காணப்படுகின்றன. அம்மன் சன்னிதியில் கோவில் தல புராணத்தை விளக்கும் வண்ணம், ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இந்த ஆலயத்தில் ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டியை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறும். இந்த உற்சவத்தில் சுப்பிரமணியர் தீர்த்தவாரி மிகச்சிறப்பாக நடக்கிறது. இங்குள்ள சுப்பிரமணியர் திருச்செந்தூர் முருகனுக்கு இணையானவர். எனவே இங்கு வந்து வணங்கினால் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ததற்கு சமமாகும். கார்த்திகை மாதம் சஷ்டி திதியில் சண்முகருக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெறும். இந்த கோவிலை பொறுத்தவரை சகல தோஷமும் நீங்கும் தலமாகும். ராமர் வழிபட்ட தலம் என்பதால் இந்த தலம் ராஜராஜ சோழன் ஆட்சிக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. இக்கோவில் விமானத்தை மாதிரியாக வைத்துதான் தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டப்பட்டது என்பர். எனவே இந்த கோவில் தஞ்சைக்கு நிகரானதாகும்.
அம்பாள் ‘குழலி’ என்ற பெயரில் இந்த சுற்று வட்டாரத்தில் மட்டுமே அழைக்கப் படுகிறார். நந்தியை தடுத்து ராமரை தரிசனம் செய்ய அனுமதித்த தலம் என்பதால் இத்தலம் ராமேஸ்வரத்துக்கு இணையானது. துர்வாச முனிவர் வணங்கிய லிங்கம் உள்ளதால், ‘தென் காளகஸ்தி’ எனவும் போற்றப்படுகிறது.
அம்மனை வழிபட்டு சுமங்கலி பூஜை செய்தால், அவர்கள் குடும்பம் செழிப்படையும். கணவர்கள் நோய் பிடியில் இருந்து விடுபடுவார்கள். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். பெண்களுக்கு சுக பிரசவம் நடை பெறும். திருமணத் தடை நீங்கி, குழந்தை பேறு கிடைக்கிறது.
துர்வாசர் பூஜித்த லிங்கம் :
இந்த ஆலயத்தில் மற்றுமொரு சிறப்பு துர்வாச முனிவர். இவர் அத்ரி மகரிஷியின் மகன் ஆவார். இவர் பல இடங்களுக்குச் சென்று சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்துள்ளார். இவர் சென்ற இடங்களை எல்லாம், காளகஸ்தி கோவிலுக்கு இணையான கோவில் என்பார்கள். அந்த வகையில் இந்த திருத்தலத்திற்கும் வந்து, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றுள்ளார் துர்வாச முனிவர். அந்த வகையில் இந்தத் திருத்தலமும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. துர்வாச முனிவர் பூஜித்த சிவலிங்கம், பைரவர் திருமேனிக்கு அருகில் அமைந்திருக்கிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அமைவிடம் :
இக்கோவிலுக்கு வர நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் என்ற ஊரில் இருந்து கிழக்கே ½ கிலோமீட்டர் தொலைவில் ராமநந்தீஸ்வரம் உள்ளது. நாகப்பட்டினம் - கும்பகோணம் சாலையில் திருப்புகழுரில் இருந்தும், திருமருகல் என்ற இடத்தில் இருந்தும் ஆட்டோ வசதி உள்ளது.
-முத்தாலங்குறிச்சி காமராசு

இந்த ஆலயமானது, 32 அடி உயரத்தில் நான்கு தளங்களை கொண்ட விமானத்தோடு அமைந்துள்ளது. இதன் கலசம் செம்பினால் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்தால் பலிபீடம், நந்தி உள்ளது. வலது புறம் அன்னை கருவார் குழலியம்மை, ராமருக்கு தடை நீங்க நந்தியை கையில் பிடித்தது போல், அனைவர் வாழ்விலும் உள்ள இடர்பாடுகளை களைய இன் முகத்தோடு காத்திருக்கிறார்.
இடது புறம் தலவிருட்சம் மகிழமரம் உள்ளது. அதைத் தாண்டிச் சென்றால், கரு வறையில் ராமநாத சுவாமி, லிங்க வடிவில் காட்சி தருகிறார். சிவாச்சாரியார் கற்பூர தீபம் காட்டும்போது லிங்க உருவத்திருமேனியில் ஜோதியை காண முடிகிறது. இவர் ஜோதிர் லிங்கமாய் நமது வாழ்வில் ஒளியேற்றும் வண்ணமாய் அருட் காட்சி தருகிறார்.

கோவிலைச் சுற்றி வந்தால் இரண்டு தூண்களைக் கொண்ட தனி மண்டபமாக, தட்சிணாமூர்த்தி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை இரண்டு யாழிகள் தாங்குவது போன்ற அமைப்பு சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது. சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும், சின்முத்திரையைக் காட்டி சிவ ரகசியத்தை அருளும் வண்ணம் வீற்றிருக்கிறார்கள். ஆலயத்தை பிரகார வலம் வந்தால், கணபதி, லிங்கோத்பவர், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான், மகாலட்சுமி, திருமால், பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவக்கிரகங்கள், பைரவர், துர்வாச முனிவர் வணங்கிய லிங்கம், மற்றொரு லிங்கம், அகத்தியர், அப்பர், திருஞானசம்பந்தர், காமதேனு, சூரியன் ஆகிய திருமேனிகள் காணப்படுகின்றன. அம்மன் சன்னிதியில் கோவில் தல புராணத்தை விளக்கும் வண்ணம், ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இந்த ஆலயத்தில் ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டியை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறும். இந்த உற்சவத்தில் சுப்பிரமணியர் தீர்த்தவாரி மிகச்சிறப்பாக நடக்கிறது. இங்குள்ள சுப்பிரமணியர் திருச்செந்தூர் முருகனுக்கு இணையானவர். எனவே இங்கு வந்து வணங்கினால் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ததற்கு சமமாகும். கார்த்திகை மாதம் சஷ்டி திதியில் சண்முகருக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெறும். இந்த கோவிலை பொறுத்தவரை சகல தோஷமும் நீங்கும் தலமாகும். ராமர் வழிபட்ட தலம் என்பதால் இந்த தலம் ராஜராஜ சோழன் ஆட்சிக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. இக்கோவில் விமானத்தை மாதிரியாக வைத்துதான் தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டப்பட்டது என்பர். எனவே இந்த கோவில் தஞ்சைக்கு நிகரானதாகும்.
அம்பாள் ‘குழலி’ என்ற பெயரில் இந்த சுற்று வட்டாரத்தில் மட்டுமே அழைக்கப் படுகிறார். நந்தியை தடுத்து ராமரை தரிசனம் செய்ய அனுமதித்த தலம் என்பதால் இத்தலம் ராமேஸ்வரத்துக்கு இணையானது. துர்வாச முனிவர் வணங்கிய லிங்கம் உள்ளதால், ‘தென் காளகஸ்தி’ எனவும் போற்றப்படுகிறது.
அம்மனை வழிபட்டு சுமங்கலி பூஜை செய்தால், அவர்கள் குடும்பம் செழிப்படையும். கணவர்கள் நோய் பிடியில் இருந்து விடுபடுவார்கள். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். பெண்களுக்கு சுக பிரசவம் நடை பெறும். திருமணத் தடை நீங்கி, குழந்தை பேறு கிடைக்கிறது.
துர்வாசர் பூஜித்த லிங்கம் :
இந்த ஆலயத்தில் மற்றுமொரு சிறப்பு துர்வாச முனிவர். இவர் அத்ரி மகரிஷியின் மகன் ஆவார். இவர் பல இடங்களுக்குச் சென்று சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்துள்ளார். இவர் சென்ற இடங்களை எல்லாம், காளகஸ்தி கோவிலுக்கு இணையான கோவில் என்பார்கள். அந்த வகையில் இந்த திருத்தலத்திற்கும் வந்து, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றுள்ளார் துர்வாச முனிவர். அந்த வகையில் இந்தத் திருத்தலமும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. துர்வாச முனிவர் பூஜித்த சிவலிங்கம், பைரவர் திருமேனிக்கு அருகில் அமைந்திருக்கிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அமைவிடம் :
இக்கோவிலுக்கு வர நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் என்ற ஊரில் இருந்து கிழக்கே ½ கிலோமீட்டர் தொலைவில் ராமநந்தீஸ்வரம் உள்ளது. நாகப்பட்டினம் - கும்பகோணம் சாலையில் திருப்புகழுரில் இருந்தும், திருமருகல் என்ற இடத்தில் இருந்தும் ஆட்டோ வசதி உள்ளது.
-முத்தாலங்குறிச்சி காமராசு
சென்னை குன்றத்தூரில் காத்யாயனி ஆலயம் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையின் அஸ்திவாரமே கண் நிறைந்த கணவன் அமைவது தானே...! கண்+அவன்= கணவன் அமைந்து விட்டால் ஒரு பெண்ணைத் தன் கண் இமை காப்பது போல பாதுகாப்பானே! இதனால் அவளுடைய வாழ்க்கை மங்களகரமாகத் தொடங்கி விடும்.
ஆனால் திருமணம் என்ற ஆயுள் பந்தத்தில் இரண்டு இளம் மனங்கள் இக்காலத்தில் இத்தனை சீக்கிரம் இணைந்து விடுமா என்ன? அதை ஏற்பாடு செய்வதற்குள் சில இடையூறு வரக்கூடும்.அவற்றை நீக்க பல தெய்வ பூஜைகள், ஆலய தரிசனங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. திருமணப் பேறு தரும் ஆலயங்களில் சாக்த வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கும் அம்பிகை ஆலயங்களையே இன்றைய கால கட்டத்தில் பெண்கள் நாடிச் செல்கின்றனர்.
கல்யாண வரம் தரும் காத்யாயனி
அம்மன் வழிபாட்டு முறையில் காத்யாயனி பூஜை மிகவும் பிரசித்தமானது. ஒரு குடும்பத்தில் கன்னிப்பெண் இருந்தால், கல்யாணங்கழிச்சோ என்று முதலில் கேட்டுவிட்டு, “கல்யாணங்கழிக்க காத்யாயனியை பூஜிக்கணும்” என்று கேரளத்து நம்பூதிரிகளும், பண்டிட்ஜிகளும் சொல்லுவார்கள். ஆம் ஒரு பெண்ணுக்குக் கல்யாணத்திற்குத் தடை இருந்தால் காத்யாயனி தேவியைப் பூஜித்தால் அந்தத் தடை உடனே விலகி விடும்.
கேரள மாந்திரீக ரத்தின கல்பத்தில் இதற்கான ஆதாரம் இருக்கிறது. இந்த அம்பிகை வழிபாடு கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் இருக்கிறது. சென்னை குன்றத்தூரில் காத்யாயனி ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் தினமும் பக்தர்களின் தரிசனத்திற்காக ஆலயம் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
கல்யாணப் பிரார்த்தனைக்கு வருபவர்கள் மூன்று வார தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஆலய சாஸ்திர விதியாக உள்ளது. தினசரி தரிசனம் இருந்தாலும் கல்யாணத்திற்கான வழிபாடு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளிலும், அமாவாசை, பவுர்ணமி நாளிலும் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும்.
மூன்று தரிசனங்களில் முதல் வார தரிசனத்தில் ஸ்ரீ காத்யாயனி சன்னிதியில் அர்ச்சனை செய்து தனது கிரக தோஷங்கள் விலகிட வேண்டிக் கொள்ள வேண்டும். இரண்டாவது தரிசனத்தில் இந்த ஆலயத்தில் உள்ள திருமண மரத்திற்குப் பூஜை செய்து சன்னிதியில் மஞ்சள் காப்பு கட்டி கொள்ள வேண்டும். தேவர், ரிஷிகள், ஆசி பெற்றிட, விருப்பங்கள் நிறைவேற விருட்சபூஜை அவசியம்.
மூன்றாவது வார தரிசனத்தில் ஒரு பெண் ஜன்ம பத்ரிகா பூஜை செய்ய வேண்டும். அதாவது ஜனனம் ஆகும்போது கிரகங்கள் சரியாக அமையாவிட்டால் கல்யாணம் தடைபடுகிறது. அந்தக் கிரகங்கள் நல்ல இடத்தில் சென்று பெண்ணுக்கு சுபமங்களமான வாழ்க்கை அருளிட தேவியை நவகிரக நாயகியாக நினைத்து அவளது பீடத்தில் ஜன்மபத்ரிகா என்னும் ஜாதகத்தை வைத்து விசேஷ ஆகமபீஜ மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்வதாகும்.
இந்த மூன்று தரிசனங்களையும் முறையோடு செய்யும் ஒரு பெண் மூன்று பட்சங்களுக்குள் கல்யாண வரத்தை பெறுகிறாள் என்பது ஆலய தரிசனம் செய்த பெண்களின் கருத்தாகும்.
திருமணம் வரம் தரும் யக்ஞம்:
இத்தலத்தில் திருமணபேறு வேண்டி தரிசிக்க வரும் பெண்-ஆண் இருபாலருக்கும் அதிக வயதை தாண்டி இருப்பின் (26 வயதுக்கு மேல்) திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் காமேஸ்வரி துளசியக்ஞம் சுயம்வரகலா, கந்தர்வராஜ யக்ஞம் செய்கிறார்கள். துளசியால் யக்ஞம் செய்து விட்டால் விரைவில் மணமேடை ஏறுவர் என்பது நடந்துவரும் உண்மை.
நிம்ப விருட்ச சிறப்பு:
ஸ்ரீசக்தி கோவிலின்தலவிருட்சம் வெண்மை, கரும்பச்சை, மத்திம பச்சை, கிரிநிம்பம் என்கிற வகைகளில் மத்திம பச்சையும், கிரிநிம்பமும், திருமண மரமும் தலவிருட்சங்களாக இருக்கின்றன.
குழந்தைபேறு மூலிகை:
இத்தலத்தில் பிரதி பவுர்ணமி அன்று மாலை 6 மணிக்கு மகாமேரு பூஜை, சவுபாக்கிய ஹோமம், ஸ்ரீ காத்யாயனி புத்ரதா ஹோமம் செய்யப்பட்டு குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு (கணவன் மனைவிக்கு) கிரிநிம்ப மூலிகை ஹோமப் பிரசாதத்துடன் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக புத்திரபேறு இல்லாதவர்கள் இந்த கிரிநிம்ப விருட்ச இலையை உட்கொண்டால் கருவாய் திறந்து பலன் பெறலாம் என்பது மருத்துவ ரீதியான உண்மை ஆகும்.
கல்யாண வரம் வேண்டி பல ஊர்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பிரார்த்தனை செய்ய ஆண்களும், கன்னிப் பெண்களும் வந்து வழிபடுகிறார்கள். எல்லா பக்தர்களும் இந்த ஆலயத்தை ‘சக்தி கோவில்’ என்று பயபக்தியோடு அழைக்கிறார்கள். உண்மைதான்! கல்யாண வரம் தருகின்ற சக்தி வாய்ந்த அம்பிகையாக இந்த அன்னை விளங்குகிறாள். நிதி தரும் இரண்டு குபேரன் சிலைகள் சக்தியின் பிரதிமை களாக மேல் தளத்தை தாங்கி நிற்க, அன்னை சக்தி தேவி நாகாபரணத்தோடு காட்சி தருகிறாள். அருகில் கணேசரும், முருகனும் காட்சி தருகிறார்கள். இந்த ஆலயத்தில் மூன்று வெவ்வேறு தேவியர் இரு சன்னிதிகளில் அமர்ந்து அருள் தருகின்றனர்.
முகப்பில் அலங்கரிக்கும் தோரண வாயிலுக்கு நேராகச் சக்தி ஸ்ரீ மங்கள மாரியின் துவார சக்திகளான கங்கை, யமுனை ஆகியோர் நின்றிருக்க தென் கோஷ்ட மேகலை தொடக்கத்தில் தோரண கணபதி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். கடன் பெற்று அடைக்க முடியாதவர்களுக்கு, கடன் கொடுத்து திரும்ப பெற முடியாத வணிகர்களுக்கும் இந்த விசேஷ கணபதியை செவ்வாய், சனி சதுர்த்தி தினங்களில் தீபமேற்றி 6 வாரங்கள் அர்ச்சித்து துதி செய்ய பலன் கிடைத்து விடும்.
நலம் தரும் ஜலந்தரா செடி:
விருட்சங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவது உண்மை என்பதால் இங்கே கணவன்-மனைவி பிரிந்து விட்டால் சேர்ந்து விடும் சக்தி வாய்ந்த ஜலந்தரா (குடும்ப நல விருட்சம்) ஞாயிறு, வெள்ளி, பவுர்ணமி நாட்களில் மட்டும் வழங்க ஆலயத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். அஷ்டலட்சுமி கோபுர சிறப்பு: கருவறை வெளிசுற்றின் கோஷ்டங்களில் அஷ்ட லட்சுமிகள் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். இதற்கு அஷ்டலட்சுமி கோபுரம் என்றே பெயர்.
திரிசக்ர தரிசனம்: தமிழகத்தின் ஒருநாள் சிறப்பு தரிசன முறைகளில் இந்த சன்னதியும் ஒரு வரிசையில் உள்ளது. திருவேற்காடு கருமாரி அம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், தென் குன்றத்தூர் காத்யாயனி அம்மன் என்ற வரிசையில் மூன்றாவது திருத்தலமாக விளங்குகிறது. சக்தியை வழிபடப் பூர்வ புண்ணியம் வேண்டும் என்று தன் சவுந்தர்ய லகரியில் எடுத்துரைத்தார் ஆதி சங்கரர். அந்த சக்தி தேவியர் மூன்று திருநாமங்களுடன் ஒரே நேர்கோட்டில் 12 கி.மீ. தொலைவிற்குள் திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூரில் கோவில் கொண்டு அருள் தருகின்றனர்.
காஞ்சி மாவட்ட எல்லையில் தென் சென்னைப் பகுதியில் தொண்டை மண்டலத்தில் 3 சக்தி தேவியர்கள் 12 ராசியினருக்கும் வாழ்வில் தடைகள் அகன்று ஐஸ்வர்யமான வாழ்வைத் தர அருள்புரிகின்றனர். இந்த அபூர்வ சக்திகளை ஒரே நாளில் தரிசனம் செய்து தலத்திற்கு 3 நெய் தீபங்களை ஏற்றி பிரார்த்தனை செய்வதற்கு திரிசக்கர தரிசனம் என்று பெயர். இந்த சக்தி யாத்திரையை முயற்சி, வெற்றி வியாபாரத்தில் உயர்வடைய ஞாயிறன்றும், காரியத்தடை அகல பவுர்ணமி அன்றும், கடன் தீர்ந்து சொந்த வீடு அமைய செவ்வாயன்றும், தன்யாதி, துர்சக்தி விலக அமாவாசையிலும், தம்பதி கோர் வழக்கு தீர, குழந்தைப்பேறு பெற சனிக்கிழமை அன்றும் செல்வச் சேர்க்கை லட்சுமி கடாட்ச பெற வெள்ளிக் கிமையிலும் தரிசனம் செய்ய வேண்டும்.
கோவில் செல்லும் வழி:
சென்னை மாநகரின் தெற்கு பாகமான குன்றத்தூர் என்னும் புனித தலத்தில் இந்த “சக்தி கோவில்” இருக்கிறது. ‘கோவில் நகர்’ என்றும், செல்வமலி குன்றத்தூர் என்றும் புகழப்படு கின்ற இவ்வூரில்தான் பெரிய புராணம் அருளிய சேக்கிழார் பெருமான் அவதரித்தார். பெருமைமிகு குன்றத்தூரில் முருகன் மலைக்கோவிலில் இருந்து திருநீர்மலைக்கு பிரியும் தார்சாலை ஓரத்திலும் திரு ஊரகப்பெருமாள் சன்னதிக்கு 20 அடி தூரத்திலும் இந்த ‘சக்தி கோவில்’ இருக்கிறது.
இக்கோவிலுக்கு செல்ல சென்னை பிராட்வேயில் இருந்து 88கே, 60ஏ பஸ்கள் நேரடியாகச் செல்கின்றன. வடபழனியிலிருந்து எம்88, தாம்பரத்திலிருந்து 55ஜே, 66, குன்றத்தூருக்கு பாரிமுனையில் இருந்து சைதை வழியாக 88கே, 60இ, 88ஏ ஆகிய பஸ்கள் செல்கின்றன. பஸ் நிறுத்தத்தில் இருந்து (ஓன்றரை கிலோ மீட்டர்) சக்தி கோவிலுக்கு ஆட்டோ வசதிகள் உண்டு.
11-ந்தேதி தீ மிதி விழா
9-ந்தேதி (ஆடி 24) வெள்ளிக்கிழமை:- காலை 6 மணிக்கு ஸ்ரீதோரண கணபதி பூஜை.
காலை 7.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு திரு மஞ்சன நீராட்டுதல், மகா தீபாராதனை அருட் பிரசாதம் வழங்குதல், அம்மனுக்கு காப்பு அணிவித்தல்- வர்ணித்தல்.
காலை 8.30 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல், வர்ணித்தல் காலை-மாலை திருக்குட ஊர் வலம்.
மாலை 6 மணிக்கு சுமங்கலிகள், கன்னிப் பெண்கள் செய்யும் திருவிளக்கு பூஜை.
10-ந்தேதி (ஆடி 25) சனிக்கிழமை:- காலை, மாலை திருக்குட ஊர்வலம்.
மாலை 6 மணிக்கு சுமங்கலிகள், கன்னிப் பெண்கள் நடத்தும் அஷ்டலட்சுமி கோபுரம் சுற்றி தீபவலம். குழந்தைப்பேறு வேண்டி நாகக்கன்னி பூஜை.
11-ந்தேதி (ஆடி 26) ஞாயிற்றுக்கிழமை:- காலை 9 மணிக்கு அம்மனை கரகத்தில் வர்ணித்தல், பாடுதல்.
பகல் 12 மணிக்கு அம்மன் சன்னதியில் கூழ்வார்த்தல் திருக்குட ஊர்வலம், அன்ன தானம் வழங்குதல்.
மாலை 6மணிக்கு சக்தியின் மைந்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துதல்.
இரவு 9 மணிக்கு அம்மன் மலர் அலங் காரத்தில் வாண வேடிக்கையுடன் திருவீதி உலா.
12-ந்தேதி(ஆடி 27) திங்கட்கிழமை:- மாலை 6 மணிக்கு அம்மனுக்கு விடை யாற்றுதல் விழா நடைபெறும்.

சென்னை வில்லிவாக்கத்தில் புகழ் பெற்ற சக்தி தலமான பாலியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சென்னை வில்லிவாக்கத்தில் புகழ் பெற்ற சக்தி தலமான பாலியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பாலியம்மன் தானே விரும்பி எழுந்தருளியதாக பக்தர்கள் சொல்கிறார்கள். இந்த ஆலயத்தின் பின்னணியில் மிக சிறப்பான புராண வரலாறு உள்ளது. அந்த வரலாற்றை முதலில் படித்தால் பாலியம்மன் மீது உங்களுக்கும் தானாகவே பக்தி உணர்வு வந்து விடும். அந்த புராண வரலாறு வருமாறு:-
ஜமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி. இந்த ரேணுகாதேவிதான் பெரியபாளையத்தில் வீற்றிருக்கிறாள். ஒருதடவை ரேணுகாதேவி உலக மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக பூமிக்கு வந்தாள். அப்போது அவள் தற்போது உள்ள வில்லிவாக்கம் பகுதியில் அமைந்திருந்த பாலிநதி கரையோரத்துக்கு வந்தாள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தோன்றி சென்னை வழியாக ஓடும் கூவம் நதியானது ஒரு இடத்தில் இரண்டாக பிரிந்து திருபாச்சூர், திருவேற்காடு, திருமுல்லைவாயல், கொன்னூர் வழியாக வடசென்னை சென்று எண்ணூரில் கடலில் கலக்கிறது. புராண காலத்தில் இந்த நதி பாலி நதி என்று அழைக்கப்பட்டது. இந்த நதிக்கரையின் ஓரத்தில்தான் ரேணுகாதேவி வந்து இருந்தாள்.
பாலிநதியின் அழகில் மனதை பறிகொடுத்த ரேணுகாதேவி அங்கேயே சிறிய பெண் உருவத்தில் சுற்றி சுற்றி வந்தாள். அதை அந்த பகுதியில் வாழ்ந்த வேடர்கள் கண்டனர். அவளிடம், “சிறுமியே நீ யார்? உன் பெற்றோர் எங்கே? நீ ஏன் தனியாக இந்த பகுதியில் சுற்றிக் கொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டனர்.
அதற்கு ரேணுகாதேவி, “நான் இந்த பகுதியில் குடியேற ஆசைப்படுகிறேன். இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த பாலிநதியில் நீராடி நீங்கள் என்ன கேட்டாலும் நான் அருள் புரிவேன்” என்று கூறினாள்.
அதன் பிறகே வில்லிவாக்கம் வேடர்களுக்கு சிறு பெண்ணாக வந்திருப்பது சக்தியின் அம்சம் கொண்டவள் என்பதை உணர்ந்தனர். சிறு பெண்ணாக இருந்ததால் ரேணுகாதேவியை அவர்கள் பாலா என்று பெயரிட்டு அழைத்தனர். அம்மனின் உத்தரவுபடி கேட்டை நட்சத்திரத்தன்று அம்மனின் தலையை களி மண்ணில் செய்து வழிபட தொடங்கினார்கள்.
அந்த அம்மன் பாலா அம்மன் என்று அழைக்கப்பட்டாள். நாளடைவில் பாலா அம்மன் என்பது பாலியம்மன் என்று மாறியது. பாலி நதியில் மனதை பறிகொடுத்து தானாக விரும்பி குடியேறியதாலும் அந்த அம்மனுக்கு பாலியம்மன் என்று பெயர் ஏற்பட்டதாக பக்தர்கள் சொல்கிறார்கள். ஆங்கிலேயர்கள் சென்னையில் குடியேறும் முன்பு இந்த ஆலயம் வில்லிவாக்கம் பகுதி மக்களின் கிராம தேவதையாக இருந்தது. தொண்டை மண்டலத்தில் உள்ள பெரும்பாலான கிராம மக்கள் இந்த அம்மனை தேடி அலை அலையாக வந்து வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்து இருந்தனர். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு நாடோடியாக சிலர் இந்த பகுதிக்கு வந்தனர்.
அவர்கள் தங்களுடன் ஒரு பெரிய அம்மன் சிலையையும் வண்டியில் கொண்டு வந்து இருந்தனர். பாலியம்மன் கோவில் அருகே வந்தபோது அந்த மாட்டு வண்டியின் அச்சு முறிந்தது. இதனால் மாட்டு வண்டி சாய்ந்தது. மாட்டு வண்டியில் இருந்த அம்மன் சிலை கீழே விழுந்தது. அந்த அம்மன் சிலையை மீண்டும் வண்டியில் ஏற்ற முயன்றனர். ஆனால் சிலையை அவர்களால் தூக்க முடியவில்லை.
இதையடுத்து உள்ளூர் பகுதி மக்களும் அந்த சிலையை தூக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த அம்மன் சிலையை ஒரு அடி கூட நகர்த்த இயலவில்லை. அதன் பிறகே அந்த அம்மன் இந்த இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகிறாள் என்பதை மக்கள் உணர்ந்தனர். எனவே அந்த பகுதியில் அம்மனுக்கு ஆலயம் கட்ட முடிவு செய்தனர்.
அதற்கு அம்மன் உத்தரவு கிடைத்தது. இதையடுத்து அம்மன் சிலையை எங்கு பிரதிஷ்டை செய்வது என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே அந்த ஊரில் பாலியம்மன் சிரசை மட்டும் வைத்து மக்கள் வழிபட்டு வந்தனர். அந்த சிரசுக்கு பின்னால் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து விடலாம் என்று கிராம மக்கள் ஏகமனதாக முடிவு செய்தனர். அதன்படி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அன்று முதல் அந்த அம்மனும் பாலியம்மன் என்று அழைக்கப்பட்டு வருகிறாள். சில பக்தர்கள் பாலாம்மாள் என்றும் அழைத்து வழிபடுவது உண்டு.
பாலியம்மன் வீற்றிருக்கும் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வளாகத்துக்குள் மிகப்பெரிய அரச மரமும், வேப்ப மரமும் உள்ளது. இந்த இரு மரங்களும் இணைந்து உள்ளன. சுமார் 300 ஆண்டுகளாக இந்த மரங்கள் இருப்பதாக அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள். இந்த மரம் பகுதியில் விநாயகர் சன்னதி அமைந்து இருக்கிறது.
பாலியம்மன் ஆலயம் மிக சிறிய ஆலயம்தான். ஆனால் பாலியம்மன் மகிமை பக்கம் பக்கமாக எழுதினாலும் நீண்டு கொண்டே செல்லும். அந்த அளவுக்கு பாலியம்மன் தன்னை நாடி வரும் ஒவ்வொரு பக்தனையும் கவர்ந்து அருள் பாலித்து வருகிறாள். இந்த ஆலயம் மகா மண்டபம், அர்த்த மண்டபம் கொண்டது. இந்த மண்டபங்களை கடந்து சென்றால் கருவறையில் பாலியம்மன் வீற்றிருக்கிறாள். அவள் தனது கைகளில் கத்தி, சூலம், கபாலம், உடுக்கை ஆகியவற்றை ஏந்தி இருக்கிறாள். கருவறை கோஷ்டத்தில் மகாலட்சுமி, மகேஸ்வரி, சரஸ்வதி, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
ஆலயத்தின் வலது பக்கத்தில் அய்யப்பனுக்கு தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் நவக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பாலியம்மனுக்கு பொதுவாக பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்வதை வில்லிவாக்கம் பகுதி மக்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர். பாலியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தால் குடும்பத்தின் நிம்மதி நிலவும் என்ற நம்பிக்கை உள்ளது. குடும்பத்தில் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தால் சரியாகி விடும் என்று சொல்கிறார்கள்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகவும் பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. நாக தோஷம் நீங்க பாலாபிஷேகத்தை ஒரு பரிகார வழிபாடாக கருதுகிறார்கள். இது மட்டுமின்றி திருமண தடை நீக்கத்துக்கும் பாலாபிஷேகம் வழிபாடு கை கொடுப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
பாலியம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் அனைத்து மாதங்களிலும் விழாக்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியின்போது பாலியம்மன் சிங்க தேரில் அமர்ந்து பவனி வருவாள். அப்போது பக்தர்கள் பால் குடம் எடுத்து வருவார்கள். விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீப உற்சவம், தை பொங்கல், மகா சிவராத்திரி ஆகிய நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
குறிப்பாக மார்கழி மாதத்தில் அதிகாலை பூஜை உண்டு. சக்தி தலங்களில் பாலியம்மன் ஆலயத்தில்தான் அதிகாலை பூஜை மிக விமர்சையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் மற்ற மாதங்களில் வரும் பண்டிகைகளை விட ஆடி மாதம் முழுவதும் தினமும் இந்த ஆலயம் திருவிழா கோலமாக மாறி விடுகிறது. ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இந்த தலத்தை நாடி வருகிறார்கள்.
பாலியம்மனை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணா மலை மாவட்டங்களில் லட்சக்கணக்கானவர்கள் உள்ளனர். அவர்கள் ஆடி மாதத்தில் தவறாமல் வில்லிவாக்கம் வந்து பாலியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதற்கு தவறுவது இல்லை. ஆடி மாத கடைசி வாரம் இந்த ஆலயத்தில் தீ மிதி விழா நடைபெறும். இதில் வட மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள். இந்த தீ மிதி திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெறும். தீ மிதி விழா முடிந்ததும் மழை பெய்யும் என்பது ஐதீகமாகும். இது பாலியம்மன் நிகழ்த்தும் அதிசயமாக கருதப்படுகிறது.

திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் எல்லம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மதுரையில் மீனாட்சியாக, காஞ்சியில் காமாட்சியாக, காசியில் விசாலாட்சியாக அருள்பாலிப்பதைப் போல அன்னை பராசக்தி சென்னை திருவல்லிக்கேணியிலே எல்லம்மனாகக் கோவில் கொண்டு திருவருள்பாலித்து வருகிறாள்.
இவள் எல்லையில் இருப்பதால் எல்லையம்மன் எனவும், வீதியில் இருப்பதால் தெருவீதி அம்மன் எனவும், சன்னதியில் இருப்பதால் சந்தியம்மன் எனவும், சோலையில் இருப்பதால் சோலை அம்மன் எனவும், பனையடியில் இருப்பதால் கருக்காத்தாள் எனவும், வேம்படியில் இருப்பதால் வேம்படியம்மை எனவும், ஆலடியில் இருப்பதால் ஆலை அமர்ந்தாள் எனவும், எட்டி மரத்தடியில் இருப்பதால் எட்டியம்மன் எனவும் கூறுவர்.
எல்லம்மன் ஆலயம் கொடி கம்பத்தோடு கூடிய சிறிய ஆலயம்தான். என்றபோதும் எல்லம்மன் தோற்றம் பெரியது. அமர்ந்த நிலையில் சமபந்த சொரூபியாய், ஆஜானு பாகுவாய், கண்டதும் நம்மையும் அறியாமல் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கத்தக்க கருணைமுகப் பொலிவோடு காட்சி தருகிறாள் அருள்மிகு எல்லம்மன்.
தன் ஒரு கரத்தில் கொண்ட உடுக்கையால் ஓங்கார ஒலி உண்டாக்கி உயிர்களைப் படைக்கின்றாள் ஓங்காரி. இன்னொரு கரத்தில் கொண்டிருக்கும் திரிசூலத்தால் மாயையை மாய்க்கின்றாள் திரிசூலி, ஒரு கையில் ஞானவாள் கொண்டு அஞ்ஞானத்தை வெட்டி மற்றொரு கரத்தில் உள்ள பொற்கிண்ணத்தால் ஞானப்பால் ஊட்டுகிறாள் ஞானாம்பிகை.
இந்த கோவில் கட்டப்பட்டு சுமார் 550 ஆண்டுகளாவது ஆகி இருக்கக்கூடும். பக்தர்களுக்கு குறை இல்லாமல் செல்வத்தை வாரி வாரி வழங்குகின்றாள் அம்பிகை. திருவல்லிக்கேணி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் எல்லம்மன் ஆலயம் உள்ளது. இங்குள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் வீதியில்தான் சீர்மிகு சிறப்புள்ள எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புத்தர்காலத்திலிருந்தே விளங்கும் பழம்பெரும் ஆலயம் ஆகும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இங்குக் கோவிலை அடைந்ததும் கொடி மரம் கண்ணில் படும். அதன் பின் கிழக்குமுகமாக நின்ற திருக்கோலத்தில் இந்த எழில் வாய்ந்த எல்லையம்மன் குடி கொண்டு அருளாட்சி புரிவதை காணலாம். இல்லாமையை இல்லை ஆக்குபவள் எல்லம்மன். தனம், கல்வி, உடல் நலம், வீடு பேறு யாவும் தருபவள் எல்லம்மன். செல்வமுடன் செல்வாக்கும் சேர உயர் பதவிகளை அளிப்பவள். எல்லை இல்லாத கருணை கொண்ட எல்லம்மன்.
திருவல்லிக்கேணிப் பகுதியிலே ஒரு மக்கள் தொண்டர், பல காலமாகப் பொதுத் தொண்டில் ஈடுபட்டு வந்தார். இருந்தாலும் அவருடைய உழைப்புக்கு ஏற்ப பதவி பெருமைகள் சேரவில்லை என்பதால் அவருக்கு மன வருத்தம் இருந்து வந்தது. ஒரு வெள்ளிக்கிழமை அன்று எல்லம்மனுக்கு அபிஷேக ஆராதனை புரிந்து, பட்டுப் புடவை சாற்றினார். அம்பிகையின் திருவருளால் அவர் விரும்பியவாறே அவருக்கு பதவி வந்து சேர்ந்தது.
இன்னொரு எல்லம்மன் பக்தர், அம்பிகையின் திருவருளை வேண்டினார். வெளிநாட்டில் வேலை கிடைத்திட வேண்டும் என்பது அவருடைய கோரிக்கை. நாள் தோறும் அம்பிகையிடம் தன் கோரிக்கையைக் கூறி வழிபட்டார். ஒரு மண்டலம் அவருடைய கோரிக்கையை அம்பிகையிடம் கூறி முறையிட அவர் விருப்பப்படியே துபாயில் வேலை கிடைத்துவிட்டது. பொன்னும் பொருளும் அம்பிகையின் திருவருளால் குறைவறப் பெற்று மகிழும் அந்த பக்தர் அருள்மிகு எல்லம்மனுக்கு திருப்பணிகள் செய்வதற்காக அங்கிருந்தவாறே காசோலை அனுப்பி வைத்தார் என்றால் எல்லம்மனின் திருவருள் எல்லையற்றது தானே.
வெள்ளிக்கிழமை தோறும் அருள்மிகு எல்லம்மன் ஆலயத்துக்கு தாய்மார்கள் கூட்டம் அலைகடலோ என்று எண்ணும்படியாக வருகிறது. சுகாசினி மண்டலியைச் சேர்ந்த தாய்மார்கள் விளக்கு பூஜையும், குங்கும அர்ச்சனையும் செய்து அருள்மிகு எல்லம்மனை போற்றுகிறார்கள். கோரும் வரம் கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றுவதில் எல்லம்மனுக்கு இணை எல்லம்மனே என்று சொல்லி அந்த தாய்மார்கள் பூரிப்பதை காணலாம்.
‘‘என் மருமகள், சுகப்பிரசவம் காண வேண்டும் என்று விளக்கு பூஜை செய்தேன், என் கோரிக்கைக்கும் கைமேல் பலன் கிடைத்தது. குழந்தை பிறந்து தாயும் சேயும் சுகமாய் இருப்பதற்கு எல்லம்மனே காரணம்’’ என்று பூரித்துப் போகிறார் அதே தெருவில் வசித்து வரும் அம்மாள்.
இந்துக்கள் அல்லாத பிற சமய மக்களையும் அருள்மிகு எல்லம்மன் கவர்ந்திருக்கிறாள் என்றால் அவள் பேரருள் கருணையை என்ன என்பது? இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ, சைனர், புத்தர் என்பது எல்லாம் நாம் போட்டுக் கொண்ட எல்லைக் கோடுதானே. அகிலாண்டேசுவரி, சாதி, மத எல்லைகளை கடந்தவள். அவளுக்கு ஈரேழு புவனமும் தன் வீடே ஆகும்.
எல்லா உயிர்களும் அவளுக்குத் தன் பிள்ளைகள் தானே... ஆகவே தான் பிற மதத்தினர் என்று நாம் சுட்டினாலும் கூட, அவர்களும் கூட, அம்பிகையின் திருவருளை உணர்ந்து வந்து வழிபட்டு வாழ்வு காண்கிறார்கள். இக்கோவிலில் ஆடிமாதவாக்கில் பிரம்மோற்சவம் நடைபெறுவதுண்டு.
13 நாள்கள் வரை நீடிக்கும். இங்கு சில சுமங்கலிப் பெண்கள் வெள்ளிதோறும், திருவிளக்கு பூஜையையும் செவ்வாய் தோறும் சுமங்கலிப் பூஜையையும் செய்து வருகிறார்கள். மேலும் இங்கு நவராத்திரி விழாவும், கந்தசஷ்டி விழாவும் சிறப்பாக நடைபெறுவதுண்டு. சித்திரைத் திங்களில் 1008 இளநீர் கொண்ட அபிஷேகம் செய்யப்படுகிறது.
திருமணம் நடைபெறவும், பிள்ளைப் பேறுக்காகவும், தீராத நோய்கள் தீரவும், கடன்கள் தொலையவும் இப்படிப் பல பிரச்சனைகளுக்காகவும் மக்கள் இந்த அம்மனை வேண்டி வழிபடுவது வழக்கம். இப்படிப் பலவித பிரச்சினைகளுக்கும் வெள்ளி அன்று வந்து வழிபட்டால் உடனே வினை தீர்ந்து விடும். கேட்கும் வரமும் நிச்சயம் கிடைக்கும் என்கின்றனர்.
மேலும் சர்க்கரை நோயுள்ளவர்கள் இக்கோவில் வந்து இந்த எல்லையம்மனை வேண்டிக் கொண்டு சர்க்கரைக் காப்புச் செய்தால் குணமாவது உறுதி என்கிறார்கள். பிறகு அவரவர்கள் தங்களது நிலைக்கேற்றவாறு சந்தனக்காப்பும், மஞ்சள் காப்பும், குங்குமக் காப்பும், கூடச் செய்து வழிபடுவதுண்டு. இவ்வாறு தங்களது வேண்டுதலையைச் செய்து பிரச்சினைகள் யாவும் நீங்கப்பெற்று மகிழ்வுடன் செல்வதைக் காணலாம்.
இவ்வாலயத்திற்கு வந்து ஒருமண்டல கால அளவு 108 பிரதட்சணம் செய்து வந்தால் திருமண வாழ்க்கை நிச்சயம் கைகூடும் என்பர். இங்கு ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை நாளில் பொங்கல் வைப்பர். அம்மனுக்கு காப்புக் கட்டுவர். அலங்காரம் செய்வர். இந்த அம்மனுக்கு மட்டும் சர்க்கரையால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அது ஒரு சிறப்பு அம்ச வழிபாடாகக் கருதுவர். இத்துடன் நெய்யையும் கலந்து செய்வர். முந்திரிப் பழத்தை வைத்து அம்மனை அலங்கரிப்பதும் சரக்கரை நோயாளிகளின் வழக்கம்.
ஒருசமயம் பரசுராமரால் வெட்டப்பட்ட தாய் ரேணுகாதேவியை ஒரு சலவையாளர் தம் வீட்டில் வைத்துப் பூஜித்து வந்ததாக கூறுவர். அதனால் இக்கோவிலில் அத்தகைய சலவைத் தொழிலாளிக்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது. இவ்வாலயத்திய அம்மனும் தம் தலையுடனே தான்காட்சி தருகிறாள். இந்த அம்மனை வேண்டிப் பலர் புதுப்புடவை சார்த்தி மகிழ்வதும் ஒரு சிறப்பாகும். இவ்வளவு சிறப்பும் சீரும் கொண்ட அம்மனை நாமும் வணங்கி வழிபட்டு அவளது அருளாசி பெறுவோம், வாருங்கள்.
எல்லம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவம்
சென்னை திருவல்லிக்கேணி, சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் தெருவில் அமைந்துள்ள எல்லம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. 16-ந்தேதி வரை விழா நடக்கிறது.
7-ந்தேதி (புதன்கிழமை)- காலை 8 மணிக்கு கேடய உற்சவம், இரவு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா.
8-ந்தேதி (வியாழக்கிழமை) - காலை 8 மணிக்கு கேடய உற்சவம், இரவு நாகவாகனத்தில் சாமி வீதி ஊர்வலம்.
9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) - காலை 8 மணிக்கு கேடய உற்சவம், இரவு சிம்ம வாகனத்தில் சாமி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள்.
10-ந்தேதி (சனிக்கிழமை)- காலை 8 மணிக்கு கமலத்தொட்டி, இரவு -யானை வாகனத்தில் அம்பாள் வீதி உலா.
11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)- காலை 8 மணிக்கு கேடய உற்சவம், இரவு அன்ன வாகனத்தில் சாமி வீதி உலா.
12-ந்தேதி (திங்கட்கிழமை)- காலை 8 மணிக்கு கேடய உற்சவம், இரவு குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறாள்.
13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு கேடய உற்சவம், இரவு இந்திர விமானத்தில் சாமி வீதி உலா.
14-ந்தேதி (புதன்கிழமை)- காலை 8 மணிக்கு கேடய உற்சவம், பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு-பூத வாகனம், கொடி இறக்குதல்.
15-ந்தேதி (வியாழக்கிழமை)- இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கு விழா நடைபெறும்.
16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விடையாற்றி விழா, காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் மஞ்சள் காப்பு, இரவு இன்னிசை கச்சேரி நடைபெறும்.

ஆலவட்டம்மன் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை சிறப்பை கொண்டது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சென்னை நகரம் எவ்வளவுதான் வளர்ச்சி பெற்றாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை சிறப்பை இன்னமும் இழக்கவில்லை. அதற்கு எத்தனையோ சின்னங்கள் உதாரணமாக திகழ்கின்றன. அவற்றில் கிராம தேவதைகளுக்கான ஆலயங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
இன்னமும் மண் மனம் மாறாமல் சென்னையில் உள்ள அம்மன் தலங்களில் பாரம்பரிய சிறப்புடன் ஆடி திருவிழா நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தின் இறுதி கட்டத்தில்தான் பெரும்பாலான சக்தி தலங்களில் முக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும். அந்த நாட்களில் அந்தந்த பகுதிகள் சக்தி மயமாகவே மாறி விடும்.
அனகாபுத்தூரும் அப்படிதான் மாறிக் கொண்டு இருக்கிறது. அனகாபுத்தூர் பகுதி மக்களுக்கு கண்கண்ட தெய்வமாக காவல் தெய்வமாக இருப்பது ஆலவட்டம்மன். இந்த ஆலயம் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்துக்கு மிக அருகில் இருக்கிறது. அந்த சிவாலயத்தின் வகையறா ஆலயங்களுக்கு உட்பட்ட ஆலயங்களில் ஒன்றாக ஆலவட்டம்மன் ஆலயம் திகழ்கிறது.
ஆலவட்டம்மன் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை சிறப்பை கொண்டது. மிக சிறிய ஆலயம்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலயத்தை புதுப்பித்து விரிவுபடுத்தி கட்டி இருக்கிறார்கள். ஒரே ஒரு பிரகாரத்துடன் ஆலயம் திகழ்கிறது.
ஆலயத்துக்கு வெளியில் சிறிது இடம் இருக்கிறது. அங்குதான் முக்கிய விழாக்களை நடத்துகிறார்கள். இந்த அம்மன் அனகாபுத்தூரில் எந்த கால கட்டத்தில் உருவானாள்? அவளுக்கு ஆலவட்டம்மன் என்ற பெயர் எப்படி உருவானது? என்பதற்கெல்லாம் ஆதாரப்பூர்வமான சரித்திர சான்றுகள் எதுவும் இல்லை. இதன் மூலம் காலத்தை வென்ற அம்மனாக இந்த அம்மன் கருதப்படுகிறாள்.
சமீப காலமாக இந்த அம்மனின் அருள் புகழ் சென்னை நகரின் மற்ற பகுதிகளுக்கும் பரவி தெரிய தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் இந்த அம்மன் தன்னை நோக்கி பக்தர்களை ஈர்ப்பது தெரிய வந்துள்ளது. இது ஒன்றே போதும் இவள் எந்த அளவுக்கு சக்தி மிகுந்தவள் என்பதை தெரிந்து கொள்வதற்கு.
மிக சிறிய கருவறையில் ஆலவட்டம்மன் கம்பீரமாக வீற்றிருக்கிறாள். அந்த அருள் கோலம் பக்தர்களை மெய்மறக்க செய்கிறது. சென்னையில் உள்ள மிக அழகான அம்மன் விக்கிரகங்களில் ஆலவட்டம்மன் விக்கிரகம் மிகவும் தனித்துவம் கொண்டதாக உள்ளது. நான்கு கரங்களுடன் இடது காலைமடித்து, வலது காலை தொங்க விட்டபடி அம்மன் காட்சியளிக்கிறாள்.
ஆலவட்டம்மன் தலை மீது 5 தலை நாகம் படம் விரித்து குடை பிடித்து இருக்கும் காட்சி கம்பீரமாக உள்ளது. இந்த வடிவத்தில் ஆலவட்டம்மனை தரிசிக்கும்போது நமது பாவம் எல்லாம் பறந்து போய் விடும் என்பதை ஐதீகமாக சொல்கிறார்கள். வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை எல்லாம் வாரி வழங்கும் ஆலவட்டம்மன் மூன்று சக்திகளின் ஒருங்கிணைந்த ஒரே வடிவமாக தனது பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டு இருக்கிறாள்.
அதாவது இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய மூன்று சக்திகளின் ஒன்றுபட்ட சொரூபமாக திகழ்கிறாள். ஆலவட்டம் மனை தலைதாழ்த்தி பணிந்து உள்ளம் உருகி கண்ணீர் சிந்த வேண்டிக் கொண்டால் நினைத்தது எல்லாம் நிறைவேற்றி தருவாள். தனம், தானியம், கல்வி, அறிவு, புகழ், ஆயுள், ஆரோக்கியம், அமைதி, தன்னம்பிக்கை போன்ற செல்வங்களை ஆலவட்டம்மனை நம்பி வழிபட்டால் நிச்சயம் பெறலாம்.
ஆலவட்டம்மன் சிலை முன்பு சிரசும் இடம் பெற்றுள்ளது. இந்த சிரசுக்கு தினமும் மஞ்சள் காப்பு அலங்காரம் செய்கிறார்கள். இந்த மஞ்சள் காப்பு அலங்காரம் மற்ற எந்த ஆலயங்களிலும் இல்லாத அளவுக்கு மிகவும் சிறப்பாக நடைபெறுவதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த ஆலயத்தில் தகடு வேய்ந்த கொடி மரம், கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம், விநாயகர், ஆலவட்டம்மன், சப்த கன்னியர்கள், அன்னமார்கள், நாகாத்தம்மன், காத்தவராயன் மற்றும் பரிவார தேவதைகள் புதிதாக அமைத்து அனைத்து மூர்த்திகளுக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருக் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாலயத்தில் வடக்கு திசையை நோக்கியுள்ள ஆளவந்த விநாயகர் மற்றும் அரசமரம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரார்த்தனை களும், நேர்த்திக் கடன்களும்:- அன்னையின் அருளால் இங்கு வரும் பக்தர்களுக்கு மன நிம்மதி, திருமணவரம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி ஆகியவை கிடைக்கிறது. மேலும் இங்கு குழந்தை செல்வம் இல்லாதவர்கள் அரச மரத்தில் தொட்டில் கட்டுவது இத்திருத்தலத் தின் சிறப்பாகும். இவ்வாலயத்தில் அம்மை வார்த்தவனுக்கு தீர்த்தம் வழங்குவது தனி சிறப்பு.
இவை தவிர பொங்கல் வைத்தல், புடவை சாத்துதல், வேப்பஞ்சேலை, அங்கப் பிரதட்சணம், கண்டதீபம், அலகு குத்துதல், முடி காணிக்கை மற்றும் தீ மிதித்தல் ஆகியவை முக்கிய நேர்த்திக் கடன்களாக பக்தர்களால் அம்மனுக்கு செலுத்தப்படுகிறது. இதுமட்டுமின்றி இவ்வாலயத்தில் மூலவர் அம்மனுக்கு விசேஷ மஞ்சள் காப்பும் உற்சவர் அம்மனுக்கு விசேஷ புஷ்ப அலங்காரமும் சிறப்பு வாய்ந்த பூஜையாகும்.
திருவிழாக்கள்:
• ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமி அன்று மாபெரும் பால் குட விழா இவ்வாலயத்தில் வெகு விமரிசையாக நடை பெறும்.
• ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், விசேஷங்கள் என அமர்க்களப்படும் ஆலயம்.
• இவ்வாலயத்தில் ஆடி மாதம் நான்காவது வாரம் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒன்பது நாள் கொண்ட சிறப்பு மாபெரும் தீமிதி திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் வந்து கலந்து கொள்வது கூடுதல் சிறப்பு.
• இத்திருக்கோவிலில் தீமிதி திருவிழா அன்று திருவீதி உலா வலம் வரும் ஆலவட்டம்மன் ஆலய சக்தி கிரகம் மிகவும் சிறப்புடையதாகும்.
• ஆடி 6-ம் வாரம் அம்மனுக்கு 108 இளநீர் அபிஷேகம், சாந்தி பூஜை நடைபெறும்.
• நவராத்திரி விழா, மாசி மகம், தீர்த்தவாரி உற்சவம், ஜனவரி மாதம் மாபெரும் சமபந்தி போஜனம், கும்பாபிஷேக பூர்த்தி விழா மற்றும் மார்கழி பூஜை ஆகியவை ஆலய விழாக்கள் ஆகும்.
• இத்துடன் மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் உற்சவர் அம்மனுக்கு தாலாட்டு மற்றும் விஷேச பூஜை நடைபெறும்.
இந்த ஆலயத்தில் நடைபெறும் ஆடி மாத திருவிழாக்களில் அம்மனுக்கு நடத்தப்படும் வளையல் அலங்காரம் மிகவும் புகழ் பெற்றது. வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட உள்ளது.
அதுபோல இந்த தலத்தில் நடைபெறும் வேப்பஞ்சேலை வழிபாடும் பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேப்பஞ்சேலை வழிபாடு நடைபெற உள்ளது. அன்றைய தினம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேப்பஞ்சேலை வழிபாடு செய்ய உள்ளனர்.
ஆடு, மாடுகளுக்கு வேப்பஞ்சேலை செலுத்தும் பக்தர்களின் ஆடு, மாடுகள் மதியம் 3.00 மணிக்கு மேல்தான் அனுமதிக்கப்படும். எக்காரணம் கொண்டும் ஆற்றங்கரையில் காப்பு கட்டப்படமாட்டாது. கோவிலில் மட்டுமே காப்பு கட்டப்படும். மொத்தத்தில் ஆடி மாதம் இந்த ஆலயத்தில் ஆடித் திருவிழாக்களால் களை கட்டி இருக்கும்.
ஆலவட்டம்மன் ஆலய ஆடி திருவிழா நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பாக அருள்மிகு ஸ்ரீ ஆலவட்டம்மன் ஆலயம் என்ற பேஸ்புக் பக்கத்திலும் சென்று பார்க்கலாம்.

சிவத்தலமான இங்கு செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் கூட்டம் சக்தி தலங்களில் திரளும் கூட்டத்தையும் மிஞ்சுவதாக உள்ளது. அந்த வகையிலும் இந்த அகத்தீஸ்வரர் ஆலயம் செவ்வாய்க்கிழமை கோவில் என்ற புகழை பெற்றுள்ளது.
சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் கயிலாய மலையில் திருமணம் நடந்தபோது முனிவர்கள், ரிஷிகள் ஒன்று திரண்டதால் வடநாடு தாழ்ந்து, தென்நாடு உயர்ந்தது. இதையடுத்து உலகை சமப்படுத்துவதற்காக அகத்திய முனிவரை தென்திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் உத்தரவிட்டார். இது உங்களுக்கு தெரிந்த கதைதான்.
தென்திசை வந்த அகத்தியர் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்படி அவர் வழிபட்ட ஒரு தலம்தான் வில்லிவாக்கத்தில் உள்ள சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் ஆலயமாகும். அகத்தீஸ்வரர் வழிபட்ட லிங்கம் இங்கு இருக்கிறது. இந்த தலத்தில் அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி அளித்தனர்.
அந்த கால கட்டத்தில் தற்போதைய வில்லிவாக்கம் பகுதியில் வில்வலன், வாதாபி எனும் இரு கொடிய சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் வாதாபியை அகத்தியர் அழித்தார். ஆனால் வில்வ லனுக்கு நல்வழி புகட்டி உண்மையான வாழ்க்கையின் பயனை அடையுமாறு செய்தார். வில்வலனைத் திருத்தித் தீய வழியில் இருந்து நல்வழிக்குக் கொண்டு வந்த மையால் இத்தலம் வில்லிவாக்கம் என வழங்கப்படுகிறது.
இங்குள்ள தீர்த்தம் அங்காரக தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் நைமிசாரண்யத்தில் மகரிஷிகள் கூடினர். அங்காரகன் என்ற கிரகத்தால் உலகுக்கே பல தீமைகள் வருவதை அறிந்து அதை நிவர்த்திக்கப் பெரிய யாகம் ஒன்றைச் செய்தனர். விசுவாமித்திரர் கலந்து கொண்ட இந்த யாகத்தில் தோன்றிய பூதம் அங்காரகன் (அங்கம் +அழகன்) மீது சென்றது. அப்போது அங்காரகன் “தன் பெயரில் தீர்த்தம் ஒன்று அமைத் தால் தனது கொடிய அதிகாரங்களைச் செலுத் தாமல் இருக்கிறேன்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்திரன் முதலானோர் சேர்ந்து இத்தலத்தில் “அங்காரகதீர்த்தம்” அமைத்து நீராடி வழிபட்டனர்.
ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் நீராடி விரதம் இருப்போர் புத்திரதோஷம் நீங்கப் பெறுவர். செவ்வாய் தோஷம் நீங்கித் திருமணம் செய்து கொள்வர். திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடி விரதமிருந்து வழிபட்டால் தங்களுக்குரிய வாழ்க்கைத் துணையைப் பெறுவது உறுதி. அமாவாசையில் நீராடுவோர் சத்துரு பயமின்றி வாழ்வர். பவுர்ணமியில் நீராடுவோர் சகல சம்பத்துக்களும் பெற்றுச் சகல யோகம் மிக்க பெருவாழ்வு வாழ்வர்.
ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பொதுவாக சக்தி தலங்களில்தான் பக்தைகள் கூட்டம் நிரம்பி வழியும். பொங்கல் வைப்பதும், நாகர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதும், புற்றுக்கு முட்டை, பால் ஊற்றுவதும் கோலாகலமாக இருக்கும். ஆனால் சிவத்தலமான இங்கு செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் கூட்டம் சக்தி தலங்களில் திரளும் கூட்டத்தையும் மிஞ்சுவதாக உள்ளது. அந்த வகையிலும் இந்த அகத்தீஸ்வரர் ஆலயம் செவ்வாய்க்கிழமை கோவில் என்ற புகழை பெற்றுள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு இந்த தலத்தில் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு பக்தைகள் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் மரத்தடி புற்று மண்டப வழிபாட்டுக்கும் ஆலய வழிபாட்டுக்கும் நீண்ட வரிசைக்காக தடுப்புக் கட்டைகள் கட்டி உள்ளனர். இது தவிர இந்த ஆண்டு சிறப்பு கட்டண தரிசன வரிசையும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
என்றாலும் செவ்வாய்க்கிழமைகளில் இந்த தலத்தில் திரளும் பக்தைகள் எண்ணிக்கை ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது. தன்னை வந்து அடைந்தாருக்கு அருள் கூட்டும் திருத்தலம் இது. தெரிந்து வந்தால்தான் பலன் என்றில்லை. அறிந்தோ அறியாமலோ இந்தத் திருத்தலத்தின் எல்லையில் வந்தாலும் பெரும் பலன் தரும் திருத்தலம்.
பஞ்சமாபாதகன் என்றாலும் இத்தலத்தை அடைந்த மாத்திரத்தில் பரம பவித்ரனாகி விடுவான். மார்க் கண்டேயர் அகத்தியருக்கு உணர்த்திய 108 சக்தி திருத்தலத்தினுள் இந்த தலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ சொர்ணாம் பிகை அமர்ந்த திருத்தலம் இத்தலமாகும். வில்வ மரங்கள் செறிந்த இத்திருத்தலத்தில் தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், முக்தர்களும்,யோகிகளும், ஞானிகளும் செவ்வாய்க்கிழமை தோறும் நடு இரவில் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.
அகத்தியரால் அமைக்கப் பெற்ற இந்த லிங்க வடிவத்தைப் பார்த்த மாத்திரத்தில் அறிவும், ஆற்றலும் அருந்தவச் சீலமும் கைவரப் பெறுவர். நாகலோகக் கன்னியர்களும், கந்தர்வர்களும் வழிபட்ட பெருமைக்குரியது இத்திருமூர்த்தமாகும். ஆதியில் திருக்கயிலாயத்தில் உமா மகேசுவரன் வீற்றிருக்கும் காலத்தில் ஒருநாள் திடீரென்று செம்மணிச்சுடர் ஒன்று தோன்றித் தெற்கு திசையை நோக்கிச் சென்றது. அதன் அர்த்தம் என்னவென்று கேட்ட தேவர்களுக்கு நந்தி பெருமான். வில்லி வாக்கத்தில் உள்ள செவ்வாய் ஷேத்திரத்தில் பரமேஸ்வரன் அமர்ந்து திருவிளையாடல் செய்யப் போகும் நிமித்தம்தான் இது என்று விளக்கினார்.
இத்தகைய சிறப்புடைய வில்லிவாக்கம் அகத்தீஸ்வர சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத செவ்வாய்க்கிழமை என்பது சிறப்பு மிக்க வருடாந்திர திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா விகாரி வருடம் ஆடி மாதம் 7- நாள் 23-ந்தேதி தொடங்கியது. ஆவணி மாதம் 1-ம் நாள் 20-08-2019 வரை 5 வாரங்களும் சுவாமி அம்பாளுக்கு விசேஷ சிறப்பு அலங்காரமும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.
இதுவரை 2 ஆடி செவ்வாய்க்கிழமை வழிபாடு முடிந்துள்ளது. நாளை மூன்றாம் வாரம் 6-8-2019 ஆடி 21-ம் நாள் செவ்வாய்க்கிழமை, நான்காம் வாரம் 13.08.2019 ஆடி 28-ம் நாள் செவ்வாய்க்கிழமை, ஐந்தாம் வாரம் 20-08-2019 ஆவணி 3-ம் நாள் செவ்வாய்க்கிழமை வழிபாடுகள் நடைபெறும்.
ஐஸ்வர்ய வீரபத்திரர்
அகஸ்தீஸ்வரர் கோயி லின் தென்புற வாசல் எதிரேயுள்ள தனிக்கோயிலில் வீரபத்திரர் இருக்கிறார். கோரைப் பல்லுடன் இடது கையில் தண்டம் ஏந்திய இவரது அருகில் வணங்கிய கோலத்தில் தட்சன் இருக்கிறான். முன் மண்டபத்தில் பத்திரகாளி சன்னதி உள்ளது. பவுர்ணமி தோறும் வீரபத்திரருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவர் சிவ அம்சம் என் பதால், சிவராத்திரியன்று இரவில் ஒரு காலமும், பிரதோஷ வேளையிலும் சிறப்பு பூஜை நடக்கிறது. இத்தலத்து வீரபத்திரர், குபேர திசையான வடக்கு நோக்கியிருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். எனவே இவரை, “ஐஸ்வர்ய வீரபத்திரர்’ என்று அழைக்கிறார்கள்.
செவ்வாய்க்கிழமை அதிக கூட்டம் ஏன்?
நவக்கிரகங்களில் அங்காரகன் (செவ்வாய்) தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது. எனவே இது செவ்வாய் தோஷ பரிகார தலமாக திகழ்கிறது. அங்காரகன் உண்டாக்கிய தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. தீர்த்தக் கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். அருகில் வடக்கு நோக்கி வலம்புரி விநாயகர் இருக்கிறார். பக்தர்கள் இக்கோயிலை, “செவ்வாய்க்கிழமை கோயில்’ என்றே அழைக்கிறார்கள். அகத்தியருக்கு சிவன், ஒரு ஆடி மாத செவ்வாய்க் கிழமையன்று காட்சி தந்ததாக ஐதீகம். எனவே இங்கு ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம் பாளுக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.

ஸ்ரீஅகத்திய மாமுனிவருக்கு அருள் பாலித்து வில்வன், வாதாபி என்ற இரு அரக்கர்களை வதம் செய்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற தலமாகும். இத்திருக் கோவிலின் தல விருட்சம் வில்வ மரம் ஆகும். இத்திருக் கோவிலுக்கு அங்காரக ஷேத்திரம், செவ்வாய்கிழமை கோவில் என்ற சிறப்புப்பெயர்களும் உண்டு.
பெருமை பெற்ற இந்த ஆலயத்தில் உள்ள அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வர பெருமானை ஆடி மாத செவ்வாய்கிழமை அன்று தரிசித்தால் பலன் கிடைக்கும். குறிப்பாக அனைத்துவிதமான தோஷங்களும் விலகி சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வர சுவாமியின் திருவருளைப் பெற்று நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் பெறலாம்.
இதுவரை 2 ஆடி செவ்வாய்க்கிழமை வழிபாடு முடிந்துள்ளது. நாளை மூன்றாம் வாரம் 6-8-2019 ஆடி 21-ம் நாள் செவ்வாய்க்கிழமை, நான்காம் வாரம் 13.08.2019 ஆடி 28-ம் நாள் செவ்வாய்க்கிழமை, ஐந்தாம் வாரம் 20-08-2019 ஆவணி 3-ம் நாள் செவ்வாய்க்கிழமை வழிபாடுகள் நடைபெறும்.
ஐஸ்வர்ய வீரபத்திரர்
அகஸ்தீஸ்வரர் கோயி லின் தென்புற வாசல் எதிரேயுள்ள தனிக்கோயிலில் வீரபத்திரர் இருக்கிறார். கோரைப் பல்லுடன் இடது கையில் தண்டம் ஏந்திய இவரது அருகில் வணங்கிய கோலத்தில் தட்சன் இருக்கிறான். முன் மண்டபத்தில் பத்திரகாளி சன்னதி உள்ளது. பவுர்ணமி தோறும் வீரபத்திரருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவர் சிவ அம்சம் என் பதால், சிவராத்திரியன்று இரவில் ஒரு காலமும், பிரதோஷ வேளையிலும் சிறப்பு பூஜை நடக்கிறது. இத்தலத்து வீரபத்திரர், குபேர திசையான வடக்கு நோக்கியிருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். எனவே இவரை, “ஐஸ்வர்ய வீரபத்திரர்’ என்று அழைக்கிறார்கள்.
செவ்வாய்க்கிழமை அதிக கூட்டம் ஏன்?
நவக்கிரகங்களில் அங்காரகன் (செவ்வாய்) தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது. எனவே இது செவ்வாய் தோஷ பரிகார தலமாக திகழ்கிறது. அங்காரகன் உண்டாக்கிய தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. தீர்த்தக் கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். அருகில் வடக்கு நோக்கி வலம்புரி விநாயகர் இருக்கிறார். பக்தர்கள் இக்கோயிலை, “செவ்வாய்க்கிழமை கோயில்’ என்றே அழைக்கிறார்கள். அகத்தியருக்கு சிவன், ஒரு ஆடி மாத செவ்வாய்க் கிழமையன்று காட்சி தந்ததாக ஐதீகம். எனவே இங்கு ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம் பாளுக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.
மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. பார்வதிதேவி மயில் உருவம் எடுத்து மயிலாப்பூர் தலத்தில் தவம் இருந்தபோது அவளை அசுரர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பத்ரகாளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு திசை நோக்கி எளிய நுழைவு வாசலுடன் ஆலயம் அமைந்துள்ளது. அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் அன்னையே, கோல விழி அம்மனாக விளங்கு கிறாள். இடது காலடியில் அசுர னின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் அன்னை காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜூவாலை களில் பதி னைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திரு முடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலது புறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை காட்சி தருகின்றாள். இவளது இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும். எனவே இந்த ஆல யத்தை பத்ரகாளி அம்மன் ஆலயம் என்றும் சொல்வார்கள்.
‘பத்ர’ என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள். அன்னையின் சிறப்பே அவளின் கோல விழிகள்தான். வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தூண்டும் கருணை அருளும் நாயகி, கோலவிழி அம்மன் என் றால் அது மிகையல்ல.
மயிலை குருஜி இந்த ஆலயத்தை புனரமைப்பதில் பெரும்பங்கு வகித்தவர். அவர் விநாயகரை வேறு இடத்தில் மாற்றி யமைக்க செய்த முயற்சிகள் மட்டும் பயனளிக்க வில்லையாம். இறைவிக்கு முன் கல்லால் ஆன சிறிய தேவி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அபிஷேகங்கள் எல்லாம் இந்த தேவிக்கே நடைபெறுகின்றன. பெரிய திருவுரு கொண்ட தேவிக்கு பச்சரிசி மாவில் விதவிதமான நிறங்களைக் கலந்து மாவுக்காப்பு சாற்றினால் தீராக்கடன்கள் தீர்ந்து விடுவதாக ஐதீகம். இதைத்தவிர மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு, முத்தங்கி என நாளரு மேனியும் பொழு தொரு அலங்காரமுமாக அன்னை அருளும் ஆலயம் இது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான ஆலயம் என்பதை கோலவிழி அம்மனின் உற்சவ திருவுருவை ஆய்வு செய்தபோது கண்டறிந்தி ருக்கிறார்கள். கபாலீஸ்வரர் ஆலயத்தில் எந்த ஒரு விழா வானாலும் இங்கு வந்து அன்னையிடம் உத்தரவு பெற்றே நடத்துகின்றனர். ஐப்பசி மாதம் 14&ம் நாள் முதல் தை மாதம் முடிய மூன்று மாத காலங்கள் கதிர வன் தன் கிரணங்களால் அம்பிகையை வழிபடும் விதமாக கருவறை அமைப்பு உள்ளது. நாக தோசத்தால் பாதிக்கப் பட்டவர்கள், ராகு தசை நடப்பவர்களுக்கு இது பரிகாரத்தலமாக உள்ளது.
சித்திராப் பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் 10&ம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, மாசியில் மூன்றாம் ஞாயிறன்று பால் குடப்பெருவிழா ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் குறிப்பிடத்தக்க விழாக்கள் ஆகும். இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
சென்னை கடற்கரைச் சாலையில் கலங்கரை விளக்கம் மற்றும் ஆல் இண்டியா ரேடியோவில் இருந்து தென்மேற்கே அரை கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அதேபோல, கபாலீசுவரர் திருக்கோவிலுக்கு வட கிழக்கே சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் கோலவிழி அம்மன் ஆலயத்தை அடையலாம்.
கோல விழியம்மன் மயிலையில் எல்லை காளியாக இருப்பவள். எனவே மயிலாப்பூரில் உள்ள எந்த ஆலயத்தில் விழா நடந்தாலும் கோல விழியம் மனுக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கப்படும். மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் 63 நாயன்மார் விழா நடக்கும்போது அனைவருக்கும் முன்னதாக முதலில் செல்வது கிராம தேவதையான கோல விழியம்மன்தான்.
பத்ரகாளியாக இந்த கோலவிழியம்மன் முதலில் மிக, மிக உக்கிரமாக இருந்தாள். குறிப்பாக அவளது கண்பார்வையில் அதிக உக்கிரம் இருந்தது. ஆதிசங்கரர்தான் இந்த அம்மனின் உக் கிரத்தை தணித்தார். சக்கரம் ஸ்தாம்பிதம் செய்து அவர் கோல விழியம்மனை சாந்த சொரூபினியாக மாற்றினார். அகோரிகள் இந்த தலத்தில் 600 ஆண்டுகளுக்கு முன்பு தவம் இருந்து பூஜைகள் செய்து கோல விழியம்மனை வழிபட்டுள்ளனர். இந்த அம்மனை வழிபட்டால் எவ்வளவு கொடூரமான ராகு தோஷமும் உடனே விலகி விடும்.
இந்த தலத்தில் ஆஞ்ச நேயர், சப்தகன்னிகள்,வராகி ஆகியோருக்கு தனித் தனி சன்னதி உள்ளது. வராகியின் வாகனமான ஆமையும் இங்கு பிரதி ஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆமைக்கு இளநீர் அபி ஷேகம் செய்து வழி பட்டால் நோய் தீரும் என்பது ஐதீகம். 27 நட்சத்திரக்காரர்களும் இங்கு பிரதட்சணம் செய்து வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும்.
சிலர் 27 வாரம் பிரதட்சணம் செய்வதுண்டு. 9 வாரம் பிரதட்சணம் செய்தால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். இதனால் இத்தலத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் வந்து வழிபட்டு செல்கிறார்கள். சந்திராஷ்டமம் நேரத்தில் ஏதாவது சொன்னாலோ, பேசினாலோ இடையூறு, பிரச்சினை ஏற்படும் என்று சொல்வார்கள். எனவே சந்திராஷ்டமம் உள்ள நாட்களில் உரியவர்கள் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டு சென்றால் சந்திராஷ்டமம் தாக்குதலால் எந்த பிரச்சினையும் வராது என்கிறார்கள்.
எல்லோராலும் இந்த தலத்துக்குள் எளிதில் காலடி எடுத்து வைத்து விட முடியாது. கடைசி ஜென்மத்தில் இருப்பவர்கள்தான் இந்த தலத்தில் வந்து பணிகளை செய்ய முடியும் என்று தனசேகர் பூசாரி தெரிவித்தார்.
ஆடி மாதத்தை முன்னிட்டு கோல விழி அம்மன் ஆலயத்தில் தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆடியில் தினமும் அம்மனுக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், ஆப்பிள், சாத்துக்குடி, இளநீர், பன்னீர், அபிஷேகப்பொடி, வெற்றிவேர், சந்தனம், மஞ்சள் ஆகிய 11 பொருட்களால் அபிஷேகம் நடத்தப்படுகிறது. வசதி, வாய்ப் புள்ள பக்தர்கள் இந்த அபிஷேக பொருட்களை வாங்கிக் கொடுத்து கோல விழி அம்மன் அருளைப் பெறலாம்.
ஆடி மாதத்தில் இந்த தலத்தில் நடக்கும் தீச்சட்டி ஊர்வலம் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஆண்டு இன்று (திங்கட்கிழமை) மாலை தீச்சட்டி ஊர்வலம் நடைபெற உள்ளது.
அன்று மாலை முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தில் இருந்து தீச்சட்டி ஊர்வலம் தொடங்கும். 125 பேர் தீச்சட்டி ஏந்தி ஊர்வ லமாக கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு புறப்பட்டு வருவார்கள்.
தனசேகர் பூசாரி கரகம் எடுத்து முன்பு செல்ல அவரைத் தொடர்ந்து 125 பேரும் தீச்சட்டி ஏந்தி செல்வார்கள். இது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். தீச்சட்டி ஊர்வலம் ஆலயத்தை அடைந்ததும் கோலவிழி அம்மனுக்கு சிறப்பு பூஜை கள் நடைபெறும்.
ஆடி மாத விளக்கு பூஜை இத்தலத்தில் 16-ந்தேதி (வெள்ளிக் கிழமை) நடைபெற உள்ளது. 108 பெண்கள் விளக்கு பூஜையில் பங்கேற்பார்கள். 18-ந்தேதி (ஞயிற்றுக் கிழமை) மதியம் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நடைபெறும். அன்றிரவு கிராம தேவதைகளுக்குரிய அசைவ படையலுடன் கோலவிழி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். பிறகு அந்த அசைவ உணவு பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும்.
கோலவிழி அம்மன் ஆலயத்தில் நடை பெறும் ஆடி மாத விழாக்கள் தொடர்பாக தனசேகர் பூசாரியை 98842 10695 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

சென்னையில் உள்ள மிக, மிக பழமையான அம்மன் கோவில்களில் அருள்மிகு பாதாள பொன்னியம்மன் ஆலயம் மிகுந்த மகத்துவம் கொண்டது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சென்னையில் உள்ள மிக, மிக பழமையான அம்மன் கோவில்களில் அருள்மிகு பாதாள பொன்னியம்மன் ஆலயம் மிகுந்த மகத்துவம் கொண்டது. புரசைவாக்கத்தில் இந்த சக்தி தலம் இருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடத்தில் பொன்னியம்மன் அவதரித்து இருந்தாள்.
முனிவர்களும், ரிஷிகளும் அவளை வழிபட்டு வந்தனர். கால வெள்ளத்தில் அவள் இருந்த இடம் மறைந்து போனது. என்றாலும் பூமிக்கு அடியில் புதையுண்ட நிலையிலும் தன்னை வழிபட்டவர்களின் குடும்பத்துக்கு பொன்னியம்மன் அருள் புரிந்து வந்தாள். ஒரு காலக் கட்டத்துக்குப் பிறகு பொன்னியம்மன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். அதற்கான காலமும் வந்தது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு புரசைவாக்கம் பகுதியின் பெருமளவு இடங்கள் சென்னப்ப நாயக்கர் வசம் இருந்தது. இந்த இடத்தில் ஏராளமான நீர் நிலைகளும், தென்னை தோப்புகளும், மாந்தோப்புகளும் நிறைந்து இருந்தன. அதாவது மிகவும் செல்வ செழிப்பான பகுதியாக புரசைவாக்கம் இருந்தது. சென்னையில் மெல்ல மெல்ல தங்கள் ஆட்சி அதிகாரத்தை பரவ செய்து வந்த ஆங்கிலேயர்கள் சென்னப்ப நாயக்கரிடம் புரசைவாக்கம் பகுதியை குத்தகைக்கு வாங்கி பயன்படுத்தினார்கள். நிறைய காய்கறி தோட்டங்களையும், பழத் தோட்டங்களையும் ஏற்படுத்தினார்கள். இந்த தோட்டங்களுக்கு நிறைய தண்ணீர் தேவைப்பட்டது.
அப்போது புரசைவாக்கத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிறைய தண்ணீர் வளம் இருப்பது தெரிய வந்தது. எனவே அங்கு கிணறு தோண்ட முடிவு செய்தனர். உடனே அங்கு கிணறு தோண்டப்பட்டது. அதாவது இப்போது பாதாள பொன்னியம்மனின் கருவறை பகுதிதான் அது. வழக்கமாக அந்த பகுதியில் 6 அடி தோண்டினாலே தண்ணீர் கொப்பளித்தப்படி வந்துவிடும். ஆனால் 30 அடிதோண்டியும் தண்ணீர் வரவில்லை.
என்றாலும் பள்ளம் தோண்டியவர்கள் மனம் தளராமல் மேலும் பள்ளம் தோண்டினார்கள். திடீரென அவர்களது மண்வெட்டியில் பெரிய பாறை ஒன்று தட்டப்படும் சத்தம் கேட்டது. அந்த கல்லை எடுத்து புரட்டினார்கள். மறுவினாடி அந்த பள்ளத்தில் இருந்து தண்ணீர் வெள்ளமாக பீறிட்டு வந்தது. அந்த கல்லை பள்ளத்தில் இருந்து மேலே கொண்டு வந்து பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் காத்திருந்தது. அது அம்மன் சிலை. அந்த அம்மன் சிலைக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. நைவேத்தியமும் செய்து வழிபடப்பட்டது.
அப்போது ஒரு பெண்மணிமீது அருள்வாக்கு வந்தது: ‘‘என் பிரிய பக்தர்களே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு கோயில் கொண்டிருந்தேன். ஞானிகளும், முனிவர்களும் என்னை வழிபட்டனர். பின்னர் மன்னர்கள் எனக்கு ஆலயம் அமைத்தனர். காலச்சுழற்சியில், இந்த பகுதி அழிந்துவிட, நான் பாதாளத்தில் வாழ்ந்தேன். வெளிப்படவேண்டிய நேரம் வந்ததால் நான் வெளிப்பட்டேன். எனக்கு ஆலயம் கட்டி என்னை வழிபடுங்கள். என் பிள்ளைகளான அனைத்து பக்தர்களையும் காப்பேன் என்றாள்.’’ அதன்படி, முதலில் கீற்றுக் கொட்டகை அமைத்து விக்கிரகத்தையும் ஸ்தாபித்தனர்.
பாதாளத்தில் இருந்து கிடைத்ததால் “பாதாள பொன்னியம்மன்” என்று பெயர் வைக்க முடிவு செய்தனர். அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர். அன்று முதல் இந்த பொன்னியம்மன், பாதாள பொன்னியம்மன் என்று அழைக்கப்பட்டு வருகிறாள். நூறு ஆண்டுகட்கு முன்பு, இந்த அம்மனின் உற்சவர் ஊர்வலம் போனால் ஆலயத்திற்கு திரும்பத் ஆறு மாதமாகுமாம். சென்னையைச் சுற்றியுள்ள சுமார் எழுபது கிராமங்களுக்கு இந்த அம்மன் வீதி உலா சென்றதாலேயே இத்தனை காலம் ஆகியதம். கோயிலைச் சுற்றி ஏழு திருக்குளங்கள் இருந்தனவாம். வீதி உலா செல்லும் அம்மன் தங்குவதற்கு வழிநெடுக அறுபத்தி நான்கு மண்டகப்படி இருந்தனவாம்.
அம்மனுக்கு அலங்காரமும் நைவேத்தியமும் அந்தந்த கிராம மக்களே செய்வார்கள். நேர்த்திக் கடன்களையும் செலுத்துவார்கள். சென்னையைச் சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு இந்த பாதாள பொன்னியம்மனே குல தெய்வமாக விளங்கியிருக்கிறாள். இந்த ஆலயத்தில் அண்ணன்மார்களுக்கு தனி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது. முதலில் அவர்களுக்கு பூஜை செய்த பிறகே பாதாள பொன்னி அம்மனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, விநாயகர், முருகன் சிற்றாலயங்கள் கட்டப்பட்டன. அரசமர மேடை நாகர் சிலைகளும், நவகிரக சந்நதியும் கட்டப்பட்டன. கரு வறை கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சியளிக் கிறார்கள். மிகப்பெரிய நூற்றுக்கால் மகா மண்டபமும் உள்ளது. அம்மன் சிலை கிடைத்த விவரத்தை தூணில் படைப்புச் சிற்பமாக செதுக்கியுள்ளனர். பாதாள பொன்னியம்மன் கற்சிலை வெகு அபூர்வமானது. அம்மன் வலது கையில் சூலமும், இடது கையில் அன்னப் பாத்திரமும் ஏந்தியுள்ளாள். சாந்த சொரூபிணியாகத் திகழ்கிறாள்.
அம்மன் சிலை கிடைத்த இடம் சுற்றிலும் இப்போதும் பள்ளமாகத்தான் உள்ளது. ஆனால் அந்த காலத்திலேயே பொன்னியம்மனை சிறப்பான உயரத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இதனால் வெளியில் இருந்து பார்த்தாலும் அம்மன் சிலை அழகாக தெரியும். அம்பாளுக்கு தினமும் காலை ஒரு நேரம் மட்டுமே அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. ஆனால் அந்த ஒரு கால பூஜையும் காலை 6.15 மணிக்கு தொடங்கி 6.45 மணி வரை சிறப்பாக நடத்தப்படுகிறது. நல்லெண்ணை, எலுமிச்சம் பழச்சாறு, இளநீர், சந்தனம், மஞ்சள் என்று பலவகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
பிறகு அலங்காரம் செய்து ஆராதனை நடத்தப்படும். முன்பெல்லாம் அம்மனுக்கு பாவாடை அலங்காரமே செய்யப்பட்டது. ஆனால் இப்போது புடவையில் மிக அழகாக அலங்காரம் செய்கிறார்கள். அதுபோல் தினமும் மாலை சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. சிறப்பு நாட்களில் பாதாள பொன்னியம்மனுக்கு புஷ்ப பாவாடை அலங்காரம் செய்கிறார்கள். தற்போது ஆடிமாதம் தினமும் பாதாள பொன்னியம் மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் ஆடி மாதம் பிரம்மோற்சவம் நடத் தப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி மாத பிரம்மோற்சவம் கடந்த 25-ந் தேதி தொடங்கியது. வருகிற 3-ந் தேதி வரை இந்த பிரம்மோற்சவம் நடத்தப்பட உள்ளது. இந்த 10 நாட்களும் பாதாள பொன்னியம் மனுக்கு 10 விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. 10-வது நாள் ஆடிப்பூரம் விழா நடத்தப்படுகிறது.
அன்று காலை அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு புஷ்ப பாவாடை அலங்காரம் செய்யப்படும். 3-ந்தேதி மாலை அம்மன் தாய்வீடு சென்று வருவார். அப்போது அம்மன் வீதி உலாவும் நடைபெறும். பர்னபி ரோடு, ஆம்ஸ் ரோடு, பண்டார சந்து, வெள்ளாளர் தெரு, சரவண பெருமாள் தெரு வழியாக வந்து இறுதியில் அழகப்பா தெரு வழியாக அம்மன் ஆலயம் திரும்பி வருவாள்.
பாதாள பொன்னி அம்மனை சென்னையில் பல லட்சம் மக்கள் தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். இந்த ஆலயம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாக திகழ்கிறது. எல்லாவித பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வும், பரிகாரமும் கிடைக்கும்.
பக்தர்கள் மனம் உருகி வழிபட்டால் மிக எளிதாக பாதாள பொன்னியம்மன் அருளை பெற முடியும். 51 தடவை அல்லது 101 தடவை பாதாள பொன்னியம்மனை சுற்றி வந்து வழிபட்டு, கோரிக்கைகளை கூறினாலே போதும், அதை அவள் நிறைவேற்றி வைத்து விடுகிறாள். இது ஆண்டாண்டு காலமாக பக்தர்கள் அனுபவித்து வரும் நிதர்சனமான உண்மையாகும்.
இதுபற்றி ஆலய அர்ச்சகர் கே.ஜீவானந்தம் கூறுகையில், “பாதாள பொன்னியம்மனை வழிபட வருபவர்கள் நல்ல மனதுடன் வர வேண்டும். உங்கள் மனதை அவளிடம் ஒப்படைத்து விடுங்கள். நம்பிக்கையோடு அவளை வலம் வாருங்கள், நல்லதே நடக்கும்” என் றார். அவரை 7904631212 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பாதாள பொன்னி அம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவம்
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பாதாள பொன்னியம்மன் கோவிலில் ஆடிபிரமோற்சவ விழா நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-
ஆடி 14- (30.7.2019 செவ்வாய்க்கிழமை) யானை வாகனத்தில் வீதி உலா
ஆடி 15- (31.7.2019 புதன்கிழமை) தொட்டி
ஆடி 16- (1.8.2019 வியாழக்கிழமை) குதிரை வாகனத்தில் வீதி உலா
ஆடி 17- (2.8.2019 வெள்ளிக்கிழமை) விமானம்
ஆடி 18- (3.8.2019 சனிக்கிழமை) சிம்ம வாகனத்தில் வீதி உலா
3.8.2019 அன்று காலை 9 மணிக்கு புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோவிலில் இருந்து பால் குடம் ஊர்வலம் புறப்பட்டு காலை 10 மணிக்கு பொன்னியம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடைபெறும். 4.8.2019 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் அம்மனுக்கு கூழ்வார்க்கப்படும்.