search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடராஜர் விரதம்"

    • ஆடலரசனுக்கு ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன விழா நடைபெறும்.
    • ஒன்று மார்கழி மாத தரிசனம். மற்றொன்று ஆனி மாத நடராஜர் தரிசனம்.

    ஆனி மாதம் வரும் ஆனி திருமஞ்சன நாளில் விரதம் இருந்து நடராஜப் பெருமானை வழிபட்டு வந்தால்

    தடைகள் அகன்று வியக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும்.

    ஆடலரசனுக்கு ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன விழா நடைபெறும்.

    விரதமிருந்து அதில் கலந்து கொண்டு நடராஜரைத் தரிசித்தால் நலம் யாவும் வந்து சேரும்.

    சிதம்பரம் என்றதும் நம் நினைவிற்கு வருவது நடராஜப் பெருமான் தான்.

    சிவாலயங்களில் நடராஜப் பெருமான், நடனக் கோலத்தில் காட்சி தருவார்.

    ஆடுகிற வாழ்க்கை அழகாக மாறவேண்டுமானால், ஆயக் கலைகள் அறுபத்து நான்கிலும் தேர்ச்சிபெற

    வேண்டுமானால், நாம் வழிபட வேண்டிய தெய்வம் நடராஜப் பெருமானும், சிவகாமி அம்மனும் தான்.

    வருடத்தில் இரண்டு முறை நடராஜருக்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    ஒன்று மார்கழி மாத தரிசனம். மற்றொன்று ஆனி மாத நடராஜர் தரிசனம்.

    அன்றைய தினம் விரதமிருந்து கூத்தபிரானைக் கும்பிட்டு சிவபுராணம் படித்தால் வியக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும். எதிரிகளும் விலகுவர்.

    ஆற்றல் மிக்கவர்களாக உங்களை மாற்றுகிற ஆற்றல் நடராஜப் பெருமானின் அருட்பார்வைக்கு உண்டு.

    இந்த ஆண்டின் ஆனி திருமஞ்சன விரத நாளில் விரதமிருந்து நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள்

    நடப்பதைக் கண்டு வழிபட்டு வந்தால் தடைகள் அகலும்.

    தரிசனத்தால் தனலாபம் பெருகும்.

    ×