என் மலர்
பாகிஸ்தான்
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 169 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து 170 ரன்களை எடுத்து வென்றது.
லாகூர்:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் பாகிஸ்தான் 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 6வது டி-20 போட்டி லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 59 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் வில்லி மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி 41 பந்தில் 88 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்த தொடரில் தற்போது 3-3 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனிலை பெற்றுள்ளன.
- நீதிபதியை மிரட்டியதாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இம்ரான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
- பெண் நீதிபதி விடுமுறையில் உள்ளதால் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாக கூறினார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் உதவியாளர் ஷாபாஸ் கில், தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், காவல்துறை அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் தனது அரசியல் எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
மேலும் காவல்துறை வேண்டுகோளின்படி, கில்லை இரண்டு நாள் காவலில் எடுக்க அனுமதி வழங்கியதற்காக பெண் நீதிபதி ஜெபா சவுத்ரி மீது நடவடிக்கை எடுக்க உள்ளதால் அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இம்ரான்கான் தமது பேச்சின்போது குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து அவர் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தமது பேச்சிற்காக மன்னிப்பு கேட்க இன்று அவர் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் தமது வழக்கறிஞருடன் ஆஜரானார். நான் நீதித்துறை மாஜிஸ்திரேட் ஜெபா சவுத்ரியிடம் மன்னிப்பு கேட்க வந்துள்ளேன் என்று தமது டுவிட்டர் பதிவில் இம்ரான் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் நீதிபதி விடுப்பில் இருப்பதாக நீதிமன்ற ஊழியர்கள் இம்ரான்கானிடம் தெரிவித்தனர். இதையடுத்து இம்ரான் கான் வருகை தந்ததாகவும், அவரது வார்த்தைகள் நீதிபதியின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், இதை நீதிபதி ஜெபா சவுத்ரியிடம் நீங்கள் சொல்ல வேண்டும், என்று கேட்டுக் கொண்ட இம்ரான்கான் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.
- லண்டன் அவென்பீல்ட் குடியிருப்பில் ஆடம்பரமான 4 வீடுகளை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
- விசாரணை அதிகாரியின் கருத்தை ஆதாரமாக கருத முடியாது என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் ஆளும் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் துணைத்தலைவர் மரியம் நவாசுக்கு, அவன்பீல்டு குடியிருப்பு ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவரது கணவர் சப்தாருக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதன்மூலம் மரியம் நவாஸ் (வயது 48) தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தார். இதையடுத்து சிறைத்தண்டனையை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பால் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி விடுதலை செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் லண்டனின் அவென்பீல்ட் குடியிருப்பில் ஆடம்பரமான 4 வீடுகளை வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, விசாரணை அதிகாரியின் கருத்தை ஆதாரமாக கருத முடியாது என்று தெரிவித்தது. கூட்டு விசாரணைக் குழு எந்த உண்மைகளையும் முன்வைக்கவில்லை, அது தகவல்களை மட்டுமே சேகரித்து கொடுத்துள்ளது என்று நீதிபதி கயானி குறிப்பிட்டார்.
வழக்கின் முடிவில், அரசுத் தரப்பு ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறிவிட்டதாக நீதிமன்றம் கூறி மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்துள்ளது. இதனால் மரியம் நவாஸ் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளார்.
- அடையாளம் தெரியாத நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
- காயமடைந்த சீனர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
கராச்சி:
பாகிஸ்தானின் கராச்சி நகரின் சதார் பகுதியில் செயல்பட்டு வரும் சீன பல் மருத்துவமனையில் இருந்தவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இதில் சீனர் ஒருவர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்ததாக பாகிஸ்தான் ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஆசாத் ரசா தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்தது.
- இந்த விபத்தில் 2 ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம் 2 ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.
பலுசிஸ்தானின் ஹர்னி நகரில் உள்ள ஹோஸ்ட் என்ற பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது.
இதில் 2 தளபதிகள் உள்பட 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவலறிந்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 67 பந்துகளில் 88 ரன் குவித்தார்.
- டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
கராச்சி:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, அந்நாட்டு அணியுடன் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை முடிந்த 3 போட்டிகளின் முடிவில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.
இந்நிலையில் 4வது டி20 ஆட்டம் கராச்சி நகரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஒவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஸ்வான் 67 பந்துகளில் 88 ரன்களும், பாபர் அசாம் 28 பந்துகளில் 36 ரன்னும் எடுத்தனர். ஷான் மசூத் 21 ரன் அடித்தார்.
இதனைத்தொடர்ந்து 167 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. அந்த அணி வீரர் பென் டுக்கெட் 33 ரன்னும், ஹாரி புரூக் 34 ரன்னும் அடித்தனர். கேப்டன் மொயின் அலி 29 ரன்களில் ஆட்டமிழந்தார். டேவ்சன் 34 ரன் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிந்தனர்.
19.2 ஒவர் முடிவில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன் எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது நவாஸ் மற்றும் ஹரிஸ் ரூப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹஸ் நைன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த தொடரில் தற்போது 2-2 என்ற வெற்றிக் கணக்கில் பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் சமநிலையில் உள்ளன.
- இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் 35 பந்துகளில் 81 ரன் குவித்தார்.
- பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத் 65 ரன் அடித்தார்.
கராச்சி:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இருந்தன.
3வது டி20 போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது.

அந்த அணி தொடக்க வீரர் வில் ஜாக்ஸ் 40 ரன் அடித்தார். ஹாரி ப்ரூக் 35 பந்துகளில் 81 ரன்களும், பென் டக்கெட் 42 பந்துகளில் 70 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 222 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. கேப்டன் பாபர் மற்றும் ரிஸ்வான் தலா 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். குஷ்தில் ஷா 29 ரன்கள் எடுத்து ஆட்டழிந்தார். முகமது நவாஸ் 19 ரன்னுடன் வெளியேறினார்.
அதிகபட்சமாக பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத் 65 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
- பாபர் அசாம் 66 பந்துகளில் 110 ரன்களை குவித்து களத்தில் இருந்தார்.
- முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 88 ரன் அடித்தார்.
கராச்சி:
பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி அந்நாட்டு அணியுடன் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் கராச்சி மைதானத்தில் இன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் மலான் டக்அவுட்டானார்.
பிலிப் சால்ட் 30 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். பென் டுக்கெட் 43 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஹேரி பூருக் 31 ரன்னும், சாம் கரண் 10 ரன்னும் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய மொயின் அலி 55 ரன் குவித்தார். இங்கிலாந்து அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க ஜோடி கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. பாபர் அசாம் 66 பந்துகளில் 110 ரன்களை குவித்து களத்தில் இருந்தார். முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 51 பந்தில் 88 ரன் அடித்தார்.
இதனால் பாகிஸ்தான் அணி 19.3 ஒவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 7 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 158 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கராச்சி:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி கராச்சியில் இன்று நடைபெற்ற்து. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. முகமது ரிஸ்வான் 68 ரன்களும், பாபர் அசாம் 31 ரன்களும் எடுத்தனர். இப்திகார் அகமது 28 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் லூக் வுட் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆதில் ரஷித் 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹாரி புரூக் அதிரடியாக ஆடி அணியை வெற்றிபெற வைத்தார்.
இறுதியில், இங்கிலாந்து 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹாரி புரூக் 42 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். இதன்மூலம் டி20 தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- மூன்றரை லட்சம் குழந்தைகளுக்கு உடனடி உயிர்காக்கும் சிகிச்சை தேவை.
- இதுரை 528 குழந்தைகள் உயிரிந்துள்ளதாக ஐ.நா.பிரதிநிதி தகவல்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்கு சுமார் ஒரு கோடியே 60 லட்சம் குழந்தைகள் பாதிக்கப் பட்டுள்ளதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் மூன்றரை லட்சம் குழந்தைகளுக்கு உடனடி உயிர்காக்கும் சிகிச்சை தேவை என்று ஐ.நா.சர்வதேச குழந்தைகள் அவசர நிதிய பிரதிநிதி அப்துல்லா ஃபாடில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய் பாதிப்பு என பல பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார். அண்மையில் அந்த பகுதியில் ஆய்வு செய்த அவர், இதுரை 528 குழந்தைகள் உயிரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சிறு குழந்தைகள் தங்கள் குடும்பங்களுடன் குடிதண்ணீர், உணவு மற்றும் வாழ்வாதாரம் இல்லாமல் திறந்த வெளியில் வாழ்வதாகவும், வெள்ளத்தால் கட்டிடங்கள், ஆயிரக்கணக்கான பள்ளிகள், நீர்நிலை அமைப்புகள் மற்றும் சுகாதார வசதிகள் உட்பட முக்கிய உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு 1,545 பேர் உயிரிழந்து உள்ளனர், மேலும் 12,850 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தனது சொந்த பணத்தில் விமான டிக்கெட் வாங்கி, ஓட்டலில் தங்கி, சிகிச்சை பெற்றார்.
- நான் அவருக்கு ஒரு டாக்டரை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. ஷகீன்ஷா அப்ரிடி தனது காயத்துக்கு சிகிச்சை பெறு வதற்காக லண்டன் சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று அவர் தற்போது குணம் அடைந்துள்ளார். இதையடுத்து அடுத்த மாதம் நடக்கும் டி20 ஓவர் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் ஷகீன்ஷா அப்ரிடி இடம் பெற்றார்.
இந்த நிலையில், ஷகீன்ஷா அப்ரிடி சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி குற்றம் சாட்டி உள்ளார்.
ஷகீன்ஷா அப்ரிடி தனது சிகிச்சைக்காக தனது சொந்த பணத்தில் விமான டிக்கெட் வாங்கி இங்கிலாந்து சென்றார். லண்டனில் ஓட்டலில் தங்குவதற்கு சொந்த பணத்தை செலவழித்தார். நான் அவருக்கு ஒரு டாக்டரை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.பின்னர் அவர் அந்த டாக்டரை தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை. ஷகீன்ஷா அப்ரிடி தனது சொந்த செலவில் அனைத்தையும் செய்து கொண்டார். டாக்டர்கள், ஓட்டல் மற்றும் உணவு என அனைத்தையும் அவர் தனது சொந்த பணத்தில் இருந்து செலுத்தினார்.
எனக்கு தெரிந்தவரை ஷகீன்ஷா அப்ரிடியுடன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சர்வதேச சுற்றுப் பயணங்களுக்கான இயக்குனர் ஜாகீர்கான் மட்டுமே ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே பேசினார். இவ்வாறு ஷாகித் அப்ரிடி கூறினார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே டி20 உலக கோப்பை போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணி குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறும் போது, தலைமை தேர்வாளரின் மலிவான தேர்வு என்று பதிவிட்டுள்ளார்.
- பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்தது.
- நாங்கள் கடந்த 75 ஆண்டுகளாக பிச்சை கிண்ணத்தை சுமந்து கொண்டு அலைகிறோம்.
கராச்சி:
பாகிஸ்தானில் நடந்த ஒரு மாநாட்டில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசியதாவது:-
ஏப்ரல் மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்தது. பிறகு பொருளாதார நெருக்கடியை ஒரளவு கட்டுக்குள் கொண்டு வந்தோம். ஆனாலும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. சிறிய நாடுகள் கூட பொருளாதாரத்தில் எங்களை விஞ்சி விட்டது.
நாங்கள் கடந்த 75 ஆண்டுகளாக பிச்சை கிண்ணத்தை சுமந்து கொண்டு அலைகிறோம். இன்று நாங்கள் எந்த நட்பு நாட்டுக்கு சென்றாலோ அல்லது தொலைபேசியில் பேசினாலோ எங்களை பணம் கேட்டு பிச்சை எடுப்பவர்கள் போல தான் பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்தார்.






