என் மலர்
ஆன்மிகம்
- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம் ஆரம்பம்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
3-ந் தேதி (செவ்வாய்)
• சுவாமிமலை முருகப் பெருமானுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
• திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
• திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
• கீழ்நோக்கு நாள்.
4-ந் தேதி (புதன்)
• திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம் ஆரம்பம்.
• பழனி ஆண்டவர் விழா தொடக்கம்.
• திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
• திருப்பதி ஏழுமலையான் சகசர கலசாபிஷேகம்.
• கீழ்நோக்கு நாள்.
5-ந் தேதி (வியாழன்)
• முகூர்த்த நாள்.
• திருப்பரங்குன்றம் ஆண்டவர் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
• மிலட்டூர் விநாயகப் பெருமான் பவனி.
• திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
• மேல்நோக்கு நாள்.
6-ந் தேதி (வெள்ளி)
• சஷ்டி விரதம்.
• சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
• சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
• திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
• மேல்நோக்கு நாள்.
7-ந் தேதி (சனி)
• மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
• திருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகனத்தில் பவனி.
• திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், திருவரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
• திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
• மேல்நோக்கு நாள்.
8-ந் தேதி (ஞாயிறு)
• திருவண்ணாமலை அண்ணாமலையார் ரிஷப வாகனத்தில் பவனி.
• திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
• மேல்நோக்கு நாள்.
9-ந் தேதி (திங்கள்)
• சங்கரன்கோவில் கோமதியம்மன் 108 சங்காபிஷேகம், 1008 கலசாபிஷேகம்.
• சுவாமிமலை முருகப் பெருமான் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.
• திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார்.
• கீழ்நோக்கு நாள்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
- முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-18 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவிதியை நண்பகல் 1.21 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: மூலம் மாலை 5.23 மணி வரை பிறகு பூராடம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஓய்வு
ரிஷபம்-சாதகம்
மிதுனம்-ஜெயம்
கடகம்-சுகம்
சிம்மம்-கவனம்
கன்னி-நட்பு
துலாம்- உதவி
விருச்சிகம்-முயற்சி
தனுசு- பணிவு
மகரம்-முயற்சி
கும்பம்-ஆர்வம்
மீனம்-மாற்றம்
- மலை அடிவாரத்தில் விநாயகர் சன்னதிக்குப் பின்புறம் ஒரு பாறையில் பாலமுருகன் சன்னதி உள்ளது.
- அந்த முருகன் சுதையாக வடிவமைக்கப்பட்டு அழகிய வண்ணத்தில் காட்சி தருகிறார்.
தோரணமலையின் உச்சியில் முருகனுக்கும், அடிவாரத்தில் விநாயகருக்கும் பிரதான சன்னதிகள் உள்ளன.
மலை உச்சியில் கிழக்கு திசையில் பத்திரகாளி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.
பத்திரகாளிஅம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அந்த சன்னதியை சுற்றி வந்து வழிபட வசதி உள்ளது.
தோரணமலையை வெகு தூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்த சன்னதிதான் நம் கண்ணுக்குத் தெரியும்.
மலைமீதுள்ள முருகன் கோவில்களில் எல்லாம் முருகனின் பாதம் அமையபெற்று இருக்கும்.
அதேபோல் இங்கும் மலையின் மேல் பாறையில் பாதச் சுவடுகள் செதுக்கப்பட்டு உள்ளன.
முருகன் ஒரு பாதத்தை நேராக பதித்தபோலவும், இன்னொரு காலின் முட்டை பதித்திருப்பது போலவும், வேல் ஊன்றிய குழியும் அங்கே காணப்படுகிறது.
இதனை சுற்றி சன்னதி அமைக்கும் மேற்கொள்ளப்பட்டு ஏதோ காரணத்தால் பணி நிறைவுபெறாமல் நின்றுபோனது.
மலை அடிவாரத்தில் விநாயகர் சன்னதிக்குப் பின்புறம் ஒரு பாறையில் பாலமுருகன் சன்னதி உள்ளது.
அந்த முருகன் சுதையாக வடிவமைக்கப்பட்டு அழகிய வண்ணத்தில் காட்சி தருகிறார்.
அந்த சன்னதிக்கு செல்ல படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதைப்பார்க்கும்போது இதுவும் ஒரு தனி முருகன் மலையோ என்று எண்ணத்தோன்றும்.
மலை ஏற முடியாதவர்கள் இந்த முருகனை வணங்கிவிட்டு வருகிறார்கள்.
விநாயகர் சன்னதிக்கு வடபுறம் இரண்டு சுனைகள் உள்ளன.
அந்த இரண்டு சுனைக்கு அருகேயும் சப்த கன்னியர்கள் சிலை உள்ளது.
இதில் வடபுறம் உள்ள சப்த கன்னியருக்கு தனி சன்னதியும் பிரகாரமும் அமைக்கப்பட்டு உள்ளது.
விநாயகர் சன்னதிக்கு கிழக்கே ஈசான மூலையில் நவக்கிரக சன்னதி உள்ளது.
இங்கும் பக்தர்கள் சுற்றி வந்து வழிபட வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதுதவிர கோவிலின் வடபுறம் சிவன், கிருஷ்ணர், லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் சுதை வடிவில் அருள்பாலிக்கிறார்கள்.
இந்த சிலைகள் கண்ணுக்கு அழகாக வண்ணத்தில் அமைந்துள்ளன.
மலைப்பாதையில் ஓரிடத்தில் சிறிய ஊற்று வடிவில் சுனை ஒன்று ஒன்று இருகிறது.
அந்த இடத்தில் சிறிய சிவலிங்கம் இருக்கிறது.
அதேபோல் மலை ஏறும் பக்தர்கள் களைப்படையாமல் இருக்க வழியில் ஓரிடத்தில் வழிபடுவதற்கு பீடம் அமைத்துள்ளார்கள்.
- தோரண மலைக்கு வடக்கே ஜம்பு நதி உற்பத்தியாகிறது. தென்புறம் ராமநதி உற்பத்தியாகிறது.
- இந்த இரண்டு நதிக்கு இடையே இந்த புண்ணித்தலம் அமைந்துள்ளது.
தோரண மலைக்கு வடக்கே ஜம்பு நதி உற்பத்தியாகிறது. தென்புறம் ராமநதி உற்பத்தியாகிறது.
இந்த இரண்டு நதிக்கு இடையே இந்த புண்ணித்தலம் அமைந்துள்ளது.
இந்த இருநதிகளும் தோரணமலை முருகனுக்கு மாலையாக வந்து கொண்டிருக்கிறது.
மேலும் இந்த நதிகளுக்கு இடையே தோரண மலை மட்டுமின்றி கடையத்திற்கு மேற்கே நித்யகல்யாணி அம்மன், பத்திரகாளி அம்மன், தலைமலை அய்யன், சூட்சமுடையான் போன்ற கோவில்களும் உள்ளன.
ஆனால் இந்த பகுதியில் மக்கள் வாழும் குடியிருப்புகள் அதிகம் கிடையாது.
- கைலாய மலையில் சிவபெருமானின் திருக்கல்யாணம் நடக்கிறது.
- அப்போது அங்கு தேவர்கள் பலரும் கூடியதால் அந்த இடம் தாழ்ந்து தெற்கு உயர்ந்துவிடுகிறது.
தோரணமலைக்கு அகத்தியர் ஏன் வந்தார்?
எப்படி இதன் சிறப்பை அறிந்தார்? என்பதை புராண வரலாறு மூலம் நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
கைலாய மலையில் சிவபெருமானின் திருக்கல்யாணம் நடக்கிறது.
அப்போது அங்கு தேவர்கள் பலரும் கூடியதால் அந்த இடம் தாழ்ந்து தெற்கு உயர்ந்துவிடுகிறது.
இதனை சரி செய்ய சிவபெருமான் அகத்தியர் என்னும் குருமுனியை தென் திசை நோக்கி அனுப்புகிறார்.
அவர் பொதிகை மலை வந்ததும் நிலம் சரியானது.
இங்கேதான் முருகனிடம் இருந்து அகத்தியர் தமிழ் கற்றதாகவும் அதன்பின் தமிழுக்கு இலக்கணம் படைத்ததாவும் கூறப்படுகிறது.
அகத்தியர் தென்பொதிகைக்கு இந்த திருக்குற்றாலம் மற்றும் தோரணமலை வழியாத்தான் வந்திருக்க முடியும்.
அப்படி வரும்போது தோரணமலையின் மூலிகை காட்டையும், சுனைகள் நிறைந்து இருப்பதையும் கண்டு வியந்திருக்க வேண்டும்.
மேலும் பல இடங்களில் பாதுகாப்பாக தங்குவதற்கு பாறை குகைகள் இருப்பதையும் அறிந்தார்.
தமிழுக்கு இலக்கணம் வகுத்தபின்னர், இந்த தோரணமலை பகுதியை தேர்வு செய்து சித்தர்களுக்கு தமிழ், சித்தவைத்தியம் உள்பட பல்வேறு நுணுக்கங்களை கற்றுக் கொடுக்கும் பாடசாலையை அமைத்துள்ளார்.
- பொதுவாக பெரும்பாலான கோவில்கள் கிழக்கு நோக்கியே இருக்கும்.
- அந்த வகையில் இந்த குகை சன்னதியும் கிழக்கு நோக்கிதான் அமைந்துள்ளது.
தோரணமலை முருகன் சன்னதி மனித கட்டுமானத்தில் உருவானது அல்ல.
இயற்கையாக அமைந்த குகைகளே மூலஸ்தானம்.
பெரும் பாறையின் இடையே அமைந்த இந்த குகை போகப்போக சுருங்கிக்கொண்டே செல்கிறது. அதன் முடிவு பற்றி யாரும் அறியார்.
பொதுவாக பெரும்பாலான கோவில்கள் கிழக்கு நோக்கியே இருக்கும்.
அந்த வகையில் இந்த குகை சன்னதியும் கிழக்கு நோக்கிதான் அமைந்துள்ளது.
அந்த சன்னதியில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
காலையில் இந்த முருகனை சூரியன் தன் ஒளிக் கதிர் என்னும் கரங்களால் தொட்டு வழிபடுகிறார்.
கோவில் பாதுகாப்புக்காக குகை சன்னதியின் முகப்பு பகுதியில் செங்கல்கற்களால் சுவர் அமைத்து கதவு போடப்பட்டு உள்ளது.
ஆரம்பத்தில் முருகனை வழிபட செல்லும் பக்தர்களின் வசதிக்காக அந்த சன்னதியின் முன்பு சிமெண்டினால் தளம் அமைத்து உயர்த்தப்பட்டிருந்தது.
அதன்பின் சன்னதி முன்பு சிறிய அளவிலான மண்டபம் கட்டுப்பட்டது.
அந்த மண்டபத்தில் முருகனுக்கு நேர் எதிரே மயில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இக்கிறது.
அந்த மண்டபத்தில் நின்று பக்தர்கள் வழிபடலாம்.
அந்த மண்டபத்தில் பக்தர்கள் நேர்த்திகடனாக வழங்கி மணிகள் பல தொங்கவிடப்பட்டு உள்ளன.
- அருள் நிறைந்த கோவில்கள் என்றால் அந்த காலத்தில் பக்தர்களுக்கு இறைவனே நேரில் காட்சி கொடுத்த ஸ்தலங்களை குறிப்பிடலாம்.
- தற்காலத்தில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுதலின் பேரில் கோவில்கள் சிறப்படைவதையும் குறிப்பிடலாம்.
இந்துக் கோவில்களில் புராண சிறப்பு மிக்க கோவில்கள், பாடல்பெற்ற கோவில்கள், நவீன காலத்தில் அருள் நிறைந்த கோவில்கள் என இருக்கின்றன.
புராண சிறப்பு மிக்க கோவில்கள் என்பது இறைவனின் அவதாரங்கள் நிகழ்ந்த ஊர், அல்லது இறைவன் திருப்பாதங்கள் பதிந்த ஊர், அல்லது இறைவன் திருவிளையாடல்களை நிகழ்த்திய ஊர்களில் அந்த தெய்வத்திற்கான கோவில்கள்தான் புராண சிறப்பு மிக்க கோவில்கள்.
இதனை அடுத்து பாடல்பெற்ற ஸ்தலங்கள் பெருமையாக பேசப்படுகின்றன.
சமயக் குரவர்கள், ஆழ்வார்களால் பாடல்பெற்ற ஸ்தலங்கள் அவை.
அவர்கள் பெரும்பாலும் புராண சிறப்பு மிக்க கோவில்களை பற்றியே அதிகமாக பாடியுள்ளனர்.
அருள் நிறைந்த கோவில்கள் என்றால் அந்த காலத்தில் பக்தர்களுக்கு இறைவனே நேரில் காட்சி கொடுத்த ஸ்தலங்களை குறிப்பிடலாம்.
தற்காலத்தில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுதலின் பேரில் கோவில்கள் சிறப்படைவதையும் குறிப்பிடலாம்.
இங்கே தோரணமலை சித்தர்கள் வழிபட்ட முருகன் இருப்பதாலும், சித்தர்களின் அதிர்வலைகள் மலையில் எதிரொலிப்பதாலும், மூலிகை மணம் மலை நிறைந்திருப்பதாலும் சிறப்பு பெறுகிறது.
அதோடு பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தலமாகவும் விளங்குகிறது.
- தோரணமலை முருகன் கோவில் சித்தர்களோடு தொடர்புடையதாகவும், சித்தர்களின் அதிர்வலைககள் நிறைந்ததாகவும் விளங்குகிறது.
- அதோடு இந்த மலை மூலிகை வனமாகவும் காட்சி அளிக்கிறது. இந்த மலையில் சிறப்பு சில யுகங்கள் தெரியாமல் போயிருந்தது.
தமிழ்க் கடவுள் முருகன் என்றாலே அனைவருக்கும் அறுபடை வீடுதான் நினைவுக்கு வரும்.
இது முருகப்பெருமானின் புராண வரலாற்றில் முக்கிய சம்பவங்கள் நிழந்த இடங்கள் ஆறினை மட்டும் எடுத்து திருமுறுகாற்றுப்படை எடுத்தியம்பி இருக்கிறார்.
ஆனால் மேலும் பல கோவில்கள் முருகப்பெருமானின் வரலாறோடு தொடர்புடையதாக விளங்குகிறது. அது மட்டுமின்றி முருகப் பெருமானின் அருள் நிறைந்த தலங்கள் பல தமிழகத்தில் உள்ளன.
அந்த வகையில் தோரணமலை முருகன் கோவில் சித்தர்களோடு தொடர்புடையதாகவும், சித்தர்களின் அதிர்வலைககள் நிறைந்ததாகவும் விளங்குகிறது.
அதோடு இந்த மலை மூலிகை வனமாகவும் காட்சி அளிக்கிறது. இந்த மலையில் சிறப்பு சில யுகங்கள் தெரியாமல் போயிருந்தது.
தற்போது ஞானத்தின் மூலமாக இதன் சிறப்புகள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதாவது சித்தர்களின் பாடல்களை தேடிப்பிடித்து படித்து பொருள் உணர்ந்தபோது தோரணமலையின் பல சிறப்புகள் தெரியவந்தது.
முருகப்பெருமானின் அருளோடு மூலிகைகள் நிறைந்தும் சுனைகள் சூழ்ந்தும் காணப்படும் இம்மலையில் எப்போதும் சித்தர்களின் அதிர்வலைகள் இருந்து கொண்டே இருப்பதால் பக்தர்கள் இங்கு வந்து வேண்டியவை நிறைவேறுகிறது.
இக்கோவில் தென்காசி அம்பாசமுத்திரம் சாலையில் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.
இவ்வளவு சிறப்புமிக்க இத்தலத்தின் சிறப்புகளை மாலை மலர் வாசகர்களுக்கு அறிய வைப்பதே எங்களின் நோக்கம். எங்களின் நோக்கம் அருள் நிறைந்ததாக இருக்கும்.
- 4-ந்தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது.
- அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழா காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நேற்று இரவு தொடங்கியது.
இன்று பிடாரி அம்மன் உற்சவமும், நாளை விநாயகர் உற்சவமும் நடைபெற உள்ளன. 3 நாட்கள் நடைபெறும் எல்லை தெய்வ வழிபாட்டுக்குப் பிறகு மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் 4-ந்தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது. இதையடுத்து 10 நாள் உற்சவம் ஆரம்பமாகிறது.
6-ம் நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்கள் வீதி உலாவும் அன்று இரவு தங்கத் தேரோட்டமும் நடைபெறும். 7-ம் நாள் உற்சவத்தில் பஞ்ச ரத மகா தேரோட்டம் 10-ந் தேதி நடைபெறும்.
அன்று ஒரே நாளில் 5 தேர்கள் மாட வீதியில் வலம் வரும். ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு அடுத்த தேரின் புறப்பாடு இருக்கும். காலையில் தொடங்கும் மகா தேரோட்டம் நள்ளிரவு வரை நடைபெறும்.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கார்த்திகை தீபத் திருவிழா 13-ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.
மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தைக் காணலாம்.
முன்னதாக அருணாசலேவரர் கோவில் தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளத் தங்க கொடிமரம் முன்பு அர்த்த நாரீஸ்வரர் காட்சி தருவார்.
இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். இதையடுத்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெற்றதும் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறும்.
கார்த்திகை தீப திருவிழாவில் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது.
- சபரிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- மழையில் நனைந்தபடி சென்று சாமி தரிசனம்.
திருவனந்தபுரம்:
"பெஞ்சல்" புயல் காரணமாக தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கேரள மாநிலத்திலும் பல மாவங்டங்களில் பலத்த மழை பெய்கிறது.
நேற்று பல மாவட்டங்களில் கனமழை கொட்டிய நிலையில் இன்று வயநாடு, கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு "ரெட் அலார்ட்" விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் 204 மில்லிமிட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டயம், இடுக்கி, பத்தினம்திட்டா, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.
பத்தினம்திட்டா மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. அதிலும் சபரிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 2-வது நாளாக மழை பெய்தது.
கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அய்யப்ப பக்தர்கள் மலை யேறிச் சென்றார்கள். மேலும் சன்னிதானத்திலும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.
பலத்த மழை காரணமாக பம்பை ஆற்றில் நேற்றே தண்ணீர் வரத்து அதிக ரித்தது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் பம்பை ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் தண்ணீர் வரத்தை கண்காணிக்கும் பணியில் வருவாத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
கேரளாவில் மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.மலைப்பாங்கான பகுதி களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் அந்த பகுதி மக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
- ஆந்திரா முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது.
- திருப்பதிக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது.
திருப்பதி:
பெஞ்ஜல் புயல் காரணமாக ஆந்திரா முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. திருப்பதி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருப்பதியில் மழை மற்றும் குளிர்ந்த காற்று வீசுவதால் பக்தர்கள் மழையில் நனைந்தபடியும் குளிரில் நடுங்கியபடியும் தரிசனம் செய்தனர்.தொடர் மழையின் காரணமாக திருப்பதிக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது.
இதனால் நேற்று 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை முதல் பக்தர்கள் நேரடியாக இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் பக்தர்கள் 1 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். 1 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் திருப்பதி மலையில் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகிறது. மலைப் பாதையில் செல்லும் இடங்களில் அருவி போல தண்ணீர் கொட்டுகிறது.
மேகக் கூட்டங்களால் திருப்பதி மலை ரம்மியமாக காட்சி அளித்தது.
திருப்பதியில் நேற்று 67,496 பேர் தரிசனம் செய்தனர். 19,064 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.33 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- பைரவர் சிவனின் 64 திருஉருவத்தில் ஒருவர் ஆவார்.
- செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம்.
சிவனின் அம்சமான கால பைரவரை எந்தெந்த நாளில், 12 ராசியினர் வழிட்டுவது சிறப்பு, எப்படி வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம்.
பைரவர் சிவனின் 64 திருஉருவத்தில் ஒருவர் ஆவார். சொர்ண கால பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்
பைரவரின் சன்னதி ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்கு பகுதியில் நின்ற கோலத்தில் இருக்கும். அவர் ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தார் என்பதால், ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி தினம் மிகுந்த விசேஷமாக பார்க்கப்படுகிறது.

பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் செவ்வாய்க் கிழமையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷம் ஆகும்.
பைரவர் விரதம் தொடர்ச்சியாக 21 அஷ்டமி திதிகளில் கடைப்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும். இத்தகைய சிறப்பு மிக்க பைரவரை 12 ராசிக்காரர்கள் அதற்குரிய கிழமைகளில் வழிபட்டால், சிறந்த பலனை அடையலாம்.

ஞாயிற்றுக்கிழமை
சிம்ம ராசியினர் ஞாயிற்றுக் கிழமையில் வழிபடுவதால், திருமணம் கைகூடும். இந்த கிழமையில் சிம்ம ராசி உள்ள ஆண்கள், பெண்கள் இருவரும் ராகு காலத்தின் போது அர்ச்சனை, ருத்ராட்ச அபிஷேகம் செய்து வடை மாலை சாற்றி வழிபட்டால், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.
திங்கட்கிழமை
கடக ராசியினர் திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பிட்டு, நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால், கண் சம்பந்தமாள நோய்கள் குணமாகும்.
செவ்வாய்க்கிழமை
மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் செவ்வாய்க் கிழமையில் பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம். செவ்வாய்க் கிழமைகளில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்ப பெறலாம்.
புதன்கிழமை
மிதுனம், கன்னி ராசியினர் புதன் கிழமைகளில் பைரவரை வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம். புதன்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி வாங்கும் யோகம் கிடைக்கும்.

வியாழக்கிழமை
தனுசு, மீன ராசியினர் பைரவரை வியாழக்கிழமைகளில் வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக பைரவருக்கு வியாழக் கிழமையில் விளக்கேற்றி வழிபட்டால் பில்லி சூனியம் விலகும் என்பது ஐதிகம்.
வெள்ளிக்கிழமை
ரிஷபம், துலாம் ராசியினர் வெள்ளிக்கிழமை அன்று கால பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம். வெள்ளிக் கிழமை மாலையில் வில்வ இலையாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும்.
சனிக்கிழமை
மகரம், கும்ப ராசியினர் சனிக்கிழமையன்று பைரவரை வழிபடுவதால் சிறப்பான பலன்களை பெறலாம். சனி பகவானுக்கு பைரவர் தான் குரு ஆவார். இதனால் அஷ்டமசனி, ஏழரை சனி அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லதே நடக்கும் என்பது ஐதிகம். மேலும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச திபம் ஏற்றி வழிபட்டால் காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி நல்லவை வந்து சேரும்.






