என் மலர்
தோஷ பரிகாரங்கள்
திருமண தடை, எதிரிகளின் தொல்லை, பயம் நீங்க வேணுகோபால கண்ணன் ஆலயத்தில் வழிபாடு செய்தால் பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து மேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவிலும், பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே ஒரு கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது பவளக்காரத் தெரு. இங்கு வேணுகோபால கண்ணன் ஆலயம் அமைந்துள்ளது.
கர்ப்பக்கிரகத்தில் மூலவர் வேணுகோபால கண்ணன் தனிச் சன்னிதியில் நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார்.
இந்த ஆலயத்தில் திருமணம் கைகூட வெற்றிலை, பாக்கு, மாலை, பழங்களுடன் ஜாதகத்தையும் வைத்து பெருமாள் சன்னிதியில் அர்ச்சனை செய்து மனமுருக வேண்டி வழிபடுகின்றனர். இந்த பிரார்த்தனை மூலம் விரைவில் திருமணம் கைகூடுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
எதிரிகளின் தொல்லை, பயம் நீங்க, காரிய சித்தி ஏற்பட சக்கரத்தாழ்வார் மற்றும் யோக நரசிம்மரை வழிபடுகின்றனர்.

அரைக்காசு அம்மனை நினைத்து, என்னுடைய தொலைந்த பொருள் கிட்ட வேண்டும் என மனமுருகி நேர்ந்து கொண்டால் தொலைந்த பொருள் உடனே கிட்டிவிடும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது.
அம்பிகையை சரணடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது நம்பிக்கை. ஒரே இடத்தில், சுற்றிலும் நூற்றியேழு அம்மன்கள் அருள, நடுநாயகமாக அரைக்காசு அம்மன் எனும் பிரகதாம்பாள் கொலுவீற்றிருக்கும் ஆலயத்தை தரிசித்தால் வரமருளும் அன்னையின் பாசத்தில் மூழ்கலாம் என்பதும் பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.
கை தவறியோ அல்லது மறந்தோ எங்கேனும் வைத்துவிட்ட பொருளை இந்த அரைக்காசு அம்மனை நினைத்து, ‘அம்மா உனக்கு வெல்லம் கரைத்து வைக்கிறேன். எனக்கு தொலைந்த பொருள் கிட்ட வேண்டும்‘ என மனமுருகி நேர்ந்து கொண்டால் தொலைந்த பொருள் உடனே கிட்டிவிடும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது.
புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் ஆலயத்திற்கு சென்று வழிபடமுடியாத அன்பர்கள் இந்த ஆலயத்தின் நாயகியை வணங்கி வாழ்வில் வளம் பெறுகின்றனர். தொலைந்த பொருள் கிடைக்க மட்டும் அல்ல, புத்தி, உடல்நலம், நிம்மதியான மணவாழ்வு, மகப்பேறு, என்று எல்லாமும் அருள்பவள் இந்த அன்னை. கொல்கொத்தா காளி, ஆயிரங்கை காளி, கல்யாண மாரியம்மன், ராகு-கேது தோஷம் போக்கும் நாகாத்தம்மன், கருமாரியம்மன், பத்மாவதி, வகுளாதேவி ஆகியோருடன் துலங்கும் இக்கோயில் வண்டலூர் மிருகக்காட்சி சாலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் கேளம்பாக்கம் செல்லும் பாதையில் உள்ளது.

இந்து சமயத்தில் ஒருவருக்கு வந்துள்ள நோய் தீர அதற்கான குறிப்பிட்ட தெய்வத்தை வணங்கினால் உடனடியாக நோய் நீங்கி குணமடைய முடியும் என்கிற நம்பிக்கை இருந்து வருகிறது.

* முடி நரைத்தல், உதிர்தல் - மகாலட்சுமி, வள்ளி
* கண் பார்வைக் குறைபாடுகள் - சிவபெருமான், விநாயகர், முருகன்
* காது, மூக்கு, தொண்டை நோய்கள் - ஸ்ரீ சுப்ரமணியர்
* ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் குறைபாடுகள், சைனஸ், நிமோனியா - மகாவிஷ்ணு
* இருதயம், மாரடைப்பு நோய் - சக்தி, கருமாரி, துர்க்கை
* அஜீரணம், குடல்வால், அல்சர், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா - தட்சிணாமூர்த்தி, முருகன்
* நீரிழிவு, சிறுநீரகக் குறைபாடு - பழனி முருகன்
* ஆண்களுக்கான் விரை நீக்கம், பால்வினை நோய், மாதவிடாய்க் குறைபாடுகள், கர்ப்பப்பை நோய்கள் - ராஜராஜேஸ்வரி, வள்ளி, ஸ்ரீ ரங்கநாதர்
* மூட்டு வலி, யானைக்கால் நோய் - சக்கரத்தாழ்வார்

* வாதம், கீல்வாதம், பக்கவாதம் - சனி பகவான், சிவபெருமான்
* பித்தம் - முருகன்
* வாயுக் குறைபாகள் - ஆஞ்சநேயர்
* எலும்பு வியாதிகள் - சிவபெருமான், முருகன்
* ரத்த சோகை, ரத்த அழுத்தம் - முருகப் பெருமான், செவ்வாய் பகவான்
* நீர் நோய்கள் - சந்திர திரிசனம், விசாலாட்சி
* குஷ்டம், சொறி சிறங்கு - சூரியன், சங்கர நாராயணன்
* அம்மை நோய்கள் - மாரியம்மன்,
* தலைவலி, காய்ச்சல் - விநாயகர், முருகன்
* புற்று நோய் - சிவபெருமான்
* ஞாபகசக்தி குறைவு - விஷ்ணு, பராசக்தி
* நாய்க்கடி - பைரவர்
* விசக்கடி - கோமதியம்மன்

கலிவரதராஜ பெருமாள் ஆலயம் கல்வி, செல்வம், திருமணம், குழந்தைப் பேறுகளுக்கும், பிணி தீர்த்தலுக்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.
சுழலும் கல் தாமரை மொட்டு உள்ள கோவில், கலியுக கவலை நீக்கும் கடவுள் வாழும் திருக்கோவில், திருமணப் பேறு, குழந்தைப்பேறு வரமருளும் தலம், ஒரே வளாகத்தில் சைவ, வைணவ ஆலயங்கள் கொண்ட திருக்கோவில், நான்கு மகான்களின் மடங்களும் ஜீவ சமாதிகளும் அமைந்த புண்ணிய பூமி என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்கிறது, கலிவரதராஜ பெருமாள் கோவில்.
இந்த ஆலயம் கல்வி, செல்வம், திருமணம், குழந்தைப் பேறுகளுக்கும், பிணி தீர்த்தலுக்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. அத்துடன் கலியுகத்துக் கவலைகளை நீக்கும் தெய்வமாகவும் இவர் விளங்குகின்றார். தை வெள்ளியில் தாயாருக்கு மாலை சாற்றி வழிபட்டு வந்தால் ஓராண்டிற்குள் திருமணம் கைகூடும் என்பதும், தல மரத்தை மனமுருகி வேண்டி பன்னிரண்டு முறை சுற்றினால் திருமணப்பேறு மற்றும் மகப்பேறு கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
விழுப்புரம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்திற்குக் கிழக்கே 12 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு மேற்கே 20 கிலோமீட்டர் தூரத்திலும் வளவனூர் அமைந்துள்ளது. வளவனூர் சத்திரம் அல்லது பஜார் நிறுத்தத்தில் இறங்கி, வடக்கே ஒரு பர்லாங்கு தூரம் சென்றால் கலிவரதராஜப் பெருமாள் கோவிலை அடையலாம்.

தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். அன்றைய தினம் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும்.
தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். அன்றைய தினம் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும்.
செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்யங்கள் கூடிவரும்.

உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை ஆஞ்சநேயருக்கு சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும். இது குறித்து விரிவாக கீழே பார்க்கலாம்.
ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுவதற்கு ஒரு புராண கதை சொல்லப்படுவது உண்டு. ஒரு சமயம் சூரிய உதயத்தின்போது சிவப்பாக இருக்கும் சூரியன் ஒரு பழமாக சின்ன குழந்தையான அனுமனுக்கு தெரிந்ததால், அதை சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படி பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.
அதே நேரத்தில் ராகு கிரகமும் சூரியனைப் பிடித்து கிரகண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார்.
இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.

இந்த உணவு பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. அவை பற்றி பார்க்கலாம்
தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது. பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. அவை ராகு/கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகும்.
செவ்வாய் தோஷம் :
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.
ராகு – கேது தோஷம் :
லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.

மாங்கல்ய தோஷம் :
இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8&ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8&ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.
சூரிய தோஷம் :
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.
களத்திர தோஷம் :
களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.
மேற்சொன்ன அமைப்புள்ள தோஷ ஜாதகங்களுடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். மேலும் சில எளிய பரிகாரங்கள் செய்வதால் தடைகள், இடையூறுகள் விலகும்.

ஏழரைச் சனி நடக்கும் போது பல்வேறு பிரச்சனைகள் நடக்கும். சில பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் சனியின் தாக்கம் குறையும்.
ஏழரைச்சனி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் குறைந்தது மூன்று முறை வரக்கூடிய ஒரு நிகழ்வு. சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்வார். நமது ராசிக்கு முந்தைய ராசியில் சனி வந்து அமரும்போது ஏழரைச் சனி பிடிக்கிறது என்று சொல்கிறோம்.
முந்தைய ராசியில் இரண்டரை வருடம், நமது ஜென்ம ராசியில் இரண்டரை வருடம், நமது ராசிக்கு அடுத்த ராசியில் இரண்டரை வருடம் என ஆக மொத்தம் ஏழரை வருடம் சனியின் தாக்கத்தினைப் பெறுவதை ஏழரைச் சனி என்கிறோம்.
ஆக 22 வருடங்களுக்கு ஒரு முறை ஏழரைச் சனி என்பது நமது வாழ்வில் இடம் பிடிக்கிறது. இந்தக் காலத்தில் சிறு சிறு தடங்கல்களை சந்திக்க நேரிடுமே தவிர பெரிய அளவிலான பாதகங்கள் ஏதும் ஏற்படாது.

அவரவர் ஜாதக ரீதியாக நடைபெறும் தசாபுக்தியே பலன்களை நிர்ணயம் செய்யும் சனி பகவான் தனது கடமையைச் செய்வதில் மிகவும் கண்டிப்பானவர் என்பதால் அவரால் உண்டாகும் சோதனைகளை அனுபவித்தே ஆக வேண்டும்.
எனினும் ஏழரைச் சனியின் தாக்கத்தினைப் பெறுபவர்கள் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து காகத்திற்கு தயிர் கலந்த சாதத்தில் எள்ளு சிறிதளவு கலந்து வைப்பது நல்லது.
சனிக்கிழமையில் வீடு வாசல் தேடி வரும் பிச்சைக்காரர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உங்களால் இயன்ற உணவினை தர்மம் செய்யுங்கள்.
ஆதரவற்ற முதியவர்கள், அநாதைச் சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முடிந்த உதவியைச் செய்வதும் சனி பகவானுக்குச் செய்யும் பரிகாரமே ஆகும்.

கடன் பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
1. தோலால் ஆன செருப்பு, பெல்ட் மற்றும் பர்ஸ் உபயோகத்தை நிறுத்தவும்.
2. தொடர்ந்து 16 நாட்கள் கோவிலுக்கு கொள்ளு தானம் செய்யவும்.
3. முதல் நாள் நீரில் ஊற வைத்த முழு பயத்தம் பருப்பை மறுநாள் புறாக்களுக்கு இட்டு வரவும். முடியும் போதெல்லாம் செய்யலாம்.
4. ஏதேனும் மலரை சுத்தமான நீரோடையில் தொடர்ந்து 43 நாட்கள் இட்டு வரவும்.
5. தொடர்ந்து 43 நாட்கள் கோமியத்தை வீட்டினுள் தெளித்து வரவும்.
6. முடியும் போதெல்லாம் 11 பால் பாக்கெட்டுகள் கோவிலுக்கு கொடுத்து வரவும்.

கார்த்திகை மாதக் கிருத்திகை தினத்தன்று வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி உள்ளன்புடன் குமரன் பதத்தை சிந்திப்பவர் இம்மை மறுமை செல்வத்தினை பெறுவர்.
கார்த்திகை மாதக் கிருத்திகை தினத்தன்று வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி உள்ளன்புடன் குமரன் பதத்தை சிந்திப்பவர் இம்மை மறுமை செல்வத்தினை பெறுவர். மாசி மாதத்தில் வதனா ரம்பத்திலும் கந்தபுஷ்கர்ணியிலும் நீராடி கந்தனை வணங்கினால் வேதனைகள் நீங்கும். சித்திரை மாத முப்பது நாளும் வதனாம்பரத்தில் நீராடி வேலாயுதனை போற்றுவோர் மோட்சத்தை அடைவர்.
தட்சணாயினம், உத்தராயணத்தன்று கந்தபுஷ்கரணியிலும், மூகாரம்பத்திலும் நீராடி முருகனுக்கு நிவேதனம் செய்தவர் சகல பலனையும் பெறுவர்.
ஆடி மாதம் முப்பது நாளும் பசும் பாலை குமரனுக்கு நிவேதனம் செய்பவர் முருகனின் திருவடி தாமரையை சேர்வார்கள். ஆவணி மாதம் முப்பது நாளும் வேதவிதிப்படி ஆறுமுகனை போற்றுபவர் நூறு யாகம் செய்த பலத்தினை பெறுவார்கள்.
புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினத்தன்று முகாரம்பத் தீர்த்தத்தில் நீராடி சிரார்த்தம் செய்தவருடைய பிதிர்க்களெல்லாம் சத்திய லோகத்தை அடைவர்.
ஐப்பசி, மார்கழி மதத்தில் ததியோதனம் குமரனுக்கு படைத்தவர் மோட்ச லோகத்தை அடைவர்.
தை மாதம் முப்பது நாட்களும் கோவில் முழுவதும் அகில் புகையினால் சுவாசிக்கச் செய்தவர் குலத்தினரெல்லாம் சிவபிரான் திருவடியையும், கிருத்திகை நட்சத்திரத்தில் நெல்லி இலையினால் முருகக்கடவுளை அர்ச்சித்தவர் ஒவ்வொரு இலைக்கும் ஒவ்வொரு யாக பலனையும் பெற்று ஆனந்தமாக வாழ்வார்கள் என்று வேதங்கள் கூறுகின்றன.
சரவண பொய்கை
திருச்செந்தூர் கோவில் அருகில் சரவண பொய்கை உள்ளது. இங்கு ஆறு தீப்பொறிகளும், தாமரை மலரில் குழந்தைகளாக கிடப்பது போலவும், அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி, ஒருசேர எடுக்க தனது இரு திருக்கரங்களையும் நீட்டுவது போலவும் திருத்தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள சரவணப்பொய்கை குளத்தில் ஏராளமான மீன்கள் துள்ளி விளையாடுவது கண்கொள்ளா காட்சியாகும்.

நாழிக்கிணறு
சண்முக விலாசத்துக்கு தெற்கே நாழிக்கிணறு உள்ளது. முருகன் சூரனை வென்றதும் தன் படைகள் தாகம் தணிக்க கைவேலால் இந்த இடத்தில் குத்தினார். அதில் இருந்து நல்ல தண்ணீர் பொங்கியது. 24 அடி ஆழத்தில் நாழிக்கிணறு உள்ளது. 34 படிகள் இறங்கி செல்ல வேண்டும். தற்போது பக்தர்கள் கடலில் குளித்துவிட்டு, உவர் நீங்க நாழிக்கிணற்றில் குளிக்கின்றனர். இது தவறு. நாழிக்கிணற்றில் தான் முதலில் நீராட வேண்டும். கடல் தீர்த்தமாக உள்ளதால் நாழிக்கிணற்றில் குளித்து விட்டு தீர்த்தம் ஆட வேண்டும் என்று மூத்தோர்கள் சொல்லி உள்ளனர். நாழிக்கிணற்றில் நீராடிய பின் கடலில் நீராடல் மரபு என்று பட்டினப்பாலையில் எழுதப்பட்டுள்ளது.
திருநீறு அல்ல... பணம்
திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் கட்டத் தொடங்கிய காலத்தில் செந்திலாண்டவனே மனித உருவில் தோன்றி, வேலையாட்களுக்கு திருநீறு பிரசாதத்தை கூலியாக கொடுத்து, அதனை தூண்டுகை விநாயகர் கோவிலை கடந்த பின்னர் திறந்து பார்க்க வேண்டுமு என்று கூறி மறைந்ததாகவும், அவ்வேலையாட்கள் அவ்வாறு பார்த்த போது திருநீறு கூலிப்பணமாக மாறியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
கணக்கு கேட்கும் முருகன்
சுப்பிரமணிய சுவாமி தினமும் இரவு வள்ளியம்மாள் சன்னதிக்கு சென்றதும் அங்கு சுவாமியும்- வள்ளியும் பள்ளியறை மஞ்சத்தில் எழுந்தருள்வார்கள். அப்போது முருகனுக்கு வரவு-செலவு குறித்த விவரங்கள் கூறப்படும். கோவில் கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானமும், திருப்பணி செலவும் தெரிவிக்கப்படும். அதன் பிறகு பள்ளியறை தீபாராதனையாகி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். முன்னதாக சிவிலி என்றழைக்கப்படும் பல்லக்கில் சுவாமி கோவிலை 3 முறை வலம் வருவார். மேலும் ஆவணி, மாசி 6-ம் திருவிழாவின் போது பட்டோலை மூலம் முருகனிடம் சொத்து விபரங்களை தெரிவிப்பார்கள்.

அலை கடல் தாலாட்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையட்டி பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன.
தீர்த்தம் இறைவனுடைய வடிவமாகத் திகழ்கிறது. அதைச் சிவமாக எண்ணி முழுக வேண்டும். அலை கடல் தாலாட்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையட்டி பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக் களும் இங்கு தீர்த்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தற்போது கந்த புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் நாழி கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள். கடற்கரையில் அமைந்துள்ள சில தீர்த்த கிணறுகள் மணல் மூடி தூர்ந்து விட்டன. தற்போது பல தீர்த்த கட்டங்களை குறிப்பிடும் கல்வெட்டுகளும் காணாமல் போய்விட்டன.
திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. முகாரம்ப தீர்த்தம் - இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப் பருகுவர்.
2. தெய்வானை தீர்த்தம் - இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணி கலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.
3. வள்ளி தீர்த்தம் - இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப் பெருமானின் திருவடித் தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.
4. லட்சுமி தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் வட திசைக்கு அதிபரான குபேரனும் அடைவதற்குரிய செல்வங்களைப் பெறுவர்.
5. சித்தர் தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலக, பைசாசு என்கிற பகைகளை விலக்கி முக்தி வழியை நாடச் செய்யும்.
6. திக்கு பாலகர் தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்கு வோர் கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்களை கொடுக்கும் பலனைப் பெறுவர்.
7. காயத்ரீ தீர்த்தம் - இந்தத் தீர்தத்தத்தில் மூழ்குவோர் அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் பெறுவர்.
8. சாவித்ரி தீர்த்தம் - இந்தந் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.

9. சரஸ்வதி தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு சகர ஆகம புராண இதிகாசங்களை அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.
10. அயிராவத தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திர பதாகை, பன்னாவை முதலிய நதிகளில் நீராடியோர் பலனைப் பெறுவர்.
11. வயிரவ தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் சரஸ்வதி, சோனை, பெருநை முதலிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.
12. துர்க்கை தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் இம்மையிலே அடையும் துன்பத்தைப் போக்கி நன்மையைப் பெறுவர்.
13. ஞானதீர்த்தம் - இந்தத் தீர்த்தம் இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.
14. சத்திய தீர்த்தம் - இந்தத் தீர்த்தமானது களவு, கள்ளுண்டல், குரு நிந்தை, கொலை, பொய், என்கின்ற ஐந்துடன், அகங்காரம், உலோபம், காமம், பகை, போஜனப் பிரியம், சாய்தல், சோம்பல், முதலான ஏழு துன்பங்களையும் போக்கும். இன்னும், தூலம், சூக்குமம், அதி சூக்குமம் என்று சொல்கின்ற பாதகம், அதிபாகம், மகா பாதகம் ஆகிய மூன்றினின்றும் நீக்கித்தனது சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.
15. தரும தீர்த்தம் - இந்தத் தீர்த்தமானதுது தீவினையாகிய வேரைக்களைந்து தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும் வல்லமை படைத்தது.
16. முனிவர் தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஜகத் ரட்சகனைக்கண்ட பலனைப் பெறுவர்.
17. தேவர் தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், குரோதம் லோபம் மோகம் மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும்.

18. பாவநாச தீர்த்தம் - இத்தீர்த்தம் குற்றமில்லாத முனிவர் களால் சபிக்கப்பட்ட சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த் தங்களையும் அளிக்கவல்லது.
19. கந்தப்புட்கரணி தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திர சேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசைச் சூடும் மேன்மையைப் பெறுவர்.
20. கங்கா தீர்த்தம் - இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பெருமானைத் தரிசித்துப் போற்றுவார் ஜெனனமாகிய பிறவிக் கடலைக் கடக்கும் தெப்பம் போன்றிருக்கும்.
21. சேது தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குச் சகல பாதகத் தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருள வல்லது.
22. கந்தமாதன தீர்த்தம் - இந்தத் தீர்த்தத்தில் மூழ்கு வோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.
23. மாதுரு தீர்த்தம் - இந்தத் தீர்த்த்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.
24. தென் புலத்தார் தீர்த்தம் - இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளுத் தண்ணீரும் இறைத் தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட் கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார்.
கோவிலுக்குத் தெற்கே 200 கெஜ தூரத்தில் நாழிக் கிணறு உள்ளது. பெரிய கிணற்றுக்குள்ளே இது ஒரு சிறு கிணறு, ஒரு சதுர அடி பரப்பும் ஏழு அடி ஆழமும் உள்ள இந்தத் தீர்த்தம் உவர்ப்பு அற்ற நன்னீராகக் காட்சி தருகின்றது. சமுத்திரக் கரையோரம் இப்படி இனிய நீராக அமைந்துள்ள கந்தப்பெருமானின் அருளாடலேயாகும். இதற்குத் கந்தபுஷ்கரணி என்றும் பெயர் வழங்குகிறது.
இந்தக் கந்தபுஷ்கரணியில் முழுகுவோர் சகல நலன்களை யும் பெறுவார்கள்.

எடுத்த செயல் வெற்றி பெற காரிய சித்திமாலை பாடலை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்தால் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும்..
சதுர்த்தி திதி அன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி விநாயகப் பெருமானை வழிபாடு செய்யலாம். எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடையது காரிய சித்திமாலை பாடலாகும். கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்த பாடல் துதியை, விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்தால் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும். இந்தப் பாடலை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) பாராயணம் செய்பவர்கள் பெரும் பாக்கியம் பெருவர். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். இந்தப் பாடலை எட்டு நாட்கள் பாடி வந்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கை கூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழ்வார்கள் என்பது ஐதீகம்.
விநாயகர், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் ஆகிய ஐந்து பெரும் தெய்வங்களை, ஒரே நேரத்தில், ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்யும் முறைக்கு ‘கணபதி பஞ்சாயதனம்’ என்று பெயர். இந்த பூஜையில் விநாயகரை நடுநாயகமாக வைத்து மற்ற தெய்வங்களை சுற்றிலும் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
மண்ணால் செய்த விநாயகரை வழிபட்டால், நற்பதவி கிடைக்கும். புற்று மண்ணில் உருவாக்கப்பட்ட விநாயகரை வணங்கினால், லாபம் கிட்டும். உப்பால் ஆன விநாயகரை வணங்கினால், எதிரிகள் விலகுவர். கல்லில் அமைந்த விநாயகரை வழிபட, சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும்.