என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    மகா விஷ்ணுவின் மனைவியான, செல்வத்தை அளித்தரும் திருமகளின் வடிவமாக வணங்கப்படுகிறது துளசி.
    மும்மூர்த்திகளில் ஒருவராகவும், காக்கும் கடவுளாகவும் வணங்கப்படுபவர் மகா விஷ்ணு. இவரது மனைவியான, செல்வத்தை அளித்தரும் திருமகளின் வடிவமாக வணங்கப்படுகிறது துளசி. அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, பலவிதமான பொருட்களும், தேவ கன்னிகைகளும், தேவர்களும் வெளிப்பட்டனர். அவற்றின் முக்கிய இடம் துளசிக்கு உண்டு. தூய்மையின் மறு உருவமாக விளங்குகிறது துளசி.

    பல இடங்களில் விஷ்ணு பக்தர்களால் விஷ்ணுப்ரியா என்ற நாமத்துடன் துளசி பூஜைகள் நடைபெற்று வருவதே, துளசியின் பெருமையைச் சொல்லும். மரணத்தைக் கூட தள்ளிப்போட வைக்கும் சக்தி துளசிக்கு உண்டு என்கிறது புராணங்கள். நல்ல தேவதைகள் வாசம் செய்யும் துளசியை, உயிரிழந்தவரை அடக்கம் செய்யும்போது சிதையில் சேர்ப்பதால், அவரது பாவங்கள் அகலும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.



    பூலோக வாழ்விற்குத் தேவையான செல்வங்களைப் பெற வீடுகளில் துளசியை வைத்து தூப, தீபங்கள் காட்டி வழிபாடு செய்வது நம் மரபு. துளசியை வளர்ப்பதன் மூலம் தெய்வ அருள் மட்டுமல்ல, வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. மருத்துவ மூலிகையாக செயல்படும் துளசியின் சாறு, பல நோய்கள் குணமாக உதவுகிறது. காற்றிலுள்ள மாசுக்களை அகற்றி தூய காற்றை சுவாசிக்க வைக்கிறது. ஆலயங்களில் துளசி தீர்த்தம் தருவதின் பலன் எண்ணற்றது.

    பெருமாள் தலங்களில் இடம் பிடித்திருக்கும் துளசி, மூல முதற்கடவுளாக விளங்கும் விநாயகப்பெருமானுக்கும் அர்ச்சனைக்குரியதாகிறது. துளசி அர்ச்சனை செய்பவர்களுக்கு, நுண்ணறிவு பலன் கிட்டும்.

    இத்தனை சிறப்பு வாய்ந்த துளசியின் மகிமையைப் போற்றி தினம் வணங்குவோம். வாழ்வில் ஏற்றங்கள் பெறுவோம்.
    அனைத்து தோஷங்களையும் நீக்கும் நாகபூசனி அம்மன், நாகதோஷங்களை நீக்குவதில் பிரசித்திப் பெற்றவள் என்கிறார்கள், இங்கு தவறாது வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்கள்.
    ஆதி காலம் முதலே தமிழர்களிடம் நாகங்களை வழிபடும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. நாகங்களோடு தொடர்புடைய பல ஆலயங்கள், ஊர்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவிலும் பல இருக்கின்றன. தமிழகத்தில் நாகத்தீவு, நாகப்பட்டினம், நாகர்கோவில், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட ஊர்கள், நாகங்களின் பெயர்களை பரப்புரை செய்வதாக அமைந்துள்ளன. ஒரு சில இங்கே இரண்டு நாகர் ஆலயங்களைப் பற்றி பார்க்கலாம்.

    கேரள மாநிலத்தில் அதிக அளவில் நாக வழிபாடு இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு பதினைந்தாயிரம் சர்ப்பக்காவுகள், அதாவது நாகக் கோவில்கள் இருந்திருக்கின்றன என்ற தகவல் அதை மெய்ப்பிக்கும் வகையில் இருக்கிறது. அதிலும் மன்னார்சாலை, வெட்டுக்காடு, பாம்பன்மேக்கோடு போன்ற இடங்கள் இந்திய அளவில் பிரபலமான நாகர் ஆலயங்கள் ஆகும்.

    இதில் மன்னார்சாலை கேரள மாநிலத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சர்ப்பக்காவு நாகராஜா ஆலயம், பக்தர்களிடையே நாடு முழுவதும் பெயர் பெற்ற தலமாகும். இந்த ஆலயத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாக தேவதைகளின் சிலைகளை, பாதையின் இருபுறமும் மற்றும் மரத்தடிகளிலும் காணலாம். இந்தக் கோவில் அதிக சிலைகள் கொண்ட கோவில்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளது.



    கேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஹரிப்பாடு பேருந்து நிலையத்தில் இருந்து, சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்தக் கோவில். கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 115 கிலோமீட்டர் தூரத்திலும், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 125 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.

    சக்தி தேவியின் அவயங்கள் விழுந்த இடங்களில் எல்லாம் சக்தி பீடங்கள் உருவானதாக புராணங்கள் நமக்குச் சொல்கின்றன. அந்த வகையில் சக்திதேவியின் இடுப்பெலும்பு விழுந்ததாக குறிப்பிடப்படும் இடம், இலங்கையின் யாழ்ப்பாணம். அங்கு அமைந்துள்ள நாகபூசனி அம்மன் கோவில் பிரசித்தி பெற்று திகழ்கிறது.

    இந்த ஆலயத்தில் உள்ள சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்து தலை நாகர் சிலை சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. நாகபூசனி அம்மன் கோவில் பழமையானதாக இருந்தாலும், தற்போது புணரமைக்கப்பட்டு பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகை தரும் இடமாக மாற்றப்பட்டிருக்கிறது. பொதுவாக அனைத்து தோஷங்களையும் நீக்கும் நாகபூசனி அம்மன், நாகதோஷங்களை நீக்குவதில் பிரசித்திப் பெற்றவள் என்கிறார்கள், இங்கு தவறாது வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்கள்.

    திருமணம் ஆகாதவர்கள், திருமணம் தள்ளிப்போகிறவர்கள், கடன் பிரச்சினை இருப்பவர்கள் என அனைவரும் வந்து வழிபடும் தலமாக உள்ளது இந்தக் கோவில்.
    திருமணமாகாத பெண்கள் வீட்டில் 16 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி உடனே திருமணம் கைகூடும்.
    கார்த்திகை மாதம் செவ்வாய்க்கிழமை வழிபாட்டின் போது நில பிரச்சினை, சொந்த வீடு வாங்குவதற்கான வேண்டுதல்களை நிறைவேற்ற கோரி பூஜை செய்யலாம்.

    திருமணமாகாத பெண்கள் வீட்டில் 16 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி உடனே திருமணம் கைகூடும்.

    இந்த தீபத்தை ஏற்றும் போது சுவஸ்திக் வடிவில் 16 அகல் விளக்குகளையும் அமைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
    ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கும் தோஷங்களை நீக்குவதற்கு, நாம் அனைவரும் வழிபட வேண்டியது நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கோள்களையே.
    ஒருவர் தனது இப்பிறவியில் அனுபவிக்கும் இன்ப- துன்பங்களுக்கு, ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களும், கர்ம வினைகளுமே காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரங்கள். அப்படி ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கும் தோஷங்களை நீக்குவதற்கு, நாம் அனைவரும் வழிபட வேண்டியது நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கோள்களையே. ஜாதக தோஷம் இருப்பவர்கள், தினமும் குளிக்கும் போது, நீரில் சில பொருட்களை கலந்து குளிப்பதன் மூலமாக அந்த தோஷங்களை நீக்கிக்கொள்ள முடியும் என்கிறார்கள். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

    சூரிய தோஷம் :

    குளிக்கும் தண்ணீரில் சிவப்பு வண்ண மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ சிறிதளவு போட வேண்டும். நான்கு அல்லது ஐந்து குவளை நீரை மொண்டு குளிக்க வேண்டும். அதன்பிறகு சாதாரண தண்ணீரில் குளிக்கலாம். இவ்வாறு செய்வதால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

    சந்திர தோஷம் :

    ஒரு சிலர் முக அழகுக்காக, தயிரை முகத்தில் பூசிக்கொள்வார்கள். சந்திரனால் ஏற்படும் தோஷத்தை போக்கவும், இதைத் தான் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பாக கொஞ்சம் தயிர் எடுத்து, அதனை உடல் முழுவதும் தடவிக் கொண்டு, பிறகு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சந்திரனால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.



    செவ்வாய் தோஷம் :

    திருமணத் தடை ஏற்படுவதற்கு செவ்வாய் முக்கிய காரணமாக இருக்கிறது. செவ்வாய் தோஷத்தால் திருமணத்திற்கு பிறகும் கூட ஒரு சிலருக்கு நிறைய பிரச்சினைகள் வந்து சேரலாம். இதற்கு சிறந்த குளியல் பரிகாரம் ஒன்று இருக்கிறது. வில்வம் பழக் கொட்டையை நன்கு பொடி செய்து, குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வேண்டும். நான்கைந்து குவளை நீரை இதுபோல் குளித்துவிட்டு, பிறகு சாதாரண தண்ணீரில் நீராடலாம். இதனால் செவ்வாய் தோஷம் அகலும்.

    புதன் தோஷம் :

    இந்த தோஷம் நீங்குவதற்கு கடல் நீரோ அல்லது கங்கை நீரோ தேவைப்படும். மஞ்சள் மற்றும் கடுகு ஆகிய இரண்டையும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, அதில் தேனை கலக்க வேண்டும். தொடர்ந்து இந்தக் கலவையை சிறிதளவு கடல் நீர் அல்லது கங்கை நீரில் கலந்து கொள்ள வேண்டும். பிறகு நாம் குளிக்கும் நீரில் இதனை கலந்துவிட்டு நீராட வேண்டும்.

    குரு தோஷம் :

    கருப்பு ஏலக்காயை நீரில் நன்கு கொதிக்க வைத்து, அதனை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வருவதன் மூலமாக வியாழ பகவான் என்று அழைக்கப்படும் குருவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.



    சுக்ர தோஷம் :

    பச்சை ஏலக்காயை நீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை, நாம் அன்றாடம் குளிக்கும் நீரில் கலந்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக சுக்ர தோஷம் விலகும்.

    சனி தோஷம் :

    கருப்பு எள் வாங்கி அதனை நீரில் நன்கு கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் சனி தோஷம் நீங்கப்பெறலாம்.

    ராகு-கேது தோஷம் :

    அருகம்புல்லை, நீரில் நன்றாக கொதிக்கவைத்து, பின்னர் அதை குளிக்கும் தண்ணீரில் கலந்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதால் ராகு-கேது தோஷம் அகலும்.
    ஏழரை சனியின் போது சனி பிறப்பு ஜாதகத்தில் சந்திரனை கடந்து செல்வார். அப்போது வாழ்க்கையில் பல மறக்க முடியாத பாடங்களை கற்றுக்கொடுத்து விடுகிறார்.
    குழந்தைகளுக்கு ஏழரை சனி நடக்கும்போது தாய்க்கு உடல்நலம் பாதிப்பு, குழந்தை படும் சிரமத்தால் மனக்கவலை, தந்தைக்கு அதிக செலவுகள், குழந்தையால் உண்டாகும் செலவாகவும் இருக்கலாம். வருமான குறைவு இருப்பதையும் காண்கிறோம். இக்காலகட்டத்தில் குழந்தைகளை அதிகம் கண்டிக்காமல் இருப்பது நல்லது. இல்லையேல் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள்.

    சிறு குழந்தைகள் எனில் அடிக்கடி உடல்நலக்குறைவு உண்டாவதும், பத்து வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எனில் அதிக பிடிவாதம், கல்வியில் கவனம் செலுத்தாமை, வீட்டுப் பாடம் செய்யாமல் அலட்சியம், பள்ளியில் குறும்பு செய்து, புகார் வருதல் என ஏழரை சனி படுத்தும்.

    சனிக்கிழமை அக்குழந்தைகளை அழைத்து சென்று அருகில் இருக்கும் சிவன் கோயிலில் உள்ள நவகிரகங்களில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

    சனிக்கிழமை காக்கைக்கு சாதம் வைப்பது, ஆஞ்சநேயரை வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.
    பொதுவாக ராகு கேது பாம்பின் வடிவம் என்பதால், இவர்களால் வரும் தோஷம் நாக தோஷம் என்ற பெயரை சூட்டிக்கொண்டது.
    பொதுவாக ராகு கேது பாம்பின் வடிவம் என்பதால், இவர்களால் வரும் தோஷம் நாக தோஷம் என்ற பெயரை சூட்டிக்கொண்டது. அதோடு இவர்கள் ஓன்று எழில் அல்லது இரண்டு எட்டில் இருந்தால். கடும் பாதிப்புக்களை தருவதாகவும், நான்கில், பனிரெண்டில் இருந்தால் பாதியளவு பாதிப்பை தருவதாகவும் ஜோதிடம் சொல்கிறது. அதற்கான விளக்கம் இதுதான்.

    தாமத திருமணம், தாம்பத்திய தகராறு, கணவன் மனைவி அன்னியோனியம் குறைவு, பிறதார சேர்க்கை அல்லது பிரிவு என்றெல்லாம் பட்டியலில் ஒரு பகுதி.
    ஆராய்ந்து பார்ப்போம். முதலில் லக்னம். ஒரு ஜாதகரின் குணத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி. அங்கே பாம்பு கிரகங்கள் அமர்வதால் ஜாதகர் முரண்பட்டவராக காட்சி அளிப்பார். நம்பகத்தன்மை என்பது குறைவு. ஏழில் இவர்களில் ஒருவர் இருந்தால் மணமேடை பாக்கியத்திற்கு தடை உத்தரவு வந்து விடும்.

    முறையற்ற உறவுகளில் முனைப்பும் ஆர்வமும் காட்டுவார்களாம். அது சுக்கிரன், செவ்வாய், சனி, சந்திரன் போன்ற ஏதாவது ஒரு கிரகங்களின் சேர்க்கை இருந்தால் கண்டிப்பாக மறுபக்கம் என்பது இருந்தே தீரும். இது பலன். பாம்பின் கால் பாம்பறியும். இருவரும் ஒரே குணம் கொண்டவராக இருக்கும் போது, தவறுகள் நடக்காது. பொண்ணுக்கு இருப்பின் மாங்கல்ய பலம் குறைவு. குடும்ப வாழ்வில் குளறுபடி, ஆணுக்கு இருந்தால் நோய், கடன், எதிரி, கண்டம். இருவருக்கும் இருந்தால்? எதுவும் எல்லை மீறி போகாது. ஆனாலும் பண பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும். குடும்ப சந்தோசம் கூடி குறையும்.
    திருவிடைமருதூர் திருத்தலம் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகார திருத்தலமாக இன்றளவும் சிறந்து விளங்குகிறது.
    திருவிடைமருதூர் திருத்தலம் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பரிகார திருத்தலமாக இன்றளவும் சிறந்து விளங்குகிறது. ஆம்! பாண்டிய மன்னன் வரகுணபாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தையும், வீரஸேனன் என்னும் மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தையும் அகற்றிய புண்ணியபூமி திருவிடைமருதூர் ஆகும்.

    இத்தலத்தில் பிரம்மஹத்திக்கு தனி சன்னிதி உள்ளது. ஒருவருக்கு திருமணத்தடை காலம் தள்ளிக்கொண்டேபோகுதல், புத்தி சுவாதினம் இல்லாமல் இருத்தல், போதல், மருத்துவத்துக்கும் கட்டுப்படாத நோய்களால் அவதிப்படுதல், செய்யாத குற்றத்திற்காக ஜெயில் தண்டனை அனுபவித்தல், உத்தியோகத் தடை உண்டாதல், கணவன்-மனைவி பிரச்சினை, தொழிலில் பெரும் நஷ்டம், புத்திர பாக்கியத் தடை, புத்திர சோகம் முதலியன பிரம்மஹத்தி தோஷத்தாலேயே ஏற்படுகின்றன.

    ஒருவன் செய்யாத தவறை, செய்தான் என சொல்லும் பொய்கள் கூட பாவங்களாகின்றன. முன்பின் அறியாதவர்களுக்கு பணத்திற்காக துன்பம் விளைவித்தல், நல்ல குடும்பத்தை பொல்லாங்கு சொல்லி பிரித்தல், செய்வினை செய்தல், செய்வினை செய்பவர்களுக்கு துணை போகுதல், திருமணத்திற்கு முன் உறவு கொண்டு பின் வேறு ஒருவரை மணம் புரிதல்,



    திருமணத்திற்கு பின் வேறொரு பெண்ணை அல்லது ஆணை விரும்புதல், நம்பிக்கை துரோகம் செய்தல், நன்றாக வளர்ந்து வரும் மரம் செடி கொடிகளை வெட்டி எறிதல், கருகலைப்பு செய்பவர்கள் ஆகியோரையும் பிரம்மஹத்தி தோஷம் எளிதில் அண்டிவிடுகிறது. இந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கி நிவாரணம் பெற, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் வழிபாடு செய்வது சிறந்ததாக கூறப்படுகிறது.

    திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் வழியாக வெளிவராமல், அம்பாள் பெருநலமாமுலையம்மை சன்னிதியில் வழிபட்டு, அம்பாள் மூகாம்பிகையையும் வழிபாடு செய்து அதன் அருகில் உள்ள வாசல் வழியாகத்தான் வெளிவர வேண்டுமாம். அப்படிச் செய்வதால் பிரம்மஹத்திக்கு நிகரான சகல பாவங்களும் இத்தல பிரம்மஹத்தியிடம் சேர்ந்து, மீண்டும் அவை நம்மை அண்டாது என்கிறார்கள்.

    திருவிடைமருதூரில் தினமும் காலை 8 மணி, 9 மணி, 10 மணிக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவாரண பரிகாரம் செய்கிறார்கள்.
    இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை 2-12-2017 (சனிக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் திருமணத் தடை அகலும்.
    ஒவ்வொரு மாதமும் கார்த்திகை வந்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையை மட்டுமே ‘திருக்கார்த்திகை’ என்று அழைக்கிறோம். அந்த நாளில் கார்த்திகேயனை நினைத்து விரதமிருந்து வழிபட்டு செவ்வாய் தோஷம் நீங்க வழியமைத்துக் கொள்ளலாம்.

    புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி விழாவில் சக்தி வழிபாட்டை ஒன்பது நாட்கள் கடைப்பிடித்தப் பிறகு, அடுத்து வரும் கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

    இடையில் வரும் ஐப்பசியில் கந்தசஷ்டி விழாவையும் கண்டுமகிழ்ந்து விரதமிருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தோஷங்கள் விலகி சந்தோஷங்கள் வந்து சேரும். இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை 2-12-2017 (சனிக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் திருமணத் தடை அகலும்.
    தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
    மனதால் கூட பாவம் செய்யக்கூடாது. பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகம்தான் கலியுகம். நாம் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய ஆலயங்களை நோக்கியும் அடியெடுத்து வைக்கின்றனர்.

    தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று (1-12-2017) வெள்ளிக்கிழமை, இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். சிட்டி விளக்குகளை வீட்டின் வாசல் படிகளிலும், உள்ளே உள்ள வாசல்களிலும் படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைப்பது மரபு. வீட்டில் நல்லெண்ணெயிலும், முருகன் முன்னிலையில் இலுப்பெண்ணெயிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

    அப்பொழுதுதான் அஷ்டலட்சுமியும் உங்கள் வீட்டில் அடியெடுத்து வைக்கும். ஐஸ்வரியம் பெருகும். அன்றைய தினம் பிரதோஷமும் வருகின்றது. எனவே நந்தியெம்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.
    ராகுகால வேளையில், துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், வீட்டின் சின்னச் சின்னக் கஷ்டங்கள் கூட, காணாமல் போய்விடும் என்பது ஐதீகம்.
    ராகுகால வேளையில், துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், வீட்டின் சின்னச் சின்னக் கஷ்டங்கள் கூட, காணாமல் போய்விடும் என்பது ஐதீகம்.

    அம்பாளுக்கு உகந்த செவ்வாய்க் கிழமையில், சிவாலயங்களில் துர்கை அம்மன் கோஷ்ட தேவதையாகக் காட்சி தருவாள். அதேபோல், அம்மன் கோயில்களில், துர்காதேவி கோஷ்டத்திலும் இருப்பாள். சில கோயில்களில் தனிச்சந்நிதியாகவும் வீற்றிருப்பாள்.

    எனவே எந்த அம்மனாக இருந்தாலும், செவ்வாய்க்கிழமையான இன்று ராகுகால வேளையில், அதாவது மாலை 3 முதல் 4.30 மணி வரையிலான ராகுகாலத்தில், ஆலயம் சென்று, தேவியை மனதாரப் பிரார்த்தனை செய்து, எலுமிச்சை தீபமேற்றினால் துன்பங்கள் பறந்தோடும். இந்த நாட்களில் செந்நிற மலர்களை அம்மனுக்குச் சாத்துவது மிகவும் நல்லது.

    வீட்டின் கஷ்டங்களும் துக்கங்களும் பறந்தோட ராகுகால வேளையில், துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள்.
    நம் கண்களுக்கு தெரியாமல் நம்முடைய கோரிக்கைகளை இறைவனிடம் சேர்ப்பிக்கும் சிறந்த பணியை ஹோமங்களில் வளர்க்கப்படும் அக்னி செய்து கொண்டிருக்கிறார்.
    ஒருவருக்கு ஜாதக ரீதியாக ஏற்படும் தோஷங்களுக்கும், வீட்டிலும் தொழில் முறையிலும் நடக்கும் விரும்பத்தகாத பிரச்சனைகளுக்கும் பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி தேடுவது நல்ல பலன் தரும். அதிலும் தோஷ பரிகாரங்களில் மிகவும் உயர்வாக கருதப்படுவது, ஹோமங்கள். இது இன்று நேற்றல்ல, புராண காலத்தில் இருந்தே தாங்கள் விரும்பிய காரியங்கள் வெற்றி அடைய சித்தர்களும், யோகிகளும், அறிவில் சிறந்த ஞானிகளும், நாடாளும் அரசர்களும் ஹோமங்கள் செய்து தங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்துள்ளனர்.

    பரிகார ஹோமங்களில் வளர்க்கப்படும், அக்னி மற்ற தெய்வங்களின் தூதர் போல செயல்படுகிறார். நம் கண்களுக்கு தெரியாமல் நம்முடைய கோரிக்கைகளை இறைவனிடம் சேர்ப்பிக்கும் சிறந்த பணியை ஹோமங்களில் வளர்க்கப்படும் அக்னி செய்து கொண்டிருக்கிறார்.

    இதில் சில முக்கியமான ஹோமங்களையும், அது செய்வதால் கிடைக்கும் பலன்களையும் பார்ப்போம்.

    கணபதி ஹோமம் (தடைகள் நீங்க): ஹோமங்களில் தலையாயது, முழுமுதற் கடவுளான கணேசனுக்கு செய்யப்படும் கணபதி ஹோமம். எந்த ஒரு புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும், கணபதி ஹோமம் செய்வது சிறப்பு. இதனால்,தொழில் மட்டுமின்றி, நமது உடல், மனம், மற்ற விஷயங்களில் ஏற்படும் தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும்.

    வெள்ளிக்கிழமை, மற்றும் சதுர்த்தி நாட்களில் விடியற்காலையில் ஹோமம் செய்வது விசேஷம். இதற்கான ஹோமத்திரவியங்கள், அஷ்டத்திரவியம் மற்றும் தேங்காய்த்துண்டு. குறிப்பாக 1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்தால் செல்வம் வளரும்.

    அவஹந்தி ஹோமம் (நாடு செழிக்க): அவஹந்தி ஹோமம் நடத்துவதால், விவசாயத்தில் நல்ல மகசூல் ஏற்படும் என்பது நம்பிக்கை. இன்றுள்ள காலகட்டத்தில், நாடு பசுமைப்புரட்சியில் சிறக்கவும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும், இந்த ஹோமம் அவசியமாகிறது.



    ஆயுஷ்ய ஹோமம் (குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு): குழந்தையின் நீண்ட ஆயுளுக்காகவும், தேக ஆரோக்கியத்தை முன்னிட்டும் ,குழந்தை பிறந்த முதலாம் ஆண்டில் இந்த ஹோமம் நடத்தப்படுகிறது. மருந்தால் குணப்படுத்த முடியாத வியாதிகளைக் கூடஇந்த ஹோமம் செய்வதன் மூலம் தீர்த்துவிடலாம்.

    மிருத்தியஞ்ச ஹோமம் (ஆயுள் விருத்தி): ஒருவரின் பிறந்த நாளன்று சிவபெருமானுக்காக செய்யப்படும் ஹோமம் மிருத்தியஞ்ச ஹோமம் ஆகும். அகாலமரணத்தை தவிர்ப்பதற்காகவும், ஆயுள் விருத்தியடையவும் , நீண்டநாட்களாக தொடரும் வியாதிகளில் இருந்து விடுபடவும் இந்த ஹோமம் செய்யப்படுகிறது.இதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வு கிட்டும்.

    லட்சுமி ஹோமம் (செல்வ விருத்தி): 16 வித செல்வங்களை அடையவும், சர்வமங்களங்களை அடையவும், மேன்மையை அடையும் பொருட்டும் இந்த ஹோமம் செய்யப்படுகிறது. எதிர்மறை சக்திகள் மற்றும் சாபங்களை நீக்கி நம் இல்லத்தில் செல்வ செழிப்பிற்கு வழிவகுக்கவும் லட்சுமி ஹோமம் செய்தல் நலம்.

    வித்யா ஹோமம் (கல்வி கேள்விகளில் சிறக்க): மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறவும், புத்திகூர்மை ஏற்படவும், ஞானம் விருத்தியடையவும், நினைவாற்றல் பெருகவும், உயர்கல்வி வாய்ப்பு கிட்டவும், செய்யும் தொழிலில் முன்னேற்றம் காணவும் வித்யா ஹோமத்தை நடத்த வேண்டும்.

    மங்கள சமஸ்கரண ஹோமம் (சந்தான பாக்கியம்): திருமணம் ஆகி நீண்டகாலமாக குழந்தைக்காக ஏங்கும் தம்பதிகள் நடத்த வேண்டிய ஹோமம் மங்கள சமஸ்கரண ஹோமம் ஆகும். குழந்தை பாக்கியம் பெற இந்த ஹோமத்தை நடத்தலாம்.

    கனகதாரா ஹோமம் (திறன்கள் மேம்பட): பரம ஏழையையும் செல்வந்தன் ஆக்கிவிடும் ஹோமம் கனகதாரா ஹோமம் . ஒரு மனிதனின் வெற்றிக்கு மூலகாரணமாக இருக்கும் அவனது திறமையை வெளிகொணர்ந்து அவனை மேன்மை அடையச் செய்யும் ஹோமம் இது.

    ஹோமங்கள் நம் வாழ்வில் மலர்ச்சியையும் மேன்மைகளையும் கொண்டு வரட்டும்.
    குழந்தைபேறு இல்லாதவர்கள் கபிஸ்தலத்தில் இறைவிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு குழந்தை பேறு உறுதி என்கின்றனர் பக்தர்கள்.
    தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டுமே என்று கன்னிப்பெண்கள் கவலைப்படாத நாளே இருக்க முடியாது. இந்தக் கவலை தீர அவர்கள் வேண்டாத தெய்வங்களும் இருக்க முடியாது. இவர்களது கவலையைத் தீர்க்கும் அன்னை கபிஸ்தலத்தில் இருக்கிறாள்.

    ஆம்! கீழ கபிஸ்தலத்தில் உள்ளது ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். இறைவன் பெயர் ஏகாம்பரேஸ்வரர். இறைவி பெயர் காமாட்சி அம்பிகை. ஆலயம் கீழ்திசை நோக்கி உள்ளது.

    குழந்தைபேறு இல்லாதவர்கள் இங்கு நடைபெறும் பிரதோஷத்தில் 11 நாட்கள் கலந்து கொண்டு இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு குழந்தை பேறு உறுதி என்கின்றனர் பக்தர்கள்.

    திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் வேண்டும் என இறைவியிடம் முறையிடுகின்றனர். அத்துடன் கண்ணாடி வளையல்களை மாலையாகக் கோர்த்து, அன்னையின் கழுத்தில் அணிவித்து வணங்குகின்றனர். பின், அந்த வளையல்களை பிற பெண்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கின்றனர்.

    அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறது. 90 நாட்களுக்குள் அந்தப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாவது உறுதி எனக் கூறுகின்றனர் பக்தர்கள்.

    கல்யாணமாகாத கன்னிப் பெண்களை தன் பெண்களாய் பாவித்து, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து அருளும் அன்னை காமாட்சி அம்பிகையை தன் தாயென கன்னியர் போற்றி மகிழ்வதில் வியப்பென்ன இருக்கிறது.

    தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள பாபநாசம் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது கீழ கபிஸ்தலம்.
    ×