என் மலர்
முக்கிய விரதங்கள்
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம்.
ஏழுமலையான், தனக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம்தான், அதிலும் சனிக்கிழமைதான் எனக்கு உகந்த நாள் என்கிறார். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அந்த கதை வருமாறு:-
மன்னன் தொண்டைமானுக்கு ஏழுமலையான் மீது பற்றும், பாசமும் அதிகம். எனவே திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். அதன்படியே பூஜையும் செய்து வந்தான். ஒருநாள் பூஜையின்போது பொன்மலர்களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுவதைக் கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண்மலர்கள்தானா எனக் கூர்ந்து நோக்கினான்.
அவை மண்மலர்கள்தான் என்பதை மீண்டும் மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன. கதவுகள் அனைத்தையும் மூடி விட்டு மன்னன் மீண்டும் பூஜையைத் தொடர்ந்தபோதும் அவ்வாறே நிகழ்ந்தது. மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.
குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் ஏழுமலையான் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார்.
பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம். பீமய்யாவும், தனது கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் ஏழுமலையானின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான்.
இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயங்களில்தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களி மண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான். காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகி விட்டது. இது இப்படியிருக்க, குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவொன்றைக் கண்டான்.

அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, `தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும், அந்தப் பூஜையை நீயும் செய்து பார், அப்போது உண்மை விளங்கும்‘ என்று கூறி மறைந்தார். தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான்.
தினமும் செய்வது போலவே, பீமய்யன் தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலை அருகே அமர்ந்து மண்பாண்டங்களை செய்து கொண்டே, கண்மூடி மண் மலர்களைத் தூவி இறைவனை வழிபடுவதை கண்டான் தொண்டைமன்னன். உடனே பீமய்யனைச் சென்று கட்டித் தழுவிய தொண்டைமான் அவனிடம், `உன் பக்தி உயர்வான பக்தி.
உனது வழிபாட்டைத் திருமால் ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன்’ என்றான். இதற்கிடையில் அந்தப் பரந்தாமன் பீமய்யனின் கனவிலும் தோன்றி, `உன் பக்தி யின் பெருமையை என்று பிறர்கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்துக் கொள்வேன்’ எனக் கூறியிருந்தார்.
அதன்படியே தொண்டைமான், பீமய்யனின் பக்தியை பாராட்டியதைக் கேட்ட மறுகணமே அவனுக்கு முக்தி கிடைத்தது. எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியரு மகத்துவம் இருக்கிறது.

புரட்டாசி மாதங்களில் அவரவர் குடும்ப வழக்கப்படி விளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது சிறப்பு. அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.
ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி மாதம் திகழ்கிறது.
புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குதல் வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி விளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

ஒருவனுக்கு நவராத்திரி நாட்களில் நியமமாகப் பூஜை நடத்துவதற்குப் போதிய வசதி இல்லாமலிருந்தால் அவன் அஷ்டமி தினம் அவசியம் விரதமிருந்து பூஜிக்க வேண்டும்.

ஏனென்றால் தட்சனின் யாகத்தை அழித்த பத்ரகாளி அஷ்டமி தினத்தன்று தோன்றினார். எனவே அன்று பூஜைகளை விசேஷமாகச் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல கம்சனை அழிக்க கிருஷ்ணன் அவதரித்த அதே அஷ்டமி தினத்தன்று தான் மகா மாயையான துர்க்கையும் நந்தகோபன் இல்லத்தில் அவதரித்தாள்.
ஆகவே துர்க்காஷ்டமி மிகுந்த விசேஷமுடையது. சக்தியற்றவர்களாக இருப்போர் நவராத்திரி விரதத்தில் பூஜை செய்வதற்கு மிகவும் முக்கியமான நாட்கள் சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களாகும். இந்த மூன்று நாட்களும் உபவாசத்தோடு பூஜித்தால் ஒன்பது நாட்கள் பூஜித்த பலன் கிடைக்கும்.
நவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நல்ல பயன் அடைவார்கள்.

துர்க்கை தீயவைகளை அழிப்பவள், துர்க்கை மகிஹாஹீரன் என்ற அசுரனை அழிக்க உருவானவள். நவராத்திரிக்கு விரதமிருந்து வழிபாடு செய்தால் எதிரிகளின் தொல்லை அகலும்.
துர்க்கை, ஆதிபராசக்தி, பார்வதி, சக்தி, பவானி, காளி என பல பெயர்களைக் கொண்டவள். போர் கடவுளாக பார்க்கப்படுபவள், வணங்கப்படுபவள். தீயவைகளை அழிப்பவள், துர்க்கை மகிஹாஹீரன் என்ற அசுரனை அழிக்க உருவானவள். ஆக்கப் பூர்வ உயர் சக்தி கொண்டவள்.
* முதல் வலது கையில் சக்கரம் கொண்டவள். இது வாழ்வின் தர்மத்தினை கூறுவது, அதுபோல வாழ்வில் கடமைகளைச் செய்ய வேண்டும் என்பதாகும்.
* இரண்டாவது வலது கையில் கத்தி உள்ளது. தீயவைகளை அதாவது நம்மிடம் உள்ள தீயவைகளை ஒருவர் வெட்டி எறிய வேண்டும்.
* மூன்றாவது வலது கையில் கதைஉள்ளது. ஆஞ்ச நேய பகவானை நினைவுறுத்துவது. பக்தியும் சரணா கதியும் வேண்டுமென அறிவுறுத்துவது. விளைவுகளை இறைவனின் ஆணை என ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மன உறுதி வேண்டும் எனக் கூறுவது.
* நான்வது வலது கை ஆசிர் வாதமும், மன்னிப்பும் வழங்குகின்றது. நம்மை நாமே நமது தவறுகளை உணர்ந்து மன்னித்துக் கொள்ள வேண்டும்.
* துர்க்கை அம்பாளின் இடது முதல் கையில் சங்கு இருக்கின்றது. இது மகிழ்ச்சியை குறிக்கின்றது. நமது அன்றாட கடமைகளை மகிழ்ச்சியுடன் பணியாற்ற வேண்டும் எனக் கூறுகின்றது.
* வில்லும் அம்பும் இரண்டாவது கையில் இருக்கின்றது. ஸ்ரீராமனைப் போன்று வாழ்க்கையில் பல சோதனைகள் வந்த பொழுதும் பண்புகளை இழக்காது இருக்க வேண்டும் என்று பொருள் கூறுகின்றது.
* தாமரை மூன்றாவது இடக்கையில் இருக்கின்றது. உலக வாழ்வில் இருந்தாலும் அதில் ஒட்டாது இருக்க வேண்டும். அசுத்தமான குளத்தில் இருந்தாலும் தாமரை பூத்தாலும் மிக சுத்த மாக மலர்ச்சியாய் இருப்பது போல் வாழ்வில் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்பதனை தாமரை உணர்த்துகின்றது.
துர்க்கை நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வையுடன் அழகாகத் திகழ்கிறாள். வீரத்தின் தெய்வம். சிவ பிரியை. இச்சா சக்தி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள். இவளைக் கொற்றவை என்றும், காளி என்றும் குறிப்பிடுவார்கள்.
நவராத்திரிக்கு துர்க்கையை விரதமிருந்து வழிபாடு செய்தால் எதிரிகளின் தொல்லை அகலும்.

நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும், அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும்.
சரஸ்வதி பூஜை அன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபாடு செய்ய இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும். சந்தனம், தெளித்து குங்குமம் இட வேண்டும்.
சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட் களுக்கும் சந்தனம் தெளித்து குங்குமம் இடவும், படத்திற்கு பூக்கள் வைத்து அலங்கரிக்க வேண்டும்.
அன்னையின் திருவுருவின் பார்வையில் புத்தகங்களா வைத்து அதன் முன்பாக வாழையிலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும்.
சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாக படைக்கலாம். வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும். செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும். இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும்.
எதற்கும் விநாயகரே முழு முதலானவர், எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து சுக்லாம் பரதரம் விஷ்ணும் சஸிவர்ணம் சதுர்புஜம்! ப்ரசந்த வதனம் தீயாயேத் சர்வ விக்நோப சாந்தயே’ என்று கூறி விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.
சரஸ்வதி பூஜையின் போது ‘துர்க்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம’ என்று கூறி பூஜையை ஆரம் பிப்பது நன்று. பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். கலசம் வைத்து அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும்.
பூஜையின் போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உள்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். சகலகலாவல்லி மாலை பாடல்களை பாராயணம் செய்யலாம்.
நவராத்திரி நாட்களில் அன்னை யின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும், அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும்.

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும்.
புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும்.
அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது. கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.
ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம்.
காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.
புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம்.
ஜேஷ்டா விரதம், மகாலட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, சஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.

மவுனமான மனதால் அம்பிகையை வேண்டுவதும், விரதமிருந்து பூஜிப்பதும் மிகச் சிறந்த பலன் அளிக்கும் என்பது முன்னோர் அறிவுரை என்பதனையும் அறிவோம்.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை நாம் மிக மிக விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். புத்தகங்கள், கலை கருவிகள், தொழிற்சாலை இயந்திரங்களை இவற்றிற்கு சந்தனம், குங்குமம் பூசி சாற்றி பூஜித்து சர்க்கரை பொங்கல், கொண்டைக்கடலை, சுண்டல் நைவேத்யம் என்பது நம் வழக்கத்தில் உள்ளது.
விஜயதசமி அன்று வெற்றி நாள். சிறு குழந்தைகளுக்கு கல்வி, கலை ஆரம்பிப்பது இன்று மிக மிக சிறப்பானது. (பூஜை என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. ஆத்மார்த்தமானது. வெளி பகட்டு ஆடம்பரங்கள் தேவையில்லை. எனவே ஒழுக்கமான பக்தியோடு அழகாக நவராத்திரி கொண்டாடுவோம்).
சிறிய இடம் கொலு வைக்க நகர் புறங்களில் சவுகர்யம் இல்லை. நேரம் இல்லை என்று அங்கலாய்க்கத் தேவையில்லை. மனம் தான் கோவில் சிறிய அலமாரி அல்லது ஒரு தட்டு இருந்தால் கூட போதும். முதலில் அதனை நன்கு சுத்தம் செய்யுங்கள். அதனை மேலும் கீழும் உள்ள சாமான்களை முறையாய் அடுக்கி வையுங்கள். புத்தகங்கள், வாட்ச், செல்போன் போன்றவை மற்ற பொருட்களை 10 நாட்களுக்கு சிறிது இடம் மாற்றி வையுங்கள். தரையில் கூட மனைபோட்டு செய்யலாம். பூஜை செய்யும் இடம், அல்லது ஏற்கனவே சாமி படங்கள் இருக்கும் இடத்தினை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் நீர் தெளித்து புனிதமாக்குங்கள்.
மாலை அமாவாசை அன்று சாமி படங்களை நன்கு துடைத்து மஞ்சள், சந்தனம், குங்குமம் இடுங்கள். இவற்றில் பூக்களை வையுங்கள். குத்து விளக்கோ, காமாட்சி விளக்கோ, அகல் விளக்கோ நன்கு சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம், சந்தனம் இடுங்கள். நெய் விட்டு விளக்கேற்றுவது மிகச் சிறந்தது. நெய்யினை சுத்தமான ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனை சுடுநீரினுள் வைத்தால் உருகிவிடும். நேராக அடுப்பில் வைத்து சூடு செய்யாதீர்கள். நெய் ஊற்றிய பின்பு திரியை அதில் அனைத்து விளக்கு ஏற்றுங்கள்.
விளக்கிற்கு பூ சூட்டுங்கள், ஊதுவத்தி, சாம்பிராணி ஏற்றுங்கள். வீடும் சுத்தமாக இருக்க நீங்களும் சுத்தமாக இருக்க வேண்டும். என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள். எல்லா மொழிகளும் அழகானவையே. சமஸ்கிருதத்திற்கு தேவ பாஷை என்ற பெயர் உண்டு. அம்பிகையை போற்றி அநேக ஸ்லோகங்கள் சமஸ்கிருத மொழியில் உண்டு. ஆனால் அதனை தவறாக உச்சரிக்கக் கூடாது. எனவே நல்ல தமிழ் பாடல்கள், அபிராமி அந்தாதி போல் உள்ளன. அவைகளில் உங்களால் முடிந்ததனை 5 நிமிடம் கூட படியுங்கள். ஆரம்பிக்கும் பொழுது கணபதியினை வணங்கி, குருவினை வணங்கி பின்னர் அம்பிகை வழி பாட்டினை செய்ய வேண்டும். பூஜையில் நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், கலந்த சாதம் பாயசம், வடை என செய்வது சம்பிரதாயம்.
2 வெற்றிலை, 1 பாக்கு, 2 மஞ்சள் கிழங்கு, உங்களால் முடிந்த பழம், முடிந்தால் தேங்காய் உடைத்து நைவேத்தியம் செய்யுங்கள். நினைவில் கொள்ளுங்கள். பழங்களோ மிக உயர்ந்த நைவேத்தியம், ஏனெனில் பழங்கள் மிகவும் சுத்தமானது. வேண்டிய நாளன்று தேங்காய் உடைக்கலாம் தேங்காய் உடைத்து வழிபடுவது மன கஷ்டங்களை உடைக்கும் என்ற தொரு நம்பிக்கை உண்டு.

சுத்தமான நீர் கொண்டு நைவேத்தியங்களை மூன்று முறை சுற்றி தரையில் நீரை விட்டு விடுங்கள். ஆரத்தி எடுப்பதில் நெய் தீபம் கொண்டு தீப ஆரத்தி செய்யலாம். மாலையில் சுத்தமான தட்டில் நீர் விட்டு சுண்ணாம்பு, மஞ்சள் கலந்து ஆரத்தி எடுத்து வாசலில் கோலத்தின் மேல் விட்டு விடலாம். முடிந்தவரை அரிசி மாவு கோலமே போடுங்கள். ஒரு கொத்து மாவிலையினை வீட்டின் முனைப்பில் தொங்க விடுவது வீட்டின் பண்டிகையினைக் குறிக்கும். அது போலத்தான் கோலத்தில் செம்மண் இடுவதும் வீட்டின் விசேசத்தினைக் குறிக்கும்..
பெண்கள் நவராத்திரி துவங்கும் முன்பு வீட்டிலேயே மருதாணி அரைத்து இட்டுக் கொள்ளலாம். கண்ணாடி வளையங்கள் அணியலாம். இவை மனதினை உற்சாகமாய் வைக்கும். பண்டிகை துவங்கும் முன்பே அசைவ உணவு உண்பவர்கள் அதனை நிறுத்தி விடலாமே. அது போன்று பூஜை அறையில் இயன்றவர்கள் அலங்கார தோரண மின் விளக்குகளை வைக்கலாம். ஒரிருவருக்கு மஞ்சள், சிவப்பு, பச்சை நிறத்தில் சட்டை துணி வைத்துக் கொடுக்கலாம்.
பொரி, கடலை, வெல்லம், அவல் ஆயுத பூஜை அன்று செய்யப்படும் நைவேத்தியங்களில் சிறந்தது. பூஜை சாமான்களில் வெள்ளியாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். செம்பு மிக சக்தி வாய்ந்தது. கலசமாக வைத்து பூஜை செய்பவர்கள் கலச நீரினை பூஜை முடிந்த பிறகு வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். அன்றாடம் ஒரு சுண்டல் என்பது உங்கள் பொருளாதாரம், நேரத்தினைப் பொறுத்து அமையட்டும்.
பொதுவில் மந்திரங்களை உபதேசம் பெற்றே சொல்ல வேண்டும் என்பது விதி. எனவே அவரவர் குடும்ப வழக்கப்படியே செய்வது நல்லது. மவுனமான மனதால் அம்பிகையை வேண்டுவதும், பூஜிப்பதும் மிகச் சிறந்த பலன் அளிக்கும் என்பது முன்னோர் அறிவுரை என்பதனையும் அறிவோம்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள், உபவாசியாக இருந்து பூஜித்த பிறகே உணவருந்தி பஞ்சனை மற்றும் பாயில் படுக்காமல் தரையில் விரிப்புகளில் படுக்க வேண்டும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள், உபவாசியாக இருந்து பூஜித்த பிறகே உணவருந்தி பஞ்சனை மற்றும் பாயில் படுக்காமல் தரையில் விரிப்புகளில் படுக்க வேண்டும். பிரதமைத் திதியில் ஹஸ்த நட்சத்திரம் கூடுமானால் அது உன்னதமான நாளாகும். அந்த நாளில் தேவி தன்னைப் பூஜித்தவருக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுப்பாள் என்று சொல்வார்கள்.
நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கமாகும்.
முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலட்சுமியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.
சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.

நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. ஊசிநூல்கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாட்களில் வரும்போது எண்ணெய் தேய்க்காது நீராடி அந்த விரதத்தை யும் கைகொள்ளலாம். எண்ணெய் எரித்து வழிபடுதலும் செய்யலாம்.
நவராத்திரி விரதத்தை முறையாகக் கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடித்தபின் பால்பழம், பலகாரம் என்பவற்றை உண்டு, நவமியில் உபவாசமிருந்து பத்தாம் நாள் விஜயதசமியன்று காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும். முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒரு நேர உணவுண்டு, கடைசி நாளில் பால் பழம் மட்டும் கொள்ளலாம்.
நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.
குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம். ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள்.
அதேபோன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.

சக்தி வழிபாட்டால் சஞ்சலம் தீர்க்கும் மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரி விழாவை விரதமிருந்து கொண்டாடினால் நலம் யாவும் வந்து சேரும்.
புரட்டாசி மாதம் ஒரு புனிதமான மாதமாகும். கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் இம்மாதத்தில் பெண் தெய்வ வழிபாட்டால் பெருமை சேரும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே சக்தி வழிபாட்டால் சஞ்சலம் தீர்க்கும் மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரி விழாவை விரதமிருந்து கொண்டாடினால் நலம் யாவும் வந்து சேரும்.
ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கும் தெய்வங்களான சிவன், பிரம்மா, விஷ்ணுவின் துணைவியர்களான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை பூக்கொண்டும், பாக்கொண்டும் வழிபட்டால் பிரச்சினைகள் அகலும். தனவரவும் கூடும். வாழ்க்கையில் வெற்றி வாய்ப்புகள் பெருகிக்கொண்டேயிருக்கும். அந்த அடிப்படையில் உருவானதுதான் நவராத்திரி விழா.
சிவனுக்கு உகந்தது “சிவராத்திரி”. அதேபோல அம்பிகையைக் கொண்டாட உகந்தநாள் “நவராத்திரி”யாகும். “நவம்” என்றால் “ஒன்பது” என்று பொருள். “ராத்திரி” என்றால் “இரவு” என்று பொருள். ஒன்பது இரவுகளில் அம்பிகையைக் கொண்டாடி, விரதம் இருந்து வழிபட்டு வந்தால் பொன், பொருள்கள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
அந்த திருநாள் தான் புரட்டாசி மாதம் 5-ம் நாள் 21.9.2017 அன்று நவராத்திரி விழா ஆரம்பமாகிறது. அன்று முதல் இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைக்கத் தொடங்குவர். 28.9.2017 அன்று துர்க்காஷ்டமி, 29.9.2017 அன்று சரஸ்வதி பூஜை, 30.9.2017 அன்று விஜயதசமி நிகழ்வோடு நவராத்திரி முடிவடைகிறது. இந்த நாட்களில் முப்பெரும் தேவியை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப் பெறும்.
ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான் கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக் கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும். எனவே தான் “வீரம்” தரும் துர்க்காதேவியை முதல் மூன்று நாட்களும், “செல்வம்” தரும் லட்சுமியை அடுத்த மூன்று தினங்களும், “கல்விச் செல்வம்” தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அங்ஙனம் வழிபட்டால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.
தேவியின் அருள் கிடைக்கத் தேவர்கள் கடும் தவம் செய்தனர். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளின் பேரருளையும் பெற பிரயாசை எடுத்தனர். தேவர்கள் உடலை அசைக்காமல் தவம் செய்த நாட்களில் எல்லா வஸ்துகளும் அசையாமல் இருந்தன. அதன் நினைவாக கொலு வைத்துக் கொண்டாடுகிறோம்.

கொலு படிகள் அமைக்கும் முறை :
கொலுபடிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும். படிக்கட்டுகளில் வெள்ளை அல்லது மஞ்சள் நிற துணிகளை விரித்து வைக்க வேண்டும். முதல் படிக்கட்டில் கலசத்தை வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு விதத்தில் அலங்காரங்கள் செய்து நவரத்தின மாலைகள் மற்றும் மலர் மாலைகள் சூட்டி வழிபட வேண்டும். அதுபோல் பராசக்தியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக அலங்கரித்துக் கொண்டாட வேண்டும்.
நைவேத்தியப் பொருட்களான வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கடலை, பொறி, தேங்காய், பழங்கள் போன்றவற்றை வைத்து வழிபட வேண்டும்.
கொலுவைக்கும் பொழுது முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.
இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகளின் பொம்மைகள், சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும். மூன்றாவதுபடியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்கவேண்டும்.
நான்காவது படியில் நான்கு அறிவுகொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகள், ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் பொம்மைகள், ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகள், ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்யவேண்டும். எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரின் உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடு நாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும். படிப்படியாக முன்னேறப் படிகளிலே கொலுவைத்து வழிபடவேண்டும்.
இந்த “நவராத்திரி” விரத வழிபாட்டினால் நல்ல வாழ்க்கை அமையும். வெற்றியும், செல்வமும் வீடு தேடி வரும்.
-பரிகாரச் செம்மல் சிவல்புரி சிங்காரம்

முன்னோர் வழிபாடு செய்யாவிட்டால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் கிடைக்காமலே போய் விடக்கூடும். ஆகையால் முன்னோர் வழிபாட்டை மறக்காமல், தவறாமல் செய்யுங்கள்.
மறைந்த முன்னோர்கள் பற்றி மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில் மட்டுமே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். இந்த நாட்களில் பித்ரு தர்ப்பணம் கொடுத்து விட்டால் போதும் என மன திருப்தி கொள்கிறார்கள்.
ஆனால் மாதந்தோறும் வரும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் விரதமிருந்து முன்னோரை வழிபாடு செய்தால், அதற்குரிய பலன்கள் உங்களுக்கு நிச்சயம் முந்தி வரும். இது பலரும் அனுபவிக்கும் யதார்த்தமான உண்மை.
இறந்தவர்களின் திதியை தெரிந்து கொண்டு, அந்த கடமையை தவறாமல் செய்து வருபவர்களைப் பாருங்கள், அவர்கள் அனைவரும் வாழ்க்கையில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கு அவர்களது மறைந்த முன்னோர்களின் ஆசி நிரம்ப கிடைத்து வருவதாக உறுதியாக கருதலாம்.
ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் விரதம் இருந்து மனம் உருகி பித்ருக்களின் ஆசியை கேட்க வேண்டும். நிச்சயம் பித்ருக்கள் உங்களை வாழ்த்துவார்கள்.
இதன் மூலம் கிடைக்கும் முதல் பலன் என்ன தெரியுமா? உங்கள் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தவழும்.
உங்களுக்கு வரும் இன்னல்கள் அனைத்தையும் பித்ருக்கள் தடுத்து அருள்வார்கள். உங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள அத்தனை விஷயங்களும் விலகும்.

நீங்கள் எந்த அளவுக்கு பித்ரு பூஜைகள் செய்கிறீர்களோ..... அந்த அளவுக்கு உங்களுக்கு பலன் கிடைக்கும்.
பித்ரு வழிபாடு செய்ய, செய்ய செல்வமும் சேரும். வறுமை என்பதே உங்கள் குடும்பத்தினருக்கு வராது. நோய்களை தடுத்து காக்கும் சக்தியும் பித்ருக்களுக்கு உள்ளது. அந்த வகையில் நமக்கு சிறு பாதிப்பு என்றாலும் முதலில் ஓடி வருவது பித்ருக்கள்தான்.
சிலர் குல தெய்வ வழிபாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பித்ருக்கள் வழிபாட்டுக்கு கொடுப்பது இல்லை. குல தெய்வ வழிபாட்டுக்கு முன்பு செய்ய வேண்டியது பித்ருக்கள் வழிபாடுதான் என்பதை மறந்து விடக்கூடாது.
பித்ருக்களை உரிய ஐதீகப்படி வழிபட்டால் உங்களின் இந்த பிறவியில் உள்ள தோஷங்கள், பாவங்கள் எல்லாம் விலகும். இதனால் உங்கள் ஆத்மா சுத்தமாகி புனிதம் பெறும். இந்த புனிதம் அதிகரித்தால்தான் நீங்கள் முக்தி பாதைக்கு செல்ல முடியும்.
எனவே முன்னோர் வழிபாடு செய்யாவிட்டால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் கிடைக்காமலே போய் விடக்கூடும். ஆகையால் முன்னோர் வழிபாட்டை மறக்காமல், தவறாமல் செய்யுங்கள்.

மகாளய அமாவாசை அன்று, நாள் முழுவதும் உபவாசம் இருந்து, முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
19-9-2017 மகாளய அமாவாசை
புரட்டாசி மாதத்தில் செய்யப்படும் ஒரு பொது சிரார்த்த முறை மகாளயம் ஆகும். சிரார்த்தம் என்பதற்கு சிரத்தையோடு செய்யப்படுவது என்று பொருள் கொள்ளலாம். புரட்டாசி மாதத்து அபரபக்கப் பிரதமை முதலாக பூர்வ பக்கச் சதுர்த்தி வரையுள்ள காலம் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இறந்த நமது முன்னோர்களுக்கு கர்ம காரியங்களைச் செய்யலாம். இவ்வாறு செய்யப்படும் கிரியையானது, இருபத்தொரு யாகங்களில் ஒன்று என்று கூறப்படுகிறது.
இது பிதுர் தேவதைகளுடைய திருப்தியின் பொருட்டு செய்யப்படும் பிண்ட கருமம். மரணம் அடைந்தவர்கள் நரகம் எய்துவதை தவிர்த்து, அவர்கள் சுகமாய் இருப்பதைக் குறித்து செய்யப்படும் கிரியை, சிறப்பு வாய்ந்ததாகும்.
தெற்கு நோக்கிச் சஞ்சரிக்கும் சூரியனின் தென்பாகத்து நடுப்பாகம், புரட்டாசி மாதத்தில் பூமிக்கு நேராக நிற்கின்றது. அப்போது சந்திரனது (அபரபக்கம்) தென்பாகமும் நேர்க்கோட்டில் நிற்கும். இந்த தருணத்தில் பிதுர் கர்மங்களைச் செய்வது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வபக்கம் என்பது பகல், அபரபக்கம் என்பது இரவு. பூர்வபக்கப் பிரதமை உதயமாகும், இராக்கால முடிவு அமாவாசை, பகற்கால முடிவு பூரணையாகும். இந்த நேரத்தில் பிதுர் கடன் களைச் செய்வது சாலச் சிறந்தது.
சிரார்த்த கர்மங்களுக்குரிய சிறந்த தலங்கள் என சில உள்ளன. அதில் காசி, கயை, பிரயாகை, குருஷேத்திரம், கோகர்ணம், குருஜாங்கலம், புட்கலசேஷத்திரம் முதலியவை முக்கியமானவையாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் இந்த சிறப்பை பெற்று விளங்குகிறது. மேற்கண்ட அனைத்துத் தலங்களிலும், கயை தலத்தில் சிரார்த்தம் செய்வது மிகவும் விசேஷமானது.
தேவர்களின் வருடக் கணக்குப்படி, புரட்டாசி மாதம் நடு ராத்திரியாகும். இந்த நேரத்தில் நிசப்தம் நிலவும். எனவே தேவர்களின் ஆராதனைகளுக்கும், பிதுர்களை உபசரிப்பதற்கும் இதுவே சிறந்த காலமாக கருதப்படுகிறது. சாஸ்திரங்கள், நுண் முறைகள் மற்றும் ஆன்றோர்களின் கூற்றும் அதுவேயாகும். எனவே அந்த காலத்தில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்து கர்மங்களை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.
அன்றைய தினத்தில் மேலே கூறப்பட்ட புண்ணியத் தலங்களுக்குச் சென்று நம்முடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். அவ்வாறு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோவில்களின் முன்பாக இருக்கும் நீர் நிலைகளில் வைத்து தர்ப்பணத்தை செய்யலாம். பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் இதுபோன்ற தர்ப்பண நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசை அன்று, முன்னோர்களுக்கு பிதுர் காரியங் களைச் செய்து கடமைகளை நிறைவேற்ற ஏராளமானவர்கள் குவிவார்கள். அன்றைய தினம் கடற்கரைப் பகுதியே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி காணப்படும். நம் முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த பிதுர் காரியங்களின் காரணமாக, முன்னோர் களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
மகாளய அமாவாசை அன்று, காலையில் எழுந்து வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் குளித்து முடித்து, அருகில் உள்ள கோவில்களில் இருக்கும் நீர்நிலைகளிலோ, அல்லது கடற்கரைப் பகுதியிலோ சென்று பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் உபவாசம் இருந்து, முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும்.
அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைத்து இறைவனை வணங்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில், இறை அடியார்களுக்கு நம்மால் இயன்றவரை அன்னதானம் செய்து மகிழ்வித்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்னோர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்து அவர்கள் நற்கதி அடைவார்கள். அதன் வாயிலாக அவர்களின் தலைமுறையும் நல்ல நிலையை அடையும்.

செவ்வாய் தோஷத்தால் திருமணம் கைகூடாமல் தாமதம் ஆகும் பெண்கள் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு பல வழிபாடுகள் இருந்தாலும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வழிபாடு சிறப்பானது. லட்சுமி நரசிம்மர் படத்தை வீட்டில் வைத்து படத்துக்கு முன்னால் தீபம் ஏற்றி பூஜை பொருட்கள் உபயோகித்து ஸ்ரீநரசிம்மரை வழிபட வேண்டும், நிவேதனமாக பானகம் வைக்க வேண்டும். (நீர்+ ஏலம் + எலுமிச்சை +துளசி+ வெல்லம்= இதன் கலவையே பானகம் ஆகும்). பூஜையை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் (அல்லது) செவ்வாய் ஹோரையில் செய்யவும்.பிரதோஷ காலத்தில் அவசியம் செய்ய வேண்டும்.
சுவாதி நட்சத்திரம் வரும் நாளிலும் இந்த பூஜையை செய்யலாம். பூஜை முடிவில் பக்கத்தில் நரசிம்மர் ஆலயம் இருந்தால் அங்கு சென்று நரசிம்மரை வணங்கி வரவும். நரசிம்மர் ஆலயத்தில் நெய் தீபம் 9 வாரம் போட்டுவருவது மிகவும் நல்லது.

செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளை படைக்கலாம்.அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ‘ஓம் நமோ நாராயணாய’ எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார். தினமும் குளித்துவிட்டு நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, 12, 28 என பாராயணம் செய்ய வேண்டும்.
‘நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே, அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’. நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்.
இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும்.