என் மலர்
தோஷ பரிகாரங்கள்
ஜோதிட ரீதியாக ஒருவரது ராசிக்கு, 8-ம் இடத்தில் சந்திரன் வரும்போது ‘சந்திராஷ்டமம்’ என்று சொல்வார்கள். இந்த காலகட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பார்க்கலாம்.
ஜோதிட ரீதியாக ஒருவரது ராசிக்கு, 8-ம் இடத்தில் சந்திரன் வரும்போது ‘சந்திராஷ்டமம்’ என்று சொல்வார்கள். இந்த சந்திராஷ்டம காலத்தில் நோய்களுக்கு புதியதாக மருந்து உண்ணக்கூடாது என்பார்கள். மாறாக மருந்து உட்கொண்டால் அவை நிவர்த்தி ஆவதற்குப் பதிலாக, புதிய நோய்களுக்கு வழிவகுத்து விடும்.
பொதுவாக சந்திராஷ்டம காலத்தில் உடலில் உண்டாகும் காயம், எளிதில் ஆறாமல் ரண வடுவை தந்து விட்டுப் போகும். மனமும், புத்தியும் சஞ்சலப்படும். நினைத்தது நடக்காது. அலைச்சல் அதிகரிக்கும். இவை அனைத்திற்குமே கிரகங்கள் தான் காரணம்.
கடன் தொல்லை தீர எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான அவர்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கடன் தொல்லை நம்மை நிம்மதியாகவே இருக்கவிடாது. நாமும் எவ்வளவு தான் நெருக்கிப் பிடித்து சிக்கனமாக இருந்தாலும் கடன் தொல்லை நம்மை விட்டு விலகாமல் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும்.
இதற்கு நம்முடைய கிரகங்களும் கூட காரணமாக இருக்கும். அதனால் கடன் தொல்லை தீர நிறைய பரிகாரங்கள் உண்டு. ஒவ்வொரு ராசிக்கும் அவர்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பரிகாரங்கள் வேறுபடும். அப்படி எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மேஷம்: தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவுக்குக் கொடுத்து வர கடன்கள் நீங்கி வளம் பெறலாம்.
ரிஷபம்: ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன்கள் அடைந்து சுகம் பெறலாம்.
மிதுனம்: தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரவும் - கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்துக்கு முன் செய்து வரவும்.
கடகம்: ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும். ஞாயிறன்று அச்சு வெல்லக்கட்டியைக் குரங்குகளுக்கு கொடுத்து வரவும்.
சிம்மம்: ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும்.
கன்னி: சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ண கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்க ருண நிவாரணம் பெறலாம்.
தனுசு: வீடு இழந்தோருக்கு வீடு கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்க கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம்.
மகரம்: சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்கு தானமாய் கொடுத்து வர கடன் தொல்லை நீங்கும்.
கும்பம்: வியாழன் மாலை 5-6 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றொருக்கும் தானமாய் / பிரசாதமாய் கொடுத்து வர கடன்கள் அடைபடும்.
மீனம்: தொழு நோயாளிகளுக்கு சப்பாத்தியை தானமாக செவ்வாய்கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணிக்குள் கொடுத்து வர கடன்கள் வேகமாக அடைய ஆரம்பிக்கும். குறைந்தது 9 சப்பாத்திகள் கொடுப்பது நலம்.
புராணங்களை பார்த்தோம் என்றால், அதில் பல சாபங்களும், அந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற செய்த பரிகாரங்கள் பற்றியும் குறிப்புகள் இருப்பதைப் பார்க்க முடியும்.
இதிகாசங்களையும், புராணங்களையும் புரட்டிப் பார்த்தோம் என்றால், அதில் பல சாபங்களும், அந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற செய்த பரிகாரங்கள் பற்றியும் குறிப்புகள் இருப்பதைப் பார்க்க முடியும். சாபங்களில் 13 சாபங்கள் முக்கியமானவையாக உள்ளன. அவை: பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம், பித்ரு சாபம், கோ சாபம், பூமி சாபம், கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம், ரிஷி சாபம், முனி சாபம், குல தெய்வ சாபம் போன்றவை.
பெண் சாபம்: பெண்களை ஏமாற்றுவது, உடன் பிறந்த சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பது, மனைவியை கைவிடுவது போன்றவற்றால் ஏற்படுவது பெண் சாபம் ஆகும். இந்த சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
பிரேத சாபம்: இறந்த ஒருவரின் உடலை வைத்துக் கொண்டு, அவரை இழிவாகப் பேசுவதும், பிரேதத்தின் உடலைத் தாண்டுவதும், இறுதிச் சடங்கை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை அவருக்கு வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் சாபத்தை ஏற்படுத்தும். இவ்வாறு பிரேத சாபம் ஏற்பட்டவர்களின் ஆயுள் குறையும்.
பிரம்ம சாபம்: பாடம் சொல்லிக் கொடுத்த குருவை மறப்பது, கற்ற வித்தையை தவறாகப் பயன்படுத்துவது, தான் கற்றதை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்காமல் மறைப்பது போன்ற செயல்களால் இந்த சாபம் ஏற்படும். இந்த சாபத்தால் வித்யா நஷ்டம் எனப்படும் கல்வி கற்க முடியாத நிலை உண்டாகும்.
சர்ப்ப சாபம்: அவசியம் இல்லாமல் பாம்புகளை அடித்துத் துன்புறுத்துவது, அவற்றின் இருப்பிடங்களை அழிப்பது போன்ற செயலால் சர்ப்பசாபம் உண்டாகும். இதனால் கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டு, திருமணம் தடைபடும்.
பித்ரு சாபம்: முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும் பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். இது பாலாரிஷ்ட சாபத்தை ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்து போவது போன்றவற்றை உண்டாக்கும்.
கோ சாபம்: பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது, கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது, தாகத்தால் தவிக்கும் பசுவிற்கு தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

பூமி சாபம்: ஆத்திரத்தில் பூமியை அடிக்கடி காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை பூமிக்குள் போட்டு புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டாக்குவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை ஏற்படுத்தும். பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.
கங்கா சாபம்: பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். இந்த சாபத்தால் நீர் கிடைக்காமல் அவசதிப்படுவார்கள்.
விருட்ச சாபம்: மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். இந்த சாபத்தினால் கடன் மற்றும் நோய் உண்டாகும்.
தேவ சாபம்: தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவுகளுக்குள் விரிசல் உண்டாகும்.
ரிஷி சாபம்: இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும், உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்ற செயல்களால் ஏற்படும். ரிஷி சாபத்தால் வம்சம் அழியும்.
முனி சாபம்: எல்லை தெய்வங்கள் மற்றும் சின்னச் சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு வரலாம்.
குலதெய்வ சாபம்: இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறந்து போவதால் ஏற்படுகிறது. இந்த சாபத்தின் காரணமாக குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்து கொள்ளும்.
பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன.
பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. அவை பற்றி பார்க்கலாம். அவை ராகு/கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகும்.
செவ்வாய் தோஷம்
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.
ராகு - கேது தோஷம்
லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.
மாங்கல்ய தோஷம்
இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8&ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8&ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.
சூரிய தோஷம்
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.
களத்திர தோஷம்
களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.
மேற்சொன்ன அமைப்புள்ள தோஷ ஜாதகங்களுடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். மேலும் சில எளிய பரிகாரங்கள் செய்வதால் தடைகள், இடையூறுகள் விலகும்.
கண்ணேறு படாமலிருக்க முக்கண்களை உடைய தேங்காயின் மீது கற்பூரம் ஏற்றி திருமணம் காணும் தம்பதியர்களைச் சுற்றி, அந்தத் தேங்காயை சிதறுகாயைப் போல உடைப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
எத்தனையோ காய்கள் இருந்தாலும், நாம் அர்ச்சனைக்கு என்று எடுத்துச் செல்வது தேங்காய் தான். நாம் செய்யக் கூடிய காரியங்கள் தேங்காமல் நடைபெற வழிவகுக்கக் கூடியது ‘தேங்காய்’ என்று சொல்வார்கள். கண்ணேறு படாமலிருக்க முக்கண்களை உடைய தேங்காயின் மீது கற்பூரம் ஏற்றி திருமணம் காணும் தம்பதியர்களைச் சுற்றி, அந்தத் தேங்காயை சிதறுகாயைப் போல உடைப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
தெய்வங்கள் திருவீதி உலா வரும்பொழுது, அவை நகர்வலம் முடிந்து கோவிலினுள் மீண்டும் செல்லும் போது தேங்காயை எடுத்துத் தெய்வச் சிலைகளைச் சுற்றி தேங்காயை வீதியில் உடைப்பார்கள். மூன்று கண்களை உடையதாக இருப்பதால் தான் இதனை முக்கண்ணரின் அம்சம் எனவும், முழுமுதற்கடவுள் விநாயகரின் அம்சம் எனவும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.
திருமண தடை, வேண்டுதல்கள் நிறைவேற ஆஞ்சநேயருக்கு சில குறிப்பிட்ட வழிபாடுகளை செய்து வந்தால் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும்.
பிரார்த்தனை சீட்டு
மாணவ, மாணவிகள் படிப்பு நன்றாக வரவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் ஸ்ரீராமஜெயம் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி என்று 108 முறை எழுதி நூலில் கட்டி சன்னதியின் பின்புறம் உள்ள ஜன்னலில் கட்டித் தொங்கவிடுகிறார்கள். அதேபோல தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் பிரார்த்தனையை ஆஞ்சநேயர் நிறைவேற்றித் தரவேண்டும் என்று கூறி பிரார்த்தனை சீட்டு எழுதி தொங்கவிடுகிறார்கள். இப்படி பிரார்த்தனை சீட்டு எழுதினால் தங்கள் கோரிக்கையை ஆஞ்சநேயர் நிறைவேற்றுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
குங்குமப் பொட்டு
ஆஞ்சநேயருக்கு வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம். பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும்.
வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இப்படி பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும். நினைத்தது நடக்கும்.
அனுமனின் சிறப்பு
அனுமன் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பதுதான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணா மூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவானையே ஒருமுறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழி வழிபடுவது சிறப்பு.
முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர்
நாமக்கல் ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்காரத்தில் வித்தியாசமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் ரூ.3 ஆயிரம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். முத்தங்கி அணிவித்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தால் நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
ஆஞ்சநேயருக்கு வடை மாலைக்கு உளுந்து அளித்தல், அல்லது வடைமாலை அணிவித்தல் ராகு திசை தோஷம் நிவர்த்தியாகும். சனி மற்றும் கேது தோஷமும் நீங்கும்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் செய்யும் அபிஷேகங்களுக்கு கிடைக்கும் பலன்கள் வருமாறு:-
நல்ல எண்ணெய் அபிஷேகம் - பித்ரு - சனி தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.
பஞ்சாமிர்த அபிஷேகம் - எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.
சந்தன அபிஷேகம் -தீர்வில்லா பொருளாதார ஏற்றம் அடையும், பணம் பெருகும்.
சீயக்காய் அபிஷேகம் - மனோ சக்தி மேம்படும்.
பால் அபிஷேகம் - மும்மாரி பொழியும்.
ஆஞ்சநேயருக்கு வடை மாலைக்கு உளுந்து அளித்தல், அல்லது வடைமாலை அணிவித்தல் ராகு திசை தோஷம் நிவர்த்தியாகும். சனி மற்றும் கேது தோஷமும் நீங்கும்.
மொத்தத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீர பலம், கீர்த்தி, அஞ்சாமை, நோயின்மை, தளர்ச்சியின்மை, வாக்கு சாதுர்யம் ஆகிய நன்மைகள் ஏற்படும்.
வாழ்வில் நிம்மதியாக வாழ வேண்டுமானால், நமக்கு எந்தவித தோஷமும் இல்லாமல் இருக்க வேண்டும்….குறிப்பாக பித்ரு தோஷம் இல்லாமல் இருக்க வேண்டும்.
தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். வாழ்வில் நிம்மதியாக வாழ வேண்டுமானால், நமக்கு எந்தவித தோஷமும் இல்லாமல் இருக்க வேண்டும்….குறிப்பாக பித்ரு தோஷம் இல்லாமல் இருக்க வேண்டும்.
பெற்றோருக்கு திதி கொடுக்காதவர்கள், திதி கொடுப்பதே என்ன என்று தெரியாமல் இருப்பவர்கள், வாரிசு இல்லாதவர்கள், விபத்து, தற்கொலை, அகால மரணமடைந்தவர்கள்… இவர்களின் ஆத்மாக்களுக்கு சாந்தி ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் தோஷம் ஏற்படும். இவை காலம் காலமாக தொடர்வதால் பித்ரு தோஷம் ஏற்பட்டு கால சர்ப தோஷமாக மாறும்.
இது வம்சாவளியாக தொடர்வதால் வீட்டில் கஷ்டம், திருமணத்தடை, விபத்து, செய் தொழிலில் நஷ்டம், நிம்மதியின்மை என அடிக்கடி நிகழும். இதற்கு ஒரே வழி அதற்கான தோஷ நிவர்த்தி செய்வது தான்… பித்ரு தோஷ நிவர்த்திக்கு காசி, ராமேஸ்வரம் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. அங்கு செல்ல முடியாதவர்கள் என்ன செய்வது?
செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் நென்மேலி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில். இத்திருத்தலத்தில் பித்ரு தோஷத்திற்கான நிவர்த்தி செய்யப்படுகிறது. பித்ரு வேளை பூஜை நேரமான பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த கிரியைகளைப் பெருமாள் ஆராதனம் ஏற்று விரதமிருந்து செய்கின்றனர்.
திதி கொடுப்பவர்கள் பெருமாள் சந்திக்கு சென்று, மஞ்சள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றை சமர்ப்பித்து, தங்களுடைய பித்ருக்களின் பெயர்களை சொல்லி சங்கல்பம் செய்ய வேண்டும்.
பிறகு கோவிலின் பின் பக்கத்திலுள்ள விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில் சாஸ்திரிகள் வழிகாட்ட திதி கொடுப்பவர் தன் முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்பிக்க வேண்டும்.
அங்குள்ள, பெருமாளுக்கு மகா சங்கல்பமும் சகல உபசாரங்களுடன் பூஜையும் நடத்த வேண்டும். இறுதியில் நம் வீட்டில் செய்யும் வெண்பொங்கல், தயிர் சாதம், பிரண்டையுடன் கலந்து எள் துவையல் எல்லாம் செய்யப்பட்டு நைவேத்தியம் செய்யப்படுகின்றன. இதை ஏற்று, நம் முன்னோர்களின் ஆத்மாக்களைப் பெருமாள் திருப்திப்படுத்துவதாக ஐதீகம்.
கேரளா மாநிலம், ஆலப்புழாவில் உள்ள தன்வந்திரி கோவிலில் தரும் முக்குடி எனும் மருந்தினை பருகுவதால் தீராத நோய்கள் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
தீராத நோய்கள் எதுவாக இருந்தாலும், அந்நோயைத் தீர்த்து நல முடன் வாழ வைக்கும் கோவிலாகக் கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா அருகிலுள்ள மருத்தோர் வட்டம் தன்வந்திரி கோவில் அமைந்திருக்கிறது.
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இக்கோவிலில் சந்தான கோபாலன் எனும் கதகளி வழிபாடு நடத்தினால் அவர்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும்.
28 வகையான மூலிகைகள், பச்சை மருந்து ஆகியவைகளைத் தயிரில் கலந்து தயாரிக்கப்படும் முக்குடி எனும் மருந்தினை இக்கோவிலின் தன்வந்திரி சிலையின் கையிலுள்ள குடத்தில் வைத்திருந்து எடுத்துத் தருகின்றனர். இதனைப் பெற்றுப் பருகுவதால் தீராத நோய்கள் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும். (இதனைப் பெறுவதற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்)
விழாக் காலங்களில், கயற்றேல் வானம் என்ற சிறப்பு பூஜை செய்யப் படுகிறது. இப்பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு ஆஸ்துமா, வாத நோய்கள் போன்றவை குண மடையும்.
அமாவாசை நாட்களில் நடக்கும் முன்னோர் வழிபாடு (பிதுர்காரியம்) நிகழ்வில் படைக்கப்படும் தாள்கறி எனும் உணவைப் பெற்றுச் சாப்பிடுவதால் நோய்கள் தீரும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
பொன்னேரி அருகே தேவதானத்தில் உள்ள ரங்கநாதர் பெருமாளை 11 வாரங்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், பணக் கஷ்டம், திருமண தடை நீங்கும்.
வடஸ்ரீரங்கம் என்று சொல்லப்படும் பொன்னேரி அருகே உள்ள தேவதானத்தில் ரங்கநாதர் ஆலயம் உள்ளது.
இந்த ஸ்ரீரங்கநாத பெருமாளை அமாவாசை நாளன்றும், வெள்ளிக்கிழமைகளிலும் தொடர்ந்து 7 மற்றும் 11 வாரங்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், பணக் கஷ்டம், திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு கிடைக்கும். நினைத்த காரியங்கள் நினைவேறும் என்பது ஐதீகம்.
பெருமாளுக்கு இடதுபுறமாக ரங்கநாயகி தாயார் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு அருகில் சக்கரத்தாழ்வார் சன்னிதி இருக்கிறது. அதன்கு பின்புறம் புற்றுக்கோவிலும், தனிச் சன்னிதியில் ஆண்டாளும் இருக்கின்றனர்.
இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகுவதுடன், நினைத்த காரியம் நிறைவேறுவதை நாமும் கண்டு பயனடையலாம்.
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் பரிகாரம் செய்ய தகுந்த காலம் எது? செய்யக்கூடாத காலம் எது? என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் பரிகாரம் செய்ய தகுந்த காலம் எது? செய்யக்கூடாத காலம் எது? என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பரிகார காலம்:
சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம் நீக்கும் பரிகாரங்களை கிருஷ்ண பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம். செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக் கிறதோ அந்த கிழமையில்பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் செய்யகூடாத நேரம்:
ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.
திருவண்ணாமலையில் எந்தெந்த கிழமையில் கிரிவலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் நோய்கள் நீங்கும்.
திங்கட்கிழமை கிரிவலம் வந்தால் செய்த பாவங்கள் யாவும் விலகும். புண்ணியம் தொடரும்.
செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால் தீராக்கடன்கள் தீரும். தரித்திரம் அகன்று செல்வம் சேரும்.
புதன்கிழமை கிரிவலம் வந்தால், ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் மேன்மையுறுவர்.
வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் ‘குரு’ என்னும் பெயர் அடைந்து புகழ் பெறுவர்.
வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால், அயன, சயன, சுக போகங்கள், புத்திர பாக்கியம், செல்வச் செழிப்பு கிட்டும்.
சனிக்கிழமை கிரிவலம் வந்தால் தன, தான்யம் பெருகும். வியாபாரம் பெருகி அளவில்லா லாபம் கிடைக்கும்.
எப்போது நடக்க வேண்டும்?
பிரம்ம முகூர்த்தத்தில் அண்ணாமலையைக் கிரிவலம் வந்தால் நாம் விரும்பும் சித்திகள் நம்மை வந்தடையும்.
மாலை நேரம் வலம் வந்தால் தன, தான்யங்கள் மிகுதியாக வளர்ந்து பெருகும்.
நள்ளிரவில் கிரிவலம் வந்தால் அஷ்டமா சித்திகள் அனைத்தும் கிடைக்கும்.






