search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண தடை நீக்கும் வேணுகோபால கண்ணன்
    X

    திருமண தடை நீக்கும் வேணுகோபால கண்ணன்

    திருமண தடை, எதிரிகளின் தொல்லை, பயம் நீங்க வேணுகோபால கண்ணன் ஆலயத்தில் வழிபாடு செய்தால் பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து மேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவிலும், பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே ஒரு கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது பவளக்காரத் தெரு. இங்கு வேணுகோபால கண்ணன் ஆலயம் அமைந்துள்ளது.

    கர்ப்பக்கிரகத்தில் மூலவர் வேணுகோபால கண்ணன் தனிச் சன்னிதியில் நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார்.

    இந்த ஆலயத்தில் திருமணம் கைகூட வெற்றிலை, பாக்கு, மாலை, பழங்களுடன் ஜாதகத்தையும் வைத்து பெருமாள் சன்னிதியில் அர்ச்சனை செய்து மனமுருக வேண்டி வழிபடுகின்றனர். இந்த பிரார்த்தனை மூலம் விரைவில் திருமணம் கைகூடுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    எதிரிகளின் தொல்லை, பயம் நீங்க, காரிய சித்தி ஏற்பட சக்கரத்தாழ்வார் மற்றும் யோக நரசிம்மரை வழிபடுகின்றனர்.
    Next Story
    ×