என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்குகின்றன. தவிர கடன் தொல்லைகள், விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன.
    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, சந்தன காப்பு, வெண்ணை காப்பு, வெள்ளி அங்கி, முத்தங்கி அலங்காரங்கள் இங்கு சிறப்பு. புதிதாக வாகனங்கள் வாங்கும் போதும், மக்கள் வெளி ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் போதும் வாகனங்களுடன் வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு புறப்படுவது வழக்கம்.
    இங்கு உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீரபலம், கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை, 

    நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்குசாதுர்யம் முதலிய நன்மைகள் ஏற்படும். நவகிரக தோஷங்கள் நீங்குகின்றன. தவிர கடன் தொல்லைகள், விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன. நோய் நொடியால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டால் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைகின்றன.

    நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவகிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால் நவகிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.
    ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை.
    ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.

    முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் கோவில், கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்கப்போவதில்லை. 

    நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.

    இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதே போல அமாவாசைத் திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும். ஒரு வேளை முன்னோர்களின் இறந்த திதி தெரியாதவர்கள், ஆடி, அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று.



    அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது.

    திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதர் தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பிதர்திருப்தி ஏற்படுத்தும். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.

    மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால் அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால் அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத்தரும். மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும்.

    மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் அப்போது அந்த நன்னாளில் சிரர்த்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என விஷ்ணுபுராணம் கூறுகிறது.
    அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் திருமணத்தடை உள்ளவர்களும், அனைத்துவித திருமண தோஷம் உள்ளவர்களுக்கும், தலை சிறந்த தலமாக, திகழ்கிறாள்.
    பூமிக்குள் இருந்து வெளிப்பட்ட அம்மன், திருமண வேண்டுதலுக்குப் பொட்டு தாலி காணிக்கை பெறும் ஆலயம், அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல் தெய்வம், முப்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் ஆலயம்.

    இந்த அம்மன் திருமணத்தடை உள்ளவர்களும், அனைத்துவித திருமண தோஷம் உள்ளவர்களுக்கும், தலை சிறந்த தலமாக, வீரமாகாளி திகழ்கிறாள்.

    வரம் வேண்டுவோர் அம்மனை நேரில் வந்து அல்லது ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்ள வேண்டும். விரைவில் திருமணம் கைகூடும். திருமண நிச்சயமான பிறகு அல்லது திருமணம் முடிந்தபிறகு, பொட்டு கட்டிய தங்கத்தாலியை அம்மனுக்குக் காணிக்கையாக செலுத்தி, தங்கள் நேர்த்திக் கடனை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

    இதேபோல, நாகதோஷம் உள்ளவர்களுக்கும், புத்திரதோஷம் உள்ளவர்களுக்கும், அன்னை வழிகாட்டுகின்றாள். நேர்த்திக் கடன் செலுத்திய குழந்தை மண் பொம்மைகள் இங்கே குவிந்துள்ளதே இதற்கு சாட்சியாக அமைகிறது. குழந்தை வரம் நிறைவேறியவர்கள் தத்துக் கொடுத்து, மீண்டும் பெற்றுக் கொள்கின்றனர்.

    காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயத்தைத் தரிசனம் செய்யலாம்.

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் அமைந்துள்ள, அறந்தாங்கி நகரில் இவ்வாலயம் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து 33 கி.மீ., திருச்சிராப்பள்ளியில் இருந்து 90 கி.மீ. தொலைவிலும், அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கே அரை கி.மீ. தொலைவிலும், இவ்வாலயம் அமைந்துள்ளது.
    வாரத்தின் ஒவ்வொரு நாட்களிலும் தெய்வங்களுக்கு உகந்த தீபங்களை ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தடைகளும், பிரச்சனைகளும் படிப்படியாக மறையும்.
    ஞாயிறு:- ஞாயிற்றுக்கிழமை ஐயப்பனுக்கு நூறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். தீபங்களைத் தாமரைப் பூ வடிவில் ஏற்றுவது மிகவும் சிறப்புடையது. அதாவது தாமரைப்பூ போன்ற அமைப்பில் தீபங்களை வரிசையாக வைத்து ஏற்றுதல் வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் செய்யப்படும் இத்தீப வழிபாடுகளுக்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது. இதுபோன்று தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் வருமானங்கள் தடையை மீறி வருவதற்கு சந்தர்ப்பம் உண்டு.

    திங்கள் :- திங்கட்கிழமை அன்று இலுப்ப எண்ணெய்கொண்டு ஐம்பத்தாறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். இந்த தீபங்களை அன்னபட்சி வடிவத்தில் வரிசையாய் ஏற்றி வழிபடுதல் வேண்டும். அன்னப்பட்சிகள் போன்று அரிசி மாவு கோலம் வரைந்து அவற்றின் மேல் இத் தீபத்தை ஏற்றுவது மிகவும் சிறப்புடையதாகும். மிகவும் கஷ்டப்படுகின்றவர்களுக்கு மனச் சாந்தியைத் தரும் வழிபாடு இது.

    செவ்வாய்:- செவ்வாய்க்கிழமைகளில், அரிசி மாவுக் கோலம் போட்டு, அதில் தீபம் ஏற்றுதல் வேண்டும். அரிசி மாவில் இரட்டைக்கிளி உருவம் வரைந்து, அதன் மேல் ஐம்பத்து நான்கு தீபங்களை வரிசையாய் ஏற்றுவது விசேஷமாகும். இத்தீபங்களுக்கு பசுநெய் உபயோகிப்பது மிகவும் சிறப்புடையதாகும் இந்த தீப வழிபாட்டால் கணவன், மனைவியர் இடையே தாம்பத்திய உறவு மேம்படும்.



    புதன்:- புதன்கிழமை அன்று இருபத்து மூன்று தீபங்கள் ஏற்றி, அரிசி மாவுக் கோலத்தில் இரட்டைச் சங்கு வரைந்து அதன் மேல் சுற்றியும் தீபங்களை ஏற்றலாம். நல்ல எண்ணெய்தீபங்கள் ஏற்றுவது சிறந்தது. இதனால் குழந்தைகளின் மந்தபுத்தி அகலம்.

    வியாழன்:- வியாழக்கிழமைகளில் தேங்காய் எண்ணெய்கொண்டு ஐம்பத்தி ஏழு தீபங்கள் ஏற்றி, அரிசிமாவினால் சுதர்சன சக்கர வடிவில் கோலமிட்டு அதைச் சுற்றி இத்தீபங்களை வைத்து வழிபடுதல் வேண்டும். இந்த தீப வழிபாடு காரணமாக பகைமை கொண்டுள்ள உறவினர்கள் இணக்கமாவார்கள்.

    வெள்ளி:- வெள்ளிக்கிழமைகளில் அறுபது தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். மத்தால் கடைந்து எடுத்த வெண்ணையில் நெய்காய்ச்சி தீபமேற்றுதல் மிகவும் விஷேசம். மூன்று உள் வட்டமாகக் சுற்றி தீபமேற்றுவது விசேஷம். இவ்வாறு வழிபடுவதால் இல்லத்தில் அனாவசிய செலவுகள் குறையும். கணவனுடைய ஊதாரித்தனம் நிவர்த்தியாகும்.

    சனி:- சனிக்கிழமைகளில் நல்லஎண்ணெய்கொண்டு 80 விளக்குகள் அல்லது மொத்தத்தில் 80 தீப முகங்கள் கொண்ட விளக்குகளை ஏற்றுவது விசேஷமாக கருதப்படுகிறது. இந்த தீபம் பித்ரு சாபங்கள் நீங்கும்.
    சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் செய்வதற்கு காளஸ்திக்கு செல்கிறார்கள். இதுபோல கால சர்ப்ப தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் என்னவென்று பார்க்கலாம்.
    கால சர்ப்ப தோஷத்திற்கு என்று குறிப்பிடும்படி எதுவும் கிடையாது. கால பைரவரை வழிபட்டாலே போதும். (நாயை வளர்த்தாலே போதும். கால பைரவர் வாகனம்). 

    உலகிலேயே சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு சன்னதி இருக்கிறது. அங்கு ஒரு சிவாலயம் இருக்கிறது. அந்த பைரவர் வாகனத்தோடு, நாயோடு இல்லாமல், அமர்ந்த நிலையில் தவக்கோலத்தில் இருப்பார் கால பைரவர். அவரை வழிபட்டால் இந்த கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் கிடைக்கும். 

    பொதுவாக கால சர்ப்ப தோஷத்திற்கு குலதெய்வ வழிபாடு, பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்றெல்லாம் செய்தாலே கால சர்ப்ப தோஷத்திற்கு பலன் கிடைக்கும். 

    குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கிவிடும். எனவே கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவது நல்லது.
    சனிதோஷத்தால் வரும் துன்பங்கள் குறைய தேனி மாவட்டத்தில் வீற்றிருக்கும் குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபாடு செய்யலாம்.
    தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுரபி நதிக்கரையில் வீற்றிருக்கிறார் குச்சனூர் சனீஸ்வர பகவான். இங்கு ஆடிமாதத் திருவிழாவும், இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் சனிப் பெயர்ச்சி விழாவும் சிறப்பானதாகும்.

    ‘தினகரன் மான்மியம்’ என்கிற பழமையான நூல் வாயிலாகவே, குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் பற்றிய தல வரலாற்றை அறிய முடிகிறது.

    அதன்படி முன்பொரு காலத்தில் தினகரன் என்ற மன்னன், திரு மணம் முடிந்து பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாது இருந்திருக்கிறான். கடவுளிடம் மனமுருகி வேண்டிக்கொண்ட மன்னனின் கனவில் ஒரு முறை அசரீரி ஒலித்தது.

    ‘உன் வீட்டுக்கு ஒரு அந்தணச் சிறுவன் வருவான். அவனை வளர்த்து வந்தால் குழந்தை பிறக்கும்’ என்றது அந்தக் குரல்.

    அதன்படி ஒரு சிறுவன், மன்னரிடம் வந்து சேருகிறான். அவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வரும் வேளையில், அரசிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவனுக்கு ‘சதாகன்’ என்று பெயர் சூட்டினர். காலங்கள் உருண்டோட சந்திரவதனன் ஒரு மன்னனுக்கு உரிய வீரம், திறமை, விவேகத்துடன் இருந்ததால், அவனுக்கே முடிசூட்டினான் மன்னன். இந்தநிலையில் தினகரனுக்கு சனி தோஷம் பிடித்தது. இதனால் பல சோதனைகளையும், துன்பங்களையும் அவன் சந்தித்தான்.

    தனது வளர்ப்பு தந்தை அடையும் துன்பத்தை கண்டு மனமுடைந்த சந்திரவதனன், தந்தையின் துன்பம் நீங்க, சுரபி நதிக்கரைக்குச் சென்று சனியின் உருவத்தை நிறுவி வழிபடத் தொடங்கினான். அந்த வழிபாட்டில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான், அவன் முன்தோன்றி, ‘முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்பவே இப்பிறவியில் சனி தோஷம் பிடிக்கிறது. இதன் காலம் ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள். உன் தந்தை முற்பிறவியில் செய்த பாவ வினைகளின் விளைவே இது’ என்றார்.

    ஆனால் சந்திரவதனன், “என் தந்தைக்கு வரும் துன்பங்களை எனக்கு கொடுங்கள். நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று சனி பகவானிடம் கோரிக்கை வைத்தான். ஒப்புக்கொண்ட சனீஸ்வர பகவான், சந்திரவதனனுக்கு கடுமையான பல துன்பங்களையும், சோதனைகளையும் கொடுத்தார்.



    அப்போதும் சந்திரவதனன், சனீஸ்வர வழிபாட்டை நிறுத்தவில்லை. சுரபி நதிக்கரையில் தீவிர வழிபாட்டில் இறங்கினான். ஒரு கட்டத்தில் மனம் இரங்கிய சனீஸ்வரபகவான் சந்திரவதனன் முன் தோன்றி, அவனது துன்பங்களை களைந்ததுடன் ‘பக்தர்கள் தங்களது குறைகளை உணர்ந்து இவ்விடத்துக்கு வந்து என்னை வணங்கினால், அவர்களுக்கு சனிதோஷத்தால் வரும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன்’ என்று சொல்லி மறைந்தார். மேலும் அவ்விடத்தில் சுயம்புவாகவும் எழுந்தருளினார்.

    சுயம்பு சனீஸ்வரருக்கு, குச்சுப்புல்லினால், ஒரு கூரை வேய்ந்தான் சந்திரவதனன். குச்சுப்புல் கூரை என்பதே நாளடைவில் குச்சனூர் என்றானது.

    குச்சனூர் சனீஸ்வரபகவான் திருக்கோவிலில் ஆடி மாதம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. அதனை ஆடிப்பெருந்திருவிழா என்பர். சிறப்பாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுயம்பு சனீஸ்வரபகவானை தரிசனம் செய்வர். ஆடி மாதம் முழுவதும் வருகிற சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    கோவிலில் ‘விடத்தை மரம்’ தல மரமாகவும், ‘கருங்குவளை மலர்’ தல மலராகவும், ‘வன்னி இலை’ தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு காகம் வாகனமாகவும், ‘எள்’ தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போடுவதும், கருப்பு வஸ்திரம் சாத்தி, காகங்களுக்கு எள்ளு சாதம் பிரசாதமாக படைத்து சனீஸ்வரரை வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    தேனியில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் குச்சனூர் உள்ளது. இதற்கு வீரபாண்டி வழியாகவும், சின்னமனூர் வழியாகவும் செல்லலாம். சின்னமனூரில் இருந்து உப்புக்கோட்டை செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை அடையலாம்.
    புதனால், ஒருவருக்குத் திருமண தோஷம் ஏற்பட்டால், புதன்கிழமைதோறும் மகா விஷ்ணுவை வழிபடுவதுடன், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மை தரும்.
    புதனால், ஒருவருக்குத் திருமண தோஷம் ஏற்பட்டால், புதன்கிழமைதோறும் மகா விஷ்ணுவை வழிபடுவதுடன், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மை தரும். ஏகாதசி விரதம் இருப்பது மிகவும் சிரேஷ்டமான பரிகாரம் ஆகும்.

    திருவெண்காடு தலத்துக்குச் சென்று, புதனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது சிறப்பாகும். புதனுக்குரிய நாயுருவி சமித்து கொண்டு ஹோமம் செய்து, பச்சைப்பயறு தானம் செய்வதும் சிறந்த பரிகாரமாகும். 

    மேலும், புருஷ சூக்தம் ஜபிப்பதும் விசேஷம். புதன்கிழமைகளில் திருப்பதிக்குச் சென்று, அங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, திருவேங்கடவனை வழிபடுவதும், காஞ்சிபுரம் சென்று ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும், ஸ்ரீவரதராஜரையும் வழிபடுவதும் சிறப்பு. இதனால் கல்யாண தோஷம் நீங்கி நல்ல மண வாழ்க்கை அமையும்.
    சிவபெருமானின் பிரதிநிதியான சண்டிகேஸ்வரரை வில்வ இலை கொண்டு மாலைகள் சூட்டி வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் பெறலாம்.
    சிவ தலங்களில் நந்தியம் பெருமானும், சண்டிகேஸ்வரரும் கட்டாயம் இடம்பெறுவார்கள். நந்தியின் காதுகளில் நம் வேண்டுதல்களை கூறினால் பலிக்கும் எனும் நம்பிக்கை கொண்டவர்கள், ஏன் சண்டிகேஸ்வரரிடம் மட்டும் சப்தம் போடாமல் வேண்ட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா?

    சிவனின் மெய்க்காவலர் நந்தி என்றால், ஈசனின் ஆலயக் காப்பாளர் சண்டிகேஸ்வரர். ‘சிவன் சொத்து குலநாசம்’ என்று சொல்வார்கள். பொதுவாகவே கோவில்களுக்கு சென்றால் நாம் அங்கு தேவைப்படும் சேவைகளை மட்டுமே செய்ய வேண்டும். அங்கு இருக்கும் எந்தப் பொருளுக்கும் ஆசைப்படுவதோ, அதை தனக்குரியதாக்கி எடுத்து வருவதோ நல்லதல்ல.

    சிவனின் உதவியாளரான சண்டிகேஸ்வரர், எந்நேரமும் சிவ சிந்தனையில் ஆழ்ந்து தியானத்தில் இருப்பவர். மனிதனுக்கு கேட்கும் திறன் கொண்ட காதுகளைப்போல் சிவனின் ஆலயத்தில் சண்டிகேஸ்வரர் குடிகொண்டிருக்கும் இடம் இறைவனின் செவியாகிறது.

    இறைவனிடம் நாம் வேண்டுவதை அவரின் உதவியாளரான சண்டிகேஸ்வரர் தியானத்திலேயே கேட்டு உணர்ந்து, அவைகளை அவரவர் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப கணக்கெழுதி இறைவனிடம் சமர்பிப்பதாக ஐதீகம். ஆகவே தான் சிவன் கோவில் சென்றால் இவரைப் பார்க்காமல் செல்லக்கூடாது என்பார்கள்.

    யோக நிலையில் உள்ள இவரை வணங்கினால் நல்ல பேச்சுத் திறனுடன், நினைவாற்றலும் பெருகி அறிவு வளரும். எந்நேரமும் கண்மூடி சிவசிந்தனையில் இருக்கும் இவரின் தியானம், நம்மால் கலைந்து விடக் கூடாது என்றே அவரை அமைதியாக வணங்குமாறு அறிவுத்துகின்றார்கள் பெரியவர்கள். ஆனால் நான் ஆலயத்திலிருந்து எதுவும் எடுத்துச்செல்ல வில்லை என்பதை அவருக்கு காட்டும் வண்ணம் இரு கைகளையும் சப்தமில்லாமல் துடைத்துக் காண்பிக்க வேண்டும்.

    இவரை நம்பிக்கையுடன் வணங்கினால் தொலைந்து போன பொருட்களும் நமக்குக் கிடைக்கும். இவருக்கு உரிய திதிகள் பிரதமை மற்றும் நவமி ஆகும். புதன்கிழமை இவரை வணங்கிட ஏற்ற நாள். சிவபெருமானின் பிரதிநிதியான இவருக்கும் வில்வ இலை கொண்டு மாலைகள் சூட்டி வழிபட்டால் வாழ்வில் அனைத்து வளங்களும் பெறலாம்.
    செவ்வாயால் திருமணம் தோஷம் ஏற்பட்டிருந்தால், செவ்வாய்க்கிழமையில் முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
    செவ்வாயால் திருமணம் தோஷம் ஏற்பட்டிருந்தால், செவ்வாய்க்கிழமையில் முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. வைத்தீஸ்வரன்கோவில் சென்று அங்காரகப் பிரீதி செய்துகொள்வது நல்லது.

    பூமி தேவி வழிபாடும் ஆண்டாள் வழிபாடும் நலம் தரும். கருங்காலி சமித்து கொண்டு ஹோமம் செய்வதும் துவரம்பருப்பு தானம் செய்வதும் நன்மை தரும். குறிப்பாகச் செவ்வாய்தோறும் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதுடன், கந்தசஷ்டி கவசம் போன்ற முருகனுக்குரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்வதும் மிகவும் விசேஷமான நற்பலன்களைக் கொடுப்பதுடன், நல்ல திருமண வாழ்க்கையைப் பெற்றுத் தரும்.
    பொதுவாக ஒருவரது வாழ்நாளில் நான்கு முறை ஏழரைச் சனி வரும். இந்த சனியை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஏழரைச் சனி:- பொதுவாக ஒருவரது வாழ்நாளில் நான்கு முறை ஏழரைச் சனி வரும். ஒரு மனிதனுடைய வாழ்நாள் நான்கு முப்பது ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 120 ஆண்டுகள். ஜென்மசனியின் காலத்தில் பிறந்தவர்கள் 60 வயதில் மூன்றாவது சுற்றை கடந்து விடுவார்கள். இதில் சிலர் மரணத்தையும், சிலர் நீண்ட ஆயுளையும் பெறுவார்கள்.

    மங்கு சனி:- இளம் பருவத்தில் எதையும் தாங்கி கொள்ளக்கூடிய சூழ்நிலையில் சனிபகவான் தரும் சாட்டையடி சற்று மெதுவாகவே விழும். இந்த முதல் சுற்றுக்கு மங்கு சனி என்று பெயர்.

    பொங்கு சனி:- வாலிபத்தின் நடுவில் வரும் இரண்டாவது சுற்று பொங்கு சனி ஆகும். ஜாதகரின் இதர கிரக அமைப்புகளை பொறுத்து இதன் ஆட்சி அவ்வளவு கடுமையாக இல்லாமல் சற்று கூடக்குறைய அடி விழும். ஒரு சிலருக்கு பொங்கு சனி விடைபெறும்போது மங்காத செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளி கொடுத்து விட்டு செல்லும்.

    தங்கு சனி:- பொதுவாக 60 வயதை கடந்தவர்கள் இந்த தங்கு சனியின் அருள்பார்வையுடன் மூன்றாம் சுற்று ஏழரைச் சனியை சந்திப்பார்கள். இந்த தங்கு சனி தகுந்த செல்வம், உற்றார், உறவினர்கள், பேரன், பேத்திகள், நண்பர்களுடன் சேர்ந்து தங்கி மகிழ்ந்திருக்க வேண்டிய காலம். ஆயுள்காரகனின் அருள் இருந்தால் ஆனந்தமாக தங்கு சனியை தடையின்றி கடந்து விடலாம்.

    மரணச்சனி:- ஒருவனுடைய வாழ்நாளில் நல்லது கெட்டது என்று பலவற்றையும் அனுபவித்து நான்காவது சுற்றாக சுமார் 90 மற்றும் அதற்கு மேலும் வயதை கொண்டுள்ள வயோதிக காலத்தில் மரணச்சனியின் காலம் உருவாகும். அந்த மரணச்சனியுடன் பூலோக வாழ்க்கை முடிவடைந்து இறைவனை சரணாகதி அடைவார்கள்.
    சனிதோஷம் உள்ளவர்கள், ஏழரை சனி நடப்பவர்கள் சனிக்கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை செய்து வந்தால் பலன் அடையலாம்.
    சனியால் திருமண தோஷம் ஏற்பட்டிருந்தால், சனிக்கிழமையில் எமனையும் பிரஜாபதியையும் வழிபடுவது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதும், ஹனுமன் சாலீஸா படிப்பதும் மிகவும் நல்லது. வன்னி சமித்தால் ஹோமம் செய்வதும் எள் தானம் செய்வதும் சிறப்பாகும்.

    ஒருமுறை திருநள்ளாறு திருத்தலத்துக்குச் சென்று, ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரையும், சனி பகவானையும் முறைப்படி வழிபட்டு வாருங்கள். வயோதிகர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவுங்கள்.

    தினமும் காகத்திற்கு சாதம் வையுங்க. சனிக்கிழமைகளில் காகத்திற்கு உணவு வைத்த பின்னர் உணவு அருந்துங்கள். 

    சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

    அனுமன் ஜெயந்தி அன்று வடை மாலை சாத்தி அனுமனை வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகும்.
    ஆஞ்சநேயர் சிறு வயதில், கிருஷ்ணரைப் போலவே பல லீலைகளைச் செய்திருக்கிறார். அவற்றுள் ஒன்றுதான், பழம் என்று நினைத்து சூரியனைப் பிடிக்கச் சென்றது. வனத்தில் தன் வயது சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அனுமனுக்கு, வானத்தில் இருந்த சூரியன் ஒரு பழம் போல் தெரிந்தது. உடனே அந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

    வாயு புத்திரன் அல்லவா? நினைத்த மாத்திரத்தில் தன்னுடைய இலக்கை நோக்கி பாயத் தொடங்கினார். அந்த வானர பாலகனின் வேகம், காற்றை விடவும் வேகமாக இருந்தது. அதைக் கண்டு தேவர்கள் அனைவரும் திகைத்தனர். மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, அனுமன் சாப்பிட நினைப்பதை நினைத்து அவர்கள் அச்சம் கொண்டனர்.

    ஆனால் அனுமனின் முயற்சியை தேவேந்திரன், தன்னுடைய வஜ்ராயுதம் கொண்டு தடுத்து நிறுத்திவிட்டான்.

    இந்திரன், அனுமனை தடுப்பதற்கு முன்பாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அது என்னவென்றால், அனுமன் சூரியனைப் பிடிக்கச் சென்ற வேளையில், கிரகணத்தை ஏற்படுத்துவதற்காக சூரியனைப் பிடிக்க ராகுவும் சென்று கொண்டிருந்தான். ஆனால் அவன் அனுமனின் வேகத்தைப் பார்த்து வியந்துவிட்டான். அவனால் அனுமனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

    அந்த பாலகனின் வேகத்தைக் கண்ட ராகு, அனுமனுக்கு ஒரு வரத்தை அருளினான். தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால், உணவுப் பண்டம் தயாரித்து அனுமனை வணங்குபவர்களை, நான் எந்த காலத்திலும் பிடிப்பதில்லை. மேலும் தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகும் என்ற வரத்தை வழங்கினார். உளுந்தால் செய்யப்படும் உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் ராகு பகவான் தெரிவித்தார். அதாவது, தன்னுடைய உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் என்றார். அனுமன் ஜெயந்தி அன்று வடை மாலை சாத்தி அனுமனை வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகும்.
    ×