என் மலர்
தோஷ பரிகாரங்கள்
பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்களின் பிரச்சனை உடனடியாக தீர கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தையும் பரிகார முறையை செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் அதுவும் இயலாதோர் இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் கீழ்காணும் பரிகார முறையை செய்து வர திடீர் பண வரவு உண்டாகும். செல்வ நிலை உயரும்.
இருபது மொச்சை கொட்டைகளை சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும். குழைந்து விடக்கூடாது. முழு மொச்சைகளாக தெரிய வேண்டும். அவற்றை ஒரு வெள்ளை துணி அல்லது கைகுட்டையில் இட்டு முடிச்சு அவிழுமாறு லேசாக கட்டிக்கொள்ளவும். பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை ஆறு முறை கூறி முடித்து அதை ஓடும் நீர்நிலைகளில் விட்டு விடவும். கைமேல் பலன் தரும் சிறந்த தாந்த்ரீக பரிகாரம் இது.
மந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்ரீம் கமலே கமலாலயே
ப்ரஸீத ப்ரஸீத ஸகல
சௌபாக்யம் தேஹி தேஹி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ
கொளப்பாக்கத்தில் உள்ள ஆனந்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் குடிகொண்டுள்ள இவ்வாலயம் சகல தோஷங்களும் பரிகார ஸ்தலமாக விளங்குகின்றது.
சூரிய பகவானுக்கு உகந்த இரண்டாவது தலம் திருக்கண்டியூர் வீரட்டம். இக்கோயில் தஞ்சையிலிருந்து திருவையாறு போகும் வழியில் ஆறாவது மைலில் உள்ளது. குடமுருட்டியாற்றுக்கும், காவிரிக்கும் நடுவில் இத்தலம் உள்ளது.
சென்னையில் உள்ள சிவாலயங்களில் சூரியனின் அம்சத்துடன் திகழும் ஆலயம் கொளப்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயமாகும். ஆனந்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் குடிகொண்டுள்ள இவ்வாலயம் சூரியன் பரிகார ஸ்தலமாக-விளங்குகின்றது. 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இவ்வாலயத்தில் சூரியர், பையரவர் சிவபெருமான் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்ய பன்னிரெண்டு துவாரங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது.
நவக்கிரகத்தை குறிக்கக்கூடிய ஒன்பது துவாரங்களுடன் சேர்ந்து இச்சாசக்தி ஞானசக்தி, கிரியாசக்தி இந்த துவாரங்கள் வழியாக சுவாமி தரிசனம் செய்யும்போது சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும் என கூறுகின்றார்கள்.
வேலை வாய்ப்பு கிட்டும் தலம். அகத்தியர், சூரியன், வசிஷ்டர் வழிபட்ட தலம். பழைய பெயர் சிவபாதகேசநல்லூர். சூரிய ஓரையில் நெய் தீபம் ஏற்றி ஸ்லோகம் கூறி சூரியனை வழிபட்டால் நல்ல பலன் கிட்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு சிகப்புவஸ்திரம், சிகப்பு மலர் கொண்டு, எருக்க இலை, கோதுமை தானியம் கொண்டு வழிபட்டால் வேண்டுவோர்க்கு வேண்டும் அருளை தருகின்றார்.
இங்கு கிழக்கு நோக்கி விசாலாட்சி உடனுறை ஸ்ரீவிஸ்வ வாதாபி கணபதிபோல் அருள்காட்சி நல்கும் நாதர் ஸ்ரீராஜகணபதி. வடக்கு பார்த்த முருகன் விசேஷமானது.
இத்தலத்து கால பைரவருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணி வரை அபிஷேக ஆராதனைகளும் ஏழு வாரங்கள் வழிபட்டால் வேண்டுவதை கிடைக்கவும் நற்பலன்களையும் அருள்பாலித்து வருகின்றார்.- ஞாயிற்றுக்கிழமைகளில் பைரவர் உற்சவருடன் எட்டுதிக்குகளுக்கும் காட்சி தருகிறார்.
போரூர் குன்றத்தூர் சாலையின் மத்தியில் கெருகம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து வடகிழக்கு பாகத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் கொளப்பாக்கம் உள்ளது.
ஆலய தரிசனம் நேரம்: காலை 7.30 முதல் 9 மணி வரை, மாலை 6 முதல் 8 மணி வரை.
அஷ்டமி (நவராத்திரியின் எட்டாம் நாள்), நவமி (சரஸ்வதி பூஜை நாள்) திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ, படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை.
நவராத்திரி விரதம் பிரதமையில் தொடங்கி நவமியில் முடியும். இதில் குறிப்பாக அஷ்டமி (நவராத்திரியின் எட்டாம் நாள்), நவமி (சரஸ்வதி பூஜை நாள்) திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ, படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை.
நவராத்திரி காலம் மட்டுமின்றி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளில் அம்பாளின் கதையை வாசித்தாலும், அம்மை நோய் அண்டாது என்பது ஐதீகம். மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை, கிரக ஆதிக்கத்தால் ஏற்படும் தோஷங்கள் நெருங்காது.
பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேருவர். திருடர்களின் தொல்லை அகலும். நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏதாவது கண்டங்கள் இருந்தால் அவை அனைத்து விலகி ஓடும்.
குலதெய்வ சாபம் - பிதுர் தோஷம், சாபம் - பெண் சாபம் என 16 விதமான சாபங்களுக்கும் எளிய பரிகாரங்கள் உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகத்தில் பிறக்கக்கூடிய அனைத்து குழந்தைகளுமே ஏதேனும் கர்மவினைகளோடே பிறக்கிறது. நாக தோஷம் - களத்திர தோஷம் - மாங்கல்ய தோஷம் - செவ்வாய் தோஷம் - கேந்திராதிபத்திய தோஷம் என பல விதமான தோஷங்கள் இருக்கிறது. முன்னோர்கள் வழியில் ஏதேனும் சாபம் இருக்கலாம். உதாரணமாக குல தெய்வ சாபம் - பிதுர் தோஷம், சாபம் - பெண் சாபம் என 16 விதமான சாபங்கள் சொல்லப்படுகிறது.
இதன் மூலமாகவும் நாம் செய்யக்கூடிய - ஆரம்பிக்கக்கூடிய காரியங்களில் ஏதேனும் தடை தாமதம் ஏற்படலாம். இன்னும் சிலருக்கு ஒரு காரியம் முடிவடையும் என நினைக்கும் போது அந்த காரியமே முடியாமல் போகலாம்.
இதற்கான எளிமையான பரிகாரம் வீட்டில் காயத்ரி ஹோமம் செய்வது. 1008 ஆவர்த்தி காயத்ரி தேவிக்கு அன்னம் - நெய் வைத்து ஹோமம் செய்வதன் மூலம் சாபத்தின் கடுமையைக் குறைக்க முடியும்.
தினமும் வீட்டில் ஹோமம் செய்வதற்குப் பெயர் அக்னி ஹோத்திரம். இதில் ஏதேனும் ஒரு செப்புப் பாத்திரத்தில் வரட்டி வைத்து பச்சரிசி மற்றும் நெய்யைக் கொண்டு காயத்ரி மந்திரம் சொல்லி ஹோமம் செய்வார்கள். இப்படி தினமும் ஹோமம் செய்பவர்களுக்கு தோஷங்கள் அண்டாது.
அன்னையின் பெயர்களுக்கு முன்பாக ‘ஜெய்’ என்ற வார்த்தையை சேர்த்து உச்சரித்தால், வாழ்வில் முன்னேற்றம் வந்து சேரும். சில பெயர்களைச் சொல்வதால் கிடைக்கும் பலன்களை இங்கே பார்க்கலாம்.
அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். அன்னை எந்த பெயரால் அழைக்கப்பட்டாலும், அவளின் செயல்பாடு பக்தர்களுக்கு நன்மை அளிப்பதே. அன்னையின் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு ஸ்லோகங்கள் இருக்கின்றன. அன்னையின் பெயர்களுக்கு முன்பாக ‘ஜெய்’ என்ற வார்த்தையை சேர்த்து உச்சரித்தால், வாழ்வில் முன்னேற்றம் வந்து சேரும். சில பெயர்களைச் சொல்வதால் கிடைக்கும் பலன்களை இங்கே பார்க்கலாம்.
ஜெய் காளி - எதிரிகளின் பயம் ஒழியும்
ஜெய் சண்டிகாதேவி - செல்வம் சேரும்
ஜெய் சாம்பவி - அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.
ஜெய் துர்க்கா - ஏழ்மை அகலும், துன்பம் விலகும், போரில் வெற்றி கிடைக்கும், மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.
ஜெய் சுபத்ரா - விருப்பங்கள் நிறைவேறும்
ஜெய் ரோகிணி - நோய் தீரும்.
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும்.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் கால பைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச்செயல்களை செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும்.
காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளுமே அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப்பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழுந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.
கால பைரவர் பாம்பைப் பூணுலாக கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம் தண்டம் ஏந்தி காட்சி தருவார். காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் கால பைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகு தான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் வழக்கம் உள்ளது.
காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக கால பைரவரையும் வழிபட்டால் தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும். கால பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாந்நி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலத்த சாதமும் இனிப்பு பண்டங்களும் சமர்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். அன்று அன்னதானம் செய்வது நல்லது.
செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது. நாக தோஷத்திற்கு வீட்டில் பரிகார பூஜை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஜாதகத்தில் நாக தோஷம் உள்ளவர்கள் இந்த ஸ்ரீநாகராஜ பூஜையை செய்வது நல்லது. சுவற்றிலோ அட்டையிலோ வேறு பொருளின் மீதோ நாகத்தை வரையலாம்.
அரிசி மாவில் ஜலத்தை விட்டுக்கரைத்து, ஏழு பாம்புகள் வரைய வேண்டும். மேலே தலை கீழே வால் இருக்க வேண்டும். பூஜை செய்பவர்களின் கைக்கு ஒரு முழு அளவில் கிழக்கு முகமாக வரைய வேண்டும்.
வடக்கு முகமாக அமர்ந்து, பூஜையை பெண்களோ அல்லது ஆண்களோ அமாவாசைக்கு பிறகு வரும் சஷ்டி அன்று செய்ய வேண்டும். நிவேதன பொருளாக தேங்காய் பழம் இருக்கலாம். புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் கஞ்சிவடிக்காத சாதத்தை நிவேதனம் செய்து உப்பில்லாமல் சாப்பிடலாம். இரவில் பால் பழம் சாப்பிடுவது நல்லது.
மகளிர் ஏதாவது ஒரு மாதத்தில் சுக்ல பட்ச சஷ்டியன்று பாம்பையும், அது குடியிருக்கும் புற்றை யும் வழிபட வேண்டும். தங்கம், வெள்ளி, செம்பு முதலியவற்றில் ஏதாவது ஒரு உலோகத்தில் நாக உருவத்தை செய்து அவ்வடிவத்தை பூஜை அறை யில் வைக்க வேண்டும். சஷ்டி தினத்தன்று பூஜை அறையில் கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
அன்று உபவாசம் இருப்பது நல்லது. மாலையில் புற்றுக்கு பால் ஊற்றி அதன் பின்னர் உணவருந்தி உபவாசத்தை நிறைவு செய்ய வேண்டும். இதனால் உடல் நலம், மனநலம், குடும்ப நலம், மகப்பேறு ஆகியவை உண்டாகும். நாகதோஷம் நீங்கும்.
பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது. ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையது.
குழந்தை இல்லாதவர்கள் நாகத்தை சிலை வடிவில் அமைத்து ஆறுமாதம் தண்ணீரிலும் ஆறுமாதம் நெய்யிலும் வைத்து பூஜை செய்து அரச மரத்தில் வைத்து வழிபடுவார்கள்.
மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் வேள்வி செய்யும் பொழுது நாக சக்கரம் வரையப்படுகிறது. மேல்மருவத்தூர் கோவில் கருவறையில் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க ஆதிபராசக்தி அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.
அஷ்டம சனியின் பாதிப்பில் இருந்து விடுபட சில எளிய பயனுள்ள பரிகாரங்கள் உள்ளது. இந்த பரிகாரங்கள் என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
ஒருவரின் கர்ம வினைப்படி, அவர்களின் பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை சனி பகவான் அளிப்பார். அந்த வகையில் அஷ்டம சனியின் பாதிப்பில் இருந்து விடுபட சில பரிகாரங்கள் இதோ,
* பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை வைத்து வணங்க வேண்டும்.
* தினமும் காலையில் குளித்து விட்டு எள் கலந்த உணவை காகத்திற்கு வைக்க வேண்டும்.
* வாரந்தோறும் சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
* சனிக்கிழமைகளில் வன்னி மர இலைகளை மாலையாக தொடுத்து சிவபெருமானுக்கு சாற்றி வணங்க வேண்டும்.
* சனிக்கிழமையில் நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டு, அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது.
* ஞாயிற்று கிழமை மாலை ராகுகால வேளையிலும், தேய்பிறை அஷ்டமி நாட்களிலும் கால பைரவரை வணங்கி வர வேண்டும்.
* சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.
* வன்னி மரத்தை சுற்றி வந்து வணங்கி ராம நாமத்தை ஜபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
வில்வ இலைகளால் அர்ச்சித்து வணங்கும்போது அனைத்து துன்பங்களும் விலகி நிம்மதி அருள்வார் சிவபெருமான் என்பதே அபிஷேகங்கள் தரும் பலன்கள் ஆகும்.
பொதுவாகவே அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் நடைபெற்றாலும் எம்பெருமான் சிவனுக்கு நடைபெறும் அபிஷேகங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. அதிலும் சிவன் ஒரு அபிஷேகப் பிரியர் என்றும் கூறுவர். காரணம் முக்கண் முதல்வனாகும் சிவனின் நெற்றிக்கண் தீப்பிழம்பாக உஷ்ணத்தை அளிக்கும்.
அச்சூட்டைத் தணித்து அவருக்கு குளிர்ச்சி ஊட்டவே சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு மேலாக ஒரு செம்பு பாத்திரத்தைக் கட்டி, அதனுள் குளிர்ச்சியான நீர், பன்னீர், நெய், இளநீர் போன்றவற்றை நிரப்பி, அதன் அடியில் சிறு துளைகளிட்டு அதன் வழியே சொட்டு சொட்டாக விழும்படி அமைப்பார்கள்.
சொட்டு சொட்டாக விழும் நீர் சிவனை குளிர்விக்கும் என்பது ஐதீகம். அவரின் உஷ்ணத்தைத் தவிர்க்க உதவும் ஜலதாரை எனப்படும் இந்த தாரா அபிஷேகத்தில் சில வகைகள் சிறப்புமிக்க பலன்களை அருளும். சர்க்கரை கலந்த பாலை தாராபிஷேகம் செய்தால் கெட்ட சக்திகள் விலகி அச்சம் தீர்ந்து நல்வாழ்வு கிட்டும்.
தேனினால் தாராபிஷேகம் செய்தால் சருமவியாதிகள் நீங்கும், கரும்புச்சாறு கொண்டு தாராபிஷேகம் நிகழ்த்தினால் சகலத் துன்பமும் நீங்கி மோட்சம் கிடைக்கும். மேலும் சிறப்பு வாய்ந்த, குளிர்ச்சி தரும் வில்வ இலைகளால் அர்ச்சித்து வணங்கும்போது அனைத்து துன்பங்களும் விலகி நிம்மதி அருள்வார் சிவ பெருமான் என்பதே அபிஷேகங்கள் தரும் பலன்.
ஜாதகத்தில் ராகு கேதுக்கள் பிதுர் தோஷத்தை உண்டாக்குகின்றது. லக்னம், பஞ்சமம், சப்தமம், பாக்கியம் இவ்விடங்களில் ராகு கேதுக்கள் நின்றால் பித்ரு தோஷம் ஏற்படுகின்றது.
ஜாதகத்தில் ராகு கேதுக்கள் பிதுர் தோஷத்தை உண்டாக்குகின்றது. லக்னம், பஞ்சமம், சப்தமம், பாக்கியம் இவ்விடங்களில் ராகு கேதுக்கள் நின்றால் பித்ரு தோஷம் ஏற்படுகின்றது.
பிதுர் தோஷம் தன்னையும், தன் குடும்பத்தையும், குழந்தை சம்பந்தமான பிரச்சினைகளையும் கணவன்-மனைவி சம்பந்தமான பிரச்சினைகளையும் கொடுக்கும். தாய் தந்தை ஊரை ஏமாற்றி பணம் சேர்த்து சொத்து சேர்க்கின்றனர். அந்த பாவம் அவர்களை மட்டுமல்லாமல் அவர்கள் பெற்ற சந்ததியினரை அதாவது அந்த சொத்தை அனுபவிப்பவர்களுக்கும் சேர்கின்றது. இதுதான் பிதுர்தோஷம்
பலமான பிதுர் தோஷம் உள்ளவர்கள் காசி அல்லது ராமேசுவரத்தில் வேதம் அறிந்த பண்டிதர்களால் திலா ஹோமம் செய்தால், பிதுர்தோஷங்கள் நீங்கும். திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமமாகும். காலையில் எள் நீரால் தர்ப்பணத்தை கடற்கரையினில் கொடுத்து விட்டு பின்னரே திலா ஹோமம் செய்யப்பட வேண்டும். திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு சேத்திரத்தில் தங்கிப்போக வேண்டும்.
பணப்பற்றாக்குறை நீங்கவும், வாங்கிய கடன் தீரவும் திருப்பவும் கடன் பெறாமல் இருக்கவும் கீழ்க்காணும் பரிகாரங்களை முறைப்படி செய்து பலன் பெறலாம்.
பணப்பற்றாக்குறை நீங்கவும், வாங்கிய கடன் தீரவும் திருப்பவும் கடன் பெறாமல் இருக்கவும், சேமிப்பு உயரவும், தீர்க்கமான அறிவை பெறவும், புத்தி தெளிவு பெறவும், நல்ல ஆசிரியம் மற்றும் புத்திசாலித்தனமான குழந்தை பெறவும், மலட்டுத்தன்மை நீங்கவும், நல்ல விஷய ஞானம் பெற்றிடவும் கீழ்க்காணும் பரிகாரங்களை முறைப்படி செய்து பலன் பெறலாம்.
கேது பகவானுக்கும், அதிதேவதையான சித்ரகுப்தன் அல்லது விநாயகருக்கும் 27 வெற்றிலையை மாலையாக கட்டி அணிவிக்கவும். கேதுவுக்கு பால் மற்றும் நெய் அபிஷேகம் செய்யவும். சிவப்பு, மஞ்சள், வெள்ளை சேர்ந்த வஸ்திரம் அணிவிக்கவும்.
எருக்கம்பூ மாலையும் அணிவிக்கலாம். பால் சாதம், தயிர் சாதம், மற்றும் நவதான்ய வகைகளை வேகவைத்து சுண்டலாக செய்து படைக்கவும். நெய் தீபம் ஏற்றி வழிபடவும். மேலும் சாஷ்டாங்க நமஸ்காரம் அவசியம். இவரது பெயருக்கும், பரிகாரம் செய்வபரின் பெயர் ஜென்ம ராசி, நட்சத்திரம் கூறி அர்ச்சனை செய்யவும். இயன்ற பேருக்கு அன்னதானம் வழங்கவும். இவ்வாறு தொடர்ந்து அல்லது மூன்று முறை செய்து வந்தால் கேதுவால் ஏற்பட்ட தோஷம் விலகி அருள் கிடைக்கும்.
இயன்றபொழுதெல்லாம் கேதுவையும் விநாயகரையும் வழிபட வேண்டும்.
ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள வைகுண்டநாதனை வேண்டிக் கொள்ளலாம்.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 28-வது கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது. நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீவைகுண்டத்தில் வைகுண்டநாதன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பக்தர்கள் பிறவா நிலை (மோட்சம்) கிடைக்க, இரு உலகங்களிலும் இடம் கேட்டு சுவாமியை வணங்குகின்றனர். ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக் கொள்ளலாம்.
தை முதல் நாளில் இத்தலத்து கள்ளபிரானுக்கு 108 போர்வைகள் அணிவித்து பூஜை நடத்துவார்கள். பின், அவர் கொடிமரத்தைச் சுற்றி வருவார். இதையடுத்து ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தை கலைப்பர்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களும், இந்நாளில் கள்ளபிரான் வடிவில் இங்கு காட்சி தருவதாக ஐதீகம். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற கருடனுக்கு சந்தன காப்பு செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.






