என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு ‘‘கர்மா’’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
    “கர்மா” அல்லது ‘‘வினைப்பயன்’’ என்ற சொல்லுக்கு ‘‘செயல்’’ என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு ‘‘கர்மா’’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழில் ‘‘வினைப்பயன்’’ என்று கூறுவர்.

    கர்மா என்பது ஒருவருக்கு தலைவிதி அல்ல அது அவரவர் வினைப்பயன். அதாவது செய்த செயலின் எதிர்வினை. நல்ல செயல் செய்தால் அதன் பயன் நன்மை தரும். தீவினை செய்தால் துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றால் அவரது கர்மவினை தீர்மானிக்கப்படுகிறது.

    கர்மாவை உணரமுடியுமே தவிர பார்க்க முடியாது. கர்மவினை 3 வகைப்படும்.

    1. சஞ்சித கர்மா:


    நமது தாய் தந்தையரிடம் இருந்தும் அவர்களின் முன்னோர்களிடமிருந்தும் நமது ஆத்மா பல்வேறு பிறப்புகளில் செய்த பாவபுண்ணிய சேர்க்கையே சஞ்சித கர்மா.

    2. பிராரப்த கர்மா:

    இந்த பிறவியில் நாம் செய்யும் செயல்களின் பதிவே பிராரப்த கர்மா.

    3. ஆகாம்ய கர்மா:

    மேற்கூறிய இரண்டு கர்மாக்களை கழிக்க நாம் செய்யும் செயல்களின் மூலம் இந்த பிறவியில் நாம் சேர்க்கும் வினை.

    ஒரு ஜனனம் எப்பொழுது நிகழும்:?

    மேற்கூறிய 3 கர்மாக்களின் படி ஒரு ஆத்மா எப்பொழுது தன் வினைப்பதிவு முழுவதையும் அனுபவிக்க கூடிய கிரக நிலவரம் வருகிறதோ அப்பொழுதுதான் அந்த ஆத்மா பிறப்பெடுக்கும். பிறப்பெடுத்த ஆத்மா தன் வினைப்பதிவை அனுபவித்து முடிக்கும் வரை அந்த ஆத்மாவை அதன் உடம்பில் இருந்து வெளியேறாமல் காப்பவர் கர்மகாரகன் சனி.



    ஒரு ஜனனம் பூமியில் ஏற்படும் அந்த கணம் முதல் அதன் மரணம் வரையுள்ள அனைத்து நிகழ்வுகளும் பரம்பொருளால் தீர்மானிக்கப்படுகிறது. அந்த நிகழ்வுகளை நிறைவேற்ற பயணம் செய்யும் ஆத்மா பல சாதக பாதகங்களை சந்திக்கிறது. தன் இலக்கை அடைய பல திட்டங்களை தீட்டுகிறது. அதில் தடை ஏற்படும் பொழுது அதை தகர்க்க பெரும் பொருட்செலவு செய்து தடையை தகர்க்க முயல்கிறார்கள்.

    அந்த முயற்சி (பரிகாரம்) வெற்றி கொடுத்தால் அதை தற்போது அனுபவிக்கும் வினையைவிட பல மடங்காக அதே பிறவியிலோ, மறுபிறவியிலோ பிரபஞ்சம் திருப்பிக் கொடுக்கப் போகின்றது என்று பொருள். இந்த வினையை தடுத்து நிறுத்தும் நிகழ்வும் கூட அதன் வினைப்பதிவுகளில் ஒன்றுதான்.

    பிரபஞ்சத்திற்கு எதிரான இந்த செயலுக்கு நமது ஆசையே காரணம். பிரபஞ்சத்திற்கு எதிரான எந்த செயலும் கர்மவினையை கூட்டும் செயலாகும்.
    ஒருவர் தான் பிறவி எடுத்ததன் நோக்கம் என்ன என்பதை உணர முற்படும் போது முக்திக்கு வழி பிறக்கும். நமது இன்பம் மற்றும் துன்பத்திற்கு பிரபஞ்சமே காரணம். நமக்கு கிடைக்கும் இன்பம் வினையை அதிகரிக்கிறது. துன்பம் வினையை குறைக்கிறது. எனவே வினையை குறைக்க பிரபஞ்சம் நமக்கு துன்பம் தருகிறது.

    எவ்வாறு இன்பம் ஏற்படும் போது மகிழ்கிறோமோ அதேபோல் துன்பம் ஏற்படும் போது ஏற்க மனதை பக்குவப்படுத்த வேண்டும். புரிதல் ஏற்படும் போது எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்துவிடும். நமது வினையை குறைக்கும் முயற்சியை பிரபஞ்சத்திடம் ஒப்படைத்து சரணாகதி அடைய வேண்டும். யார் பிரபஞ்சத்திடம் சரணாகதி அடைகிறாரோ அவரது தடைகற்கள் படிகற்களாக பரம்பொருளால் மாற்றியமைக்கப்பட்டு முக்தி அடைய வழி கிடைக்கும்.

    இதை மேலும் எளிதாக புரியும்படி கூற வேண்டுமானால் ஒரு மனிதன் பரம்பொருளிடம் எனக்கு இது நடந்தால், நான் உனக்கு அது தருகிறேன் என்று எதுவுமே புரியாத ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு எனக்கு ‘‘நான் வேண்டியது கிடைக்கவில்லை’’ என்று புலம்புவது அதாவது அந்த மனிதனுக்கு தனக்கு வேண்டியதை கூட கேட்டுப் பெறத் தெரியவில்லை. இதை எளிதாக அந்த மனிதன் ‘‘எனக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் கொடு’’ என்று ஒருமுறை மட்டும் வேண்டியிருந்தால் அவன் வாழ்க்கை வசந்தமாகி இருக்கும்.

    வேண்டுதல் என்பது நிரந்தரமான முடிவான ஒன்றாக இருக்க வேண்டும். தற்காலிகமான தீர்வை தரக்கூடியதாக இருக்கக் கூடாது. இதுதான் ‘‘கர்மவினை’’. அதாவது ‘‘எதிர்வரும் கர்மவினை’’ இதுதான் என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. எனக்கு இது நிறைவேறினால் நான் நிம்மதியாக இருப்பேன் என்று தவறான கணக்கை போட்டுக் கொண்டு ‘‘பிரபஞ்சத்தையும் பரம்பொருளையும்’’ பழித்து கர்மவினையை கூட்டுகிறார்கள்.



    உண்மையில் ‘‘எந்த ஒன்றில் எல்லாம் அடங்குமோ!! அடக்கமோ!!!’’ அந்த ஒன்றை வேண்டுதலாக வைக்க வேண்டும். அப்படி அந்த வேண்டுதல் நிறைவேறும் பொழுது அவனுக்கு அனைத்தும் வசமாகி விடுகின்றது. எனவே அவனது வேண்டுதல் என்பது ஒரே முறையோடு முடிவடைந்து விடுகின்றது.

    ‘‘மாற்று மருந்தை நம்பி யாரும் விஷம் அருந்துவதில்லை. அதுபோல் பரிகாரத்தை நம்பி யாரும் தவறு செய்யாமல் இருப்பது நல்லது’’ தவறு என்பது நம்மையறியாமல் நம்மை மீறி நடக்கும் செயல். அது ‘‘பாவங்களைத் தருகிறது’’. தவறு என்பது தெரிந்தும் நாமே திட்டமிட்டு செய்வது. அது ‘‘சாபங்களைத்’’ தருகிறது.

    சாஸ்திரங்களில் சொல்லப் பட்ட அனைத்து பரிகார வழிபாட்டு முறைகள் ‘‘தவறுகளால் ஏற்பட்ட பாவங்களை நீக்கிக் கொள்ளவே’’ ரிஷிகளால் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே ‘‘பாவம், சாபம்’’ இரண்டிற்கும் வேறுபாட்டைக் கருத்தில் கொள்ள வேண்டும். ‘‘பாவம், சாபம்’’ இரண்டிற்கும் வேறுபாட்டை தெரிந்து கொண்டவன் பரிகாரத்தின் பக்கம் திரும்பி கூட பார்ப்பது இல்லை.

    பாவங்களே மனித பிறப்பிற்கு காரணமாக அமைகிறது. பாவங்கள் இல்லையெனில் பிறப்பு இல்லை. பல ஜென்மங்களில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் ஆடிட்டிங் தீர்ப்புதான் இந்த பிறப்பு. நாம் செய்த பாவங்களை நாம் உணரும் வரை பிரபஞ்சம் நம்மை விடாது, பாடம் புகட்டிக் கொண்டே இருக்கும். ‘‘கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல.’’

    கர்மா என்பது மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாகவும் தொடர்ந்து செய்யப் படும் பிரார்த்தனையாகவும், மந்திர மாகவும், கீர்த்தனையாகவும் இருக்கலாம். எவன் ஒருவன் தன் சொல்லாலும், செயலாலும், சிந்தனையாலும் ‘‘ராம’’ நாமத்துடன் ஒன்றுகிறானோ அவனது 7 தலைமுறை பாவ கணக்கு கழிக்கப்படும். புண்ணிய பலன் கூடும்.

    ‘‘அன்பும் அறமும் உண்மையும் சத்தியமுமே’’ நியாய தர்மங்களை காக்கும் பண்புகள். இவற்றை மாறாமல் கடைபிடித்தால் வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்.

    ‘‘ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்’’

    அந்த ஆத்ம பலமே எதையும் தாங்கும் சக்தி. ஆதலால் விடாது ராம நாம ஜபம் செய்வோம். பிரபஞ்சத்துடன் ஒன்றி உறுதியுடன் உண்மையாக இருப்போம். அதனால் பெற்றிடுவோம் மன அமைதியும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்.’’


    ஜோதிட கலாநிதி
    ஐ. ஆனந்தி
    9865220406
    பரமேஸ்வரன் ஆனாலும் அல்லது பரந்தாமன் ஆனாலும் அவர்களும் தோஷம் நீங்க பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
    கந்தசஷ்டியின் போது முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்து, பின் மிகவும் களைப்பாகி சோர்ந்து விடுகிறார். கொல்வது என்பது யாராக இருந்தாலும் ஹத்திதோஷம் பிடிக்கும். பரமேஸ்வரன் ஆனாலும் அல்லது பரந்தாமன் ஆனாலும் அவர்களும் தோஷம் நீங்க பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

    முருகனும் ஹத்தி தோஷம் போக்க கீழ்வேளூர் என்ற இடத்திற்கு வந்தார். இது நாகப்பட்டினம் அருகில் இருக்கிறது. அழகான ஆறு ஒன்று அங்கு ஓடுகிறது.
    முருகன் இந்தத் தலத்திற்கு வந்து தன் வேலை ஊன்ற, அந்த இடத்திலிருந்து புனிதநீர் வெளி வந்தது. அதுவே தீர்த்தமானது. அந்த தீர்த்தத்தில் நீராடி, பின் தியானத்தில் அமர்ந்தார்.

    அப்போது சூரசம்ஹாரக் காட்சிகள் அவர் தியானத்தைக் கலைத்தன. உடனே முருகன் தன் அன்னை உலகமாதாவை வணங்கினார். பின் வேண்டிக் கொண்டார், தாயே, உலக நன்மைக்காக சூரசம்ஹாரம் செய்து விட்டு வந்தேன், ஆனாலும் என் மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது, தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்றார்.

    உடனே பார்வதி தேவி இத்தலத்தின் எல்லா திசைகளிலும் தன் உருவத்தைப் பரப்பி ஒரு வேலி போல் போட்டு நின்றாள். அவள் பெயர் அஞ்சு வட்டத்தம்மன் ஆயிற்று. அவள் முழு வட்டமாக தன் உருவத்தை பரப்பி நின்று முருகனைக் காத்ததால் இந்தப் பெயர்.

    இதனால் பிரும்மஹத்திகள் ஓடிப்போயின. முருகனும் தவத்தை முடித்து தோஷம் நீங்கி அருள் பெற்றோர். இந்த இடம் கீழ்வேளூர் என்று ஆனது.
    வடநாட்டில் இனிமையான வாழ்வு வேண்டுமென இனிப்புகளாலும், தென்னாட்டில் ராகு தோஷம் நீங்க உளுந்து வடையை மாலையாகக் கட்டி சாத்தியும் பலன் பெறுகிறார்கள்.
    அனுமன் எடுத்த வடிவங்களில் அற்புதமானதும், தரிசிப்போர் வாழ்வில் தடைகளைத் தகர்க்க வல்லதுமான ஒன்று, ‘தசபுஜ ருத்ரவீர்ய ராமாஞ்சநேய’ வடிவம். ரக்தாட்சன், ரக்தபீஜன் எனும் அரக்கர்களை இத்திரு உருவில்தான் வதைத்தானாம் அனுமன். நோய், பயங்கள், கிரக தோஷங்கள், தீயோரின் தொல்லை முதலியவை அழியும்படி அருள்பவன் அவன். விபத்து, ஆபத்துகள், சிறைவாசம் போன்றவை இவனை நினைப்பதாலேயே நெருங்காது ஓடிவிடும்.

    பொதுவாக அனுமனுக்கு வெற்றிலையில் பாக்கு வைத்து ஒற்றைப்படை எண்ணிக்கையில் மாலையாகக் கட்டி வியாழன், சனிக்கிழமைகளில் பிரார்த்தனை செய்துகொண்டால், மங்கலமான மண வாழ்க்கை கிட்டும். வடநாட்டில் இனிமையான வாழ்வு வேண்டுமென இனிப்புகளாலும், தென்னாட்டில் ராகு தோஷம் நீங்க உளுந்து வடையை மாலையாகக் கட்டி சாத்தியும் பலன் பெறுகிறார்கள். அனந்த மங்கலத்தில் ராஜகோபால சுவாமி கோயில் தசபுஜ ருத்ரவீர்ய ராமாஞ்சநேய திருஉருவத்தை தரிசித்து அருள் பெறலாம்.
    பயத்தையும், மறதியையும் போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
    முதலில் ஒரு நோட்டு புத்தகத்தை எடுங்கள். "சிவாயநம' "ஓம் நமசிவாய' ஓம் சக்தி என்பவற்றில் ஒன்றை 108 தடவை எழுதுங்கள். நீங்கள் பெருமாள் பக்தராக இருந்தால் "ஓம் நமோ நாராயணாய நமஹ, லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே' ஸ்ரீராமஜெயம் என்பவற்றில் ஒன்றை இதே போல எழுதுங்கள்.

    நீங்கள் எதை மறந்தாலும், இதை மட்டும் மறக்காமல் தினமும் எழுதி விட வேண்டும். முதலில் இது ஞாபகசக்தியை அதிகரிக்கும் பயிற்சி. அடுத்து, இந்த நாமங்கள் பயத்தை போக்க வல்லவை. பயிற்சி மறதியைப் போக்கடிக்கும். ஞாபகசக்தி பயத்தைப் போக்கடிக்கும்.

    சனி தசை, ஏழரைச் சனி உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் செய்யவேண்டிய பரிகார முறைகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்தது, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபட வேண்டும்.

    துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சன்னிதானமடைந்து சனிதோஷம் நீங்கப் பிரார்திக்க வேண்டும்.
    அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவருக்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரதத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.

    சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் ராசிக்கு 5--ல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச்சனியென்றும், 12இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர். இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாகும். இதைச் சனிதோஷம் என்பர்.

    இவர்கள் மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும். ஏனையோர் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள்விளக்கேற்றிச் சனீஸ்வரனை வழிபட்டுப் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிரார்த்தித்து கோளறுபதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும்.
    புது வீடு கட்டி முடித்ததில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டின் வாயிலாக சரி செய்யலாம்.
    புது வீடு கட்டி முடித்ததில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டின் வாயிலாக சரி செய்யலாம்.

    வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.

    பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.

    ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.

    திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.

    தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.

    காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.
    நாகதோஷங்கள் நீக்கும் தலம், மணப்பேறும் மகப்பேறும் அருளும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்.
    அடிமுடி தேடிய தோஷம் நீங்க பிரம்மன் வழிபட்ட தலங்களில் ஒன்று, வழக்கத்திற்கு மாறாக அக்னி மூலையில் நவக்கிரக சன்னிதி அமைந்த ஆலயம், நாகதோஷங்கள் நீக்கும் தலம், மணப்பேறும் மகப்பேறும் அருளும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்.

    ஆம்பூர் நகரின் மையப்பகுதியில், சுமார் 1½ ஏக்கர் நிலப்பரப்பில், சற்று பள்ளமாக 9 படிகள் கீழிறங்கி செல்லும் விதமாக ஆலயம் அமைந்துள்ளது.  ஆலயத்தில் நடுநாயகமாக நாகநாதசுவாமி வீற்றிருக்கிறார்.

    பொதுவாக, நவக்கிரக சன்னிதி வடகிழக்குப் பகுதியான ஈசான்ய மூலையில் அமைந்திருப்பது இயல்பான ஒன்று. ஆனால் இங்கு தென்கிழக்குப் பகுதியான கன்னி மூலையில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது.

    இவ்வாலயம் நாக தோஷங்கள் அனைத்திற்கும், ஏற்ற தலமாக அமைந்துள்ளது. இது தவிர திருமணப்பேறு, குழந்தைப்பேறு இவற்றிற்கு உகந்த தலமாகவும் இது அமைந்துள்ளது. திங்கட்கிழமைகளில் உண்ணா நோன்பிருந்து வழிபடுவது குழந்தைப்பேறு தரும். குடும்ப பிரச்சினைகள், நோய்கள் தீரவும், சிறந்த வேண்டுதல் தலமாக இது திகழ்கின்றது.

    வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரின் மையப்பகுதியில் இத் திருக்கோவில் அமைந்துள்ளது. வேலூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து மேற்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் ஆம்பூர் இருக்கிறது. இவ்வூருக்கு ஏராளமான பேருந்து வசதியும், குறிப்பிட்ட நேரத்தில் ரெயில் வசதியும் உண்டு. ரெயில் நிலையத்தில் இருந்தும், பேருந்து நிறுத்தத்தில் இருந்தும், சுமார் ஒரு கி.மீ. தொலைவில் மார்க்கெட் அருகே இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
    திருமணமாகாதவர்கள், குழந்தை வரம் வேண்டுபவர்கள் சென்னை வடபழனியில் உள்ள ஆதி மூலப் பெருமாள் கோவில் பெருமாளை வழிபட்டால் அனைத்தும் நிறைவேறும்.
    சென்னை வடபழனியில் ஆதி மூலப் பெருமாள் கோவில் தெருவில், பிரதான கிழக்கு வாசல் கொண்டு ஸ்ரீ ஆதி மூலப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சுமார் 600 வருடம் கடந்த பழமையான ஆலயம் இது.

    இவ்வாலயத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனமும், வெள்ளி தோறும் தாயாருக்கு திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

    நிரந்தர உத்தியோகம் கிடைக்க, சத்ரு தொல்லை விலக, மரண பயம் நீங்க, சங்கடங்கள் தீர, கடன் பிரச்சினையில் இருந்து விடுபட, தீராத வியாதியில் இருந்து நிவாரணம் பெற, வியாபார அபிவிருத்தியடைய பெருமாள் சன்னிதியில் பிரார்த்தனை செய்து பலடைகின்றனர். இத்தலத்தில் இருக்கும் வழக்கறு தும்பிக்கை ஆழ்வார், தம்பதிகளுக்குள் உள்ள கருத்து வேறுபாடு நீங்கி அன்னியோன்யம் ஏற்பட தாம்பத்திய சேஷங்கள் (சல்லாப நாகங்களை) வணங்கி பலனடைகின்றனர்.

    திருமணமாகாதவர்கள், செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ச்சியாக 16 வாரம் வழிபட வேண்டியது அவசியம். முதல் 3 வாரம் 3 கல்யாண மாலை கொணர்ந்து, 3 மாலையையும் பெருமாளுக்குச் சாத்தி, ஒரு மாலையை பிரசாதமாக பெற்று கழுத்தில் அணிந்து கொண்டு 12 முறை ஆலயத்தை வலம் வர வேண்டும். தாயார் சன்னிதியில் சங்கல்பம் செய்து கொண்டு 12 முறை வலம் வந்து 16 வாரம் விரலி மஞ்சள் கணக்கின்றி மாலையாக தொடுத்து தாயாருக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்ய வேண்டும். 16-வது வாரம், 3 கல்யாண மாலை தாயாருக்கு சமர்ப்பித்து சங்கல்பம் பூர்த்தி செய்ய வேண்டும். திருமணம் கை கூடியவுடன் தம்பதி சமேதராய் ஆலயம் வந்து, பெருமாள் தாயாரை வணங்க வேண்டும்.

    ரோகிணி நட்சத்திரத்தன்று காலை விரதமிருந்து, வீட்டிலிருந்து தொட்டில் கண்ணன், புஷ்பம், அவல், வெண்ணெய், பழங்கள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, இரண்டு செவ்வாழை ஆகியவற்றை ஆலயத்திற்கு கொண்டு வர வேண்டும். தொட்டில் கண்ணனை திருக்கோவில் அர்ச்சகரிடம் சமர்ப்பித்து, கண்ணன் திருவடியில் வைத்து பூஜை செய்து பின் அதை மடியில் வாங்கிக் கொண்டு, அரச மரத்தடியில் உள்ள சந்தான கண்ணனை 27 முறை வலம் வந்து, மனமுருகி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    பிறகு கண்ணனை தொட்டிலில் வைத்துக் கட்டி விட்டு, சந்தான கோபாலனுக்கு பால் பாயசத்தை சமர்ப்பித்து பக்தர்களுக்கு விநியோகித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த பிரார்த்தனையை தொடர்ந்து 12 ரோகிணி நட்சத்திரத்தில் செய்ய வேண்டும்.
    நாக தோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து புற்று வழிபாடு செய்து, முப்பாத்தம்மனை வேண்டிக் கொண்டால், தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
    சென்னை தி.நகர் பனகல்பார்க் அருகில் முப்பாத்தம்மன் கோவில் உள்ளது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி விவசாய பூமியாகத் திகழ்ந்த போது, முப்பாத்தம்மன் தோன்றினாள். முன்பு இங்கு அரசு மற்றும் வேம்புக்கு நடுவே புற்று வளர்ந்திருந்தது.

    இதைத்தான் ஆரம்பத்தில் வழிபட்டனராம். பின்னர், முப்போகமும் விளையும் நிலத்தில் இருந்து அம்மன் விக்கிரகத்தைக் கண்டெடுத்தனராம். இதை, புற்றுக்கு அருகில் வைத்து வழிபடவும் தொடங்கினார்கள். முப்போகமும் விளையும் நிலத்தில் இருந்து வந்தால், முப்பாத்தம்மன் என்றனர்.

    இந்த கோவிலின் விசேஷங்களில் பிராகார வலம் வருதலும் ஒன்று! செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 108 முறை பிராகாரம் வலம் வரும் பக்தர்கள் நிறைய பேர் உள்ளனர். இப்படி 108 முறை வலம் வந்தால் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை.

    கருவறையில் சாந்தமும், கருணையும் பொங்க, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள் முப்பாத்தம்மன். `இரண்டு நிமிடம் முழு ஈடுபாட்டுடன் நமது பிரார்த்தனையை அம்மனிடம் வைத்து வேண்டிக் கொண்டால் போதும். நினைத்தது நிறைவேறும்' என்கின்றனர் பக்தர்கள்.

    நாக தோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து புற்று வழிபாடு செய்து, முப்பாத்தம்மனை வேண்டிக் கொண்டால், தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. எலுமிச்சைப் பழத்தோலில் நெய் விளக்கு ஏற்றி வைத்து, செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை என ஒன்பது வாரங்கள் தொடர்ந்து முப்பாத்தம்மனை வழிபட்டு வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும்.

    குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது நம்பிக்கை. ஆடி மாத விசேஷ நாட்களில் எலுமிச்சை மாலை அணிவித்து அம்மனை வேண்டிக் கொண்டால் தீராத நோயையும் தீர்த்து வைப்பாள் முப்பாத்தம்மன்.
    சர்ப்பதோஷத்தால் திருமணம், செயல்பாடுகளில் தடை ஏற்படுவதாக சொல்வார்கள். இவர்களுக்கு, காஞ்சிபுரம் அருகிலுள்ள சாலைக்கிணற்றில் ராமானுஜர் தடைகளை நீக்கி அருளுவார்
    சர்ப்பதோஷத்தால் திருமணம், செயல்பாடுகளில் தடை ஏற்படுவதாக சொல்வார்கள். இவர்களுக்கு, காஞ்சிபுரம் அருகிலுள்ள சாலைக்கிணற்றில் ராமானுஜர் தடைகளை நீக்கி அருளுவார். இவரை வணங்கினால் தோல் நோய் நீங்கும்.

    காலசர்ப்பதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ராமானுஜரின் அவதார நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தன்று இங்கு சிறப்புபூஜை நடத்துகிறார்கள். புத்திரபாக்கியம் பெற தீர்த்தத்தில் நீராடி அங்கப்பிரதட்சணம் செய்வர். மனக்குறை தீரவும், உடல் குறைபாடு நீங்கவும் அர்ச்சனை செய்கிறார்கள். ராமானுஜர் சந்நிதியிலிருந்து, காஞ்சிபுரம் வரதராஜர் ராஜகோபுரத்தை தரிசிக்கலாம்.

    இருப்பிடம்:

    காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் - செவிலிமேடு சாலையில் உள்ள கூட்டுரோட்டிலிருந்து 1 கி.மீ.,

    போன்:

    94882 19520.
    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து, பூமியில் விழுந்த ஒரு துளியே செவ்வாய் ஆகும். செவ்வாய் பகவானை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    செவ்வாயின் அளவற்ற வீர்யம்

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து, பூமியில் விழுந்த ஒரு துளியே செவ்வாய் ஆகும். பூமாதேவியினால் வளர்க்கப்பட்டவன் செவ்வாய் (தரணீ கர்ப்ப சம் பூதம்) என விளக்குகிறார் ஸ்ரீ வியாச பகவான். பரத்வாஜ முனிவரின் கருணையினால், அவரது மகனாக வளர்ந்து, நவக்கிரகங்களில், அக்கினிக்குச் சமமான ஒளியும், பலமும், வீர்யமும் பெற்று, ஒளி வீசிப் பிரகாசிக்கும் இவன் அங்காரகன் என்று புகழ் பெற்றான்.

    செந்நிறத்தில், கொழுத்து விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பைப் போல் ஜொலிப்பதால், செவ்வாய் என்று பெயரை அடைந்தான். கிரேக்க பாசையில் மாஸ் எனப் போற்றப்பட்ட இக்கிரகம், பூமி, நிலம், செம்பு, உத்தம சகோதரர்கள், சேனைகளுக்குத் தலைமை, பிடிவாதம், நினைத்ததைச் சாதித்தே தீரும் வல்லமை. முன்கோபம் ஆகியவற்றிற்கு காரகத்துவம் பெற்றவர் ஆவார்.

    செவ்வாய்க்கு உரியது :

    பெயர்    - அங்காரகன்
    மலர்    - செண்பகம்
    வாகனம்    - அன்னம்
    தானியம்    - துவரை
    நவரத்னம்    - பவழம்
    வஸ்த்ரம்    - சிவப்பு
    அன்னம்    - துவரை
    திக்கு    - தெற்கு

    அங்காரகனுக்கு பிடித்தமானவை :

    தானியம்    : துவரை
    மலர்    : செண்பகம், செவ்வரலி
    வஸ்திரம்    : சிவப்பு ஆடை
    ரத்தினம்    : பவழம்
    நிவேதனம்    : துவரம் பருப்புப்பொடி அன்னம்
    சமித்து    : கருங்காலி
    உலோகம்    : செம்பு

    தானம் கொடுக்க வேண்டிய பொருட்கள் :

    செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் மேற் கொள்வது, தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பதுநல்லது.

    எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? :

    செவ்வாய் தசையில் செவ்வாய் புத்தி நடப்பவர்கள்:
    “சூரிய காயத்ரி”-ஜபித்து வரவும், கதிரவனை வழிபட்டு வரவும்.
    செவ்வாய் தசையில் ராகு புத்தி நடப்பவர்கள்:
    ஸ்ரீ சரபேஸ்வரரை வணங்கி வரவும்.
    செவ்வாய் தசையில் குரு புத்தி நடப்பவர்கள்:
    பிரதோஷ வழிபாடு செய்யவும்.
    செவ்வாய் தசையில் சனி புத்தி நடப்பவர்கள்:
    நீலகண்டர் “திரிசதி”-யை பாராயணம் செய்து வரவும்.
    செவ்வாய் தசையில் புதன் புத்தி நடப்பவர்கள்:
    “சூரிய காயத்ரி”- ஜபித்து வரவும்.
    செவ்வாய் தசையில் கேது புத்தி நடப்பவர்கள்:
    காளபைரவரை செவ்வாய் தோறும் வணங்கி வரவும்.
    செவ்வாய் தசையில் சுக்கிரன் புத்தி நடப்பவர்கள்:
    வரலட்சுமி பூஜை செய்து வரவும்.
    செவ்வாய் தசையில் சூரியன் புத்தி நடப்பவர்கள்:
    கோ பூஜை வெள்ளி தோறும் செய்து வரவும்.
    செவ்வாய் தசையில் சந்திரன் புத்தி நடப்பவர்கள்:
    அஷ்டலட்சுமிகளை வணங்கி வரவும்.

    செவ்வாய் தோஷம் ஆணுக்கு இருந்தால் பெண்ணுக்கும் அதே அளவு தோஷம் இருக்க வேண்டும்.

    இதில் ஆண்களை விட பெண்கள்தான் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். தோஷமுள்ள பெண்கள் தோஷமுள்ள ஆண்களை மணப்பதுதான் முறையானது. பாதுகாப்பானது. தீர்க்க சுமங்கலியாக கணவனுடன் நீண்ட காலம் வாழச் செய்வதாகும்.

    ஆண்களும் தோஷமுள்ளவர்களானால் தோஷமுள்ள பெண்ணை மணந்தால்தான் வாழ்க்கை தங்கு தடையின்றி மகிழ்ச்சியுடன் நடந்து வரும்.

    துவரை தானம்:

    உடைக்காமல் இருக்கும் முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொட்டலம் கட்டிக் கொள்ள வேண்டும்.இவற்றுடன் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழை பழம் ஆகியவற்றையும் சேர்த்து கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.

    வாழைப்பூ தானம்:


    ஒரு மரத்தில் இருக்கும் முழு வாழைப்பூவும் அதே மரத்தில் காய்த்த பழமும், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலையையும் வெற்றிலை பாக்கும் மஞ்சள் துணியும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகளை இலையில் வைத்து தானம் வாங்குபரை நடுவீட்டில் உட்காரவைத்து தந்து விட வேண்டும்.

    நோய், கடன் தொல்லை உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

    செவ்வாய்க்கிழமையில் வரும் சுவாதி நட்சத்திரத்தில், ஒரே வாழை மரத்தின் பழம், பூ இவற்றை அதே மரத்தின் தலை இலையில் வைத்து, துவரை, தேங்காய், வெல்லம், மஞ்சள் துண்டு, வெற்றிலைபாக்கு காணிக்கை இவற்றை வைத்து தானம் செய்ய வேண்டும்.

    இதை முருகன் கோவிலிலோ, அல்லது பைரவர் கோவிலிலோ வைத்து செய்ய வேண்டும். தோசம் மாறி சுகம் உண்டாகும். வியாதியில் இருந்து பூரண குணம் பெறலாம். கடன் அடையும்.
    அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தால், கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும், குடும்பச் சிக்கல் விலகும் என்கிறார்கள்.
    சென்னை எழும்பூர்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தின் மூலவர் சிவலிங்க மூர்த்தி வடிவத்தில் அர்த்தநாரீஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    கருவறையின் கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் உருவச்சிலை உள்ளது. இந்த ஆலய மூலவரான சிவலிங்கத்தின் ஆவுடையார், மூன்றரை அடி விட்டம் கொண்டது என்பது தனிச்சிறப்பாகும். மூலவரின் கருவறைக்கு வெளியே விநாயகரும், சுப்பிரமணியரும் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்கின்றனர். இந்த ஆலயத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள், கருடாழ்வாருக்கும் தனிச் சன்னிதிகள் உள்ளன.

    இத்தல அம்பாளின் திருநாமம் திரிபுரசுந்தரி என்பதாகும். இவ்வாலய ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தால், கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும், குடும்பச் சிக்கல் விலகும் என்கிறார்கள். மேலும் திருமணப் பேறும், குழந்தைப்பேறு அமையும் இத்தல இறைவனை வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த ஆலயம் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    சென்னை- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எழும்பூர் அடுத்துள்ளது தாஷ்பிரகாஷ் பேருந்து நிறுத்தம். இந்த பஸ்நிறுத்தத்தின் அருகில் உள்ள ஆராவமுதன் கார்டன் முதல் தெருவில் இருக்கிறது இந்த ஆலயம்.
    ×