என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா வெற்றி பெற்றார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் உக்ரைனின் மர்தா கோஸ்ட்யூக் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் அலெக்ஸ் மிச்செல்சன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமா 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான அலெக்சாண்டர் கோவாசெவிக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மெத்வதேவ், பிரண்டன் நகஷிமாவை சந்திக்கிறார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஜனவரி 18 முதல் மெல்போர்னில் நடக்க உள்ளது.
    • ஒலிம்பிக் சாம்பியனான குயின்வென் ஜெங் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    சிட்னி:

    டென்னிஸ் போட்டியின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஜனவரி 18-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை மெல்போர்னில் நடக்க உள்ளது.

    இந்தத் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிங்கிள்ஸ், டபுள்ஸ், மிக்ஸ்ட் டபுள்ஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். இதில் டாப் 100 வீரர்களில் 99 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஒலிம்பிக் சாம்பியனும், சீன வீராங்கனையுமான குயின்வென் ஜெங் விலகியுள்ளார்.

    இவர் கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் தொடரில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின், போட்டிகளில் இருந்து விலகியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், போலந்தின் கமில் மஜாக் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-7 என இழந்த மெத்வதேவ் அடுத்த இரு செட்களை அதிரடியாக ஆடி 6-3, 6-2 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் பிராண்டன் அகஷிமா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் ரபேல் கொலிக்னனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • முதல்தர வீராங்கனையாக சபலென்கா 2-0 என எளிதாக வெற்றி பெற்றார்.
    • அமெரிக்காவின் பெகுலா 6-3, 7(7)-6(3) என வெற்றி பெற்றார்.

    ஆஸ்திரேலியா ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது.

    ஒரு காலிறுதி போட்டியில் முதல்தர வீராங்கனையாக சபலென்கா அமெரிக்காவைச் சேர்ந்த மேடிசன் கீய்ஸை எதிர்கொண்டார். இதில் சபலென்கா 6-3, 6-3 நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் பெகுலா, சம்சோனோவை எதிர்கொண்டார். இதில் 4-ம் நிலை வீராங்கனையான பெகுலா 6-3, 7(7)-6(3) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான ரைபாகினா, ரஷியாவின் கரோலினா முட்சோவைவை எதிர்கொண்டார். இதில் 11-ம் நிலை வீராங்கனையான முட்சோவா முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட ரைபாகினா 2-வது செட்டை 6-2 எனக் கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் போட்டிப்போட்டு விளையாடினர். என்றாலும் முட்சோவா 6-4 என 3-வது செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    • பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 2 வீராங்கனை தோல்வி அடைந்தார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் நம்பர் 2 வீராங்கனையான அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்ட்யுக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய உக்ரைன் வீராங்கனை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெண்டா அனிசிமோவா தொடரில் இருந்து வெளியேறினார்.

    • பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா வெற்றி பெற்றார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் நமப்ர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரொமேனியாவின் சொரானா சிர்ஸ்டி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பவுலா படோசாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெற்றி பெற்றார்.

    சிட்னி:

    பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் செக் குடியரசின் ஜிரி லெஹெகா 2வது சுற்ரில் காயம் காரணமாக விலகியதால் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது.
    • சபலென்கா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் புதிய சீசனை வெற்றியோடு தொடங்கினார்.

    பிரிஸ்பேன்:

    ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கிய 'நம்பர் ஒன்' வீராங்கனை பெலாரசின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாவை சந்தித்தார்.

    தனது அதிரடியான ஷாட்டுகளால் கிறிஸ்டினாவை திணறடித்த சபலென்கா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் புதிய சீசனை வெற்றியோடு தொடங்கினார். இந்த வெற்றிக்கு அவருக்கு 48 நிமிடங்களே தேவைப்பட்டது. தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் கஜகஸ்தானின் எலினா ரைபகினா 6-3, 7-5 என்ற நேர் செட்டில் சீனாவின் சூவாய் ஜாங்கை வெளியேற்றினார்.

    எகதெரினா அலெக்சாண்ட்ரா, டயானா ஸ்னைடர் (ரஷியா), கரோலின் முச்சோவா (செக்குடியரசு), சோரனா கிர்ஸ்டியா (ருமேனியா), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), பாலா படோசா (ஸ்பெயின்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

    இதன் ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 6-2 என்ற நேர் செட்டில் பாப்லோ காரெனோ பஸ்தாவை (ஸ்பெயின்) விரட்டினார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் அலெக்சாண்டர் கோவாசெவிச் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் உள்ளூர் நட்சத்திரம் நிக் கிரியாசுக்கு அதிர்ச்சி அளித்தார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்தத் தொடரில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள்.

    சிட்னி:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ். இந்த டென்னிஸ் தொடரானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரில் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.

    நடப்பு ஆண்டிற்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. இறுதிப் போட்டி பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது.

    கடும் சவால் அளிக்கும் இந்தத் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் யார் சாம்பியன் பட்டத்தை வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கான பரிசுத்தொகையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை 111.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.675 கோடியாகும்.

    இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 16 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை 96.15 மில்லயன் ஆஸ்திரேலிய டாலராக இருந்தது.

    • யுனைடெட் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் வெற்றி பெற்றார்.

    சிட்னி:

    யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், அர்ஜெண்டினாவின் சோலோனா சியாரா உடன் மோதினார்.

    தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார்.

    • யுனைடெட் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை தோல்வி அடைந்தார்.

    சிட்னி:

    யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஜப்பானின் நவோமி ஒசாகா, கிரீசின் மரியா சக்காரி உடன் மோதினார்.தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய மரியா சக்கா இப்போட்டியில் வெற்றி பெற்றார். ஒசாகா 4-2 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார். மரியா சக்காரி 6-6, செட் கணக்கில் வென்றார்.

    ×