என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இருமுடி கட்டி முடித்ததும் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் வழங்கலாம்.
    • ‘சாமியே சரணம்’ என்றபடி தேங்காயில் நெய்யை நிரப்ப வேண்டும்.

    * சபரிமலையையும், அங்கே வீற்றிருக்கும் ஐயப்பனையும் நினைத்தால், உடனே நம் நினைவுக்கு வரும் முதல் விஷயம் இருமுடி.

    * ஐயப்பன் வழிபாட்டில் இருமுடி மிகவும் புனிதமானது. தனது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கி மனம் உருகி ஐயப்பனை வேண்டும் பக்தர்கள், ஐயப்பனின் திருமேனி அபிஷேகத்துக்குரிய நெய்யையும், பூஜை பொருட்களையும் கட்டி சுமந்து செல்லும் பையைத்தான் 'இருமுடி' என்கிறோம்.


    * இருமுடியை கோவிலில் வைத்தும் கட்டலாம், வீடுகளில் வைத்தும் கட்டலாம். வீடுகளில் வைத்து இருமுடி கட்டும் போது, அந்த ஐயப்பனே அங்கு வாசம் செய்வதாக ஐதீகம்.

    * இருமுடி கட்டும் நாளில் வீட்டை சுத்தப்படுத்தி ஐயப்பன் படத்தை மலர்களால் அலங்காரம் செய்து, படத்தின் முன்பு நெய் விளக்கேற்றி வைக்க வேண்டும்.

    * இருமுடி கட்டுவதற்காக வரும் குருசாமியை வாசலில் பாதபூஜை செய்து வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும். குருசாமி வந்ததும் பூஜைகளை தொடங்குவார். அப்போது ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடல்களை பாடுவார்கள்.


    * இருமுடி கட்டிக்கொள்ளும் ஐயப்ப பக்தர், குருசாமியின் அருகில் ஐயப்பன் படத்திற்கு முன்பு அமர்ந்து இருக்க வேண்டும். தேங்காயில் நெய் நிரப்பத் தொடங்கும் போது, நமது பிரார்த்தனைகளோடு 'சாமியே சரணம்' என்றபடி தேங்காயில் நெய்யை நிரப்ப வேண்டும். வீட்டில் யாராவது நெய் நிரப்ப விரும்பினால் அவர்களும் தேங்காயில் நெய் நிரப்பலாம்.

    * நெய் நிறைந்ததும் அதை மூடி சந்தனம், குங்குமம் பூசி ஒரு சிறிய பையில் வைப்பார்கள். அதற்குள் காணிக்கை பணமும், அன்னதானத்துக்கு சிறிதளவு அரிசியும் வைக்கப்பட்டு இருக்கும். மற்றொரு சிறு பையில் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.

    அதில் மஞ்சள் பொடி, பன்னீர், தேன், சந்தன வில்லைகள், குங்குமம், விபூதி, ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, முந்திரி, கற்கண்டு, அச்சு வெல்லம், அவல், பொரி, கடலை, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம்பழம், வெற்றிலை - பாக்கு, பாசிப்பருப்பு, வளையல், கண்ணாடி, சீப்பு, ரவிக்கை துணி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

    * முன் முடியில் (இருமுடியில் முன்பக்கம் இருக்கும் கட்டு) நெய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வைத்து கட்டப்படும். பின் முடிக்குள் சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பும் போது பதினெட்டாம் படி அருகில் உடைக்கவும், வீட்டின் முன்பு உடைக்கவும் இரண்டு தேங்காய்களும் மற்றும் மாலை அணிந்தவருக்கு தேவையான பொருட்களும் வைத்து கட்டப்பட்டிருக்கும்.

    * வசதி வாய்ப்புகள் இல்லாத முன் காலத்தில், இருமுடியின் பின்முடியில் சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் வழியில் சாப்பிடுவதற்கு தேவையான உணவு பொருட்களையும் சுமந்து சென்றிருக்கிறார்கள்.


    * இருமுடி கட்டி முடித்ததும் வீட்டில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் வழங்கலாம். இருமுடி கட்டை குருசாமி தூக்கி நமது தலையில் வைக்கும் போது அவரது பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்.


    * தலையில் இருமுடியை சுமந்ததும் வீட்டு வாசலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பி பார்க்காமல் தலையில் இருமுடி கட்டும், மனதில் ஐயப்பன் நினைவுமாக புனித யாத்திரையைத் தொடங்க வேண்டும்.

    * இதனால் ஆண்டு தோறும் வீடுகளில் சகல ஐஸ்வரியமும் அதிகரித்து ஆண்டவனின் அருளும் நிறைகிறது.

    • இன்று மாத சிவராத்திரி.
    • திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-14 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திரயோதசி காலை 9.23 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

    நட்சத்திரம்: சுவாதி காலை 11.32 மணி வரை. பிறகு விசாகம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சுபகூர்த்த தினம். மாத சிவராத்திரி. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். திருமாவிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுபம்

    ரிஷபம்-நற்செய்தி

    மிதுனம்-சுகம்

    கடகம்-நன்மை

    சிம்மம்-செலவு

    கன்னி-மேன்மை

    துலாம்- சாந்தம்

    விருச்சிகம்-ஆதாயம்

    தனுசு- சாதனை

    மகரம்-புகழ்

    கும்பம்-பக்தி

    மீனம்-உற்சாகம்

    * மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் 12ம் நாள் தைப்பூசத்தன்று தெப்பத் திருவிழா நடைபெறும். சொக்கன், மீனாட்சியுடன் எழுந்தருளி உலாவருவார்கள். இக்குளம் தோண்டும்போது கிடைத்த மிகப்பெரிய கணபதிதான் முக்குறுணிப் பிள்ளையார்.

    * தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூச நட்சத்திரம் சேரும் நாளே தைப்பூசத் திருநாளாகும். உலகில் முதலில் நீரும். அதிலிருந்து உயிர்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. இவை நடை பெற்ற நாள்தான் தைப்பூச நாள். இத்திருநாள் முருகன் அருளும் எல்லா திருத்தலங்களிலும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தைப்பூசத்தன்றுதான் வள்ளியை முருகன் மணம் புரிந்து கொண்டார்.

    * ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று சிதம்பரம் நடராஜர் ஆலய சிவகங்கை தீர்த்தக்கரையில் தீர்த்தவாரியும், நடன தரிசனமும் சிறப்பாக நடைபெறுகின்றன. இவ்விழா தில்லையில் பத்து நாட்கள் நடைபெறும். இந்த தாண்டவம் காண வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமுனி ஆகிய மூன்று முனிவர்களின் சிலைகளை ஒரே பீடத்தில் எழுந்தருளச் செய்து சிவகங்கை கரைக்கு கொண்டு வருவர்.

    * திருப்பைஞ்சீலி சிவாலய குடைவரை சந்நிதியில் சிவனும் அம்பாளும் முருகருடன் காட்சி தருகின்றனர். அவர்கள் காலடியின் கீழ் குழந்தை வடிவ எமனைக் காணலாம். இங்கு தைப்பூசத்தன்று சிவன் எமனுக்கு பதவி அருளும் விழா நடைபெறும்.

    * பாபநாசம் பாபநாகர் ஆலயத்தில் தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்பிடை நின்று ஆடிக்காட்டியதால், அன்றைய தினம் நந்திக்கு சந்தனக் காப்பிடுவார்கள்.

    * தைப்பூசத்தன்று வடலூரில் ஜோதி தரிசனம் காணலாம். இதை சத்ய ஞான சபையில் மாதந்தோறும் பூசத்தன்று 6 திரைகளை விலக்கி பாதி தரிசனம் காண வைப்பர். ஆனால் தைப்பூசத்தன்று மட்டும் 7 திரைகளை முழுவதும் விலக்கி முழுமையான ஜோதி தரிசனத்தை கண்ணாடியில் காட்டுவார்கள். 1871&ல் பிரஜோபதி வருடத்தில் வள்ளலார் ராமலிங்க அடிகள் முதல் வழிபாட்டைத் தொடங்கி வைத்தார். அது இன்றளவும் நடைபெறுகிறது. அவர் ஏற்றிய அடுப்பு அணையா அடுப்பாக பக்தர்களுக்கு இடைவிடாது அன்னதானமளித்து வருகிறது.

    * கதித்தமலை முருகன் கோவிலில் தைப்பூசம் கழித்த 4&ம் நாளன்று காலை மலைமீது தேரோட்டம் நடைபெறும். இவ்வாலயம் மலைமீது அமைந்துள்ளதால் இங்கு தென்கிழக்கே ஒரு பாம்புப் புற்று பெரிதாக உள்ளது. இது ஒரு அதிசயப்புற்று. உத்தராயன புண்ணிய காலமாகிய தை முதல் ஆனி வரை வளர்ந்தும், தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி முதல் மார்கழி வரை தேய்ந்தும் வருவது சிறப்பாகும்.

    * செல்வம் வேண்டுபவர்கள் வியாழனன்று வரும் பூசத்துன்று மகாலட்சுமி பூஜையை ஆரம்பிப்பார்கள். தைப்பூசத்தன்று சிவன், முருகன், மகாலட்சுமி கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவதைக் காணலாம்.

    • தமிழகத்தில் உள்ள பெரிய சிவாலயங்களில் தைப்பூச திருவிழா தீர்த்தவாரியுடன் நடைபெறுகிறது.
    • இத்தலத்தில் உள்ள காவிரி படித்துறையில் (பூசத் தீர்த்தம்) தைப்பூச நீராடல் மேற்கொள்வோர் பாப விமோசனம் பெறலாம்.

    தமிழகத்தில் உள்ள பெரிய சிவாலயங்களில் தைப்பூச திருவிழா தீர்த்தவாரியுடன் நடைபெறுகிறது.

    அதிலும் மத்யார்ஜுனம் எனப் போற்றப்படுவதும், சைவத்தால் மேலோங்கித் திகழ்ந்து மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றிலும் சிறப்படைந்து விளங்குவதுமான திருவிடைமருதூரில் ஸ்ரீமகாலிங்க சுவாமி திருக்கோவிலில் பெருந்திருவிழாவாக நடைபெறுவது வழக்கம்.

    புராண, வரலாற்றுப் பெருமைகளுடன் இன்னும் பல சிறப்புகளையும் கொண்ட இவ்வாலயம் திருவாவடுதுறை ஆதீன நிர்வாகத்தில் சீருடனும், சிறப்புடனும் விளங்குகிறது. காவிரி தென்கரையில் அமைந்துள்ள 30&வது தலமாகும்.

    கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

    புராணத்தின்படி இத்தலத்தில் தவமிருந்து விபண்டக, முனிவருக்கு சிவபெருமான் காட்சி யளித்தார். அப்போது விபண்டக முனிவர் ஆண்டு தோறும் தைப்பூச நாளன்று காவிரிக்கரையில் உள்ள கல்யாண தீர்த் தத்தில் நீராடியவர்கள் நோய் நொடி, பாவங்கள் நீங்கி புண்ணியம் பெற்று வாழ வேண்டும் என்று சிவனிடம் வேண்டினார். இறைவனும், 'அவ் வாறே ஆகுக' என்று வரம் அருளினார்.

    ஒருமுறை தேவ விரதன் என்ற கள்வன் திருவாபரணங்களைக் களவாட முயன்ற பாவத்தால், நோய் வாய்ப்பட்டு மாண்டான். மறுபிறவியில், அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து, பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணிய வானின் கால் பட்டு, முக்தியடைந்தான் என்றும், இப்புண்ணிய நாளில் நீராடிய அயோத்தி மன்னன் ஒருவனும், சித்ரகீர்த்தி என்ற பாண்டிய மன்னனும் புத்திரப்பேறு பெற்றனர் என்றும் வரலாறுகள் கூறுகின்றன.

    மேலும், இத்தலத்தில் உள்ள காவிரி படித்துறையில் (பூசத் தீர்த்தம்) தைப்பூச நீராடல் மேற்கொள்வோர் பாப விமோசனம் பெறலாம்.

    • தேவாரம், பெரிய புராணம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 36 வது ஸ்தலமாகும்.
    • இந்த கோவில் மதுரை ஆதீனத்திற்கு உட்பட்டதாக திகழ்கிறது. இது நவக்கிரக ஸ்தலங்களில் சுக்கிரனுடைய ஸ்தலமாக போற்றப்படுகிறது.

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே கும்ப கோணத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில்.

    தேவாரம், பெரிய புராணம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 36 வது ஸ்தலமாகும்.

    இந்த கோவில் மதுரை ஆதீனத்திற்கு உட்பட்டதாக திகழ்கிறது. இது நவக்கிரக ஸ்தலங்களில் சுக்கிரனுடைய ஸ்தலமாக போற்றப்படுகிறது.

    மூலவராக அக்னீஸ்வர ரும், தாயாராக கற்பகாம் பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். தல விருட்சமாக புரச மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளது.

    சிவபெருமான் பராசர முனிவருக்கு முக்தி தாண் டவம் ஆடி நீங்கியருளியத் தலம் பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தத் தலம் , அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்த தலம், சந்திரனின் சாபம் நீங்கியத் தலமாகவும் உள்ளது.

    அது மட்டுமின்றி கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி நீக்கிய தலம், கலிக்காமருக்கு திருமணம் நடந்தத் தலம், மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டத் தலம்.

    மேலும் பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்தர் அவதார தலம், வடக்கு நோக்கி ஓடும் காவிரிக் கரையில் அமைந்த தலம் என பல புராண வரலாறுகளை தன்னகத்தே கொண்டது.

    இத்தலம் நம்மை நாளும் ஆளும் நவக் கிரகங்களில் ஒன்றான சுக்ரனுக்குரிய பரிகாரத் தலமாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற திருக்கஞ்சனூரில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள தல மூலவரான அக்னீஸ்வர சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பாணத்துடன் சுக்ர பகவானாக லிங்க வடிவத் தில் அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம்.

    பிரம்ம தேவருக்கு திரு மணக்கோலம் காட்டி அருளியதால், இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் தனி சன்னதியில் அன்னை கற்ப காம்பாள் காட்சி அளிக்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுக்ரபகவானின் சாபத்தால் துயரமுற்ற தேவர்கள் வியாச முனிவரிடம் சென்று சுக்ர சாபத்திலிருந்து விடுபட விண்ணப்பம் செய்தனர்.
    • வியாச முனிவர் தேவர்களை தம்முடன் சுக்ராச்சார்யர் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்றார்.

    நவக்கிரக தலங்களில் 8 தலங்களில் அந்தந்த கிரக தேவதைகள் தனித்தனியாக எழுந்தருளி உள்ளார்கள்.

    ஆனால் கஞ்சனூரில் மட்டும் சிவபெருமானே லிங்க வடிவில் சுக்கிரனாக காட்சி தருகிறார். அதன் விளக்கம் அறிவோமா?

    திருக்கஞ்சனூர் தல மஹாத்மியம்

    திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் அருந்த எண்ணிய தேவர்கள் மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடையத் தொடங்கினர்.

    அப்போது இறுக்கம் தாங்காமல் வாசுகியானது தன்னை அறியாமல் விஷத்தை உமிழ்ந்தது.

    பாம்பின் கொடிய விஷத்தின் உஷ்ணத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவர்கள் பாம்பின் தலைப் பகுதியை அசுரர்களை இழுக்க சொல்லி, வால் பாகத்தை தாங்கள் பிடித்துக் கொண்டு கடையத் துவங்கினர்.

    நீண்ட முயற்சிக்கு பின் அமுதம் வெளியே வந்தது .

    இதனை கண்டு மனம் மகிழ்ந்த தேவர்களுக்கு திருமால் மோகினி உருவம் கொண்டு அசுரர்களை ஏமாற்றி அமுதத்தைத் தேவர்களுக்கு தந்தருளினார்.

    இதனால் கோபமுற்ற அசுர குரு சுக்ராச்சார்யர் தேவர்களை நோக்கி வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களையும் உணர்ந்த நீங்கள் உழைப்பில் பங்கு கொண்ட அசுரர்களுக்கு அதன் பலனில் பங்களிக்காமல் துரோகம் செய்துவிட்டீர்கள்.

    அமுதம் உண்டதால் இறவாத்தன்மை பெற்ற நீங்கள் மனைவி, மக்கள், நாடு, நகரம் அனைத்தும் இழந்து தேவலோகத்தை விட்டு பூலோகம் சென்று அல்லல்படுவீர்களாக என சாபமீட்டார்.

    சுக்ரபகவானின் சாபத்தால் துயரமுற்ற தேவர்கள் வியாச முனிவரிடம் சென்று சுக்ர சாபத்திலிருந்து விடுபட விண்ணப்பம் செய்தனர்.

    வியாச முனிவர் தேவர்களை தம்முடன் சுக்ராச்சார்யர் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்றார்.

    தேவர்களின் பிழையை பொறுத்து சாப விமோசனம் அளிக்குமாறு சுக்ர பகவானிடம் வேண்டினார்.

    அதற்கு சுக்ராச்சார்யர், இதற்கு ஒரு பரிகாரம் இருப்பதாகவும், காவிரி நதியின் வடகரையில் தங்கள் தந்தையார் பராசர முனிவரால் பூஜிக்கப்பட்ட பலாசவனம் என்னும் கம்ஸ புர க்ஷேத்திரத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருக்கும் கற்பகாம்பிகா சமேத ஸ்ரீ அக்னீஸ்வர சுவாமியை வழிபாடு செய்துவர சுக்ர சாபத்திலிருந்து விமோசனம் பெறலாம் என்று கூறினார்.

    தேவர்களும் அவ்வாறே (இன்றைய கஞ்சனூர்) கம்சபுரத்தை அடைந்து சிவத்தை நோக்கி தவத்தை மேற்கொண்டு வழிபட்டு வந்ததால் பரம கருணா மூர்த்தியான சர்வேஸ்வரன் தம்பதி சமேதராக சுக்கிரனின் ராசிகளான ரிஷப ராசியில் சூரியனும் துலா ராசியில் சந்திரனும் இருக்கும் வைகாசி விசாக பெருநாளில் காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார்.

    ஆகையால் தான் கஞ்சனூரில் மட்டும் சுக்கிர பகவான் இருக்க வேண்டிய இடத்தில் எம்பெருமான் அக்னீஸ்வரராக எழுந்தருள்கிறார் என்கிறது தல வரலாறு.

    • பல மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
    • மழை காரணமாக பலர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள முடியாக நிலை ஏற்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்து வரும் நிலையில், தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்திருக்கிறது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதன் காரணமாக, மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செயது வருகின்றனர்.

    வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மற்ற நாட்களில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருக்கிறது. நேற்றைய தினம் இரவு 9 மணி நிலவரப்படி 63,242 பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். அவர்களில் ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் 10,124 பேர் வந்துள்ளனர்.

    இந்தநிலையில் சபரி மலையில் இன்றும் பக்தர் கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட போது, வலிய நடைப் பந்தலில் 5 வரிசையில் மட்டும் பக்தர்கள் வரிசையில் இருந்தனர். அதிகாலை 5 மணிக்கு பிறகு வலிய நடைப்பந்தலில் பக்தர்கள் காத்து நிற்காமல் பதினெட்டாம் படி ஏறிச் சென்றனர்.

    தமிழக பக்தர்கள் குறைவான அளவில் வருவதே சபரிமலையில் கூட்டம் இல்லாமல் இருக்க காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் பலர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள முடியாக நிலை ஏற்பட்டிருக்கிறது. மழை மற்றும் புயல் அச்சுறுத்தல் நீங்கியபிறகு தமிழகத்தில் இருந்து வழக்கம்போல் அதிக பக்தர்கள் சபரிமலைக்கு வரத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஜாதகத்தில் லக்னத்துக்கு 3, 5, 9 இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் பித்ரு சாபம் இருக்கிறது.
    • முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.

    பித்ரு தோஷ நிவர்த்தி பூஜை முறையானது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சித்தர்களும், ரிஷிகளும் கடைபிடிக்கும் வழிபாட்டுமுறையாகும், இந்த தோஷம் ஒருசமயம் சிவனுக்கும் நிகரான அகத்தியர், கொங்கணர் போன்ற முனிவர்களையே தன் சித்திகளை அடையாவண்ணம் தடுத்ததாக வரலாறுகள் சொல்கின்றன.

    ஜாதகத்தையும், நவகிரகங்களை நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.


    முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் வேள்விகள் செய்து கோவில் கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்காது என்பது சித்தர்களின் வாக்கு.

    நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.

    நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம்.

    நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.

    இன்றைய சூழ்நிலையில் யாரைப் பார்த்தாலும் பித்ரு சாபம் இருக்கிறது. பித்ரு தோஷம் இருக்கிறது. பரிகாரம் செய்ய வேண்டும். 'எந்த ஜென்மத்தில் செய்த என்ன பாவமோ! இந்த ஜென்மத்தில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்! என்ற புலம்பலை நம்மில் பல பேர் பல பேரிடம் கேட்டிருப்போம்.


    முதலில் பித்ரு தோஷம், பித்ரு சாபம் என்றால் என்ன என்பதைப் பற்றிய சந்தேகத்தை தீர்த்துக் கொள்வோம். அதன்பின்பு இதற்கான பரிகாரத்தை பார்க்கலாம்.

    ஒருவருடைய ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 3, 5, 9 ஆம் இடங்களில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் அவருக்கு கட்டாயம் பித்ரு தோஷம், பித்ரு சாபம் இருக்கிறது என்பதை குறிக்கிறது.

    ராகு இருந்தால் அப்பா வழி முன்னோர்களால் பித்ரு சாபம். கேது இருந்தால் அம்மா வழி முன்னோர்களால் பித்ரு சாபம் இருக்கிறது என்பதை குறிக்கும்.

    ஒவ்வொரு தலைமுறையிலும் தற்கொலைகளும், கொலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு தலைமுறையில் இயற்கையான மரணத்தை அடையாதவர்களின் ஆத்மா, மறுபிறவி அடையாமல் இந்த பூலோகத்திலேயே திரிந்து கொண்டிருக்கும். அந்த ஆத்மாவானது நான்காம் ஐந்தாம் தலைமுறையினரை பிடிக்கும்.

    அதாவது நான்கு தலைமுறைக்கு முன்னாள் நடந்த அகால மரணத்திற்கான சாபத்தை, அனுபவிக்கப் போவது நான்கு தலைமுறைக்கு தள்ளியிருக்கும் சந்ததியினரே. அதாவது பாட்டன் பூட்டன் சொத்தோடு சேர்த்து, அந்த பாவங்களையும் சுமக்கப் போவது நான்காவது தலைமுறை தான்.

    ஒருவருக்கு அப்பா வழியில் பித்ருதோஷம் இருக்கிறது என்றால் அப்பா உடன் பிறந்தவர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் பித்ரு தோஷம் இருக்கும் என்பதே உண்மை.

    இந்த தோஷமானது நீங்கள் எவ்வளவுதான் நல்ல காரியத்தில் ஈடுபட்டாலும் அதற்கான பலனை உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கவே சேர்க்காது.


    இந்த பித்ரு தோஷமானது நீங்க, 'விஜயாபதி' விசுவாமித்திர மகாலிங்க சுவாமி' திருக்கோவிலில் 'நவகலசயாகம்' செய்ய வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று நவகலச யாகத்தை குடும்பத்தோடு செய்தால், 100 நாட்களுக்குள் உங்கள் குடும்பத்திற்கு இருக்கும் நீண்டகால பிரச்சனையான பித்ரு தோஷம் நீங்கும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

    இந்த யாகத்தை செய்துவிட்டு வந்தாலும், அதன்பின்னர் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் உங்களது வீட்டின் அருகில் இருக்கும் பழமையான சிவாலயங்களுக்கு சென்று, 9 ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவேண்டும்.

    இப்படியாக 12 அமாவாசை அன்றும் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு இருக்கும் பித்ரு தோஷம் நீங்கி, உங்களுடைய வாழ்க்கை வளமாக மாறும் என்பது நம்பிக்கைக்குரிய ஒன்று. பித்ரு தோஷத்தால் தவித்துக் கொண்டிருப்பவர்கள் விஜயாபதி தலத்தில் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

    இந்த தர்ப்பணத்தை செய்ய தவறியவர்கள், முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று ஆற்றங்கரையில் அல்லது தன் சொந்த வீட்டில் (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும்.

    அப்படி செய்ய இயலாதவர்கள் விஜயாபதி தலத்துக்கு செல்லும்போது இத்தகைய பித்ரு பூஜைகள் செய்து பலன் அடையலாம்.

    சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது அவ்வாறு செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தையும், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என புராணங்கள் கூறுகிறது.

    • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம்.
    • ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-13 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவாதசி காலை 7.27 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: சித்திரை காலை 9.07 மணி வரை பிறகு சுவாதி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-முயற்சி

    கடகம்-உயர்வு

    சிம்மம்-நன்மை

    கன்னி-வரவு

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-சுகம்

    தனுசு- பயணம்

    மகரம்-பெருமை

    கும்பம்-நற்செய்தி

    மீனம்-பாராட்டு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குப்புற படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.
    • தெற்கு திசையில் தலைவைத்து படுத்தால் - ஓங்குயிர்

    தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

    இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்கள் பல்வேறு பாடல்கள் பாடியுள்ளனர்.

    இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

    மேலும் எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.


    கிழக்கு திசையில் தலைவைத்து படுத்தால் - உத்தமம்

    தெற்கு திசையில் தலைவைத்து படுத்தால் - ஓங்குயிர்

    மேற்கு திசையில் தலைவைத்து படுத்தால் - மத்திமம்

    வடக்கு திசையில் தலைவைத்து படுத்தால் - மரணம்

    கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

    தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

    மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

    வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது. இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

    வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப்படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.


    மேலும் மல்லாந்து கால்களையும்,கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.


    குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும்.

    மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

    வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு ஜீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்

    • ராமபிரான் யோக நித்திரை நிலையில் எழுந்தருளியுள்ளார்.
    • ராமபிரானின் கைகளில் ஆயுதங்கள் ஏதுமில்லை.

    கோவில் தோற்றம்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள நெடுங்குணம் என்ற இடத்தில் ராமபிரான் மிக அரிதான திருக்கோலத்தில் யோக நித்திரை நிலையில் எழுந்தருளியுள்ளார்.


    மகாபாரதத்தை இயற்றிய வியாசரின் மகன் சுகப் பிரம்ம மகரிஷி. இவர் கிளித் தலையும், மனித உடலும் கொண்டவர். ஒரு சமயம் சுகப் பிரம்ம ரிஷி, இத்தலத்தில் இருந்து ராமபிரானை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருந்தார்.

    இலங்கையில் ராவணனை வதம் செய்து முடித்து திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில், வழியில் இத்தலத்தில் சுகப் பிரம்ம ரிஷியின் ஆசிரமத்துக்கு ராமபிரான் எழுந்தருளினார். சுகப்பிரம்ம மகரிஷி தான் பாதுகாத்து வைத்திருந்த அரிய சுவடி ஒன்றை, ராமனுக்கு வழங்கினார்.

    சுகப் பிரம்ம ரிஷியிடம் இருந்து பெற்ற ஓலைச்சுவடியை அனுமனிடம் கொடுத்து அவற்றைப் படிக்குமாறு பணித்தார். அனுமனும் பத்மாசனத்தில் அமர்ந்து அதனைப் படிக்கலானார்.

    அனுமன் வாசிக்க ராமபிரான் அதற்கு ஞான விளக்கம் தந்தார். பின்னர் சுகப் பிரம்ம மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று இந்தத் தலத்தில் ஒருநாள் தங்கினார் ராமபிரான்.


    இத்தலத்தில் சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமனுக்கு சாஸ்திர விளக்கங்களை உபதேசித்த ராமன், அதே கோலத்தில் இங்கு எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.

    ஐந்து நிலை ராஜகோபுரம் பிரமாண்டமான வடிவத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும் வலது புறம் கல்யாண மண்டபமும், இடப்புறம் பதினாறு கால் ஊஞ்சல் மண்டபமும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. வெளி திருச்சுற்றில் பலிபீடம், கொடிமரம், இரண்டாம் மதில், ஐந்து நிலை கோபுரம் காட்சி தருகின்றன.

    கருவறையில் வலப்புறத்தில் லட்சுமணன் நின்ற கோலத்தில் வில் அம்போடு காட்சி தருகிறார். இடதுபுறத்தில் சீதாபிராட்டியார் அமர்ந்த திருக்கோலத்தில் வலது கையில் தாமரை ஏந்தி காட்சி தருகிறார். நடுவில் ராமபிரான் பத்மாசனத்தில் அமர்ந்து தனது வலது கரத்தினை சின்முத்திரை அமைப்பில் மார்பில் வைத்தபடி, கண்களை மூடி யோக நிலையில் காட்சி தருவது தனிச் சிறப்பு.

    ராமபிரானின் கைகளில் ஆயுதங்கள் ஏதுமில்லை. ராமருக்கு எதிரில் அனுமன் பத்மாசனத்தில் அமர்ந்து தனது கரங்களில் பிரம்ம சூத்திர சுவடிகளை ஏந்தி வாசிக்கும் கோலத்தில் காட்சி தருவதும் வேறெங்கும் காண முடியாத அற்புதக் காட்சியாகும். இத்தலத்தின் உற்சவர் விஜயராகவப் பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியோடு காட்சி தருகிறார்.

    அர்த்த மண்டபத்தின் வடப்புறம் உள்ள மேடை மீது விஷ்வக்சேனர், ஆளவந்தார் மற்றும் ஆழ்வார்கள் சிலாரூபத்தில் காட்சி தருகின்றனர். வெளி திருச்சுற்றின் வடமேற்கில் கிழக்கு நோக்கிய திசையில் செங்கமலவல்லி தாயார் சன்னிதி அமைந்துள்ளது.


    யோக ராமர் திருக்கோவிலின் நேர் எதிரே சஞ்சீவி அனுமன் சன்னிதி உள்ளது. இந்த அனுமன் சன்னிதியில் இரட்டை ஆஞ்சநேயர் காட்சி தருவதும் ஒரு அபூர்வ அமைப்பாகும்.

    இத்தலத்தில் சக்கரத்தாழ்வார் சன்னிதி, கல்யாண வேங்கடேசப் பெருமாள் சன்னிதி முதலான சன்னிதிகளும் அமைந்துள்ளன. இத்தலத்தின் திருச்சுற்று மண்டபத்தின் வடக்குப்பகுதியில் விகனசர் சன்னிதி உள்ளது.

    விகனசர் தன் பின்னிரு கரங்களில் ஆழியும் சங்கும் கொண்டும், முன் வலக்கரத்தினை சின் முத்திரையில் வைத்தும், முன் இடக்கரம் அஸ்த முத்திரையும் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்தின் தீர்த்தம் சுகர் தீர்த்தம். இது சூரிய தீர்த்தம் என்றும் வழங்கப்படுகிறது.


    ஆடி மாதத்தில் பவித்ரோத்ஸவமும், வைகாசி மாதத்தில் கருடசேவை, கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி விழாவும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள யோகராமரை தரிசிப்பவர்களுக்கு ஞானம் கைகூடும். இல்லறம் செழிக்கும் என்பது ஐதீகம்.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    வந்தவாசியில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் உள்ளது, நெடுங்குணம் திருத்தலம்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-12 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவாதசி (முழுவதும்)

    நட்சத்திரம்: அஸ்தம் காலை 6.35 மணி வரை பிறகு சித்திரை

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராமர் காலை திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர் வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் காலை அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் திருப்புளிங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மன் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தனம்

    ரிஷபம்-ஊக்கம்

    மிதுனம்-நலம்

    கடகம்-புகழ்

    சிம்மம்-லாபம்

    கன்னி-பெருமை

    துலாம்- கவனம்

    விருச்சிகம்-மகிழ்ச்சி

    தனுசு- கீர்த்தி

    மகரம்-குழப்பம்

    கும்பம்-இரக்கம்

    மீனம்-இன்பம்

    ×