என் மலர்
கோவில்கள்
திருச்சி பெரிய கடை வீதியில், 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி- பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சேவை சாதிக்கும் ஆலயம் உள்ளது.
திருச்சி பெரிய கடை வீதியில், ஸ்ரீதேவி- பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சேவை சாதிக்கும் ஆலயம் உள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கிறது. ஸ்ரீதேவி- பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் ஆலயம் என்ற பெயரிலும் இந்தக் கோவில் அழைக்கப்படுகிறது. குடியிருப்புகள் சூழ நடுவில் அமைந்துள்ள இந்த ஆலயம், உள் திருச்சுற்று, வெளி திருச்சுற்றுடன் அழகுற அமைந்துள்ளது.
இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. அழகிய முகப்பை தாண்டியதும் மகா மண்டபம் காணப்படுகிறது. நுழைவு வாசலின் வலது புறம் கருப்பண்ணசாமி கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அடுத்து முக மண்டப நுழைவு வாசலின் இருபுறமும் பிரமாண்ட உருவில் துவாரக பாலகர்களின் திருமேனிகள் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டபத்தை தாண்டினால் கருவறையில் சீனிவாசப் பெருமாள் திருமங்கை - நிலமங்கை தேவியருடன் நின்ற கோலத்தில் மேற்கு திசை நோக்கி சேவை சாதிக்கிறார். பெருமாளின் முன்பாக உற்சவ திருமேனிகள் உள்ளன.
முக மண்டபத்தின் இடதுபுறம் பார்வதி தாயார் தனி சன்னிதியில் சேவை சாதிக்கிறார். முக மண்டபத்தின் தெற்குப் பகுதியில் கருவறையில் வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். இவர்களின் முன்பாகவும் உற்சவத் திருமேனிகள் இருக்கின்றன.
இந்த ஆலயத்தில் பெருமாள், ‘சீனிவாசப் பெருமாள்’, ‘வரதராஜப் பெருமாள்’ என்ற இரண்டு அமைப்புகளில் அருள்புரிவது தனிச் சிறப்பாக கருதப்படுகிறது. முக மண்டபத்தின் தென்புறம் சுவர் கோஷ்டத்தில் ஆஞ்சநேயர், ராமானுஜர், நம்மாழ்வார், வீர ஆஞ்சநேயர் திருமேனிகள் உள்ளன. வடபுற சுவர் கோஷ்டத்தில் கிருஷ்ணர், கருடாழ்வார், வைகானஸர், விஷ்வக்சேனர் ஆகியோரது திருமேனிகளைக் கண்டு தரிசிக்கலாம்.
வைகானஸ ஆகம முறைப்படி பூஜையும், தென்னாசார்ய சம்பிரதாய அனுஷ்டானமும் இக்கோவிலில் கடைப்பிடிக்கப்படுகிறது. வைகானஸ ஆகமத்தை ஏற்படுத்தியவர் வைகானஸ குரு ஆவார். எனவே அவரது திருமேனியும் வடபுற சுவர் கோஷ்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சீனிவாசப் பெருமாள், வரதராஜப் பெருமாள் என்ற 2 திருநாமங்களில் தங்கள் துணைவியருடன் அருள்புரியும் பெருமாளை முக மண்டபத்தில் நின்றபடி ஒருசேர தரிசனம் செய்யலாம். தன்னை நாடும் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் வேண்டும் வரத்தினை தருவதில் இத்தல பெருமாள் முதன்மையானவர். குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இத்தல இறைவனை வேண்டிக்கொள்கிறார்கள். அதன்படி அவர்களின் பிரார்த்தனை ஓராண்டுக்கள் நிறைவேறுவது அதிசயமான ஒன்றுதான். அப்படி தங்கள் கோரிக்கை நிறைவேறியவர்கள், குழந்தையோடு வந்து பெருமாள் சன்னிதியில் மொட்டை போட்டு, காதுகுத்தி மகிழ்கிறார்கள்.
தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும் இந்த ஆலயத்தில், மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திர நாளில், பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று சீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சகிதம் வீதியுலா வருவதுண்டு. அட்சய திருதியை அன்று சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா வருவார். ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் வரதராஜப் பெருமாளுக்கு காலை திருக்கல்யாணம் நடைபெறும். மாலையில் சீனிவாசப் பெருமாள் வீதியுலா வருவார்.
தனுர்மாத பூஜை இங்கு மார்கழி 30 நாட்களும் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி விரதத்தின்போது, 9 நாட்களும் பத்மாவதி தாயாரை விதம் விதமாக அலங்கரிப்பார்கள். இந்த நாட்களில் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவதுண்டு. 10-ம் நாள் சீனிவாசப் பெருமாள் குதிரை வாகனத்தில் பயணித்து அம்பு போடும் உற்சவம் நடைபெறும்.
ஆடி 18-ம் நாள் கருப்பண்ணசாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அவருக்கு இளநீர் மற்றும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், நினைத்த காரியம் எளிதாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் சனிக்கிழமை மட்டும் இரவு 10.30 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
அமைவிடம் :
திருச்சி மலைக்கோட்டை பெரிய கடை வீதியில் உள்ளது இந்த ஆலயம். தெப்பக்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்தே செல்லலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு அற்புத ஆலயம்தான், நாகபட்டினம் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ள சீயாத்த மங்கை சிவன் ஆலயமாகும்.
மேற்கு பார்த்த சிவலாயத்தை வணங்கினால், 100 சிவாலயத்தை வணங்கியதற்கு சமம் என்பர். அப்படி மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு அற்புத ஆலயம்தான், நாகபட்டினம் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ள சீயாத்த மங்கை சிவன் ஆலயமாகும். இங்கு சிவனுக்கும் அன்னைக்கும் தனித்தனி சன்னிதி உள்ளது. சிவனுக்கு 5 அடுக்கு கோபுரமும், அன்னைக்கு இரண்டு அடுக்கு கோபுரமும் காணப்படுகிறது. முடிகொண்டான் ஆற்றிற்கு வடகரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
ஒரு காலத்தில், சரக்கொன்றை மலர்கள் சூழ்ந்த வனமாக இருந்தது சீயாத்தமங்கை. மலர்களின் நறுமணத்தை அறிந்து மகிழ்ச்சியுடன் இந்த தலத்துக்கு வந்தார் சிவபெருமான். அதன் பிறகு இங்கேயே தங்கியிருந்து அருளாசி வழங்க ஆரம்பித்தார். இன்றைக்கும் இவ்விடத்தில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரும், அவரின் மனைவி மங்கையர்கரசியாரும் அவ தரித்தது இந்த தலத்தில்தான். இந்த தம்பதிகள் அனுதினமும், ஸ்ரீ அயவந்தீஸ்வரரை கொன்றை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். ஒருநாள், சிவபூஜையின் போது, சிவலிங்கத் திருமேனியில் சிலந்தி ஒன்று ஊர்வதைக் கவனித்தார் மங்கையர்கரசியார்.
‘எம்பெருமான் உடலில் சிலந்தியா?. அதை அகற்ற வேண்டும்’ என்ற எண்ணம் கொண்டார். ஆனால் அதை எப்படி அகற்றுவது என அவருக்கு புரியவில்லை. எனவே வாயால் ஊதினார். சிலந்தி அங்கிருந்து செல்லவில்லை. எனவே மீண்டும் மீண்டும் பலங்கொண்ட படி முயற்சி செய்தார். அதைக் கண்ட திருநீலநக்கருக்கு கோபம் வந்தது.
“உன்னுடைய எச்சிலை இறைவன் மீது தெறிக்க விட்டுவிட்டாய். உன் எச்சில் இறைவன் மீது பட்டுவிட்டது. இந்த செயல் ஆகம விதிகளை மீறியது. நீ ஆண்டவனை மதிக்காமல் விதிகளை மீறிவிட்டாய்” என்று மனைவியைக் கண்டித்தார். மனைவியை கோபத்தோடு அங்கேயே விட்டு விட்டு, தான் மட்டும் இல்லம் திரும்பினார். மங்கையர்கரசியோ, இறைவனை பணிந்து அங்கேயே அமர்ந்து கொண்டார்.
“இறைவா நான் செய்தது தவறு என்றால், என்னை மன்னித்து விடு. என் அய்யன் என்னை விட்டு பிரியும்படி செய்து விடாதே” என சிவபெருமானே கதி என இருந்தார். அன்றிரவு திருநீலநக்கர் கனவில் தோன்றினார் இறைவன்.
“திருநீலநக்கரே உம் மனைவி என்னிடம் தாயுள்ளத்துடன், நடந்து கொண்டார். விடிந்ததும் ஆலயத்துக்கு வந்து என் திருமேனியை வந்து பாரும்” என்றார்.
விழித்தெழுந்தார் திருநீலநக்கர். விடிந்ததும், விடியாததுமாக விழுந்தடித்துக் கொண்டு ஆலயத்துக்கு ஓடினார். கரு வறையில் இருந்த சிவபெருமானின் லிங்கத்திருமேனியைக் கண்டார். அதிர்ந்தே போய் விட்டார். லிங்கத் திருமேனியில் மங்கையர்கரசியாரின் எச்சில்பட்ட இடத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் சிலந்திக் கடித்துப் புண்ணாகியிருந்தது. சீழ் வடிந்து கொண்டிருந்தது. இறைவனுக்கு நேர்ந்ததை எண்ணிக் கலங்கினார்.
“சிவபெருமானே என்னை மன்னித்து விடுங்கள்” என இறைவனை வணங்கி நின்றார். அதன் பின் சிவபெருமான் பழைய ரூபத்துக்கு வந்தார். இருவரும் அவர் முன்னே விழுந்து வணங்கினர். தன் மனைவி மங்கையர்கரசியை தனது அன்னையாக அந்த இறைவனே பரிந்துரைத்ததை எண்ணி உள்ளம் பூரித்தார். மங்கையர்கரசியாரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு சென்றார். இந்த சம்பவத்திற்கு பிறகு சிவபெருமான் மேலும் போற்றி வணங்கப்பட்டார்.
இத்திருத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் வந்தார். வீதி தோறும் தோரணங்கள் கட்டி, கோலமிட்டு, திருநீலநக்கரும், மங்கையர்கரசியாரும் அவரை அன்புடன் மலர்தூவி வரவேற்றனர். தங்களது வீட்டிலேயே ஞானசம்பந்தரைத் தங்க வைத்து வணங்கினர்.

கோவிலுக்கு கிழக்கே சூரிய தீர்த்தமும், மேற்கே சந்திர தீர்த்தமும் உள்ளது. இந்த குளத்தில் குளித்து அருகில் உள்ள அரச மரத்தினை சுற்றி வந்தால் திருமண தடை நீங்குகிறது. இந்த ஆலயம் ருத்ர வியாமளா தந்தரம் ஆகமத்தில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும் திருநீலநக்க நாயனார், மங்கையர் கரசி ஆகியோர் உள்ளனர். மறுபுறம் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் உள்ளனர். மூலஸ்தானத்துக்கு செல்லும் முன்பு துவார பாலகரையும் விநாயகர், தண்டாயுத பாணியையும் தரிசிக்கலாம். அர்த்தநாரீஸ்வரர், துர்க்கையம்மன், பிட்சாடனர், பிரம்மன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன கணபதி, கவுரி, அகத்தியர், மகாவிஷ்ணு, அனுமன் ஆகியோரது திருமேனிகளும் உள்ளன.
தனியாக இருக்கும் அன்னை சன்னிதிக்குள் நுழைந்தால், அங்கு விநாயகர், முருகன், நந்தி, பைரவர், சண்டீகேஸ்வரி, துவாரக பாலகிகள் உள்ளனர்.
வைகாசி மூல நட்சத்திர நன்னாளில், திருநீலநக்க நாயனாருக்கு குருபூஜை மிக விமரிசையாக நடக்கிறது. இறைவனின் திருமேனியில் சிலந்தி ஊர்ந்ததும் மூல நட்சத்திர நன்னாளில்தான். ஆகவே, மூல நட்சத்திரக்காரர்கள் வணங்கி நலம்பெற வேண்டிய திருத்தலம் இதுவாகும். ஆவணி மாத மூல நட்சத்திர நாளில், இருமலர்கண்ணியம்மை சமேத அயவந்தீஸ்வரருக்கு நடைபெறும் திருமண வைபவத்தை தரிசித்து, அந்த நாளில் நடைபெறும் ருத்ர வியாமளா தந்திர பூஜையில் பங்கேற்றால் திருமணத் தடை நீங்கும்.
பயணிகளுக்கு வழிகாட்டிய அம்மன்
இந்தத் தலத்தில் ஆலயம் மிகப் பிரமாண்டமாக உருவாக காரணம், இங்கு அருள்பாலிக்கும் அம்பிகை தான். அதற்கும் ஒரு சிறப்பான வரலாறு உண்டு.
செட்டிநாடு எனப்படும் காரைக்குடியில் இருந்து, தொழில் நிமித்தமாக நாகப்பட்டினம் நோக்கி ஒரு கூட்டத்தினர் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது மெல்ல இருள் படர்வதும், வெயில் அடிப்பதும், மழை பெய்வதுமாக இருந்தது. இதனால் அந்தப் பயணிகள் வழி தெரியாமல் அவதிப்பட்டனர். அந்த வேளையில் அங்கு சிறுமி ஒருத்தி வந்தாள். பயணிகள் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவரின் கையைப்பிடித்தாள்.
“என்னுடன் வாருங்கள். நீங்கள் செல்லும் இடத்துக்கு வழி காட்டுகிறேன்” என்று அழைத்துச் சென்றாள். அவளுடைய கண்களில் மின்னிய பிரகாசத்தைக் கண்டு சிலிர்த்தனர் பயணிகள்.
‘யார் இந்த சிறுமி. நம்மை எங்கே கூட்டிச்செல்கிறாள்’ என்று நினைத்தாலும், அந்த சிறுமி நமக்கு உதவத்தான் வந்திருக் கிறாள் என்பதை உணர்ந்தனர். மொத்தக் கூட்டமும் அவளைப் பின் தொடர்ந்தது. சற்று தூரத்தில் அமைந்திருந்த ஆலயத்தை அந்த கூட்டத்தினர் நெருங்கினர். அதன் பின் பெரியவர் கையை விடுவித்துக் கொண்ட அந்தச் சிறுமி சட்டென மறைந்து போனாள். அனைவரும் அதிர்ந்தனர். சிறுமியாக வந்தது, அந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் அம்பாளான இருமலர்க்கண்ணி அம்மையே என்பதை அறிந்து வியந்தனர். இயல்பாகவே கோவில் திருப்பணிகளில் ஆர்வம் கொண்ட அந்த அன்பர்கள், அம்பிகை வழி காட்டிய கோவிலுக்கும் திருப்பணிகள் செய்து முடித்து பிரமாண்டமான ஆலயமாக எழுப்பினர்.
அம்பிகை இருமலர்கண்ணியம்மைக்கு, உபயபுஷ்ப விலோசினி என்றொரு திருநாமமும் உண்டு. சிவசொரூபமாக ருத்ராட்சம், சிரசில் கங்கை மற்றும் நெற்றிக்கண்ணுடன் சிவபாகத்தைக் கொண்டவளாக காட்சி தரும் இந்த அம்பிகையின் தரிசனம் அபூர்வமானது. அம்பாள், அக்னி வடிவமாகத் திகழ்கிறாள். எனவே, அவளைக் குளிர்விக்கும் வகையில், பவுர்ணமி தினங்களில் அபிஷேகங்கள் செய்வித்துப் பிரார்த்தித்தால், உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை. பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள், பவுர்ணமியில், இங்கேயுள்ள சூரிய-சந்திர தீர்த்தத்தில் நீராடி, அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால், விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும்.
கோவிலில் தினமும் 4 கால பூஜை நடைபெறுகிறது. குழந்தை பாக்கியம், கல்வி, திருமணம் வேண்டுவோர், 5 பவுர்ணமிகளில் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கிறது. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
நாகப்பட்டினம்- கும்பகோணம் சாலையில், திருபுகலூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சீயாத்தமங்கை. நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் இந்த ஆலயத்தை அடையலாம்.
முத்தாலங்குறிச்சி காமராசு

திருஞானசம்பந்தர் இங்கிருக்கும் போது வெளுத்த வானமும், சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்த வெயிலும் திடீரென மறைந்து, மேகங்கள் கறுக்கத் தொடங்கின. லேசாக மழை பெய்து, சட்டென்று மழை நின்று, வெளுக்கத் தொடங்கி விடுகிறது. இப்படி ஆகாயத்தால் அடிக்கடி அதிசயம் நடந்து கொண்டிருக்கும் சீயாத்தமங்கை தலத்தை பார்த்த அவர், ‘மேகம் உறிஞ்சும் பெருஞ்சாத்த மங்கை’ எனப்பாடினார். இத் தலத்து சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

கோவிலுக்கு கிழக்கே சூரிய தீர்த்தமும், மேற்கே சந்திர தீர்த்தமும் உள்ளது. இந்த குளத்தில் குளித்து அருகில் உள்ள அரச மரத்தினை சுற்றி வந்தால் திருமண தடை நீங்குகிறது. இந்த ஆலயம் ருத்ர வியாமளா தந்தரம் ஆகமத்தில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும் திருநீலநக்க நாயனார், மங்கையர் கரசி ஆகியோர் உள்ளனர். மறுபுறம் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் உள்ளனர். மூலஸ்தானத்துக்கு செல்லும் முன்பு துவார பாலகரையும் விநாயகர், தண்டாயுத பாணியையும் தரிசிக்கலாம். அர்த்தநாரீஸ்வரர், துர்க்கையம்மன், பிட்சாடனர், பிரம்மன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன கணபதி, கவுரி, அகத்தியர், மகாவிஷ்ணு, அனுமன் ஆகியோரது திருமேனிகளும் உள்ளன.
தனியாக இருக்கும் அன்னை சன்னிதிக்குள் நுழைந்தால், அங்கு விநாயகர், முருகன், நந்தி, பைரவர், சண்டீகேஸ்வரி, துவாரக பாலகிகள் உள்ளனர்.
வைகாசி மூல நட்சத்திர நன்னாளில், திருநீலநக்க நாயனாருக்கு குருபூஜை மிக விமரிசையாக நடக்கிறது. இறைவனின் திருமேனியில் சிலந்தி ஊர்ந்ததும் மூல நட்சத்திர நன்னாளில்தான். ஆகவே, மூல நட்சத்திரக்காரர்கள் வணங்கி நலம்பெற வேண்டிய திருத்தலம் இதுவாகும். ஆவணி மாத மூல நட்சத்திர நாளில், இருமலர்கண்ணியம்மை சமேத அயவந்தீஸ்வரருக்கு நடைபெறும் திருமண வைபவத்தை தரிசித்து, அந்த நாளில் நடைபெறும் ருத்ர வியாமளா தந்திர பூஜையில் பங்கேற்றால் திருமணத் தடை நீங்கும்.
பயணிகளுக்கு வழிகாட்டிய அம்மன்
இந்தத் தலத்தில் ஆலயம் மிகப் பிரமாண்டமாக உருவாக காரணம், இங்கு அருள்பாலிக்கும் அம்பிகை தான். அதற்கும் ஒரு சிறப்பான வரலாறு உண்டு.
செட்டிநாடு எனப்படும் காரைக்குடியில் இருந்து, தொழில் நிமித்தமாக நாகப்பட்டினம் நோக்கி ஒரு கூட்டத்தினர் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது மெல்ல இருள் படர்வதும், வெயில் அடிப்பதும், மழை பெய்வதுமாக இருந்தது. இதனால் அந்தப் பயணிகள் வழி தெரியாமல் அவதிப்பட்டனர். அந்த வேளையில் அங்கு சிறுமி ஒருத்தி வந்தாள். பயணிகள் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவரின் கையைப்பிடித்தாள்.
“என்னுடன் வாருங்கள். நீங்கள் செல்லும் இடத்துக்கு வழி காட்டுகிறேன்” என்று அழைத்துச் சென்றாள். அவளுடைய கண்களில் மின்னிய பிரகாசத்தைக் கண்டு சிலிர்த்தனர் பயணிகள்.
‘யார் இந்த சிறுமி. நம்மை எங்கே கூட்டிச்செல்கிறாள்’ என்று நினைத்தாலும், அந்த சிறுமி நமக்கு உதவத்தான் வந்திருக் கிறாள் என்பதை உணர்ந்தனர். மொத்தக் கூட்டமும் அவளைப் பின் தொடர்ந்தது. சற்று தூரத்தில் அமைந்திருந்த ஆலயத்தை அந்த கூட்டத்தினர் நெருங்கினர். அதன் பின் பெரியவர் கையை விடுவித்துக் கொண்ட அந்தச் சிறுமி சட்டென மறைந்து போனாள். அனைவரும் அதிர்ந்தனர். சிறுமியாக வந்தது, அந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் அம்பாளான இருமலர்க்கண்ணி அம்மையே என்பதை அறிந்து வியந்தனர். இயல்பாகவே கோவில் திருப்பணிகளில் ஆர்வம் கொண்ட அந்த அன்பர்கள், அம்பிகை வழி காட்டிய கோவிலுக்கும் திருப்பணிகள் செய்து முடித்து பிரமாண்டமான ஆலயமாக எழுப்பினர்.
அம்பிகை இருமலர்கண்ணியம்மைக்கு, உபயபுஷ்ப விலோசினி என்றொரு திருநாமமும் உண்டு. சிவசொரூபமாக ருத்ராட்சம், சிரசில் கங்கை மற்றும் நெற்றிக்கண்ணுடன் சிவபாகத்தைக் கொண்டவளாக காட்சி தரும் இந்த அம்பிகையின் தரிசனம் அபூர்வமானது. அம்பாள், அக்னி வடிவமாகத் திகழ்கிறாள். எனவே, அவளைக் குளிர்விக்கும் வகையில், பவுர்ணமி தினங்களில் அபிஷேகங்கள் செய்வித்துப் பிரார்த்தித்தால், உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை. பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள், பவுர்ணமியில், இங்கேயுள்ள சூரிய-சந்திர தீர்த்தத்தில் நீராடி, அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால், விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும்.
கோவிலில் தினமும் 4 கால பூஜை நடைபெறுகிறது. குழந்தை பாக்கியம், கல்வி, திருமணம் வேண்டுவோர், 5 பவுர்ணமிகளில் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கிறது. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
நாகப்பட்டினம்- கும்பகோணம் சாலையில், திருபுகலூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சீயாத்தமங்கை. நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் இந்த ஆலயத்தை அடையலாம்.
முத்தாலங்குறிச்சி காமராசு
தமிழகத்தில் முதலில் எழுப்பப்பட்ட விநயாகர் கோவில் என்று சொல்லப்படுவது தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுக மங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவிலாகும்.

கி.மு. 2300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதென்று இந்த ஆலயத்தின் வரலாறு கூறுகிறது. கி.மு. 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கோமார வல்லபன் என்ற அரசன் நர்மதை நதிக்கரையில் இருந்து ஆயிரம் வேத பண்டிதர்களை அழைத்து இங்கு மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்திட முடிவு செய்தான்.
ஆனால் அங்கு வந்தவர்களோ 999 பேர்தான் ஒரு பண்டிதர் குறைந்ததால் மன்னனின் மனதில் கவலை ஏற்பட்டது. பிரார்த்தனை செய்பவர் போல வடிவம் கொண்டு விநாயகரே பண்டிதராக வந்து யாகத்தை நிறைவுசெய்தார். இதனால் இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகப்பெருமான் என்று அழைக்கப்படுகிறது. யக்ஞம் முடிந்த உடன் ஆறுமுக மங்கலத்தையே கிராமதானமாக பெற்றுக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டதாக வரலாற்று ஏடு தெரிவிக்கிறது.
தொடக்க காலத்தில் இந்த கிராமத்தின் தெற்கு கரையில் பல அந்தணர்கள் ஆயிரத்தெண் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டார்கள். பின்னர் காளஹஸ்தீஸ்வரர் கல்யாணி தேவி சன்னதிகளோடு மகா மண்டபம் அமைக்கப்பட்டது.
தேர், கொடிமரம், 10 நாட்கள் உற்சவங்களோடு திருவிழா காணும் முக்கிய விநாயகர் கோவில்களில் இதுவும் ஒன்றாக கூறப்படுகிறது. 5 நிலை ராஜகோபுரத்துடன் கூடிய இந்த கோவிலில் ஒரு சமயம் ஆதிசங்கரருக்கு வயிற்று வலி ஏற்பட்டபோது , இங்கே கணேச பஞ்சரத்ன கீர்த்தனம் பாடி பிறகு திருச்செந்தூருக்கு சென்று முருகன் சன்னதியில் சுப்ரமணிய புஜங்கம் பாடியபின் நோய் வலி நீங்கப்பெற்றார் என்பது இங்கே நடந்த முக்கிய செய்தி. வாகன விபத்து, பயண பிரச்சினை, வழக்கு இழுபறி ஆகியவை சுமூகமாக முடிய இந்த விநாயகரை வேண்டினால் நடந்துவிடும் என்று நம்பும் பக்தர்கள் அப்படி நடந்த பிறகு 1008,108 தேங்காய் களை உடைத்து 108 தீபங்களும் ஏற்றி வழிபடுகிறார்கள்.
சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்போது 7-ம் திருநாளன்று ஸ்ரீநடராஜ மூர்த்தியுடன் பஞ்சமுக கணபதி திரு வீதி உலா வருவார். நெல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஏரலில் இருந்து அடுத்த 4 கி.மீட்டரில் வடக்கு திசையில் ஆறுமுக மங்கலத்தை அடையலாம்.

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது.
ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்ய பெற்ற திவ்யதேசங்கள் 108-ல் இந்த கோவிலும் ஒன்றாகும். இந்த திருக்கோவில் பல்வேறு காலங்களில் அரசர்கள் பலரால் அவ்வப்போது கட்டப்பெற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கருடனால் கொண்டு வரப்பெற்ற கெடிலம் நதிக்கும், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அதன் ஒரு பாகம் வீழ்ந்து உருவாகிய அவுசதமலைக்கும் இடையே அமைந்துள்ளது இந்த தேவநாதசாமி கோவில்.
இந்த கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும். கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார்.
கோவிலில் பிரதானமாக பூஜிக்கப்படும் தாயார் அம்புருவர வாசினி, ஹேமாம்புஜநாயகி, தரங்கமுகநந்தினி, செங்கமலத் தாயார், அலைவாய் உகந்த மகள் முதலிய பல திருநாமங்களுடன் விளங்குகிறார்.
பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, மார்க்கண்டேயர் முதலிய பலரும் தவம் புரிந்து தேவநாதசாமியை தரிசித்து வரம் பெற்ற தலம் இதுவாகும்.
திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள். இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் குறைந்தது 100 திருமணமாவது நடக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 222 திருமணம் வரை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சிக்காக மண்டபமும் கோவில் சார்பாக உள்ளது. மேலும் மணமக்களுக்கு திருமண சான்றிதழும் கொடுக்கப்பட்டு வருகிறது.
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சித்திரை மாதம் 10 நாட்கள் தேவநாதசாமிக்கும், புரட்டாசி மாதம் 10 நாட்கள் தேசிகருக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதவிர ஆடிப்பூரம், பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி முதலிய உற்சவங்களும் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் இந்த கோவிலில் 12 மாதமும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டே இருக்கிறது.

சிறப்பு மிக்க சிவாலயங்களில் திருப்பூந்துருத்தி திருத்தலமும் ஒன்று. இங்கு புஷ்பவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் அருள்பாலிக்கிறார்.
மனிதர்கள் வாழ்வில் எல்லாவிதமான இன்பங்களையும். பேறுகளையும் அடைய விடாமல் தடுத்து நிறுத்துவது முன்னோர்கள் சாபம் எனப்படும் பித்ரு சாபம்தான். அப்படிப்பட்ட பித்ரு சாபங்களை நீக்கும் திருத்தலமாக திருப்பூந்துருத்தி திருத்தலம் அமைந்துள்ளது. இது சிறப்பு மிக்க சிவாலயங்களில் ஒன்று. இங்கு புஷ்பவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் சவுந்தரிய நாயகி.
திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகும். இந்த ஆலயத்தில் ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் சங்கமித்த நிகழ்வு நடந்திருக்கிறது. ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் எப்படி சாத்தியம்? அதற்கு ஒரு புராணக் கதை இருக்கிறது.
ஒருமுறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி பேசிக்கொண்டிருந்தனர். “ஆடி அமாவாசை அன்று, வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம், திருவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி, ராமேஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும்; பித்ரு சாபங்கள் விலகும். எனவே இந்த 13 புனித தீர்த்தங்களிலும் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். ஆனால் இது யாரால் சாத்தியமாகும்” என்பதாக அவர்களின் பேச்சு இருந்தது.
அப்போது அங்கிருந்த காசிப முனிவர், “ஏன் முடியாது?!. நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பித்ரு தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்” என்றார்.
பின்னர் அவர் ஈசனை நினைத்து தவம் இருந்தார். பல சிவ தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார். அங்கும் தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய ஈசன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு, விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராக திருக்காட்சி கொடுத்தார். மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. காசிபர் அந்த புனித நீரில் நீராடி, ஈசனையும், அம்பாளையும் அந்த நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன் காரணமாக அவருக்கு ஈசனுடன் ஐக்கியமாகும் முக்தி நிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது.
காசிப தீர்த்தம், இத்தலத்தில் சோமாஸ்கந்த மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில், தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது. இந்தத் தீர்த்தத்தின் அருகில் ஆதி விநாயகர், சம்பந்தர், அப்பர், பரவை மற்றும் சங்கிலி நாச்சியார் சமேத சுந்தரர் ஆகியோர் உள்ளனர். இந்த ஆலயத்தில் அமாவாசை தோறும் கிரிவலம் நடைபெறுகிறது. அதிலும் ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்; செல்வ வளம் பெருகும்; தடைகள் அகலும்; தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் காசிப தீர்த்தத்தில் நீராடினால் 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழு பலனும் கிடைக்கும். அதே போல் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை காலங்களிலும் இந்த தீர்த்தத்தில் நீராடலாம்.
இக்கோவிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுர வாசல் வழியே உள்ளே நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தி மண்டபம் மட்டும் உள்ளன. நந்தி மண்டபத்திலுள்ள பெரிய நந்தி சற்றே பள்ளத்தில் இறைவன் சன்னிதிக்கு நேராக இல்லாமல் விலகியுள்ளது. வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சன்னிதி உள்ளது. இரண்டாவது உள்வாசலைத் தாண்டியதும் வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம் காணப்படுகின்றன. இங்கும் நந்தி சன்னிதியை விட்டு விலகியவாறு உள்ளது.
சுவாமி சன்னிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபமும், அடுத்து நடராச சபையும் உள்ளது. உள் பிரகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சன்னிதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தென்கயிலையும், வடபுறத்தில் வடகயிலையுமாகிய கோவில்கள் விளங்குகின்றன. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் மூலவர் புஷ்பவன நாதர் எழுந்தருளியுள்ளார். கோஷ்ட மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி திருமேனியும், மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரரும் இருக்கின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
அட்டவீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் என்ற சிவஸ்தலத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் 4 கிலோமீட்டர் தொலைவில் திருப்பூந்துருத்தி இருக்கிறது. திருவையாறில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இந்த ஆலயத்தை அடையலாம். திருவையாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பூந்துருத்தி திருத்தலம்.

அருள்மிகு கைலாச நாதர் கோவில் காஞ்சீபுரம் பஸ் நிலையத்திலிருந்து மேற்கே அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
அருள்மிகு கைலாச நாதர் கோவில் காஞ்சீபுரம் பஸ் நிலையத்திலிருந்து மேற்கே அமைந்துள்ளது. கச்சபேசர் கோவில் அமைந்துள்ள வீதியின் வழியே சென்றால் எளிதில் இந்த கோவிலை அடையலாம். இந்த கோவில் அமைதியான, அழகான பச்சைப்பசேல் புல்வெளி களைக் கொண்டு ஊரின் இறுதியில் அமைந்துள்ளது. கிழக்குப் பார்த்தச் சந்நிதி.
இத்திருக்கோவில் 1. வெளிப்பிராகாரம், 2. உள்பிராகாரம், 3. மூலவர் கட்டிடப்பகுதி என மூன்று பிரிவாக அமைந்துள்ளது. முதல் நுழைவு வாயில் கிழக்குப் பார்த்த வண்ணமும் மூலவர் அறைக்குச் செல்லும் வாயில் தெற்கு நோக்கியும் உள்ளது. மூலவர் கைலாச நாதர், பெரிய 16 பட்டை லிங்கத் திருமேனி கொண்டு அருள் புரிந்து வருகிறார்.
சென்னைக்கு அருகே உள்ள திருநின்றவூரில் பூசலார் எனும் பெரியவர் தோன்றினார். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய இவர், அறவழியில் பொருள் தேடி சிவன டியார்களுக்கு உதவினார்.
இவர், இறைவனுக்கு கோவில் கட்ட ஆசைப்பட்டார். ஆனால் அவ ரிடம் அதற்கான பண வசதியே, பொருளோ இல்லை. பணத்துக்காகப் பல இடங்களில் முயற்சி செய்தார், ஆனால் கிடைக்கவில்லை. அதனால் மனம் வருந்திய அவர் தன் உள்ளத்திலேயே சிவபெருமானுக்குத் கோவிலைக் கட்டலாம் என்று முடிவு எடுத்தார்.
கல், சுண்ணாம்பு, சிற்பியார் எல்லாம் சேகரித்து, நாள் தோறும் ஒருபுறம் அமர்ந்து கண்களை மூடி மனதை ஒரு மனதாக்கி, மனதுக்குள்ளேயே திட்டம் தீட்டி கோவிலை கட்டினார். சுற்றுச் சுவர் மதில், கோபுரம், விமானம், மண்டபம், குளம், இறைவனுக்கான வாகனம், மூலவர், உற்சவர் எல்லாம் மனதுக்குள்ளேயே கற்பனையில் செய்து முடித்தார். இறுதியில் கும்பாபிஷேகம் நடத்தவதற்கும் நாள் குறித்தார்.
பூசலார் தேதி குறித்த அதே நாளில் காஞ்சீபுரத்தில் காடவர்கோன் என்னும் மன்னன் காஞ்சீபுரத்தில் சிவபெருமானுக்கு பெரும் பொருட் செலவில் கற் கோவில் கட்டி முடித்து குட முழுக்கிற்கு நாள் குறித்து முடித் தான். ஒருநாள் காடவர்கோன் கனவில் தோன்றிய சிவபெருமான் நீ குறித்த நாளில் திருநின்றவூரில் பூசலார் என்பவர் கோவில் எடுத்தக் குடமுழுக்கிற்கும் ஏற்பாடு செய்துள்ளார். நாம் அங்கு செல்ல உள்ளோம். எனவே, நீ வேறு ஒருநாளில் கும்பாபிஷேகத்தை நடத்து என்று கூறினார்.
மன்னன் காடவர்கோன் கண்விழித்து கனவில் இறைவன் கூறியதை மீண்டும் ஒருமுறை நினைத்து, உடனே திருநின்றவூருக்கு பயணமானான். அங்கு பூசலார் கட்டிய கோவில் எங்கு உள்ளது என்பதை அறிய முடியாமல் குழம்பி, அங்கிருந்த மக்களிடம் கேட்டான். மக்கள் பூசலாரை காட்ட, மன்னன் பூசலாரிடம் சென்று தம் கனவில் இறைவன் கூறியதை சொன்னார். அதை கேட்டு பூசலார் மெய்சிலிர்த்து இறைவனின் கருணையை எண்ணி வியந்தார். உடனே பூசலார், தாம் இறைவனுக்குத் தம் மனதில் மட்டுமே கோவில் கட்டியதாகக் கூறினார்.
இதை அறிந்த மன்னன் இறைவனின் கருணையை வியந்து, திருநின்றவூரில் இறைவனுக்கு ஒரு கோவிலைக் கட்டி குடமுழுக்கும் செய்தான். அதன் பின்பு காஞ்சியில் தாம் கட்டிய கைலாநசாதருக்குக் குடமுழுக்கு செய்வித்தான் என்பது புராண வரலாறாகக் கூறுவர். இத்திருத்தலத்தில் நாரத மாமுனிவரும், திரு மாலும் சிவபெருமானை- கைலாச நாதரை வணங்கி உள்ளனர் இத்திருக்கோவிலில் இறைவன் எழுந்து அருள்புரியும் கருவறையைச் சுற்றிலும் சொர்க்கவாசல் என்னும் பிராகாரம் ஒன்று உள்ளது.
இவ்வாசலானது, நுழையும் இடமும் வெளிவரும் இடமும் குறுகிய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாசலின் வழியே சென்று வெளியே வந்தால் மறுபிறப்பு எடுத்ததற்கு சமம் என்கிறார்கள். கருவறையை சுற்றிலும் பல சிறிய கோவில்கள் உள்ளன. பல்லவர் காலத்து கட்டிடக் கலைத்திறனுக்கு இக்கோவில் ஓர் உதாரணமாகும். இந்த ஆலயம் முழுக்க, ழுமுக்க மண் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள கோவில் ஆகும். தொல் பொருள் ஆய்வுத்துறையினரால் இந்த ஆலயம் நிர்வகிக்கப்படுகிறது.
காலை 8.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், ஏற்றுமானூர் என்ற இடத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றியும், அதன் சிறப்புகளைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், ஏற்றுமானூர் என்ற இடத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் 450 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கு ஒன்று இருக்கிறது. இவ்விளக்கின் கீழ் படியும் எண்ணெய் மை, கண் சம்பந்தமான அத்தனைக் குறைபாடுகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது என்கின்றனர். இந்த ஆலயத்தைப் பற்றியும், அதன் சிறப்புகளைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்.
தல வரலாறு :
கரன் என்ற அசுரன், சிவபெருமானின் தீவிர பக்தனாக இருந்தான். அவன் முக்தி வேண்டி ஈசனை நினைத்து கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவனிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து, “இந்த லிங்கங்களை மூன்று இடங்களில் நிறுவி வழிபட்டால், முக்தி கிடைக்கும்” என்று சொல்லி அனுப்பினார். மகிழ்ச்சி அடைந்த கரன், ஒரு லிங்கத்தை வலது கையிலும், மற்றொரு லிங்கத்தை இடது கையிலும், மூன்றாவது லிங்கத்தை வாயில் வைத்தும் எடுத்துச் சென்றான்.
இந்த நிலையில் அசுரனை பின்தொடர்ந்து செல்லும்படி, புலிக்கால் முனிவரான வியாக்ரபாதருக்கு உத்தரவிட்டார், சிவபெருமான். வியாக்ரபாதரும் அசுரனைப் பின்தொடர்ந்து சென்றார். நெடுந்தூரம் நடந்து சென்ற அசுரன், பயணக் களைப்பினால் ஓரிடத்தில் ஓய்வெடுக்க நினைத்தான். தனது வலது கையில் இருந்த சிவலிங்கத்தை கீழே வைத்து விட்டு ஓய்வெடுத்தான். சிறிது நேரத்திற்குப் பின், கீழே வைத்த சிவலிங்கத்தை எடுக்க முயன்றபோது, அது வரவில்லை. எவ்வளவு முயன்றும், லிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்லை.
அப்போது அங்கு வந்த வியாக்ரபாதரிடம், தரையில் வைக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபடும்படி அசுரன் கேட்டுக் கொண்டான். அதனை ஏற்ற வியாக்ரபாதர், அவ்விடத்திலேயே தங்கி, சிவலிங்கத்திற்கு நீண்ட காலம் பூஜை செய்து வழிபட்டார். அந்த இடத்தில் அமைந்த ஆலயம்தான் ‘வைக்கம் மகாதேவர் கோவில்’ ஆகும்.
மீதம் இருந்த இரண்டு சிவலிங்கங்களுடன் அங்கிருந்து சென்ற அசுரன், இடது கையில் வைத்திருந்த சிவலிங்கத்தை ஏற்றுமானூர் என்ற இடத்தில் நிறுவினான். அந்தக் கோவில் ‘ஏற்றுமானூர் மகாதேவர் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சென்ற அசுரன், வாயில் வைத்திருந்த லிங்கத்தை மற்றொரு இடத்தில் நிறுவி வழிபட்டு முக்தியடைந்தான். அந்த ஆலயம் ‘கடுந்துருத்தி மகாதேவர் ஆலயம்’ என்று பெயர் பெற்றது. இந்தத் தகவல்கள் அனைத்தும் பார்க்கவ புராணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.
அசுரன் இடது கையில் கொண்டு சென்ற சிவலிங்கத்தை நிறுவிய இடம் முன்பு வனப்பகுதியாக இருந்தது. அப்போது அந்த பகுதி, ‘ஹரிணபுரம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. உயரமான அந்த வனப்பகுதியில் மான்கள் அதிகம் இருந்ததால், அப்பகுதியை மலையாளத்தில் ‘ஏற்றம் (உயரம்) மான் ஊர்’ என்று அழைத்தனர். அதுவே பின்னாளில் மருவி ‘ஏற்றுமானூர் என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். அதே போல் இந்த மகாதேவர் ஆலயம் எட்டு மனைக்காரர்களுக்கு சொந்தமாக இருந்ததாகவும், அதனால் இந்த ஆலயம் ‘எட்டு மனைக்காரர்கள் கோவில்’ என்று அழைக்கப்பட்டதாகவும், அதுவே பின்னாளில் ‘எட்டு மானூர்’ என்றும், ‘ஏற்றுமானூர்’ என்று திரிந்து வந்ததாகவும் பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது.
ஆலய அமைப்பு :
15-ம் நூற்றாண்டில் இக்கோவிலுக்கு வந்து வழிபட்ட சந்திர பாஸ்கரன் என்ற பாண்டிய மன்னன், தன் உடலில் இருந்த கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கியதை உணர்ந்தான். இதனால் இத்தல இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, இந்த ஆலயத்தை புதிதாக கட்டியதாக கூறப்படுகிறது. மேற்கு நோக்கிய நிலையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் வட்ட வடிவக் கருவறையில் கரன் என்ற அசுரன் நிறுவிய சிவலிங்கம் இருக்கிறது. அகோரமூர்த்தியாகக் கருதப்படும் இவரை ‘ஏற்றுமானூரப்பன்’, ‘மகாதேவர்’ ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தில் அம்பாளுக்கு சன்னிதி இல்லை. இருப்பினும் இறைவனின் கருவறைக்குப் பின்புறம் பார்வதி சன்னிதியாகக் கருதப்படுகிறது.
முன் மண்டபத்தில் கல்லினால் ஆன நந்தி ஒன்றும், உலோகத்தால் ஆன நந்தி ஒன்றுமாக இரண்டு நந்திகள் இருக்கின்றன. ஆலய வளாகத்தில் கணபதி, சாஸ்தா, தட்சிணாமூர்த்தி, யட்சி ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கருவறையைச் சுற்றி வரும் பாதையில் ராமாயணம் மற்றும் பாகவத புராணங்களின் கதை, மரச்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.
ஆலயத்தின் நுழைவு வாசலில் 450 ஆண்டுகளுக்கும் மேலாக, அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும் அணையா விளக்கு ஒன்று இருக்கிறது. இதனை மலையாள மொழியில் ‘வல்லிய விளக்கு’ என்கின்றனர். இந்த அணையா விளக்கு இங்கு அமைந்திருப்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.
ஒரு பெரியவர், பெரிய தூக்கு விளக்குடன் இந்தக் கோவிலுக்கு வந்தார். “நான் பல நாட்களாகப் பட்டினியாக இருக்கிறேன். இந்த விளக்கை வைத்துக் கொண்டு, எனக்கு யாராவது பணம் கொடுங்கள்” என்று இறைஞ்சினார்.
அங்கிருந்த சிலர், “பணம் கொடுத்து விளக்கு வாங்கும் நிலை ஏற்றுமானூரப்பனுக்கு இல்லை” என்று கூறி அவரை கேலி செய்தனர். உடனே அந்தப் பெரியவர், ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனிடம் “இறைவா, என்னைக் காப்பாற்று” என்று கண்ணீர் மல்க வேண்டி நின்றார்.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் திடீரென்று சூறாவளிக் காற்றுடன் இடியும் சேர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. அப்போது அங்கு வந்த ஒருவர், அந்தப் பெரியவர் கொண்டு வந்த விளக்கைப் பலிக்கல் அருகேத் தூக்கிக் காட்டினார். உடனே சூறாவளியுடன் கூடிய இடி-மழை நின்று போனது. விளக்கை கையில் வைத்திருந்தவரும் திடீரென்று மறைந்து போனார். அப்போதுதான், பெரியவரை கேலி செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக இறைவனே விளக்கே ஏந்தி வந்தது தெரியவந்தது. இறைவனே கையில் ஏந்தி வந்ததால், இந்த விளக்கு இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டிருப்பதாக செவி வழிக்கதை சொல்லப்படுகிறது.
இறைவன் சிவபெருமான், பார்வதி தேவியை கயிலாயத்திலேயே விட்டு விட்டு ஏற்றுமானூர் சென்றுவிட்டார். இதனால் கவலை அடைந்த பார்வதி தேவி, பூதகணங்கள், கணபதி, சாஸ்தா உள்ளிட்ட சிலருடன் கயிலாயத்தில் இருந்து ஏற்றுமானூருக்கு புறப்பட்டாள். தான் இருக்கும் இடம் தேடி வந்த பார்வதியைக் கண்டு இறைவன் மகிழ்ச்சியடைந்தார். அவர்களை வரவேற்கும் விதமாக ஒரு விளக்கை ஏந்தி வரவேற்றார். இறைவனிடம் இருந்து அந்த விளக்கைப் பெற்ற பார்வதி, அதை தூண்டி விட்டு அதன் ஒளியை அதிகரித்தாள். மேலும் அந்த விளக்கில் படிந்திருந்த கருப்பு நிறச் சாம்பலை எடுத்து தனது இரு கண்களையும் அழகுபடுத்திக் கொண்டாள். அந்த விளக்கே இன்றளவும் அணையாமல் எரிந்து கொண்டிருப்பதாக மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது.
இந்த ஆலயத்தில் சிவபெருமானுக்குரிய பிரதோஷம் உள்ளிட்ட அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் ஆறாட்டு விழா நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், ‘ஏழரைப் பொன் ஆனா’ என்ற நிகழ்வு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கோவிலில் வந்து வழிபடுபவர்களுக்கு, வயிறு மற்றும் தோல் தொடர்பான நோய்கள் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவை நீங்கும் என்பதும், உடலில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கும் என்பதும் பொதுவான பலனாக இருக்கிறது. இங்கு எரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கின் கீழ் படியும் எண்ணெய் மை, கண் சம்பந்தமான அத்தனைக் குறைபாடுகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது என்கிறார்கள். இத்தல இறைவனை காலை வேளையில் வழிபட்டால் மன மகிழ்வும், மதிய வேளையில் வழிபாடு செய்தால் காரியங்களில் வெற்றியும், இரவு நேரத்தில் வழிபட்டால் தவறுகளுக்கு மன்னிப்பும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆலய சிறப்புகள் :
* மகாபாரதத்தை எழுதிய வியாச முனிவர், இந்த ஆலய இறைவனை வழிபட்டுள்ளதாகச் சில புராணங்கள் தெரிவிக்கின்றன.
* ஆதிசங்கரர் தனது புகழ் பெற்ற சவுந்தர்யா லஹரி எனும் பாடலை, இக்கோவிலில் தான் இயற்றிப் பாடியதாகச் சொல்கின்றனர்.
* இந்த ஆலயத்தில் இருக்கும் இரண்டு நந்திகளில், வெண்கலத்தால் செய்யப்பெற்ற நந்தியின் வயிற்றில் திறந்து மூடும்படியான அமைப்பில், காணிக்கையாகப் பெறப்பட்ட நெல் நிரப்பப்பட்டிருக்கிறது. நோயுற்றவர்களுக்கு இதில் இருந்து ஒரு நெல்லை எடுத்துக் கொடுத்துச் சாப்பிடச் செய்தால், நோய் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தங்கத்தால் ஆன யானைகள் :
இந்தக் கோவில் தினமும் அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
கேரள மாநிலம் கோட்டயம் நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், வைக்கம் நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது, ஏற்றுமானூர் மகாதேவர் கோவில். கோட்டயம், வைக்கம் ஆகிய ஊர்களில் இருந்து அதிகமான பஸ் வசதிகள் உள்ளன.
-தேனி மு.சுப்பிரமணி

திருவாங்கூர் மன்னராக இருந்த அனுசம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்பவர், தங்கத்தால் தகடுகள் பொருத்தப்பட்ட எட்டு யானை சிலைகள் செய்ததாக சொல்லப்படுகிறது. அவருக்குப் பின் வந்த கார்த்திகை திருநாள் என்பவர், அந்த யானைகளை இந்த ஆலயத்திற்கு வழங்கியிருக்கிறார். இவற்றில் 7 யானைகள் இரண்டரை அடி உயரம் கொண்டவை. எட்டாவது யானை இவற்றில் பாதியளவுடையது. எனவே, இவற்றை ‘ஏழரைத் தங்க யானைகள்’ என்று பொருள் தரும் வகையில் மலையாளத்தில் ‘ஏழரைப்பொன் ஆனா’ என்கிறார்கள்.
சீமைப் பலா மரத்தால் செய்யப்பட்ட இந்த யானை சிலைகள், 13 கிலோ தங்கத் தகடுகளைக் கொண்டு தங்க யானைகளாக மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. ஏற்றுமானூர் கோவிலில் நடைபெறும் ஆறாட்டு விழாக் காலத்தில், எட்டு மற்றும் பத்தாம் நாட்களில் இந்த ஏழரை யானைகளும் கோவில் பாதுகாப்பறையில் இருந்து வெளியே எடுக்கப்படும். சிறிய தங்க யானையில் இறைவன் அமர்ந்திருக்க, மற்ற ஏழு தங்க யானைகளுடன் ஊர்வலம் வருவதுபோன்ற காட்சி, பொதுமக்கள் பார்வைக்காகவும், வழிபாட்டுக்காகவும் கோவிலில் வைக்கப்படுகிறது.
இந்தக் கோவில் தினமும் அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
கேரள மாநிலம் கோட்டயம் நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், வைக்கம் நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது, ஏற்றுமானூர் மகாதேவர் கோவில். கோட்டயம், வைக்கம் ஆகிய ஊர்களில் இருந்து அதிகமான பஸ் வசதிகள் உள்ளன.
-தேனி மு.சுப்பிரமணி
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகில் உள்ளது திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மக்கள் வழிபடும் விதத்தில் இந்த பூமியில் எத்தனையோ புண்ணியத் தலங்கள், பரிகாரத் தலங்கள், புண்ணிய நதிகள் இருக்கின்றன. இவையெல்லாம் மனித குலத்துக்கு தெய்வத்தால் வழங்கப்பட்ட வரப்பிரசாதமாகும். நாம் அனைவரும் ‘எனக்கு இது வேண்டும்’ என ஒரு ஆலயத்தை தேடிச் சென்று அங்குள்ள இறைவனை வழிபடுகிறோம். வேண்டியது கிடைத்தவுடன் ஆனந்த கூத்தாடுகிறோம். அதே வேளையில் எதிர்பாராத விதமாக நாம் ஒரு திருத்தலத்துக்கு சென்று வந்த பிறகு, நமது வாழ்வில் பெரும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் பெறுகிறோம் என்றால் அது எவ்வளவு பெரிய பாக்கியம். அப்படியொரு பாக்கியம் கிடைக்கும் தலம்தான் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகில் உள்ள திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்.
இத்தலம் எமதர்மனும், சனீஸ்வரனும் பிறந்த தலம் என்று சொல்லப் படுகிறது. ஒருவருக்கு சனி தோஷம் பிடித்தாலும், எமன் பிடிக்க வந்தாலும் அது வாழ்வில் கஷ்டமான காலம்தான். ஆனால் இவர்கள் பிறந்த இத்தலத்தில் குழந்தையாய், அனைவருக்கும் அருள்தரும் வல்லுநராய், பக்தர்கள் கேட்ட வரத்தைத் தருபவர்களாகவே விளங்குகிறார்கள். அதனால்தான் இந்த தலத்தில் கால் வைத்த உடனேயே நமக்கு அனைத்தும் கிடைக்கிறது.
தென் தமிழ்நாட்டின் தேவாரப் பதிகத் தலங்கள் மிகவும் பெருமையும், புகழும் கொண்டவை. இந்த தலங்களை ‘பாடல் பெற்ற தலங்கள்’ என போற்று கிறோம். அதுபோன்ற ஒரு பாடல் பெற்ற திருத்தலமே திருமீயச்சூர். இங்கு ஆதி சக்தியான லலிதா பரமேஸ்வரி தவக்கோலத்தில் மனோன்மணி சொரூபமாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறார். இத்தலத்தின் இறைவன் மேகநாத சுவாமி. இவரை வணங்கி நிற்போருக்கு வறுமை நீங்கி செல்வம் மழையாகப் பொழியும்.
ஒருமுறை இந்த மேகநாத சுவாமியை, வருணனும், சூரியனும் வணங்கி நின்றனர். தங்களுக்கு சாப நிவர்த்தி தர வேண்டும் என்று வேண்டினர். அவர்களுக்கு மேகநாத சுவாமி சாப நிவர்த்தி கொடுத்தார். இதற்கிடையில் சூரியனுடைய பத்தினிகளான உஷாதேவியும், அவளுடைய நிழலான சாயா தேவியும் மேகநாதரிடம் ‘எங்களுக்கு புத்திர பாக்கியம் வேண்டும்’ என்று வழிபட்டனர்.
அதற்கு இறைவன் “நீங்கள் உங்கள் கணவரோடு இத்தலத்திலுள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி, அம்பாள் லலிதாவையும், என்னையும் பூஜை செய்து வாருங்கள். உங்களுக்கு புத்திர பாக்கிய பலன் கிடைக்கும்” என வரம் அளித்தார்.
அதன்படியே சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் திருமீயச்சூர் வந்து சூரிய புஷ்கரணியில் நீராடி பூஜை செய்தனர். இதைஅடுத்து சூரியனுக்கும், உஷாதேவிக்கும் எமதர்மன் பிறந்தார். அதே போல் சூரியனுக்கும், சாயா தேவிக்கும் சனீஸ்வரர் பிறந்தார். சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் கூடிய இடம், திருமீயச்சூர் தலத்திற்கு மேற்கே தற்போது இக்கோவில் உள்ள ஊரில்தான். இவர்கள் கூடிய காரணத்தினால் இவ்வூர் ‘கூடியலூர்’ என்று அழைக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில் மருவி ‘கொடியலூர்’ ஆயிற்று என்கிறார்கள்.
ஹயக்ரீவர் கூறியபடி திருமீயச்சூர் வருகை தந்த அகத்தியர், லலிதாம்பிகையை தரிசித்தார். அங்கு அன்னையை மனதுருக வேண்டி லலிதா நவரத்தின மாலை பாடினார். இதனால் அவருக்கு அம்பாளின் பேரருள் கிடைத்தது. அதன்பின் அவர் சிவபூஜை செய்ய வேண்டும் என்று எண்ணினார். அதற்காக அவ்விடத்தில் இருந்து சற்று மேற்கே உள்ள கூடியலூர் என்ற கொடியலூருக்கு வந்தார். இத்தலத்தில் அவர் சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்தார். இங்குள்ள லிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்ததால் இத்தல இறைவன் ‘அகத்தீஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார். தாயார் லலிதாம்பிகையை நினைத்து அவரையும் இங்கு அகத்தியர் பிரதிஷ்டை செய்தார். தேடிவந்து வணங்கும் பக்தர்களுக்கு அருள் தரும் அம்மைக்கு ‘ஆனந்தவல்லி’ என பெயரிட்டார்.
தொடர்ந்து இறைவனையும், இறைவியையும் நினைத்து தவம் இருந்தார். எமதர்மனும், சனீஸ்வரனும் பிறந்த இந்த திருத்தலத்திற்கு வந்து வழிபடுவோருக்கு, எம வதையும், சனி உபாதையும் நீங்க வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்தித்தார். அதன்படியே அருள்வதாக இறைவனும், அகத்தியருக்கு அருளாசி வழங்கினார்.

இக்கோவிலில் தென் புறத்தில் எமதர்மராஜனும், வடப்புறத்தில் சனி பகவானும் அமைந்திருப்பது மற்ற எந்த ஒரு கோவிலிலும் இல்லாத சிறப்பு. இருவரும் ஒருங்கே அவதரித்த தலம் என்பதால், இருவரையும் ஒரே இடத்தில் காண்பது கிடைப்பதற்கரிய காட்சி. இரு சகோதரர்களும் ஒருங்கே நின்று வருகின்ற பக்தர்களுக்கு வேண்டிய வரத்தினையும், கிரகங்களால் ஏற்படும் தோஷங்களையும், மரண பயத்தையும் நீக்கி அருள்கிறார்கள்.
ஆலயத்தின் சிறிய நுழைவு வாசலைக் கடந்து உள்ளே சென்றால் நந்திதேவர் அருள்கிறார். இடதுபுறத்தில் எமதர்மனும், வலது புறம் சனீஸ்வரனும் உள்ளனர். கோவிலை சுற்றி வந்தால் விநாயகர், பாலசுப்பிரமணியர், விஜயலட்சுமி, சண்டீகேஸ்வர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் அகத்தீஸ்வரர், லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். அருகில் தெற்கு நோக்கியபடி ஆனந்தவல்லி அன்னை, ஆனந்த பரவசத்துடன் காட்சி தருகிறாள். மக்களின் துன்பத்தினை அகற்றி அனைவருக்கும் மகிழ்ச்சியை தருபவள் இந்த அன்னை. எனவே அன்னையின் கருணையை தேடி வரும் பக்தர்கள் ஏராளம்.
இந்தக் கோவிலில் அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகிறது. வியாழக்கிழமை தோறும் எமதர்மனுக்கும், சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம் உள்பட அனைத்து நிகழ்வுகளும் நடைபெறு கின்றன. இங்குள்ள எமதர்மன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், இழந்த பொருட்களையும், இன்பத்தையும் திரும்ப பெறலாம் என்பது நம்பிக்கை.
ஏழரைச் சனியின் பாதிப்பால் ஏற்படும் சகல தடைகளையும் இத்தலம் களைகிறது. எனவே இங்கு வந்து இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம், ஆராதனை செய்தால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். இத்தல இறைவனை வேண்டி உஷாதேவியும் சாயாதேவியும் புத்திரபேறு பெற்ற காரணத்தால், இத்தலம் குழந்தைப்பேறு வழங்கும் சிறப்பு தலமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு வந்து எள்ளு தீபம், நல்லெண்ணெய் விளக்கேற்றினால் அனைத்து தோஷங்களும் அகலும்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரளம் என்ற ஊர். இங்கிருந்து மேற்கே 2 கிலோமீட்டரில் திருமீயச்சூர் திருத்தலமும், அதன் அருகிலேயே கொடியலூர் திருத்தலமும் அமைந்திருக்கிறது. பேரளத்தில் இருந்து மினி பஸ் வசதி, ஆட்டோ வசதி உண்டு.

திருமீயச்சூர் ஆலயத்தில் லலிதா பரமேஸ்வரி தவக்கோலத்தில், மனோன்மணி சொரூபமாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள். கொடியலூரில் லலிதா பரமேஸ்வரி ஆனந்தவல்லியாக பரிபூரணமாக காட்சி தந்து அருளாசி வழங்குகிறாள். அன்னை ஒரே எல்லையில் திருமீயச்சூரில் அமர்ந்த கோலமாகவும், கொடியலூரில் நின்ற கோலமாகவும் இருந்து அருள் செய்வது மற்றொரு சிறப்பு.

இக்கோவிலில் தென் புறத்தில் எமதர்மராஜனும், வடப்புறத்தில் சனி பகவானும் அமைந்திருப்பது மற்ற எந்த ஒரு கோவிலிலும் இல்லாத சிறப்பு. இருவரும் ஒருங்கே அவதரித்த தலம் என்பதால், இருவரையும் ஒரே இடத்தில் காண்பது கிடைப்பதற்கரிய காட்சி. இரு சகோதரர்களும் ஒருங்கே நின்று வருகின்ற பக்தர்களுக்கு வேண்டிய வரத்தினையும், கிரகங்களால் ஏற்படும் தோஷங்களையும், மரண பயத்தையும் நீக்கி அருள்கிறார்கள்.
ஆலயத்தின் சிறிய நுழைவு வாசலைக் கடந்து உள்ளே சென்றால் நந்திதேவர் அருள்கிறார். இடதுபுறத்தில் எமதர்மனும், வலது புறம் சனீஸ்வரனும் உள்ளனர். கோவிலை சுற்றி வந்தால் விநாயகர், பாலசுப்பிரமணியர், விஜயலட்சுமி, சண்டீகேஸ்வர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் அகத்தீஸ்வரர், லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். அருகில் தெற்கு நோக்கியபடி ஆனந்தவல்லி அன்னை, ஆனந்த பரவசத்துடன் காட்சி தருகிறாள். மக்களின் துன்பத்தினை அகற்றி அனைவருக்கும் மகிழ்ச்சியை தருபவள் இந்த அன்னை. எனவே அன்னையின் கருணையை தேடி வரும் பக்தர்கள் ஏராளம்.
இந்தக் கோவிலில் அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகிறது. வியாழக்கிழமை தோறும் எமதர்மனுக்கும், சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம் உள்பட அனைத்து நிகழ்வுகளும் நடைபெறு கின்றன. இங்குள்ள எமதர்மன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், இழந்த பொருட்களையும், இன்பத்தையும் திரும்ப பெறலாம் என்பது நம்பிக்கை.
ஏழரைச் சனியின் பாதிப்பால் ஏற்படும் சகல தடைகளையும் இத்தலம் களைகிறது. எனவே இங்கு வந்து இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம், ஆராதனை செய்தால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். இத்தல இறைவனை வேண்டி உஷாதேவியும் சாயாதேவியும் புத்திரபேறு பெற்ற காரணத்தால், இத்தலம் குழந்தைப்பேறு வழங்கும் சிறப்பு தலமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு வந்து எள்ளு தீபம், நல்லெண்ணெய் விளக்கேற்றினால் அனைத்து தோஷங்களும் அகலும்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரளம் என்ற ஊர். இங்கிருந்து மேற்கே 2 கிலோமீட்டரில் திருமீயச்சூர் திருத்தலமும், அதன் அருகிலேயே கொடியலூர் திருத்தலமும் அமைந்திருக்கிறது. பேரளத்தில் இருந்து மினி பஸ் வசதி, ஆட்டோ வசதி உண்டு.
பாபநாசம் பாணதீர்த்தத்தின் அருகே சொரிமுத்து அய்யனார் கோவில் இருக்கிறது. இது ஒரு அய்யப்ப தலமாகும். சபரிமலைக்கும் முந்திய தலம் என்று இதனைக் கூறுவர்.
பொதிகை மலையில் விழும் மிகப் பெரிய அருவியே பாணதீர்த்தம். கோடை காலத்திலும் வற்றாத அருவி இது. இந்த புண்ணிய அருவியில் ஆடி அமாவாசை அன்று நீராடினால் பாவங்கள் விலகும். தாமிரபரணி ஆறு, பொதிகையில் இருந்து ஓடிவரும் போது 122 அடி உயரத்தில் இருந்து அருவியாக விழுகிறது.
இந்த அருவிக்குச் செல்ல தாமிரபரணி அணைக்குள் படகில் செல்ல வேண்டும். நீராடிவிட்டு மீண்டும் படகில் திரும்பிவிடலாம். இந்த தீர்த்தத்திற்கு ஒரு மகிமை உண்டு. இது உடலின் அழுக்கை மட்டும் போக்குவதில்லை. உயிரில் கலந்துள்ள அழுக்கையும் போக்குகிறது. இந்த அருவிக்கு திருநெல்வேலியில் இருந்து பொதிகை மலையில் உள்ள காரையார் வரை பஸ்சில் வரவேண்டும். பாபநாசத்தில் இருந்து காரையார் வரை மலைப்பாதை. காரையாரில் இருந்து கவனமாக படகில் 143 அடி கொள்ளளவு உடைய அணையைக் கடக்க வேண்டும்.
பாணதீர்த்தத்தின் அருகே சொரிமுத்து அய்யனார் கோவில் இருக்கிறது. இது ஒரு அய்யப்ப தலமாகும். சபரிமலைக்கும் முந்திய தலம் என்று இதனைக் கூறுவர். இங்கு சாஸ்தா சிவலிங்க வடிவமாகவும் காட்சி தருகிறார். இவரை வணங்குவதன் நோக்கம் காலத்தே மழைபெய்ய வேண்டும் என்பதுதான். இதனால் கிராம மக்களின் வருகை இங்கு அதிகமாக இருக்கும். மழை இல்லாத காலங்களில் இந்த அய்யனுக்கு பூஜை செய்தால் மழை பொழியும் என்பது ஐதீகம். அதனால் தான் இவர் சொரிமுத்து அய்யனார் என அழைக்கப்படுகிறார்.
ஆடி அமாவாசை திரு நாளில் பாணதீர்த்தத்தில் நீராடி உங்கள் பாவத்தை போக்கு வதோடு மட்டுமல்ல. ஊருக்கெல்லாம் மழை பொழிந்துகாடு, கழனி விளைந்திட வேண்டிக்கொண் டால் அய்யனின் அருள் நம் அனைவருக்கும் கிடைக்கும். அதற்கு ஏற்ற நன்னாளே இன்றைய ஆடி அமாவாசை திருநாள் இன்று மட்டுமல்ல. எல்லா அமாவாசை நாட்களி லும் இங்கு வந்து வழிபட்டு செல்லலாம்.
சிவனின் திருமணத்தின் போது உலகை சமநிலைப்படுத்த தென் பொதிகைக்கு அகத்தியர் வந்தது அனைவரும் அறிந்ததுதான். ஒரு நாள் அகத்தியர் தாமிரபரணில் கரையில் தவம் மேற்கொண்டிருந்த போது அசரிரீ ஒன்று, இப்போது வானில் ஒரு ஜோதி தோன்றும். அதை கவனி என்றது. அகத்தியரும் கண் விழித்துப்பார்த்தார்.
அப்போது சிவனுக்கும், பார்வதிக்கும், விநாயகர், முருகன், தர்மசாஸ்தா (சொரிமுத்து அய்யன்) ஆகியோர் பூஜை செய்த காட்சி தெரிந்தது. அப்படி தெரிந்த நாள் ஆடி அமாவாசை நாளாகும். மனமகிழ்ச்சி அடைந்த அகத்தியர் இந்த தலத்தில் ஆடி அமாவாசை அன்று யார் வந்து நீராடி இங்கு இருக்கும் சொரிமுத்து அய்யனை வழிபட்டால் சகல நலனும் கிடைக்கும் என்றார். அதனால் தான் ஆடி அமாவாசை இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை - பெரையார் சாலையில் உள்ளது சுமார் 1300 ஆண்டுகள் பழமையான ஐராவதேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மகாலட்சுமியிடம் இருந்து துர்வாச முனிவருக்கு ஒரு மலர் மாலை கிடைத்தது. அந்த மாலையை அவர், இந்திரனிடம் கொடுத்தார். ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மீது அமர்ந்தபடியே அந்த மாலையை வாங்கிய இந்திரன், மாலையை ஐராவதத்தின் தலை மீது வைத்தான்.
ஆனால் அந்த யானையோ, அந்த மாலையை தும்பிக்கையால் எடுத்து சுழற்றி தூக்கி வீசி எறிந்தது. இதனைக் கண்ட துர்வாச முனிவர் கடும் கோபம் கொண்டார். மேலும் “தேவலோகத்தில் வாழும் தகுதியை இழந்து, காட்டில் காட்டு யானையாக சுற்றித் திரிவாய்” என்று ஐராவதத்திற்கு சாபமும் கொடுத்தார். அதன்படி அது பூலோகம் வந்து காட்டு யானையாகத் திரியத் தொடங்கியது.
தனது சாபம் நீங்க ஐராவதம் பல சிவ தலங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டது. அதன் பலனாக அதன் சாபம் நீங்கியது. அதன் ஒரு பகுதியாக ஐராவதம் யானை மடப்புரம் என்ற தலத்திற்கும் வந்து இங்குள்ள இறைவனையும் வழிபட்டுள்ளது. எனவே மடப்புரத்தில் அருள்பாலிக்கும் இறைவன் ‘ஐராவதேஸ்வரர்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இங்கு வீற்றிருக்கும் இறைவியின் பெயர் அகிலாண்டேஸ்வரி.
இந்த ஐராவதேஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பைக் கடந்து உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம் காணப்படுகிறது. அதன் எதிரே நந்தியம்பெருமானும், பலிபீடமும் இருக்கிறது. அடுத்துள்ள மகாமண்டபத்தில் வலதுபுறம் இறைவி அகிலாண்டேஸ்வரியின் சன்னிதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னையின் வலதுகரத்தில் சக்கராயுதம் இருக்க, அன்னை தன் தலையை சற்றே வலப்புறம் சாய்த்தவாறு காட்சி தருகிறாள். முகத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கும் அன்னையை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அத்தனை அழகு.
அம்பாள் சன்னிதியின் எதிரே கருவறையில் இறைவன் ஐராவதேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி வீற்றிருக்கிறார். கருவறை தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, சிவ துர்க்கை ஆகியோர் திருமேனி உள்ளது. ஆலயத்தின் திருச்சுற்றில் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், நாகராஜர், நாகர், சூரியன் ஆகியோர் விற்றிருந்து அருள்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. வைகாசி விசாகத்தில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் இங்கு வெகு பிரசித்தம். ஐப்பசியில் கந்தசஷ்டி விழா ஆறு நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. ஆறாவது நாள் அம்பு போடும் உற்சவம் நடைபெறும். திருக்கல்யாண உற்சவத்தின் போது முருகப்பெருமானுக்கு சீர்வரிசை செய்து, மணமாலை சாத்தி பிரார்த்தனை செய்யும் பெண்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் திருமணம் நடைபெறுவது நிச்சயம் என்கிறார்கள்.
இத்தல இறைவனுக்கு சிவராத்திரியில் நான்கு கால பூஜையும், ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகமும் சிறப்பாக நடத்தப்படுகிறது. கார்த்திகை மாத சோமவார நாட்களில் இறைவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மூன்றாவது சோமவாரம் அன்று இறைவனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும்.
மாதந்தோறும் வரும் பிரதோஷங்கள் பல நூறு பக்தர்கள் சூழ வெகு சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதம் 30 நாட்களும் இறைவன், இறைவிக்கு தனுர்பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனை தினம் ஒரு அலங்காரம் செய்து வைத்திருக்கும் காட்சியை காணவே கண் கோடி வேண்டும்.
ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அம்மன் சன்னிதியில் நடைபெறும் விளக்கு பூஜையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறுவர். அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு மூன்று வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து 9 எலுமிச்சைப் பழத்தில் விளக்கு ஏற்றி வழிபட குடும்ப ஒற்றுமை வளரும்.
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன், சன்னிதியின் முன் கணபதி ஹோமமும் நடத்தப்படுகிறது. விநாயகப் பெருமானுக்கு 108 விடலை தேங்காய் விட்டு பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.
நடராஜப் பெருமானுக்கு திருவாதிரை, திருமஞ்சன நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் அபிஷேக ஆராதனைகளும் நடக்கிறது. சனிப்பெயர்ச்சியின் போது சனிபகவான் முன்பும், குருப்பெயர்ச்சியின்போது தட்சிணாமூர்த்தி முன்பும் ஹோமம் வளர்த்து அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது.
மாட்டுப்பொங்கல் அன்று ஊரில் உள்ள மாடுகள் அனைத்தும் கோவிலின் முன் உள்ள திடலில் கூடும். மாடுகளுக்கு தீபாரதனை காட்டுவார்கள். பின் ஊர் மக்கள் அனைவரும் கூட்டமாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அங்கு உள்ளோரை வாழ்த்திவிட்டு வருவார்கள். முதியோர்களிடம் ஆசி பெற்று திரும்பும் காட்சி எங்கும் காண இயலாத காட்சியாகும்.
ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் ஓர் அழகிய வசந்த மண்டபம் உள்ளது. தங்கள் வீட்டு நிச்சயதார்த்தம், காது குத்துதல், சீமந்தம், திருமணம், திருமண வரவேற்பு போன்ற அனைத்து சுப காரியங்களை இந்த மண்டபத்திலேயே நடத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு பொருட்செலவு மிகவும் குறைவதுடன் அலைச்சலும் மிச்சமாகிறது. இந்த மண்டப பயன்பாட்டிற்கு அவர்கள் ஆலயத்திற்கு ஒரு சிறு தொகையை காணிக்கையாக தந்து மகிழ்கின்றனர்.
சுமார் 1300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், ஊர் மக்களின் பெரு முயற்சியாலும், இந்து அறநிலையத் துறையின் ஒத்துழைப்பாலும் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
மடத்து குளம்
ஆலயத்தின் எதிரே உள்ளது மடத்து குளம் என அழைக்கப்படும் ஆலய தீர்த்தக் குளம் உள்ளது. இந்த குளத்தின் மேற்குப்பகுதியில் ஒரு கட்டிடம் மடமாக இருந்தது. அதில் மரத்தடி சாமியார் என்ற ஒரு சாமியார் தங்கியிருந்தார். அவர் அங்கிருந்த புளியமரத்தின் கீழ் ஒரு கீற்றுக்கொட்டகை அமைத்து, சிலைகளை பிரதிஷ்டை செய்து, அந்த சிலைகளுக்கு 1888 -ம் ஆண்டு வரை பூஜை செய்து வந்தார். அவரது மறைவுக்குப்பின் காலப்போக்கில் கட்டிடம் இருந்த இடம் தெரியாமல் இடிந்து போய்விட்டது.
பின்னர் அந்த சிலைகளும் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். இது செவி வழி தகவல். இதனாலேயே இத்திருக்குளம் மடத்துக்குளம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஊரெல்லாம் வறட்சி ஆக்கிரமிப்பு செய்திருந்த காலகட்டங்களில் கூட இந்தக் குளத்தில் நீர் ததும்பி காணப்பட்டது என்பது சிலிர்க்க வைக்கும் உண்மை.
அமைவிடம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை - பெரையார் சாலையில் செம்பனார் கோவிலுக்கு கிழக்கே உள்ளது காளஹஸ்தி நாதபுரம். இந்த ஊரில் இறங்கி ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தால் மடப்புரம் கிராமத்தை அடையலாம்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழீச்சுவரமுடையார் ஆலயத்தின் தென்மேற்கில் அரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கணக்க விநாயகர் ஆலயம்.
கணபதி மூலாதார சக்தியின் வடிவமாகும். ‘க’ என்பது ஞானத்தையும், ‘ண’ என்பது மோட்சத்தையும், ‘பதி’ என்பது இருப்பிடத்தையும் குறிப்பதாகும். ஞானத்திற்கும் வீடுபேற்றிற்கும் அதிபதி என்பதால், இவர் ‘கணபதி’ எனப்பட்டார். இவர் கணங்களின் தலைவனாக இருந்தமையால் ‘கணபதி’ என ரிக் வேதமும், யானை முகத்தைக் கொண்டிருந்தமையால் ‘யானைமுகத்தான்’ என அதர்வணவேதமும், ஒற்றைக் கொம்பை கொண்டிருந்ததால் ‘ஒற்றைக்கொம்பன்’ என தைத்ரிய உபநிஷத்தும் கூறுகின்றன. இவர் வினைகளை அழிக்கும் தலைமை நாயகர் என்பதால் ‘விநாயகர்’ என்றும், விக்னங்களை தீர்ப்பவர் என்பதால் ‘விக்னேஸ்வரர்’ என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
சிவபெருமான் 64 வடிவங்களைக் கொண்டிருப்பது போல, கணபதி 32 வடிவங்களை கொண்டுள்ளார். சிவாலயம் இல்லாத ஊர் இருக்கலாம்; ஆனால் விநாயகர் கோவில் இல்லாத ஊரை காண்பது அரிது. விநாயகர் வழிபாட்டின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையே இதற்கு காரணம் என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு கடவுளையும் வணங்கும்போது அவருடைய உருவம் அல்லது படத்தை வைத்து வழிபடுவது நடைமுறை. ஆனால் விநாயகரை வழிபட உருவமோ அல்லது படமோ தேவையில்லை. அவரை நினைத்து மண், சாணம், மஞ்சள், வெல்லம் இப்படி ஏதாவது ஒன்றை கைப்பிடி அளவு பிடித்து வைத்தாலே போதும். அது கணபதியின் உருவமாகி விடும்.
பண்டைய மன்னர்கள் ஆலயத்தையும், ஆலய வழிபாட்டையும் மையமாக வைத்தே ஆட்சி புரிந்தனர். அதனால் அவர்களது ஒவ்வொரு செயலும் இறை வணக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டது. எந்த இறைவனை உயர்வான சக்தியாக கருதினார்களோ, அந்த இறைவனுக்கே ஆலயம் எழுப்பும்போதும் அதை கடைப்பிடிக்க தவறியதில்லை. கங்கை நதி வரை படையெடுத்துச் சென்று மாபெரும் வெற்றியைப் பெற்று அதன் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் என்னும் ஊரையும், சோழகங்கம் என்னும் ஏரியையும், கங்கைகொண்ட சோழீச்சுரம் என்னும் ஆலயத்தையும் நிர்மாணித்த ராஜேந்திரசோழன் அவைகளுக்கெல்லாம் முதற்பணியாக ஒரு விநாயகர் திருக்கோவிலை எழுப்பினான்.
கங்கைகொண்ட சோழீச்சுவரமுடையார் கோவிலுக்கு கன்னிமூலையில் (தென்மேற்கு திசையில்) விநாயகர் ஆலயத்திற்கான கட்டுமானப் பணியை மேற்கொண்ட ராஜேந்திர சோழன், கங்கை படையெடுப்பின் போது தான் கொண்டு வந்த விநாயகர் சிலையை அங்கு பிரதிஷ்டை செய்தான். அந்த விநாயகருக்கு ‘கனக விநாயகர்’ என்று பெயரிட்டு கும்பாபிஷேகமும் செய்வித்தான். இவ்வாலயத்தில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலை வாதாபியில் இருந்தும், நுளம்பர் நாட்டில் இருந்தும் கொண்டு வரப்பட்டதாக இருவிதமான வரலாற்றை முன்வைக்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். இந்த கனகவிநாயகர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட பிறகுதான், கங்கைகொண்ட சோழீச்சுரம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
கங்கைகொண்ட சோழீச்சுரத்தின் திருப்பணி அமைச்சர் ஒருவர் ஒருங்கிணைப்பிலும், அவருக்கு கீழே கணக்கர் ஒருவர் மேற்பார்வையிலும் தடையின்றி நடைபெற்று வந்தது. திருப்பணிக்காக செலவிடப்படும் பொன்- பொருட்களை கையாளவேண்டியது கணக்கரின் பணியாகும். அரண்மனை கருவூலத்தில் அனுதினமும் பொன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் கணக்கர், அவற்றை கனக விநாயகர் திருவடியின் முன்வைத்து வணங்கிய பிறகே, ஆலயத் திருப்பணிகளுக்காக செலவிடுவார். இப்படியே இடைவிடாமல் 16 ஆண்டு காலம் ஆலய கணக்கரின் மேற்பார்வையில் திருப்பணி மும்முரமாக நடைபெற்று வந்தன.
ஒரு நாள் ஆலயத் திருப்பணியை பார்வையிட மன்னன் ராஜேந்திரன் வந்தான். ஆலயம் கம்பீரமாக எழும்பிக் கொண்டிருப்பது கண்டு பரவசமடைந்தான். பின் கணக்கரிடம், “திருப்பணி செலவுக்குரிய கணக்கை நாளைக் காலை தெரிவியுங்கள்” என கூறிவிட்டுச் சென்றான்.
ஆலய மேற்பார்வை செய்த கணக்கருக்கு தூக்கிவாரிப் போட்டது. திருப்பணிக்குத் தேவையான செலவைத்தவிர வேறு எந்த செலவும் செய்யாததாலும், காலை முதல் இரவு வரை ஆலயப் பணியிலேயே முழுமையாக ஈடுபட்டிருந்ததாலும் அவருக்கு கணக்கு எழுத நேரமில்லாமல் போனது. மேலும் அரசனும் இதுநாள் வரை கணக்குக் கேட்காததால் வரவு செலவு கணக்கை அவர் எழுதி வைக்க நினைக்கவில்லை. ஆனால் மன்னன் கேட்ட பிறகு கொடுத்துதானே ஆகவேண்டும். பதினாறு வருட கணக்கை தயார் செய்வது எப்படி என்றெண்ணி கவலைப்பட்டவர், தம்மை தெய்வம்தான் காக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் கனக விநாயகர் சன்னிதிக்கு ஓடோடி வந்தார்.
“பெருமானே! மன்னர் திடீரென கணக்குக் கேட்கிறார். நான் என்ன செய்வேன்? தாங்கள்தான் இதற்கு வழிகாட்ட வேண்டும்” என கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்துவிட்டு, நடப்பது நடக்கட்டும் என்பதாக இல்லம் சென்றார்.
அன்றிரவு கணக்கர் கனவில் தோன்றிய கனக விநாயகர், “கணக்கரே! வருந்தாதீர். நாளை மன்னரை சந்தித்து, ‘இதுநாள் வரை எத்து நூல் என்பது லட்சம் பொன் செலவானது’ என கூறுங்கள்” என அருளி மறைந்தார்.
கண்விழித்த அமைச்சர் கனக விநாயகர் சன்னிதி நோக்கி கைகூப்பி வணங்கினார். உடனே ஓலைச் சுவடியை எடுத்து அதில் ‘எத்து நூல் என்பது லட்சம் பொன்’ என்று எழுதி வைத்துவிட்டு உறங்கிவிட்டார். மரவேலை, சுவர் வேலை செய்யும்போது வளைவு வராமல் இருப்பதற்காக பயன்படுத்தும் நூலை ‘எத்துநூல்’ என்பர். இதைக்கொண்டே ஒவ்வொரு கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்படும் கல், மரம், மணல், மற்றும் இதர பொருட்கள் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என கணக்கிட்டுவிடலாம். பண்டைய கோவில் கட்டுமானத்தில் எத்து நூல் முக்கிய இடத்தை வகித்துள்ளது.
மறுநாள் மன்னரிடம் வந்த கணக்கர், விநாயகர் கனவில் சொன்னபடி கூறினார். அதைக் கேட்ட மன்னன் “இவ்வளவு செலவானதென்றால் நான் நினைத்தாற்போல கோவில் சிறந்த முறையில்தான் உருவாகிவருகிறது. மகிழ்ச்சி! கணக்கரே, எப்படி நீங்கள் இவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னீர்கள்” என்று கேட்டான்.
நடந்த உண்மைகளை கணக்கர் அப்படியே கூறிவிட்டார். ஆச்சரியமடைந்த மன்னன் உடனடியாக கனக விநாயகர் சன்னிதிக்குச் சென்று கண்ணீர் மல்க வணங்கினான்.
“விநாயகப் பெருமானே கணக்கு தெரிவித்து, பிரகதீஸ்வரர் ஆலயம் எழும்ப ஆசி வழங்கிவிட்டார். அவ்விதத்தில் கனகவிநாய கரான இவர், ஆலயப் பணியின் கணக்குப் பிள்ளையார் ஆகிவிட்டார்” என பெருமிதத்துடன் கூறினான்.
இந்த அற்புத விநாயகரை பிற்காலத்தில் எவரேனும் வேறு இடத்திற்கு மாற்றிவிடக்கூடாது என்று நினைத்த மன்னன், 4 அடி உயரம், 3 அடி அகலமுடைய இந்த விநாயகரின் சன்னிதி முன் மிகச்சிறிய நுழைவு வாசலைக் கட்டினான். அந்நியர் படையெடுப்பு நடந்தபோது, பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கும் இந்த கனக விநாயகர் ஆலயத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கு இந்த கனக விநாயகரின் அருளே காரணமாகும்.
கணக்கரை காப்பதற்காக கணக்குரைத்த கனக விநாயகர் அன்றுமுதல் ‘கணக்கு விநாயகர்’ என்று அழைப்படலானார். இதுவே காலப்போக்கில் கணக்க விநாயகர் என்றாகிப் போனது. கங்கைகொண்ட சோழபுரத்தை தனது தலைநகராக மாற்றிக் கொண்டு இங்கிருந்தவாறே ஆட்சியை தொடர்ந்த சோழ மன்னன் அனுதினமும் கணக்க விநாயகர் ஆலயம் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான். போர்க்களம் செல்வது முதல் எந்தவொரு வேலையையும் செய்யும் முன்பாக, அவன் வழக்கமாக வழிபடும் முக்கிய கோவில்களில் கணக்க விநாயகர் கோவிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. அவ்வாலய வழிபாடு அவனுக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்தது.
வழிபாட்டு பலன்
சுமார் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்ததும், வடதிசை பார்த்து அமைந்ததுமான இந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்யும் போது, இவரின் திருமேனி பச்சைநிறமாக மாறுவது தனிச் சிறப்பாகும். மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரிது என்பதற்கேற்ப, சிறிய ஆலயம் என்றாலும் அளவற்ற அருளும் ஆற்றலும் தரும் ஆலயமாக இது திகழ்கிறது. புதிதாக ஆலயம் கட்டும் முயற்சியில் ஈடுபடுவோர், ஏற்கனவே உள்ள ஆலயத்தை புதுப்பிக்க நினைப்போர், சொந்தமாக வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் புதிதாக வணிகம் தொடங்குவோர், ஏற்கனவே செய்துவரும் வணிகத்தில் சரிவை சந்திப்பவர்கள், கல்வியில் மேன்மை பெற விரும்புபவர்கள், இந்த விநாயகரை வழிபட்டு பலனும் பலமும் பெறலாம்.
குறிப்பாக கங்கைகொண்ட சோழபுரம் செல்பவர்கள், ஒரு வெற்றிச் சின்னத்தின் வரலாற்றில் இடம் பிடித்துள்ள இந்த விநாயகரை அவசியம் தரிசித்தல் வேண்டும்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழீச்சுவரமுடையார் ஆலயத்தின் தென்மேற்கில் அரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கணக்க விநாயகர் ஆலயம். இங்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது. நடந்தும் ஆலயத்தை அடையலாம்.
நெய்வாசல் நெடுஞ்செழியன்

திருச்சிராப்பள்ளி பெரிய கடை வீதியில் உள்ள ‘அக்க சாலை விநாயகர்’ ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ராணி மங்கம்மாவின் ஆட்சி காலத்தில் பொற்காசுகள் செய்வதற்காக திருச்சிராப்பள்ளியில் ஓரிடத்தை நிர்மாணம் செய்திருந்தார்கள். அங்கு நிறைய பட்டறைகள் அமைத்து பொற்காசுகளை செய்யத் தொடங்கினர். அந்த பட்டறைகள் இருந்த இடம் ‘அக்க சாலை’ என அழைக்கப்பட்டது. அந்த சாலையில் ஓரிடத்தில் ஒரு பிள்ளையார் சிலையை பிரதிஷ்டை செய்து வணங்கத் தொடங்கினர். காலப் போக்கில் அது ஒரு அழகிய ஆலயமாக உருவானது. ஆந்த ஆலயமே தற்போது பெரிய கடை வீதியில் உள்ள ‘அக்க சாலை விநாயகர்’ ஆலயம்.
சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் நீண்ட மகா மண்டபம் உள்ளது. அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலின் இடது புறம் விஸ்வகர்மாவும், வலது புறம் காயத்ரி தேவியும் அருள் பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் இடது புறம் சிவபெருமான் திருமேனியும், வலதுபுறம் பார்வதியின் திருமேனியும் உள்ளன.
அடுத்துள்ள கருவறையில் அக்க சாலை விநாயகர் பிரமாண்டமாய் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். இங்கு விநாயகப் பெருமானின் திருமேனி மிகப் பெரியதாக இருக்கிறது. விநாயகரின் துதிக்கை இடது புறம் வளைந்து இருக்க அவர் இடையில் பெரிய நாகத்தை நாகாபரணமாக அணிந்திருக்கிறார். இந்த நாகாபரணத்தை நாம் அபிஷேக நேரத்தில் மட்டுமே காண இயலும். இந்த அக்க சாலை விநாயகரின் சக்தி அபரிதமானது என்கின்றனர் பக்தர்கள்.
ஆண்டு முழுவதும் விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் குறைவின்றி நடந்து வருகிறது. மாதம் தோறும் வளர்பிறை சதுர்த்தியில் காலையில் பல நூறு பக்தர்கள் சூழ கணபதி ஹோமம் நடக்கிறது. மாலையில் விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் ஜொலிப்பார். அத்துடன் அன்று ஆன்மிகப் பெரியவர்களின் ஆன்மிக சொற்பொழிவும் நடைபெறும். விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து புத்தாடை அணிவித்து, தேங்காய்களை மாலையாகக் கட்டி சாத்தி வேண்டிக்கொண்டால் திருமணத் தடை விலகி, விரைவில் திருமணம் நடைபெறும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. நாகாபரணம் அணிந்த இந்த விநாயகருக்கு, பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் நாக தோஷம் விலகும் என்கிறார்கள்.
குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் இப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை விநாயகர் சன்னிதியில் அமரச் செய்து அரிசி நிரவிய தட்டில் ‘அ’ என்ற எழுத்தை எழுதச் செய்து பின்னரே பள்ளிக்கு அனுப்பும் பழக்கம் இன்னும் உள்ளது. திருமணத்திற்கு தாலி செய்வதற்கு முன் உருக்கிய தங்கத்தை விநாயகர் பாதத்தில் வைத்து ஆராதனை செய்து வணங்கி, பின்னரே தாலி செய்யும் பழக்கம் இன்றும் இப்பகுதி மக்களிடம் காணப்படுகிறது.
இங்கு விநாயகருக்கு குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள் தாங்கள் பிறந்த நட்சத்திரம் அன்று, அபிஷேகம் செய்து வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கிறதாம். அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் சந்தனாதி தைலம் மற்றும் நல்ல எண்ணெயிலும், பரணியில் பிறந்தவர்கள் பச்சரிசி மாவிலும், கார்த்திகைக்காரர்கள் நெல்லி பொடியிலும், ரோகிணிக்காரர்கள் மஞ்சள் பொடியிலும், மிருகசீரிஷக்காரர்கள் திராவியப் பொடியிலும், திருவாதிரையில் பிறந்தவர்கள் பஞ்ச கவ்யம் கொண்டும் அபிஷேகம் செய்ய வேண்டும். புனர்பூசத்தில் பிறந்தவர்கள் கல்கண்டு, திராட்சை, பேரீட்சை, நாட்டு சர்க்கரை, வாழைப்பழம் கலந்த பஞ்சாமிர்தத்திலும், பூசத்தில் பிறந்தவர்கள் மா, பலா, வாழை என்ற முக்கனியிலும், ஆயில்யக்காரர்கள் பாலிலும், மகத்தில் பிறந்தவர்கள் தயிரிலும், பூரத்தில் பிறந்தவர்கள் நெய்யிலும், உத்திரக்காரர்கள் நாட்டு சர்க்கரையிலும், அஸ்தத்தில் பிறந்தவர்கள் தேனிலும், சித்திரைக்காரர்கள் கரும்பு சாற்றிலும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
சுவாதியில் பிறந்தவர்கள் எலுமிச்சை பழ சாற்றிலும், விசாகத்தில் பிறந்தவர்கள் இளநீரிலும், அனுஷத்தில் பிறந்தவர்கள் அன்னம் கொண்டும், கேட்டை நட்சத்திரக்காரர்கள் விபூதியிலும், மூலத்தில் பிறந்தவர்கள் சந்தனத்திலும், பூராடத்தில் பிறந்தவர்கள் பாலிலும், உத்திராடக்காரர்கள் தயிரிலும், திருவோண நட்சத்திரக்காரர்கள் விளாம் பழத்திலும், அவிட்டத்தில் பிறந்தவர்கள் சந்தனம் மற்றும் பன்னீரிலும், சதயத்தில் பிறந்தவர்கள் பன்னீரிலும், பூரட்டாதியில் பிறந்தவர்கள் சொர்ணத்திலும் (தங்க காசுகள்), உத்திரட்டாதியில் பிறந்தவர்கள் வெள்ளி காசு மற்றும் ஆபரணங்களாலும், ரேவதியில் பிறந்தவர்கள் புனித நீராலும் அக்க சாலை விநாயகரை அபிஷேகம் செய்ய வேண்டும்.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
திருச்சி மையப் பகுதியான காந்தி மார்க்கெட்டின் அருகில் உள்ளது அக்கசாலை விநாயகர் ஆலயம். சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்தில் பயணித்து மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் நடந்தே சென்று விடலாம்.