என் மலர்
நீங்கள் தேடியது "Mangalya Dosham"
- இலங்கையில் மண்டோதரி ஒரு மிகப்பெரிய சிவ பக்தை.
- மாங்கல்ய தோஷத்தை நீக்குவதற்கு வேண்டி ஈசனிடம் தவம் செய்தாள்.
இலங்கையில் மண்டோதரி ஒரு மிகப்பெரிய சிவ பக்தை. மண்டோதரிக்கு மாங்கல்ய தோஷம் ஏற்பட்டது. இதனால் நீண்ட நெடுங்காலமாக திருமணத் தடை உண்டாகியது. அவள் திருமணம் நடைபெறாமல் தடைபட்டு நின்று விட்டது.
சிவ சக்தியின் அருள் நிறைந்து இருக்கும் இடங்களெல்லாம் அழகு நிறைந்த இடங்களாகும் என்று மண்டோதரிக்கு தெரியவந்தது. இதனால் மண்டோதரி உத்திரகோசமங்கை மங்களநாதன் திருத்தலத்திற்குச் சென்று மாங்கல்ய தோஷத்தை நீக்குவதற்கு வேண்டி ஈசனிடம் தவம் செய்தாள்.
மங்களநாதன் மண்டோதரி முன் தோன்றி மாங்கல்ய தோஷத்தை முற்றிலும் நீக்கி விட்டார். பின்பு மண்டோதரிக்கும் ராவணனேஸ்வரனுக்கும் இனிதே திருமணம் நடைபெறுகிறது.
மாணிக்கவாசகர் பெயர் பெற்ற தலம்
உத்தரகோசமங்கை சிவபெருமானுக்கு ஆயிரம் சிவவேதியர்கள் சிஷ்யர்களாக இருந்தனர். அவர்களிடம் சிவபெருமான் மண்டோதரிக்கு அருள்புரிந்து வருகின்றேன் `சிவாகம நூலை' காத்துக்கொண்டு இருங்கள் என்று கூறி விட்டு இலங்கை சென்றார்.
சிவபெருமானிடம் 1000 சீடர்களும், ராவணன் அரக்கனால் உங்களுக்குத் துன்பம் உண்டானால் என்ன செய்வோம் என்றார்கள். அதற்கு சிவபெருமான், எனக்கு துன்பம் ஒன்றும் வராது. அப்படி அவனால் துன்பம் வந்தால் இந்த தெப்பக் குளத்தில் அக்கினி தோன்றும் என்று கூறி மறைந்தார்.
சிவபெருமான் அசோகவனத்தில் மண்டோதரிக்கு அருள் அளிப்பதற்கு வேண்டி சென்றபோது ராவணன் ஈசனடியார் என்று உணராமல் சினமடைந்து அவரைப் பின்புறம் தலையில் அடித்து விடுகிறான். அதனால் தெப்பக்குளத்தில் அக்கினி தோன்றியது.
இது கண்ட ஆயிரம் வேதியர்களில் ஒருவர் நீங்கலாக எஞ்சிய 999 வேதியர்கள் ஈசனுக்கு ஆபத்து என்று அலறியவாறு அந்த அக்கினியில் இறங்கி விட்டனர். ஈசன் மண்டோதரிக்கு அருள் வழங்கி விட்டு உத்திரகோசமங்கை திரும்பி வந்தார்.
ஒரே ஒரு வேதியர் மட்டும் சிவாகம நூலைக் கட்டி அணைத்து நிற்பதை கண்டார். அந்த சிவவேதியர் அக்கினி தெப்பக்குளத்தில் தீ எரிந்தது மற்ற வேதியர்கள் எல்லாம் அக்கினியில் இறங்கி விட்டார்கள் நான் ஆகமநூலை காப்பாற்றினேன் என்று ஈசனிடம் கூறினார்.
நீ ஆகம நூலை காப்பாற்றிய உம் பக்தியை மெச்சினோம். சிவாகம நூலை தோத்திரப் பாக்களாகப் பாடி நம்மை மீண்டும் வந்து, மாணிக்கவாசகராக கி.பி.823-ம் ஆண்டு உத்திரகோசமங்கை திருத்தலத்தில் தோன்றி திருவாசகத்தை எழுதுவாய் என்று சிவபெருமான் கூறி மறைந்தார்.
அதன்படி மீண்டும் கி.பி.823-ம் ஆண்டு உத்திரகோச மங்கை திருத்தலத்தில் மாணிக்கவாசகர் தோன்றி திருவாசகத்தை எழுதினார்.
இலங்கையில் நடந்த போரில் ராமன் பிரம்மாஸ்திரத்தில் தெய்வீக சக்தியை அதன்கண் ஆவாஹனம் பண்ணினான். அந்த அஸ்திரத்தை ராமன் ஏவினான்.
ராவணன் இருதயத்தை அது துளைத்தது. பிறகு அது தலையைத் தொட்டது. அவன் கரங்களை துண்டித்தார்.
ராவணன் தரையில் விழுந்து புரண்டு உயிர்துறந்தான். அன்று நடந்த இறுதிப் போரில் குரங்கு படைகளுக்கும் அசுரப்படைகளுக்கும் கடும்போர் நடைபெற்றது. இருபடைகளிலும் பல கோடிக்கணக்கான போர் வீரர்கள் மாண்டு மடிந்தார்கள்.
இப்படி இறந்தவர்களின் உடல்கள் மாமிச மலைபோல் குவிந்து கிடந்தது. ரத்தம் பெருகி காட்டாறுபோல ஓடியது. அந்தரத்த ஆறு கடலில் கலந்தது. மாமிசத்தையும், உதிரத்தையும் பேய்கள், பிசாசுகள், இரத்தக்காட்டேரிகள் போன்றவைகள் உண்டு செரிக்காததால் குட்டிக்கரணம் அடித்து விளையாடி கொண்டிருந்ததன.
இறந்தவர்களின் ஆவிகள் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோர்களுக்கு பிரம்மஹத்தி தோஷமாகப் பற்றிக் கொண்டது. அதனால் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து குறித்த நேரத்துக்குள் ராமேஸ்வரத்தில் வழிபட வேண்டும் என்று மகரிஷிகள் அறிவுறுத்தினார்கள்.
லிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கு கைலாசத்தில் இருந்து லிங்கம் கொண்டு வரும்படி ராமன் அனுமனை அனுப்பி வைத்தார். ஆனால், நெடுந்தொலையில் உள்ள கைலாசத்திலிருந்து ஆஞ்சநேயர் லிங்கம் கொண்டு வருவதற்குக் காலதாமதம் ஆகிவிட்டது.
விபீஷணனின் வேண்டுகோளுக்கு இணங்கி மண்டோதரியின் குடிக்கோவிலான ஈசன், ஈஸ்வரி பிறந்த ஊரான உத்தரகோச மங்கை தலத்தில் மண் எடுத்து வந்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம், உயிர்களின் ஆவி அனைத்தும் நீங்கும் என்று கூறிய அறிவுரையின்படி உத்தரகோச மங்கைக்கு வாலியின் மகன் அங்கதனை ராமர் அனுப்பினார். அங்கதன் அங்குள்ள மண்ணை எடுத்து வந்தான். சீதை சிவன் தலத்தில் உள்ள மண்ணை வைத்து லிங்கம் உருவாக்கி ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்து அனைவரும் வழிபட்டார்கள்.
கைலாசம் சென்று லிங்கத்தை எடுத்து திரும்பி வந்த அனுமன் அங்கு மண் லிங்கம் பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்து இருப்பதைக் கண்டு கோபம் கொண்டு அதை தன வாலால் சுற்றி அகற்ற முயன்றான். வால் லிங்கத்திலிருந்து உருவி அனுமனுடைய முகம் தரையில் இடித்து ரத்தம் வழிந்தது. அதனால் ராமேஸ்வரத்தில் இருக்கும் அனுமன் முகம் எப்பொழுதும் சிவந்திருக்கும்.
இந்த லிங்கத்தில் அனுமன் வாலால் உருவிய தழும்பு இப்பொழுதும் காணலாம். இந்த லிங்கத்தில் தீபாராதனை காட்டும்பொழுது லிங்கத்தின் பின்புறம் ஒளி தெரியும். உத்தரகோசமங்கை ஸ்தலத்தில் மண்ணெடுத்து உருவாக்கிய லிங்கத்திற்கு ராமலிங்கம் என்று பெயர்.
இதன் மூலம் ராமேசுவரம் தலத்தில் உள்ள லிங்கம் உத்தரகோச மங்கையில் எடுத்து செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது.
இந்த ராம லிங்கத்திற்கு பக்கத்தில் அனுமன் கொண்டு வந்த விஸ்வலிங்கத்தை ஸ்தாபித்து, அந்த லிங்கத்திற்கு காசிலிங்கம் என்று பெயரிட்டு, அதற்கே முதல் பூஜை செய்ய வேண்டும் என்று ராமர் உத்தரவிட்டாராம்.
பின்னர் ராமர் தேவிப்பட்டனத்தில் கடலில் ஒன்பது கல்களை ஊன்றி தோஷத்தை கழித்துள்ளார். ராமேஸ்வரத்தில் இருபத்தி மூன்று தீர்த்தங்கள் உள்ளன. ராமர் ஊன்றிய ஒன்பது கற்களை விட்டு பகலில் கடல் தண்ணீர் ஓடிவிடும். மாலையில் தண்ணீரில் கற்கள் மூழ்கிவிடும்.
எனவே தேவிபட்டணம் இருப்பதி நான்காவது தீர்த்தமாகும். இந்த ஊர் ராமநாதபுரத்தில் இருந்து வடக்கே 15 கி.மீ. தூரத்தில் உள்ளது.
ஈசன், ஈஸ்வரி பிறந்த ஊரான உத்தரகோசமங்கை இருபத்தைந்தாவது கடைசி தீர்த்தமாகும். இந்த ஊர் ராமநாட்டில் இருந்து தெற்கு 15 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு இந்து, காசி சென்று ராமேஸ்வரம் தீர்த்தமாடி இறுதியாக கடைசி தீர்த்தம் உத்தரகோசமங்கையில் ஆடினால் காசி யாத்திரை பூர்த்தியாகி சொர்க்கத்திற்குச் செல்வதற்கு வழிவகுக்கும் என்பது ஐதீகமாகும்.
- பரிகாரங்கள் செய்ய ராகுகாலமே உகந்த காலமாகும்.
- துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு வழிபட வேண்டும்.
பொதுவாக சித்தயோகம், அமிர்தயோகம் போன்ற யோக காலங்களை சிறந்த காலங்களாக கருதும் நம்மனதில் ராகுகாலம் என்றாலே ஒருவித பயம் உண்டாகிறது. ஆனால் உண்மையில் இருட்டில் இருப்பவர்களுக்கு வெளிச்சமாகவும், வருத்தப்படுபவர்களுக்கு வளம்தரும் கற்பகமாகவும் ராகு காலமே திகழ்கிறது. எனவே பரிகாரங்கள் செய்ய ராகுகாலமே உகந்த காலமாகும்.
ராகுகாலம் 1 மணி 30 நிமிடமாகும். ஞாயிறு 4.30 - 6.00, திங்கள் 7.30 -9.00, செவ்வாய் 3- 4.30, புதன் 12- 1.30, வியாழன் 1.30 - 3.00, வெள்ளி 10.30 - 12, சனி 9-10.30 ஆகும்.
ராகு காலத்தை பாம்பாக வைத்து முதல் அரை மணி நேரம் தலைப்பாகம், 2ம் அரை மணி நேரம் உடல்பாகம், 3ம் அரை மணி நேரம் வால்பாகமும் ஆகும். இதில் இறுதி அரை மணி நேரம்தான் அமிர்தகடிகை எனும் விசேஷ காலமாகும். இந்தநேரம் பரிகாரங்கள் செய்ய மிகவும் உகந்த நேரமும், மிகவும் பலன் தரக்கூடியதும் ஆகும்.
இந்க நேரத்தில் பூஜைகள், பரிகாரங்கள் செய்வதால் தோசங்கள் நீங்கி குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும்.
சுக்கிரவார(வெள்ளிக்கிழமை) ராகுகால பூஜை
15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
11 வாரங்கள் ஸ்ரீதுர்க்காதேவியை அமிர்தகடிகை நேரத்தில் (11.30 - 12) மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பழம் பாக்கு வைத்து வணங்கி சுமங்கலி பெண்களிற்கு கொடுக்கவும். இதனால் திருமணத்தடை நீங்கும். மாங்கல்ய பலம் பெருகும். (கண்டிப்பாக எலுமிச்சை பழ தீபம் ஏற்றக்கூடாது)
மங்களவார(செவ்வாய்க்கிழமை) பூஜை
ஸ்ரீதுர்க்காதேவி சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை 4.00- 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை சாதம், எலுமிச்சைபழ மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.
துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப்பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் பத்திரகாளி அவதரித்த வேளையாதலால் அந்த நேரத்தில் காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.
கிரக சர்ப்ப சாந்தி
பாம்பினை அடிப்பதால் வரும் தோசம், முன்னோர்களினால் வந்த நாக தோசம் நீங்க வேண்டுமானால் செம்பு அல்லது வெள்ளியினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள் பூஜை செய்தல் வேண்டும். வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதில் நாக உருவை வைத்து கட்டி ஆறு போன்ற ஓடுகின்ற தண்ணீரில் போடவேண்டும். அன்று குறைந்தது 5 ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டும்.
எந்த விதமான சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
1. ராகு கால பௌர்ணமி பூஜை - பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.
2. ராகு கால கிருத்திகை பூஜை - புகழ் தரும்.
3. ராகு கால சஷ்டி பூஜை - புத்திரப்பேறு கிடைக்கும்.
4. ராகு கால ஏகாதசி பூஜை - பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.
5. ராகு கால சதுர்த்தி பூஜை - துன்பங்களிலிருந்து விடுதலை தரும்.
- பரிகார பூசை செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் உண்டாகும்.
- ஆலயத்தில் உள்ள பாம்புப் புற்றுக்கு காணிக்கை செலுத்தலாம்.
ராகு தோஷம் என்பது பல வகைகளில் காணப்படும். ராகுபகவான் ரிஷபத்தில் உங்கள் ஜாதகத்தில் நீசம் பெற்று இருந்தாலும், பகை பெற்று இருந்தாலும், 7, 8-ல் இருந்தாலும், ராகு தோஷமாகும். புத்திர தோஷம், களத்திதிர தோஷம், காலசர்ப்ப யோகம், மாங்கல்ய தோஷம் போன்ற தோஷங்களுடன் கூடிய அமைப்புகளில் இருந்தாலும், ராகு தோஷம் தான்.
ராகு திசை, ராகு புத்தி நடந்தாலும், ராகு காலத்தில் பிறந்திருந்தாலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தாலும், தேதி, மாதம், வருஷம் மூன்றையும் கூட்டினால் 4 வந்தாலும், அவை ராகு தோஷமாக கருதப்படும். சதயம், சுவாதி, திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்திருந்தாலும், ராகு தோஷ பாதிப்பு ஏற்படக் கூடும்.
இத்தகைய அமைப்பு- பெற்றவர்கள் பரிகார பூஜை செய்வது நல்லது. திருநாகேஸ்வரம் சென்று, ராகு பகவானை, ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்து, பரிகார பூசை செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் உண்டாகும்.
ராகு கிரகம், ஞானம், பாட்டனார் வம்சம், சேவகத் தொழில், கைத்தொழில், வித்தை, நீர்க்கண்டம், உடல் அங்ககீனம், வாயு, வலிப்பு நோய், பித்த நோய், இறைவாசம், கட்டிகள், வயிற்றுக் கோளாறு, விஷக்கடி போன்றவற்றுக்குக் காரணகர்த்தாவாக இருக்கிறது. அவர் கடுமையான களத்திர, புத்திர தோஷம் கொடுப்பத்துடன் சூரியன், செவ்வாய், சனியை விட மிகக் சொடியவர் ராகு.எனவே திருநாகேஸ்வர பரிகார வழிபாடு ஒவ்வொருவரும் அவசியம் செய்ய வேண்டிய ஒன்றாகும்.
ராகுக்கிரக பரிகாரங்கள்
ராகு பகவானுக்கு உரிய நாளாகிய ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து, கருப்பு அல்லது நீல வண்ண ஆடை அணிந்து, கோமேதம் அணிந்து, ராகு பகவானுக்கும் நீல நிறம் அல்லது கருப்புநிற ஆடை அணிவித்து, நீல மந்தார மலராலும், இலுப்பைக் பூவாலும் அலங்கரித்து, அருகு சமித்து கொண்டு தூபம் காட்டி, நெய் விளக்கு ஏற்றி, உளுத்தம் பருப்புப் பொடி சாதம் நிவேதனம் செய்து, மற்றவர்களுக்குத் தானம் அளித்திட வேண்டும்.
ராகுபவானை ராகப் பிரியா ராகத்தில் ராகுபகவானின் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனையும் செய்து கொள்ளலாம். அருகம்புல் மாலை போட்டு, அருகம் புல்லால் விநாயகருக்குப் பூசை செய்யலாம். ஞாயிறு, வெள்ளி, செவ்வாய் ராகு காலத்தில் துர்க்ககைக்கு நெய் விளக்கு 11 வாரங்கள் போட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழி பட்டு வர வேண்டும்.
ஆலயத்தில் உள்ள பாம்புப் புற்றுக்கு காணிக்கை செலுத்தலாம். உளுந்து, சுருட்டி, நீல நிறத் துணிகளையும் தானம் செய்யலாம். ராகுபகவானின் அதி தேவதைகளான காளி, பசு, பாம்பு இவைகளைப் பூசிக்க ராகு பகவான் மிகவும் மன மகிழ்ச்சி கொள்வார்.
வழிபாடுக்கு ஏற்ற நாள், நேரம்
திருநாகேஸ்வரம் ராகு பகவானை வழிபட, ராகு பகவான் உச்சம் பெறும் கார்த்திகை மாதத்தில் அவர் நட்சத்திரம் ஆகிய சதயம், சுவாதி, திருவாதிரை வரும் நாட்களில், வழிபாடு செய்வது நல்லது. அதுவும் ஞாயிற்றுக்கிழமையாக இருந்து, ராகு காலத்தில் மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரை ராகுபவானுக்குப் பால் அபிஷேகம் செய்து, பரிகார பூசை செய்வது மிக மிகச் சிறப்பாகும்.
மற்றபடி தினசரி ராகு காலத்தில் பால் அபிஷேகம், பரிகார பூசை செய்யலாம். ஞாயிற்றுக்கிழமையில் செய்வது மிகவும் சிறப்பபுடையதாகும்.