என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி உள்ளார்.
    • 5-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு ஆலோசித்து வருகிறது.

    காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி உள்ளார்.

    தற்போது நடந்து வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் தேவைபட்டால் ரிஷப்பண்ட் பேட்டிங் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் விக்கெட் கீப்பிங் பணியை துருவ் ஜூரெல் கவனித்து வருகிறார்.

    இதற்கிடையே 5-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு ஆலோசித்து வருகிறது. இதில் இங்கிலாந்தில் கவுண்டி டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இஷான் கிஷனை அணியில் சேர்க்க முடிவு செய்து அவருக்கு தேர்வுக் குழு அழைப்பு விடுத்தது.

    ஆனால் தான் கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படுவதாகவும், இதனால் தன்னால் 5-வது டெஸ்டில் ஆட முடியாது என்றும் இஷான் கிஷன் மறுப்பு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதையடுத்து வேறு வீரர்களை தேர்வுக்குழு பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாக தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசனை அணியில் சேர்க்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • சாய் சுதர்சன், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோர் அரை சதம் கடந்தனர்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சாய் சுதர்சன் 61 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்களும், ரிஷப் பண்ட் 54 ரன்களும் எடுத்தனர்.

    இந்திய அணியின் முதல் இன்னிங்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். ஆனாலும், காயத்தைப் பொருட்படுத்தாத ரிஷப் பண்ட் களமிறங்கி 2 சிக்சர் உட்பட 54 ரன்கள் அடித்து அசத்தினார்.

    இந்நிலையில், இந்த இன்னிங்சில் அடித்த அரைசதத்தையும் சேர்த்து ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் இதுவரை 9 அரைசதங்கள் அடித்துள்ளார்.

    இதன்மூலம் வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் அரைசதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற தோனியின் (8 அரைசதங்கள்) வாழ்நாள் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

    • டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
    • முதலில் பேட்செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன் எடுத்தது.

    டாக்கா:

    வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டியின் முடிவில் வங்கதேச அணி 2 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி டாக்காவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்களை எடுத்தது. தொடக்க வீரர் சாஹிப்சாதா பர்ஹான் அதிரடியாக விளையாடி அரை சதத்தைப் பதிவுசெய்தார். அவர் 63 ரன்னில் அவுட்டானார். ஹசன் நவாஸ் 33 ரன்னில் வெளியேறினார்.

    வங்கதேச அணி சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினரின் துல்லிய பந்து வீச்சில் சிக்கிய வங்கதேச அணி 104 ரன்னில் சுருண்டு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 74 ரன்னில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது.

    வங்கதேசம் அணி டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் விருது சாஹிப்சாதா பர்ஹானுக்கும், தொடர் நாயகன் விருது ஜேகர் அலிக்கும் வழங்கப்பட்டது.

    ஏற்கனவே இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்ற வங்கதேச அணி, தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகவும் டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், கே.எல்.ராகுல் 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் 61 ரன்னில் அவுட்டானார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 83 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூரும் தலா 19 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜடேஜா 20 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாகூர் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாளில் காலில் அடிபட்டு வெளியேறிய ரிஷப் பண்ட் மீண்டும் களமிறங்கி அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். அரை சதம் விளாசிய பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 27 ரன்னில் அவுட்டானார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இறங்கினர்.

    இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். இதனால் ரன்ரேட் 5க்கும் அதிகமாக இருந்தது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராலே 84 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் பென் டக்கெட் 94 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 46 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்தியா சார்பில் ஜடேஜா, கம்போஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • இர்பான் பதான் ரிஷப் பண்டை போராளி என தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • காயத்திலும் இந்திய அணிக்காக பேட்டிங் செய்த ரிஷப் பண்டுக்கு ரசிகர்கள் புகழாரம் சுட்டியுள்ளனர்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    இப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்து இருந்தது. ரிஷப்பண்ட் 37 ரன்னில் இருக்கும் போது காயத்தால் வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் ரிஷப் பண்டிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

    2-வது நாள் ஆட்டத்தின் போது மீண்டும் ரிஷப் பண்ட் களமிறங்கி அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் குவித்தது.

    இந்நிலையில் காயத்திலும் இந்திய அணிக்காக பேட்டிங் செய்த ரிஷப் பண்டுக்கு ரசிகர்கள் புகழாரம் சுட்டியுள்ளனர். மேலும் 2002-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் சுழற்பந்து வீச்சாளருமான அனில் கும்ப்ளே கிழிந்த தாடையுடன் பந்து வீசி அசத்தினார். அவருடன் ரிஷப் பண்டை ஒப்பிட்டு ரசிகர்கள் உள்பட முன்னாள் இந்திய வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

    குறிப்பாக இர்பான் பதான் ரிஷப் பண்டை போராளி என தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடியது.
    • நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    இதையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் ரிச்சர்ட் ந்ங்கரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடியது. அந்த அணியில் 3 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி 18.5 ஓவரில் 130 ரன்னில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக டோனி முன்யோங்கா 40 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி வருகிற 26-ந் தேதி நடக்கிறது. இதில் நியூசிலாந்தும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதுகிறது.

    • பாகிஸ்தான் தரப்பில் சாஹிப்சாதா பர்ஹான் 63 ரன்கள் விளாசினார்.
    • வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலிரண்டு போட்டியின் முடிவில் வங்கதேச அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.

    இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தாக்காவில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சைம் அயூப் - சாஹிப்சாதா பர்ஹான் களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய ஃபர்ஹான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். சைம் அயூப் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

    அவரைத்தொடர்ந்து 63 ரன்களை எடுத்திருந்த பர்ஹானும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 5, ஹசன் நவாஸ் 33, ஹுசைன் தாலத் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.

    பின்னர் இணைந்த கேப்டன் சல்மான் ஆகா மற்றும் முகமது நவாஸ் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

    • இந்திய அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் எடுத்தார்.
    • இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இங்கிலாந்து- இந்தியா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால்- கே.எல். ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்தது. கே.எல். ராகுல் 46 ரன்கள் எடுத்த நிலையிலும் ஜெய்ஸ்வால் 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த சுப்மன் கில் 12, சாய் சுதர்சன் 61 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜாவும், ஷர்துல் தாக்கூரும் தலா 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஷர்துல் தாகூர் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். தாகூர் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாளில் காலில் அடிப்பட்ட வெளியேறிய ரிஷப் பண்ட் மீண்டும் களமிறங்கினார். அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

    நிதானமாக விளையாடி கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் 27 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த காமோஜ் டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அரை சதம் விளாசிய பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக பும்ரா 4 ரன்னில் வெளியேறினார்.

    இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    • முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
    • டி20 தொடர் ஜுலை 1-ந் தேதி தொடங்கி ஜூலை 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்திய அணி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. டி20 தொடர் ஜுலை 1-ந் தேதி தொடங்கி ஜூலை 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடர் ஜூலை 14-ந் தேதி தொடங்கி ஜூலை 19-ந் தேதி வரை நடக்கிறது. இந்திய வீரர்கள் ரோகித், விராட் கோலி இந்த ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    டி20 தொடர்:-

    1. ஜூலை 1-ம் தேதி பேங்க்ஸ் ஹோம்ஸ் ரிவர்சைடு, டர்ஹாம் மாலை 6:30 மணி

    2. ஜூலை 4-ம் தேதி எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் பிற்பகல் 2:30 மணி

    3. ஜூலை 7-ம் தேதி ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம் மாலை 6:30 மணி

    4. ஜூலை 9-ம் தேதி சீட் யுனிக் ஸ்டேடியம், பிரிஸ்டல் மாலை 6:30 மணி

    5. ஜூலை 11-ம் தேதி யுடிலிடா பவுல், சவுத்தாம்ப்டன் மாலை 6:30 மணி

    ஒருநாள் தொடர்:-

    முதல் ஒருநாள் போட்டி ஜூலை 14 எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம் மதியம் 1:00 மணி

    இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 16 சோபியா கார்டன்ஸ், கார்டிஃப் மதியம் 1:00 மணி

    மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூலை 19 லார்ட்ஸ், லண்டன் காலை 11:00 மணி

    • ரிஷப்பண்ட் 37 ரன்னில் இருக்கும் போது காயத்தால் வெளியேறினார்.
    • ஸ்கேன் எடுக்கப்பட்டதில் ரிஷப் பண்டிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

    இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    இப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்து இருந்தது.

    ரிஷப்பண்ட் 37 ரன்னில் இருக்கும் போது காயத்தால் வெளியேறினார். அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் ரிஷப் பண்டிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பண்ட் விலகினார். இதனால் 2-வது இன்னிங்சில் ரிஷப் பண்ட் விளையாடமாட்டார். இது இந்திய அணிக்கு பின்னடைவாகும்.

    ரிஷப் பண்டிற்கு பதிலாக இஷான் கிஷன் இந்திய அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ரிஷப் பண்ட் 37 ரன்கள் அடித்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்
    • கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து ரிஷப் பண்ட்டின் காலை நேராக தாக்கியதால் காயம் ஏற்பட்டது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    இப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்து இருந்தது.

    சாய் சுதர்ஷன் 61 ரன்னும், ஜெய்ஸ்வால் 58 ரன்னும், கே.எல்.ராகுல் 46 ரன்னும், கேப்டன் சுப்மன் கில் 12 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் தலா 19 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    ரிஷப்பண்ட் 37 ரன்னில் காயத்தால் வெளியேறினார். கிறிஸ்வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார். அவரது வலது கால் பெரு விரலில் பந்து தாக்கியது. ரத்தம் கசிந்தது. காலில் பயங்கரமான வீக்கம் ஏற் பட்டது. வலியால் அவர் துடித்தார். உடனடியாக அணியின் உடல் இயக்க நிபுணர் வந்து முதலுதவி அளித்தார்.

    ஆனாலும் வலி குறையாததால் ஆம்புலன்ஸ் பெயர டப்பட்ட கோல்ப் வண்டி மூலம் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டார்.அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவகுழு அவரது முன்னேற்றம் குறித்து கண்காணித்து வருகிறது.

    இந்நிலையில், காயமடைந்த ரிஷப் பண்டிற்கு எலும்பு முறிவு என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பண்ட் விலகுவார் என்று கூறப்படுகிறது.

    • 21 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
    • 708 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

    இங்கிலாந்து அணியின் தலைசிறந்த ஸ்விங் பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இங்கிலாந்து மண்ணில் இவரை எதிர்த்து பேட்டர்கள் விளையாடுவது சுலபமல்ல. 41 வயது வரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் கடைசி போட்டியில் விளையாடினார்.

    இந்த நிலையில் தான் முழு விருப்பத்துடன் ஓய்வு பெறவில்லை என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆண்டர்சன் கூறுகையில் "நான் கடந்த வருடம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன். ஆனால் முழு விருப்பத்துடன் ஓய்வு பெறவில்லை. கேப்டன், பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் வாரிய இயக்குனருடன் ஆலோசனையில் ஈடுபட்டேன். அப்போது அவர்கள் வேறு திசையில் செல்ல விரும்புவதாக தெரிவித்தார்கள்" என்றார்.

    2003ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். 21 வருடங்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார்.

    188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 704 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீ்ழ்த்திய வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

    முரளீதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். வார்னே 708 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஆண்டர்சன் 704 விக்கெட்டுகள் வீழ்த்தியள்ளார். அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    ×