என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • 3 நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்
    • சீக்கியர்கள் சிலர், ‘கோ பேக் ராகுல்’ என எழுதப்பட்ட போஸ்டர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.

    நியூயார்க்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், சான்பிரான் சிஸ்கோ, வாஷிங்டன், நியூயார்க் ஆகிய 3 நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோ, வாஷிங்டனில் நிகழ்ச்சிகளை அவர் முடித்துவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் கலந்து கொண்டார். அப்போது அவரை வரவேற்பதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்த சமயத்தில் ராகுலுக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியது. சாலையோரத்தில் வரிசையாக நின்ற சீக்கியர்கள் சிலர், 'கோ பேக் ராகுல்' என எழுதப்பட்ட போஸ்டர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள், பஞ்சாப்பை தனி நாடாக அறிவிக்கக் கோரி வரும் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் என்பதும், 1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராகுலை கண்டித்து போராட்டம் நடத்தியதும் தெரியவந்தது.

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிடுகிறார்.
    • கடந்த முறை நடந்த துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை எதிர்த்து போட்டியிட்டார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார்.

    குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார். குடியரசு கட்சியில் தன்னை எதிர்த்து வேட்பாளர் தேர்வில் வேறு யாரும் போட்டியிடக் கூடாது என்பதில் டிரம்ப் தீவிரமாக இருந்து கட்சி நிர்வாகத்திடம் ஆதரவு திரட்டி வந்தார்.

    இந்நிலையில், டிரம்பை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட உள்ளார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் டிரம்ப் அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்தார்.

    கடந்த முறை நடந்த துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை எதிர்த்து போட்டியிட்டார்.

    • திடீர் என வாஷிங்டன் நகர் மீது விமானம் பறந்ததால் பரபரப்பு
    • போர் விமானத்திலும் மோதும் வகையில் சென்றதாக தகவல்

    அமெரிக்காவின் முக்கிய நகரான வாஷிங்டன் மீது பறந்த விமானத்தில் இருந்து எந்த பதிலும் கிடைக்காத காரணத்தினால், போர் விமானம் அதை துரத்திச் சென்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு மேல் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 'செஸ்னா 560 சிட்டாசன் வி' என்ற விமானம் பறந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் அந்த விமானத்தை தொடர்பு கொள்ள முயன்றனர்.

    அந்த விமானத்தில் இருந்து பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் எந்த பயனும் இல்லை. இறுதியாக அந்த விமானத்தை நோக்கி போர் விமானம் சென்றது. போர் விமானம் அதிர்வலைகளுடன் பயங்கர சத்தத்துடன் பறந்து அதை விரட்டியடிக்க முயன்றது. 

    இதனால் வீட்டில் இருப்பவர்கள் என்ன ஆனதோ? என பதறியப்படி வானத்தை பார்த்து அச்சம் அடைந்தனர். 

    இறுதியில் வாஷிங்டன் வான் எல்லையில் இருந்து விலகி மலைப்பகுதியில் மோதி விபத்துள்ளானது. அந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது தெரியவில்லை. பயணம் செய்த யாரும் உயிர்ப்பிழைக்க வாய்ப்பில்லை எனவும் தெரிகிறது.

    ஒரு கட்டத்தில் போர் விமானம் மீது அந்த விமானம் மோதுவது போன்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

    • இதற்கு முன்பு பிஸ்பீ என்ற நாய் நீளமான நாக்கு கொண்டதாக சாதனை பட்டியலில் இருந்தது.
    • ஜோயியை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லும் போது மக்கள் அதன் அருகில் செல்ல விரும்புவார்கள்.

    அமெரிக்காவில் லூசியானாவை சேர்ந்த ஜோயி என பெயரிடப்பட்ட லாப்ரடோர்- ஜெர்மன் ஷெப்பர்ட் கலவை கொண்ட நாய், மிக நீளமான நாக்குக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த நாய்க்கு 12.7 சென்டி மீட்டர் நீளம் (5 அங்குலம்) கொண்ட நாக்கு உள்ளது. கால்நடை மருத்துவர் ஒருவர் அந்த நாயின் நாக்கு நீளத்தை அளந்ததை தொடர்ந்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பு பிஸ்பீ என்ற நாய் நீளமான நாக்கு கொண்டதாக சாதனை பட்டியலில் இருந்தது. அதன் நாக்கு 9.49 சென்டி மீட்டர் இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ஜோயி முறியடித்துள்ளது. ஜோயி நாயின் உரிமையாளர்களான சாடி மற்றும் ட்ரூ வில்லியம்ஸ் ஆகியோர் கூறுகையில், ஜோயி 6 வாரமாக இருக்கும் போது நாங்கள் அதனை வாங்கினோம். குட்டியாக இருக்கும் போதே ஜோயின் நாக்கு வாயில் இருந்து அடிக்கடி வெளியேறும். அது இவ்வளவு நீளமாக வளரும் என்று நினைத்தோம். இப்போது சாதனை படைத்துள்ளது.

    நாங்கள் ஜோயியை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லும் போது மக்கள் அதன் அருகில் செல்ல விரும்புவார்கள். நாங்கள் அவர்களை முன்கூட்டியே எச்சரித்து பாதுகாப்பாக அழைத்து செல்வோம் என்றனர். மேலும் ஜோயி பந்துகளை எடுப்பது, அணில்களை துரத்துவது, கார் சவாரி செல்வது, கால்வாயில் நீந்துவது போன்றவற்றை விரும்புவதாகவும், குளிப்பதை வெறுப்பதாகவும் அதன் உரிமையாளர்கள் கூறினர்.

    • ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
    • ஆங்கிலேயர்களின் தவறால் ரெயில் விபத்துக்கு உள்ளானது என காங்கிரஸ் சொல்லவில்லை என்றார்.

    நியூயார்க்:

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நியூயார்க்கில் உள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடந்த ரெயில் விபத்து எனக்கு நினைவிருக்கிறது. ஆங்கிலேயர்களின் தவறால் ரெயில் விபத்துக்கு உள்ளானது என்று காங்கிரஸ் எழுந்து சொல்லவில்லை.

    காங்கிரஸ் மந்திரி, "இது என் பொறுப்பு, நான் ராஜினாமா செய்கிறேன்" என்று கூறினார். எனவே இதுவே எங்கள் வீட்டில் உள்ள பிரச்சனை, நாங்கள் சாக்குப்போக்குகளை கூறுகிறோம் , யதார்த்தத்தை ஏற்கவில்லை.

    நீங்கள் அவர்களிடம் (பாஜக) எதையும் கேளுங்கள், அவர்கள் திரும்பிப் பார்த்து பழியைக் கடந்து செல்வார்கள். ரயில் விபத்து (ஒடிசா) எப்படி நடந்தது என்று கேளுங்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் என்ன செய்தது என்று பேசுவார்கள் என தெரிவித்தார்.

    • ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
    • விபத்தில் பலியானோருக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    நியூயார்க்:

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் விபத்தில் பலியானோருக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்காவில் கையிருப்பு பணத்தின் மதிப்பு வெகுவாக குறைந்தது.
    • நிர்வாக செலவினங்களுக்காக கடன் உச்சவரம்பை நீட்டிக்க முடிவு.

    அமெரிக்காவின் கடன் சுமையை குறைக்க கடன் உச்சவரம்பை உயர்த்த வழிவகுக்கும் திருத்த மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் குடியரசு, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செனட் சபை (மக்களைவை)-க்கு இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. அங்கேயும் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் அடுத்த அதிபர் தேர்தல் வரை அமெரிக்கா நிர்வாக செலவினங்களுக்காக கடனை பெற முடியும்.

    உலகின் வல்லரசாக திகழும் அமெரிக்காவிடமே செலவு செய்ய பணம் இல்லையா? என்ற கேள்வி அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது. ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி (GDP)-யில் இருந்து குறிப்பிட்ட அளவிற்கு கடன்கள் பெற முடியும். வல்லரசான அமெரிக்காவும் கடன் பெற்றுதான் நிர்வாகத்த நடத்துகிறது.

    அமெரிக்கா 31.4 டிரில்லியன் டாலர் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் தற்போது அதையும்விட அதிக பணம் தேவைப்படுவதால் கையிருப்பு பணம் வெகுவாக குறைந்துள்ளது. கடன் வாங்க முடியாவிடில் இலங்கை சிக்கி தவித்தது போன்றும், தற்போது பாகிஸ்தான் பொருளாதா சிக்கலில் தவிப்பது போன்ற சூழலும் ஏற்படும். இதனால்தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருங்கிணைந்து கடன் உச்சவரம்பை நீக்கும் திருத்த மசோதாவிற்கு சம்மதம் தெரிவித்துள்ளன.

    அமெரிக்காவின் மொத்த உற்பத்தி 26.85 டிரில்லியன் டாலர் என கூறப்படுகிறது. ஆனால், 31.4 டிரில்லியன் வரை கடன் பெறலாம் என்பதால், உற்பத்தியை விட அதிக கடன் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கடன் தற்போது உயர்த்தியுள்ளதால் அமெரிக்காவின் கடன் சுமை மேலும் உயரும். எதிர்க்கட்சிகள் செலவினங்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இதுபோன்று உச்சவரம்பை அடிக்கடி உயர்த்தப்பட்டுள்ளது. 2025-ல் அதிபர் தேர்தல் வருவதால் எதிர்க்கட்சிகள் கடும் நெருக்கடி கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

    அமெரிக்காவின் இந்த நிலைக்கு கொரோனா வைரஸ் தொற்றுதான் காரணம். அப்போது பொருளாதாரத்தை சீரமைக்க பல்வேறு சலுகைகளுக்காக பணத்தை செலவிட நேரிட்டது.

    மேலும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த குறுகிய காலத்தில் அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை கணிசமாக உயர்த்தியது. இதனால் அமெரிக்காவின் சில வங்கிகள் திவால் ஆகிவிட்டன. இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    • ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
    • 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    வாஷிங்டன் :

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:-

    ரெயில் விபத்து செய்தியை அறிந்ததும் இதயமே நொறுங்கி விட்டது. இந்தியர்களுடன் அமெரிக்க மக்கள் துணை நிற்பதாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி மீது வாலிபர் ஒரு கத்தியால் சரமாரியாக குத்தினார்.
    • வேறு விஷயத்தை செய்ய நான் இதை கடந்து செல்ல வேண்டி உள்ளது என்றார்.

    இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 1988-ம் ஆண்டு எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதற்கிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி மீது வாலிபர் ஒரு கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் அவர் ஒரு கண் பார்வையை இழந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக சல்மான் ருஷ்டி கடந்த 20-ந் தேதி நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் தன் மீதான கத்திகுத்து தாக்குதல் சம்பவம் பற்றி புத்தகம் எழுத போவதாக சல்மான் ருஷ்டி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    என் மீதான தாக்குதல், என்ன நடந்தது மற்றும் அதன் அர்த்தம் என்ன, தாக்குதல் பற்றி மட்டுமின்றி அதை சுற்றியும் நடந்தது பற்றியும் ஒரு புத்தகத்தை எழுத முயற்சிக்கிறேன். இது ஒரு சிறிய புத்தகம். இது உலகில் எழுதுவதற்கு எளிதான புத்தகம் அல்ல. ஆனால் வேறு விஷயத்தை செய்ய நான் இதை கடந்து செல்ல வேண்டி உள்ளது என்றார்.

    • 2021ம் ஆண்டில் ஜாலிஸ்கோவில் உள்ள டோனாலா நகராட்சியில், 11 பேரின் மனித உடல் உறுப்புகளுடன் சுமார் 70 பைகள் கண்டுபிடிப்பு.
    • 2019ம் ஆண்டில், ஜபோபனின் மக்கள்தொகை இல்லாத பகுதியில் 119 பைகளில் 29 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    மேற்கு மெக்சிகோ, ஜலிஸ்கோ பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் மனித உடல் உறுப்புகளுடன் குறைந்தது 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மே மாதம் 20ம் தேதி முதல் காணாமல் போன 30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் என 7 பேரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் 7 பேரும் வெவ்வேறு நாட்களில் காணாமல் போனதும், ஆனால் இவர்கள் 5 பேரும் ஒரே கால் சென்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தது புலனாய்வு விசாரணையில் தெரியவந்தது.

    இந்நிலையில், பெரிய தொழில்துறை மையமான குவாடலஜாராவின் புறநகர்ப் பகுதியில் ஜபோபன் நகராட்சியில் 40 மீட்டர் (120 அடி) பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை அன்று மனித உடல் உறுப்புகள் கொண்ட 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், " 45 பைகளில் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் சொந்தமான மனித உடல் உறுப்புகள் இருந்தன. தடயவியல் நிபுணர்கள் மனித உறுப்புகளின் அடையாளங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். ஆனால், இவை கண்டுபிடிக்கப்பட்ட அதே பகுதியில்தான் சம்பந்தப்பட்ட கால் சென்டரும் இயங்கி வருகிறது.

    இதன் முதற்கட்ட விசாரணையில், கால் சென்டர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும், இதுதொடர்பான முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக மாற்ற கால் சென்டர் நிறுவன அதிகாரிகள் முயல்வதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

    இதுபோன்று கடந்த 2021ம் ஆண்டில் ஜாலிஸ்கோவில் உள்ள டோனாலா நகராட்சியில், 11 பேரின் மனித உடல் உறுப்புகளுடன் சுமார் 70 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

    மேலும் 2019ம் ஆண்டில், ஜபோபனின் மக்கள்தொகை இல்லாத பகுதியில் 119 பைகளில் 29 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    • அணு ஆயுதம் குறைப்பு காரணமாக அமெரிக்கா- ரஷியா இடையே START ஒப்பந்தம்
    • உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவி வழங்குவதால் ரஷியா ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்தது

    அணு ஆயுதங்களை குறைப்பதற்காக New START (Strategic Arms Reduction Treaty) அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் அமெரிக்கா- ரஷியா இடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அணு ஆயுதம் எங்கு உள்ளது. எங்கிருந்து ஏவப்படுகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போன்ற தரவுகளை பகிர்வது. அணு ஆயுதம் எண்ணிக்கை அதிரிகரிப்பதை தடுப்பது. இரு நாடுகளும் தங்களுக்குள் தரவுகளை பகிர்ந்து கொண்டிருந்தன.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததில் இருந்து அமெரிக்கா- ரஷியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. பல்வேறு நாடுகளை ஒன்றிணைத்து (குறிப்பாக நேட்டோ நாடுகள்) அமெரிக்கா பல்வேறு தடைகளை ரஷியா மீது சுமத்தியது.

    மேலும், அமெரிக்கா உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்கியது. இதனால் உக்ரைன் மீதான போரை முழுமையான வெற்றி என்று ரஷியா கூறமுடியவில்லை. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியாவின் முக்கிய நோக்கம் முறியடிக்கப்பட்டுள்ளது என நேட்டோ நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா அறிவித்ததும் புதின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

    இதனால் ஒப்பந்தத்தை ரஷியா இடைநிறுத்தியது. இதன்மூலம் ரஷியா அணு ஆயுத தரவுகளை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டியதில்லை எனக் தெரிவித்தது.

    இந்த நிலையில், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் வகையில் நாங்களும் அணு ஆயுதம் குறித்த தரவுகளை கொடுப்பதில்லை என முடிவு செய்துள்ளது.

    இதுகுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியதாவது:-

    அமெரிக்கா அணு ஆயுதம் குறித்த தகவல், இருக்கும் இடம் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்காது. ஆனால், கண்டம் விட்டு கண்டம் பாயும், நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் குறித்த தகவல்களை தொடர்ந்து ரஷியாவுக்கு தகவல் கொடுப்போம்.

    அமெரிக்க பிராந்தியத்தில் ரஷியாவின் ஆய்வுக்குழு, அவர்களுக்கான விசா வழங்கும் முறை, START தொடர்பாக ஆய்வு நடத்துவது, விமானப்படையினர் ஆகியோருக்கும் தடைவிதிக்கப்படுகிறது. ரஷியா ஆய்வு விமானங்களுக்கான டிப்ளோமெட்டிக் அனுமதிக்கும் தடைவிதிக்கப்படுகிறது.

    கண்டம் விட்டு கண்டம் பாயும், நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் குறித்த டெலிமெட்ரிக் தகவல்களும் வழங்கப்படாது. இது ஏவுகணை பரிசோதனை செய்யப்படும் விமானத்தில் இருந்து கிடைக்கும் தகவல். இரு நாடுகளும் இந்தத் தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தன.

    START ஒப்பந்தத்தை ரஷியா மீறியதற்காக பதில் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஷியா ஒப்பந்தத்தை மீறியது சட்டப்பூர்வமாக செல்லாது. ரஷியா இந்த ஒப்பந்தத்தின்படி நடந்து கொள்ள சம்மதம் தெரிவித்தால், நாங்களும் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளது.

    ரஷியாவும், அமெரிக்காவும் உலகின் 90 சதவீத அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துகின்றன. START ஒப்பந்தம் அணு ஆயுதங்களை குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். 2010-ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 2026-ல் காலாவதியாகிறது. இந்த ஓப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அமெரிக்கா, ரஷியா 1550 அணு ஆயுதங்கள், நிலம் மற்றும் கடலுக்கு அடியில் இருந்து தாக்கும் ஏவுகணைகள் 700-க்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பதுதான்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போட்டியில் 1.1 கோடி பேர் கலந்துக் கொண்ட நிலையில், கடைசியாக 11 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றினர்.
    • விர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த சர்லோட் வால்ஷ் என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

    அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஸ்பெல்லிங் பீ என்கிற கடினமான சொற்கள் உச்சரிப்பு போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 24வது ஆண்டின் போட்டி மேரிலாந்து மாகாணத்தில் நடைபெற்றது.

    இதில் சுமார் 1.1 கோடி பேர் கலந்துக் கொண்ட நிலையில், கடைசியாக 11 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றினர். இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 14 வயது சிறுவன் தேவ் ஷாஹ் கடினமான 11 வார்த்தையை சரியாக சொல்லி முதல் பரிசை தட்டிச் சென்றார்.

    ப்ளோரிடா மாகாணத்தில் வசித்து வரும் தேவ் ஷாஹ் இந்த ஆண்டின் 22வது சாம்பியன் என்ற பட்டத்தையும் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், சிறுவனுக்கு ரூ.41 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

    இவரை தொடர்ந்து, விர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த சர்லோட் வால்ஷ் என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

    வெற்றி குறித்து பேசிய சிறுவனர் தேவ் ஷாஹ், "என்னால் நம்ப முடியவில்லை, என் கால்கள் இன்னும் நடுங்குகின்றன" என குறிப்பிட்டுள்ளார்.

    ×