என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுப்பணித்துறை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்- அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு
    X

    பொதுப்பணித்துறை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்- அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு

    பண்ருட்டி அருகே பொதுப்பணித்துறை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே காமாட்சிபேட்டையில் உள்ள அரசு மணல் குவாரி உள்ளது. இங்கு பாலபாஸ்கர் (வயது 21) என்பவர் பொதுப்பணித்துறை சார்பில் மணல் ஏற்றி செல்வதற்கு அனுமதி சீட்டு கொடுக்கும் பணி செய்து வருகிறார்.

    நேற்று மணல் குவாரியில் மாட்டு வண்டிகளில் மணல் ஏற்ற வந்தவர்களுக்கு பாலபாஸ்கர் அனுமதி சீட்டு வழங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த மணல் குவாரிக்கு பெரியஎலந்தம்பட்டை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் அப்பர் வந்தார். ஏன் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் பணம் வசூல் செய்கிறீர்கள் என பாலபாஸ்கரிடம் கேட்டார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அப்பர் ஆத்திரம் அடைந்து பாலபாஸ்கரை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து காடாம்புலியூர் போலீசில் பாலபாஸ்கர் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பிரமுகர் அக்பர் மீது சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    Next Story
    ×