என் மலர்
அமெரிக்கா
- 9 நீதிபதிகளில் ஆறு பேர் தடைக்கு ஆதரவு
- 1960-ல் இருந்து இந்த நடைமுறை அமலில் இருந்து வந்தது
அமெரிக்காவில் பல்லைக்கழக மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களது இனத்தை குறிப்பிடும் நடைமுறை இருந்து வந்தது. இதற்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடைவித்துள்ளது. 1960-ல் இருந்து இந்த நடைமுறை அமலில் இருந்து வந்தது. தற்போது அதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
மாணவர்கள் அவர்களுடைய அனுபவங்கள் மற்றும் திறமைகள் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். இனத்தின் அடிப்படையில் அல்ல என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
மொத்தம் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 6 நீதிபதில் தடைக்கு ஆதரவு அளித்தனர். 3 நீதிபதில் தடைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
- 76 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த காட்டுத்தீ எரிந்து வருகிறது.
- சுமார் 160 மில்லியன் டன் கார்பன் இதுவரை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாஷிங்டன் :
கனடாவின் ஆல்பர்ட்டா பகுதியில் கடந்த மாதம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. 76 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 160 மில்லியன் டன் கார்பன் இதுவரை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அண்டை நாடான அமெரிக்காவின் டெட்ராய்ட், சிகாகோ மற்றும் மினியாபோலீஸ் நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது. இதனால் அங்கு சுமார் 8 கோடி மக்கள் மோசமான காற்றை சுவாசிப்பதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புகையினை சுவாசித்தால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், அவ்வாறு வெளியில் செல்லும்போது என்-95 முக கவசங்களை அணிந்து கொள்ளும்படியும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- முந்தைய கின்னஸ் சாதனை படைத்த நாயின் நாக்கின் அளவு மூன்று முதல் நான்கு அங்குலம் இடையில் இருந்துள்ளது.
- முந்தைய சாதனையாளரான மோச்சியின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்ட ராக்கியின் உரிமையாளர் போட்டிக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தார்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் சேர்ந்த நாய் ஒன்று, 5.6 அங்குலங்கள் நீளமான நாக்கு கொண்டுள்ளதை அடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
பிராட் மற்றும் கிரிஸ்டல் வில்லியம்ஸின் 9 வயதான பாக்ஸர் வகையை சேர்ந்த நாய் ராக்கி. இந்த நாய்க்கு வழக்கத்திற்கு மாறாக நீண்ட நாக்கு இருப்பதை உரிமையாளர்கள் அறிந்தனர். இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்ததால் கின்னஸ் சாதனையில் போட்டியிட உரிமையாளர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
முந்தைய சாதனையாளரான மோச்சி என்கிற நாயின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்ட ராக்கியின் உரிமையாளர்கள் போட்டிக்கு விண்ணப்பிக்க முடிவு செய்தனர்.
அப்போதுதான், முந்தைய கின்னஸ் சாதனை படைத்த நாயின் நாக்கின் அளவு மூன்று முதல் நான்கு அங்குலம் இடையில் இருப்பதாகச் சொன்னார்கள். இதை அறிந்தவுடன் ராட் மற்றும் கிரிஸ்டல் ஆகியோர் இது தங்களுக்கு கிடைத்த ஒரு அறிய வாய்ப்பாக கருதி விண்ணப்பித்தனர்.
இதற்கான சமர்ப்பிப்பு செயல்முறை நீண்ட மற்றும் கடினமானதாக இருந்ததாகவும், போட்டிக்கு விண்ணப்பிக்கும் முன் ராக்கியின் நாக்கு அளவீடுகளை இரண்டுக்கு அல்லது மூன்று முறை சாிபார்த்து பின்னர் சமர்ப்பித்ததாகவும் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கின்னஸ் குழுவினர் தங்கள் கால்நடை மருத்துவரான டாக்டர் பெர்னார்ட்டை ராக்கியின் நாக்கை அளவீடு செய்ய அனுப்பியுள்ளனர். அளவு எடுத்த டாக்டர், "ராக்கி சாதனைக்கு தகுதியானது" என தெரிவித்தார்.
இந்நிலையில், ராக்கி 5.6 அங்குல நீள நாக்கு கொண்ட நாய் என்கிற பட்டத்துடன் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
- எண்ணற்ற நபர்களின் பதிப்புரிமை மற்றும் தனியுரிமையை பெருமளவில் மீறியிருக்கிறது என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
- வலைதளங்களில் உள்ள கோடிக்கணக்கான வார்த்தைகளை வைத்து இந்த செயலியின் மென்பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒரு சட்ட நிறுவனம், சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருள் செயலியை உருவாக்கிய ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருக்கிறது.
ஓபன்ஏஐ நிறுவனம் அதன் மென்பொருள் தொழில்நுட்ப செயலியின் உருவாக்கத்திற்காக, இணையத்திலிருந்து, "டேட்டா ஸ்கிரேப்பிங்" (Data Scraping) என்ற இணையதளத்தில் உள்ள தகவல்களை எடுத்து பயன்படுத்தும் வழிமுறையை கையாண்டு, எண்ணற்ற நபர்களின் பதிப்புரிமை மற்றும் தனியுரிமையை பெருமளவில் மீறியிருக்கிறது என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
கோடிக்கணக்கான இணைய பயனர்களின் சமூக ஊடக கருத்துகள், வலைப்பதிவு இடுகைகள், விக்கிபீடியா வலைதளத்தின் கட்டுரைகள் மற்றும் குடும்ப சமையல் குறிப்புகள் போன்ற எண்ணற்ற தகவல்களை ஓபன்ஏஐ பயன்படுத்தும் போது அவர்களின் உரிமைகளை அது தன்னிச்சையாக மீறியிருக்கிறதா, இல்லையா என்கின்ற ஒரு புதிய கோட்பாட்டை இந்த வழக்கு பரிசோதிக்க முயல்கிறது என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வழக்கின் பின்னணியில் உள்ள சட்ட நிறுவனமான கிளார்க்சன், தரவு மீறல்கள் முதல் தவறான விளம்பரம் வரையிலான பிரச்சனைகளில் பெரிய குழுவின் சார்பாக வழக்கு தாக்கல் செய்வதில் அனுபவமிக்க நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான ரியான் கிளார்க்சன் கூறும்போது, "அதிக சக்தி வாய்ந்த இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக, தங்களின் தகவல்கள் திருடப்பட்டவர்கள் மற்றும் வணிக ரீதியாக தங்கள் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இவ்வழக்கில் பிரதிநிதித்துவம் கிடைத்திட எங்கள் நிறுவனம் விரும்புகிறது" என்றார்.
மேலும், "வலைதளங்களில் உள்ள கோடிக்கணக்கான வார்த்தைகளை வைத்து இந்த செயலியின் மென்பொருள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வார்த்தைகளுக்கு உண்மையான உரிமையாளர்கள், வலைதளங்களில் தங்கள் பதிவுகளை வெளியிடும் நபர்கள்தான். அவர்களில் எவரும் இத்தகைய ஒரு நிறுவனம் தங்கள் லாபத்திற்காக இவற்றை பயன்படுத்தி கொள்ள ஒப்புதல் வழங்கவில்லை" என ரியான் கூறியிருக்கிறார்.
குறுகிய காலங்களிலேயே மிகவும் பிரபலமடைந்து விட்ட இந்த நிறுவனத்திற்கெதிரான இந்த வழக்கின் போக்கை தகவல் தொழில்நுட்ப ஆர்வலர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
- நிதியில் சுமார் 500 மில்லியன் டாலர்கள் பட்ஜெட் ஆதரவிற்காக ஒதுக்கப்படும்.
- 200 மில்லியன் டாலர்கள் நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நலன்புரி ஆதரவிற்காக ஒதுக்கப்படும்.
கொலராடோ:
1948-ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இலங்கை நாட்டின் அந்நிய செலாவணி வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தாததைத் தொடர்ந்து, இலங்கை மிக மோசமான நிதி நெருக்கடியுடன் போராடி வருகிறது.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய பலதரப்பு முகவர்களிடமிருந்து இலங்கை எதிர்பார்க்கும் 4 பில்லியன் டாலர்கள் வரை கூடுதல் நிதியை IMF கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர் பிணை எடுப்பிற்கு மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது.
மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) செய்த ஒப்பந்தத்திற்குப் பிறகு நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான வரவு-செலவு மற்றும் நலன்புரி ஆதரவாக 700 மில்லியன் டாலர்களை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
நிதியில் சுமார் 500 மில்லியன் டாலர்கள் பட்ஜெட் ஆதரவிற்காக ஒதுக்கப்படும் என்றும் மீதமுள்ள 200 மில்லியன் டாலர்கள் நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நலன்புரி ஆதரவிற்காக ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான இயக்குனர் பாரீஸ் ஹேடட்- செர்வோஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், " ஒரு கட்ட அணுகுமுறையின் மூலம், உலக வங்கி குழுவின் மூலோபாயம் ஆரம்பகால பொருளாதார ஸ்திரப்படுத்தல், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இந்த சீர்திருத்தங்கள் நாட்டை மீண்டும் பசுமையான, நெகிழ்ச்சியான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய பாதையில் கொண்டு செல்ல முடியும்" என்றார்.
- பில் ஸ்ட்ரிங்கர் மட்டும் விமான நிலையத்திலேயே காத்திருந்தார்.
- விமானம் புறப்படுவதற்கு முன்பு இறுதி நேரத்தில் யாராவது வருவார்கள் என எதிர்பார்த்தேன்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் பில் ஸ்ட்ரிங்கர். இவர் ஒக்லஹோமா சிட்டியில் இருந்து வட கரோலினாவின் சார்லோட் வரை விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்திருந்தார்.
அதன்படி அவர் விமான நிலையம் வந்த போது குறிப்பிட்ட விமானம் தாமதமாக வரும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் செல்வதற்கு பயணிகள் விமான நிலையத்திலேயே காத்திருந்தனர். ஆனால் சிறிது நேரம் கழித்து மற்றொரு அறிவிப்பு வெளியானது. அதில் விமானம் 18 மணி நேரம் தாமதமாக வரும் என கூறப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
ஆனால் பில் ஸ்ட்ரிங்கர் மட்டும் விமான நிலையத்திலேயே காத்திருந்தார். பின்னர் 18 மணி நேரம் கழித்து வந்த விமானத்தில் அவர் மட்டும் ஏறி பயணம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைத்தளங்களில் படத்தை பகிர்ந்துள்ளார். அதில் விமானம் புறப்படுவதற்கு முன்பு இறுதி நேரத்தில் யாராவது வருவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் யாரும் வரவில்லை. இதனால் விமானத்தில் தன்னந்தனியாக பயணம் செய்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. 18 மணி நேர காத்திருப்புக்கு கிடைத்த பரிசாக, விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் என்னை மரியாதையாக நடத்தினார்கள். எனக்காகவே அளிக்கப்பட்ட 'பர்சனல் பார்ட்டி' போல இந்த பயணம் இருந்தது என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
- விமானம் தரையிறங்கும்போது லேண்டிங் கியர் வேலை செய்யாததால் பதற்றம் ஏற்பட்டது.
- பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள சார்லோட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று டெல்டா விமானம் ஒன்று, முன்பக்க லேண்டிங் கியர் இல்லாமல் அவசரமாக தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தனது அதிகாரபூர்வ முகநூலில் டெல்டா விமான நிறுவனம் பதிவிட்டுள்ளது. ஓடுபாதை மூடப்பட்டதாகவும், ஓடுபாதையில் இருந்து அந்த விமானத்தை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், மேலும் விரைவில் ஓடுபாதை திறக்கப்படும் என்றும் பதிவிட்டிருந்தது.
டெல்டா விமான நிறுவனம் அளித்திருக்கும் தகவல்களின்படி, அட்லாண்டாவிலிருந்து காலை 07:25 மணியளவில் புறப்பட்ட அந்த போயிங் 717 ரக விமானத்தில் 96 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 3 விமான பணிப்பெண்கள் இருந்திருக்கின்றனர். தரையிறங்கியதும் அவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு விட்டனர்.
அந்த விமானம் சார்லோட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கும்போது, முன்பக்க லேண்டிங் கியர் பாதுகாப்பாக இல்லை என்ற சமிக்ஞை குறிப்பை விமானிகள் கண்டனர். இதனை ஆராயவும் செய்தனர். பின்னர் விமானம் சார்லோட்டில் உள்ள கட்டுப்பாட்டு மைய கோபுரத்தை கடந்து சென்றபோது, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானத்தின் முன்பகுதியை பார்த்து ஆய்வு செய்தனர்.
இதில் முன்பக்க லேண்டிங் கியர் கதவுகள் திறந்திருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், கியர் கீழே இறங்காமல் இருந்திருக்கிறது. அதன்பின்னர் விமானத்தை அப்படியே தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. ஒரு கடினமான தரையிறங்குதலுக்கு தயாராகுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு, பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
பயணிகளில் ஒருவரான கிறிஸ் ஸ்கோடார்சாக் கூறும்போது, விமானம் தரையிறங்கும்போது எந்த பெரிய குழப்பமும் இல்லை என்றும் விமானத்தில் இருந்த பணிக்குழு சிறப்பாக செயல்பட்டதாகவும் கூறி அவர்களை பாராட்டினார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் கூறியிருக்கிறது.
- நீண்ட தேடலுக்கு பிறகு நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
- இந்த பயங்கர விபத்து குறித்து அமெரிக்க கடலோர காவல்படை விசாரணையை தொடங்கியது.
வாஷிங்டன்:
ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ் எனும் நிறுவனத்தின் டைட்டன் எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு சென்றது.
வட அட்லாண்டிக் கடலின் கேப் கோட் எனும் இடத்திலிருந்து, கிழக்கே 900 மைல் தொலைவில் சுமார் 13,000 அடி ஆழத்தில், அதனிடமிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போனது. நீண்ட தேடுதலுக்கு பின், துரதிர்ஷ்டவசமாக, அது வெடித்து சிதறியதாகவும், இதில் பயணித்த அனைவரும் பலியானார்கள் எனவும் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த பயங்கர விபத்து குறித்து அமெரிக்க கடலோர காவல்படை விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளில் இருந்து மனித எச்சங்களை மீட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களை அமெரிக்காவிற்கு கொண்டு வருவதாகவும் அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடரில் உள்ள துறைமுகத்திற்கு திரும்புவது நீர்மூழ்கிக் கப்பல் ஏன் வெடித்தது என்பதற்கான விசாரணையின் முக்கிய பகுதியாகும் என தெரிவித்தது.
- இதுவரை, நான்கு வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
- பல வாகனங்கள் இன்னும் எரிந்து கொண்டிருக்கின்றன.
கலிபோர்னியாவின் பெரிஸில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் தீ பரவி வருகிறது. இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இது வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.விமானம் மூலமும் தீயை கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.
இதில், பல வீடுகள் மற்றும் கட்டமைப்புகள், பல வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.
இதுவரை, நான்கு வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும், வாகனங்கள் பல இன்னும் எரிந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அங்கு, மக்கள் கட்டாயம் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- பூமியில் இருந்து 33 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்குள் விண்கல் கடந்து செல்கிறது.
- சமீபத்தில் பூமிக்கு மிக அருகில் 2023 ஜெஎல்1 என்ற விண்கல் கடந்து செல்லும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாஷிங்டன்:
விண்வெளியில் ராட்சத விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவற்றில் சில விண்கற்கள் பூமிக்கு அருகில் வந்து கடந்து செல்கின்றன.
இந்நிலையில் 298 அடி அகலம் கொண்ட ராட்சத விண்கல் இன்று பூமியை கடந்து செல்கிறது. 2013 டபிள்யூ-வி.44 என்று பெயரிடப்பட்ட இந்த ராட்சத விண்கல்லை அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்த விண்கல்லை நாசா 2013-ம் ஆண்டு கண்டு பிடித்தது. இது ஒலியின் வேகத்தை விட 34 மடங்கு வேகத்தில் வினாடிக்கு 11.8 கி.மீ வேகத்தில் பயணிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த ராட்சத விண்கல் இந்திய நேரப்படி இன்று பிற்பகலில் பூமிக்கு மிக அருகில் வந்து கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 33 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்குள் விண்கல் கடந்து செல்கிறது.
ராட்சத விண்கல் கடந்து பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது. சமீபத்தில் பூமிக்கு மிக அருகில் 2023 ஜெஎல்1 என்ற விண்கல் கடந்து செல்லும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது பூமியில் இருந்து 24.90 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என்றும் இது மணிக்கு 26 ஆயிரத்து 316 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும் தெரிவித்தனர்.
- உக்ரைனின் எதிர் தாக்குதலை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவி அமைந்துள்ளது
- 41-வது முறையாக அமெரிக்கா ஆயுத உதவி வழங்க இருக்கிறது
ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட அதன் அண்டை நாடான உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து ஓராண்டிற்கும் மேலாக போராடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் உக்ரைனுக்கு, 50-க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகள் உட்பட 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கும் என பென்டகன் அறிவிக்கவிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மெதுவாக நகர்ந்து செல்லும் உக்ரைனின் எதிர் தாக்குதலை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவி அமைந்துள்ளது. இந்த உதவித்தொகை குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 2022-ல் உக்ரைனுக்குள் ரஷிய படையெடுப்பிற்கு பிறகு, அமெரிக்க அதிபரின் சிறப்பு அதிகாரத்தின் (Drawdown Authority) மூலம் அமெரிக்கா, ராணுவ ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவது இது 41-வது முறையாகும்.
அதிகாரிகளின் அறிவிப்பின்படி, உயர்-மொபிலிட்டி பீரங்கி ராக்கெட் அமைப்பு (HIMARS) மற்றும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகளுடன், 30 பிராட்லி சண்டை வாகனங்கள் மற்றும் 25 கவச ஸ்ட்ரைக்கர் வாகனங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் ஆயுத தொகுப்பில் அடங்கும்.
இந்த தொகுப்பில் ஈட்டி மற்றும் அதிவேக கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணைகள் (HARM Missiles), தடை-நீக்கும் உபகரணங்கள், தகர்த்தல் தளவாடங்கள் (Demolition Munitions) ஆகியவையும் அடங்கும்.
- லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியதற்காக 2019-ம் ஆண்டு ஜான் குட்எனப் நோபல் பரிசு பெற்றார்.
- இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார்.
வாஷிங்டன்:
லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானி ஜான் குட்எனப் மரணம் அடைந்தார். வயது மூப்பு காரணமாக 100-வது வயதில் அவரது உயிர் பிரிந்தது.
செல்போன், கணினி மற்றும் மின்சார கார்கள் வரையிலான சாதனங்களுக்கு ரீசார்ஜபிள் ஆற்றலுடனான லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியதற்காக 2019-ம் ஆண்டு ஜான் குட்எனப் நோபல் பரிசு பெற்றார்.
வேதியியலுக்கான இந்த நோபல் பரிசை, அமெரிக்காவின் எம்.ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் அகிரா யோஷினோ ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.
1980-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது ஜான் குட்எனப் லித்தியம் அயன் பேட்டரியை கண்டுபிடித்தார். 1922-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த அவர், அமெரிக்காவில் வளர்ந்தார். யேல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார். 2011-ம் ஆண்டு ஜான் குட்எனப்புக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவியலுக்கான குடியரசு தலைவர் பதக்கம் வழங்கி கவுரவித்தார். ஜான் குட்எனப் கண்டுபிடித்த லித்தியம்-அயன் பேட்டரி, தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.






