என் மலர்
ஈரான்
- அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த போராட்டங்களை தூண்டி விட்டுள்ளன.
- ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க சதி திட்டம்.
ஈரானில், மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் உடையை சரியாக அணியவில்லை கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 16-ந் தேதி விசாரணையின்போது அவர் திடீரென மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அவரை அடித்து கொன்று விட்டதாக கூறி ஈரானில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஹிஜாப் உடைகளை தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். தொடர் போராட்டத்தால் ஈரானில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. போராட்டக்காரர்கள்- போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 92 பேர் இறந்துவிட்டதாக ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது.

இதில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஈரான்- ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் 41 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 1,500 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், மேலும் அது தீவிரமடையாமல் தடுக்க ஈரானில் சமூக வலை தளங்கள் முடக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், ஹிஜாப் போராட்டம் ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சதி என்று அந்நாட்டு தலைவர் அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார். போராட்டம் தொடங்கியது முதல் மவுனம் காத்து வந்த அவர் தனது கருத்தை முதன்முறையாக தெரிவித்துள்ளார்.
மாஷா அமினி போலீஸ் காவலில் இறந்ததை அறிந்து தாம் மனம் உடைந்ததாகவும் அவரது மரணம் மிகவும் துயரமானது என்றும் கொமெனி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த போராட்டங்களை திட்டமிட்டு தூண்டி விட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
- 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவை நடந்து வருகிறது.
- கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஈரான்- ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் 41 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது.
ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 16-ந் தேதி விசாரணையின்போது அவர் திடீரென மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அவரை அடித்து கொன்றுவிட்டதாக கூறி போராட்டங்கள் நடந்து வருகிறது.
மாஷா அமினி இறந்த பிறகு போராட்டங்கள் தீவிரம் அடைந்து உள்ளது. 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவை நடந்து வருகிறது.
இந்த போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.
போராட்டம் நடத்தும் பெண்கள் ஹிஜாப் உடைகளை தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். தொடர் போராட்டத்தால் ஈரானில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதுவரை போராட்டக்காரர்கள்- போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 92 பேர் இறந்துவிட்டதாக ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது. இதில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஈரான்- ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் 41 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது.
போராட்டம் மேலும் தீவிரமடையாமல் தடுக்க ஈரானில் சமூக வலை தளங்கள் முடக்கப்பட்டு உள்ளது.
- ஈரானில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- போராட்டத்தின் போது 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.
தெக்ரான்:
ஈரானில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிஜாப் அணிய மறுத்த மாஷா அமினி என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது அவர் திடீரென இறந்தார். போலீசார் அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்தனர்.
ஆனால் போலீசார் அவரை அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்து உள்ளது.
இந்த போராட்டத்தின் போது 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். இந்தநிலையில் ஈரானை சேர்ந்த டோனியோ ராட் என்ற பெண் தனது தோழி பணிபுரியும் கம்பெனியில் உள்ள உணவகத்துக்கு காலை சிற்றுண்டி சாப்பிட சென்றார். அப்போது அவர் தலையில் முக்காடு அணியாமல் சாப்பிட்டார். இந்த படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது வைரலாக பரவியது.
இது தொடர்பாக போலீசார் அவரிடம் விளக்கம் கேட்டனர். ஆனால் அதற்கு அவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து டோனி யோராட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாக அவரது சகோதரி டினா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
- போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 76 பேர் பலியாகி உள்ளனர்.
- கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
ஈரானில் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று கூறி போலீசாரால் தாக்கப்பட்ட இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்தார். இதனால் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது.
ஹிஜாப்பை எரித்தும், தலைமுடியை வெட்டியும் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 76 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தநிலையில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஒரு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாஷா அமினியின் மரணம் துயரமானது. ஆனால் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். மக்கள் பாதுகாப்பு என்பது ஈரான் அரசின் சிவப்பு கோடு ஆகும். அதை மீறி குழப்பம் விளைவிக்க யாருக்கும் அனுமதி இல்லை. எதிரி (அமெரிக்கா) தேசிய ஒற்றுமையை இலக்காக கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரான் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.
- ஈரான் பெண்களுக்கு ஆதரவாக கனடா உள்ளிட்ட நாடுகளில் போராட்டம் நடந்து வருகிறது.
ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். ஆனால் இதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த சில நாட்களுக்குமுன்பு சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி மாஷா அமினி என்ற 22 வயது பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.போலீசார் விசாரணையின் போது அவர் திடீரென இறந்தார்.
அவர் மாரடைப்பால் உயிர் இழந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர் போலீசார் தாக்கியதால் தான் இறந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து ஈரான் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. பெண்கள் மற்றும் பொது மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் உடைகளை தீ வைத்து எரித்தனர். போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த போராட்டத்தின் போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இது வரை 40 பேர் வரை பலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஈரானின் கராஜ் நகரில் போராட்டத்தில் பங்கேற்ற ஹதிஷ் நஜிபி என்ற 20 வயது இளம்பெண் பாதுகாப்பு படை போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார். போலீசார் துப்பக்கியால் சுட்டத்தில் அவரது முகம், நெஞ்சு உள்ளிட்ட இடங்களில் குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதனால் ஈரானில் மேலும் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
ஈரான் பெண்களுக்கு ஆதரவாக கனடா உள்ளிட்ட நாடுகளில் போராட்டம் நடந்து வருகிறது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஈரான் தூதரகம் முன்பு ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
- போராட்டங்களை ஒடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
- தினமும் சாலைகளில் பெண்கள், ஆண்கள் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரானில் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று கூறி இளம்பெண் மாஷா அமினியை போலீசார் கைது செய்து கடுமையாக தாக்கினர். இதில் கோமா நிலைக்கு சென்ற அவர் கடந்த 17-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து ஈரானில் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிராக பெண்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் திரண்டு போராடி வருகிறார்கள்.
பெண்கள் ஹிஜாப்பை எரித்தும், தலைமுடியை வெட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். போராட்டங்களை ஒடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதனால் போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறைகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
தினமும் சாலைகளில் பெண்கள், ஆண்கள் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் ஈரான் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் தலைவர்கள் சிலைகளுக்கு தீ வைக்கப்பட்டது.
ஈரான் தலைவர் ருஹோல்லா கொமேனியின் சிலைக்கு சிலர் தீ வைத்தனர். இதில் அந்த சிலை கொளுந்துவிட்டு எரிந்தது. சிலை தீப்பற்றி எரியும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது. இதற்கு மூத்த மத குருக்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதேபோல் சில இடங்களில் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஈரானில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
- பெண்களின் இந்த தொடர் போராட்டத்தால் ஈரானில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
- ஈரான் பெண்களுக்கு ஆதரவாக துருக்கி, கனடா போன்ற நாடுகளிலும் முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
குர்கிஸ்தான்:
ஈரானில் 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் உடை அணிவது கட்டாயம் ஆகும். இதை மீறுபவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
இதை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு ஹிஜாப் அணியாத மாசா அமினி என்ற 22 வயது பெண் கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த போது அவர் திடீரென இறந்தார். இதையடுத்து கடந்த 18-ந்தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது.
முதலில் ஈரானில் குர்க்கிஸ்தான் மாகாணத்தில் தொடங்கிய இந்த போராட் டம் தற்போது 30-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு பரவி விட்டது. பெண்களின் இந்த தொடர் போராட்டத்தால் ஈரானில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 31 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் மனித உரிமை அமைப்பு இயக்குனர் தெரிவித்து உள்ளார். ஈரான் பெண்களுக்கு ஆதரவாக துருக்கி, கனடா போன்ற நாடுகளிலும் முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
- ஈரானின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.
- காவல்துறை தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
தெஹ்ரான்:
ஈரானில் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கைது செய்யப்பட்ட 22 வயது இளம்பெண், போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது உயிரிழந்தார். போலீசார் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற இளம்பெண் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், பெரும் போராட்டத்தையும் தூண்டியது.
ஈரானின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஒரு சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல்களில் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே காவல்துறை தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அந்த பெண் மாரடைப்பால் இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
- ஹிஜாப்பை எதிர்த்தும், தலைமுடியை வெட்டியும் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
- தலைநகர் தெக்ரானில் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
ஈரானில் உள்ள குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த இளம் பெண் மாஷா சுமினியை ஹிஜாப் முறையாக அணியவில்லை என்று கூறி போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
இதனால் ஈரான் முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. ஹிஜாப்பை எதிர்த்தும், தலைமுடியை வெட்டியும் பெண்கள் போராட்டம் நடத்தினர். பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
தலைநகர் தெக்ரானில் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். குர்திஸ்தானில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கைதுசெய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
- போலீஸ் தாக்குதலில் இளம்பெண் இறந்ததற்கு எதிர்த்து ஈரான் பெண்கள் தலைமுடியை வெட்டி போராட்டம் நடத்தினர்.
டெஹ்ரான்:
ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். சரியாக ஹிஜாப் அணியாததால் மஹ்சா அமினி என்ற 22 வயது இளம்பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்குச் சென்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நடந்தது. எனினும், இளம்பெண் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க நடிகையும் நாவலாசிரியருமான லியா ரெமினியின் டுவீட் காரணமாக, ஹிஜாப் அணியாத ஈரானியப் பெண்களுக்கு எதிரான வழக்கு மற்றும் அரசு நிர்வாகத்தின் வன்முறை ஆகியவை உலகின் கவனத்தைப் பெற்றன. அதன்பின், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெண்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில், பெண்கள் போராட்டம் தொடர்பாக ஈரானிய பத்திரிகையாளரும் ஆர்வலருமான மசிஹ் அலினெஜாட் டுவிட்டரில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஹிஜாப் போலீசாரால் மஹ்சா அமினி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஈரானிய பெண்கள் தலைமுடியை வெட்டியும், ஹிஜாபை எரித்தும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். 7 வயதில் இருந்து பெண்கள் நாங்கள் எங்கள் முடியை மறைக்கவில்லை என்றால் பள்ளிக்குச் செல்ல முடியாது, வேலையும் கிடைக்காது. இந்த பாலின வெறி ஆட்சியால் நாங்கள் சோர்வடைகிறோம்.
அமைதியான போராட்டக்காரர்கள் மீது ஈரானின் சக்சேஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பல போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர். முதலில் போலீசார் 22 வயது பெண்ணை கொன்றனர், இப்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிகள் மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்துகின்றனர் என பதிவிட்டுள்ளார்.
- அறிவிக்கப்படாத தளங்களில் காணப்படும் யுரேனிய தடயங்கள் பற்றி சர்வதேச ஆய்வாளர்கள் விசாரணை
- ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் சிலவற்றை நீக்க அமெரிக்கா முன்வந்துள்ளது
தெஹ்ரான்:
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றது முதல் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான பேச்சுவார்த்தை, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் சிலவற்றை நீக்குவதாகவும் அமெரிக்கா கூறி உள்ளது.
இந்நிலையில், உலக வல்லரசுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுக்கவேண்டுமானால், அறிவிக்கப்படாத அணுசக்தி தளங்களில் யுரேனிய தடயங்கள் தொடர்பான விசாரணையை சர்வதேச ஆய்வாளர்கள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி கூறி உள்ளார்.
அறிவிக்கப்படாத தளங்களில் காணப்படும் யுரேனிய தடயங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி ஈரானை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி வலியுறுத்துகிறது. மேலும், ஈரான் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அணு ஆயுத திட்டத்தை 2003 வரை நடத்தியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள், மேற்கத்திய நாடுகள் மற்றும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி ஆகியவை கூறியுள்ளன. ஆனால், அணு ஆயுத குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
- இந்தோ-ஈரான் உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை.
- சபஹரை பிராந்திய வளர்ச்சி துறைமுகமாக மாற்றுவது குறித்து ஆலோசனை
ஈரான் நாட்டிற்கு சென்றுள்ள மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்த சோனோவால், தெக்ரானில் ஈரான் துணை அதிபர் முஹமது மொஹ்பரை சந்தித்துப் பேசினார்.
அப்போது, இந்தியா, ஈரான் இடையே உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவுக்கான ஈரான் சிறப்புத் தூதரான ஈரான் துணை அதிபர், இந்தியா, ஈரான் உறவை மேலும் வலுப்படுத்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக, இந்திய அமைச்சரின் ஈரான் வருகைக்கு பாராட்டு தெரிவித்தார். இது மேலும், சபஹர் துறைமுகத்தின் வணிகம், வளர்ச்சி, ஏற்றுமதியின் அளவு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
பிராந்திய வளர்ச்சிக்கான துறைமுகமாக சபஹர் துறைமுகத்தை மாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில், இருநாடுகளும் இணைந்து ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சர்பானந்த சோனோவால் சுட்டிக்காட்டினார். ஈரான் துணை அதிபருடனான சந்திப்பு, வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, ஈரான் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஈரான் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரோஸ்டம் காசெமியுடன், இருதரப்பு சந்திப்பில் சோனாவால் கலந்து கொண்டார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளைச் சேர்ந்த மாலுமிகளுக்கு உதவும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.






