என் மலர்
முக்கிய விரதங்கள்
விநாயகர் அருள் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விநாயகர் அருள் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள்.
1. வைகாசி வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம்.
2. செவ்வாய் விரதம்- ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும்.
3. சதுர்த்தி விரதம்-பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது காரியத்தடைகள் நீங்கும்.
4. குமாரசஷ்டி விரதம்-கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழிவரை பிறை சஷ்டி வரை 21 தினங்கள் செய்வர். 21 இலைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வர். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்ற பெயர் உண்டு.
5. தூர்வா கணபதி விரதம்- கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி செய்வது வம்சவிருத்தி ஏற்படும்.
6. சித்தி விநாயக விரதம்- புரட்டாசி வளர்பிறை 14-ம் திதியான சதுர்தகி திதியில் விரதம் இருப்பது எதிரிகள் விலகுவர்.

7. தூர்வாஷ்டமி விரதம்- புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது உடல் வலிமை உண்டாகும்.
8. விநாயக நவராத்திரி- ஆவணி வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்வது விநாயக நவராத்திரி.
9. வெள்ளிப்பிள்ளையார் விரதம்- ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்குதல். இந்த விரத பூஜையை பெண்கள் செய்ய வேண்டும். எண்ணங்கள் நிறைவேறும் படி செய்வது.
10. செவ்வாய் பிள்ளையார் விரதம்- ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொதுஇடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசு சாணத்தால் உருவம் செய்து புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் அவரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்றும் இப்பூஜை செய்வர். குமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டியில் அமைந்துள்ள ஒளவையார் கோவிலில் விசேஷமாகக் செய்யப்படுகிறது. செல்வச்செழிப்புடன் வாழ இந்த பூஜை வழிசெய்வதாக பெண்களின் நம்பிக்கை.
11. அங்காரக சதுர்த்தி விரதபூஜை- பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன.

இன்றும் தஞ்சை மக்களில் பலர் எந்த ஊரில் இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வதும், ஆவணி ஞாயிறு அன்று பக்தி சிரத்தையுடன் இருப்பதையும் பார்க்கலாம்.
பண்டையத் தமிழர்களின் சக்தி வழிபாட்டில் மாரியம்மனுக்கே முதலிடம். மாரி எனில் ‘மழை’ என்ற பொருள் தருவதால் மழை பெறவும், நோய் பயம் நீங்கவும், பக்க துணையாக நிற்கவும், ஆகம முறைகள் தோன்றும் முன்னுரே கிராமங்கள் தோறும் மாரிக்குக் கோவில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தின் தாய் தெய்வம் மாரியம்மன் எனில் மிகை இல்லை. திருச்சி சமயபுரம், பண்ணாரி, திருவேற்காடு என்ற வரிசையில் தஞ்சை புன்னை நல்லூரும், மக்களின் மனதில் இடம் பிடித்த பிரார்த்தனை தலமாகும்.
சோழர்களும், நாயக்கர்களும், மராட்டியர்களும் ஆட்சி செய்த தஞ்சை மண்ணில் கிழக்கு திசை காவல் தெய்வமாக புன்னைநல்லூர் முத்துமாரி, புகழோடு விளங்குகிறாள். மாரியம்மா, மாரியாத்தா, மகமாயி என்பதெல்லாம் மக்களின் அன்பு அழைப்புகள்.

ஞாயிறு விரதம்:
எல்லா அம்மன்களுக்கும் வெள்ளிக்கிழமையும் ஆடிமாதமும் விசேஷம் என்றால் தஞ்சை முத்துமாரிக்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளும், ஆவணி மாதமும் விழாக்காலம் ஆகும். ஆவணி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழாவும், திருத்தேரும், தெப்பமும் உற்சவமும் பரவசப்படுத்தும்.
இன்றும் தஞ்சை மக்களில் பலர் எந்த ஊரில் இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வதும், ஆவணி ஞாயிறு அன்று பக்தி சிரத்தையுடன் இருப்பதையும் பார்க்கிறோம்.
கோவிலில் கூட்டம் அதிகாலையிலிருந்தே அலைமோதும் மகளிர், ஆண்கள் மட்டுமல்லாது குழந்தைகள் கூட தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் ஞாயிறு இரவு கோவில் மண்டபங்களிலும், பிரகாரங்களிலும் படுத்துறங்கி காலையில் எழுந்து அம்மன் திருவடி தொழுது வீடு திரும்புவார்கள்.
அதுவும் ஆவணி ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம் அவ்வளவு கூட்டம் கோவில் நிரம்பி வழிந்து குளக்கரைகளிலும் கோவிலுக்கு வெளியே உள்ள இடங்களிலும் குடும்பத்துடன் படுத்து உறங்கி நேர்த்தி கடனைச் செலுத்துகிறார்கள்.

சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை அன்று சோமவார விரதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கலாம்.
நாம் தொடர்ச்சியாக 14 ஆண்டுகள் சோமவார விரதத்தைக் கடைப்பிடித்தால், இறைவனின் திருப்பாதத்தை அடையலாம்.
சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை அன்று சோமவார விரதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கலாம். ஆண், பெண் இருவரும் கடைப்பிடிக்கக்கூடிய விரதங்களில் இதுவும் ஒன்று. சிவபூஜை செய்வதற்கு முன்பாக மஞ்சள்பொடி, குங்குமம், சந்தனம், பூமாலை, உதிரிப்பூக்கள், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, பஞ்சு, நல்லெண்ணெய், கற்பூரம், வெல்லம், மாவிலை, வாழைப்பழம், அரிசி, தேங்காய், தயிர், தேன், தீப்பெட்டி, பூணூல், வஸ்தரம், அட்சதை (பச்சரிசியுடன் மஞ்சள்பொடி கலந்து), பஞ்சாமிர்தம், திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால் ஆகியவற்றை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, தேங்காய் உடைத்து, விநாயகரை வழிபட்டு சங்கல்பம் செய்ய வேண்டும். பிறகு கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி கலந்து கலசத்துக்கு மேலே மாவிலைக் கொத்தை செருகி, மையத்தில் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகே பூஜையை தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும். தொடர்ந்து சிவ நாமங்களை பாராயணம் செய்து, தீபாராதனை காட்ட வேண்டும்.
பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை, பார்வதி- பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். புதுவேட்டி, ரவிக்கை துணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம், தட்சணை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து அவர்களிடம் இருந்து ஆசிபெற்றால் நாளும் சிறப்பு வந்து சேரும்.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா அடுத்த மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினார்க்ள்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்து 2-ம் இடமாகவும்,தமிழகத்தில் முதலிடமாகவும் திகழும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந் திருவிழா இந்த வருடம் அடுத்த மாதம் செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 30-ம் தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது.
தங்களின் வேண்டுகோள் நிறைவேற லட்சக்கணக்கான பக்தர்கள் விரதத்தை தொடங்குவார்கள். தற்போது விரதம் தொடங்கும் பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து பூசாரி கையினால் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர். தினசரி 100-க்கு மேற்பட்டவர்களும் வெள்ளி, செவ்வாய் மற்றும் விடுமுறை நாட்களில் 1000-க்கு மேற்பட்டவர்களும் மாலை அணிந்து விரதம் தொடங்கி வருகின்றனர்.
விரதம் தொடங்கியவர்கள் கோவிலில் கொடியேறியதும் தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூல் செய்வார்கள். மேலும் கலை நிகழ்ச்சிகளுடன் இணைந்து தசரா குழு அமைத்து ஊர் ஊராகச் சென்று கலை நிகழ்ச்சி நடத்தி காணிக்கை வசூல் செய்வார்கள்.
அம்மன் பெயரில் வசூலித்த காணிக்கைகள் மற்றும் பொருட்களை செப்டம்பர் 31-ம் தேதி கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள்.அன்றைய நாளில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். இவர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், கழிப்பிடம்,பாதுகாப்பு உட்பட பல்வேறு பணிகளை மாவட்ட நிர்வாகமும். அறநிலையத்துறையினரும் இப்போதே செய்ய தொடங்கியுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விரதத்தை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள்.
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களாகிய உள்ளத்தையும் உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் விநாயகர் பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்தவித தடைகளும் இல்லாமல் அருள்புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
பின் தங்கத்தாலோ அல்லது தாமிரத்தாலோ அல்லது படத்திலோ விநாயகர் செய்து பூஜை செய்ய வேண்டும். விதிமுறைப்படி நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயாரித்து கொண்டு விநாயகருக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.
மேலும் தரித்திரம் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றை சக்திக்கேற்றவாறு தானம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
இவ்வாறு பூஜை செய்து வந்தால் விநாயகப் பெருமான் கட்டாயம் வேண்டிய வரங்களைத் தருவார்.
விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும். பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள்.
விநாயகர் விரதத்தை ஸ்ரீகற்பக விநாயகர் வீற்றிருக்கும் பிள்ளையார்பட்டியிலும் மற்றும் திருவலஞ்சுழி (கும்பகோணம்), உப்பூர் (ராமநாதபுரம்), ஈச்சனாரி (கோயம்புத்தூர்) ஆகிய இடங்களில் செய்யலாம். சிலர் இந்த இடங்களில் விரதத்தை தொடங்கியும் அதே இடங்களில் நிறைவு செய்வதும் உண்டு. இவ்வாறு செய்ய இயலாதவர்கள் அவரவர் ஊர்களில் உள்ள கோவில்களிலும், வீடுகளிலும் விரதத்தை கடைபிடிக்கலாம். எங்கு விரதம் இருந்தாலும் அதற்கேற்ற பலன் உண்டு.

காரியத்தில் தடங்கலோ, தாமதமோ ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்வதற்காக விநாயகரை வழிபட, உடனே அக்காரியத்தில் விநாயகர் வெற்றியை நல்குவார்.
விநாயகரை சிறப்பாகப் பூசிக்கும் நாள் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி என்னும் நான்காம் நாள் ஆகும். அதற்கு விநாயகர் சதுர்த்தி என்று பெயராகும்.
வைகாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமைதோறும் விரதம் இருப்பவர்களும் உண்டு. கார்த்திகை மாதத்தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்களும் விநாயகர் விரதம் கொண்டாடுவார்கள்.
விநாயகர் சதுர்த்தி விரதத்தை நாற்பத்து ஐந்து நாட்கள் அனுசரிக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்து நீராடிய பின்பு பூஜை செய்ய வேண்டும். பூஜைக்கு உரிய பொருட்கள்- நல்லெண்ணெய், பசும்பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம், குங்குமம், பூ முதலியவை.
முதலில் கன்றுக்குட்டி சாணத்தால் பிள்ளையார் ஒன்று செய்து கொள்ள வேண்டும். இதை பூஜை ஆரம்பிக்கும் அன்று செய்யக்கூடாது. இந்த ஒரே பிள்ளையாரைத்தான் நாற்பது ஐந்து தினங்களுக்கும் பூஜை செய்ய வேண்டும். எனவே பத்திரமாகக் கையாள வேண்டும்.
குளித்து முடித்து சுத்தமான உடை உடுத்தி விளக்கேற்றி வைத்து, பிள்ளையாரை ஒரு சிறு மேடையில் வைக்க வேண்டும். பிறகு அபிஷேகத்தை தொடங்கலாம்.
முதலில் நல்லெண்ணெய் அபிஷேகம் முறைப்படி செய்தல் வேண்டும். பிறகு பால் அபிஷேகம், தயிர் அபிஷேகம், பழச்சாறு அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம் எல்லாம் செய்து முடித்து பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் முதலியவற்றால் பொட்டு இட்டு பூ சூட்டவும்.
தேங்காயை உடைத்து வைத்து ஏதாவது ஒரு நைவேத்தியம் செய்யவும். எளிமையான முறையில் அமைய வேண்டும் என்று நினைத்தால் வாழைப்பழம், சர்க்கரை முதலியவற்றை நைவேத்தியத்திற்குப் பயன்படுத்தலாம். பிறகு தீபாராதனை செய்யவும்.
விநாயகர் கவசம், விநாயகர் துதிப்பாடல்கள் முதலியவற்றைப் பாராயணம் செய்தல் வேண்டும். பாராயணத்தை முடித்த பின் மறுபடியும் கற்பூர ஆரத்தி செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
காரியத்தில் தடங்கலோ, தாமதமோ ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்வதற்காக விநாயகரை வழிபட, உடனே அக்காரியத்தில் விநாயகர் வெற்றியை நல்குவார். இது மட்டுமல்ல, விநாயகருக்குள் சகல சக்திகளும் அடக்கம். ஆதலால் அவர் சகல சவுபாக்கியங்களையும் தருவதுடன் முக்தியும் அருளுவார்.

விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் விநாயகரின் அருள்பெற்று அனைத்து நலன்களையும், சுகங்களையும் பெறுவர். வாழ்க்கையில் துன்பம், இடைஞ்சல்கள் வராது.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறைகளுக்கு அடுத்த 4-ம் நாள் சதுர்த்தி திதி வரும். இந்த சதுர்த்தி திதியானது விநாயகப்பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தி தினம் ‘விநாயகர் சதுர்த்தி’யாக கொண்டாடப்படுகிறது. இது விநாயகப்பெருமான் அவதரித்த நாள் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
‘ஓம்’ எனும் பிரணவ மந்திரமே உலகத்தின் ஆதாரமாக அமைந்துள்ளது. ‘ஓம்’ எனும் வடிவாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
‘விநாயகர்’ என்றால் ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்’ என்று பொருள். விநாயகர் முழு முதற்கடவுள் ஆவார். கணங்களின் தலைவரான கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு வில்லங்கங்கள், இடையூறுகள் ஏதும் ஏற்படாமல் காப்பாற்றுகிறார். எனவே தான் அன்று தொட்டு இன்றுவரை விநாயகர் பூஜையை முதலில் செய்கிறோம்.
கஜமுகன் என்ற அசுரன், ஈசனிடம் இருந்து பல வரங்களைப் பெற்றான். அந்த வரத்தின் மகிமையால் தேவர்களையும் மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான்.
தேவர்களை பூண்டோடு அழித்தொழிக்க எண்ணினான். அவன் கொடுமை தாங்காத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். கஜமுகனை சம்ஹாரம் செய்து தேவர்களை காப்பாற்றுவதற்காக விநாயகப்பெருமான் சதுர்த்தியன்று அவதரித்தார். விநாயகர் கஜமுகனுடன் போர்புரிந்த போது ஆயுதங்களால் அழியாத வரம் பெற்ற கஜமுகன் பெருச்சாளி உருவம் கொண்டு விநாயகரை தாக்கினான். விநாயகர் அவனை தன் வாகனமாக்கி அருள் புரிந்தார்.
விநாயகர் பல திருவிளையாடல்களை செய்துள்ளார். காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்திலிருந்து காவிரி நதியை கவிழ்த்து பெருகி ஓடச்செய்தார். விபீஷ்ணன் இலங்கைக்கு எடுத்துச்சென்ற ரெங்கநாதர் சிலையை தடுக்கும் விதத்தில் பாலகன் வடிவில் வந்து லீலைகள் புரிந்து சிலையை ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்தார். முருகன் வள்ளியை மணம் புரிவதற்கு யானை வடிவில் சென்று உதவி செய்தார். அனலா சுரன், சிந்தூரன் ஆகிய அசுரர்களை விநாயகர் விசுவரூபமெடுத்து அழித்தார். வியாசர் சொல்ல, சொல்ல மகாபாரதத்தை எழுதினார்.

விரதம் இருப்பது எப்படி?
விநாயகர் சதுர்த்தியன்று வீட்டை சுத்தம் செய்து கோலம்போட்டு அலங்கரிக்க வேண்டும். வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில் சுத்தமான பலகையில் கோலம் போட வேண்டும். அதன் மீது தலை வாழை இலையை போட வேண்டும்.
நுனி பாகம் வடக்கு முகமாக இருக்க வேண்டும். அந்த இலைமீது பச்சரிசியைப்பரப்ப வேண்டும். அந்த அரிசியின் மீது களிமண்ணில் செய்துள்ள விநாயகர் விக்ரகத்தை எழுந்தருள செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார் தான் விசேஷம்.
விநாயகருக்கு கொழுக்கட்டை, வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எனும் முக்கனிகள், கரும்பு, எள், கடலை, அப்பம், மோதகம், பொரி உருண்டை போன்றவற்றை நிவேதித்து கணேச அஷ்டகம் கூறி பூஜைசெய்து அவரை வழிபடவேண்டும். விநாயகர் புராணம் படித்து மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.
மறுநாள் புனர்பூஜையை கொண்டாட வேண்டும். தயிர்சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன்பிறகு குளத்திலோ, கிணற்றிலோ, பிள்ளையாரைக்கரைத்து விடலாம். பிள்ளையார் பூஜைக்கு அருகம்புல்லும், எருக்கம்பூவும் விசேஷமான ஒன்றாகும்.

ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி எனப்படும். இந்த நாளில் துளசியால் பெருமாளை பூஜை செய்வதால் ஸ்வர்ணத்தைத் தானம் செய்த பலன் கிடைக்கும்.
ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி எனப்படும். இந்த நாளில் துளசியால் பெருமாளை பூஜை செய்வதால் ஸ்வர்ணத்தைத் தானம் செய்த பலன் கிடைக்கும். இந்த ஏகாதசி அன்று நெய் தீபம் ஏற்றுவது, தீப தானம் செய்வது ஆகியவை மிகுந்த புண்ணியத்தை அளிக்கும். இது கொடிய பாபங்களில் இருந்து விடுதலை வாங்கித் தரும் ஏகாதசி.
அஸ்வமேத யாகம் செய்த பலன் காமிகா ஏகாதசியை பற்றி கேட்போருக்கு உண்டு. காமிகா ஏகாதசி விரதமிருந்தால் காசியில் கங்கையில் குளித்த பலனைக் காட்டிலும், நைமிஷாரண்ய காட்டில் குளித்ததை விடவும், புஷ்கரணியில் குளித்ததை விடவும் பலன் அதிகம். சாலக்ராமக் கற்கள் அதிகமாக கிடைக்கும் கெண்டகி நதியில் குளித்த பலன் மற்றும் கோதாவரி நதியில் திங்கட்கிழமை வரும் பௌர்ணமி அன்று குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரிக்கும் போது குளிக்கும் பலனை விட அதிகமாக காமிகா ஏகாதசி விரத பலன் கிடைக்கும்.

இமய மலையில் கேதாரநாதரை தரிசித்த பலனை விட அதிகம். குருக்ஷேத்திரத்தில் சூரிய கிரகணம் அன்று குளித்த பலனை விட அதிகம். வேத சாஸ்திரங்களை படிப்பதை காட்டிலும் பலன் வாய்ந்தது. இந்த பூமியை அதன் காடுகள் சமுத்திரங்களோடு தானம் கொடுத்ததற்கு ஒப்பானது. ஒரு பசுவை அதன் கன்றோடு, அவை உண்ண தேவையான உணவோடு தானமாக கொடுப்பதற்கு சமம்.
காமிகா ஏகாதசி விரத பலனால் ஒருவர் பிராமணரை, குணவதியான பெண்ணை மற்றும் கருவில் இருக்கும் சிசுவை கொன்ற பாபங்களில் இருந்து விடுபடலாம். இந்த ஏகாதசி விரதமிருந்தால் எதிர்காலத்தில் பிறப்பின்றி வைகுண்டம் சேரலாம். முந்தைய ஜென்மங்களின் பாப சுமையிலிருந்து விடுபடலாம். காமிகா ஏகாதசி விரதமிருப்போரை யமராஜனும் சித்திரகுப்தரும் அண்ட மாட்டார்கள்.

திங்கட்கிழமையன்று (இன்று) சோமவார விரதத்தை பயபக்தியுடன் கடைப்பிடித்து, சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும்.
21-8-2017 அமாவாசை சோமவாரம்
சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம். திங்கட் கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். ‘சோம’ என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி ஈசனை நினைத்து தவம் இருந்தான். சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், அவனது நோயை நீக்கியதுடன், நவக்கிரகங் களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார்.
அந்த நாள் சோமவாரம் ஆகும். அப்போது சந்திரன், ‘தனது வாரத்தில், மக்கள் விரதம் இருந்து வழிபட்டால் தாங்கள் நல்ல பலனை வழங்க வேண்டும்’ என்று பரமேஸ்வரனை வேண்டிக்கொண்டான். அதன்படி தோன்றியதே சோமவார விரதமாகும். அமாவாசையில் வரும் திங்கட்கிழமை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது அமாவாசை சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் என்பது ஐதீகம்.
சித்ரவர்மன் என்ற மன்னனின் மகள் சீமந்தினி. அவள் மீது மன்னன் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான். தனது மகளுக்கு சிறந்த ஜோதிடர்களை வரவழைத்து ஜாதகம் எழுதும்படி உத்தரவிட்டான்.
அந்த ஜோதிடர்களில் ஒருவர், ‘மன்னா! உன்மகள் அழகில் லட்சுமி, கலைகளில் கலைமகள், வீரத்தில் உமையவள். உலகமே போற்றிப்புகழும் கணவன் அவளுக்குக் கிடைப்பான்’ என்றார்.
ஆனால் இன்னொரு ஜோதிடர் முகம் வாட்டத்துடன் இருந்தார். அவரைக் கவனித்த மன்னர் அவருடைய கருத்தையும் கேட்டான். அதற்கு அந்த ஜோதிடர் சொன்ன பதில் மன்னரை அதிர்ச்சி அடைய செய்தது. ‘மன்னா! உங்கள் மகள் திருமணம் ஆன சில நாட்களில் மாங்கல்ய பாக்கியத்தை இழப்பாள்’ என்றார்.
இதைக்கேட்ட மன்னன் வேதனை அடைந்தான். காலம் உருண்டோடியதில், சீமந்தினி மணம் முடிக்கும் பருவத்தை எட்டியிருந்தாள். அப்போது அவளது தோழிகள், அவளுக்கு ஜாதகத்தில் இருக்கும் ஆபத்தைக் கூறினார்கள்.

தன் நிலையை உணர்ந்தவள், யாக்ஞவல்கிய முனிவரின் மனைவி மைத்ரேயியை சந்தித்து, தன்னுடைய மனக் கவலையைக் கூறினாள்.
சிறந்த பதிவிரதையான மைத்ரேயி, ‘கவலைப்படாதே! சோமவார விரதத்தை கடைப்பிடி. உன்னுடைய துன்பங்கள் விலகும்’ என்றாள்.
சீமந்தினியும் முறையாக சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள்.
சில காலத்தில் சீமந்தினிக்கும், நளனின் பேரனும், இந்திர சேனன் மகனுமான சந்திராங்கதனுக்கும் திருமணம் நடந்தது. தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
ஒருநாள் நண்பர்களுடன் நதியில் நீராடச்சென்ற சந்திராங்கதன் தண்ணீரில் மூழ்கினான். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. ஆனால் மனநிலை சற்றும் குலையாத சீமந்தினி, பரமேஸ்வரனையும், பார்வதியையும் மனதார பிரார்த்தனை செய்து சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள். அவள் விரதத்திற்கான பலன் விரைவிலேயே கிடைத்தது.
திடீரென்று ஒருநாள் சந்திராங்கதன் திரும்பி வந்தான். தண்ணீரில் மூழ்கிய அவனை நாகர்கள் அழைத்துப்போய் சிலநாட்கள் அங்கு தங்க வைத்து உபசரணை செய்ததாகவும், சீமந்தினியின் சோமவார விரதம் பற்றி கேள்விப்பட்டு, தன்னை இங்கு கொண்டு வந்து விட்டதாகவும் கூறினான்.
இந்த சோமவார விரதத்தை திங்கட்கிழமையன்று பயபக்தியுடன் கடைப்பிடித்து, சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். வெகு தூரத்தில் உள்ளவர்கள், தங்கள் இருப்பிடத்தை வந்தடைவர். கணவன்-மனைவிக்கு இடையே பிரிவு இருக்காது. அப்படியே பிரிந்திருந்தாலும், அவர்கள் விரைவில் ஒன்று சேருவார்கள். மேலும் சகல செல்வங்களையும் பெற்றுத்தரும் சிறப்புமிகுந்த விரதம் இதுவாகும். களத்திரதோஷம், மாங்கல்ய தோஷம் இருப்பவர்கள், இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.

எந்த பிரதோஷத்தையும் விட சனிபிரதோஷத்திற்க்கு அதிக சக்தி உண்டு என்று கூறப்படுகிறது. சிவாலயத்தில் பிரதோஷ தரிசனம் தொடர்ந்து செய்துவந்தால் முன் ஜென்ம பாவ வினைகள் கரைந்தோடும்.
பிரதோஷம் என்பது மாதம் இரண்டு முறை ஆலயங்களில் அனுஷ்டிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திரயோதசி, மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் ஆறு மணிவரை பிரதோஷ காலம் என்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த திரயோதசி திதி கார்த்திகை மாதத்தில் சனிக்கிழமைகளில் வந்தால் சனிமஹாப்பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. அன்றுதான் சிவன் ஆலகால விஷத்தை உண்டதாக புராணங்கள் கூறுகின்றன.
எனவே சனிக்கிழமைகளில் பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் என்று சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றது. சனிப்பிரதோஷமும் ஆலயங்களில் விமரிசையாக வழிபாடு நடத்தப்படுகின்றது. எந்த பிரதோஷத்தையும் விட சனிபிரதோஷத்திற்க்கு அதிக சக்தி உண்டு என்று கூறப்படுகிறது. இதுவரை பிரதோஷத்தில் பங்குக்கொள்ளாத நபர்கள் இன்று பங்குக்கொள்ளலாம்.

சனிப்பிரதோஷமான இன்று அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடிக்கவேண்டும். சிவாலயம் சென்று வழிபடவேண்டும். இன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்கவேண்டும். திருமுறைகளை ஓத வேண்டும். பிரதோஷநேரம் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை. இந்நேரத்தில் சிவாலயம்சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாயநம) ஓதி வழிபட வேண்டும்.
ஒரு சிலர் வீட்டில் நடராஜர்க்கு அபிஷேகம் செய்வார்கள் அவர்களும் இன்று செய்யலாம். வீட்டில் பூஜை செய்யமுடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவலாயம் சென்று பிரதோஷத்திற்க்கு தேவையான அபிஷேகப்பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம்.
நம்மால் பிரதோஷ பூஜைக்கு செல்லமுடியவில்லை என்ற நிலை ஏற்படும்பொழுது மாலை வேளையில் சிவனை நினைத்துக்கொண்டு இருக்கலாம். இடைவிடாத சிவன் நினைப்பு உங்களை உயர்த்தும்.
சிவன் கோவிலை சுற்றி வலம் வரலாம். கிரிவலம் போல் சுற்றி வரலாம். சந்திரன் பாதிக்கப்பட்டு இருக்கும் ஜாதகர்கள் மாலை வேளையில் இன்று சிவன் கோவிலை சுற்றி வாருங்கள் நல்ல மனநிலை உங்களுக்கு உருவாகும்.

ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கு உகந்த காமிகா ஏகாதசி விரதமான இன்று விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது பிரம்மஹத்தி தோஷம் போக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
இன்று ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கு உகந்த காமிகா ஏகாதசி விரதம் அனுஷடிக்கப்படுகிறது. இன்று விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது பிரம்மஹத்தி தோஷம் போக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி எனப்படும். இந்த நாளில் துளசியால் பெருமாளை பூஜை செய்வதால் ஸ்வர்ணத்தைத் தானம் செய்த பலன் கிடைக்கும். இந்த ஏகாதசி அன்று நெய் தீபம் ஏற்றுவது, தீப தானம் செய்வது ஆகியவை மிகுந்த புண்ணியத்தை அளிக்கும். இது கொடிய பாபங்களில் இருந்து விடுதலை வாங்கித் தரும் ஏகாதசி.
இதன் மகிமையை நாரதருக்கு பிரம்ம வைவர்த்த புராணத்தில் பிரம்மா எடுத்து சொல்லும் போது, காமிகா ஏகாதசி விரதம் ஒரு பிராமணனை கொன்ற பாபத்திலிருந்து கூட விடுவிக்கும் எனக் கூறுகிறார். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தருமருக்கு இந்த ஏகாதசியின் மகிமை பற்றி எடுத்து சொல்லும் போதும் இதையே கூறுகிறார். காமிகா ஏகாதசிக்கு ஸ்ராவண கிருஷ்ண ஏகாதசி எனவும் பெயருண்டு.
காமிகா ஏகாதசியை பற்றிய கதை :
ஒரு காலத்தில் ஒரு பண்ணையார் பிராமணர் ஒருவரை சண்டையின் போது தவறுதலாக கொன்று விடுகிறார். தனது தவறை உணர்ந்து அதற்கு பிராயச்சித்தமாக அந்த பிராமணரின் இறுதி சடங்கின் செலவை ஏற்றுக்கொள்ள நினைத்தார்.வெகுண்ட ஊர் மக்கள் அவரை விரட்டினர். மனது வருத்தமடைந்த பண்ணையார் ஒரு சன்யாசியை அணுகி தனது வருத்தத்தை தெரிவித்தார்.
அவரும் காமிகா ஏகாதசி விரதத்தை பற்றி கூறி அது எந்தவிதமான பாபத்தையும் நீக்கும் எனக் கூறினார். பண்ணையாரும் அதே மாதிரி விரதமிருந்து விஷ்ணுவின் சிலையருகேயே தூங்கினார். அந்த இரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய ஸ்ரீ ஹரி அவரின் பிரம்மஹத்தி பாபம் தொலைந்தது எனக் கூறினார். பண்ணையார் காமிகா ஏகாதசி விரதமிருந்ததே காரணம் எனவும் உரைத்தார்.
காமிகா ஏகாதசி அன்று விஷ்ணுவை வணங்குவதால் உண்டாகும் பலன் :
காமிகா ஏகாதசி அன்று ஒரு துளசி இலை கொண்டு விஷ்ணுவை வணங்குவது நவரத்தினங்களை பகவானுக்கு சமர்ப்பிப்பதை காட்டிலும் உத்தமமானது. இன்றைய தினம் நெய் விளக்கு ஏற்றி ஸ்ரீஹரியை வணங்கினால் ஒருவரின் மூதாதையர்கள் சுவர்க்கத்திற்கு முன்னேறுவார்கள். காமிகா ஏகாதசி அன்று துளசி தாயை வணங்குபவர்கள் தங்கள் பாபங்களில் இருந்து விடுபடுவார்கள்.
காமிகா ஏகாதசி விரதமிருப்போரை தேவர்களும்,கந்தர்வர்களும், பன்னகர்களும்,நாகர்களும் போற்றுவார்கள். இன்று விரதமிருந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பவர்களுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கி அனைத்து நற்பலனும் கிடைப்பதோடு புத்திர தோஷமும் நீங்கும்.

முருகனுக்கு உகந்த விரதங்களுள் கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
ஆடி கிருத்திகை விரதமிருந்து முருகப் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் வேண்டுதல்கள் நிறைவேறும். ஆடிக்கிருத்திகை தினத்தன்று முருகன் இருக்கும் எல்லா தலங்களிலும் விசேஷம்தான்.
பால்காவடிகளும் பன்னீர்காவடிகளும் ஆயிரக்கணக்கில் பவனிவர லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மேல் ஆலயங்களில் கூடும் தினம்.”திருத்தணி முருகனுக்கு அரோஹரா’ என்ற கோஷம் வானைப் பிளக்கும். வள்ளி தெய்வயானையுடன் அபிஷேக அலங்காரங்களுடன் முருகன் அழகனாக காட்சி தரும் நாள்.
வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.
தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.
மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.