என் மலர்
தோஷ பரிகாரங்கள்
திருமண தோஷம், செவ்வாய்தோஷம், செவ்வாய் நீசம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்வது நன்மை தரும்.
ஜாதகத்தில் அங்காரக தோஷம் உள்ளவர்க்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்தை மங்களவார விரதம் என்று சொல்வார்கள். செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் அம்மனின் அருளும், முருகனின் அருளும் கிடைக்கிறது. செவ்வாய் தோஷமும் நீங்குகிறது. ரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கி மனதில் தைரியமும் வீரமும் பிறக்கின்றன.
செவ்வாய்கிழமை விரதம் இருக்கும் பெண்கள் பூஜை முடிந்த பின் துவரை வழங்கவேண்டும். அதன்பிறகு சுமங்கலிப்பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் ஆகியவற்றைத் தரவேண்டும். செவ்வாய்திசை, செவ்வாய்தோஷம், செவ்வாய் நீசம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது நன்மை தரும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செம்பவழத்தைக் கழுத்துச் சங்கிலியிலோ, மோதிரத்திலோ அணிந்து கொள்ள வேண்டும். இத்தோஷம் உள்ள பெண்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து செவ்வாய்க்கிழமை நாட்களில் காலையில் அம்மனையும், மாலையில் முருகனையும் வழிபட்டு வந்தால் தோஷம் நீங்கிவிடும்.

எந்த விதமான பிரச்சனைகள், கஷ்டங்களையும் போக்கும் எளிய, விரைவில் பலன் தரக்கூடிய பரிகாரங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
* ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை (கண்திருஷ்டி) விரட்டும் ஆற்றல் உண்டு.
* வாழை மரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.
* கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன்தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். வாசலில் கண் திருஷ்டி கணபதி படத்தையும் மாட்டி வைக்கலாம்.
* வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள்அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.
* வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

* வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.
* அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.
* முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, ஆகியவைகளைக் சேர்த்து அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ, தெளிக்க தீய சத்திகள், கண் திருஷ்டி, நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.
* கடன் தொல்லை போன்றவை இருந்தால், விநாயகரின் ஆலயத்தில் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து, தேங்காய் எண்ணெயையும், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்ணையும் ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும். நம்முடைய முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும்.
* வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம். கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும்.

தேனி மாவட்டம் மாவூற்று வேலப்பர் கோவில் உள்ள மாவூற்றுத் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், தீராத நோய்களும், மனக்குறைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.
தேனி மாவட்டம் தெப்பம்பட்டி என்ற இடத்தில் உள்ளது, மாவூற்று வேலப்பர் கோவில். முருகப்பெருமான் ஆலயமாகத் திகழும் இத்தல இறைவனின் திருநாமமே ‘வேலப்பர்’ ஆகும். 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், மலைகள் நிறைந்த பகுதியில் காணப்படுகிறது.
முன் காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் மருதம் மற்றும் மாமரங்கள் சூழ்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தின் தல விருட்சமும் மாமரம் தான். கோவிலுக்கு தெற்கே உள்ள ஒரு மாமரத்தின் அடியில் வற்றாத நீரூற்று காணப்படுகிறது. இதில் இருந்து எப்பொழுதும் நீர் பொங்கி வழிந்தபடி இருக்கிறது.
இந்த ஊற்றையே ‘மாவூற்று’ என்கிறார்கள். இதனாலேயே இத்தல இறைவன் ‘மாவூற்று வேலப்பர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தல விநாயகர் ‘மாவூற்று விநாயகர்’ என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த மாவூற்றுத் தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், தீராத நோய்களும், மனக்குறைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

அரசு வேலைக்கு முயற்சி செய்வர்கள் அந்த முயற்சியுடன் சேர்த்து இந்த பரிகாரத்தையும் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் (6am to 7am ) வீட்டு மாடியில (மாடி இல்லாதவர்கள் வெட்ட வெளியிலும்) ஒரு தீபம் ஏற்றி சூரியனை நோக்கி சாஷ்டங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.
தீபம் ஏற்றும் போது கூடவே நைவேத்தியமாக கல்கண்டு மற்றும் ஏதாவது இனிப்பை நைவேத்தியமாக வைக்க வேண்டும். (கடவுளுக்கு நிவேதனமாக படைத்த எதையும் வீணாக்க கூடாது. அதை நாமே சாப்பிட வேண்டும்)
அப்போது சூரிய காயத்ரி அல்லது சூரியனுக்குரிய ஸ்லோகம் அல்லது ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் சொல்லலாம். இந்த வழிபாட்டை 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன்கள் கிடைப்பதை காணலாம்.
மேலும் இந்த வழிபாட்டை செய்ய தகுந்தவர்கள் :
ஜாதகத்தில் சூரிய திசை நடப்பவர்கள், சூரியன் நீசமாக இருந்தால், நீச கிரகத்தோட சேர்ந்து இருந்தால், பகையாக இருந்தால், மறைந்து இருந்தால், அதிகாரமிக்க பதவியில இருப்பவர்க்கள், அதற்க்கு முயற்சி செய்பவர்கள், ஆளுமை திறன் வேண்டுவோர், தந்தை மகன் உறவு சரியில்லதவர்கள் (யாரேனும் ஒருத்தர் இந்த வழிபாடு செய்யலாம்), அரசு வேலைக்கு முயற்சி செய்வோ , அரசு சம்பந்தபட்ட விசயங்களில் இறங்குவோர், கண் பார்வை குறைபாடு உடையவர்கள், அரசு வேலைக்கு கடுமையாக முயற்சி செய்யும், வழிபாட்டில் நம்பிக்கை உள்ள நண்பர்கள் இந்த வழிபாட்டினை செய்து பார்க்கலாம்.

ராகு கேது என்னும் சர்ப்ப கிரகங்களுக்கு இடையில் இதர அனைத்து கிரகங்களும் இருந்தால் அதற்காக எளிய பரிகாரங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ராகு கேது என்னும் சர்ப்ப கிரகங்களுக்கு இடையில் இதர அனைத்து கிரகங்களும் இருந்தால் அதற்காக எளிய பரிகாரங்கள் ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம், போன்ற நட்சத்திரங்கள், வரும் நாட்களில் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஷ்வரம் என்னும் ராகு பகவான் குடிகொண்டிருக்கும் திருக்கோவிலுக்குச் சென்று ராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்து வணங்கி வழிபட்டு வருவது முதல் பரிகாரம் ஆகும். அதனால் தடைகள் அகலும். துன்பங்கள் குறையும்.
கேதுவை வழிபடக் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தசுவாமி திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். அன்று அவருடைய (கேதுவினுடைய) நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் ஒன்றாக இருந்தால் நல்லது. திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காளஹஸ்தி என்கின்ற திருத்தலமும், இதற்கு உகந்ததாகும். அதுபோல ராமேஸ்வரமும் தோஷ பரிகாரத்திற்கு மிகவும் உகந்த ஸ்தலமாகும். சும்மா பெயருக்காக சென்று வழிபடுவதைவிட வழிபட்டால தோஷம் குறையும் என்ற முழு நம்பிக்கையோடு சென்று வழிபடுவது மிகவும் முக்கியம்.

சிறுநீரகம் மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு பாடலூர் என்ற திருத்தலத்தில் உள்ள நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்துள்ளது பாடலூர் என்ற திருத்தலம். இங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருஊற்றத்தூர் என்ற ஊர் வரும். இங்குள்ள ஆலயத்தில் ஆசியாவிலேயே மிகவும் அரிதான பஞ்சநத கல்லால் செய்யப்பட்ட அபூர்வ நடராஜர் திருமேனியை தரிசிக்கலாம்.
பஞ்சநத கற்கள் சூரியனில் இருந்து வெளி வரும் ஆரோக்கியமான கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை அரிதானது என்பது ஆலயத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல்.
ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை, தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக்கலை வல்லுனர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால், இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இங்குள்ள இறைவி சிவகாம சுந்தரியின் உருவ அமைப்பு வணங்குவதற்கு மட்டுமில்லாமல் ரசனைக்குரியதாகவும் இருப்பது தனிச்சிறப்பாகும். அன்னை தன் முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் அழகாக காட்சியளிக்கிறார்.
சிறுநீரகம் மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு, அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து வழிபட வேண்டும். பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் எல்லாவித நோய்களும் தீர்ந்துவிடுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

சம்பாதிக்கும் பணத்தினை ஒரு பக்கம் சேமித்து வைத்தாலும், மறுபக்கம் ஆன்மீக வழிகளையும் கொஞ்சம் பின்பற்றினால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும்.
எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது. அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில் தங்குவதேயில்லை. சம்பாதிக்கும் பணத்தினை சேமித்து வைத்து சிறுக சிறுக செலவு செய்து வந்தாலும், ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு செலவு மொத்தமாக வந்து, வீட்டில் இருக்கும் கஜானாவை காலி செய்துவிடுகிறது.
கை நிறைய சம்பாதித்து பணத்தினை ஒரு பக்கம் சேமித்து வைத்தாலும், மறுபக்கம் ஆன்மீக வழிகளையும் கொஞ்சம் பின்பற்றினால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த விஷயங்களைத்தான்.
* வியாழக்கிழமை விரதமிருந்து குபேரனை வழிபட பணப்பிரச்சனை படிப்படியாக தீர்ந்து பணம் வர ஆரம்பிக்கும்.
* வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும். வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்.

* வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
* நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள், குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
* அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.
* வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும்.
* பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

புத்திரதோஷம் எதனால் ஏற்படுகிறது. அதற்கு உரிய எளிய முறையான பரிகாரங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சிவதூஷணை செய்ததாலும், முன்னோர்களுக்கு முறையாக ஈமக் கடன் செய்யாததாலும், தகப்பனுடைய சாபத்தினாலும், முன்னோர்களின் சாபத்தினாலும் புத்திரதோஷம் ஏற்படுகிறது. புத்திரதோஷத்திற்கான எளிய பரிகாரங்களை பார்க்கலாம்.
* சந்திரனால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், பெண் சாபத்தாலும், தாயாரை சரியாக கவனிக்காததாலும் தோஷம் ஏற்படுகிறது. புத்திரதோஷம் உள்ளவர்கள் முதியோர் காப்பகங்களிலுள்ள முதியோருக்கு உணவு, உடை வழங்கி அவர்களின் ஆசியைப் பெற்றால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
* செவ்வாயால் புத்திரதோஷம் ஏற்பட்டிருந்தால், தனது எதிரிகளின் சாபத்தாலும், சகோதர, சகோதரிகளை சரியாக பராமரிக்காததாலும் அவர்கள் இட்ட சாபத்தினால் தோஷம் நேர்ந்ததை அறியலாம். இதற்கு முதியோர் இல்லங்களில் உள்ள ஆதரவற்ற பெண்களுக்கு உணவு, உடை வழங்குவதால் அவர்களின் ஆசிபெற்று தோஷ பரிகாரம் பெறலாம்.
* குரு பகவானால் தோஷம் ஏற்பட்டால் அந்தணரைக் கொன்ற பாவத்தாலோ, குல தெய்வக் குற்றத்தாலோ, மரங்களை காரண காரியமின்றி வெட்டியதால் உண்டான சாபத்தாலோ புத்திர தோஷம் ஏற்பட்டதை அறிய வேண்டும். குலதெய்வ வழிபாடு. வயோதிக அந்தணருக்கு தானதர்மம் செய்தல், திருக்கோயில்களில் உழவாரப்பணி செய்வதன் மூலம் பரிகாரம் தேடலாம்.
* சுக்கிரனால் தோஷம் ஏற்பட்டால் மனைவியின் சாபந்தாலோ, பெண்ணை ஏமாற்றியதலோ, பசுவதை செய்ததாலோ ஏற்பட்ட தோஷம் என அறியலாம். இதற்கு ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி, மருத்துவ உதவி செய்தல், பசுக்களை பூஜித்து கோசாலை அமைத்து பராமரித்தல் போன்ற செயல்களைச் செய்தால் பரிகாரம் கிடைக்கும்.
* சனியினால் ஏற்பட்ட தோஷம் என்றால், பிறர் மனைவியை அபகரித்ததால் உண்டான கணவனின் சாபத்தினாலும், நயவஞ்சகத்தால் ஏமாற்றப்பட்ட ஒரு ஏமாளியின் சாபத்தாலும், ஏற்பட்ட தோஷமாகும். வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்வதாலும், கோயில்களில் உழவாரப் பணி செய்வதன் மூலமும், ஏழை உடல் ஊனமுற்றோருக்கு கைத்தடி, சைக்கிள் தானம் செய்வதன் மூலமும் பரிகாரம் தேடலாம்.

சிவ பூஜையின் போது எந்த மலர்களை வைத்து வழிபாடு செய்தால் எந்த பிரச்சனைகள் தீரும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
செந்தாமரை - தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி
மனோரஞ்சிதம், பாரிஜாதம் - பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி
வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி - மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி.
மாசிப்பச்சை, மரிக்கொழுந்து - நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை உண்டாகும்.
மஞ்சள் அரளி, தங்க - அரளி, செவ்வந்தி - கடன்நீங்கும், கன்னியருக்கு விவாகப்ராபதி ஏற்படும்.

செம்பருத்தி, அடுக்கு அரளி - தெத்திப்பூஞானம் நல்கும், புகழ், தொழில் விருத்தி
நீலச்சங்கு - அவச்சொல், அபாண்டம், தரித்திரம் நீங்கும் அருளும் ஆயுளும் கிட்டும்.
வில்வம் கருந்துளசி, மகிழம்பூ - சங்கடங்கள் நீங்கி, சகலகாரியமும் கைகூடும்.
தாமரை, செண்பகம் ஆகியவற்றை மொட்டுகளாகவும் பூஜை செய்யலாம். ஏனையவை மலர்ந்திருக்க வேண்டும். குங்குமப்பூ தவிர மற்ற முள் உள்ள பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல. கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.
மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாள்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கலாகாது.

ஒரே குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசிக்காரர்களாக அமைந்து விட்டால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், அதற்கான பரிகாரம் பற்றியும் பார்க்கலாம்.

இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். அதனால் திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படும்.
ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஏகராசிக்காரர்களாக அமையும் பட்சத்தில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரமாகும்.
ஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் சம்ஹார ஸ்தலங்களுக்கு (கடலோரமாக உள்ள) சென்று வழிபாடு நடத்தலாம் என பழைய நூல்களில் கூறப்பட்டுள்ளது.
ஏக ராசிக்காரர்களாக இருக்கும்பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடந்தால் குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது. மகன், மகளை உறவினர்கள் வீட்டில் அல்லது நல்ல விடுதியில் சேர்க்கலாம். கணவன்/மனைவி பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் விவாதம் மூலம் வரும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் போது அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

வானகரம் மச்சக்கார பாலமுருகன் கோவிலில் உள்ள முருகனை வணங்கினால், தடைபட்டு வந்த திருமணம் விரைவில் கைகூடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
சென்னை, வானகரம் மேட்டுக்குப்பத்தில் இருக்கிறது, மச்சக்கார பாலமுருகன் திருக்கோவில். இங்கு எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானின் வலது கன்னத்தில், சிவப்பு நிறத்தில் மச்சம் போல் காணப்படுகிறது.
எனவே இவரை ‘மச்சக்கார பாலமுருகன்’ என்று அழைக்கிறார்கள். இந்த ஆலயம் செவ்வாய் மற்றும் ராகு தோஷம் நீக்கும் தலம் என்று கூறப்படுகிறது. மேலும் இத்தல முருகனை வணங்கினால், தடைபட்டு வந்த திருமணம் விரைவில் கைகூடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. பெரும்பாலான கோவில்களில், பைரவர் தனியாகத்தான் காணப்படுவார்.
ஆனால் இத்தலத்தில் மட்டும் தான் பைரவர் தம்பதி சமேதராய் வீற்றிருக்கிறார். அஷ்டமி திதியன்று இங்கு சிறப்பாக பூஜைகள் நடைபெறும். இப்பூஜையில் கலந்து கொண்டால் பிரிந்த தம்பதியர் ஒன்றிணைவார்கள் என்று கூறப்படுகிறது.

புது வீடு கட்டி முடித்ததில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டின் வாயிலாக சரி செய்யலாம்.

வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.
பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.
ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.
திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.
தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.
காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.