என் மலர்
ஆன்மிகம்
- சிவன் கோவில்களில் கார்த்திகை மாத சிறப்பு சோமவார அபிஷேகம்.
- கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-17 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பிரதமை நண்பகல் 1.06 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: கேட்டை மாலை 4.36 மணி வரை பிறகு மூலம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சந்திர தரிசனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்தியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1008 சங்காபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ அராளகே சியம்மன் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேதஸ்ரீ மகாலிங்கசுவாமி கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதரவு
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-பாசம்
கடகம்-நற்செயல்
சிம்மம்-பாராட்டு
கன்னி-வெற்றி
துலாம்- கவனம்
விருச்சிகம்-ஆர்வம்
தனுசு- சுகம்
மகரம்-நலம்
கும்பம்-பயணம்
மீனம்-கீர்த்தி
- கடந்த ஆண்டை விட ரூ.15.89 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.
- அப்பம், அரவணா விற்பனை மூலம் ரூ.32 கோடி வருவாய் வந்துள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது.அன்றைய நாள் முதல் தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை வந்து செல்கின்றனர்.
முதலில் சில நாட்கள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் படிப்படியாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தேவசம் போர்டு செய்துள்ளது.
சீசன் தொடங்கிய 12 நாட்களில் சபரிமலைக்கு 9 லட்சத்து 13 ஆயிரத்து 437 பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3 லட்சத்து 59 ஆயிரத்து 515 அதிகம். இது போல வருவாயும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் ரூ.47.12 கோடி வருவாய் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு ரூ.63.01 கோடியாக வருவாய் உள்ளது. 12 நாட்களில் கடந்த ஆண்டை விட ரூ.15.89 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது. அப்பம், அரவணா விற்பனை மூலம் ரூ.32 கோடி வருவாய் வந்துள்ளது.
- சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-16 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அமாவாசை நண்பகல் 12.19 மணி வரை. பிறகு பிரதமை.
நட்சத்திரம்: அனுஷம் பிற்பகல் 3.23 மணி வரை. பிறகு கேட்டை.
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், காஞ்சீபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் தலங்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப்பெருமாள் ஸ்ரீவிபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. வைத்தீஸ்வரன் கோவில் அலங்காரகருக்கும், ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதரவு
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-பாசம்
கடகம்-நற்செயல்
சிம்மம்-பாராட்டு
கன்னி-வெற்றி
துலாம்- கவனம்
விருச்சிகம்-ஆர்வம்
தனுசு- சுகம்
மகரம்-நலம்
கும்பம்-பயணம்
மீனம்-கீர்த்தி
- இன்று சர்வ அமாவாசை.
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-15 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி காலை 11.03 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம்: விசாகம் நண்பகல் 1.39 மணி வரை பிறகு அனுஷம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர், திலதர்ப்பணப்புரி, திருவெண்காடு கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜப் பெமாள், திருச்சேறை ஸ்ரீ சாரநாதப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்ட பதி திருமஞ்சன அலங்கார சேவை. திருவட்டாறு ஸ்ரீ கேசவப் பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷணழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-ஆதாயம்
மிதுனம்-ஆர்வம்
கடகம்-ஆதரவு
சிம்மம்-நட்பு
கன்னி-புகழ்
துலாம்- கவனம்
விருச்சிகம்-உதவி
தனுசு- பொறுமை
மகரம்-லாபம்
கும்பம்-பொறுப்பு
மீனம்-போட்டி
- அன்று, பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும்.
- மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
கம்பம் என்ற நகரில் வைகானசன் என்ற அரசன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள், கனவில் அவனுடைய பெற்றோர்கள் நரகத்தில் இருப்பது போலவும், அதிலிருந்து தங்களை விடுவிக்குமாறு அவனிடம் அழுது முறையிடுவது போலவும் கண்டான்.
இதற்கு ஏதாவது பரிகாரம் உடனே செய்ய வேண்டும் என வைகானசன் முடிவு செய்தான். காட்டில் கடும் தவம் புரிந்து வந்த முனிபுங்கர் என்ற முனிவரைச் சந்தித்து அவன் ஆலோசனைக் கேட்டான்.
தன்னுடைய ஞானதிருஷ்டியால் உண்மையை அறிந்த முனிவர் வைகானசனிடம், "நீ, உன் மனைவி, குழந்தைகளுடன் ஏகாதசி விரதமிருந்து அதை உன் மூதாதையர்களுக்க அர்ப்பணம் செய்" என்று ஆலோசனை கூறினார்.
அவனும், அவ்வாறே செய்ய, அதன் பலனாக, அவனுடைய பெற்றோர்கள் நரகத்திலிருந்து விடுபட்டு மைந்தனை வாழ்த்தி, சொர்க்கம் புகுந்தனர்.
அதனால்தான், பெற்றோரை இழந்தவர்கள், இவ்விரதத்தை மேற்கொண்டு, அதன் பலனை அவர்களுக்கு அர்ப்பணிக்கின்றனர்.
அமாவாசை யிலிருந்தும், பவுர்ணமியிலிருந்தும் பத்தாவது நாள் தசமி. அதற்கடுத்த நாள் ஏகாதசி. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி.
ஏகாதசி விரதமிருப்பவர்கள், அதற்கு முன் தினமான தசமியன்று, ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ஏகாதசியன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.
ஏகாதசியன்று இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்த பிரசாதங்கள் கிடைத்தால் கூட சாப்பிடக்கூடாது என்று புராணங்கள் கூறுகின்றன.
அதே போல, ஏகாதசி விரதம் இருப்பவரைப் பலவந்தப்படுத்தி உண்ணச் செய்பவன் நரகத்திற்குச் செல்வது உறுதி என்கின்றன.
அதன்பின், ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று, அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை வணங்கி துளசி தீர்த்தம் அருந்தி, சூரிய உதயத்திற்கு முன் பாரணை (விரதத்தை உணவு உட்கொண்டு முடித்து கொள்வது) செய்ய வேண்டும்.
பாரணையில், அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்றவைகளுடன் நல்ல காய்கறிகளையும் சேர்த்து, உணவு சமைக்க வேண்டும். பாரணையை முடித்த பின், அன்று முழுவதும் உறங்கக் கூடாது.
ஏகாதசியன்று, எக்காரணத்தைக் கொண்டும், துளசி இலையை பறிக்கக்கூடாது.
எனவே, தேவையான துளசி இலையை, முன்தினமே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விரதத்தை மேற்கொண்டு தேவர்களும், முனிவர்களும் திருமாலின் அருளைப் பெற்றனர். சகல சௌபாக்கியங்களோடு உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.
சிவபெருமானே பார்வதி தேவிக்கு இவ்விரதத்தின் மகிமை பற்றி கூறினார் எனில், கூறுவதற்கு வேறு சிறப்பு இல்லை.
கிருஷ்ண பட்சத்தில் வரும் உற்பத்தி ஏகாதசியைப் போல, சுக்ல பட்சத்தில் வரும் மற்றொரு ஏகாதசி, "மோட்ச ஏகாதசி" என்றும் அழைப்பார்கள்.
வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை.
திருமால் ஆலயங்களிலும் வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் எனப்படும் கதவுகள் திறக்கப்படும்.
அதன் வழியாக ஆலயத்திற்குள் சென்று திருமாலை வழிபட வேண்டும்.
திருமாலை வேண்டி இருக்கும் இவ்விரதத்தன்று, காலையில் எழுந்து நீராடிவிட்டு, திருமால் கோவிலுக்கோ அல்லது வீட்டிலேயோ திருமாலின் படத்தின் முன் அமர்ந்தோ, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வணங்க வேண்டும்.
பின், ஏகாதசியன்று விரதமிருந்து, துவாதசியில் பாரணை செய்ய வேண்டும்.
அன்று, பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும்.
மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
- அவர்களைக் காப்பதற்காக, இந்திரன் மற்றும் தேவாதி தேவர்கள் சூழ, முரனுடன் திருமால் போரிட்டார்.
- தனி ஒருவனாக நின்று அனைவரையும் சிதறி ஓடச் செய்த முரன், திருமாலுடன் கடுமையாகப் போரிட்டான்.
"முரன்" என்றொரு அசுரன் இருந்தான். தான் பெற்ற தவ வலிமையால் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான்.
அதோடு, எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொள்ளும் ஆசையில், இந்திரலோகத்தின் மீது படையெடுத்தான்.
முரனை எதிர்கொள்ள முடியாத இந்திரன், சிவபெருமானிடம் சரண் அடைந்தார்.
அவரோ திருமாலிடம் செல்லச் சொன்னார். இந்திரன், தேவர்களுடனும், முனிவர்களுடனும் திருமாலிடம் சென்று சரணடைந்தார்.
அவர்களைக் காப்பதற்காக, இந்திரன் மற்றும் தேவாதி தேவர்கள் சூழ, முரனுடன் திருமால் போரிட்டார்.
தனி ஒருவனாக நின்று அனைவரையும் சிதறி ஓடச் செய்த முரன், திருமாலுடன் கடுமையாகப் போரிட்டான்.
பல ஆண்டுகள் கடுமையாகப் போர் நடந்த போதிலும் முரனை ஒன்றும் செய்ய முடியவில்லை.
சங்கு சக்கரம் முதலான ஐந்து வகை ஆயுதங்களைப் பிரயோகித்தும் முரனை அழிக்க முடியவில்லை.
பல ஆண்டுகள் போர் புரிந்ததால் ஏற்பட்ட களைப்பால், திருமால் இமயமலையில் உள்ள பத்ரிகாசிரமம் சென்று அங்கு அடர்ந்த மரங்களுக்கிடையே இருந்த சிம்ஹாஹி என்னும் குகையில் பள்ளி கொண்டார்.
அவரைப் பின் தொடர்ந்து வந்த முரன், குகைக்குள் உறங்கிக் கொண்டிருந்த திருமாலைக் கொல்வதற்காக, தன் உடைவாளை உருவினான்.
அப்போது, திருமாலின் உடலிலிருந்து தர்மதேவதை கன்னியாக வெளிப்பட்டு அவனை எதிர்த்து நின்றாள்.
முரன் ஆயுதங்களை எடுத்துப் போருக்குத் தயாராவதற்குள், அவனைத் தன்னுடைய பார்வையால் எரித்துச் சாம்பலாக்கினாள். பிறகு தர்மதேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.
தூக்கம் கலைந்து எழுந்த திருமால், தர்ம தேவதையை ஆசீர்வதித்து, அவளுக்கு "ஏகாதசி" என்று பெயரிட்டார். மார்கழி மாதம், கிருஷ்ண பட்சத்தில் (அமாவாசையில்) ஒன்றும், சுக்ல பட்சத்தில் (பவுர்ணமியில்) ஒன்றுமாக இரண்டு ஏகாதசிகள் வரும் என்றும் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு "உற்பத்தி ஏகாதசி" என்று அருளினார்.
இந்த ஏகாதசி விரதமானது, சகல பாவங்களையும் போக்கும் வல்லமை கொண்டது. அஸ்வமேத யாகம் செய்தால் கிடைக்கும் பலன்களையும் தரக் கூடியது.
- மகா விஷ்ணுவுக்கு வேத விதிப்படி பூஜை செய்ய வேண்டும். அன்று சக்தியிருப்பின் நிர்ஜலமாக இருப்பது உத்தமம்.
- பழங்களை நிவேதனம் செய்து பூஜிப்பது மத்யமம். பற்றில்லாத பலகாரங்களை ஒரு வேளை பூஜிப்பது அதமம்.
ஏகாதசியன்று அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்ய வேண்டும்.
நித்ய கர்மங்களை விதிப்படி அனுஷ்டிக்க வேண்டும். ஏகாதசியன்று துளசி இலை பறிக்கலாகாது.
ஆதலால் முதல் நாளே பூஜிப்பதற்கு அதை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மகா விஷ்ணுவுக்கு வேத விதிப்படி பூஜை செய்ய வேண்டும். அன்று சக்தியிருப்பின் நிர்ஜலமாக இருப்பது உத்தமம்.
பழங்களை நிவேதனம் செய்து பூஜிப்பது மத்யமம். பற்றில்லாத பலகாரங்களை ஒரு வேளை பூஜிப்பது அதமம்.
ஒரு வேளை அரிசியை வறுத்து அன்னமாக உட்கொண்டு இரவு உபவாசமிருப்பது அகமாதமம்.
சக்தியில்லாவர் கடைசி வழியை பின்பற்றலாம். அன்று எவருக்கும் அன்னதானம் செய்யக்கூடாது. பகலில் தூங்கக்கூடாது.
இரவில் பகவத் பஜனை அல்லது புண்ய கதாச்ரவணம் முதலியவைகளால் கண்விழிக்க வேண்டும்.
கோபம், பரநிந்தை, க்ரூரமான வார்த்தை, கலஹம், தாம்பூலம், சந்தனம், மாலை, கண்ணாடி பார்த்தல், ஸ்த்ரீ ஸங்கம் முதலியவைகளை விட வேண்டும்.
எப்போதும் அவர் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.
துவாதசியன்று காலைக்கடனை முடித்து பகவத் பூஜை செய்ய வேண்டும். ஓர் அதிதிக்கு அன்னமளித்து நாம் பூஜிக்க வேண்டும்.
அன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக் காய் இவைகளை அவசியம் பூஜிக்க வேண்டும்.
இங்ஙனம் ஓர் பக்ஷத்திற் கோர்முறை ஏகாதசி உபவாசமிருந்தால் தேக ஆரோக்கியம் உண்டாகும்.
பாபம் அகலும், சந்ததி, செல்வம் பெருகும், சுவர்க்கம் கிட்டும். மனம் நிர்மலமாகும். ஞானம் சுரக்கும். மோட்ச நந்தம் பெறுவர்.
ஏகாதசி விரதம் அன்று செப்புக் கிண்ணியில் ஜலம் வைத்து அதில் துளசி தளம் போட்டு வைத்து நீர் மட்டும் பருகுவார்கள்.
ஒரு சிலர் "நிர்ஜலோபவாசம்" அதாவது ஜலமின்றி உமி நீர்க் கூட பருகாமல் இருப்பதுண்டு. ஏகாதசி விரதம் எல்லோருக்கும், முக்கியமாக மத்வமதஸ்தர்கள் வெகு சிறப்பாக அனுஷ்டானம் செய்வார்.
Ôஏகாதசி மரணம், துவாதசி தகனம்Õ என்ற பழமொழிப்படி ஏகாதசி திதியில் ஒருவன் காலமாவதும், அடுத்த திதியாகிய துவாதசியில் உடல் தகனம் செய்வதும் வெகு புண் ணிய பலமாக கூறுகிறது.
ஏகாதசி உபவாசமிருந்து, துவாதசி அதிகாலையில் நீராடி இறை வனைப் பூஜித்து ஒருவருக்கு வஸ்திரம், அன்னதானம், தாம்பூலம், தட்சிணை வழங்குவது மிகச்சிறந்த பலனை அளிக்கிறது.
- ரீவில்லிப்புத்தூர் கோவிலில், மார்கழியின் பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறப்பிட வம்சாவழியினரான வேதபிரான்பட்டர் வீட்டிற்கு செல்வாள்.
- அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில், மார்கழியின் பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறப்பிட வம்சாவழியினரான வேதபிரான்பட்டர் வீட்டிற்கு செல்வாள்.
அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.
இதனை, "பச்சைப்பரத்தல்" என்பர்.
கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்யத்தை ஆண்டாளுக்கு படைக்கின்றனர்.
திருமணம் முடிக்கும் பெண்கள் இதை சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும்.
ஆண்டாளுக்கு பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன் அவளுக்கும் இவ்வாறு கொடுத்தனர் அக்கால மக்கள்.
அதன் நினைவாக இன்றும் இவ்வழக்கம் தொடர்கிறது.
- வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது.
- இண்டர்நெட்டிலும் பரமபதம் இருப்பது நம் சம்பிரதாயத்தின் தனிச்சிறப்பு.
வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது.
இண்டர்நெட்டிலும் பரமபதம் இருப்பது நம் சம்பிரதாயத்தின் தனிச்சிறப்பு.
விளையாட்டின் ஏணி வழியே ஏறிச்சென்றால் சொர்க்கம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் அடிப்பகுதிக்கே வரநேரிடும்.
ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம்.
வைகுண்ட ஏகாதசியன்று இரவு ழுமுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள் விடியும் வரை விளையாடுவர்.
பாவம் செய்தவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்தால் சொர்க்கமாகிய திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்பதையும் வலியுறுத்தும் ஆன்மிக கேம் இது!
ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. அந்த நாளில் நாமும் நம்முடைய கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆக இந்தப் பதினொன்றையும் பகவானோடு ஒன்றச் செய்ய வேண்டும்.
இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பது தான் இந்த ஏகாதசி விரதத்தின் உட்பொருள்.
அந்த உட்பொருளின் வெளிவடி வாக நடைபெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும்!
சரணாகதி மனோபாவத்தோடு, ஏகாதசி விரதத்தை மேற்கொள்வோம். பூஜைகளைச் செய்வோம்.
அந்த பரந்தாமன் நம் எண்ணங்கள் அனைத்தையும் நலமுடன் நிறைவேற்றுவான். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
- கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.
- குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை அழைத்துச்சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப் பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்து வரும் நிலையில், தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சபரி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்காக சபரி மலையில் இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாக, மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செயது வருகின்றனர்.
வாரத்தின் இறுதி நாட்க ளான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மற்ற நாட்களில் அதிகாலை நடை திறக்கப்படும் நேரத்தில் மட்டும் சில மணி நேரம் பக்தர்கள் கூட்டம் இருக்கிறது. மற்ற நேரங்களில் கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.
இந்தநிலையில் சபரிமலைக்கு வரும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனத்துக்கு வரிசையில் காத்து நிற்பதை தவிர்க்கும் விதமாக, அவர்களுக்கு சிறப்பு வாயில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அவர்கள் பதினெட்டாம்படி ஏறிய பிறகு சன்னதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வாயில் வழியாக முதல் வரிசையை அடைந்து சாமி தரிசனம் செய்யலாம்.
குழந்தைகள் தங்களின் பெற்றோரில் ஒருவரை தங்களுடன் இந்த வழியில் அழைத்துச்சென்று சாமி தரிசனம் செய்யலாம். இந்த சிறப்பு வாயிலை பயன்படுத்தி இன்று ஏராளமான பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்தார்கள்.
- பணரீதியான பிரச்சனைகள் தீர 8 சனிக்கிழமை வழிபட வேண்டும்.
- ஜீவசமாதி வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிட கூடாது.
* தங்களது நியாயமான பிரச்சனைகள் தீர திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் இவ்வாறு 8 திங்கட்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்ய வேண்டும்.
* குலதெய்வம் தெரியாதவர்கள், குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளானவர்கள், குலதெய்வ வழிபாட்டை மறந்தவர்கள், குல தெய்வத்தை அறியாமல் இருந்து, அதனால் கஷ்டப்படுபவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும். இப்படி 8 செவ்வாய்க் கிழமைகளுக்கு தொடர்ந்து ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.

* வேலைக்குப் போய்க்கொண்டிருப்பவர்கள் மற்றும்சுயதொழில் செய்பவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய விரும்புவோர், புதன் கிழமைகளில் மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 8 புதன் கிழமைகளுக்குச் செய்து வர, நல்ல பொருளாதாரத் தன்னிறைவை அடைய முடியும்.
* தனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தகுந்த குருவைத் தேடுபவர்கள், வியாழக்கிழமைகளில் மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி 8 வியாழக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது.
* பணரீதியான பிரச்சனைகள் இருப்போர், பண நெருக்கடியில் இருப்பவர்கள் அதிலிருந்து மீள வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது.
* பண நெருக்கடி, தொழில் மந்தநிலை, குடும்பப் பிரச்சனைகள் என எல்லாவிதமான பிரச்சனைகளும் தீர விரும்புவோர் சனிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்துவர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 8 சனிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்துவிட்டாலே போதுமானது.
* நீண்டகாலமாக வழக்குடன் போராடிக்கொண்டிருப்பவர்கள் ஞாயிறு மாலை 5 முதல் 7 மணிக்குள் மேற்கூறியவாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 8 ஞாயிற்றுக் கிழமைகளுக்கு வழிபாடு செய்தால் போதுமானது.
* இந்த ஜீவசமாதி வழிபாடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தியாக வேண்டும். இது ரொம்ப முக்கியம். முட்டை, முட்டை கலந்த கேக், பரோட்டா என மறைமுக அசைவ உணவுகளையும் தவிர்த்துவிட்டே இந்த ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும்.

* யார் எந்த ஊரில் இருக்கிறார்களோ, அந்த ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் இந்த வழிபாடுகளை முடிக்கலாம்.
* துக்கம், பிறப்பு முதலியவற்றால் தொடர்ந்து 8 வாரங்கள் செய்ய முடியாவிட்டாலும், விட்டு விட்டு செய்தாலும் போதுமானது. அதே சமயம் 8 வாரத்துக்கு மேல் இந்த ஜீவ சமாதி வழிபாடுகளை பின்பற்றக் கூடாது.
* நாம் நமது வீட்டில் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால், பத்துமுறை ஜபித்தமைக்கான பலன்கள் கிடைக்கும்.
- பஞ்சவனேசுவர ஆலயங்களில் இதுவும் ஒன்று.
- பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.
கோவில் தோற்றம்

திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரு பாடல்பெற்ற தலங்கள் உண்டு. ஒன்று சென்னை திருவள்ளூர் அருகிலும், மற்றொன்று சீர்காழிக்கு அருகிலும் உள்ளது. எனவே திருவள்ளூர் அருகில் இருப்பதை 'வடதிருமுல்லைவாயில்' என்றும், சீர்காழி அருகில் உள்ளதை 'தென்திருமுல்லைவாயில்' என்றும் குறிப்பிடுவர்.
தேவாரப் பாடல் பெற்ற 276 தலங்களில் தென்திருமுல்லைவாயில் திருத்தலமானது, சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 7-வது தலமாகும். இத்தல இறைவன் 'முல்லைவனநாதர்', இறைவி 'அணிகொண்ட கோதையம்மை' என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆலயத்தின் தல விருட்சமாக முல்லைக்கொடி உள்ளது. இங்கே பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.

தலவரலாறு
கரிகால்சோழனின் பாட்டன் முதலாம் கிள்ளி வளவன், சரும நோயால் மிகவும் வேதனையுற்றான். நோய் தீர அரண்மனை வைத்தியர்கள் தீர்த்த யாத்திரையுடன் கூடிய இறை வழிபாட்டை மேற்கொள்ளுமாறு ஆலோசனை கூறினர்.
அதன்படி இவ்வாலயத்திற்கு கடல் நீராடுவதற்காக மன்னன் வந்தான். அக்காலகட்டத்தில் இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகள் நிறைந்திருந்தது. மன்னனும் பரிவாரங்களும் வந்த குதிரையின் குளம்பில் முல்லை கொடிகள் சுற்றிக்கொண்டன. இதனால் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தும்படி மன்னன் உத்தரவிட்டான்.
இதையடுத்து காவலர்கள் அந்தப் பணியில் ஈடுபட்டனர். மன்னனும் தன் வாளால் சில முல்லைக்கொடிகளை வெட்டினான். அப்போது ஓரிடத்தில் வாள் பட்டு, ரத்தம் பெருக்கெடுத்தது. இதனால் மன்னனும், மற்றவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
ரத்தம் வந்த இடத்தில் முல்லைக் கொடிகளை அகற்றி பார்த்தபோது, அங்கே சிவலிங்கம் ஒன்று இருப்பதையும், அதில் இருந்து ரத்தம் கசிவதையும் கண்டு மன்னன் அதிர்ந்தான். ஏற்கனவே சரும நோயால் அவதிப்படும் நிலையில், சிவலிங்கத்தை வேறு வாளால் வெட்டி விட்டோமே என்று மன்னன் கலக்கம் கொண்டான்.
இதற்கு பரிகாரமாக தன்னைத் தானே வாளால் வெட்டிக்கொள்ள முயன்றான், மன்னன். அப்போது சிவபெருமான் ரிஷப வாகனத்தில் அவனுக்கு காட்சி கொடுத்து அருளினார். மன்னனின் சரும நோயும் அகன்றது.
இதையடுத்து அவ்விடத்தில் சுயம்பு லிங்கத்தைக் கொண்டே ஒரு ஆலயத்தை அமைக்க மன்னன் முடிவெடுத்து, அந்தப் பணியை சிறப்பாக முடித்தான். அதுவே சீர்காழி அருகே உள்ள தென்திருமுல்லைவாயில் முல்லைவனநாதர் திருக்கோவிலாகும்.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயத்தில், பல்வேறு மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தைப் பற்றி திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தேவாரம் பாடியிருக்கிறார்கள்.

ஆலய அமைப்பு
இந்த கோவில் முகப்பில் ஏற்கனவே இருந்த கல்ஹாரத்தின் மீது, சமீப குடமுழுக்கின்போது கட்டப்பட்ட ஒரு சிறிய நிலை கோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்தில் சிவசக்தி சமேதராய் ரிஷபாரூடரும், அவரின் இருபுறங்களிலும் விநாயகர் மற்றும் வள்ளி - தெய்வானை உடனாய முருகப்பெருமானும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.
ஆலயத்திற்குள் நுழைய கொடி மரத்து மண்டபம் உள்ளது. மிகப்பெரிய அந்த மண்டபத்துள் பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தியம்பெருமான் இடம்பெற்றுள்ளனர். அதனை அடுத்து மகாமண்டபம், அதற்கு செல்லும் வழியின் அருகில் இருபுறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர்.
மகாமண்டபத்தில் இருந்து அர்த்த மண்டபம் செல்லும் வழியில் துவாரபாலகர்கள் காவல்புரிய, அர்த்த மண்டபத்தை அடுத்த கருவறையில் மிகப்பெரிய திருமேனியினராய் முல்லைவன நாதர் சுயம்புலிங்கமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவரின் மீது வாள் பட்ட அடையாளம் காணப்படுகிறது.
சுவாமி சன்னிதிக்கு வடபுறத்தில் தனி சன்னிதியில், அணிகொண்ட கோதை அம்மன் அருள்கிறார். சுவாமியின் கருவறை கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரரும், அம்பாள் கருவறை கோட்டத்தில் துர்க்கா பரமேஸ்வரியும் உள்ளனர்.
பிரகாரச் சுற்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள எட்டு சன்னிதிகளில் முறையே விநாயகர், நால்வர், அப்பூதி அடிகள், பெருமாள், மதுரபாஷினி, தல வரலாற்று சிற்பம், வள்ளி தெய்வானை உடனாய முருகப்பெருமான், கஜலட்சுமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பிரகார வடக்குச்சுற்றில் வசந்த மண்டபமும், கிணறும், ஈசானிய திக்கில் நவக்கிரகங்கள் மற்றும் பைரவரும், ஆலய வாசலின் உட்புறம் சூரியன் மற்றும் சந்திரனும் உள்ளனர்.
இக்கோவிலின் கிணற்றில் கங்கை ஊற்றெடுப்பதாக நம்பப்படுகிறது. பஞ்சவனேசுவர ஆலயங்களில் இதுவும் ஒன்று. சிதம்பரம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, பல்லவனேசுவரம் ஆகியவை மற்ற நான்கு தலங்கள் ஆகும்.
சூரிய கிரகண நாள், அமாவாசை ஆகிய தினங்களில் இத்தல இறைவனை, முன்னோர்களை நினைத்து மோட்ச தீபம் ஏற்றி பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்து வழிபட்டால், செல்வச் செழிப்பும், நிம்மதியும் வந்துசேரும். அதோடு முக்தியும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.
சிவாலயங்களுக்கு உரிய அனைத்து வார, பட்ச, மாதாந்திர பூஜைகளும் இங்கு நடைபெறுகின்றன. அதோடு சித்திரை புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, மார்கழி நடராஜர் வழிபாடு, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நிகழ்வுகளும் விமரிசையாக நடக்கின்றன.
இரண்டு காலை பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயமானது, தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில், கிழக்கு கடற்கரை ஓரத்தில் தென்திருமுல்லைவாயில் இருக்கிறது.






