என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் உள்ளார்
    • அர்ஜென்டினாவை சேர்ந்த 18-வது நிலை வீரர் பிரான்சிஸ்கோ வெற்றி பெற்றார்.

    ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது.

    உலக தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவ் தொடக்க சுற்றில் கனடாவை சேர்ந்த கேப்ரியல் டியாலோவை எதிர் கொண்டார். இதில் சுவரேவ் 6-7 (1-7), 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 43 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினாவை சேர்ந்த 18-வது நிலை வீரர் பிரான்சிஸ்கோ வெற்றி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 7-வது வரிசையில் உள்ள ஜாஸ்மின் பாலினி 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் தகுதி சுற்று வீராங்கனையான சான் நோவிச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு எளிதில் முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் மரியா சகாரி (கிரீஸ்) வெற்றி பெற்றார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
    • இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    மெல்போர்ன்:

    நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

    ஆண்கள், பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர், கலப்பு இரட்டையர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இதில் டாப் 100 வீரர்களில் 99 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், இந்தத் தொடரில் அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (45), 5 ஆண்டுக்குப் பிறகு களமிறங்க உள்ளார்.

    வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் செர்பியாவின் ஓல்கா டேனிலோவிச்சை சந்திக்கிறார்.

    7 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான இவர் வைல்ட் கார்டு மூலம் விளையாடுகிறார் என்பதால் இவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் போட்டியிடும் மிக வயதான பெண் வீரர் என வரலாறு படைப்பார்.

    • கடந்த 2 ஆண்டுகளாகவே அல்காரசும், சின்னரும் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
    • நம்பர் ஒன் வீரரான அல்காரஸ் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் வேட்கையில் உள்ளார்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஒபன், விம்பிள்டன், அமெரிக்க ஒபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.

    ஆண்டின் முதல் கிராண்ட் சிலாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை (18-ந்தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 1-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

    உலகின் முதல் நிலை வீரரான அல்காரஸ் (ஸ்பெயின்), நடப்பு சாம்பியனும், 2-வது வரிசையில் உள்ள வருமான ஜானிக் சின்னர் (இத்தாலி), அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), ஜோகோவிச் (செர்பியா) போன்ற முன்னணி வீரர்களும், நம்பர் ஒன் இடத்தில் உள்ள சபலென்கா (பெலா ரஸ்) இகாஸ்வியாடெக் (போலந்து) கோகோ கவுப், நடப்பு சாம்பியன் மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) போன்ற முன்னணி வீராங்கனைகளும் பங்கேற்கிறார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளாகவே அல்காரசும், சின்னரும் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அல்காரஸ் 2024-ம் ஆண்டில் பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் பட்டத்தையும், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார்.

    சின்னர் 2024-ல் ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபனையும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் பட்டத்தையும் வென்றார்.

    அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளார். அதே நேரத்தில் நம்பர் ஒன் வீரரான அல்காரஸ் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் வேட்கையில் உள்ளார்.

    24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளரான ஜோகோவிச் கடந்த 2 ஆண்டாக எந்த கிராண்ட் சிலாம் பட்டமும் பெற்றதில்லை. அவர் தற்போது தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ளார்.

    • அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • இதில் நேற்று நடந்த அரையிறுதியில் ரஷிய வீராங்கனை வெற்றி பெற்றார்.

    அடிலெய்டு:

    அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் ரஷிய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரிவா, ரஷியாவின் டயானா ஷ்னெய்டர் உடன் மோதினார்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று மிர்ரா ஆண்ட்ரிவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • இதில் நேற்று நடந்த காலிறுதியில் ரஷிய வீராங்கனை வெற்றி பெற்றார்.
    • முதல் செட்டை 4-6 எனவும், 3-வது செட்டை 2-6 எனவும் மேடிசன் கீஸ் இழந்தார்.
    • 2-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார்.

    அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், கனடாவின் விக்டோரியா எம்போகோவை எதிர்கொண்டார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற மேடிசன் கீஸ் இந்த போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

    முதல் செட்டை 4-6 என இழந்த நிலையில், 2-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். ஆனால் 3-வது செட்டை 2-6 என இழந்து ஏமாற்றம் அடைந்தார். எம்போகோ அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் கிம்பெர்லி பிர்ரெல்லை எதிர்கொள்கிறார்.

    இந்த வருடத்தின் முதல் கிராண்ஸ்ட்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. மேடிசன் கீஸ் முதல் சுற்றில் உக்ரைன் வீராங்கனை ஒலேக்சான்ட்ரா ஒலிய்னிகோவாவை எதிர்கொள்கிறார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஜனவரி 18 முதல் மெல்போர்னில் நடக்க உள்ளது.
    • ஆஸ்திரேலிய ஓபனில் ரோஜர் பெடரர் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    சிட்னி:

    நடப்பு ஆண்டில் டென்னிஸ் போட்டியின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் வரும் 18-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை மெல்போர்னில் நடக்க உள்ளது.

    இந்தத் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிங்கிள்ஸ், டபுள்ஸ், மிக்ஸ்ட் டபுள்ஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். இதில் டாப் 100 வீரர்களில் 99 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் கண்காட்சி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் விளையாடுகிறார்.

    ஆஸ்திரேலிய ஓபனில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெடரர், இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்ததுடன், கடந்த 2022-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

    • ஏடிபி ஆடவர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது.
    • ஸ்பெயின் வீரர் அல்காரஸ் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    லண்டன்:

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஏடிபி ஆடவர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது.

    அதன்படி, ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 12,050 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

    இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 11,500 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் 5,105 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4,780 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

    இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி 4,105 புள்ளிகளுடன் 2 நிலைகள் உயர்ந்து 5ம் இடம் பிடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டிமினார் 6வது இடத்தில் தொடர்கிறார். கனடா வீரர் பெலிக்ஸ் அகர் அலிஸியாமே 2 நிலை சரிந்து 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    அமெரிக்காவின் பென் ஷெல்டன், டெய்லர் பிரிட்ஸ், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் புப்லிக் ஆகியோர் 8,9 மற்றும் 10-வது இடத்தில் உள்ளனர்.

    • 2006-ல் இருந்து 40 இடத்திற்கு மேல் சரிந்ததில்லை.
    • தற்போது 4-வது இடத்தில் உள்ளார்.

    2026-ல் இன்னும் டென்னிஸ் சீசனை தொடங்காத முன்னணி வீரரான ஜோகோவிச், ஆண்களுக்கான தரவரிசையில் 20 வருடமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    ஜோகோவிச் 2026-ல் இளம் வீரராக முதல் பிரெஞ்ச் ஓபன் போட்டியிலேயே காலிறுதிக்கு முன்னேறி உலகின் பார்வையை தன் பக்கம் திருப்பினார். அதில் இருந்து டென்னிஸ் உலக தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

    பல ஜாம்பவான்கள் வந்து சென்றுள்ளனர். எல்லோரையும் சந்தித்துள்ளார். பெடரர் முதல் நடால் வரை சந்தித்துள்ளார். தற்போது இளம் தலைமுறையினரையும் சந்தித்துள்ளார்.

    டென்னிஸ் போட்டியில் ஏற்றம் இறக்கத்தையும் சந்தித்துள்ளார். இருந்தபோதிலும், 2006-ல் இருந்து டென்னிஸ் தரவரிசையில் 40 இடங்களுக்கு மேல் ஒருபோதும் போனதில்லை.

    தற்போது ஜோகோவிச் 4-வது இடத்தில் உள்ளார். அல்காரஸ், ஜெனிக் சின்னெர், ஸ்வெரேவ் ஆகியோர் முதல் 3 இடத்தில் உள்ளனர்.

    • ஜெர்மனி வீராங்கனையிடம் நேர்செட் கணக்கில் தோல்வி.
    • கடந்த வாரம் நடைபெற்ற தொடரிலும் தொடக்க சுற்றிலேயே தோல்வியடைந்தார்.

    ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருக்கும் நிலையில், முதல் சுற்று போட்டி இன்று தொடங்கியது. ஆஸ்திரேலியா கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாட வைல்டு கார்டு அனுமதி பெற்ற 45 வயதான வீனஸ் வில்லியம்ஸ், ஹோபார்ட் ஓபனில் விளையாடவும் வைல்டு கார்டு அனுமதி பெற்றார்.

    இன்று வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் ஜெர்மனியைச் சேர்ந்த தட்ஜனா மரியாவை எதிர்கொண்டார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 3-6 என நேர்செட்டில் கணக்கில் தோல்வியை சந்தித்தார்.

    கடந்த வாரம் நியூசிலாந்தில் நடைபெற்ற ஆக்லாந்து போட்டியிடும் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார்.

    ஆஸ்திரேலியா ஓபனில் இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இரண்டு முறையும் தனது சகோதரி செரீனா வில்லியம்ஸிடம் தோல்வியடைந்துள்ளார்.

    மெல்போர்ன் பார்க்கில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபனில் 5 வருடங்கள் கழித்து விளையாட இருக்கிறார்.

    • பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-2, 7-6(7-1) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • சபலென்கா 62 பாயிண்ட்கள் வென்ற நிலையில், கோஸ்ட்யூக் 47 புள்ளிகள் வென்றிருந்தார்.
    • சபலென்கா 3/8 பிரேக் பாயிண்ட், கோஸ்ட்யூக் 1/3 பிரேக் பாயிண்ட் பெற்றனர்.

    ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரஸின் அரீனா சபலென்காவும், 16-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மர்தா கோஸ்ட்யூக்கும் பலப்பரீட்சை நடத்தினார். இதில் சபலென்கா 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    அரையிறுதியில் கோஸ்ட்யூக் அமெரிக்காவின் பெகுலாவை 6-0, 6-3 என வீழ்த்தியிருந்தார். சபலென்கா ரஷியாவின் செக்குடியரசின் முச்சோவாவை 6-3, 6-4 என வீழ்த்தியிருந்தார்.

    சபலென்கா முதல் சர்வீஸ் மூலம் 80 சதவீதம் வெற்றியை பெற்றார். கோஸ்ட்யூக் 57 சதவீதம் வெற்றிகளை பெற்றார். சபலென்கா 3/8 பிரேக் பாயிண்ட், கோஸ்ட்யூக் 1/3 பிரேக் பாயிண்ட் பெற்றனர்.

    சபலென்கா 62 பாயிண்ட்கள் வென்ற நிலையில், கோஸ்ட்யூக் 47 புள்ளிகள் வென்றிருந்தார்.

    ×