என் மலர்
ஆன்மிகம்
- பாரம்பரிய வழக்கப்படி பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- தேங்காய்களை கொப்பரை தொழிலாளர்கள் சட்ட விரோதமாக சேகரிக்க தடை.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களது வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்து வருகிறது. கேரள ஐகோர்ட்டும் பக்தர்கள் வசதிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் ஆர்க்கிட் மலர்கள் மற்றும் இலைகளை அலங்காரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று தேவசம் போர்டுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
பாரம்பரிய வழக்கப்படி பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவற்றை தினமும் மாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், எஸ்.முரளி கிருஷ்ணா ஆகியோர் உத்தர விட்டு உள்ளனர்.

மேலும் பக்தர்கள் உடைக்கும் தேங்காய்களை கொப்பரை தொழிலாளர்கள் சட்ட விரோதமாக சேகரிப்பதை தடுக்க சன்னிதானம் நிர்வாக அதிகாரி மற்றும் தேவசம் விஜிலென்ஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
- திருப்பதியில் நேற்று 63, 637 பேர் தரிசனம் செய்தனர், 24,016 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10 முதல் 19-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது.
வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் வெங்கய்ய சவுத்ரி கூறியதாவது:-
வைகுண்ட ஏகாதசி ஜனவரி 10 முதல் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி நடைபெறும் 10 நாட்களும் சாதாரண பக்தர்களும் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்வதற்காக விஐபி பிரேக் தரிசனம், ஏழை குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோருக்கான சிறப்பு ஆர்ஜித தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் வைகுண்ட ஏகாதசி நாட்களில் அன்னதான பிரசாத கூடத்தில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதியில் நேற்று 63, 637 பேர் தரிசனம் செய்தனர், 24,016 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.20 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- சூரியனுடன் ராகு அல்லது கேது அல்லது சனி அல்லது மாந்தி இருப்பது பிதுர் தோஷம்.
- கன்றுடன் கூட பசுவை தானம் செய்ய வேண்டும்.
ஜோதிடர்கள் சில நேரங்களில் நமது ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கிறது, அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். என்ன காரணம் தெரியுமா?
சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதத்தில் பிறந்தோருக்கும், மாத பிறப்புக்கு முன்பின் 15 நாழிகையில் பிறந்தோருக்கும் பிதுர்தோஷம் உண்டாகிறது.

ஜாதகத்தில் சூரியனுடன் ராகு அல்லது கேது அல்லது சனி அல்லது மாந்தி இருப்பது பிதுர் தோஷம் என்று சொல்வார்கள். இவர்களுடன் குரு அல்லது புதன் சம்பந்தம் எனில் குலதெய்வ கோபமும் உண்டு என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
வீட்டில் பராமரிப்பு இல்லாமல் பெரியோர்கள் இறந்து விட்டார்கள் என்றாலோ துர் மரணங்களால்" விஷம், தற்கொலை போன்ற காரணங்களால் இறந்திருந்ததாலோ அந்த காரணம் வருங்கால சந்ததியினருக்கு பிதுர் தோஷமாக உருவெடுத்து வந்து அவர்தம் நல்வாழ்வுக்கு தடையாக வந்தடையும் " என்பது ஆன்றோர் கூற்று.
எனவே அதற்கு தோஷப் பரிகாரமாக காசியில் பித்ரு சிரார்த்தம், அல்லது ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் அல்லது கன்றுடன் கூட பசுவை தானம் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்ய இயலாது எனில் தினமும் காலையில் குளித்து சூரியனை நமஸ்காரம் செய்து பின்னர் கீழ் உள்ள சுலோகத்தை பொருளுணர்ந்து கூறிவிட்டு தூய்மையான இடத்தில் நீர் விட்டு காகத்திற்கு அன்னமிட வேண்டும். தினமும் இவ்வாறு செய்தால் பித்ருக்கள் மனமகிழ்ச்சியுடன் ஆசி வழங்குவார்கள் என்பதால் தோஷம் நீங்கப் பெற்று நல்வாழ்வு பெறுவது கண்கூடாக காணும் உண்மை.

பித்ரு சுலோகம்:
ஓம் நம: பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவே மயாய ச ஸுகதாய ப்ரசன்னாய ஸுப்ரீதாய மகாத்மனே"
"என் பிறப்பிற்குக் காரணமான முன்னோர்களே! தெய்வீக சக்தி பெற்றவர்களே! உங்கள் ஆசியால் எங்களுக்கு நல்வாழ்வும் மகிழ்ச்சியும் உண்டாகட்டும். நல்லவர்களால் போற்றப்படும் உங்களை வணங்குகிறோம்" என்பது இந்த சுலோகத்தின் பொருள்.
மானிட அவதாரம் எடுத்து வந்த ராம பிரான் ராமேஸ்வரத்தில் தனது தந்தை தசரதருக்கு" பிதுர் சிரார்த்தம் "செய்து வழிபட்டார். அது மானிட கடமைகளில் ஒன்று என்பதை வலியுறுத்தியுள்ளார்.
எனவே நாமும் ஸ்ரீராமபிரான் வழிநின்று நமது ஜென்ம கடன் தீர்த்து நல்வாழ்வு பெற்று சுபிட்சமாக வாழ்வோம்.
- பாட்னாவிலிருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கயா.
- இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் புனித தலமாகத் திகழ்கிறது.
கயா செல்லாமல் காசி யாத்திரை நிறைவு பெறாது என்பார்கள்.
புராண காலத்தில் கயாசுரன் என்பவன், பிரம்மனை நோக்கி கடுமையான தவம் புரிந்தான். அவன் முன்பாக தோன்றிய பிரம்மன், "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு கயாசுரன், "தேவர்கள் அனைவரையும் வெல்லும் வரம் எனக்கு வேண்டும்" என்ற வரத்தைக் கேட்டு பெற்றான்.

இதையடுத்து தேவர்கள் அனைவரையும் வென்ற கயாசுரன் அவர்களை துன்புறுத்தினான். இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று தஞ்சமடைந்தனர். இதையடுத்து கயாசுரனுடன் போரிட்ட சிவபெருமான், அவனை காசியில் வைத்து சூலத்தால் குத்தி, அவனது தோலை உரித்ததாக புராணத்தில் உள்ளது.
இன்னொரு புராணத்தின் படி, கயாசுரனால் துன்பப்பட்ட தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தனர். கயாசுரன் இருப்பிடம் சென்ற விஷ்ணு, "உனக்கு தேவையான வரத்தை தருகிறேன். தேவர்களை துன்புறுத்துவதை நிறுத்து" என்றார்.

உடனே கயாசுரன், "பாவங்களைப் போக்கும் அனைத்து தீர்த்தங்களையும் விட, நான் உயர்ந்த தீர்த்தமாக இருக்க வேண்டும். அதற்கு என் புனிதமான உடலை தொடுபவர்கள் அனைவரும் மோட்சத்திற்குச் செல்ல வேண்டும்" என்ற வரம் கேட்டான். மகாவிஷ்ணுவும் அந்த வரத்தை அருளினார்.
அதன்படி கயாசுரனின் உடல், புனிதமானதாக மாறியது. பாவம் செய்பவர்கள் அனைவரும், கயாசுரனின் உடலை தொட்டு மோட்சத்திற்குச் செல்லத் தொடங்கினர்.
இதைக் கண்ட எமதர்மன், "இது என்ன அநியாயமாய் இருக்கிறது. பாவம் செய்பவர்கள் அனைவருமே மோட்சத்துக்கு செல்வர் என்றால், நரக தண்டனை யார்தான் அனுபவிப்பது" எனக் கேட்டு விஷ்ணு பகவானிடம் முறையிட்டார்.
உடனே விஷ்ணு பகவான் பிரம்மனை அழைத்து "நீ கயாசுரனிடம் சென்று 'உன் உடல் புனிதமானது. ஆகவே அதைக் கொண்டு யாகம் செய்ய விரும்புகிறோம். எனவே யாகம் செய்ய உன் உடலைத் தர வேண்டும்' என்று கேள்" என்றார்.
பிரம்மனும் அப்படியே கயாசுரனிடம் கேட்க, அவனும் தன்னுடைய உடலைக் கொடுத்தான். அவனின் உடல் மீது தேவர்கள் புடை சூழ அமர்ந்து, பிரம்மன் வேள்விளைத் தொடங்கினார். வேள்வி முடியப்போகும் தருவாயில், கயாசுரனின் தலை அசைய ஆரம்பித்தது.

பிரம்மனின் உத்தரவுப்படி, கயாசுரனின் தலை மீது ஒரு கல்லை எடுத்து வைத்தார், எமதர்மன். அப்போதும் கயாசுரனின் தலை அசைவது நிற்கவில்லை. அனைவரும் மகாவிஷ்ணுவை வேண்டினர்.
அப்போது மகாவிஷ்ணு அங்கு தோன்றி, தன் கதாயுதத்தால் கயாசுரனின் தலை அசையாதபடி தடுத்து நிறுத்தினார். மேலும் கயாசுரனிடம் "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார்.
அதற்கு கயாசுரன், "நான் கேட்பது பழைய வரம்தான் என்றாலும், அதையே எனக்கு தந்தருள வேண்டும். இந்த இடம் என் பெயரால் வழங்கப்பட வேண்டும். இங்கு வந்து யார் ஒருவர் தன் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தாலும், அவர்கள் செய்த பாவங்கள் விலகி, முக்தி கிடைக்க வேண்டும்" என்றான்.

விஷ்ணு பகவானும் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என வரம் கொடுத்ததாக சொல்வார்கள். இந்த புராண நிகழ்வு ளின் காரணமாகவே, இங்குள்ள பல்குனி நதியும், விஷ்ணு பாதமும், அட்சய வடமும் புனிதமானதாக கருதப்படுகிறது.

பாட்னாவிலிருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, கயா. ஒரு காலத்தில் வரலாற்று ரீதியாக புகழ்பெற்ற மகத பேரரசின் ஒரு பகுதியாக இருந்த இந்த நகரம், பல்குனி நதியின் ஓரத்தில் அமைந்துள்ளது. இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் இது ஒரு புனித தலமாகத் திகழ்கிறது.
- 28-ந்தேதி பிரதோஷம்.
- 30-ந்தேதி அமாவாசை.
26-ந்தேதி (செவ்வாய்)
* சுமார்த்த ஏகாதசி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* சமநோக்கு நாள்.
27-ந்தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* வைஷ்ணவ ஏகாதசி.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமாலுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
28-ந்தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* சமநோக்கு நாள்.
29-ந்தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
30-ந்தேதி (சனி)
* அமாவாசை.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தல்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
1-ந்தேதி (ஞாயிறு)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
2-ந்தேதி (திங்கள்)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம். திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
- முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம்கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-11 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி நாளை விடியற்காலை 5.23 மணி வரை பிறகு துவாதசி.
நட்சத்திரம்: அஸ்தம் (முழுவதும்)
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம்கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-நட்பு
மிதுனம்-வரவு
கடகம்-பக்தி
சிம்மம்-வெற்றி
கன்னி-பரிசு
துலாம்- பாராட்டு
விருச்சிகம்-பொறுமை
தனுசு- பொறுப்பு
மகரம்-ஆதரவு
கும்பம்-புகழ்
மீனம்-போட்டி
- நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலின் முன்பகுதியில் வினாயகருக்கு தனி சன்னதி உள்ளது.
- ஆஞ்சநேயருக்கு நேர் எதிரே, கோவிலுக்குள் நுழையும் வாசலில் பக்தர்கள் விளக்கு ஏற்றி ஆஞ்சநேயரை வழிபடுகிறார்கள்.
1) மார்கழி மாதம் மூலம் நட்சத்திரமும், அமாவாசையும் இணைந்து வரும் நாளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அடுத்த ஆண்டு வருகிற ஏப்ரல் 12ந்தேதி (சனிக்கிழமை) ஆஞ்சநேயர் ஜெயந்தி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கொண்டாடப்படுகிறது.
2) தமிழ் மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமைகள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கிறது.
3) ஆடிப்பூரம், வைகாசி விசாகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது.
4) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்படும். சந்தனக்காப்பு, வெண்ணை காப்பு செய்யப்படுகிறது. வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படும். விஷேச மலர் அலங்காரம் செய்யப்படும். முத்தங்கி அலங்காரம் செய்யப்படுகிறது. தங்க கவசம் மற்றும் வெள்ளிக் கவசம் சாத்தப்படுகிறது.
5) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வருட திருவிழா பங்குனி மாதம் 15 நாட்கள் நடைபெறும். பங்குனி மாதம் வரும் ஹஸ்த நட்சத்திரத்தில் 3 திருத்தேர்கள் திருவீதி உலா வருவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
6) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள், கட்டண விவரங்கள் டிஜிட்டல் போர்டு (எல்.இ.டி) மூலம் பக்தர்கள் பார்க்கும் அளவுக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது.
7) ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது. நரசிம்மரின் அவதாரங்கள் கோவிலின் மேற்கூரையில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
8) ஆஞ்சநேயர் செய்த வீர, தீர செயல்கள், சீதையிடம் ஆஞ்சநேயர் பேசியது, ராமரின் இதயத்தில் இடம் பெற்றது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள், ஓவியங்களாக வடிவமைத்து வைக்கப்பட்டு உள்ளது.
9) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலின் முன்பகுதியில் வினாயகருக்கு தனி சன்னதி உள்ளது.
10) ஆஞ்சநேயருக்கு நேர் எதிரே, கோவிலுக்குள் நுழையும் வாசலில் பக்தர்கள் விளக்கு ஏற்றி ஆஞ்சநேயரை வழிபடுகிறார்கள்.
11) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படும் துளசி, வெற்றிலை மாலைகள் மற்றும் பூ மாலைகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
12) 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
13) தினமும் இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது.
14) பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் கட்டணம் செலுத்தி தங்க ரதத்தை புறப்பாடு செய்யலாம்.
15) குழந்தைகள் நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்களுக்கு அறிவு, வீரம், தைரியம், வலிமை, பயமின்மை, ஞாபகசக்தி, சுறுசுறுப்பு, விடா முயற்சி, நல்ல ஒழுக்கம், அடக்கம், நேர்மை, நோயின்மை, தேர்ச்சி பெறுதல், உண்மை பேசுதல், நாவன்மை, புகழ், நற்பண்புகள் ஆகியவற்றை வழங்குகிறார்.
- திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையின் போது மட்டும்தான் தீப ஜோதியின் தரிசனம் கிட்டுகின்றது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம்.
- ஆனால் சூட்சமமாக திருவண்ணாமலையின் உச்சியில் எப்போதும் தீப ஜோதி மிளிர்ந்து கொண்டிருக்கின்றது என்பது நூற்றுக்கு நூறு வேத சத்திய வாக்காகும்.
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையின் போது மட்டும்தான் தீப ஜோதியின் தரிசனம் கிட்டுகின்றது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால் சூட்சமமாக திருவண்ணாமலையின் உச்சியில் எப்போதும் தீப ஜோதி மிளிர்ந்து கொண்டிருக்கின்றது என்பது நூற்றுக்கு நூறு வேத சத்திய வாக்காகும்.
மலை உச்சியைப் பார்! என்று ரமணர் உட்பட, பல மகான்களும் சொல்கின்ற பொழுது, மலை உச்சியில் மலைமுகட்டில் சூட்சுமமாக ஒளிர்கின்ற ஜோதியைப் பார், என்பதே அதன் பொருளாகும்.
எனவே, திருவண்ணாமலையை நோக்கியவாறே கிரிவலம் வருகின்ற பொழுது சர்வேஸ்வரனுடைய நெற்றிக் கண்ணில் ஒளிர்கின்ற ஜோதி சக்தியின் அணுவுள் அணுவாய், அணுவின் பிரிவாய் ஒளிர்கின்ற அந்த ஜோதியை உள்ளூர ஆத்ம ஜோதியாகத் தரிசிக்கின்றோம் என்பது இதன் பொருளாகும்.
இதுவே ஸ்ரீஅகஸ்திய பெருமான் அளிக்கின்ற ஜோதி தரிசன கிரிவல முறைகளுள் ஒன்றாகும்.
ஆத்ம ஜோதி தரிசனத்திற்கு வழிவகுக்கின்ற உத்தமமான ஜோதி யோக முத்ரா கிரிவல முறை இது.
ஆனால், இதற்கு தினம்தோறும் இல்லத்தில் விளக்கு தீப ஜோதியைத் தியானித்து தரிசிக்கின்ற வழக்கத்தைக் கைக் கொண்டால்தான் சூட்சும ஜோதியை ஓரளவேனும் உணர முடியும்.
நாங்கள் திருவண்ணாமலையிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றோமே எங்களால் திருவண்ணாமலை கிரிவலம் வர முடியாதே என்று பலர் நினைக்கக்கூடும்.
உங்கள் ஊர் ஆலயத்தில் பெரும்பாலும் மூலவருக்குப் பின்னால் கோஷ்ட மூர்த்தியாக லிங்கோத்பவ மூர்த்தி எழுந்தருளி இருக்கின்றார் அல்லவா.
தினந்தோறும் ஸ்ரீலிங்கோத்பவ சன்னதியில் மூன்று அகல் விளக்கு ஜோதிகளை ஏற்றி அதனைத் தியானித்து தரிசித்து வாருங்கள்.
எங்கெல்லாம் ஸ்ரீலிங்கோத்பவ மூர்த்தி எழுந்தருளி இருக்கின்றாரோ அங்கெல்லாம் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப ஜோதியின் சக்தி விரவி உள்ளது என்பதை உணருங்கள்.
- உச்சியில் இடும் பொட்டு தேவியின் நெற்றிப் பொட்டு, அடுத்த மூன்றும் திருநயனங்கள்.
- அதற்கடுத்த இரு பொட்டுக்கள் கைகளாகவும், கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் பொட்டுக்கள் திருப்பாதங்கள் எனவும் கொள்ள வேண்டும்.
பித்தளை அல்லது வெள்ளி, வெண்கலத்தால் ஆன விளக்கே பூஜை செய்யச் சிறந்தது.
மரப்பலகை அல்லது தாம்பாளத்தின் மீது விளக்கை வைக்க வேண்டும். தலைவாழை இலை மீது குத்துவிளக்கை வைத்தும் பூஜிக்கலாம்.
திருவிளக்கை விபூதி, குங்குமம், சந்தனம் இவற்றால் பொட்டிட்டு அலங்கரிக்கவும், விளக்கின் உச்சிப் பகுதியில் ஒரு பொட்டு, அதற்குக் கீழே மூன்றும், அதனடியில் இரண்டும், கீழ்ப்பகுதியில் இரண்டு பொட்டு என மொத்தம் எட்டு பொட்டுக்கள் வைக்க வேண்டும்.
உச்சியில் இடும் பொட்டு தேவியின் நெற்றிப் பொட்டு, அடுத்த மூன்றும் திருநயனங்கள்.
அதற்கடுத்த இரு பொட்டுக்கள் கைகளாகவும், கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் பொட்டுக்கள் திருப்பாதங்கள் எனவும் கொள்ள வேண்டும்.
விளக்கில் நிறைய எண்ணெய் ஊற்ற வேண்டும். இடையிடையே எண்ணெய் ஊற்றக்கூடாது.
இரு திரிகள் இட்டு ஐந்து முகங்களிலும் ஏற்ற வேண்டும்.
பூச்சரத்தையோ அல்லது மாங்கல்யச் சரட்டையோ விளக்கின் தண்டுப் பகுதியில் சுற்றலாம்.
விளக்கு பூஜை செய்கின்ற விளக்கின் சுடரிலிருந்து ஊது வத்தி, கற்பூரம் இவற்றை ஏற்றக்கூடாது.
திருவிளக்கிலே தேவியே உறைகின்றாள். விளக்கை வழிபடுவதன் மூலம் தேவியை ஆராதனை செய்கின்றோம்.
அகிலத்தைக் காத்தருள் புரியும் அன்னையின் அருளைப் பெற திருவிளக்கு பூஜை எளிமையானது.
திருவிளக்கை அணைக்கும்பொழுது ஒரு துளிபாலை ஜோதியில் வைத்து அல்லது திரியை மெல்ல உட்புறம் இழுத்தோ அணைக்கலாம்.
குத்துவிளக்கு பூஜையை, சுமங்கலிப் பெண்களும் கன்னியரும் கூடி கோவில்களில் செய்தால் வீடும் நாடும் சுபிட்சமடையும்.
- எவ்வகையான திரியை பயன்படுத்தினால் எத்தகைய பலன் கிடைக்கும் என்பதை நமக்கு முன்னோர் வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்.
- அதைப் பின்பற்றினால் நாம் விரும்பும் பலனை அடைவதும் எளிது.
குடும்ப நலனுக்காகவும் உறவினரின் நலனுக்காகவும் விளக்கேற்றி பூஜிக்கும் பொழுது அதற்குரிய எண்ணெயைத் தேர்ந்தெடுப்பதைப்போல விளக்கில் போடப்படும் திரியையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
எவ்வகையான திரியை பயன்படுத்தினால் எத்தகைய பலன் கிடைக்கும் என்பதை நமக்கு முன்னோர் வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்.
அதைப் பின்பற்றினால் நாம் விரும்பும் பலனை அடைவதும் எளிது.
பொதுவாக பஞ்சுத் திரியே விளக்கேற்றத் தகுந்தது. பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றினால் நல்லவையெல்லாம் பெறலாம்.
வாழைத்தண்டிலிருந்து நார் எடுத்து திரித்து காயவைத்து விளக்கேற்றலாம். இத்தகைய திரியைப் பயன்படுத்தி தெய்வ குற்றத்திலிருந்து விடுபடலாம்.
இல்லத்தில் செல்வ வளம் பெருக வேண்டும் என்று விரும்பினால், வெள்ளெருக்கின் இலைப் பட்டையினால் திரி செய்து அதனால் விளக்கேற்றலாம். இதுபோல தாமரைத் தண்டிலிருந்து பிரித்தெடுத்த நூலால் திரிசெய்து போட்டு தீபமேற்றினால் செல்வம் நிலைப்பதுடன், செய்த பாவங்களும் அகலும்.
புதிதாக மஞ்சள் வண்ணத் துணி வாங்கி, அதில் திரி செய்து போட்டு தீபம் ஏற்றலாம். இதனால் அம்பாளின் பேரருள் கிடைக்கும்.
மேலும் நோய்களை அகற்ற வல்லது. சிவப்புத் துணியினால் திரி செய்து போட்டால், திருமண யோகம் கிட்டும். புத்திர பாக்கியமும் ஏற்படும்.
- கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது.
- இணையதளம் வாயிலாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும்.
திருவண்ணாமலை:
மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது.
விழாவில், அன்னதானம் வழங்க விரும்பும் தனி நபர்கள், நிறுவன்ங் www.foscos.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இதுதவிர, திருவண்ணாமலை - செங்கம் சாலை, பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் இன்று முதல் வருகிற 4-ந்தேதி வரை நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்து அனுமதி பெறலாம்.
விண்ணப்பத்துடன் கடவுச் சீட்டு அளவு புகைப்படம் முகவரிக்காக ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட சான்றின் நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடம் நாள், நேரத்தில் மட்டுமே அன்ன தானம் வழங்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கக்கூடாது.
பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப் பாதையில் இருந்து 100 மீட்டர் உள்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய்த்தொற்று உள்ளவர்கள் அன்னதானம் சமைக்கவோ, வழங்கவோ அனுமதிக்கக் கூடாது.
வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். உணவுப் பொருள்கள் தரமானதாக, தூய்மையானதாக, கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும்.
இந்த வழிகாட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மேலும், விவரங்களுக்கு 044-237416, 9047749266, 9865689838 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தேங்காய் எண்ணையால் விளக்கேற்றி, கணபதியை வழிபட்டால், அவருடைய அருளைப் பெறலாம்.
- லட்சுமி கடாட்சம் பெற விரும்பும் பெண்கள், பசுநெய்யால் விளக்கேற்றி வழிபடவேண்டும்.
விளக்கு மங்கலத்தின் சின்னம். விளக்கை பூஜை செய்வது தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது.
தீபத்தையே தெய்வமாக வழிபாடு செய்வதும் வழக்கில் உள்ளது.
விளக்கேற்றுவது என்பது காலையிலும் மாலையிலும் நடைபெற வேண்டும்.
மானுட வாழ்வில் ஐம்பொறிகளையும் தன் வசப்படுத்தி ஒளிபெறச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஐந்து முகங்கள் கொண்ட விளக்கினை வழிபடுகின்றார்கள்.
இந்த ஐந்து முகங்களும், அன்பு, நிதானம், சமயோசிதம், சகிப்புத்தன்மை, மனஉறுதி எனும் ஐந்து குணங்களையும் குறிக்கின்றன.
ஐந்து முகங்களிலும் திரியிட்டு தீபமேற்றி வழிபடும் பெண்கள் உன்னத பண்புகளைப் பெற்றிடுவார்கள்.
விளக்கை நன்கு தேய்த்து துடைந்து பின்பு ஏற்ற வேண்டும். விளக்கில் விடும் எண்ணெய், நெய், இவற்றுக்கும் உரிய பலன்கள் உள்ளன.
எதை விரும்புகிறோமோ அதற்குரிய எண்ணெயை, விளக்கில் பயன்படுத்தினால், விரும்பியதை அடையலாம்.
சகல விதமான செல்வங்களையும் சுகபோகங்களையும் விரும்புவோர் பசுநெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
குலதெய்வத்தை வழிபடும் போது வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், பசுநெய் மூன்றையும் சமவிகிதத்தில் கலந்து விளக்கில் ஊற்றி ஏற்றிட வேண்டும்.
கணவன்&மனைவியரிடையே அன்பு நீடித்திருக்கவும் உறவினர்கள் நன்மை அடையவும் விளக்கெண்ணெயால் விளக்கேற்ற வேண்டும்.
தேங்காய் எண்ணையால் விளக்கேற்றி, கணபதியை வழிபட்டால், அவருடைய அருளைப் பெறலாம்.
லட்சுமி கடாட்சம் பெற விரும்பும் பெண்கள், பசுநெய்யால் விளக்கேற்றி வழிபடவேண்டும்.
மகாவிஷ்ணுவுக்கு உகந்தது நல்லெண்ணெய் தீபமே. எந்த தெய்வத்தை வழிபடுவதாயிருந்தாலும் நல்லெண்ணெய் ஏற்றது.






