என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
பித்ரு தோஷத்திற்கு நிரந்தர தீர்வைத் தரும் `நவகலச யாகம்'
- ஜாதகத்தில் லக்னத்துக்கு 3, 5, 9 இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் பித்ரு சாபம் இருக்கிறது.
- முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.
பித்ரு தோஷ நிவர்த்தி பூஜை முறையானது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சித்தர்களும், ரிஷிகளும் கடைபிடிக்கும் வழிபாட்டுமுறையாகும், இந்த தோஷம் ஒருசமயம் சிவனுக்கும் நிகரான அகத்தியர், கொங்கணர் போன்ற முனிவர்களையே தன் சித்திகளை அடையாவண்ணம் தடுத்ததாக வரலாறுகள் சொல்கின்றன.
ஜாதகத்தையும், நவகிரகங்களை நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.
முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் வேள்விகள் செய்து கோவில் கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்காது என்பது சித்தர்களின் வாக்கு.
நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.
நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம்.
நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் யாரைப் பார்த்தாலும் பித்ரு சாபம் இருக்கிறது. பித்ரு தோஷம் இருக்கிறது. பரிகாரம் செய்ய வேண்டும். 'எந்த ஜென்மத்தில் செய்த என்ன பாவமோ! இந்த ஜென்மத்தில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்! என்ற புலம்பலை நம்மில் பல பேர் பல பேரிடம் கேட்டிருப்போம்.
முதலில் பித்ரு தோஷம், பித்ரு சாபம் என்றால் என்ன என்பதைப் பற்றிய சந்தேகத்தை தீர்த்துக் கொள்வோம். அதன்பின்பு இதற்கான பரிகாரத்தை பார்க்கலாம்.
ஒருவருடைய ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 3, 5, 9 ஆம் இடங்களில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் அவருக்கு கட்டாயம் பித்ரு தோஷம், பித்ரு சாபம் இருக்கிறது என்பதை குறிக்கிறது.
ராகு இருந்தால் அப்பா வழி முன்னோர்களால் பித்ரு சாபம். கேது இருந்தால் அம்மா வழி முன்னோர்களால் பித்ரு சாபம் இருக்கிறது என்பதை குறிக்கும்.
ஒவ்வொரு தலைமுறையிலும் தற்கொலைகளும், கொலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு தலைமுறையில் இயற்கையான மரணத்தை அடையாதவர்களின் ஆத்மா, மறுபிறவி அடையாமல் இந்த பூலோகத்திலேயே திரிந்து கொண்டிருக்கும். அந்த ஆத்மாவானது நான்காம் ஐந்தாம் தலைமுறையினரை பிடிக்கும்.
அதாவது நான்கு தலைமுறைக்கு முன்னாள் நடந்த அகால மரணத்திற்கான சாபத்தை, அனுபவிக்கப் போவது நான்கு தலைமுறைக்கு தள்ளியிருக்கும் சந்ததியினரே. அதாவது பாட்டன் பூட்டன் சொத்தோடு சேர்த்து, அந்த பாவங்களையும் சுமக்கப் போவது நான்காவது தலைமுறை தான்.
ஒருவருக்கு அப்பா வழியில் பித்ருதோஷம் இருக்கிறது என்றால் அப்பா உடன் பிறந்தவர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் பித்ரு தோஷம் இருக்கும் என்பதே உண்மை.
இந்த தோஷமானது நீங்கள் எவ்வளவுதான் நல்ல காரியத்தில் ஈடுபட்டாலும் அதற்கான பலனை உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கவே சேர்க்காது.
இந்த பித்ரு தோஷமானது நீங்க, 'விஜயாபதி' விசுவாமித்திர மகாலிங்க சுவாமி' திருக்கோவிலில் 'நவகலசயாகம்' செய்ய வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று நவகலச யாகத்தை குடும்பத்தோடு செய்தால், 100 நாட்களுக்குள் உங்கள் குடும்பத்திற்கு இருக்கும் நீண்டகால பிரச்சனையான பித்ரு தோஷம் நீங்கும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.
இந்த யாகத்தை செய்துவிட்டு வந்தாலும், அதன்பின்னர் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் உங்களது வீட்டின் அருகில் இருக்கும் பழமையான சிவாலயங்களுக்கு சென்று, 9 ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவேண்டும்.
இப்படியாக 12 அமாவாசை அன்றும் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு இருக்கும் பித்ரு தோஷம் நீங்கி, உங்களுடைய வாழ்க்கை வளமாக மாறும் என்பது நம்பிக்கைக்குரிய ஒன்று. பித்ரு தோஷத்தால் தவித்துக் கொண்டிருப்பவர்கள் விஜயாபதி தலத்தில் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.
இந்த தர்ப்பணத்தை செய்ய தவறியவர்கள், முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று ஆற்றங்கரையில் அல்லது தன் சொந்த வீட்டில் (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும்.
அப்படி செய்ய இயலாதவர்கள் விஜயாபதி தலத்துக்கு செல்லும்போது இத்தகைய பித்ரு பூஜைகள் செய்து பலன் அடையலாம்.
சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது அவ்வாறு செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தையும், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என புராணங்கள் கூறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்