என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • ஷரியாவுக்கு எதிராக ரிபா அடிப்படையிலான வங்கி முறையை அறிவிக்கும் முக்கிய தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார்
    • நீதிபதி மறைவுக்கு பலுசிஸ்தான் முதல்வர் அப்துல் குத்தூஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகமது நூர் மெஸ்கன்சாய் நேற்று பலுசிஸ்தான் மாகாணத்தின் கரண் பகுதியில் உள்ள மசூதிக்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென அவரை நோக்கி சூப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த நீதிபதியை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

    நீதிபதி மறைவுக்கு பலுசிஸ்தான் முதல்வர் அப்துல் குத்தூஸ் இரங்கல் தெரிவித்துள்ளா. மேலும் நீதிபதியின் சேவை மறக்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல்களால் தேசத்தை அச்சுறுத்த முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.

    ஷரியாவுக்கு எதிராக ரிபா அடிப்படையிலான வங்கி முறையை அறிவிக்கும் முக்கிய தீர்ப்பை மெஸ்கன்சாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் உஸ்மான் காதிர் காயம் காரணமாக விலகினார்.
    • அவருக்கு பதில் பகர் சமான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    லாகூர்:

    டி 20 உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் காதிர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் அவர் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடவில்லை.

    இந்நிலையில், காயம் காரணமாக விலகியுள்ள உஸ்மான் காதிருக்கு பதிலாக பகர் சமான் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    • கவுரவ கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தின.
    • கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்தாலும் தண்டனை விகிதம் 0.2 சதவிகிதம் என மோசமாகவே உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துளள்து. கவுரவக் கொலைகள் அதிக அளவில் நடைபெறும் பாகிஸ்தானில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமைகளை சர்வே எடுத்துக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது. சாமா தொலைக்காட்சியின் புலனாய்வு பிரிவு நடத்திய கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.

    பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்திடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்தாலும், தண்டனை விகிதம் 0.2 சதவிகிதம் என மோசமாகவே உள்ளது.

    2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நாட்டில் 21,900 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, புதிதாக சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, நாடு முழுவதும் தினமும் சுமார் 12 பெண்கள் அல்லது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுள்ளதை இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது.

    பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கவுரவ கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தின.

    பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 4 ஆண்டுகளில் 1,957 கவுரவக் கொலைகள் பதிவாகியிருப்பதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பஸ்சுக்குள் சிக்கி கொண்ட குழந்தைகள் உள்பட 21 பேர் தீயில் கருகி பலியானார்கள்.
    • 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கராச்சி:

    பாகிஸ்தானின் நூரியா பாத் பகுதியில் நள்ளிரவு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    அப்போது பஸ்சில் திடீரென்று தீப்பிடித்தது. இதனால் பஸ்சை டிரைவர் நிறுத்தினார். ஆனால் தீ வேகமாக பஸ் முழுவதும் பரவியது. பயணிகள் சிலர் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து கீழே குதித்து தப்பினர்.

    ஆனால் பஸ்சுக்குள் சிக்கி கொண்ட குழந்தைகள் உள்பட 21 பேர் தீயில் கருகி பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பஸ்சில் பிடித்த தீயை அணைத்தனர். பஸ்சில் இருந்த குளிர்சாதன பகுதியில் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    தீப்பிடித்த பஸ்சில் பயணம் செய்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தவர்கள் ஆவார்கள். சமீபத்தில் பாகிஸ்தானில் பெய்த கனமழையால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு கராச்சியில் தங்க வைக்கப்பட்டனர்.

    வெள்ள பாதிப்பு குறைந்ததால் கராச்சியில் இருந்து சைர்பூர் நாரன் ஷா பகுதிக்கு மக்கள் பஸ்சில் சென்ற போது விபத்தில் சிக்கினர். பலியானவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவார்கள்.

    • இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகல்
    • இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் எப்போது நடந்தாலும் அது முக்கியமானதாக இருக்கும்.

    இஸ்லாமாபாத்:

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இத்தொடரில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்பட 16 அணிகள் களமிறங்குகின்றன.

    போட்டி தொடங்க சில தினங்களே உள்ள நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக தீபர் சாஹர் அல்லது முகமது சமி இடம் பெறலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தீபக் சாஹரும் காயம் காரணமாக உலகக்கோப்பையில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இது ஒருபுறமிருக்க, இந்தியாவின் முக்கிய போட்டி அணியாக கருதப்படும் பாகிஸ்தான் அணிக்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்த அவர் விரைவில் அணியில் இணைய உள்ளார்.

    இந்த சூழ்நிலைகள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு சாதகமாக இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் முகமது கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் எப்போது நடந்தாலும் அது முக்கியமானதாக இருக்கும். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு வலுவாக இருக்கிறது. ஆனால் பேட்டிங்கை இன்னும் மேம்படுத்த வேண்டும். இந்தியா தற்போது பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அவர்களிடம் பும்ரா இல்லை. அது பெரிய இழப்பு. ஷாஹீன் ஷா அப்ரிடி மீண்டும் உடற்தகுதி பெற்று விளையாடினால், எங்களின் வேகப்பந்து வீச்சு மேலும் வலுவடையும். சமீபத்திய ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக எந்த அளவுக்கு சிறப்பாக விளையாடினார்கள் என்பதைப் பார்க்கும்போது, அவர்களின் மன உறுதி அதிகமாக உள்ளது, எனவே பாகிஸ்தான் மீண்டும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2014-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.
    • உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர்.

    கராச்சி :

    பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா, தனது சிறுவயது முதலே பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார்.

    கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி மலாலா 15 வயது சிறுமியாக இருந்தபோது தலீபான் பயங்கரவாதிகள் அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டனர். எனினும் இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேல்சிகிச்சைக்காக லண்டன் சென்ற அவர், அங்கேயே உயர்க்கல்வி படித்து பட்டம் பெற்றார்.

    கடந்த 2014-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. இதன் மூலம் உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரர் ஆனார்.

    இந்த நிலையில் மலாலா தலீபான்களின் கொலை முயற்சியில் உயிர் தப்பி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்த நாளில் நேற்று அவர் பாகிஸ்தான் வந்தார்.

    லண்டனில் இருந்து விமானம் மூலம் கராச்சி நகருக்கு வந்த மலாலா, அங்கிருந்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தார்.

    பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் தாக்கத்தில் சர்வதேச கவனத்தை ஒருமுகப்படுத்தவும், முக்கியமான மனிதாபிமான உதவியின் அவசியத்தை வலுப்படுத்தவும் உதவுவதே மலாலா வருகையின் நோக்கம் என அவரது அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது.

    தலீபான்களின் கொலை முயற்சிக்கு பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு பாகிஸ்தான் வந்த மலாலா, 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது தாயகத்துக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    • தீப்பிடித்தவுடன் எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்தி மக்கள் தப்பித்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ் பெற்ற சென்டாரஸ் அடுக்குமாடி வணிக வளாகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் பிடித்த தீ மற்ற பகுதிக்குள் பரவுவதை தடுக்க தீயணைப்புத்துறை வீரர்கள் போராடினர். தீ பிடித்தவுடன் உள்ளே இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்தி மக்கள் தப்பிக்கும் வீடியோ காட்சி சமூக வளைதளங்களில் வெளியானது. 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

    இந்த தீ விபத்தை அடுத்து அந்த வணிக வளாகத்திற்கு சீல் வைக்க இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், இஸ்லாமாபாத்தில் உள்ள நகராட்சி ஆணையம் ஒரு குழுவை அமைத்து தீபிடித்த கட்டிடத்தின் திறன் குறித்து விசாரணை நடத்த கோரப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இம்ரான்கான் தனது தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாக புகார்கள் எழுந்தது.
    • இம்ரான் கான் எந்தநேரமும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை பாகிஸ்தானில் நிலவுகிறது.

    பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது.

    இதற்கு இம்ரான்கானின் மோசமான நிர்வாகம் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் எதிர்கட்சிகளின் ஆதரவுடன் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

    இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த பொதுகூட்டத்தில் இம்ரான் கான் நீதிபதி, மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதனால் அவர் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

    இந்த சூழ்நிலையில் இம்ரான்கான் தனது தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாக புகார்கள் எழுந்தது.

    இதுதொடர்பாக பெடரல் ஏஜென்சி விசாரணை நடத்தியது. இதில் இம்ரான்கான் கட்சி 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் தொடங்கி நிதி பெற்றதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் இம்ரான் கான் எந்தநேரமும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை பாகிஸ்தானில் நிலவுகிறது. அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் பாகிஸ்தானில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. அவரது கட்சி தொண்டர்கள் இம்ரான்கான் வீடு முன்பு குவிந்து வருகின்றனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இம்ரான்கான் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்து உள்ளார். தன்னை 4 பேர் கொல்ல சதி திட்டம் தீட்டி உள்ளதாகவும் தனக்கு ஏதாவது நடந்தால் அவர்கள் பெயர் அடங்கிய வீடி யோவை வெளியிடுவேன் என்றும் பரபரப்பான தகவலை தெரிவித்து உள்ளார். இம்ரான்கான் இதற்கு முன்பும் பலமுறை தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் நிதியமைச்சர் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் தேசிய இயக்குனர் சந்தித்து பேசினர்.
    • வெள்ளத்தால் சுமார் 40 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரசு மதிப்பிட்டுள்ளது

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் ஜூன் மாத மத்தியில் மழை வெள்ளத்திற்கு 1600க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கடும் இழப்பை சந்தித்துள்ள பாகிஸ்தானுக்கு நிவாரணப் பணிகளுக்காக 2.3 முதல் 2.5 பில்லியன் (250 கோடி) டாலர்கள் வரை வழங்க உள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் தேசிய இயக்குனர் யாங் யீ ஆகியோர் சந்தித்து பேசியபோது இந்த அறிவிப்பு வெளியிடுப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருட்சேதங்களுக்கு யாங் யீ தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.

    வெள்ளத்தால் சுமார் 40 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரசு மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் வந்துள்ள தூதுக்குழுவை வரவேற்ற நிதியமைச்சர் இஷாக் தார், நாட்டில் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஆசிய வளர்ச்சி வங்கியின் பங்கு மற்றும் ஆதரவைப் பாராட்டினார்.

    பொருளாதாரம் பெரிய சவால்களை எதிர்கொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார், பொருளாதார சரிவை அரசு கட்டுப்படுத்தி, நடைமுறைக்கேற்ற கொள்கை முடிவுகளால் பொருளாதாரத்தை சரியான பாதையில் அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 209 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 142 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.

    லாகூர்:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகள் நடந்து முடிந்ததில் இரு அணிகளும் 3-3 என்ற கணக்கில் சமனிலை வகித்தன.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 7வது டி-20 போட்டி லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டேவிட் மலான் அதிரடியாக ஆடி 78 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் டுகெட் 19 பந்தில் 30 ரன்னும், புரூக் 29 பந்தில் 40 ரன்னும் எடுத்தனர். இதனால் அந்த அணி 200 ரன்களை கடந்தது.

    இதையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது.

    அந்த அணியில் ஷான் மசூத் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்து 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இதன்மூலம் டி20 தொடரை 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

    • பாபர் அசாம் சர்வதேச டி20 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
    • கோலியும் பாபரும் இச்சாதனையை 81-வது டி20 இன்னிங்சில் படைத்துள்ளனர்.

    லாகூர்:

    இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையிலான 6-வது டி20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான், கேப்டன் பாபர் அசாம் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.

    பாபர் அசாம் 59 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் . தொடர்ந்து 170 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பில் சால்ட் அதிரடியால் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் 87 ரன்கள் அடித்ததன் மூலம் பாபர் அசாம் சர்வதேச டி20 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார்.

    விராட் கோலியும் பாபரும் இந்த சாதனையை தங்களின் 81-வது டி20 இன்னிங்சில் படைத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக மார்ட்டின் கப்டில் (101 இன்னிங்ஸ்) ரோகித் சர்மா (108 இன்னிங்ஸ்) உள்ளனர்.

    ×