என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம்: 2-வது சுற்றில் சபலென்கா, ஸ்விட்டோலினா- அலெக்சாண்ட்ரோவா அதிர்ச்சி தோல்வி
    X

    ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம்: 2-வது சுற்றில் சபலென்கா, ஸ்விட்டோலினா- அலெக்சாண்ட்ரோவா அதிர்ச்சி தோல்வி

    • சபலென்கா 6-4, 6-1 என நேர்செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனையை வீழ்த்தினார்.
    • ஸ்விடோலினா 6-4, 6-1 என ஸ்பெயின் வீராங்கனையை வீழ்த்தினார்.

    2026-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் இன்று தொடங்கியது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையா பெலாரசின் சபலென்கா, தரநிலை பெறாத பிரான்சின் ரஜோனாவை எதிர்கொண்டார். இதில் சபலென்கா 6-4, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் 12-ம் நிலை வீராங்கனையான உக்ரைனைச் சேர்ந்த எலினா ஸ்விடோலினா, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா புக்சாவை எதிர்கொண்டார். இதில் ஸ்விடோலினா 6-4, 6-1 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    11-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா, தரநிலை பெறாத துருக்கியின் ஜென்னெப் சான்மெஸை எதிர்கொண்டார். இதில் சான்மெஸ் 7-5, 4-6, 6-4 என அலெக்சாண்ட்ரோவாவை வீழ்த்தினார்.

    பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய உக்ரைன் வீராங்கனை கோஸ்ட்யுக் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    Next Story
    ×