என் மலர்
தோஷ பரிகாரங்கள்
கோனியம்மனை வேண்டிக்கொண்டால் திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிட்டும், நோய்கள் நீங்கும், தொழில் விருத்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.
ஒரு சமயம் அவன் ஆட்சி புரிந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ வழியின்றி தவித்தனர். அவர்களின் நிலையைக் கண்ட கோவன் தனது ஆட்சியின் கீழ் வசிக்கும் மக்கள் வாழ்வில் நன்மைகள் பல பெற்று பஞ்சம் பிணிகள் ஏற்படாமல் சிறந்து வாழ்ந்திட வேண்டி வனப்பகுதியில் சிறு நிலத்தை சீரமைத்து அங்கு கல் ஒன்றினை வைத்து அம்மனாக எண்ணி வழிபடத் தொடங்கினான். அதன்பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்று திகழ்ந்தனர். அதன்பின் இருளர்கள் அந்த அம்மனையே தங்களது குலதெய்வமாக எண்ணி கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.
இக்கோயில் கோவைக்கு வடக்கு திசையில் அமைந்தது. அம்பிகை காவல் தெய்வமாக நகரைக் காத்தாள். அவனது ஆட்சி முடிந்த பல்லாண்டுகளுக்குப்பின் இப்பகுதியை இளங்கோசர் என்பவர் ஆண்டு வந்தார். அப்போது சேரமன்னர் ஒருவர் படையெடுத்து வந்தார். அவரின் படையெடுப்பில் இருந்து நாட்டைக் காக்க கோவன்புத்தூரின் மையத்தில் ஓர் கோட்டையையும் மண்மேட்டையும் கட்டி காப்புத்தெய்வமான அம்மனை அங்கு வைத்து வழிபட்டார். இவளே கோனியம்மனாக வழிபடப்படுகிறாள்.
சிவ அம்ச அம்பிகை: கோனியம்மன் வடக்கு நோக்கி எட்டு கரங்களில் சூலம் உடுக்கை வாள் சங்கம் கபாலம் அக்னி சக்கரம் மணி ஏந்தி காட்சியளிக்கிறாள். சிவனைப் போல இடது காதில் தோடும் வலது காதில் குண்டலமும் அணிந்திருப்பது அபூர்வமான அமைப்பு. சிவமும் சக்தியும் வேறில்லை என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. அம்பிகை சன்னதி எதிரே சிம்மவாகனம் உள்ளது. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர். ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அமாவாசை பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.
அம்மனுக்கு வலப்புறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் பின் பகுதியில் ஆதி கோனியம்மன் பஞ்ச முக விநாயகர் வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வடக்கு வாசலில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள தளத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது சாந்த விநாயகர் சன்னதில ஆதி கோனியம்மன் சன்னதி மகாளி அம்மன் சன்னதி.
இங்கு வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும் குழந்தைப்பேறு கிட்டும் நோய்கள் நீங்கும் தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோயிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மேலே மஞ்சள் தேங்காய் வெற்றிலை பாக்கு பூ வைக்கின்றனர். கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர்.நோய் நீங்கவும் மாங்கல்ய பாக்கியத்திற்கும் வேண்டிகொள்கின்றனர்.
அதிசயத்தின் அடிப்படையில்: தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு. கோவை நகரில் இங்கு மட்டுமே தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.
கோனியம்மன் கோயில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும். இக்கோயிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டளவில் அமைந்தது. இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பழங்குடியினரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முக்கியத்துவத்தை இழந்த இக்கோயிலை மைசூர் மன்னர்களில் ஒருவர் ’மகிசாசுர மர்த்தினி’ அமைப்பில் சீரமைத்தார்.
இக்கோயில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ தொலைவிலும், கோவை ரயில் நிலையத்திலிருந்து நடந்து வரும் தூரத்திலும் அமைந்துள்ளது.

குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.
செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.
ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய் 9, நாட்டு வாழைப்பழம் 18, கொட்டைப்பாக்கு18, வெற்றிலை 18, கதம்பப்பூ ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும். செய்வினை தோஷத்தை விரட்டும் மற்றொரு பரிகாரம் வருமாறு:
முதலில் குலதெய் வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும்.
அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறதோடிவிடும். யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்.

ஒருவர் செய்யும் கர்ம வினைகள்தான், அவரது பிறவிகளில் செவ்வாய் தோஷமாக மாறுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வேறு ஒருவரின் நிலத்தை அபகரிப்பது, சகோதர, சகோதரிகளின் சொத்தை தன் பெயருக்கே மாற்றி எழுதிக் கொண்டு ஏமாற்றுவது, வாங்கிய கடனை கட்டாமல் ஏமாற்றுவது, சதி செய்து ஒருவரை கொன்று விட்டு, வேறு ஒருவர் மேல் பழியைப் போட்டு விடுவது, நல்ல அந்தஸ்தில் உள்ளவர்களை அவமானப்படுத்துவது, வாகனங்களில் மோதி ஒருவரைக் கொன்று விடுவது போன்றவைகள்தான் செவ்வாய் தோசத்திற்குக் காரணம்.
அதாவது ஒருவர் செய்யும் கர்ம வினைகள்தான், அவரது பிறவிகளில் செவ்வாய் தோஷமாக மாறுகிறது.

அங்காரக பகவானுக்குச் செவ்வாய்க்கிழமையில் அபிஷேகம் செய்து கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்தால் அங்காரக கிரகதோஷம் நீங்கும்.
அங்காரக பகவானுக்குச் செவ்வாய்க்கிழமையில் அபிஷேகம் செய்வித்துச் சிவப்பு வஸ்திரம், பவழம், சிவப்பு அலரி என்பவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கருங்காலிச் சமித்தினால் யாகத்தீயை எழுப்பித் துவரம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
பிறகு தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சுருட்டி ராகத்தில் அங்காரக கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
இப்படிச் செய்தால் அங்காரக கிரகதோஷம் நீங்கும்.

கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.
கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார். இதற்குப் புராணத்தில் ஒரு கதை உண்டு.
ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார். சனியின் நச்சரிப்புத் தாங்காமல் ஆஞ்சநேயர், என் தலைமீது அமர்ந்து கொள் என்று சொன்னதும், ஆஞ்சநேயர் தலையில், சனி அமர்ந்தார்.
இதுதான் சமயம் என்று அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை தன் வாலில் எடுத்துத் தன் தலை மீது அமர்ந்திருக்கும் சனியின் தலைமீது வைத்தார். பாறாங்கல்லின் பாரம் தாங்காமல் மூச்சு வாங்கிய சனி, தன்னை விடுவிக்கும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடவே, என்னையும் என்னை வணங்கும் பக்தர்களுக்கும் இனி தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடு என்று சொல்லவே, ஆஞ்சநேயரின் கட்டளைக்கு அடிபணிந்தார் சனி.
அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.

செவ்வாய் தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் சஷ்டி நாள், கிருத்திகை நாள், செவ்வாய்கிழமை இந்நாட்களில் முருகன் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்து வரவும்.
செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய பல்வேறு பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களில் உங்களுக்கு எந்த பரிகாரம் செய்ய ஒத்து வருகின்றதோ அதை தேர்ந்தெடுத்து செய்யவும். வழக்கத்திற்கும் கொண்டு வரவும்.
எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் சஷ்டி நாள், கிருத்திகை நாள், செவ்வாய்கிழமை இந்நாட்களில் பக்கத்தில் உள்ள முருகன் ஆலயத்திற்குச் சென்று பெயருக்கு அர்ச்சனை செய்து வரவும்.
இதுவும் முடியவில்லை என்றால் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை நான்றாக படித்து மனதில் சொல்லிக் கொண்டு தியானத்தில் ஈடுபடவும். இவ்வாறு செய்து வர செவ்வாய் நிச்சயம் கருணை காட்டுவார்.

தங்கம் வாங்க முடியவில்லை என்றும், வீட்டில் தங்கம் தங்குவதில்லை என்றும் கவலைப்படுபவர்களுக்கு என்றே பரிகாரம் உள்ளது. இது குறித்து பார்க்கலாம்.
செவ்வாய்க் கிழமை அவிட்டம் நட்சத்திரத்தில், காலை எழுந்தவுடன் யாருடனும் பேசாமல் ஒரு பித்தளைக் குடத்தில் துவரம்பருப்பு, அரிசி, கொண்டைக்கடலை இவை மூன்றையும் சம அளவில் கலந்து நிரப்பி கொள்ள வேண்டும்.
அந்த குடத்தின் மேல் ஒரு தேங்காயை கவிழ்த்து வைக்க வேண்டும். பிறகு குடும்பத்தாருடன் அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று, சுவாமியின் முன் குடத்தை வைத்து, அபிஷேக ஆராதனைகள் செய்தல் வேண்டும்.
அர்ச்சகரிடம், ஸ்வர்ண தோசம் நீங்க செவ்வாய் கிரக பூஜைத்தானம் என்று கூறி அவரைப் பெற்றுக் கொள்ளும்படி கூறி அவரிடம் குடத்தை கொடுத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து விட வேண்டும். பிறகு கடலை அவித்து தானம் செய்ய வேண்டும்.
இப்படி பரிகாரம் செய்தால் வீட்டில் தங்கம் நிலையாகத் தங்கும்.

திருமண தடை நீக்கி புத்திரப் பேற்றினை தட்டாமல் தரும் முருகனின் சக்தியான கௌமாரியை நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று வணங்குபவர் வாழ்வில் வளம் சேர்ப்பாள்.
நவராத்திரியின் ஆறாம் நாளான சஷ்டியில் இன்று சக்தி தேவியை கௌமாரி தேவியாக வழிபட வேண்டும். மயில் வாகனமும், சேவல்கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்; ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.
வீரத்தை தருபவள். கல் யானை வடிவத்தை எடுப்பவள். பராசக்தியினின்று உதித்த கௌமாரி அழகு, அறிவு, வீரம் ஆகியவற்றின் உறைவிடமான குமரக்கடவுளின் அம்சம். பக்தர்களின் விருப்பங்களை தட்டாமல் நிறைவேற்றுபவள். இந்த அம்பிகை ஆறுமுகங்கள் கொண்டவள். பன்னிரு கண்களும், கரங்களும் கொண்டவள். மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பவள்.
வில், அம்பு, பாசம், அங்குசம், பரசு, தண்டம், தாமரை, வேல், கத்தி, கேடயம் போன்ற ஆயுதங்களோடு அபயமும், வரதமும் தரித்தவள். அடியார்க்கு வரங்களை வாரி வழங்குவதால் சிவந்த கரம் கொண்டவள். விஷ்ணு தர்மோத்திரம் என்ற நூல் இந்த அன்னையைப் பற்றி விரிவாக விளக்குகிறது.
காலத்தின் வடிவை ஸ்தூலமாய் உருவகப்படுத்தினால் 60 வருடங்களையும் அறுபது படிகளாகக் கொண்டு அதன் மேல் கோலோச்சும் சுவாமிநாதன் 60 வருடங்களாகிய காலத்தின் ஸ்தூல ரூபம். காலத்தை ஒரு வருடத்தின் உருவமாகக் கொண்டால் முருகனின் இரு கால்கள் தட்சிணாயனம், உத்ராயணம் ஆகிறது.
ஆறு ருதுக்களும் ஆறுமுகங்கள், பன்னிரண்டு கரங்களே பன்னிரண்டு மாதங்களாகும். அதேகாலம் ஒரு நாளாய் உருவம் கொண்டால் இரவு, பகல் என்றாகிறது. அதுவே முருகனின் வடிவமாய் எடுத்துக்கொண்டால் இரவு வள்ளி, பகல் தேவஸேனை. இந்த இரண்டு கௌமார சக்திகளும் இணைந்த ஒருவரே முருகனின் ரூபம்.
முருகனை காலரூபமாகவும், காலத்தை தன் வசத்தில் வைத்திருப்பவனாகவும் பேசுகிறது கந்தபுராணம். மகிமை வாய்ந்த, திருமண தடை நீக்கி புத்திரப் பேற்றினை தட்டாமல் தரும் சகல வல்லமை பொருந்திய முருகனின் சக்தியான கௌமாரி, தன்னை வணங்குபவர் வாழ்வில் வளம் சேர்ப்பாள்

நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரகங்களுக்கு தனித் தனியாக ஹோமங்கள் செய்யப்படுவதும் உண்டு. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
நவக்கிரகங்களுக்கு தனித் தனியாக ஹோமங்கள் செய்யப்படுவதும் உண்டு. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
சூரியன் :
ஜோதிட சாஸ்திர ரீதியாக சூரியன் என்பவர் பிதுர்காரகன் அதாவது ஒருவருக்கு அமைந்த தந்தை பற்றி குறிப்பிடக் கூடியவர். ஒருவரது சுயநிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கவுரவம், அந்தஸ்து, வீரம், பராக்கிரமம், நன்னடத்தை ஆகியவற்றையும், கண்கள், பார்வை, உடல் உஷ்ணம், அரசாங்க தொடர்பு ஆகியவை பற்றியும் சூரியன் குறிப்பிடுவார். ஒருவரது ஜாதக ரீதியாக சூரியனது நிலை கோச்சாரம் அல்லது திசாபுத்திகள் பாதகமாக இருந்தால் சூரிய பிரீதி ஹோமம் செய்து கொள்ளவேண்டும்.
சந்திரன் :
சந்திரன் என்ற கிரகமானது ஜோதிட ரீதியாக ஒருவரது மனதின் எண்ண அலைகளை ஆட்சி செய்யும் சக்தி படைத்ததாகும். ஒருவரது சரியான உடலமைப்பை கட்டிக்காப்பதோடு, தாயாரது நிலையையும் சந்திரன் குறிப்பிடுவார். ஜோதிடத்தில் ஒரு ஜாதகத்தின் ஆரம்பமாக உள்ள லக்னம் வலுவாக இல்லாத பட்சத்தில் சந்திரனை லக்னமாக வைத்து பலன் சொல்லப்படுவது மரபு. ஒருவரது ஜாதகத்தில் வலுவற்றும், பாதிப்புகளுடனும் அமைந்த சந்திரனுக்குரிய திசை அல்லது புத்தி காலங்களில் சந்திர பிரீதி ஹோமத்தை செய்து கொள்ளவேண்டும்.
செவ்வாய் :
ஒருவருக்கு இருக்கும் உடல் உறுதி, மனஉறுதி, ரத்தம், கோபம் ஆகியவற்றை குறிப்பிடுவது செவ்வாய் என்ற கிரகமாகும். ஒருவருக்கு அமையும் சகோதர சகோதரிகள், நிலபுலன்கள், கடன்கள் மற்றும் போர்க்குணம் ஆகியவற்றையும் குறிப்பிடுபவர் இவரே. ஜாதக ரீதியாக செவ்வாய் திசை அல்லது புத்தி பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக இருந்தால் செவ்வாய் கிரக பிரீதி ஹோமம் செய்து கொள்வது நல்லது.
புதன் :
ஒருவரது கல்வி நிலை, தாய்மாமா, அத்தை, மைத்துனர்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள புதன் என்ற கிரகம் ஜாதக ரீதியாக எவ்வாறு உள்ளது என்று பார்ப்பது வழக்கம். மேலும், கணிதம், நண்பர்கள், புத்தி சாதுரியம், கவிதை, நாடகம், எழுத்துக்கலை, சாஸ்திர ஞானம், நுண்கலைகள் ஆகியவற்றையும் புதன் என்ற கிரகமே சுட்டிக்காட்டும். ஜோதிட ரீதியாக ஒருவருக்கு புதன் திசை அல்லது புத்தி சாதகமாக இல்லாவிட்டால் புதன் பிரீதி ஹோமத்தை செய்து கொள்வது முக்கியம்.

குரு :
ஜோதிட ரீதியாக தனம், குழந்தைகள், நல்ல அறிவு, மந்திரசாஸ்திரம், யாகங்கள், தெய்வதரிசனம், தீர்த்த யாத்திரை, சமுதாயத்தில் மதிப்பு, சொல்வாக்கு ஆகியவற்றுக்கு குரு என்ற கிரகமே பொறுப்பாவார். தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆன குரு ஒருவரது சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்டு அவரது திசாபுத்திகள் நடப்பில் இருந்தாலும், கோச்சார ரீதியாக நல்ல இடத்தில் இல்லாதிருப்பினும் குரு பிரீதி ஹோமத்தை செய்து கொள்வது அவசியமானது.
சுக்ரன் :
ஜோதிட ரீதியாக ஒருவருக்கு அமையும் கணவன் அல்லது மனைவி பற்றிய அனைத்து செய்திகளையும் சுக்ரன் என்ற கிரகம் குறிப்பிடும். சகல கலைகளுக்கும் அதிபதியாகவும், காதல், சுக போகம், வாகனங்கள், ஆபரணம், இளமை, நடிப்பு, நடனம், சித்திரம், ராஜபோக வாழ்வு, பல மாடி வீடு ஆகிய அனைத்தையும் சுக்ரனே குறிப்பிடுவார். பலமற்ற சுக்ர திசாபுத்தி காலங்களில் ஒருவர் சுக்ர பிரீதி ஹோமத்தை செய்து கொள்ளவேண்டும்.
சனி :
ஜாதக ரீதியாக ஒருவரது நீண்ட ஆயுள், மரணம் ஆகியவற்றை கணக்கிடுவதற்கு சனியின் பிறப்பு கால நிலையை கணக்கிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. வாழ்க்கையில் ஒருவருக்கு ஏற்படும் கடும் துன்பத்திற்கு காரணமாக இருந்தாலும், பெரும் செல்வ வளத்தையும் அளிப்பவர் சனிதான். ஜாதக ரீதியாக சனியின் திசாபுத்தி அல்லது பாதிப்பான கோச்சாரம் ஆகியவற்றிற்கு சனி பிரீதி ஹோமத்தை செய்து கொள்வது நல்லது.
ராகு :
சர்ப்ப கிரகமாக இருக்கும் ராகுவுக்கு சொந்த வீடு இல்லாததால் தான் இருக்கும் வீட்டிற்குரிய பலனை அவரது இயல்பான அதீதமான முறையில் தருவார். ஜாதகத்தில் ராகு சரியான விதத்தில் இருந்தால் கம்ப்யூட்டர், ஸ்பெகுலேஷன், சூதாட்டம் ஆகியவை மூலமாக தன வரவு உண்டாகும். ஜாதக ரீதியாக திசாபுத்தி அல்லது கோச்சாரத்தில் பாதிப்பை தரும்படி ராகு அமைந்திருந்தால் அதற்குரிய பிரீதி ஹோமத்தை செய்து கொள்ளவேண்டும்.
கேது :
உலகம் போற்றும் ஆன்மிக ஞானத்தை தரக்கூடிய கேது என்ற கிரகமானது தடங்கல், ஞானம், மோட்சம், மாந்திரீகம், பைத்தியம் பிடித்தல், சிறைவாசம், புண்ணிய ஸ்தல தரிசனம், மகான்கள் தரி சனம், விநாயகர் வழிபாடு ஆகியவற்றை தருவார். ஜாதக ரீதியாகவோ கோச்சார ரீதியாகவோ கேது பாதிப்பை தரும்படி இருப்பின், அதற்கு உரிய பிரீதி ஹோமத்தை செய்து கொள்ளவேண்டும்.

துன்பங்களை நீக்கும் வழிகளில் ‘ஹோமம்’ எனப்படும் ‘அக்னி வழிபாடு’ முதன்மையாக இருக்கிறது. எந்த ஹோமங்கள் என்ன பிரச்சனைகளை தீர்க்கும் என்று பார்க்கலாம்.
அன்றாட வாழ்க்கையில் நமக்கு வரக்கூடிய துன்பங்களுக்கான காரணங்களை பலரும் அறிந்திருந்தாலும் அதிலிருந்து விடுபட முடிவதில்லை. துன்பங்களுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஜாதக ரீதியாக அமைந்த நவக்கிரகங்களின் பாதகமான சஞ்சார நிலைகள்தான் பிரதானமாக நமது பண்பாட்டில் கருதப்படுகிறது.
துன்பங்களை நீக்கும் வழிகளில் ‘ஹோமம்’ எனப்படும் ‘அக்னி வழிபாடு’ முதன்மையாக இருக்கிறது. ‘ஹோமத்தின்’ மூலம் சம்பந்தப்பட்ட தெய்வ சக்திகளை, சில வழிமுறைகளை கையாள்வதன் மூலம் அக்னியில் எழுந்தருளச் செய்து, மந்திரப்பூர்வமாக பூஜை செய்து அருளைப்பெறும் வழிதான் ‘ஹோமம்’ என்று சொல்லலாம்.
ஹோமங்களின் வகைகள் :
அதர்வண வேதமானது... யாகங்களை அமைதி தரும் ‘சாந்திகம்’, விருப்பங்களை நிறைவேற்றும் ‘பெளஷ்திகம்’, எதிரிகளை ஒழிக்கும் ‘ஆபிசாரிகம்’ என்று மூன்று வகையாக பிரித்துள்ளது. பண்டைய காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், மக்களது நன்மைக்காகவும் ஹோமங்களை செய்தார்கள்.
பிறகு, மன்னர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும், மக்களின் நன்மைக்காகவும் ஹோமங்களை நடத்தினார்கள். இதிகாசங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகியவற்றில் ஹோமங்கள் பற்றிய முக்கியமான செய்திகள் உள்ளன. மகாபாரதத்தில் பாஞ்சாலியும், அவளது சகோதரனும் ஹோமத்திலிருந்து வெளிவந்தார்கள் எனவும், ராமாயணத்தில் ராமனை வெல்ல இந்திரஜித் ஆபிசார வகை ஹோமமான ‘நிகும்பலா’ யாகம் செய்ததாகவும் நாம் அறிகிறோம். ஹோமம் செய்யப்படும் விதத்தைப் பற்றி பார்க்கலாம்.
கணபதி பூஜை :
எந்தவொரு ஹோமமும் தொடங்குவதற்கு முன்னர் கணபதி பூஜை செய்யப்படும். துர்தேவதைகள் அல்லது துஷ்ட சக்திகள் ஆகியவற்றால் எவ்விதமான இடையூறும் இல்லாமல் ஹோமம் நடப்பதற்கு வினைகளை விலக்கும் விநாயகர் பூஜை நடத்தப்படும்.
சங்கல்பம் :
உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பெயரும், முகவரியும் உண்டு. முகவரி கச்சி தமாக எழுதப்பட்ட தபால் சரியான நபரை சென்றடைகிறது. அதேபோல ஹோமங்களுக்கும் சரியான, கச்சிதமான இலக்கு அவசியம். ஹோமத்தின் பலன்கள் தலைவருக்கு முழுவதுமாக சென்று சேர வேண்டும் என்பதற்காக சங்கல்பம் செய்யப்படுகிறது.

குல தெய்வ பூஜை :
உலகத்தில் நமது விருப்பத்திற்கேற்ப கடவுள் வழிபாடுகளை கடைப்பிடித்து வந்தாலும், குல தெய்வ வழிபாடு முக்கியமானது என்று நமது முன்னோர்கள் நம்பினார்கள். அதனால் குலதெய்வ பூஜையை அவர்கள் குறையில்லாமல் செய்ததோடு, சகல காரியத்துக்கும் முதலில் குல தெய்வத்தையே பிரார்த்தனை செய்தார்கள். வீட்டில் நடக்கும் சகல சுப காரியங்களுக்கான முதல் பத்திரிகையை குல தெய்வத்துக்கு வைக்கப்பட்டது.
பித்ரு பூஜை :
பித்ரு லோகம் எனப்படும் நீத்தார் உலகத்தில் நமது மூன்று தலைமுறை முன்னோர்கள் இருப்பதாகவும், அவர்கள் சில நேரங்களில் மட்டும் வெளியே வருவார்கள் என்றும் நம்பப்படுகிறது. அவர்களது ஆசிகளை பெறுவதற்காக செய்யப்படுவது பித்ரு பூஜையாகும். ஒரு ஹோமம் செய்யப்படும்போது சம்பந்தப்பட்டவரது முன்னோர்களுக்கான பூஜை செய்யப்பட வேண்டும்.
கும்ப ஸ்தாபனம் :
கும்பத்தை உடலாகவும், அதன் மேல் உள்ள தேங்காயை தலையாகவும், அதில் சுற்றப்படும் நூலானது நாடி நரம்புகளையும், கும்பத்திற்குள் இருக்கும் தண்ணீரானது ரத்தத்தையும் குறிப்பிடுவதாகும். கும்பத்தின் மீது வைக்கப்படும் தர்ப்பையின் மூலமாக குறிப்பிட்ட தேவதையின் ஆற்றலை கும்பத்துக்குள் வரவழைத்து நிலைப்படுத்துவது ஆவாகனம் எனப்படும்.
முக்கிய ஹோமம் :
ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனிப்பட்ட முறையில் மூல மந்திரம், வேத மந்திரம், காயத்ரி மந்திரம், பிரார்த்தனை மந்திரம் என்ற நான்கு வகை மந்திரங்கள் உண்டு. அவற்றை சரியான சப்த அதிர்வுகளில் உச்சாரணம் செய்து குறிப்பிட்ட தேவதா அம்சத்தின் தெய்வீக அலைகளை ஆகர்ஷணம் செய்து, கும்பத்தில் இருக்கும் புனித நீருக்குள் நிலைப்படுத்தப்படும்.
பூர்ணாகுதி :
ஹோம அக்னியில் பட்டுத் துணியில், வாசானாதி திரவியங்கள் சேர்க்கப்பட்டு அக்னி தேவனுக்கு சமர்ப்பணம் செய்வதுதான் பூர்ணாகுதி எனப்படும் ‘அவிர் பாகம்’ ஆகும். அதைப்பெற தேவேந்திரன் வருவதாகவும், ஹோமத்துக்கான காரணத்தை அவர் பூர்த்தி செய்து வைப்பதாகவும் ஐதீகம். நமது சாஸ்திரங்களின்படி இறைவனுக்கு எதையேனும் அளிக்க விரும்பினால், அக்னியின் மூலமாக அளிப்பதுதான் சிறந்த வழியாக உள்ளது.

கருட சேவையை பக்தர்கள் மட்டுமின்றி, மறைந்த முன்னோர்களான பித்ருக்களும் வருவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத பிரமோற்சவம் நாளை (சனிக்கிழமை) 23-ந் தேதி தொடங்கி அக்டோபர் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையட்டி 9 நாட்களுக்கு சுப்ரபாதம், அபிஷேக சேவையை தவிர தினந்தோறும் மற்றும் வாராந்திர சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையே பிரமோற்சவம் தொடங்குவதால் ஏழுமலையான் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது.
பிரமோற்சவத்திற்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் பிரமோற்சவ வாகன சேவையின் போது தனியிடம் ஒதுக்கப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். பிரமோற்சவம் நடைபெறும் 9 நாட்களுக்கு அறைகள் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு விட்டது. முதலில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அறைகள் ஒதுக்கப்படும்.
பிரம்மோற்சவம் சமயத்தில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும் என்பதால் ஒரு வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் செல்லும் தரிசனம், மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரமோற்சவத்தையொட்டி கோவில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
எனவே அன்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்திருப்பவர்கள் தங்கள் பயணத் திட்டத்தை அதற்கு ஏற்ப அமைத்து கொள்வது நல்லது.
சுவாமி வீதி உலா விவரம் வருமாறு:-
செப்டம்பர் 23-ம்தேதி மாலை பிரமோற்சவம் கொடியேற்றப்படுகிறது. அன்று ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.
இரவு பெரிய சேஷ வாகனம், 24-ம் தேதி காலை சிறிய சேஷ வாகனம், இரவு அம்ச வாகனம், 25-ம் தேதி சிம்ம வாகனம், இரவு முத்துப் பந்தல் வாகனம், 26-ம் தேதி கல்ப விருட்ச வாகனம், இரவு சர்வபூபாள வாகனம், 27-ம் தேதி பல்லக்கு உற்சவம், இரவு கருட சேவை நடைபெறும்.

கருட சேவை வழிபாடு மிகுந்தபுண்ணியத்தைத் தரவல்லது. எனவேதான் பிரம்மோற்சவ நாட்களில் கருட சேவையை தரிசனம் செய்யவே அதிக பக்தர்கள் திரள்வார்கள். திருப்பதியில் இந்த ஆண்டு 27-ந் தேதி (புதன்கிழமை) பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எனவே மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள் பயணத்துக்கு அன்று அனுமதி இல்லை.
கருட சேவையை பக்தர்கள் மட்டுமின்றி, மறைந்த முன்னோர்களான பித்ருக்களும் வருவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடலை விட்டு நீங்கும் எல்லா ஆன்மாக்களும் இறைவன் காலடி நிழலில் இளைப்பாறும் பாக்கியத்தை எளிதில் பெற்று விட முடியாது.
கர்ம வினைகள் காரணமாக பல ஆத்மாக்களால் மோட்சத்தை எட்ட இயலாது. அத்தகைய ஆன்மாக்கள் தங்கள் துன்பங்கள், துயரங்களில் இருந்து விடுபட கருட சேவையை கண்டால் பலன் கிடைக்கும். எனவே ஆத்மாக்கள் கருட சேவை தினத்தன்று பூலோகம் வர கருடன், பெருமாளிடம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளார்.
இந்த சலுகையை பயன்படுத்தி பித்ருக்கள், கருட சேவையை தரிசனம் செய்ய வருவார்கள். அப்போது அவர்கள் கருட சேவையைக் காண தம் குடும்பத்தைச் சேர்ந் தவர்கள் யாராவது வந்து இருக்கிறார்களா என்று தேடுவார்கள்.
நாம் கருட சேவையை காண சென்றிருந்தால் நம் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். மனம் குளிர நம்மை ஆசீர்வாதம் செய்வார்கள்.
எனவே கருட சேவையை தரிசிக்க சென்றால் பெருமாள் தரும் ஆசியுடன், நம் முன்னோர்களின் ஆசியையும் நாம் எளிதில் பெற முடியும். ஆகையால் 27-ந் தேதி வர உள்ள கருட சேவையை மறந்து விடாதீர்கள்.
பக்தர்கள் வசதிக் காக திருப்பதிக்கு 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் 24 மணி நேரமும் மலைபாதையை திறந்துவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
28-ம் தேதி அனுமந்த வாகனம், மாலை தங்கரதம், இரவு கஜ வாகனம், 29-ம் தேதி சூரிய பிரபை வாகனம், இரவு சந்திர பிரபை வாகனம், 30-ம் தேதி காலை ரத உற்சவம், இரவு அஸ்வ வாகனம், அக்டோபர் 1-ம் தேதி சக்கரஸ்நானம், மாலை கொடியிறக்கத்துடன் பிரமோற்சவம் நிறைவு பெறும். பிரம்மோற்சவ விழாவை ரூ.8 கோடி செலவில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் நடைபெறக் காலதாமதமானால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும். என்னென்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணம் நடைபெறக் காலதாமதமானால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும். என்னென்ன பரிகாரம் செய்யலாம் என்ற விபரம் வருமாறு:-
செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பதால் நல்லவை நடைபெறும். 41 செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். விரத நாள் அன்று அதிகாலை எழுந்து நீராடி சிவப்பு கலரில் உடை உடுத்தி, செவ்வாய் கிரகத்திற்கு செண்பகப்பூ, சிவப்பு அலரி ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
விரதம் பூர்த்தி செய்யும் தினத்தன்று ஐந்து பேருக்கு விருந்து அளிக்க வேண்டும். அவர்களுக்கு சிவப்பு நிற ஆடை, செம்புச் சொம்பு, தம்ளர் மற்றும் தாழ்பூலத்துடன் தட்சணையும் அளித்து அவர்களை வணங்கி ஆசி பெற வேண்டும்.
செவ்வாய் தோஷமுள்ள பெண்ணுக்குத் திருமணம் தடங்கலாகிக் கொண்டே வந்தால் வளர்பிறையில் வந்த செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நீராடி சிவப்பு ஆடை உடுத்தி மாங்கலயத்தை தெய்வத்தின் முன் மஞ்சள் சரட்டில் கோத்து வைத்து வணங்கி எடுத்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.
செவ்வாய்க்கிழமை முழுவதும் மாங்கல்யத்தை அவிழ்க்கக் கூடாது. மறுநாள் காலை நீராடி நெற்றியில் குங்குமமிட்டு தெய்வத்தை வணங்கி மாங்கல்யத்தை அவிழ்த்து ஏதாவது ஓர் ஆலயத்தின் உண்டியலில் சிறிது காணிக்கை சேர்த்து சமர்ப்பித்து விட வேண்டும். சிவப்பு நிற ஆடையை யாருக்காவது தானம் செய்து விட வேண்டும். இவ்விதம் செய்தால் தடையின்றி விரைவாக திருமணம் நடைபெற்று விடும்.
செவ்வாய்க்கிழமையில் வரும் மிருகசீரிட நட்சத்திரத்தில் (மிருகசீரிடம் நட்சத்திரம் சகல தோசங்களுக்கும் அப்பாற்பட்டது) அவரவர்கள் சக்திக்கேற்ப, துவரை தானம் செய்ய வேண்டும். துவரையை ஒரு சிவப்புத் துணியில் முடிந்து, வெற்றிலை பாக்கு, மஞ்சள், பூ, பழம், தேங்காய், வெல்லம் இவற்றை ஒரு தட்டில் வைத்து துர்கா பூஜை செய்து ஒரு ஏழையை அழைத்து பூஜையில் முழு மனதுடன் ஈடுபட்டு, பூஜை முடிந்தவுடன், தட்டில் உள்ளவற்றை தானமாகக் கொடுத்து காணிக்கையும் அதில் வைத்து கொடுக்க வேண்டும். அந்த ஏழைக்கு உணவு கொடுத்து அனுப்ப வேண்டும். இந்த பரிகாரத்தால் உடனே திருமணம் கை கூடும்.