என் மலர்tooltip icon

    பிரான்ஸ்

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • பல்வேறு நாடுகளுக்கு செல்லும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுவர் என தெரிவித்தது.

    பாரீஸ்:

    பிரான்சில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விமான சேவைகளை 40 சதவீதம் அளவுக்கு குறைக்கும்படி பிரான்ஸ் விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது.

    இந்நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான ரியான் ஏர் 170 விமானங்களை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ரியான் ஏர் விமான போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதனால் இங்கிலாந்து, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் செல்லும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

    • 2020 ஆம் ஆண்டில் போலந்து 4.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள 32 F-35 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
    • அமெரிக்க நிர்வாகமே F 35 தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்த ஆர்டரை பாதியாக குறைத்ததாக கூறப்பட்டது.

    ரஃபேல் போர் விமானம் குறித்து பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்ட சமூக வலைதள பதிவு வைரலாகி வருகிறது.

    "ரஃபேல் இஸ் காலிங்" என்று அதன் படத்துடன் மேக்ரான் தனது எக்ஸ் பக்கத்தில் "நமது ஐரோப்பாவைப் பாதுகாப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், இராணுவ தளவாடங்களுக்கு அமெரிக்க உற்பத்தியை சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் என்று மேக்ரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    ஆனால், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே இந்த அமெரிக்க போர் விமானங்களை வாங்கி பயன்படுத்துகின்றன. 2020 ஆம் ஆண்டில் போலந்து 4.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள 32 F-35 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2021 ஆம் ஆண்டில் பின்லாந்து 64 விமானங்களுக்கான ஆர்டரை வழங்கியது.

    இதற்கிடையே சமீபத்தில் இஸ்ரேலுடனான மோதலில் ஈரான், F35 போர் விமானங்களை வீழ்த்தியதாக தகவல் வெளியானது. இதனால் அமெரிக்க நிர்வாகமே F 35 தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்த ஆர்டரை பாதியாக குறைத்ததாக கூறப்பட்டது.

    இந்த நிலையில்தான் பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான ரஃபேல் விமானங்களை மேக்ரான் ஐரோப்பிய நாடுகளிடம் விளம்பரப்படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது. அண்மையில் நடந்த மோதலின்போது இந்தியாவின் 4 ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    • நீரஜ் சோப்ரா 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பாரிஸ் டயமண்ட் லீக்கை வென்றார்.
    • நீரஜ் சோப்ரா கிளாசிக் அடுத்த மாதம் 5-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

    பாரிஸ்:

    பாரிசில் டயமண்ட் லீக் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா நேற்று இரவு பட்டத்தை வென்றதன் மூலம் உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தார்.

    நேற்று நடந்த போட்டியின் முதல் சுற்றிலேயே 88.16 மீட்டர் தூரம் எறிந்தார். நடு சுற்றுகளில் 3 புள்ளிகள் இல்லாதபோதும், அவரது தொடக்க முயற்சியே போட்டி முழுவதும் அவரை முதலிடத்தில் வைத்திருந்தது.

    ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.88 மீட்டர் தூரம் எறிந்தார். பிரேசிலின் மௌரிசியோ லூயிஸ் டா சில்வா 86.62 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

    இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறும் நீரஜ் சோப்ரா கிளாசிக்கின் தொடக்கப்பதிப்பில் விளையாடுகிறார்.

    • இளைஞர்களிடையே வன்முறைப் போக்குகள் அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம்.
    • கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது.

    சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கம் குறித்து கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

    15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க விரைவில் கடுமையான விதிகள் அமல்படுத்தப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

    மேக்ரான் கூறுகையில், "15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) கூட்டு முடிவு எடுக்குமா என்பதைப் பார்க்க சில மாதங்கள் காத்திருப்போம். EU-விடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றால், பிரெஞ்சு அரசாங்கமே இந்தத் தடையை அமல்படுத்தும்" என்றார்.

    இளைஞர்களிடையே வன்முறைப் போக்குகள் அதிகரித்து வருவதற்கும், குழந்தைகள் மேற்பார்வையின்றி டிஜிட்டல் தளங்களை அணுகுவதற்கும் சமூக ஊடகங்களே முக்கிய காரணம் என்று மேக்ரான் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.  

    • முதல் இரு செட்டை சின்னரும், அடுத்த இரு செட்டை அல்காரசும் கைப்பற்றினர்.
    • ஐந்தாவது செட்டும் அனுமார் வால்போல் நீண்டு கொண்டே போனது.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் ஆகியோர் மோதினார்.

    முதல் இரு செட்டை சின்னரும், அடுத்த இரு செட்டை அல்காரசும் கைப்பற்றினர்.

    அனுமார் வால்போல் நீண்டு கொண்ட போன இந்த செட்டிலும் முடிவை அறிய டைபிரேக்கர் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. இதில் சாதுர்யமாக ஆடிய அல்காரஸ் வெற்றிக்கனியை பறித்தார்.

    சுமார் 5 மணி 29 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் அல்காரஸ் 4-6, 6-7 (4-7), 6-4, 7-6 (7-3), 7-6 (10-2) என்ற செட் கணக்கில் சின்னரை தோற்கடித்து பிரெஞ்சு ஓபனை தக்க வைத்துக் கொண்டார்.

    இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் அதிக நேரம் நடந்த இறுதிப்போட்டியாக இது பதிவானது. அதாவது பிரெஞ்சு ஓபனில் 5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த முதல் இறுதி ஆட்டம் இது தான்.

    22 வயதான அல்காரசுக்கு இது 5-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்தது. அவருக்கு ரூ.24¾ கோடியும், 2-வது இடம் பிடித்த சின்னருக்கு ரூ.12½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்றது.
    • இறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அபார வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் முதல் இரு செட்களை 6-4, 7-6 (7-4) என வென்றார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7-3) என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை என 7-6 (10-2) கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்.

    இந்தப் போட்டி சுமார் ஐந்தரை மணி நேரம் நடைபெற்றது. கடந்த ஆண்டும் பிரெஞ்சு ஓபனில் அல்காரஸ் சாம்பியன் பட்டம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்றது.
    • பெண்கள் இரட்டையரில் இத்தாலி ஜோடி வெற்றி பெற்றது.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.

    பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரானி ஜோடி, செர்பியாவின் அலெக்சாண்ட்ரா க்ருனிக்-கஜகஸ்தானின் அன்னா டேனிலினா ஜோடியுடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி 6-4, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • இதில் ஆண்கள் இரட்டையரில் பிரிட்டன் ஜோடி தோல்வி அடைந்தது.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி-ஜோ சாலிஸ்பரி ஜோடி, அர்ஜென்டினாவின் ஹொரெசியோ ஜெபெல்லோஸ்-ஸ்பெயினின் மார்செல் கிரனோலர்ஸ் ஜோடியுடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய ஹொரெசியோ-மார்செல் ஜோடி 6-0, 6-7 (5-7), 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-4, 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சின்னர், அல்காரசுடன் மோதுகிறார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-4 என முசெட்டி வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 6-0 என வென்றார்.

    4-வது செட்டில் அல்காரஸ் 2-0 என முன்னிலை பெற்றிருந்தபோது முசெட்டி போட்டியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து அல்காரஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • இதில் கலப்பு இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் கலப்பு இரட்டையரில் இத்தாலியின் சாரா எரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, நான்காம் நிலை ஜோடியான அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட்-இவான் கிங் ஜோடியுடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி 6-4, 6-2 என வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினர்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
    • பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் கோகோ காப் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், பிரான்சின் லூயிஸ் போய்சன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-2, 6-2 என்ற செட்களில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கோகோ காப், சபலென்கா உடன் மோதுகிறார்.

    ×