என் மலர்
கால்பந்து
- இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியும் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின.
- டோர்முண்ட் அணியின் டிபெண்டர் டானி கார்வஜால் அசந்த நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது.
UEFA சாம்பியன் ஷிப் லீக் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய கோப்பை கால்பந்து 69 வது சீசன் போட்டிகள் கடந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கி நடந்து வந்த நிலையில் சாம்பியன் லீக் பட்டத்தை வெல்வதற்காக இறுதிப்போட்டியானது நேற்று (ஜூன் 1) சனிக்கிழமை லண்டனில் உள்ள வெம்ப்லே மைத்தனத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியும் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. இந்த லீக் தொடர் முழுவதிலும் இரண்டாவது சிறந்த அணியாக விளங்கிய டொர்முண்ட் அணி ஆட்டத்தின் முதல் பாதியில் வாய்ப்பு கிடைத்தும் 3 கோல்களை தவறவிட்டது.
டோர்முண்ட் அணியின் டிபெண்டர் டானி கார்வஜால் அசந்த நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது. தொடர்ந்து ரியல் மத்ரித் வீரர் வினீசியஸ் ஜூனியர், 9 நிமிட இடைவெளியில் ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதன்மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியை வீழ்த்தி ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஷிப் லீக் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஐரோப்பிய லீக் கோப்பையை ரியல் மாட்ரிட் அணி வெல்வது இது 15 ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- பெனால்டி ஷூட்டை தவற விட்டு தோற்றதால் மனமுடைந்து மைதானத்திலேயே ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
- ரொனால்டோ அழும் காட்சிகளே தற்போது இணையத்தை நிறைந்துள்ளன.
கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபிய அணியின் கேப்டனாக சவுதி ப்ரோ லீக் தொடரில் அவ்வணியை திறமையாக வழிநடத்தி பைனல்ஸ் வரை அழைத்து வந்தார். அதன்படி நேற்று (மே 31) சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் உள்ள கிங் அப்துல்லா மைதானத்தில் வைத்து நடந்த கிங் கப் சவுதி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் அல்- ஹிலால் அணியை ரொனால்டோவின் அல்- நாசர் அணி எதிர்கொண்டது.
இந்த போட்டியில் இறுதிவரை போராடிய அல்- நாசர் அணி பெனால்டி ஷூட்டை தவறவிட்டதன் மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் அல்- ஹிலால் அணியிடம் தோற்றது. இந்நிலையில் பெனால்டி ஷூட்டை தவற விட்டு தோற்றதால் மனமுடைந்து மைதானத்திலேயே ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
ரொனால்டோ அழும் காட்சிகளே தற்போது இணையத்தை நிறைந்துள்ளன. அவர் அழும் வெடியோவைப் பகிர்ந்து அவருக்கு நெட்டிசன்களும் ரொனால்டோ ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
கால்பந்து விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டவரான ரொனால்டோ தோல்விக்காக கண்ணீர் விட்டு அழுத்தத்தில் ஆச்சர்யம் இல்லை என்று கூறும் நெட்டிசன்கள், கிரிக்கெட்டை போல் வணிக லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ரொனால்டோ போன்ற உண்மையான வீரர்கள் எப்போதும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர் என்று கருத்து கூறி வருகின்றனர்.
முன்னதாக லீக் தொடரில் அல் நசர் அணி, அல் இத்திஹாத் அணியுடன் மோதிய போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதி முடிவதற்கு முன் ஒரு கோல், ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் மற்றொரு கோல் என இரண்டு கோல்களை ரொனால்டோ அடித்தார். இதன் மூலம் இந்த சீசனில் 35 கோல்களை அடித்து, ஒரே சீசனில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- கடைசி லீக் ஆட்டத்தில் இரண்டு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
- 2019-ல் அப்டெர்ரஜாக் ஹம்தல்லா ஒரு சீசனில் 34 கோல்கள் அடித்தது சாதனையாக இருந்தது.
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதியில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். அல்-நாசர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று அல்-இத்திஹாட் அணியை எதிர்கொண்டது. இதில் அல்-நாஸர் அணி 4-2 என அல்-இத்திஹாட் அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்தார். இதன்மூலம் சவுதி புரோ லீக் கால்பந்தில் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக அப்டெர்ரஜாக் ஹம்தல்லா 2019-ல் 34 கோல்கள் அடித்ததுதான் சாதனையாக இருந்தது. அதை தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ முறியடித்துள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் கிறிஸ்டியானோ ரொனால்டோ "சாதனைகளை நான் பின்தொடரவில்லை. அதுதான் என்னை பின்தொடர்கின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்து முறை பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரியல் மாட்ரிட் அணிக்காக 305 போட்டிகள் விளையாடி உள்ளார்.
- 14 ஆண்டுகளாக ஜெர்மனி கால்பந்து அணியில் விளையாடி வந்தவர் டோனி க்ராஸ்.
யூரோ 2024 தொடருக்கு பின் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜேர்மனி வீரர் டோனி க்ராஸ் அறிவித்துள்ளார். 14 ஆண்டுகளாக ஜெர்மனி கால்பந்து அணியில் விளையாடி வந்தவர் டோனி க்ராஸ் (34). ஜெர்மனி அணிக்காக இதுவரை 108 போட்டிகளில் விளையாடி க்ராஸ் 17 கோல்கள் அடித்துள்ளார்.
ரியல் மாட்ரிட் அணிக்காக 305 போட்டிகளும் (22 கோல்கள்), பாயர்ன் முனிச் அணிக்காக 130 போட்டிகளும் (13 கோல்கள்), பாயர் லெவேர்குசேன் அணிக்காக 43 போட்டிகளும் (10 கோல்கள்) விளையாடியுள்ளார்.
இவரது மிரட்டலான ஆட்டத்தின் மூலம் ரியல் மாட்ரிட் அணி UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி க்ராஸ் அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து க்ரூஸ் கூறியதாவது:-
ஜூலை 17, 2024-ல் ரியல் மாட்ரிட்டில் நான் அறிமுகமானது என் வாழ்க்கையை மாற்றிய நாள். ஒரு மனிதராகவும், கால்பந்து வீரராகவும் மாற்றியது. இது உலகின் பாரிய கிளப் அணியில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீஸனின் முடிவில் இந்த அத்தியாயம் முடிவடைகிறது.
என்னை திறந்த மனதுடன் வரவேற்று நம்பிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால், அன்புள்ள மாட்ரிடிஸ்டாஸ், முதல் நாள் முதல் கடைசி நாள் வரை உங்கள் பாசத்திற்கும், உங்கள் அன்புக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.
என அவர் கூறியுள்ளார்.
- கால்பந்தாட்ட உலகில் 2 பெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொருவர் லியோனல் மெஸ்ஸி.
- 629 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்சைக் கொண்ட ரொனால்டோ, முக்கிய பிராண்ட்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களின் மூலமும் அதிக வருவாய் ஈட்டுவதாகத் தெரிகிறது.
கால்பந்தாட்ட உலகில் 2 பெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொருவர் லியோனல் மெஸ்ஸி. இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம். விளையாட்டைத் தாண்டி இவ்விருவர் உலக ஐகானாக விளங்குகின்றனர். இந்நிலையில் ரொனால்டோவின் வருமானம் மெஸ்ஸியை விட 2 அதிகம் என்று தெரியவந்துள்ளது.

பிரபல ஃபோர்ப்ஸ் இதழின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்காவது முறையாக அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் 260 மில்லியன் டாலர் வருவாயுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஸ்பெயின் கோல்ப் வீரர் ஜான் ரஹம் சவுதி இரண்டாம் இடத்தில் உள்ளார். பட்டியலில் லியோனல் மெஸ்ஸி 135 மில்லியன் டாலர் வருவாயுடன் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்
39 வயதான ரொனால்டோவின் மொத்த வருவாயான 260 மில்லியன் டாலர்கள் பிராந்தியத்தில் இதுவரை ஒரு கால்பந்து வீரர் ஈட்டும் உட்சபட்ச வருவாயாகும். 629 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்சைக் கொண்ட ரொனால்டோ, முக்கிய பிராண்ட்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களின் மூலமும் அதிக வருவாய் ஈட்டுவதாகத் தெரிகிறது.
- என்னுடைய ஓய்வு முடிவு உடல் சார்ந்த அம்சங்கள் காரணமாக வரவில்லை.
- நான் இன்னும் கட்டுக்கோப்பாக இருக்கிறேன். நன்றாக ஓடுகிறேன்.
இந்திய கால்பந்து அணியின் ஜாம்பவானாக சுனில் சேத்ரி விளங்கி வருகிறார். இவர் திடீரென நேற்று சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது இந்திய கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
39 வயதான இவர் இந்திய அணிக்காக 19 வருடங்கள் விளையாடி 150 போட்டிகளில் 94 கோல்கள் அடித்துள்ளார். இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரரும் ஆவார். ஜூன் 6-ந்தேதி இந்திய அணி குவைத் அணிக்கெதிராக விளையாடுகிறது. இதுதான் அவருடைய கடைசி போட்டியாகும்.
இந்த நிலையில் ஓய்வு முடிவை எடுத்தது குறித்து சுனில் சேத்ரி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
என்னுடைய ஓய்வு முடிவு உடல் சார்ந்த அம்சங்கள் காரணமாக வரவில்லை. நான் இன்னும் கட்டுக்கோப்பாக இருக்கிறேன். நன்றாக ஓடுகிறேன். கடினமாக பயிற்சி மேற்கொள்வதில் எந்த கஷ்டமும் இல்லை. இந்த முடிவு மனநிலை அம்சங்கள் தொடர்பாக வந்தது.
ஓய்வு முடிவு உள்ளுணர்வாக வந்தது. ஒரு வருடம் பெங்களூரு எஃப்சி அணிக்காக விளையாடுவேன். அதன்பின் எவ்வளவு காலம் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன் என்பது எனக்குத் தெரியாது. அதன்பின் ஓய்வு எடுக்க விரும்புகிறேன்.
பயிற்சியாளராக ஆவது குறித்து நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். அது குறித்து எனது ஓய்வு காலத்தில் யோசிப்பேன். தற்போது என்னுடைய எண்ணத்தில் அது இல்லை.
இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளரை தவிர்த்து, விராட் கோலியிடம் எனது ஓய்வு குறித்து தெரிவித்தேன். அவர் எனக்கு மிகவம் நெருக்கமானவர். அவர் என்னை புரிந்து கொள்கிறார்.
இவ்வாறு சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.
- இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.
- சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணிக்கு கடந்த 20 ஆண்டுகளாக அவர் பங்களிப்பு அளித்து வந்துள்ளார்.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.
ஜூன் 6-ம் தேதி நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியுடன் ஓய்வுபெறுகிறார்.
கால்பந்து வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனக்கூறி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவின் கீழ் 'சகோதரரே உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்' என்று கிரிக்கெட் வீரர் விராட் கோலி கமெண்ட் செய்துள்ளார்.
"உங்களின் கால்பந்து வாழ்க்கை அற்புதமானது. சந்தோசமாக ஓய்வை கொண்டாடுங்கள் லெஜெண்ட்" என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் சுனில் சேத்ரியின் இந்த வீடியோவை பிசிசிஐ மற்றும் பல்வேறு ஐபிஎல் அணிகள் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளன.
India Football captain Sunil Chhetri to retire on June 6. ?
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 16, 2024
What a ride this has been, skipper! 94 international goals, so many laurels, an unbroken conviction and you've inspired so many young Indians to dream big. ⚽️?
Happy farewell to the No.11 but India's #1,… pic.twitter.com/s3hEuXFjq3
- சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.
- இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணிக்கு கடந்த 20 ஆண்டுகளாக அவர் பங்களிப்பு அளித்து வந்துள்ளார்.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.
கால்பந்து வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனக்கூறி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். சுனில் சேத்ரியின் இந்த அறிவிப்பால் இந்திய கால்பந்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஜூன் 6-ம் தேதி நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியுடன் ஓய்வுபெறுகிறார்.
I'd like to say something... pic.twitter.com/xwXbDi95WV
— Sunil Chhetri (@chetrisunil11) May 16, 2024
- பிஎஸ்ஜி அணிக்காக 305 போட்டிகளில் விளையாடி 255 கோல்கள் அடித்துள்ளா
- ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்வே. 25 வயதான இவர் பிரான்ஸ் நாட்டின் லீக்-1ல் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். நீண்ட காலமாக பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வரும் எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புவதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக தொடர்ந்து யூகச் செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன. ஆனால் பிஎஸ்ஜி அணிக்காகவே விளையாடி வந்தார். இந்த நிலையில் ஜூன் மாதத்துடன் முடிவடையும் லீக்-1 சீசனோடு பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேற இருப்பதாக எம்பாப்பே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை விளையாடுவது பிஎஸ்ஜி அணிக்காக தனது கடைசி ஆட்டம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவர் பிஎஸ்ஜி அணிக்காக 305 போட்டிகளில் விளையாடி 255 கோல்கள் அடித்துள்ளார். 2022 கால்பந்து உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவிற்கு எதிராக அபாரமாக விளையாடி 3 கோல்கள் அடித்தார். ஆனால், போட்டி டிரா ஆகி பெனால்டி ஷூட்அவுட்டில் அர்ஜென்டினா கோப்பையை வென்றன. 2017-ல் தனது 18 வயதில் பிரான்ஸ் அணியில் இடம் பிடித்து உலகக் கோப்பையை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
எம்பாப்வே 2015 முதல் 2018 வரை மொராக்கோ அணிக்காக விளையாடி 16 போட்டிகளில் 41 கோல் அடித்துள்ளார். 2017-18-ல் லோன் மூலம் பிஎஸ்ஜி அணியில் அறிமுகம் ஆனார். அதில் இருந்து தற்போது வரை பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார்.
- ரியல் மாட்ரிட் 4-3 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
- இறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் - டார்ட்மண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
பாரீஸ்:
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வந்தது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று நடந்த அரையிறுதியின் 2-வது சுற்றின் கடைசி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-2 என பின்தங்கியிருந்த நிலையில் 88', 90+1' ஆகிய கடைசி நிமிடங்களில் ஜோஸ்லு அடித்த கோல்களால் ரியல் மாட்ரிட் த்ரில் வெற்றி பெற்றது.
ரியல் மாட்ரிட் தரப்பில் ஜோசலு வெற்றிக்குரிய 2 கோல்களையும் அடித்தார். பேயர்ட் முனிச் தரப்பில் அல்போன்சோ டேவிஸ் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.
அரையிறுதியின் முதல் டெக்கில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்த நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ரியல் மாட்ரிட் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஒட்டுமொத்தத்தில் ரியல் மாட்ரிட் 4-3 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப்போட்டியில் ரியல் மாட்ரிட் - டார்ட்மண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
- கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
- பி.எஸ்.ஜி. நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்வே இரண்டு கோல்கள் (61 மற்றும் 89-வது நிமிடம்) அடித்தார்.
பார்சிலோனா:
கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டி விட்ட இந்த போட்டியில் ஒவ்வொரு கால்இறுதியும் இரண்டு ஆட்டங்களை கொண்டது. இதில் பார்சிலோனா கிளப் (ஸ்பெயின்) பி.எஸ்.ஜி. எனப்படும் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) இடையிலான கால்இறுதியின் முதலாவது சுற்றில் பார்சிலோனா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் 2-வது கால்இறுதி சுற்று பார்சிலோனா நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 29-வது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் ரொனால்டு அராவ் ஜோ சிவப்பு அட்டை எச்சரிக்கைக்குள்ளாகி வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பி.எஸ்.ஜி. அணி அடுத்தடுத்து கோல்களை போட்டு 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பி.எஸ்.ஜி. நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்வே இரண்டு கோல்கள் (61 மற்றும் 89-வது நிமிடம்) அடித்தார்.
இரண்டு கால்இறுதி சுற்றில் அடித்த கோல்களின் அடிப்படையில் பி.எஸ்.ஜி. 6-4 என்ற கோல் கணக்கில் முன்னிலையுடன் அரைஇறுதிக்கு முன்னேறியது. 2021-ம்ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அரைஇறுதிக்கு வந்துள்ள பி.எஸ்.ஜி. அணி அடுத்து போரஸ்சியா டார்ட்மன்ட் (ஜெர்மனி) கிளப்பை சந்திக்கிறது.
- அபா அணிக்கு எதிராக ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார்.
- இந்த சீசனில் 29 கோல்கள் அடித்துள்ளார்.
கால்பந்து போட்டியின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். ஐந்து முறை பலோன்-டி'ஆர் விருதை வென்றுள்ள அவர், தற்போது சவுதி ப்ரோ லீக்கில் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று அல்-நசர் அபா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார். மேலும் இரண்டு கோல் அடிப்பதற்கு உதவி புரிந்தார். இதனால் அல்-நசர் 8-0 என வெற்றி பெற்றது.
சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அல்-தாய் அணிக்கு எதிராக ஏற்கனவே ஹாட்ரிக் அடித்திருந்தார். இந்த போட்டியில் அல்-நசர் அணி 5-1 என வெற்றி பெற்றிருந்தது. ரொனால்டோ இந்த சீசனில் மொத்தம் 29 கோல் அடித்துள்ளார்.
இந்த சீசனில் அல்-நசர் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. அல்-ஹிலால் முதல் இடம் பிடித்துள்ளது. இன்னும் 8 போட்டிகள் மீதமுள்ளன. அந்த அணியின் அலேக்சாண்டர் மிட்ரோவிக் 22 கோல்கள் உடன் 2-வது இடத்தில் உள்ளார்.






