என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகாரங்கள் உள்ளது. இன்று சர்வ கிரக தோஷங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும் எளிய பரிகாரத்தை பார்க்கலாம்.
    செவ்வாய்க்கிழமை அன்று குறைந்தது 1/2 மீட்டர்  அல்லது 1 மீட்டர் நீளமுள்ள  சிகப்புத் துணி வாங்கி அதில் முடிந்த அளவு  கோதுமை வைத்து கொஞ்சம் பணமும் வைத்து முடிந்து கொள்ளவும்.

    சூரிய அஸ்தமன வேளையில் ஹனுமான் ஆலயம் சென்று அந்த சிகப்பு மூட்டையை (முடியை)  ஹனுமான் பாதத்தில் வைத்து சர்வ கிரக தோஷங்களும் நிவாரணமாகக் கீழ்க்கண்ட மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.

    அல்லது அர்ச்சகரிடம் கொடுத்துப் பாதத்தில் வைத்து அர்ச்சித்துத் தரச் சொல்லி வாங்கிக் கொண்டு கீழே உள்ள மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும். பின்னர் அந்தச் சிகப்பு முடியை அர்ச்சகருக்கு தட்சிணையாக கொடுத்து விடவும்.அல்லது யாரேனும் உணவுப் பொருட்கள் தேவைப்படும் யாசகர்களுக்குத் தானமாக வழங்கவும்.

    இதன் மூலம் கிரக தோஷப் பாதிப்புகள் நீங்கும் எனத் தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

    மந்திரம் :

    அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாரம் ப்ரம்மசாரிணம்|
    துஷ்ட க்ரஹ விநாசாய ஹனுமந்த முபாஸ்மஹே ||

    கஞ்சமலை சித்தேசுவர சாமி கோவிலில் இறைவனை மனதில் நினைத்து தங்கள் இன்னல்கள் நீங்கி இன்பமாய் வாழ்ந்திட மக்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
    சேலம் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது கஞ்சமலை சித்தேசுவர சாமி கோவில். சேலத்தில் இருந்து இளம்பிள்ளை செல்லும் வழியில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் அருள்பாலித்து வரும் மூலவர் சித்தேசுவர சாமி ஒரு இளம் யோகியின் உருவம். சின் முத்திரையுடன் வீராசனத்தில் (தவக்கோலத்தில்) மிகக் கம்பீரமாக அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இத்தலத்து இறைவனைப் பற்றி கரபுரநாதர் புராணம் பின்வருமாறு கூறுகிறது.

    மூலன்பென்றபெயர் கொண்ட அந்தணர் தன்தேகத்தை காயசித்தி (உடலை இளமையாக்குதல்) செய்து கொள்ளும்பொருட்டு நரை திரைமிக்க தன் சீடருடன் கருங்காடு வந்தடைந்தார். மூலிகை தேடிச்சென்ற மூலன் தன் சீடரிடம் சமையல் செய்யச் சொல்லி சென்றார். குருவின் ஆணைப்படி அவர் சமையல் செய்யத் தொடங்கினார். சோறு கொதித்துப்பொங்கியது. சோற்றை துலாவினார். அப்போது சோறு கறுத்து இருந்தது. இதனால் சீடர் அஞ்சினார். உடனே அவர் அந்த சோற்றை தான் உண்டுவிட்டு குருவிற்கு வேறு சோறு சமைத்து வைத்தார். அந்த சமயம் எல்லோரும் வியக்கும் வகையில் சீடரின் உடல் நரைதிரை மாறி இளமைபெற்றது.

    சிறிது நேரம் கழித்து மூலிகை தேடிச் சென்ற குரு, சீடர் இருந்த இடத்திற்கு திரும்பினார். சீடரை அவரால் அடையாளம் காண இயலவில்லை. முதுமை நீங்கி இளமைபெற்ற சீடரிடமே இங்கிருந்த முதியவர் எங்கே? என்று கேட்டார். தன் குருவின் திருவடிகளில் சீடர் விழுந்து வணங்கினார். அடியேன் தான் தங்கள் சீடன் என்று கூறினார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த குரு எப்படி நீ இளமைப்பெற்றாய்? என்பதை கூறு என்று கேட்டார். சீடரும் நடந்த சம்பவத்தை விளக்கினார்.

    எந்த மூலிகையைத் தேடி அலைந்தோமோ அது இங்கு இருக்கின்றதை அறியாமல் போனேமே என்று மகிழ்ந்த குரு எங்கே அந்த குச்சி என வின வினார். தங்களுக்கு அஞ்சிய நான் அதன்மகிமை தெரியாமல் அதனை அடுப்பில் விட்டேன் என்றார். உடனே குரு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே, இனி என்ன செய்வது? என்று எண்ணி வேறு வழியின்றி சீடர் உண்ட சோற்றை கக்க வைத்து அதை தான் உண்டு அவரும் (குருவும்) இளமைப்பெற்றார். இவ்வாறு இருவரும் இளமையைப்பெற்றனர்.

    இவ்வாறு மூலனும் அவரது சீடரும் இளமையைப்பெற்ற தால் இத்திருத்தலத்திற்கு அருகில் உள்ள இளம்பிள்ளை என்றுபெயர்பெற்று இன்று வரை அதேபெயரில் வழங்கி வருகின்றது. இத்திருத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் சித்தேசுவரர் திருமூலரின் சீடரான கஞ்சமலை சித்தர் என்றழைக்கப்படும் காலங்கி நாதர் என்பது தெளிவாகிறது.

    இக்கோவிலுக்கு ஒவ்வொரு அமாவாசை தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து சித்தேசுவரரை வழிபட்டு செல்கின்றனர். இதனால் இக்கோவில்பொது மக்களால் அமாவசைக் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் இறைவனை மனதில் நினைத்து தங்கள் இன்னல்கள் நீங்கி இன்பமாய் வாழ்ந்திட மக்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் விரும்பியவாறு, வேண்டியவாறு பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன, காரியங்கள் கைகூடுகின்றன என்பதை பக்தர்கள் கண்கூடாக பார்க்கின்றனர்.
    உலக பரம்பொருள் என்று சர்வ வல்லமை பொருந்திய கடவுள் ஒன்று தான். எந்த பிரச்சனைக்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
    உலக பரம்பொருள் என்று சர்வ வல்லமை பொருந்திய கடவுள் ஒன்று தான். அவரைத்தான் சிவனும், யோக நிலையில் தியானிக்கிறான். அந்த ஆதி சிவன் ஒருவனே நாம் வணங்கும் தேவதைகள், தெய்வங்கள் - அவதாரங்கள், ஒரு சில காரண, காரியத்துக்காக அந்த பரம்பொருள் அனுப்பியவர்கள் என்கின்றனர் பெரியோர்கள்.

    விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்
    செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
    நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
    வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
    ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன்

    மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
    கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி
    திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
    மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி
    புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி

    தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கிடாசலபதி
    புதிய தொழில் துவங் க- ஸ்ரீகஜலட்சுமி
    விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி
    உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபூரணி
    வழக்குகளில் வெற்றி பெற - விநாயகர்

    சனி தோஷம் நீங்க - ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
    பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன்
    பில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
    அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற - சிவஸ்துதி
    முடி நரைத்தல், உதிர்தல் - மகாலட்சுமி, வள்ளி



    கண் பார்வைக் கோளாறுகள் - சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
    காது, மூக்கு, தொண்டை நோய்கள் - முருகன்
    ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள் - மகாவிஷ்ணு
    மாரடைப்பு, இருதய கோளாறுகள் - சக்தி, கருமாரி, துர்க்கை
    அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா - தட்சிணாமூர்த்தி, முருகன்

    நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு - முருகன்
    பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள் - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி
    மூட்டுவலி, கால் வியாதிகள் - சக்கரத்தாழ்வார்
    வாதங்கள் - சனிபகவான், சிவபெருமான்
    பித்தம் - முருகன்

    வாயுக் கோளாறுகள் - ஆஞ்சநேயர்
    எலும்பு வியாதிகள் - சிவபெருமான், முருகன்
    ரத்தசோகை, ரத்த அழுத்தம் - முருகன், செவ்வாய் பகவான்
    குஷ்டம், சொறி சிரங்கு - சங்கர நாராயணன்
    அம்மை நோய்கள் - மாரியம்மன்

    தலைவலி, ஜீரம் - பிள்ளையார்
    புற்று நோய் - சிவபெருமான்
    ஞாபகசக்தி குறைவு - விஷ்ணு
    தஞ்சாவூரில் மேலவீதியும், வடக்கு வீதியும் இணையும் வாயு மூலையில் உள்ள மூலை அனுமனை வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் விலகும்.
    தஞ்சாவூரில் மேலவீதியும், வடக்கு வீதியும் இணையும் வாயு மூலையில் மூலை அனுமன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள 18 தூண்களிலும் நவக்கிரகங்கள் உள்ளிட்ட 18 தெய்வங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

    எனவே 18 அகல் விளக்குகள் (மஞ்சள் துணியை திரியாக்கி) அல்லது 18 எலுமிச்சைப் பழங்களில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதனால் பில்லி, சூனியம், செய்வினை பாதிப்பு ஏற்படாது.

    மேலும் இத்தல ஆஞ்சநேயருக்கு 18 என்ற எண்ணிக்கையில் வெற்றிலை மாலை சாத்தி, 18 முறை வலம் வந்து, உண்டியலில் 18 ரூபாய் செலுத்தி வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும். அதே போல் தொடர்ந்து 18 அமாவாசை தினங்களில் ஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.
    திண்டுக்கல் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஹயக்ரீவர் தரிசித்தால் படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்தியடைந்து கல்வியில் சிறந்து விளங்குவர்.
    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசரான அச்சுத தேவராயர், ராமதேவராயர் ஆகியோர் காலத்திலும் இங்கு கலைநயம்மிக்க சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் 108 வைணவ திருக்கோவில்களில் ஒன்று அல்ல என்றாலும், அவற்றில் ஒன்றான திருமாலிருஞ்சோலை என அழைக்கப்படும் மதுரை கள்ளழகர் கோவிலின் பிரார்த்தனை தலமாக கருதப்படுகிறது.

    கோவிலின் உட்பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் தென் பகுதியில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளி அருள்பாலிப்பவர் ஹயக்ரீவர் ஆவார்.

    ஞானத்தின் அதிபதி :

    இந்த உலகில் அழியாத ஒரு செல்வம் இருக்கிறது என்றால் அது கல்விச்செல்வமே. எவர் ஒருவராலும் ஒருவரிடமிருந்து தட்டிப்பறிக்கவோ, திருடவோ முடியாத ஒன்று கல்விச்செல்வம் ஆகும். அத்தகைய பெருமை வாய்ந்த கல்விக்கு அதிபதியாக நாம் அனைவரும் வணங்குவது சரஸ்வதியை தான்.

    ஆனால் அந்த சரஸ்வதிக்கே ஒரு குரு உண்டென்றால் அது ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவரே ஆவார். 4 வேதங்களின் துணைகொண்டு அவ்வேதங்கள் பின் தொடர நான்முகனான பிரம்மன் தனது படைத்தல் தொழிலை செய்து வந்தார். மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் பேராசையின் காரணமாக பிரம்மாவிடம் இருந்த வேதங்களை குதிரை வடிவில் வந்து திருடி சென்றனர்.

    வேதங்களை மீட்டவர் :

    இதன்காரணமாக உலகம் படைத்தலின் அர்த்தமே இல்லாமல் இருள் சூழ்ந்தது. எனவே பிரம்மா, மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார். இதையடுத்து மகாவிஷ்ணு குதிரை முகம், மனித உடல், சூரியனை விஞ்சக்கூடிய ஒளி, கண்களாக சூரிய சந்திரர்கள், கண் இமைகளாக கங்கை மற்றும் சரஸ்வதி, தெய்வ ஒளி வீசும் வடிவம் ஆகியவற்றுடன் திருவடிவம் கொண்டு அரக்கர்களிடம் இருந்து வேதங்களை மீட்க சென்றார்.

    அந்த அரக்கர்களிடம் இருந்து வேதங்களை மீட்கவே உலகம் இருள் அகன்று ஒளி உண்டாகியது. அசுரர்கள் கை பட்டதால் பெருமை குன்றியதாக வேதங்கள் நினைத்தன. எனவே தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரை முகத்துடன் இருந்த பெருமாள் உச்சி முகர்ந்தார்.

    இதனால் அவரது மூச்சுக்காற்றால் வேதங்கள் புனிதமடைந்தன. அசுரர்களிடம் போரிட்டதன் காரணமாக ஹயக்ரீவர் உக்கிரமாக இருந்ததால் அவரை குளிர்விக்க லட்சுமியை அவரது மடியில் அமர்த்தினார். இதனால் அவர் லட்சுமி ஹயக்ரீவர் என அழைக்கப்படுகிறார். வேதங்களை மீட்டவர் என்பதால் அவர் கல்விக்கு தெய்வமாகின்றார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால் லட்சுமியை இடது பக்கம் அமர்த்தியிருக்கிறார்.

    சரஸ்வதியின் குரு :

    கல்விக் கடவுள் என அறியப்படுபவர் சரஸ்வதி. அந்த சரஸ்வதிக்கே கல்வி அறிவை கொடுத்தவர் ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவர். அவரை தரிசித்தால் படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்தியடைந்து கல்வியில் சிறந்து விளங்குவர். எனவே தங்களது குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷங்கள் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ, கல்வியறிவு பெருக வேண்டி விரும்பினால் மாதம்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளி அருள்பாலிக்கும் ஹயக்ரீவருக்கு நடைபெறும் சிறப்பு திருமஞ்சன அலங்கார பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

    மேலும் நோட்டு, பேனா, தேன் மற்றும் ஏலக்காய் மாலையுடன் வந்து ஹயக்ரீவருக்கு சாத்தி பூஜையில் வைக்கப்பட்டு அபிஷேகம் செய்யலாம். இதில் அபிஷேகம் செய்த தேனை தோஷம் உள்ள குழந்தைக்கு கொடுத்து தொடர்ந்து ஹயக்ரீவரை பூஜித்து வந்தால் உடனடியாக தோஷம் நீங்கும். மேலும் பூஜையில் வைத்து அபிஷேகம் செய்யப்பட்ட தேனை குழந்தைகளின் நாவில் தடவிவிட்டு ஹயக்ரீவரர் மந்திரத்தை தொடர்ந்து மனதில் செபிக்க செய்தால் குழந்தைகள் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து வருவர்.

    மந்திரம் :

    ஞானானந்தமயம் தேவம்
    நிர்மல ஸ்படிகாக்கிருதிம்,
    ஆதாரம் ஸர்வவித்யானாம்,
    ஹயக்ரீவ முபாஸ்மஹே

    பொருள்: ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாக, மாசற்ற ஸ்படிக மணி போன்ற திருமேனியுடன் எல்லா கலைகளுக்கும் உறைவிடமாக குதிரை போன்ற திருக்கழுத்தை உடைய எம்பெருமானை வணங்குகிறோம்.
    சனீஸ்வர பகவானுக்கு அதிதேவதையாக எமன் விளங்குவதால், அவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பதால், கீழ்க்கண்ட ஆலயங்களில் எம பகவானை வழிபட்டால், சனீஸ்வரர் அருள் கிட்டும்.
    சனீஸ்வர பகவானுக்கு அதிதேவதையாக எமன் விளங்குவதால், அவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பதால், கீழ்க்கண்ட ஆலயங்களில் எம பகவானை வழிபட்டால், சனீஸ்வரர் அருள் கிட்டும்.

    ஸ்ரீவாஞ்சியம்:

    கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பஸ்சில் சென்று, குடவாசல் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து குடவாசல், நன்னிலம் போகும் பஸ்சில் சென்றால் இத்திருலத்தை அடையலாம். இது காசிக்கு நிகரான திருத்தலமாகும். பல சிறப்புகளை உடைய திருத்தலம் இது.

    இங்கு எம பகவானுக்குத் தனி சந்நிதி உள்ளது. எம பகவான் ஈசனுக்காக வாகனமாக மாறிய உருவமும் உள்ளது. இங்கு இறைவனையும் அம்பாளையும் வழிபாடு செய்து, குப்த கங்கை, எம தீர்த்தத்தில் நீராடி எமபகவானுக்கு அபிஷேகமும், ஆராதனையும் செய்து வழிபட்டால் சனி பகவான் அருள் கிட்டி, சனிதோஷ பரிகார நிவர்த்தி ஏற்படும்.

    திருப்பைஞ்சீலி:

    திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து டோல்கேட், மண்ணச்சநல்லூர் வழியாக 19 கி.மீ. தூரத்தில் உள்ளது இத்திருத்தலம். பஸ் வசதி உள்ளது. இவ்வாலயத்தில் எமனுக்கு தனி சன்னதி உள்ளது. சனிக்கிழமைகளில் இவரை வழிபட்டு பரிகாரம் செய்ய சனி பகவான் அருள்பெறலாம்.

    தருமபுரம்:

    காரைக்காலில் இருந்து திருநள்ளாறு செல்லும் பாதையில் உள்ளது. மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன்) வழிபட்டத் திருத்தலம் இது. தருமன் (எமன்) வழிபட்டதால் இவ்வூர் தருமபுரம் ஆயிற்று.

    எனவே திருநள்ளாறு வந்து சனி பரிகாரம் செய்து போகின்றவர்கள், இத்திருத்தலம் வந்து வழிபட்டு போவதும் சிறந்த பலனையும், பரிகார நிவர்த்தியை அளிக்கும்.
    திருநல்லூர் திருத்தலத்தில் உள்ள கார்கோடேஸ்வரரை வழிபாட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
    திருவையாறுக்கு அருகே உள்ளது ரதிவரபுரம் என்னும் திருநல்லூர் திருத்தலம். இங்கு கார்கோடேஸ்வரர் என்ற திருநாமத்தில் ஈசன் அருள்பாலித்து வருகிறார். பாம்புகளின் அரசனான கார்கோடகன், இந்த தலத்திற்கு வந்து இறைவனை வழிபாடு செய்ததால் இத்தல இறைவனுக்கு கார்கோடேஸ்வரர் என்று பெயர் வந்ததாம். 

    இறைவனின் திருநாமம் காமரசவல்லி. மன்மதனுக்கு உயிர்பிச்சை அளிக்க வேண்டி, அவனது மனைவி ரதி தேவி இத்தல இறைவியை வழிபட்டதால், அன்னைக்கு இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தன் கணவனின் உயிரைத் திருப்பித்தர வேண்டி கடும் தவம் செய்த ரதி தேவிக்கு, சிவபெருமான் அருள் செய்த திருத்தலம் இதுவாகும்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திலும், திருமானூர் என்ற இடத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், ஏலாக்குறிச்சி என்ற இடத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.
    எந்த ஒரு காரியத்தையும் பிள்ளையார் வழிபாட்டுக்குப் பிறகே செய்யவேண்டும் என்பது ஐதீகமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையாகும்.
    எந்த ஒரு காரியத்தையும் பிள்ளையார் வழிபாட்டுக்குப் பிறகே செய்யவேண்டும் என்பது ஐதீகமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையாகும். அதற்கேற்ப பிள்ளையார் வழிபாடு என்பது எளிமையான நடைமுறைகளை கொண்டுள்ளது. ஆகமங்கள், கல், மண், மரம், செம்பு ஆகியவற்றால் இறை உருவங்களை செய்யவேண்டும் என்று குறிப்பிடுகின்றன.

    கஜமுகன் என்று பிள்ளையாரை குறிப்பிடுவதன் அர்த்தம், யானை மிகவும் புத்தி கூர்மையுடையது என்பதாகும். ஐங்கரன் என்று கூறும்போது, தும்பிக்கை எனும் ஐந்தாவது கரம் எவ்வுளவு துரிதமாகவும், திறமையாகவும் செயல்படுகிறது என்பதை உணர்த்துகிறது.

    பெரிய தலை என்பது உயர்ந்த சிந்தனையையும், சிறிய கண்கள் கூர்மையான பார்வையும், முறம் போன்ற பெரிய காதுகள் கவனமாக கேட்பதையும், சிறிய அளவுள்ள வாய் குறைவாக பேசுவதையும், பெரிய வயிறு காரணமாக அனைத்து பிரச்சினை களையும் தனக்குள் ஜீரணித்து அவற்றை தீர்த்து விடுவதையும் அவரது உருவம் நமக்கு உணர்த்துவதாக கொள்ளலாம்.

    மண், பசுஞ்சாணம், மஞ்சள், மாக்கல், கருங்கல், பளிங்கு கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்தி மரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், திருநீறு, சர்க்கரை, வெல்லம் போன்ற பொருட்களாலும் விநாயகர் வடிவம் அமைத்து வழிபடலாம். தேவைகளுக்கு தக்கவாறு பல்வேறு பொருட்களால் ஆவாகனம் செய்து வழிபட்டு, பலன்கள் பெறலாம்.

    மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் ஏற்படும்.

    குங்குமத்தில் பிடித்து வைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகுவதாக ஐதீகம்.

    பசும் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.

    புற்று மண்ணில் செய்த பிள்ளையாரை வணங்கினால் விவசாயம் செழிப்பதுடன், உடல் நோய்கள் அகலுவதாகவும் நம்பிக்கை.

    வெல்லம் மூலம் அமைக்கப்பட்ட பிள்ளையாரை வழிபட்டால், உடலுக்கு உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய இடங்களில் உருவாகும் கட்டிகள் மற்றும் கொப்புளங்கள் மறைந்து விடுவதாக ஐதீகம்.

    உப்பினால் செய்த பிள்ளையாரை வணங்கினால் எதிரிகளின் தொல்லை விலகி விடுவதாக நம்பிக்கை.

    வெள்ளெருக்கு விநாயகரை வழிபாடு பில்லி, சூனிய பாதிப்புகளை தடுக்கிறது.

    விபூதியால் பிடித்து வைத்து வழிபட்டால் நோய்கள் தீர்வதாக ஐதீகம்.

    சந்தன பிள்ளையார் வழிபாடு காரணமாக புத்திர பாக்கியம் ஏற்படுவதாக நம்பிக்கை.

    சர்க்கரை பிள்ளையார் செய்து வழிபட்டால் நீரிழிவு நோய் தீரும் வாய்ப்புகள் ஏற்படும்.

    வாழைப்பழத்தில் பிள்ளையாரை அமைத்து வழிபட்டால் வம்ச விருத்தி ஏற்படுவதாக நம்பிக்கை.

    வெண்ணெய் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் வியாபார கடன் உள்ளிட்ட அனைத்து கடன் தொல்லைகளும் விலகுவதாக ஐதீகம்.
    மனிதர்களை ஆட்டிப்படைப்பது கிரகங்கள். ஒவ்வொரு கிரக பெயர்ச்சியின் போதும், யோக பைரவரை வணங்கி வழிபட்டால், வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.
    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சிவகாமசுந்தரி சமேத திருத்தனிநாதர் திருக்கோவில் இருக்கிறது. இங்கு தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறார், யோக பைரவர். இவரை ஆதி பைரவர் என்றும் அழைக்கிறார்கள்.

    இவரிடம் இருந்து தான் அஷ்ட பைரவர்களான அசிதாவக பைரவர், உரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் ஆகியோர் தோன்றினர் என்கிறது புராணம்.,

    இந்த எட்டு பைரவர்களில் ஒவ்வொன்றில் இருந்தும் எட்டு எட்டாக, ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக்கோலங்களை பைரவர் எடுத்ததாக கூறப்படுகிறது. இவற்றில் சில பைரவர் வாகனங்களோடும், சில வாகனங்கள் இல்லாமலும் பல பகுதிகளில் காட்சியளிப்பதை நாம் காணலாம்.

    மனிதர்களை ஆட்டிப்படைப்பது கிரகங்கள். அந்த கிரகங்களை ஆட்டி வைத்து ஆட்சி செய்பவர், யோக பைரவர். ஒவ்வொரு கிரக பெயர்ச்சியின் போதும், யோக பைரவரை வணங்கி வழிபட்டால், வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.
    இன்றைய கிரகணத்தினால் 9 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கிரகணத்தன்று மட்டும் தோஷம் எனப்படும் ஒரு சிறிய பாதிப்பினை அடைவார்கள்.
    வரும் தைப்பூச பவுர்ணமி கிரகண நிலையாக அமைகிறது. இக்கிரகணம் தை மாதம் 18ம் நாள், ஆங்கிலப்படி 2018 ஜனவரி 31ம் தேதி மாலை 5.16 க்கு ஆரம்பமாகி இரவு 8.40 மணிக்கு நிறைவடைகிறது. ஜோதிட வார்த்தைகளின்படி கடக ராசியில், பூச நட்சத்திரம் நான்காம் பாதத்தில் கிரகணம் தொடங்கி ஆயில்யம் ஒன்றாம் பாதத்தில் இது முடிவடையும். 

    பூமியின் நிழலான ராகுவால் ஏற்பட இருக்கும் இந்தக் கிரகணத்தின் போது ஒரு நிலையில் சந்திரனின் வான்வெளி அமைப்பில் மிக நெருக்கமாக மூன்று டிகிரிக்குள் பூமியில் நிழல் படரும். அதாவது சந்திரனும், ராகுவும் கிரகண நிலையில் மூன்று டிகிரிக்குள் இணைந்திருப்பார்கள். 

    பூமிக்கு நன்மைகளைத் தரும் முழு நிலவின் ஒளி, ராகு எனும் இருளாகிய நிழலால் மறைக்கப்படும் போது, சந்திரன் சனி மற்றும் புதனின் நட்சத்திரங்களான பூசம், ஆயில்ய நட்சத்திரங்களின் பின்னாலும், குருவின் நட்சத்திரமான புனர்பூசத்தின் அருகிலும் இருப்பார். எனவே கிரகண நேரத்தில் மேற்படி நட்சத்திரங்களினால் பூமிக்குக் கிடைக்கும் ஒளியும் மறைக்கப்பட்டு பாதிப்படையும். 

    எனவே இந்தக் கிரகணத்தினால் குரு, புதன், சனி ஆகிய மூன்று கிரகங்களின் ஆளுமை நட்சத்திரங்களான புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், அனுஷம், கேட்டை, பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கிரகணத்தன்று மட்டும் தோஷம் எனப்படும் ஒரு சிறிய பாதிப்பினை அடைவார்கள். 

    மேற்படி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அன்று மட்டும் ஒரு சில உடல், மனச் சங்கடங்களை அடையக் கூடும். எனவே மேற்கண்டவர்கள் கிரகண நேரத்தில் எதையும் உட்கொள்வதையும், முக்கியமான எவற்றையும் செய்வதையும் தவிர்க்கலாம். இவர்கள் கிரஹணம் நிறைவடைந்த ஒருமணி நேரத்திற்குப் பின்னர் இரவு மணி 9.40 க்கு வீட்டினை சுத்தம் செய்து குளித்து பூஜை செய்து பின் உணவருந்துவது நல்லது. 

    மிக முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் இந்த கிரகண நேரத்தில் வெளியே வருவது நல்லதல்ல. பிறந்த ஜாதகப்படி சந்திரதசை, சந்திரபுக்தி நடந்து கொண்டிருப்பவர்களும் மேற்கண்ட கிரகண நேரத்தில் முக்கியமான எதையும் செய்வதை தவிர்க்க வேண்டும்.
    நவகிரக தோஷம் உள்ளவர்கள் சென்னையில் உள்ள தோஷம் போக்கும் நவக்கிரக ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
    * சூரியன் - சென்னை செங்குன்றம் அருகேயுள்ள ஞாயிறு கோவில் 

    * சந்திரன் - சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் அமைந்துள்ள அகஸ்தியர் கோவில்

    * செவ்வாய் - வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் 

    * புதன் - திருவாலங்காடு 

    * வியாழன் - பாடி வலிதாயநாதர் கோவில்

    * சுக்கிரன் - மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோவில் 

    * சனி - சென்னை பூக்கடை தங்கசாலையில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில் 

    * ராகு-கேது - சென்னை பாரிமுனை மண்ணடியில் உள்ள மல்லீஸ்வரர், குன்றத்தூர் நாகேஸ்வரர்
    ராகு, கேதுவினால் உண்டாகும் காள சர்ப்ப தோஷம் மற்றும் இதர நாக சர்ப்ப தோஷங்களுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.
    சர்ப்ப தோஷம், நாகதோஷம் என ஜோதிடர்கள் சொல்வதெல்லாம், ராகு அல்லது கேது ஆகிய இரு கிரகங்களில் ஒன்றினால் மட்டுமே ஏற்படுவதாகும். ஆனால் காள - சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களினாலுமே ஏற்படுவதாகும். 

    இதற்கு மிகவும் நல்ல பலனும், பரிகாரமும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த தலங்களில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றாகும். சர்ப்பங்களில் முதன்மை ஆனவரான ஆதிசேஷனே, திரேதா யுகத்தில் லட்சுமணனாகவும், துபாவர யுகத்தில் பலராமராகவும் கலியுகத்தில் ஸ்ரீ ராமானுஜராகவும் அவதரித்ததாக விஷ்ணுபுராணம் கூறுகிறது. 

    ஆகவே, ராகு, கேதுவினால் உண்டாகும் காள சர்ப்ப தோஷம் மற்றும் இதர நாக சர்ப்ப தோஷங்களுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும். கோவிலுக்குப் பின்புறம் உள்ள குளம், ஆதிசேஷன் உருவாக்கியதால் இந்த குளத்தில் நீராடி, ஸ்ரீ ராமானுஜரையும், ஸ்ரீ ஆதிகேசவன், யுதிராஜநாதவல்லித் தாயாரையும் தரிசிப்பது, காளசர்ப்ப தோஷத்திற்கு மிகச் சிறந்த பலன்களைத்தரும்.
    ×