search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Giant Meteorites"

    • பூமியில் இருந்து 33 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்குள் விண்கல் கடந்து செல்கிறது.
    • சமீபத்தில் பூமிக்கு மிக அருகில் 2023 ஜெஎல்1 என்ற விண்கல் கடந்து செல்லும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வாஷிங்டன்:

    விண்வெளியில் ராட்சத விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவற்றில் சில விண்கற்கள் பூமிக்கு அருகில் வந்து கடந்து செல்கின்றன.

    இந்நிலையில் 298 அடி அகலம் கொண்ட ராட்சத விண்கல் இன்று பூமியை கடந்து செல்கிறது. 2013 டபிள்யூ-வி.44 என்று பெயரிடப்பட்ட இந்த ராட்சத விண்கல்லை அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    இந்த விண்கல்லை நாசா 2013-ம் ஆண்டு கண்டு பிடித்தது. இது ஒலியின் வேகத்தை விட 34 மடங்கு வேகத்தில் வினாடிக்கு 11.8 கி.மீ வேகத்தில் பயணிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த ராட்சத விண்கல் இந்திய நேரப்படி இன்று பிற்பகலில் பூமிக்கு மிக அருகில் வந்து கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 33 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்குள் விண்கல் கடந்து செல்கிறது.

    ராட்சத விண்கல் கடந்து பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது. சமீபத்தில் பூமிக்கு மிக அருகில் 2023 ஜெஎல்1 என்ற விண்கல் கடந்து செல்லும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது பூமியில் இருந்து 24.90 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என்றும் இது மணிக்கு 26 ஆயிரத்து 316 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும் தெரிவித்தனர்.

    ×