search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ராகு தோஷங்கள்
    X

    ராகு தோஷங்கள்

    • பரிகார பூசை செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் உண்டாகும்.
    • ஆலயத்தில் உள்ள பாம்புப் புற்றுக்கு காணிக்கை செலுத்தலாம்.

    ராகு தோஷம் என்பது பல வகைகளில் காணப்படும். ராகுபகவான் ரிஷபத்தில் உங்கள் ஜாதகத்தில் நீசம் பெற்று இருந்தாலும், பகை பெற்று இருந்தாலும், 7, 8-ல் இருந்தாலும், ராகு தோஷமாகும். புத்திர தோஷம், களத்திதிர தோஷம், காலசர்ப்ப யோகம், மாங்கல்ய தோஷம் போன்ற தோஷங்களுடன் கூடிய அமைப்புகளில் இருந்தாலும், ராகு தோஷம் தான்.

    ராகு திசை, ராகு புத்தி நடந்தாலும், ராகு காலத்தில் பிறந்திருந்தாலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தாலும், தேதி, மாதம், வருஷம் மூன்றையும் கூட்டினால் 4 வந்தாலும், அவை ராகு தோஷமாக கருதப்படும். சதயம், சுவாதி, திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்திருந்தாலும், ராகு தோஷ பாதிப்பு ஏற்படக் கூடும்.

    இத்தகைய அமைப்பு- பெற்றவர்கள் பரிகார பூஜை செய்வது நல்லது. திருநாகேஸ்வரம் சென்று, ராகு பகவானை, ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்து, பரிகார பூசை செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் உண்டாகும்.

    ராகு கிரகம், ஞானம், பாட்டனார் வம்சம், சேவகத் தொழில், கைத்தொழில், வித்தை, நீர்க்கண்டம், உடல் அங்ககீனம், வாயு, வலிப்பு நோய், பித்த நோய், இறைவாசம், கட்டிகள், வயிற்றுக் கோளாறு, விஷக்கடி போன்றவற்றுக்குக் காரணகர்த்தாவாக இருக்கிறது. அவர் கடுமையான களத்திர, புத்திர தோஷம் கொடுப்பத்துடன் சூரியன், செவ்வாய், சனியை விட மிகக் சொடியவர் ராகு.எனவே திருநாகேஸ்வர பரிகார வழிபாடு ஒவ்வொருவரும் அவசியம் செய்ய வேண்டிய ஒன்றாகும்.

    ராகுக்கிரக பரிகாரங்கள்

    ராகு பகவானுக்கு உரிய நாளாகிய ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து, கருப்பு அல்லது நீல வண்ண ஆடை அணிந்து, கோமேதம் அணிந்து, ராகு பகவானுக்கும் நீல நிறம் அல்லது கருப்புநிற ஆடை அணிவித்து, நீல மந்தார மலராலும், இலுப்பைக் பூவாலும் அலங்கரித்து, அருகு சமித்து கொண்டு தூபம் காட்டி, நெய் விளக்கு ஏற்றி, உளுத்தம் பருப்புப் பொடி சாதம் நிவேதனம் செய்து, மற்றவர்களுக்குத் தானம் அளித்திட வேண்டும்.

    ராகுபவானை ராகப் பிரியா ராகத்தில் ராகுபகவானின் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனையும் செய்து கொள்ளலாம். அருகம்புல் மாலை போட்டு, அருகம் புல்லால் விநாயகருக்குப் பூசை செய்யலாம். ஞாயிறு, வெள்ளி, செவ்வாய் ராகு காலத்தில் துர்க்ககைக்கு நெய் விளக்கு 11 வாரங்கள் போட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழி பட்டு வர வேண்டும்.

    ஆலயத்தில் உள்ள பாம்புப் புற்றுக்கு காணிக்கை செலுத்தலாம். உளுந்து, சுருட்டி, நீல நிறத் துணிகளையும் தானம் செய்யலாம். ராகுபகவானின் அதி தேவதைகளான காளி, பசு, பாம்பு இவைகளைப் பூசிக்க ராகு பகவான் மிகவும் மன மகிழ்ச்சி கொள்வார்.

    வழிபாடுக்கு ஏற்ற நாள், நேரம்

    திருநாகேஸ்வரம் ராகு பகவானை வழிபட, ராகு பகவான் உச்சம் பெறும் கார்த்திகை மாதத்தில் அவர் நட்சத்திரம் ஆகிய சதயம், சுவாதி, திருவாதிரை வரும் நாட்களில், வழிபாடு செய்வது நல்லது. அதுவும் ஞாயிற்றுக்கிழமையாக இருந்து, ராகு காலத்தில் மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரை ராகுபவானுக்குப் பால் அபிஷேகம் செய்து, பரிகார பூசை செய்வது மிக மிகச் சிறப்பாகும்.

    மற்றபடி தினசரி ராகு காலத்தில் பால் அபிஷேகம், பரிகார பூசை செய்யலாம். ஞாயிற்றுக்கிழமையில் செய்வது மிகவும் சிறப்பபுடையதாகும்.

    Next Story
    ×