என் மலர்
டென்னிஸ்
- சபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- மற்ற ஆட்டங்களில் சுவிட்டோலினா (உக்ரைன்) ஸ்னைடெர் (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல் நிலை வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ்) இன்று காலை நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் தகுதி நிலை வீராங்கனையான ஹோசியானை (சீனா) எதிர் கொண்டார்.
இதில் சபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் சுவிட்டோலினா (உக்ரைன்) ஸ்னைடெர் (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 13-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) 6-4, 6-3, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் போர்ச்சுகல்லை சேர்ந்த ஜேமிபெரியாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா முதல் சுற்றில் வென்றார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, சுலோவேனியாவின் கஜா ஜுவன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் குரோசியாவின் அண்டோனியோ ரூஜியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- இதில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நம்பர் 2 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், பிரான்சின் ஹியூகோ காஸ்டன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது பிரான்ஸ் வீரர் போட்டியில் இருந்து விலகியதால் சின்னர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். அத்துடன் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 7-6 (2), 7-6 (5) என்ற செட் கணக்கில் பிரான்சி ஹியூகோ ஹம்பர்ட்டை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- இதில் நெதர்லாந்தின் டேலன் கிரீக்ஸ்புர் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நெதர்லாந்து வீரர் டேலன் கிரீக்ஸ்பூர், அமெரிக்காவின் ஏதன் குயின் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அமெரிக்க வீரர் 6-2, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இதனால் நெதர்லாந்து வீரர் முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.
- லாரன்சோ முசெட்டி 4-6, 7-6 (7-3), 7-5, 3-2 என்ற கணக்கில் ரபெல் கோலிக்னானுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னிலையில் இருந்தார்.
- மேடிசன் கீஸ் 7-6 (8-6), 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியனும், உலகின் 9-ம் நிலை வீராங்கனையுமான மேடிசன் கீஸ் (அமெரிக்கா) முதல் சுற்றில் உக்ரைனை சேர்ந்த ஒலினிகோவாவை எதிர்கொண்டார். இதில் மேடிசன் கீஸ் 7-6 (8-6), 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்ற ஆட்டங்களில் கரோலினா பிளிஸ்கோவா, வாலன்ட்டோவா (செக் குடியரசு), பிரெஸ்டன் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர். 22-வது வரிசை வீராங்கனையான லைலா பெர்னான்டஸ் (அமெரிக்கா) முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 5-வது வரிசையில் உள்ள லாரன்சோ முசெட்டி (இத்தாலி) 4-6, 7-6 (7-3), 7-5, 3-2 என்ற கணக்கில் ரபெல் கோலிக்னானுக்கு (பெல்ஜியம்) எதிரான ஆட்டத்தில் முன்னிலையில் இருந்தார். அப்போது ரபெல் காயத்தால் வெளியேறினார். இதனால் முசெட்டி வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் 22-வது வரிசையில் உள்ள லூசியானோ டார்டெரி (இத்தாலி) வெற்றி பெற்றார்.
- 6-3, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
- 6-1, 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் எதிரியை வீழ்த்தினார் ரூட்.
ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 4-ம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெட்ரோ மார்ட்டினெசை எதிர்கொண்டார். இதில் 6-3, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் 12-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட், இத்தாலியின் மேட்டியா பெலூசியை எதிர்கொண்டார். இதில் ரூத் 6-1, 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மேலும், வாரிங்கா, டேவிடோவிச், எல். தியென், சிலிச் ஆகியோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்வியாடெக், அன்ட்ரீவா, மெர்ட்டென்ஸ், அனிசிமோவா ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- இதில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ராடுகானு முதல் சுற்றில் வென்றார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இங்கிலாந்து வீராங்கனையான எம்மா ராடுகானு, தாய்லாந்தின் மனன்சயா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய எம்மா ராடுகானு 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
- அல்காரஸ் 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- ஸ்வெரேவ் 3-1 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளில் நம்பர் ஒன் வீரர் அல்காரஸ், 3-ம் நிலை வீரரான ஸ்வெரேவ் உள்ளிட்ட வீரர்கள் முதல் சுற்றில் விளையாடினர்.
ஸ்பெயின் வீரரான கார்லஸ் அல்காரஸ் ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-3 என அல்காரஸ் எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் அல்காரஸ்க்கு வால்டன் ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் டை-பிரேக்கர் வரை சென்றது. என்றாலும் அல்காரஸ் 7(7)- 6(2) எனக் கைப்பற்றினார். 3-வது செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றி 3-0 என நேர்செட் கணக்கில் கைப்பற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த அலேக்சாண்டர் ஸ்வெரேவ், கேப்ரியல் டியாலோவை எதிர்கொண்டார். 3-ம் நிலை வீரரான ஸ்வெரேவ்-க்கு டியாலோ முதல் செட்டில் அதிர்ச்சி அளித்தார். டை-பிரேக்கர் வரை சென்ற நிலையில் ஸ்வெரேவ் 6(1)-7(7) என முதல் செட்டை இழந்தார்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட ஸ்வெரேவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2-வது செட்டை 6-1 எனவும், 3-வது செட்டை 6-4 எனவும், 4-வது செட்டை 6-2 எனவும் கைப்பற்றி 3-1 என ஸ்வெரேவ் வெற்றி பெற்றார்.
- டை-பிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை வீனஸ் வில்லியம்ஸ் கைப்பற்றினார்.
- ஆனால் 2-வது மற்றும் 3-வது செட்டை இழந்து தோல்வியடைந்தார்.
2026-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் இன்று தொடங்கியது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வைல்டு கார்டு மூலம் முதன்மை சுற்றில் விளையாடிய அனுமதி பெற்ற அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செர்பியாவின் ஒல்கா டானிலோவிச்சை எதிர்கொண்டார்.
முதல் செட்டில் இருவரும் மல்லுக்கட்டினர். இதனால் முதல் செட்டை டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் 7(7)-6(5) என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றார். ஆனால், இதே உத்வேகத்துடன் 2-வது மற்றும் 3-வது செட்டில் அவரால் விளையாட முடியவில்லை.
2-வது செட்டை 3-6 என இழந்த நிலையில், 3-வது செட்டை 4-6 இழந்து தோல்வியடைந்தார். இதனால் முதல் சுற்றோடு ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து வெளியேறியுள்ளார்.
- சபலென்கா 6-4, 6-1 என நேர்செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனையை வீழ்த்தினார்.
- ஸ்விடோலினா 6-4, 6-1 என ஸ்பெயின் வீராங்கனையை வீழ்த்தினார்.
2026-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் இன்று தொடங்கியது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையா பெலாரசின் சபலென்கா, தரநிலை பெறாத பிரான்சின் ரஜோனாவை எதிர்கொண்டார். இதில் சபலென்கா 6-4, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் 12-ம் நிலை வீராங்கனையான உக்ரைனைச் சேர்ந்த எலினா ஸ்விடோலினா, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா புக்சாவை எதிர்கொண்டார். இதில் ஸ்விடோலினா 6-4, 6-1 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
11-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா, தரநிலை பெறாத துருக்கியின் ஜென்னெப் சான்மெஸை எதிர்கொண்டார். இதில் சான்மெஸ் 7-5, 4-6, 6-4 என அலெக்சாண்ட்ரோவாவை வீழ்த்தினார்.
பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய உக்ரைன் வீராங்கனை கோஸ்ட்யுக் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
- உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் உள்ளார்
- அர்ஜென்டினாவை சேர்ந்த 18-வது நிலை வீரர் பிரான்சிஸ்கோ வெற்றி பெற்றார்.
ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது.
உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் தொடக்க சுற்றில் கனடாவை சேர்ந்த கேப்ரியல் டியாலோவை எதிர் கொண்டார். இதில் சுவரேவ் 6-7 (1-7), 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 43 நிமிட நேரம் தேவைப்பட்டது.
மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினாவை சேர்ந்த 18-வது நிலை வீரர் பிரான்சிஸ்கோ வெற்றி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 7-வது வரிசையில் உள்ள ஜாஸ்மின் பாலினி 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தகுதி சுற்று வீராங்கனையான சான் நோவிச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு எளிதில் முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் மரியா சகாரி (கிரீஸ்) வெற்றி பெற்றார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
ஆண்கள், பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர், கலப்பு இரட்டையர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இதில் டாப் 100 வீரர்களில் 99 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், இந்தத் தொடரில் அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (45), 5 ஆண்டுக்குப் பிறகு களமிறங்க உள்ளார்.
வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் செர்பியாவின் ஓல்கா டேனிலோவிச்சை சந்திக்கிறார்.
7 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான இவர் வைல்ட் கார்டு மூலம் விளையாடுகிறார் என்பதால் இவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் போட்டியிடும் மிக வயதான பெண் வீரர் என வரலாறு படைப்பார்.






