என் மலர்
முக்கிய விரதங்கள்
விரதங்கள் எல்லாவற்றிற்கும் கூடுதலான விதிமுறைகள் பொதுவானதாகவே இருக்கும். இப்போது விரதம் இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பார்க்கலாம்.
விரதங்கள் எல்லாவற்றிற்கும் கூடுதலான விதிமுறைகள் பொதுவானதாகவே இருக்கும். விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடை களை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.
ஒவ்வொரு விரதத்திற்கும் வித்தியாசமான உணவு முறைக் கட்டுப்பாடுகள் உண்டு. அதற்கு ஏற்றபடி உணவினை உட்கொள்ளுதல் நன்று. பாரணை நாளன்று உரிய நேரத்தில் சமைத்து சாப்பிடுதல் வேண்டும்.
நோயாளர்களும், அசௌகரியமுடையோரும், பாலகர்களும், மாதவிலக்கான பெண்களும் விரதம் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள். பெண்கள் மாத விலக்காகி ஏழு தினங்கள் ஆன பின்பே விரதம் மேற் கொள்ளலாம்.
மேலும் குழந்தை பிறந்து நாற்பத்து எட்டு தினங்களுக்குப் பிறகே குழந்தை பெற்ற பெண்கள் விரதம் கடைப்பிடிக்கலாம். குடும்ப உறுப்பினர் எவரேனும் இறந்தால், அவர்கள் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகே குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
விரதங்கள் இருப்பவர்கள் ஆணாக இருந்தால் முதலில் குடும்பத்தாரின் அனுமதி பெற்றே விரதம் இருக்க வேண்டும். கன்னிப் பெண்களாயின் பெற்றோரின் அனுமதியுடனும், மணமான பெண்கள் கணவனின் தாயாரான மாமியாரின் அனுமதி பெற்ற பின்னும் விரதம் இருக்க வேண்டும். பிறருக்கு உடன்பாடு இல்லாத சூழ்நிலையில் இருக்கும் விரதங்கள் முழுப்பலனை பெறமுடியாது.
விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபப்படுதல், பிறரைப் பற்றி தவறாகப் பேசுதல், பிறர் மனம் புண்படும்படி கேலி செய்தல், பிறரிடம் பேசாதிருத்தல், அதிகமாகப் பேசுதல் ஆகிய எதுவுமே செய்யக் கூடாது.
விரதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அடிக்கடி நீராகாரம் சாப்பிடக்கூடாது. ஓய்வு தேவை என்று பகலில் படுத்துத் தூங்கக்கூடாது. நாம் விழித்திருந்து இறைவழிபாட்டில் நமது சிந்தனையைச் செலுத்த வேண்டும். விரதம் இருப்போர் தாம்பத்திய உறவில் ஈடுபடுதல், தவறான உணர்ச்சிகளை உருவாக்கும் நிகழ்ச்சிகளை பார்த்தல், கேட்டல் கூடாது. விரதத்தின் போது அசைவ உணவுகளை சாப்பிடுதல், பிறருக்கு சமைத்துக் கொடுப்பது கூட தவறாகும். வெற்றிலை பாக்கு போடுதல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல் ஆகியவையும் கூடாது.

ஆனி திருமஞ்சன தினம் அன்று விரதமிருந்து நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடப்பதைக் கண்டு வழிபட்டு வந்தால் தடைகள் அகலும்.
ஆனி மாதம் வரும் ஆனி திருமஞ்சன நாளில் விரதம் இருந்து நடராஜப் பெருமானை வழிபட்டு வந்தால் தடைகள் அகன்று வியக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும். ஆடலரசனுக்கு ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன விழா நடை பெறும். விரதமிருந்து அதில் கலந்து கொண்டு நடராஜரைத் தரிசித்தால் நலம் யாவும் வந்து சேரும்.
வருடத்தில் இரண்டு முறை நடராஜருக்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஒன்று மார்கழி மாத தரிசனம். மற்றொன்று ஆனி மாத நடராஜர் தரிசனம். அன்றைய தினம் விரதமிருந்து கூத்தபிரானைக் கும்பிட்டு சிவபுராணம் படித்தால் வியக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும். எதிரிகளும் விலகுவர்.
ஆற்றல் மிக்கவர்களாக உங்களை மாற்றுகிற ஆற்றல் நடராஜப் பெருமானின் அருட் பார்வைக்கு உண்டு.
ஆனி திருமஞ்சன தினம் அன்று விரதமிருந்து நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடப்பதைக் கண்டு வழிபட்டு வந்தால் தடைகள் அகலும். தரிசனத்தால் தனலாபம் பெருகும்.

இந்து சமயங்களில் போற்றப்படும் விரதங்களும் அந்த விரதத்தை கடைபிடிப்பதால் கிடைக்கும் பலன்களை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
பிரதோஷம்:
நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.
தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்
விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.
பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.
சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.
தை அமாவாசை விரதம்:
நாள் : தை அமாவாசை
தெய்வம் : சிவபெருமான்
விரதமுறை : காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்
பலன் :முன்னோர்களுக்கு முக்தி, குடும்ப அபிவிருத்தி
சிறப்பு தகவல் : பிற அமாவாசைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், இன்று அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மங்களவார விரதம்:
நாள் : தை மாதம் முதல் செவ்வாய் துவங்கி ஆயுள் முழுவதும் செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டித்தல்
தெய்வம் : பைரவர், வீரபத்திரர்
விரதமுறை : பகலில் ஒரு பொழுது சாப்பிடலாம்
பலன் : பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்குதல்
உமா மகேஸ்வர விரதம்:
நாள் : கார்த்திகை மாத பவுர்ணமி
தெய்வம் : பார்வதி, பரமசிவன்
விரதமுறை : காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் : குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
கல்யாணசுந்தர விரதம்:
நாள் : பங்குனி உத்திரம்
தெய்வம் : கல்யாண சுந்தர மூர்த்தி (சிவனின் திருமண வடிவம்)
விரதமுறை : இரவில் சாப்பிடலாம்
பலன் : நல்ல வாழ்க்கைத்துணை அமைதல்
சூல விரதம்:
நாள் : தை அமாவாசை
தெய்வம் : சூலாயுதத்துடன் கூடிய சிவபெருமான்
விரதமுறை : இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்
பலன் : விளையாட்டில் திறமை அதிகரிக்கும்

இடப விரதம்:
நாள் : வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதி
தெய்வம் : ரிஷபவாகனத்தில் அமர்ந்த சிவன்
விரதமுறை : பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம். நந்திதேவரை வழிபட வேண்டும்.
பலன் : குடும்பத்திற்கு பாதுகாப்பு
தைப்பூச விரதம்:
நாள் : தை மாத பூச நட்சத்திரம்

பலன் : திருமண யோகம்
முருகன் சுக்ரவார விரதம்:
நாள் : ஐப்பசி மாதம் முதல் வெள்ளி துவங்கி மூன்று ஆண்டுகள் வரை அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் : சுப்ரமணியர்
விரதமுறை : பகலில் ஒருபொழுது உணவு, இரவில் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.
பலன் : துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் மனம் கிடைக்கும்.
கிருத்திகை விரதம்:
நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.
தெய்வம் : சுப்பிரமணியர்
விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்
பலன் : 16 வகை செல்வமும் கிடைக்கும்.
சுக்கிரவார விரதம்
சித்திரை மாதம் சுக்கிலபட்சத்து முதல் சுக்கிர வாரம் தொடங்கி (வெள்ளிக்கிழமை) பிரதி சுக்கிர வாரமும் உமா தேவியாரை முன்னிட்டு அனுஷ்டிக்கும் விரதம் சுக்கிர வார விரதம் எனப்படும். இதை வெள்ளிக்கிழமை விரதம் என்றும் அழைப்பார்கள்.
இவ்விரத தினங்களில் ஒரு பொழுது பகலில் உணவு உட்கொள்ள வேண்டும். அம்பாளைப்பற்றிய பாராயணம், கதைகள் ஆகியவற்றைப் படிக்க வேண்டும். மாலைப்பொழுதில் இல்லத்தில் அம்பாள் படத்தின் முன் குத்து விளக்கை ஏற்றி வைத்து பூசிக்கலாம்.
கோவிலுக்குச்சென்று அர்ச்சனை செய்து அம்பாளை வழிபடலாம். தேவிக்குவிளக்கு ஏற்றும்பொழுது ஐந்து வகை எண்ணெயை ஊற்றி விளக்கேற்றுவது மிகவும் நல்லது. அம்பாளை வழிபட்டு சுக்கிர வார விரதம் மேற்கொள்ளுவதால் சகல பாக்கியங்களும் ஏற்படும்.

வளர்பிறை சுக்ல பட்சம்-தேய் பிறை கிருஷ்ண பட்சம் - எதுவானாலும் செவ்வாய்க்கிழமைகளில் வந்தால் அன்று விரதம் இருந்து விநாயகரை பூஜித்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்.
சிறுப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
அங்கா ரகனே அவதிகள் நீக்கு
விநாயகரை நினைத்து அங்காரகன் தவம் செய்ய ஆரம்பித்தான்.
ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தான். விநாயகப் பெருமான் அவன் முன் தோன்றி அவனை நவக்கிரகங்களுள் ஒருவனாகவும் ராசி வீடுகளில் மேஷம், விருச்சிகம் இரண்டின் அதிபராகவும் செய்தார். போர் முறைகளை நன்கு கற்றதனால் அங்காரகனை நவக்கிரகங்களுள் ஒரு படைத்தலைவனாக அறிவித்தார்.
அது மட்டுமின்றி விநாயகர் அவனைச் சகோதரன் என்றும் அழைத்தார். இதன் காரணமாக அங்காரகன் சகோதர காரகனாகவும் விளங்க அருள் செய்தார். இதனால் தான் விநாயகருடைய சகோதரரான முருகப்பெருமானின் அம்சமாகவும் கருதி மக்கள் அனைவரும் செவ்வாயை வணங்கி வருகிறார்கள்.
அங்காரகனுக்கு விநாயகப் பெருமான் காட்சி அளித்த நாள் செவ்வாய்க்கிழமை. சதுர்த்தி திதி. அதனால் அங்காரகனுக்குச் செவ்வாய் என்ற பெயரும் ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமையை மங்கள வாரம் என்று அழைப்பார்கள். இதனால் அங்காரகனுக்கு மங்களன் என்ற பெயரும் உண்டு.
செவ்வாய்க்கிழமை சதுர்த்தி திதியில் விநாயகர் காட்சி அளித்தார். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், வளர்பிறை சுக்ல பட்சம்-தேய் பிறை கிருஷ்ண பட்சம் - எதுவானாலும் செவ்வாய்க்கிழமைகளில் வந்தால் அன்று விரதம் இருந்து விநாயகரை பூஜித்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்.

வருகிற ஆவணி மாதம் 27-ந் தேதி (12.9.2017) செவ்வாய்க்கிழமை முதல் புரட்டாசி மாதம் 8-ந் தேதி (24.9.2017) வரை ‘புஷ்கரவிழா’ கொண்டாடப்படுகிறது.
12-9-2017 புஷ்கர நீராடல் தொடக்கம்
தல யாத்திரை, தீர்த்த யாத்திரை, பாத யாத்திரை ஆகிய மூன்றும், முன்னோர்கள் காலந்தொட்டே நடைமுறையில் இருந்து வரும் வழிபாட்டு முறை. பிரிசித்தி பெற்ற ஆலயங்களை தரிசிக்க அந்த ஆலயம் இருக்கும் ஊர்களுக்குச் சென்று வழிபடுவது தல யாத்திரை. புண்ணியம் தரும் நதிகள், ஆறுகள், ஆலய குளங்கள் மற்றும் கிணறுகளுக்குச் சென்று நீராடுவது தீர்த்த யாத்திரை. தொலை தூரங்களில் உள்ள ஆலயங்களுக்கு நடந்தே சென்று வழிபடுவது பாத யாத்திரை. இந்த மூன்று விதமான யாத்திரைகளுக்கும் அடிநாதமாக இருப்பது இறைவழிபாடாகும்.
தீர்த்த யாத்திரை வழிபாட்டில் குறிப்பிட்டதொரு நாளில், குறிப்பிட்ட ஆறு அல்லது தீர்த்தங்களில் நீராடுவது புனிதநீராடலாக கருதப்படுகின்றது. இதற்கு உதாரணமாக ஓராண்டுக்கு ஒரு தடவை மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதமும் கார்த்திகை முதல்நாளும் மேற்கொள்ளப்படும் ‘கடைமுழுக்கு’, ‘முடவன்முழுக்கு’, திருச்சி அம்மாமண்டபம் படித் துறையில் மேற்கொள்ளப்படும் ஆடிப்பெருக்கு நீராடல், ராமேஸ்வரம் கடலில் ஆடி மற்றும் தை அமாவாசையின் போது மேற்கொள்ளப்படும் முன்னோர் நினைவு நீராடல் ஆகியனவற்றை குறிப்பிடலாம்.
கிரக சுழற்சியின் அடிப்படையில் நடை பெறும் புனித நீராடல்கள் பல உள்ளன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை கங்கை ஆற்றில் மேற்கொள்ளப்படும் கும்பமேளா, கும்பகோணத்தில் மேற்கொள்ளப் படும் மகாமகம், புண்ணிய நதிகளாக கருதப்படும் பன்னிரண்டு நதிகளில் மேற்கொள்ளப்படும் புஷ்கரம், திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யம் கடற்கரையில் மேற்கொள்ளப்படும் மஹோதயம் போன்ற நீராடல்கள் அவை.
பொதுவாக குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும்போது, இந்த விழாக்கள் நடத்தப்படுகிறது. அந்த வரிசையில் வரும் ஆவணி 27-ந் தேதி முதல் புரட்டாசி 8-ந் தேதி வரை, மயிலாடுதுறை காவிரி ஆற்றில் மகாபுஷ்கர புண்ணிய நீராடல்விழா நடைபெற உள்ளது.
புஷ்கரம் என்பது நீரை குறிப்பதாகும். மூன்றரைக் கோடி தீர்த்தங்களின் அதிபதியாக விளங்கும், படைப்பு கடவுளான பிரம்மா தனது கையில் ஒரு கமண்டலத்தை வைத்திருப்பார். அந்த கமண்டலத்தின் பெயர் புஷ்கரணி. அதில் உள்ள நீரே ‘புஷ்கரம்’ என்பதாகும். இதைக் கொண்டு உயிரினங்கள் வாழத் தேவையான நீரை படைப்பதுடன், பாவங்கள் அனைத்தையும் விலக்கும் அரும் மருந்தாகவும் பயன்படுத்துவார்.
பிருகண்டு முனிவர் மிகப்பெரிய சிவபக்தர். எவருக்கும் தன்னால் எந்த தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, நெறியானதொரு வாழ்வை வாழ்ந்து வந்தார். அப் படிப்பட்டவர் தனக்கு முக்தியை அருளுமாறு சிவனை வணங்கி தவம் மேற்கொண்டார். அவர் செய்த தவத்தை பார்த்த சிவபெருமான் அவருக்கு காட்சியளித்தார். ‘உமக்கு முக்தியை அருள எம்மால் முடியாது. பூர்வஜென்மத்தில் நீ செய்த பாவத்தால் உனக்கு முக்தி கிடைப்பது தள்ளிப்போகிறது. குருபகவான் அருள் பெற்றால் மட்டுமே உனக்கு முக்தி கிடைக்கும்’ என்றார்.
உடனே பிருகண்டு முனிவர், குருபகவானை நாடி வணங்கி தன் குறை தீர்க்குமாறு வேண்டினார்.
குருபகவானோ, ‘எனது அருள் உனக்கு என்றென்றும் உண்டு. ஆனால் நீ முக்தியடைய ஒரேவழி பிரம்மனின் கையிலுள்ள புஷ்கரத்தால் மட்டுமே முடியும். ஆகவே நாமிருவரும் சென்று பிரம்மனிடம் புஷ்கரத்தைக் கேட்டுப்பெறுவோம்’ என்று கூறி பிருகண்டு முனிவரை அழைத்துக் கொண்டு பிரம்மனிடம் சென்றார்.
இருவரும் பிரம்மனிடம் விஷயத்தை எடுத்துக் கூறினர். அனைத்தையும் கேட்ட பிரம்மன் முனிவருக்கு தன் கமண்டலத்திலுள்ள புஷ்கரத்தை தர சம்மதித்தார். அப்போது பிரம்மாவின் கமண்டலத்தில் இருந்த புஷ்கரம் பேசத் தொடங்கியது. ‘பிரம்ம தேவனே! நான் உயிருள்ள பொருள். நான் உங்களை விட்டுச் சென்றால் மூன்றரை கோடி தீர்த்தங்களும், முப்பத்துமுக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணா யிரம் ரிஷிகளும், அஷ்டலட்சுமியும் உங்களை விட்டு அகன்றுவிடுவார்கள். அதன்பிறகு உங்களை யாரும் வணங்கமாட்டார்கள்’ என்றது. இதனால் பதறிப்போன பிரம்மன், புஷ்கரத்தை தரமறுத்துவிட்டார்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என நினைத்த பிருகண்டு முனிவர், குருபகவானிடம் புலம்பினார். குருபகவான் பிரம்மனின் ஒப்புதலுடன் பிருகண்டு முனிவருக்காக புஷ்கரத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

‘நீ பிரம்மனை விட்டு ஒட்டு மொத்தமாக வரவேண்டாம். நான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு மாறி சஞ்சரிக்கும் காலத்தில், நான் செல்லும் ராசியில் பன்னிரண்டு தினங்கள் மட்டும் நீ இருந்தால், முனிவரும் முனிவரைப் போன்று பூர்வஜென்ம பாவத்தில் சிக்கி தவிப்போரும் அந்த ராசிக்குரிய நதிகளில் நீராடி தங்களது பாவத்தைப் போக்கிக் கொள்வர்’ என்றார் குரு.
இதற்கு புஷ்கரம் சம்மதித்தது. அதன்படி குரு பகவான் மேஷத்தில் சஞ்சரிக்கும் போது கங்கையிலும், ரிஷபத்தில் சஞ்சரிக்கும் போது நர்மதையிலும், மிதுனத்தில் சஞ்சரிக்கும் போது சரஸ்வதியிலும், கடகத்தில் சஞ்சரிக்கும் போது யமுனையிலும், சிம்மத்தில் சஞ்சரிக்கும் போது கோதாவரியிலும், கன்னியில் சஞ்சரிக்கும் போது கிருஷ்ணாவிலும், துலாத்தில் சஞ்சரிக்கும் போது காவிரியிலும், விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் போது தாமிரபரணி யிலும், தனுசுவில் சஞ்சரிக்கும் போது சிந்துவிலும், மகரத்தில் சஞ்சரிக்கும் போது துங்கபத்ராவிலும், கும்பத்தில் சஞ்சரிக்கும் போது பிரம்மபுத்திராவிலும், மீனத்தில் சஞ்சரிக்கும் போது கோதாவரியின் உபநதியான பரணீதாவிலும் புஷ்கரமானவர் இருந்து அருள் பாலிக்கிறார் என்கிறது புராண வரலாறு. அதனடிப்படையில் ஒவ்வொரு குருப்பெயர்ச்சியின் போதும் குருபகவான் சஞ்சரிக்கும் ராசிக்குரிய நதியில் புஷ்கரபுண்ணிய நீராடல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த வரிசையின் படி பார்க்கும்போது, இந்த ஆண்டு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு குரு செல்கிறார். அதன்படி புஷ்கரம் காவிரி நதியில் வாசம் செய்கிறார். அவர் வாசம் செய்யும் 12 நாட்கள் வருகிற ஆவணி மாதம் 27-ந் தேதி (12.9.2017) செவ்வாய்க்கிழமை முதல் புரட்டாசி மாதம் 8-ந் தேதி (24.9.2017) வரை ‘புஷ்கரவிழா’ கொண்டாடப்படுகிறது. இந்த பன்னிரண்டு நாட்களிலும் அந்நாளின் தேவதைகளான மித்ரன், அர்யமா, த்வஷ்டா, பக(ற) சூரியன், விவஸ்வாள், அருண, பகவான், அம்சுமான், இந்திரன், பர்ஜன்யன், விஷ்ணு, ப்ரம்ஹா ஆகியோருக்கு விரதமிருந்து அவரவருக்குரிய தானங்கள் வழங்கி வழிபடுவது மிகவும் விசேஷம் என புராணங்கள் தெரிவிக்கின்றன. காவிரியில் வரும் இந்த புஷ்கரமானது 144 வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய சிறப்புக்குரிய புஷ்கரம் என்பதால் இது மஹாபுஷ்கர விழாவாக கொண்டாடப்படுகின்றது.
பாவம் போக்கும் நீராடல்
புஷ்கர புண்ணியகாலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மதேவர்கள், ரிஷிகள் போன்றோர் நதிகளில் வாசம் செய்வதால், இந்நாளில் இங்குவந்து நீராடுவோர் மூன்றரை கோடி தீர்த்தத்தில் நீராடிய பலனைப் பெறுவதுடன் ஏழேழு ஜென்மத்தில் செய்த பாவங்களும் நீங்கப்பெறுவர். புஷ்கர புண்ணிய நீராடலின் போது தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்குகளை செய்வதன் மூலம் பிதுர்சாபத்திலிருந்து விடுபட்டு நல்வாழ்வு வாழ்வர்.
அன்னதானம், வஸ்திரதானம் போன்றவற்றை செய்தால் மோட்சம் கிடைக்கப்பெறுவர். இந்த மகாபுஷ்கர புண்ணிய நீராடல் எல்லா ராசிக்காரர்களுக்கும் உகந்தது என்றாலும் கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்கள் விரதமிருந்து பரிகாரம் செய்து கொள்ளலாம். மேஷம், மிதுனம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அவசியம் பரிகாரம் செய்துக் கொள்ள வேண்டும்.
இறை வழிபாட்டு பாராயணம்
காவிரி புஷ்கர விழா நடைபெறும் 12 நாட்களிலும் மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அனைத்து கோவில்களிலிருந்தும் சுவாமி புறப்பாடு செய்து, தீர்த்தவாரி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாக் காலங்களில் வேதபாராயணம், மஹாருத்ரபாராயணம், சதுர்வேதபாராயணம், மஹாருத்ரஹோமம், திருமுறைபாராயணம், லலிதாவிஷ்ணு சகஸ்ரநாமபாராயணம் மற்றும் காவிரி நதிக்கு ஆரத்தி எடுத்து வணங்குதல், பல்வேறு கலைநிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் ஆகியவை நடத்தப்படவுள்ளது.

நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாகபஞ்சமி விரதத்தை தொடங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் விரதத்தை பின்பற்ற வேண்டும்.
நாக பஞ்சமி விரதம் ஏற்பட்டதற்கான புராண நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-
காஸ்யபருக்கும் கத்ரு என்பவளுக்கும் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காமல் தன் போக்கில் நடக்கத் தொடங்கினார், நாகர்.
இதனால் கோபம் கொண்ட தாயர் கர்து, தாய் சொல்லை கேளாததால் தீயில் விழுந்து இறந்து போகும்படி மகனுக்கு சாபம் கொடுத்தாள். ஜனமேஜயன் மூலம் அந்த சாபம் எப்படி நிறைவேறியது என்பதை பார்க்கலாம்.
பரிசட்த்து மன்னன் பாம்புகளின் தலைவனாக விளங்கிய ‘தட்சகன்’ என்ற கொடிய நாகத்தால் கடிக்கப்பட்டு இறந்தான். தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பு இணத்தையே அழிக்க உறுதி பூண்டான் பரிசட்த்தின் மகன் ஜனமேஜயன்.
அதற்காக ‘சர்ப்பயக்ஞம்’ என்ற வேள்வியை நடத்தினான். பல பாம்புகள் அவன் நடத்திய யாகத்தில் இருந்த வேள்வித்தீயில் விழுந்து மாண்டன. அஸ்தீகர் என்ற முனிவர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி நாகர்க்கு சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு சாபநிவர்த்தி கொடுத்த நாள் ஒரு பஞ்சமி தினமாகும்.

எனவே இந்த நாக பஞ்சமி விரதம் ஆனி மாத சுக்லபஷ பஞ்சமியில் கொண்டாடும் வழக்கம் உள்ளது. இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
விரதமுறை
நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பால் அபிஷேகம் செய்வார்கள். பின் மஞ்சள் பூசிக் குங்குமம் வைப்பார்கள். பால், முட்டை முதலியவற்றை நிவேதன பொருளாக வைத்து வழிபடுவார்கள். மூன்று அல்லது ஒன்பது முறை கோவிலை சுற்றி வலம் வருவார்கள்.
நிவேதனம்
நாக வழிபாட்டிற்கு என நிவேதனப் பொருட்கள் உள்ளன.
நிவேதனம்: புற்று வழிபாட்டில் பாலும், வாழைப் பழத்துண்டுகளும் முக்கிய இடம் பெறுகின்றன. புற்று வழிபாட்டுக்குரிய காணிக்கைப் பொருட்களைக் கருப்புத்துணியில் வைத்து சந்தனம், பூ இவற்றுடன் சேர்த்துப் பொழுது சாயும் நேரத்தில் புற்றில் செலுத்த வேண்டும்.

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் நம்பிக்கையுடன் சிவராத்திரி விரதமிருந்து மனமுருக பிரார்த்தனை செய்தால் சகல நலங்களும் பெறலாம்.
கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் சிவராத்திரி விரதம் இருப்பது நல்லது. சிவராத்திரி விரதம் அனுசரிப்பவர்கள் அன்று முழுவதும் சாப்பிடக்கூடாது. உலகத்தின் அமைதிக்காகவும் நன்மைக்காகவும் சிவாலயங்களில் ஹோமத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்.
‘ஓம் நவசிவாய’ என்ற மந்திரம் உச்சரிக்க வேண்டும். மகா சிவராத்திரி இரவு கோவிலில் அனைவரும் ஒன்றுகூடி ‘சிவாய நம’ என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.
இரவின் நான்கு ஜாமங்களிலும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பக்தியுடன் அவரை வழிபட வேண்டும். முதல் ஜாமத்தில் அரிசி. இரண்டாம், மூன்றாம் ஜாமங்களில் கோதுமை.
நான்காம் ஜாமத்தில் அரிசி உளுந்து, பயிறு, தினை ஆகியவற்றை அட்சதையாக சிவலிங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். முதல் ஜாமத்தில் தாமரை பூக்களாலும், இரண்டாம் ஜாமத்தில் தாமரை மற்றும் வில்வத்தாலும் மூன்றாம் ஜாமத்தில் அருகம் புல்லாலும், நான்காம் ஜாமத்தில் தாழம்பு, செண்பகம் நீங்கலான மற்ற மணம் கமழும் மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆடிக்கிருத்திகை கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம்.
மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள், சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறுமுகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.

உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமரிசையாக நடக்கிறது.
காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக் காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர்.
கோவில்களிலும், வீடுகளிலும் பொங்கலிட்டு அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து கந்தபுராணம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். பழனி முருகனை இருந்த இடத்தில் இருந்தே மானசீகமாக வழிபட்டாலும் பழனி என்ற பெயரை சொன்னாலும் நம் தீவினைகள் நீங்கும் என்பது அருளாளர்கள் வாக்கு. முருகப் பெருமான் இத்தலத்தில் பல்வேறு அற்புதங்களை செய்கிறார்.
சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம். வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கடன் தொல்லை அடியோடு நீங்கும். நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தனை செய்தால் சகல நலங்களும் பெறலாம்.

மேல்மலையனூர் கோவிலில் தேர்த் திருவிழாவின் போது தீமிதித் திருவிழாவில் கலந்து கொண்டு தீ மிதிக்கும் பக்தர்கள் கடுமையாக ஒருவார காலம் விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.
மேல்மலையனூர் கோவிலில் தேர்த் திருவிழாவின் போது தீமிதித் திருவிழாவும் நடத்தப்படும். இவ்விழாவில் கலந்து கொண்டு தீ மிதிக்கும் பக்தர்கள் கடுமையாக வெகு சுத்தத்துடன் ஒருவார காலம் விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.
இந்த விரதமானது சபரிமலை ஐய்யப்பனுக்கு மாலை போட்டு விரதம் தொடங்குவது போன்று மாலை அணிந்து கொள்வதிலிருந்து தொடங்குகின்றது.
தீமிதி விழாவில் கலந்து கொள்பவர்கள் அவர்கள் ஊரில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கி துளசி மணிமாலை, உருத்திராட்ச மாலை சந்தனமாலை, பச்சைமணி மாலை இவைகளில் தங்களுக்குப் பிடித்தமான மாலையை வாங்கி அதனை பாலில் நனைத்து பின் மஞ்சள் நீரில் நனைத்து தன் பெற்றோர் அல்லது கோயில் குருக்கள் அல்லது அங்காளம்மன் அருள்வாக்கு பெற்றவர்களிடம் கொடுத்து மணிமாலையை அணிந்து கொள்ள வேண்டும்.
தினமும் காலை, மாலை இருவேளையும் குளித்த பின்பு ‘ஓம் சக்தி அங்காளம்மா’ என உச்சரித்து வணங்க வேண்டும். இந்த விரதத்தின் போது மஞ்சள் அல்லது காவி நிற உடைகளை அணிவது அவசியமாகும். இந்தத் தீமிதி விழாவில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பெருமளவில் பங்கு கொள்கின்றனர்.

ஆண்களுக்குக் கூறப்பட்ட அனைத்து விரத முறைகளையும் பெண்களும் கடைப்பிடிப்பர். இந்த விரதம் இருக்க எந்தவித வயது வித்தியாசமும் கிடையாது. மாலை அணிந்த பின் ஆணாயினும், பெண்ணாயினும், சிறுவனாயினும், சிறுமியாயினும் அவர் ‘அங்காளம்மா’ என்றே அழைக்கப்படுவர்.
மனத் தூய்மையும், உடல் தூய்மையும் இந்த விரத நாட்களில் மிக அவசியமாகும். பெண்கள் இந்த விரதம் இருந்து வரும்போது மாதவிலக்கு பிரச்சினை ஏற்பட்டால் அன்று மாலையைக் கழற்றிவிட்டு மூன்று நாட்கள் கழித்து தலைக்கு மூன்று எண்ணெய் கூட்டி குளிப்பதுடன் மஞ்சள் நீறிலும்
நீராடி அதன்பின் மாலையை பாலிலும் அதன்பின் மஞ்சள் நீரிலும் கழுவி சாம்பிராணி புகை காட்டி வீட்டிலேயே சுவாமி படத்தின் முன் மறுபடியும் மாலையை அணிந்து கொள்ள வேண்டும். இந்த பக்தர்கள் தீ மிதித் திருவிழாவன்று தீக்குண்டத்தில் இறங்கி வெளிவருவார்கள்.
ஆடி மாதம் முழுக்க இதே மாதிரி பயப்பக்தியுடன் மேல்மலையனூரில் அங்காளம்மனை பக்தர்கள் வேண்டிக் கொள்வதை காண முடிகிறது.

திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும்.நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும்.
4-9-2017 ஓணம் பண்டிகை
கேரள மக்களின் பாரம்பரிய விழா ஓணம் பண்டிகை. அந்த மாநில மக்களால் சாதி, சமய பாகுபாடின்றி கொண்டாடப்படும் சிறப்பு மிகு திருவிழா அது. தமிழ் மாதமான ஆவணி, கேரளாவில் ‘சிங்க மாதம்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த மாநிலத்தவர்களின், ஆண்டு தொடக்க மாதமும் அதுதான். அந்த சிங்க மாதத்தின் திருவோண நட்சத்திரத்தில் வளர்பிறையில் ‘ஓணம் பண்டிகை’ கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணுவிற்கு உகந்த நட்சத்திரம் திருவோணம் ஆகும். மகாவிஷ்ணு மூன்றடி மண் கேட்பதற்காக வாமன அவதாரம் எடுத்தது திருவோணம் நட்சத்திரத்தில்தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலய அர்த்தஜாம பூஜை முடித்து, நடை சாத்தப்பட்டிருந்தது. அப்போது கருவறையில் எரிந்த விளக்கு அணையும் தருவாயில் இருந்தது. விளக்கின் நெய்யைக் குடிக்க வந்த எலி ஒன்றின் மூக்கு பட்டு, விளக்கு திரி தூண்டப்பட்டது. இதனால் விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. விளக்கு அணையாமல் இருக்கச் செய்த எலியை, அடுத்தப் பிறவியில் அரசனாகப் பிறக்க, ஈசன் அருள்புரிந்தார்.
சிவபெருமானின் அருளைப் பெற்ற எலி, மறு பிறவியில் அசுர குலத்தில் ‘பலி’ என்ற பெயரில் மன்னராகி, கேரளாவை ஆட்சி செய்தார். அவரது ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். தனது ஆற்றலால், தேவர்களைக்கூட பலி மன்னர் தோற்கடித்தார். இதனால் அவர் மகாபலி சக்கரவர்த்தி என்று பெயர்பெற்றார். அவர் அஸ்வமேத யாகம் செய்ய முயன்றபோது, தேவர்களின் நலன் கருதி வாமனராக வந்த திருமால், மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவரை ஆட்கொண்டார்.
மகாபலியை, வாமனர் ஆட்கொண்ட தினம் ஆவணி மாதம் திருவோணம் ஆகும். அன்றைய தினம் மகாபலி மன்னன், தன்மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா? என்பதை பார்ப்பதற்காக பாதாள லோகத்தில் இருந்து கேரளாவுக்கு வருவதாக ஐதீகம். இதை நினைவு கூறும் வகையிலும், மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், ஓணம் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
மகாபலி மன்னனின் வருகைக்காக இந்த திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 10-வது நாளாக திருவோணம் தினம் கேரளாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மக்கள் வீடுகளை அலங்கரித்து திருவிளக்கேற்றி வழிபடுவார்கள். கும்மியடித்து மகிழ்வர். எல்லா கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

பக்தி பாடல்களை பாடி, பிரார்த்தனை செய்வர். குடும்ப பெரியவர்கள் புத்தாடைகளை வழங்க, அதை குடும்பத்தில் உள்ளவர்கள் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி பெற்று அணிந்து மகிழ்வர். ஓணம் அன்று சிறப்பான உணவு வகைகளை சமைத்து உறவினர்களுடன் உண்டு மகிழ்வார்கள். அன்றைய விருந்தில் அடப்பிரசாதம் என்னும் ஸ்பெஷல் பாயசம் இடம் பெறும். இளைஞர்கள் வாண வேடிக்கை செய்து மகிழ்வர். அன்று மாலை கேரளாவில் ‘செண்டை’ என்று அழைக்கப்படும் கேரள பாரம்பரிய மேள தாளத்துடன் புலி ஆட்டம், சிங்காரி மேளம், கதகளி நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பாம்பு போன்ற நீண்ட படகுப்போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெறும்.
கேரள மக்கள் எங்கிருந்தாலும் கொண்டாடி மகிழும் பண்டிகை ஓணம் பண்டிகை ஆகும். திருவோணத்தன்று பெருமாள் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் திருவோணத்துக்கு முதல் நாள் இரவு உணவை தவிர்க்க வேண்டும். ஓணம் பண்டிகையின் போது மகா விஷ்ணுவை வணங்கி துதிப் பாடல்கள் பாட வேண்டும். விஷ்ணு புராணங்களை படிக்கலாம். சுவாமிக்கு நிவேதித்தப் பொருட் களை ஒரு பொழுது சாப்பிடலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். அன்று வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு பலன்களை தரும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருவோணத்தன்று தீபம் ஏற்றப்படும். இதை சாஸ்ரதீப அலங்கார சேவை என்பர். அன்று ஏழுமாலையானின் உற்சவரான மலையப்பசாமி ஊர்வலமாக 4 மாடங்கள் வழியாக ஊஞ்சல் மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அங்கு ஆயிரத்தெட்டு திரிகளை கொண்ட நெய் விளக்கு ஏற்றப்படும். அப்போது திருமலையே ஜோதி மயமாக காட்சி தரும்.
திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும்.

இந்திர ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம் என்பது உறுதி.
ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை, இந்திர ஏகாதசி என்று அழைப்பார்கள். இந்த ஏகாதசியை நாரதர் வெளிப்படுத்தினார். மாஹிஷ்மதி என்ற நகரை இந்திரசேனன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அவனுடைய அரசவைக்கு நாரத முனிவர் வந்தார். மாமுனியைப் பார்த்ததும், இந்திரசேனன் மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்று உயர்ந்த ஒரு ஆசனத்தில் அமரச் செய்தான்.
பின்னர் நாரதர் வந்ததின் நோக்கத்தை மன்னன் கேட்டான். அப்போது நாரதர், ‘மன்னா! நான் இப்போது எமலோகத்தில் இருந்து வருகிறேன். அங்கு உன் தந்தை நரகத்தில் கடுந்துயரை அனுபவித்து வருகிறார். அவர், ‘என் மகனிடம் சொல்லி, இந்திர ஏகாதசி விரதத்தைச் செய்ய சொல்லுங்கள். அவன் பூலோகத்தில் இந்த விரதத்தைக் கடைபிடித்தால், நான் இங்கு நரகத்தில் இருந்து விடுதலை பெறுவேன். என்னை கரையேற்றும்படி என் பிள்ளையிடம் சொல்லுங்கள்’ என்று என்னிடம் சொல்லி அனுப்பினார். அதைச் சொல்வதற்காகவே தற்போது நான் வந்தேன்’ என்று கூறி முடித்தார் நாரதர்.

தன் தந்தை நரகத்தில் படும் துயரைக் கேட்டு இந்திரசேனன் மனம் வருந்தினான். இருப்பினும் தந்தை விடுதலைப் பெறுவதற்கு ஒரு வழி இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தான். இந்திர ஏகாதசியை கடைபிடிக்கும் வழிமுறையையும் நாரதரிடம் கேட்டறிந்தான். அவர் கூறியபடியே விரதத்தை செய்து முடித்தான். அதன் பலனாக இந்திரசேனனின் தந்தை நரகத்தில் இருந்து விடுதலை ஆகி, சொர்க்கத்தை சென்றடைந்தார்.
இன்னும் பல குடும்பங்களில் ஓரளவுக்கு வசதிகள் இருந்தும், குடும்பத்தில் நிம்மதி இல்லாத தன்மை நிலவுகிறது. இதுபற்றி விவரம் அறிந்த ஜோதிடர்களிடம் போய் கேட்டால், ‘பித்ருக்களின் சாபமே இதற்குக் காரணம்’ என்று கூறுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம் என்பது உறுதி.

நாகபூஜை என்பது புற்றுக்கு பால் வார்ப்பதாகும். நாகசதுர்த்தி அன்று விரதமிருந்து ஸ்நான பானங்களையும் முடித்து, நாகபூஜை செய்யப் புறப்படவேண்டும்.
நாகசதுர்த்தி அன்று சூரிய உதயத்திற்கு முன் எழுந்து காலைக்கடன்களையும், விரதமிருந்து ஸ்நான பானங்களையும் முடித்து, சுத்தமான, உலர்ந்த மடியான ஆடையை உடுத்திக்கொண்டு, நாகபூஜை செய்யப் புறப்படவேண்டும்.
நாகபூஜை என்பது புற்றுக்கு பால் வார்ப்பதாகும். அரசமரமும் வேப்பமரமும் உள்ள இடத்தில் நாகங்களை சிலையாகச் செதுக்கியதைப் பிரதிஷ்டை செய்து வைத்திருப்பார்கள்.
அதற்கு அபிஷேகம் செய்து பூஜிக்கவேண்டும். புற்று கிடைக்காதவர்கள் அன்றைய தினம் பூமியில் பால் விழுந்தாகவேண்டும் என்பதனால் சிலர் எறும்பு புற்றுக்கும் பால் வார்ப்பது உண்டு. பூமியில் பாதாளலோகத்தில் நாகலோகம் இருப்பதால், புற்றின் வழியாக நாகங்களுக்குப்போய் பால்சேர்ந்து, பால்வார்த்த நம்மை, பாதகம் ஏதும் செய்யாமல், காத்து அருளும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
அரசமரத்தடிக்குச் செல்லும்போது, பஞ்சினால் செய்த கோடி தந்தியம், வஸ்திரம் இவைகளை மஞ்சள் தடவி எடுத்துக்கொண்டும், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம், ஊதுவத்தி, எண்ணெய், திரி, மஞ்சள், குங்குமம், சந்தனம், சுத்தமான தண்ணீர், பசும்பால் இவைகளுடன் ஊறவைத்த எள்ளை வெல்லம் வைத்து அரைத்தும், ஊறவைத்த பச்சரிசியை வெல்லம் வைத்து அரைத்தும் இவைகளை தனித்தனியாக ஏலக்காய்போட்டு நெய்வேத்தியத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவை இரண்டும் தான் நாகசதுர்த்தி நாகபூஜைக்கு நெய்வேத்தியம் ஆகும்.

சிலர் முளைகட்டிய பயிரையும் நிவேதிப்பார்கள். புற்றிருந்தால் முதலில் புற்றுக்கு கொஞ்சம் பாலை வார்க்க வேண்டும். அதன்பின் புற்றுக்கு மஞ்சள் குங்குமம், சந்தனம் இடவேண்டும். நாகப்பிம்பங்களுக்கு முதலில் தண்ணீர் மூன்று முறை அபிஷேகம் செய்யவேண்டும். அதன்பின் பாலை மூன்றுமுறை அபிஷேகம் செய்தபின், மறுபடியும் தண்ணீரை மூன்று முறை அபிஷேகம் செய்ய வேண்டும்.
அபிஷேகம் ஆனபின் நாகங்களுக்கு மஞ்சளை தலை முதல் வால்முடிய தடவி, சந்தனம், குங்குமத்தினால் அலங்கரித்து, பூமாலைகளை அணிவித்து பஞ்சினால் செய்துள்ள கோடிதந்தியம், வஸ்திரம் இவைகளை அணிவித்து, கீழே கோலம் போட்டு, அதற்கும் மஞ்சள், சந்தனம், குங்குமம் புஷ்பங்களினால் அலங்கரித்து, பூ அட்ஷதையுடன் பூஜித்தல் வேண்டும். தேங்காய் உடைத்து, பழம், வெற்றிலை, பாக்கு இவைகளுடன், வெல்லம் கலந்து எள் விழுது, வெல்லம் கலந்த அரிசி விழுது இவைகளையும் நெய்வேதிக்க வேண்டும்.
கற்பூரஆரத்தி எடுத்து மங்களகரமாகப் பூஜை செய்ய வேண்டும். பிரசாதத்தை எடுத்து, நாக சிலைகளுக்கு சமர்பித்து அரசமரத்தை பிரதட்சனை நமஸ்காரங்களுடன் முடிக்க வேண்டும்.

திங்கட்கிழமையில் வரும் அமாசோமம்(அமாவாசை) அன்று சூரியன் முழுமையாக உதிக்கும் முன்பு அரசமரத்தை ஸ்ரீமத் நாராயணனாக பாவித்து வழிபட்டு 108 முறை வலம் வரும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம்.
திங்கட்கிழமை அரச மரத்தை சுற்ற வேண்டும்
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசைக்கு ஒரு சிறப்பு உண்டு. அந்த அமாவாசை எந்த கிழமை வருகிறதோ அதற்கு ஒரு மகத்துவம் மற்றும் பலாபலன் உண்டு.
அமா என்றால் அமாவாசை. சோமம் என்றால் சோம வாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமையை குறிக்கும். திங்கட்கிழமை அமாவாசை வருவது அமா சோமம் என்று அழைக்கப்படுகிறது. அமாசோமம் வழிபாடு செய்வதால் தீர்க்க சுமங்கலியாக வாழலாம். இதற்கு ஒரு புராணகதை உண்டு.
காஞ்சீபுரம் கோவில்கள் நிறைந்த ஊர். இங்கு தேவசுவாமி & தனவதி தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு விஷ்ணு வாசன் என்ற மகனும், குணவதி என்ற மகளும் இருந்தனர்.
குணவதிக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு எடுத்தனர். வசதியான இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண நாளும் குறித்தார்கள்.
திருமணநாள் நெருங்கியது. அதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து வந்தது. திருமணத்திற்கு 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அவர்களது இல்லத்திற்கு சாது ஒருவர் பிச்சை கேட்டு வந்தார். அவர் யாரிடம் பிச்சை வாங்கினாலும் ‘ தீர்க்க சுமங்கலி பவ’, சுப மங்களம் நிலவட்டும் என்று ஆசி வழங்குவார்.
அன்று மணப்பெண்ணான குணவதி அந்த சாதுக்கு பிச்சை போட்டார். அப்போது குணவதியை அந்த சாது ‘ தர்மவதி பவ’ என்று வாழ்த்தினார். இதை பார்த்துக் கொண்டிருந்த குணவதியின் தாயார் தனவதி சாதுவிடம் கேட்டார். ‘ சுவாமி தர்மவதி பவ என்று என் மகளை வாழ்த்தினீர்கள். அதன் அர்த்தம் என்ன? ’’ என்றார்.
அதற்கு சாது பதில் அளிக்காமல், தாயே நீ கலக்கத்துடன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்கிறேன்.
உனது மகள் திருமணத்தின் போது மணமகள் கழுத்தில் மணமகன் மங்கலநாணை அணிவித்து அவர் கழுத்தில் மூன்று முடிச்சுகள் போட்டதும் மணமக்கள் அக்னியை வலம் வருவார்கள். அந்த சடங்குக்கு ‘சப்தபதி’ என்று பெயர். அந்த சடங்கு நடக்கும் வேளையில் மணமேடையிலேயே அவளை கைப்பிடித்த மணமகன் உயிர் விடும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று சோகமாக கூறினார்.
திருமணத்திற்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. இந்த வேளையில் சாது இப்படி சொல்கிறாரே என்று தனவதி கலங்கிப்போனார். அவர் சாதுவிடம் இதற்கு பரிகாரம் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு சாது ஒரு வழி சொன்னார். நீ கவலைப்படாதே. உன் மகள் சுமங்கலியாக வாழ ஒரு வழி இருக்கிறது. கிழக்கு கடலில் ‘சிம்ஹத்வீபம்’ என்ற ஒரு தீவு உள்ளது. அங்கு ‘சோமா’ என்ற மூத்த சுமங்கலி வாழ்கிறார். அவர் மிகுந்த புண்ணியம் நிறைந்தவர். சக்தி மிக்கவர். அவர் முன்னிலையில் உன் மகளின் திருமணம் நடந்தால் எல்லாம் சுபமங்கலமாக இருக்கும். உன் மகள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள் என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்.
அந்த சாது கூறியதை குணவதியின் தந்தையும், அண்ணன் விஷ்ணுதாசனும் கேட்டுக் கொண்டிருந்தனர். தன் தங்கையின் வாழ்வு மங்களகரமாக அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்த விஷ்ணுதாசன் அந்த சாது கூறிய தீவுக்கு சென்றார். அங்கு சோமா என்ற மூத்த சுமங்கலியின் வீடு எது என்பதை தெரிந்து கொண்டார். அப்போது சோமா வீட்டில் இல்லை.
அவரது கணவரிடம் விசாரித்த போது சோமா அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றிருப்பது தெரிய வந்தது. அந்த கோவிலுக்கு விஷ்ணுதாசன் சென்றார். அப்போது அங்கிருந்த மிகப்பெரிய அரச மரத்தை ஒரு மூதாட்டி வலம் வந்து கொண்டிருந்தார். அந்த மூதாட்டியின் பெயரே சோமா என்று தெரிந்து கொண்டார். அந்த மூதாட்டியின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுது நடந்ததை கூறினார். என் தங்கை திருமணத்துக்கு வந்து மணமக்களை வாழ்த்த வேண்டும் என்றார். சோமாவும் அதற்கு சம்மதித்தார்.

சோமா தம்பதிகளுடன் விஷ்ணுதாசன் தனது வீட்டுக்கு சென்றார். அங்கு குணவதிக்கு திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. சோமா தம்பதியரை மனமேடைக்கு முன்பு அமர வைத்தனர்.
மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டியதும் கெட்டிமேளம் முழங்கியது. அடுத்ததாக அக்னியை வலம் வரும் சடங்கு நடந்தது. மணமகளின் வலது கையை பிடித்துக் கொண்டு மணமகன் அக்னியை வலம் வந்த போது திடீரென்று மயங்கி விழுந்து மரணம் அடைந்தான். இதைக் கண்டு திருமணத்துக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். சோமா தம்பதியரும் அதிர்ந்தார்கள். உடனே சோமா பெருமாளிடம் வேண்டினார். நான் மங்கல அட்சதை தூவி ஆசிர்வதித்த மணமகனுக்கு ஏன் இந்த நிலை என்று உருக்கமாக கும்பிட்டார்.
அப்போது சோமாவின் காதுகளில் மட்டும் ஒரு அசரீரி ஒலித்தது. ‘சோமா நீ பல வருடங்களாக சோம வார அமாவாசையன்று கடை பிடித்த விரதப்பலனையும், அரச மரத்தை வலம் வந்த பலன்களையும் மணமகனுக்கு அளித்தால் அவர் உயிர் பெறுவார். மணமக்கள் நிடூழி வாழ்வார்கள்’’ என்றது.
உடனே சோமா மணமகன் அருகில் சென்று தன்அமாசோமவார விரதப் பலன்களை அவருக்கு அளித்தார். உடனே மணமகன் உயிர் பெற்று எழுந்தார். திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் சோமாவை கரம் கூப்பி வணங்கினார்கள். திருமண விழா மீண்டும் களை கட்டியது.
அப்போது சோமா திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பேசினார். நான் பல ஆண்டுகளாக அஸ்வத்த விருட்ச பூஜை செய்து வருகிறேன். அமாவாசை தோறும் அரச மரத்தை 108 முறை வலம் வருகிறேன். திங்கட்கிழமையில் வரும் அமாவாசை அன்று சூரிய உதய நேரத்தில் அரச மரத்தை பூஜித்து வருகிறேன்.
பெண்கள் அரச மரத்தை ஒரு மித்த மனதுடனும், பக்தியுடனும் வலம் வருகிறார்களே அவர்களுக்கு அபரி மிதமான சக்தி கிட்டும். அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்று கூறி ஒரு மந்திரத்தையும் சொன்னார். ‘மூலதோ ப்ரும்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினே அக்ரத் சிவ ரூமாய வருக்ஷ ராகாயதே நம’ என்பதுதான் அந்த மந்திரம்.
அரச மரத்தின் அடிப்பகுதி பிரம்மன், நடுப்பகுதி விஷ்ணு, மேல் பகுதி சிவன் என்று ரிக்வேதமும், புராணங்களும் கூறுகின்றன. இந்த மந்திரமும் இதையே அடிப்படையாக கொண்டது.
திங்கட்கிழமையில் வரும் அமாவாசையை சோமவார அமாவாசை என்றும், அமாசோமப் பிரதட்சிணம் என்றும், அரச மரநாராயண விரதம் என்றும் அழைப்பார்கள்.
அரச மரத்திற்கு சக்தி அதிகம். முப்பெரும் தெய்வங்களும் அரச மரத்தில் ஐக்கியமாகியுள்ளது என்பதை கருத்தில் கொண்டே முப்பெரும் தெய்வங்களும் இணைந்த வடிவமான விநாயகரை அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.
அரச மரம் கரியமில வாயுவை இழுத்துக் கொண்டு பிராண வாயுவை அளிக்கும். அரச மரத்தடியில் அமர்ந்தாலோ வலம் வந்தாலோ உடல் வளம் பெறும். ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்.
அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் சூரிய கிரகணங்களும் அரச மரமும் இணைந்து வெளிப்படுத்தும் கதிர் வீச்சுக்கு அற்புதமான மருத்துவ குணம் உண்டு. பெண்கள் அரச மரத்தை வலம் வந்தால் கர்ப்பப்பை வலுப்பெறும். ஆரோக்கியமான வாழ்வு கிட்டும். ஆண்களுக்கு உயிரணுக்களின் சக்தி அதிகரிக்கும். மாணவ - மாணவிகளுக்கு மூளை நரம்புகளில் ரத்த ஓட்டம் சரியாக இயங்கி நினைவாற்றல் அதிகரிக்கும்.
திங்கட்கிழமையில் வரும் அமாசோமம் அன்று சூரியன் முழுமையாக உதிக்கும் முன்பு அரசமரத்தை ஸ்ரீமத் நாராயணனாக பாவித்து வழிபட்டு 108 முறை வலம் வரும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம். அவர்களுக்கு உடலில் அபரிமிதமான சக்தியும் கிடைக்கும்.