என் மலர்
அமெரிக்கா
- உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
- சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்கா, மிசோரி மாகாணம், கன்சஸ் நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு 9 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கிச்சூடு சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
+2
- அரசின் ரகசிய ஆவணங்களை டிரம்ப் வைத்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
- வருகிற 13-ந் தேதி மியாமி கோர்ட்டில் டிரம்ப் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்கா முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆனால் தனது பதவி காலத்தில் கையாண்ட ஆவணங்களை ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்காமல் அவற்றை தன்னுடன் எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அரசின் ரகசிய ஆவணங்களை டிரம்ப் வைத்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையே ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில் டிரம்ப் மீது 7 கிரிமினல் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவின் மியாமி கோர்ட்டில் நேற்று பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில் டிரம்ப் வீட்டில் இருந்து அதி முக்கியம் வாய்ந்த ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அணு சக்தி திட்டங்கள், அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளின் பாதுகாப்பு, ஆயுத திறன்கள், ராணுவ தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் சாத்தியக் கூறுகள் வெளி நாட்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் ஆகியவை தொடர்பாக ரகசிய ஆவணங்கள் இருந்ததாக பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த 100-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் 11 ஆயிரம் அரசு ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் பாதுகாப்பற்ற முறையில் வைத்து கையாண்டதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் பொய் கூறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக வருகிற 13-ந் தேதி மியாமி கோர்ட்டில் டிரம்ப் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பிரிவில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 100 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.
- ரஷியாவுக்கு ஈரான் டிரோன்கள் வழங்கி வருகிறது என அமெரிக்கா குற்றச்சாட்டு
- உக்ரைன் மீதான போருக்குப்பின் வழங்குவதை நிறுத்துவிட்டோம் எனக் கூறுகிறது ஈரான்
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. முதலில் உக்ரைனை எளிதாக வீழ்த்திவிடலாம் என ரஷியா நினைத்தது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மிகப்பெரிய அளவில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியதால் உக்ரைன் எதிர்த்து போரிட்டு வருகிறது.
மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தவில்லை என்றாலும் தற்பாதுகாப்பை மிகப்பெரிய அளவில் செய்து வருகிறது. இதனால் ரஷியாவால் உக்ரைனின் பெரும்பகுதியை இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உள்ளது.
தற்போது இரு பக்கத்தில் இருந்தம் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நேற்றுகூட இரு நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள ரஷியப் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இனிவரும் காலங்களில் டிரோன்கள், தாக்குதலுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் ஈரான் உதவியுடன் ரஷியா டிரோன் தொழிற்சாலை கட்டிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் டிரோன் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உபகரணங்களை ஈரான் வழங்கி வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உளவுத்துறை மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர், ரஷியாவின் அலபுகா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருந்து அடுத்த வருடம் இந்த தொழிற்சாலை இயக்கத்திற்கு வரும் என புலனாய்வுத்துறை அதிகாரிகள் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் அநேகமாக கட்டப்பட இருக்கும் இடம் இதுவாகத்தான், ஒரு இடத்தின் படத்தையும் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் போருக்காக ஈரான்- ரஷியா டிரோன் தயாரிப்பில் ஈடுபடலாம் என கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டிந்தார்.
ஆனால், உக்ரைன் மீதான போர் தொடங்குவதற்கு முன் ரஷியாவுக்கு டிரோன் வழங்கி கொண்டிருந்தோம். ஆனால் தற்போது வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
ஆனால் ஈரான் தொடர்ந்து ரஷியாவுக்கு ஈரானில் தயாரிக்கப்பட்ட டிரோன்களை வழங்கி வருகிறது. இந்த டிரோன்கள் ஈரானின் அமிராபாத்தில் இருந்து ரஷியாவின் மகாச்கலா என்ற இடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அதன்பிறகு உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என அமெரிக்கா உறுதியாக நம்புகிறது.
- டிரம்ப் மீது வரிசையாக பல விசாரணை நடத்த, இந்த குற்றச்சாட்டுகள் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
- புளோரிடாவில் உள்ள டிரம்பின் வீட்டில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதிபர் பதவியில் தோல்வியடைந்த டிரம்ப், வெள்ளை மாளிகையை காலி செய்து சென்றபோது, முக்கிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக டிரம்பின் வீட்டில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் டிரம்ப் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசாங்க ரகசிய ஆவணங்களை கையாளுவதில் தவறிழைத்ததாக தன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் தனது ட்ரூத் சமூக தளம் மூலமாக தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஏற்கனெவே ஒரு முறை அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்காக போட்டியிடவிருக்கிறார். இதற்காக மும்முரமாக தம்மை டிரம்ப் தயார் செய்து வரும் வேளையில், அவர் மீது வரிசையாக பல விசாரணை நடத்த, இந்த குற்றச்சாட்டுகள் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட செய்தி அதிகாரபூர்வமாக அமெரிக்க நீதித்துறையால் உறுதி செய்யப்படவில்லையென்றாலும், டிரம்பின் வழக்கறிஞர்களிடம், அவர் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நீதித்துறையின் குற்றவியல் விசாரணைக்கான நீண்ட நெடிய வரலாற்றில், ஒரு முன்னாள் அதிபராக பதவி வகித்தவரும், இரண்டாம் முறை குடியரசு கட்சியின் சார்பில் முதன்மை வேட்பாளராகவும் கருதப்படுபவருமான ஒருவர் மீது நீண்ட கால சிறை தண்டனைக்கு வழிவகுக்கக்கூடிய குற்ற விசாரணை நடைபெறப்போவது இதுதான் முதன்முறை.
தன் மீதான குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், செவ்வாய்க்கிழமை தாம் நீதிமன்றம் செல்ல வேண்டியிருப்பதாக கூறினார். பிறகு 20 நிமிடங்களிலேயே, 2024 அதிபர் தேர்தலுக்கான தமது பிரச்சாரத்திற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், "நான் ஒரு அப்பாவி" என்றும், அரசியல் காரணங்களுக்காக வேட்டையாடப்படுவதாகவும் கூறினார்.
இப்பொழுது பதிவாகியுள்ள வழக்குடன் டிரம்ப் மீது ஏற்கனெவே நியூயார்க், வாஷிங்டன், மற்றும் அட்லாண்டா ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ள குற்றச்சாட்டுகளும் சேர்ந்துகொள்வதால், அவர் ஒரு மிகப்பெரிய நீதி விசாரணையை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
டிரம்ப், பாம் பீச் எனப்படும் இடத்தில் உள்ள தனது மிகப்பெரிய "மார்-அ-லாகோ" வீட்டில், அரசாங்க ரகசியங்களாக கருதப்பட வேண்டிய ஆவணங்களை சட்ட விரோதமாக வைத்திருந்ததாகவும், அவற்றை மீட்பதற்கான முயற்சிகளையும் தடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு இதுதொடர்பாக சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித் விசாரித்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதும் டிரம்ப் தனது வீட்டில் 300க்கும் மேற்பட்ட ஆவணங்களை பதுக்கி வைத்திருந்ததாகவும், அவற்றில் 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. கைப்பற்றியதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
- அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
- டிரம்ப் போட்டியிட திட்டமிட்டு உள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க முன்னாள் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் தான் பதவி விலகும் போது தன்னுடன் பல ரகசிய ஆவணங்களை எடுத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் எடுத்துச்சென்ற சுமார் 200 ஆவணங்களை திருப்பி ஒப்படைக்குமாறு அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் டிரம்ப் அதனை திருப்பி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது அவர் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்த குற்றச்சாட்டுகள் விவரம் குறித்து இது வரை தெளிவாக தெரியவில்லை. இருந்த போதிலும் ஒரு முன்னாள் அதிபர் மீது இப்படி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் இது தொடர்பாக மியாமி கோர்ட்டில் வருகிற செவ்வாய்க்கிழமை ஆஜராகும் படி சம்மன் வந்துள்ளதாக தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறும் போது நான் குற்றமற்றவன்.ஒரு முன்னாள் அதிபர் அதுவும் வரலாறு காணாத அளவுக்கு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவருக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என எண்ணவில்லை்.
அமெரிக்க வரலாற்றில் இது ஒரு கறுப்பு தினமாகும். நாம் அனைவரும் ஒன்று இணைந்து அமெரிக்காவை ஒரு ஓழுங்கான நாடாக மாற்ற உழைப்போம் என குறிப்பிட்டு உள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் டிரம்ப் போட்டியிட திட்டமிட்டு உள்ளார். இந்த சூழ்நிலையில் அவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
- பிரதமர் மோடி இம்மாதம் 21-ந் தேதி அமெரிக்கா செல்கிறார்.
- அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
வாஷிங்டன் :
பிரதமர் மோடி இம்மாதம் 21-ந் தேதி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோரது அழைப்பின்பேரில் அவர் செல்கிறார்.
22-ந் தேதி, அவர் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அன்று இரவு, ஜோ பைடனும், ஜில் பைடனும் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கிறார்கள்.
23-ந் தேதி, அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இத்தகவலை அமெரிக்க இந்திய சமுதாய தலைவர் டாக்டர் பாரத் பராய் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
அமெரிக்காவில் சிகாகோவில் ஒரு பிரமாண்ட அரங்கத்தில் 40 ஆயிரம் இந்தியர்களிடையே பிரதமர் மோடியை உரையாற்ற வைக்கலாம் என்று முடிவு செய்தோம். ஆனால், நிகழ்ச்சி நிரல் உறுதி செய்யப்படாததால், அதை இறுதி செய்ய முடியவில்லை.
இறுதியாக, 23-ந் தேதி மாலையில், எங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தார். எனவே, வாஷிங்டனில் உள்ள ரொனால்டு ரீகன் கட்டிடம் மற்றும் சர்வதேச வர்த்தக மையம், பிரதமர் மோடி நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த அரங்கம், 900 இருக்கை வசதி கொண்டது. பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.
23-ந் தேதி மாலை, அமெரிக்க இந்தியர்களிடையே அங்கு பிரதமர் மோடி உரையாற்றுவார். அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இந்தியாவின் வளர்ச்சி பாதையில் வெளிநாட்டு இந்தியர்களின் பங்கு குறித்து அவர் பேசுவார். அத்துடன், அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்கு திரும்புவார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 25 பிரபலங்களை கொண்ட தேசிய அமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, பிரதமர் மோடி வருகை குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 2 அமெரிக்க எம்.பி.க்கள் பேசினர்.
ரிச் மெக்கார்மிக் என்ற எம்.பி. பேசியதாவது:-
பிரதமர் மோடியின் முக்கிய வருகை குறித்து பேச இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். உலகில் நாம் கொண்டுள்ள முக்கியமான உறவுகளில் இதுவும் ஒன்று. இருநாடுகளிடையே நல்லெண்ணத்தை பரப்ப அந்த மனிதர் அமெரிக்கா வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜோ வில்சன் என்ற எம்.பி. பேசுகையில், ''அமெரிக்க-இந்திய நட்புறவு குறித்து பிரதமர் மோடி தனது முந்தைய பயணத்தில் விளக்கி கூறியுள்ளார்'' என்றார்.
- மஞ்சள் நிற புகைமூட்டம் மேன்ஹேட்டன் நகரின் வானுயர்ந்த கட்டிங்களை மூழ்கடிக்க செய்தது.
- இதுவரை ஏற்பட்டதிலேயே மிகவும் மோசமான காற்று மாசு இது என சுகாதார துறை ஆணையர் அஸ்வின் வாசன் தகவல்.
கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டது. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக கனடாவில் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மஞ்சள் நிற புகைமூட்டம் மேன்ஹேட்டன் நகரின் வானுயர்ந்த கட்டிங்களை மூழ்கடிக்க செய்திருக்கிறது. இதன் காரணமாக காற்று மாசு ஏற்பட்டதோடு, விமானங்கள் காலதாமதமாக கிளம்பி சென்றன. மேலும் விளையாட்டு நிகழ்வுகள் தாமதமாக துவங்கப்பட்டன. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இருந்து சிகாகோவின் மேற்கு பகுதி மற்றும் தெற்கு அட்லாண்டா வரை பாதிப்பை ஏற்படுத்தியது.

கனடாவில் இந்த காட்டுத்தீ காரணமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயில் சுமார் 3.8 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு முழுக்க தீயில் கருகின. கனடா வரலாற்றிலேயே மிக மோசமான காட்டுத்தீ இது என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
1960-க்களில் இருந்து இதுவரை ஏற்பட்டதிலேயே மிகவும் மோசமான காற்று மாசு இது என நியூயார்க் நகர சுகாதார துறை ஆணையர் அஸ்வின் வாசன் தெரிவித்துள்ளார். இந்த நிலை, பல நாட்கள் வரை நீடிக்கும் என்றும், இது அவசரகால நெருக்கடி என்று நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சூல் தெரிவித்தார்.
- இந்த செயல்முறை ஏற்கனவே ராஜ நாகம், வேளா மீன் போன்ற சில உயிரினங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
- கன்னிப் பிறப்பு தன்மை கொண்ட விலங்குகள், அவற்றின் சொந்த மரபணுப் பொருளை இணைக்கும் திறன் பெற்றவை ஆகும்.
அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை ஒன்று எவ்வித சேர்க்கையும் இன்றி முட்டைகளில் கரு உருவாகியுள்ளது.
16 ஆண்டுகளாக தனிமையில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை தானே இனப்பெருக்கம் செய்யும் இந்த செயல்முறை கன்னி பிறப்பு என்று கூறப்படுகிறது.
இந்த செயல்முறை ஏற்கனவே ராஜ நாகம், வேளா மீன் போன்ற சில உயிரினங்களில் பார்த்தீனோஜெனிசீஸ் என்று அழைக்கப்படும் கன்னி பிறப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னிப் பிறப்பு மூலஎஎம் முதலை ஒன்று தானே இனப்பெருக்கம் செய்து கருவுற்றுள்ளது.
இந்த கன்னிப் பிறப்பு தன்மை கொண்ட விலங்குகள், அவற்றின் சொந்த மரபணுப் பொருளை இணைக்கும் திறன் பெற்றவை என்றும், இதன் மூலம் கன்னிப் பிறப்பு நிகழ்வதாகவும் ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.
- என்ஜின் பழுது குறித்து தகவல் தெரிவித்து அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது.
- பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என விமான நிறுவனம் தெரிவித்தது.
வாஷிங்டன்:
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அதில், 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணித்தனர். இந்த விமானம் பறந்துகொண்டிருந்தபோது ஒரு என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டறிந்த விமானி, விமானத்தை அருகில் உள்ள ரஷியாவுக்கு திருப்பினார்.
ரஷியாவின் மகாதன் விமான நிலையத்தை நெருங்கியதும், விமானத்தின் என்ஜின் பழுது குறித்து தகவல் தெரிவித்து அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி கிடைத்ததையடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என விமான நிறுவனம் தெரிவித்தது.
அமெரிக்கா நோக்கி வந்த விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அமெரிக்கா வந்த விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிவோம். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மேலும், அந்த விமானத்தில் எத்தனை அமெரிக்க குடிமக்கள் இருந்தனர் என்பதை இப்போது உறுதிப்படுத்த முடியவில்லை. பயணிகள் தங்கள் பாதையில் செல்ல வேண்டிய இடத்திற்கு மாற்று விமானத்தை அனுப்ப உள்ளனர்" என்றார்.
- இம்மாத இறுதியில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
- அமெரிக்காவுடன் பல நிலைகளில் இந்தியா ஒரு வலுவான நட்புறவு கொண்டிருக்கிறது.
வாஷிங்டன்:
இந்திய ஜனநாயகத்தின் ஆரோக்கியம் குறித்து தெரிவிக்கப்பட்ட கவலை தரும் கருத்துக்களை புறந்தள்ளிய வெள்ளை மாளிகை, இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் என்றும் புதுடெல்லி சென்று வரும் யாரும் இதை காண முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் மோடி இம்மாத இறுதியில் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் என்றும் அதை புதுடெல்லி சென்று யாரும் தெரிந்து கொள்ளலாம் என்றும், ஜனநாயக அமைப்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியம் குறித்தும் இரு நாடுகளுக்கிடையே கருத்து பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என தாம் எதிர் நோக்குவதாகவும் கூறினார்.
மேலும் அவர் மேலும் கூறியதாவது:-
மோடியின் தற்போதைய அமெரிக்க வருகை ஆழமான, வலிமையான கூட்டுறவு மற்றும் நட்பிற்கானது. அதை மேலும் மேம்படுத்த எதிர்நோக்குகிறோம். அமெரிக்காவுடன் பல நிலைகளில் இந்தியா ஒரு வலுவான நட்புறவு கொண்டிருக்கிறது.
இதற்கு மேலும் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்தியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை இரு தரப்பில் மட்டுமல்ல, பல தளங்களில் பல தரப்புகளை உள்ளடக்கியவை. இவையனைத்தையும் குறித்து பேசவும், இரு நாடுகளுக்கிடையே நட்பை மேம்படுத்தி வலுப்பெற செய்யவும், பிரதமர் மோடியின் வருகையை அமெரிக்க அதிபர் மிகவும் எதிர்நோக்கியுள்ளார்.
ஷாங்க்ரீலா உரையாடலில் நீங்கள் அதை கண்டிருப்பீர்கள். ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின், இந்தியாவுடனான கூடுதல் ராணுவ ஒத்துழைப்பு குறித்து தொடர இருப்பதை குறிப்பிட்டார். இரண்டு நாடுகளுக்கிடையே நல்ல பொருளாதார வர்த்தகம் நடைபெற்று வருகிறது. பசிபிக் குவாட் அமைப்பில் இந்தியா ஒரு உறுப்பினர். இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விஷயங்களில் இந்தியா ஒரு முக்கியமான நட்புறவுள்ள நாடு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒட்டுமொத்தமாக 2022-ம் நிதியாண்டில் எச்-1பி விசா வழங்கப்படும் எண்ணிக்கை 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
- பல ஆண்டுகளாக 70 சதவீதத்துக்கு அதிகமாக எச்-1பி விசாக்களை இந்தியர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்தியர்கள் அதிக அளவு பயன் அடைந்து வருகிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையில் பலர் எச்-1பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்கிறார்கள்.
இதற்கிடையே அமெரிக்காவில் 2022-ம் நிதியாண்டில் அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை மூலம் 4.41 லட்சம் எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 791 விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இது 72.6 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக சீனாவை சேர்ந்த 55 ஆயிரத்து 38 பேரும் (12.5 சதவீதம்), கனடாவை சேர்ந்த 4 ஆயிரத்து 235 பேரும் (ஒரு சதவீதம்) எச்-1பி விசா பெற்றுள்ளனர்.
இதில் ஆரம்ப வேலைக்கான எச்-1பி விசாக்கள் மற்றும் விசா நீட்டிப்புகள் ஆகியவை அடங்கும். ஒட்டுமொத்தமாக 2022-ம் நிதியாண்டில் எச்-1பி விசா வழங்கப்படும் எண்ணிக்கை 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
2021-ம் நிதியாண்டில் 3.01 லட்சம் இந்தியர்கள் எச்.1பி விசா பெற்றனர். கடந்த நிதியாண்டில் 3.20 லட்சம் பேர் விசாக்கள் பெற்றுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் எச்-1பி விசா பெறுவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்கள்.
பல ஆண்டுகளாக 70 சதவீதத்துக்கு அதிகமாக எச்-1பி விசாக்களை இந்தியர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு ஆண்டு இந்தியர்கள் எச்-1பி விசா பெறுவது உயர்ந்தபடி இருக்கிறது.
அதேவேளையில் சீனர்கள் எச்-1பி பெறுவது 0.1 சதவீதம் மட்டுமே அதிகரித்து இருக்கிறது.
- மாணவர்களின் குறும்புத்தனம் சில நேரங்களில் எல்லை மீறி சென்று விடும்.
- மாணவர்கள் சிலர் ரியல் எஸ்டேட் இணையதளத்தில் பள்ளிக்கூடத்தை விற்கும் விதமாக விளம்பரம் செய்துள்ளனர்.
மாணவர்களின் குறும்புத்தனம் சில நேரங்களில் எல்லை மீறி சென்று விடும். அதை நிரூபிப்பது போன்று ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அங்குள்ள மேரிலேண்ட் பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் ரியல் எஸ்டேட் இணையதளத்தில் பள்ளிக்கூடத்தை விற்கும் விதமாக விளம்பரம் செய்துள்ளனர்.
அதனை ஒருவர் ஸ்கிரிஷாட் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டார். அதில், இது நல்ல பகுதி நேர சிறைச்சாலை. இதில் இருக்கும் 15 கழிவறைகளிலும் வடிகால் பிரச்சினை இருக்கிறது. ஆனால் இங்கு நல்ல சமையல் அறை, உணவருந்தும் அறை உட்பட தனியாக கூடைப்பந்து அரங்கும் இருக்கிறது. இங்கு உங்களின் சொந்தக்காரர்களான எலிகள், பூச்சிகள் உங்களை அலறவைக்கும் என கூறியுள்ளனர்.
மேலும் இதன் விலை 42,069 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.34 லட்சம்) என மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மாணவர்களின் இந்த செயலை பார்த்து இணைய தள வாசிகள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.






