ஒடிசா ரெயில் விபத்து - ஐ.நா.சபை பொதுச் செயலாளர் இரங்கல்

ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் பலியானோருக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அண்டோனியோ குட்டரெஸ்
அண்டோனியோ குட்டரெஸ்
Published on

நியூயார்க்:

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில் விபத்தில் பலியானோருக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com