என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    நாள்பட்ட சருமநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், திருமழபாடி திருத்தல சுந்தராம்பிகையை வழிபாடு செய்தால் நிவாரணம் கிடைக்கும்.
    திருஞானசம்பந்தரும் பாடிப் போற்றிய தலம் திருமழபாடி திருத்தலம். திருமழபாடி தலத்தில் சுவாமி வைத்தியநாதர் என்னும் திருப்பெயர் கொண்டு அருள்கிறார். சந்திரனின் சருமநோயைப் போக்கிய காரணத்தினால், இறைவன் வைத்தியநாதர் என்னும் திருப்பெயர் கொண்டதாகத் தலவரலாறு கூறுகிறது. அம்பிகையின் திருப்பெயர் சுந்தராம்பிகை. 

    மேலும், புருஷாமிருகர், மார்க்கண்டேயர், அகத்தியர், பராசரர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இந்தத் தலத்து இறைவனை வழிபட்டு அருள் பெற்றனர். சுவாமிக்கு வெள்ளை நிற வேஷ்டியும் சம்பங்கி மாலையும், சுந்தராம்பிகைக்கு மாம்பழ நிறத்து பட்டுப் புடவையும் சிவப்பு ரோஜா மாலையும் சாத்தி வழிபடுவதால், நாம் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

    சுந்தராம்பிகை, அழகம்மை என்று அழகு தமிழிலும் அழைக்கப்படுகிறார். சருமநோய்களைப் போக்கும் வரப்பிரசாதி இந்த அம்பிகை. நாள்பட்ட சருமநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பங்குனி மாதம் நான்கு அல்லது ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இந்தத் தலத்துக்கு வந்து, ஆற்றிலும் கோயில் தீர்த்தத்திலும் நீராடிவிட்டு, ஈரப்புடவையுடன் ஒன்பது முறை அம்பாளை வலம்வந்து, உப்பும் மிளகும் போட்டு வேண்டிக் கொண்டால், நாள்பட்ட சரும நோய்களும் அதனால் ஏற்பட்ட சங்கடங்களும் நீங்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டும் பக்தர்கள், கோயிலில் உள்ள சோமாஸ்கந்தருக்கு வெள்ளை வஸ்திரமும் ரோஜாப்பூ மாலையும் சாத்தி, 11 நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

    அரியலூரிலிருந்து 25 கி.மீ தொலைவிலுள்ளது திருமானூர். திருமானூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருமழபாடி. கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதி உண்டு.

    தொடர்புக்கு:

    கணேச குருக்கள் (ஆலய அர்ச்சகர்) 85259 38216, 98433 60716
    ராகு தோஷம் உள்ளவர்கள் மணப்பாறை நாகநாத சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து வணங்க, தோஷங்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
    மணப்பாறையில் உள்ளது, நாகநாத சுவாமி ஆலயம். இத்தல இறைவனின் பெயர் நாகநாத சுவாமி. இறைவியின் பெயர் மாதுளாம்பிகை.

    இந்த ஆலயத்தின் மேற்கு திருச்சுற்றில் கன்னிமூலை கணபதி தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். அரசமர நிழலில் இளைப்பாறும் இந்த கணபதியை வேண்டி, மரத்தடியில் முட்டையையும் பாலையும் வைத்து விட்டுச் செல்கின்றனர் பெண்கள். மரத்தின் பொந்தில் குடி கொண்டிருக்கும் நாகநாதர், அந்த பாலைப்பருகி முட்டையை உறிஞ்சி செல்வது வழக்கமாம். இதனால் அந்தப் பெண்களை பற்றியிருக்கும் நாகதோஷம் விலகும் என்பது அவர்களது நம்பிக்கை.

    ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து திங்கட்கிழமைகளில் இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்க, அவர்களின் தோஷங்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.
    மார்கழி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருப்பள்ளி எழுச்சி தான். திருப்பள்ளி எழுச்சி காணுங்கள். விரைவில் திருமணம் கைகூடும்.
    மார்கழி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருப்பள்ளி எழுச்சி தான். அதாவது, மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை நோன்பினை பெண்கள் கொண்டாடுவர். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து, கன்னிப் பெண்கள் நீராடி கோலமிட்டு வழிபாடு செய்ய ஆலயத்திற்குச் செல்வார்கள். 

    அதிகாலை நேரத்தில் சிவாலய வழிபாடும், நடராஜர் வழிபாடும் செய்து, திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபட்டால், இல்லற வாழ்க்கை இனிமையாக அமையும் என்பது நம்பிக்கை. 

    சூடிக்கொடுத்த சுடர்கொடியாம் ஆண்டாள் இந்த நோன்பினை கொண்டாடித்தான், பெருமாளை மணந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. எனவே, திருப்பள்ளி எழுச்சி காணுங்கள். விரைவில் திருமணம் கைகூடும். 
    திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் உள்ள கால பைரவர் சன்னதியில் வேண்டிக்கொண்டால் ஆணவ குணம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

    பிரம்ப லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஒதிக் கொண்டிருப்பார். இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
    கார்த்திகை மாதம் கிருத்திகை நாளில் மலையின் மீது தீப வடிவில் காட்சி தருவேன் என்றார் சிவ பெருமான். இதை காண்பவருக்கு மோட்சம் கிடைக்கும்.
    சிவபெருமானை வழிபட மூன்று முக்கிய தினங்கள் ஏற்றவை. மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய மூன்று நாட்களும் மிக சிறந்தவை. 

    திருக்கார்த்திகையில் திரு அண்ணாமலையிலும், திருவாதிரையில் சிதம்பரத்திலும், சிவராத்திரியில் காசி மற்றும் ராமேஸ்வரத்திலும் வழிபடுதல் மிக சிறப்பு. 

    கார்த்திகை மாதம் கிருத்திகை நாளில் மலையின் மீது தீப வடிவில் காட்சி தருவேன் என்றார் சிவ பெருமான். இதை காண்பவருக்கு மோட்சம் கிடைக்கும்.
    ராகு, கேதுகளால் திருமண தோஷம் ஏற்பட்டிருந்தால், ஸ்ரீகாளஹஸ்தியில் சனிக்கிழமை ராகு காலத்தில் சர்ப்ப தோஷ நிவர்த்தி செய்துகொள்வது நல்லது.
    ராகு, கேதுகளால் திருமண தோஷம் ஏற்பட்டிருந்தால், ஸ்ரீகாளஹஸ்தியில் சனிக்கிழமை ராகு காலத்தில் சர்ப்ப தோஷ நிவர்த்தி செய்துகொள்வது நல்லது. ராகு ப்ரீதிக்கு காலன், சர்ப்பேஸ்வரன் ஆகியோரை வழிபடுவதும் உளுந்து தானம் செய்வதும் நல்லது. அறுகம்புல்லால் ஹோமம் செய்யலாம். ஞாயிறு அன்று திருநாகேஸ்வரம் சென்று,  ராகு காலத்தில் ராகுவுக்குப் பால் அபிஷேகம் செய்வது நல்லது.

    கேது தோஷம் நீங்க, கீழ்ப்பெரும்பள்ளம் சென்று வழிபடுவது விசேஷம். மேலும், கணபதி ஜபம், ஹோமம் செய்யலாம். பிரம்மாவையும், சித்திரகுப்தனையும் வழிபடுவது விசேஷமாகும். தர்ப்பையால் ஹோமம் செய்து, கொள்ளு தானியம் அளிப்பதும் சிறப்பாகும்.

    திருமண வயது வந்தும் திருமணம் தாமதப்படுபவர்கள், கும்பகோணம் அருகில் உள்ள திருமணஞ்சேரிக்குச் சென்று வழிபட்டு வரலாம்.
    திருமண வயது வந்தும் திருமணம் தாமதப்படுபவர்கள், கும்பகோணம் அருகில் உள்ள திருமணஞ்சேரிக்குச் சென்று வழிபட்டு வரலாம்.

    கோயிலில், சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை செய்து, மாலை மற்றும் எலுமிச்சைப்பழம் தருவார்கள். வீட்டுக்கு வந்ததும் மாலையையும் எலுமிச்சைப் பழத்தையும் பூஜையறையில் வைத்துவிட்டு, ஸ்நானம் செய்த பிறகு பூஜையறையில் வைத்த மாலையை அணிந்துகொண்டு, எலுமிச்சைப்பழச் சாறை உப்பு, சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடித்துவிட்டு, இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும்.

    திருமணம் ஆனவுடன், வாழ்க்கைத் துணையுடன் திருமணஞ்சேரி சென்று மீண்டும் அர்ச்சனை செய்து வழிபட்டு வர வேண்டும். அப்படிச் செல்லும்போது திருமணத்துக்கு முன்பு நமக்குக் கொடுத்த மாலையை எடுத்துச்சென்று கோயிலில் அதற்கு உரிய இடத்தில் சேர்க்க வேண்டும்.
    ஜாதக கிரக நிலை மாற்றங்கள் ஏற்படும் போது சனி பகவானால் பாதிக்கப்படுபவர்கள் பரிகாரதலங்களுக்கு சென்று துன்பங்களை குறைத்து கொள்கிறார்கள்.
    இந்து மத நம்பிக்கைகளில் பக்தர்கள் அதிகம் பயப்படுவது சனி பகவானுக்கு மட்டுமே. ஜாதக கிரக நிலை மாற்றங்கள் ஏற்படும் போது சனி பகவானால் பாதிக்கப்பட்டு அதிக சிரமங்களுக்கு ஆளாகிறவர்கள் அதிகம் பேர். அப்படி பாதிக்கப்படும் போதெல்லாம் பல பரிகார தலங்களுக்கு சென்று துன்பங்களை குறைத்தும் கொள்கிறார்கள்.

    சனி பகவானின் கருணை பார்வை ஓம் நமச்சிவாய எனும் நாமத்தை உச்சரிப்பவர்கள் மீது அதிகம் உள்ளது. சனிஸ்வரனால் எந்த துயரமும் ஓம் நமச்சிவாயா சொல்பவர்களை பாதிப்பதில்லை.

    தினந்தோறும் காகத்திற்கு சாதம் படைப்பவர்களையும் நீத்தாருக்கான பித்ரு கடன்களை முறையாக செய்பவர்களையும் சனி பகவான் தொந்தரவு செய்வதில்லை. சனிக்கிழமை விரதமிருந்து, சுதர்சன எந்திர வழிபாடு செய்பவர்கள் மீதும் சனி பகவான் கருணை காட்டுகிறார். வலம்புரி சங்கு இருக்கின்ற வீடு மற்றும் சாலகிராமத்தை வைத்து பூஜை செய்பவர்களையும் சனி பகவான் அன்போடு ஆசிர்வதிக்கிறார்.

    உலராத ஈரத் துணியை உடுத்துபவர்களை சனி உடனே பிடித்துக கொள்வார். அதே போல நனைந்தபடியே ஈரம் சொட்ட சொட்ட வீட்டிற்குள் செல்பவர்களையும் சட்டென்று சனி பிடித்துக் கொள்வார்.

    சரியாக குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்கள், ஒழுங்காக தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்கள் இவர்களெல்லாம் சனிக்கு பிடித்தவர்கள்.

    விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுவது இதெல்லாம் சனி பகவானுக்கு பிடித்தமானவை. இதை செய்பவர்களை நிச்சயம் பிடித்தும் கொள்கிறார் சனி.

    மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இவற்றினால் அடுத்தவர்களை வஞ்சிப்பவர்களை தலைமுறை தலைமுறையாக தண்டித்து விடுகிறார் சனி பகவான்.

    அழுகுரல் கேட்கும் வீட்டிலும், அழுக்குகள் நிறைந்த வீட்டிலும் சனி பகவான் நீங்காமல் நிலைத்து நிரந்தரமாக குடியிருக்கிறார்.

    தூய்மையான உள்ளமும், குடியிருக்கும் சுத்தம் மிகுந்த வீடும், பிறருக்கு துயரம் தராத குணமும், தளராத இறை நம்பிக்கையும் சனி பகவான் கொடுக்கும் நன்மைகளை நமக்கு அளிக்கும்.

    சனி பகவான் நம்மை கெடுக்காமல் இருக்க நமச்சிவாய சொல்லி நல்லதே நினைத்து நன்மைகள் பல செய்வோம்.
    செவ்வாய் தோஷத்தால் உண்டாகும் தார தோஷத்திற்கு எந்த பரிகாரம் செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    சில ஆண்களுக்கு ஜாதக ரீதியாக தாரதோஷம் ஏற்படுவதுண்டு. செவ்வாயினால் உண்டாகும் இந்த தோஷத்திற்காக, வாழை மரத்தை வெட்டும் பரிகாரம் செய்யும்படி ஜோதிடர்கள் சொல்வர். வாழையை தாரமாகக் கருதி வெட்டுவதால் மட்டும் தோஷம் நீங்கி விடுவதில்லை.

    செவ்வாயால் உண்டாகும் எந்த தோஷமாக இருந்தாலும் அதற்கு முருகவழிபாடே மிகச்சிறந்தவழி. அருணகிரிநாதர் போன்ற அருளாளர்கள், “”முன்செய்த பழிக்குத்துணை முருகா எனும் நாமம்’என்றுநமக்கு காட்டியவழிகாட்டியுள்ளனர் .

    செவ்வாய் தோஷத்தால் அவதிப்படுபவர்கள் அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் பாலபிஷேகம் செய்ய வேண்டும். இயலாதவர்கள் இன்னும் எளியபரிகாரமாக காலை, மாலை இருவேளையும் “துதிப்போர்க்கு வல்வினை போம்’ என்று துவங்கும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும். இதை எழுதிய தேவராய சுவாமிகள், “கவசம் படிப்போருக்கு நவகோள்(நவக்கிரகங்கள்) மகிழ்ந்து நன்மை அளித்திடும்’ என்று பாடலுக்குள்ளேயே குறிப்பிட்டுள்ளார். செவ்வாய் தலமான பழநிக்குச் சென்று வழிபடுவதும் நன்மை தரும்.

    என்னும் கந்தரநுபூதிப்பாடலை விளக்கேற்றும் நேரங்களில் 3 முறை சொல்ல வேண்டும். வந்தவினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொன்னால் கதிகலங்கிடும் என்ற உண்மையை உணருங்கள்.

    சூரியதோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும், அதற்கு என்ன பரிகாரங்களை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
    சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தைவழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்கியம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே காரணம். உங்க ஜாதகப்படியோ அல்லது தசாபுக்திப்படியோ சூரியனோட அமைப்பு கெட்டிருந்தால், தந்தை வழி உறவுகளோடான ஒற்றுமை பாதிக்கப்படும்.

    பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் தலை, கண்கள், வயிறு, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள் மாறி வரும். சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசுவழி அனுமதிகள் கிடைப்பதில் தாமதம், சிலருக்குத் திருமண தாமதம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சூரியன் அமைப்பு சரியில்லையாதலால், அதாவது சூரியதோஷத்தால் வரும்.

    சூரிய தோஷத்திற்கான எளிய பரிகாரம் :

    சூரியதோஷம் இருந்தால், அடிக்கடி அனுமன் கோயிலுக்குப் போய் வழிபடுங்கள்.

    தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் பசுநெய் தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள்.

    பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள்.

    சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் கேளுங்கள்.

    சூரியனுக்குரிய தானியமான கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோயிலுக்குப் போவதும் நல்லது.

    தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து உங்களது பணிகளை செய்ய ஆரம்பியுங்கள்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.
    நாட்டின் பல இடங்களில் செவ்வாய்க்கு கோவில்கள் இருந்தாலும், உஜ்ஜைனி மங்களநாதர் கோவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய் மங்களகரமான வாழ்வை அருள்பவர். மத்திய பிரதேசத்தின் தலைநகரான உஜ்ஜைனில் அமைந்துள்ள மங்களநாதர் சிவாலயம், செவ்வாய் அவதரித்த தலமாகும். இதனால் இது அங்காரக ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் தலமாக கருதப்படுகிறது. நாட்டின் பல இடங்களில் செவ்வாய்க்கு கோவில்கள் இருந்தாலும், செவ்வாய் பிறந்த தலமாக உஜ்ஜைனி மங்களநாதர் கோவில் உள்ளதால், இங்குள்ள வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஆலயத்தில் செவ்வாய் பகவான், மங்களநாதர் என்ற பெயரில் சிவலிங்க திருமேனியாக காட்சியளிக்கிறார். பொதுவாக சிவன் கோவில்களில் மூலவருக்கு எதிரில் நந்தி சிலை இருக்கும். ஆனால் இங்கு மங்களநாதர் கருவறையின் முன்பு செவ்வாய் பகவானின் வாகனமாக கருதப்படும் ஆடு உருவம் வைக்கப்பட்டுள்ளது.

    ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் 4,7,8,12 இடங்களில் செவ்வாய் இருந்தால், அது தோஷமாக கருதப்படுகிறது. இதனால் அந்த ஜாதகருக்கு திருமண தடைஏற்படும்; விபத்து நேரிடும், அடிக்கடி காயம் ஏற்படும் என்கிறது ஜோதிட பலன். இந்த தோஷ நிவர்த்திக்காக மக்கள் செவ்வாய் தலத்திற்குச் சென்று, செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து பரிகார பூஜைகள் செய்கின்றனர்.

    திருமணத்தடை ஏற்படுபவர்கள், செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து அங்காரனுக்கு சிவப்பு ஆடை சாத்தி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, துவரம் பருப்பு பொடி கலந்த அன்னத்தை நிவேதனம் செய்து, பிறகு அதனை தானம் செய்கிறார்கள்.

    உஜ்ஜைனி ரெயில் நிலையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிப்ரா நதிக்கரையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.
    திருமண தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். அதாவது ஒரு சில ஜாதகங்களுக்கு திருமணமே தேவையில்லை என்ற அமைப்பு இருக்கும். அதற்கு காரணம் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள், 10ஆம் வீட்டில் சேர்க்கை பெற்றிருந்தால் அவர் சன்னியாசம் செல்வார் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

    அதுபோன்ற அமைப்பு உடையவர்கள் சிறுவயது முதலே காதல், கல்யாணம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு திருமணம் தேவையில்லை.

    ஆனால், ஒரு சிலருக்கு திருமண தோஷம் இருந்தாலும், மனதில் திருமண ஆசை இருக்கும். ஆனால் பெண் அமையாமல்/கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். திருமண வயதிற்குப் பின்னரும் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான்.

    இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஏற்கனவே மணம் முடித்துப் பிரிந்தவர்கள், விதவைகளைத் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படிச் செய்யும் போது தோஷம் நிவர்த்தியாகி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என சில ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ×