என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பண்ட்டுக்கு பதிலாக விளையாட வலியுறுத்தல்: கிரிக்கெட் வாரிய அழைப்பை நிராகரித்த இஷான் கிஷன்
- இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி உள்ளார்.
- 5-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு ஆலோசித்து வருகிறது.
காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி உள்ளார்.
தற்போது நடந்து வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் தேவைபட்டால் ரிஷப்பண்ட் பேட்டிங் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் விக்கெட் கீப்பிங் பணியை துருவ் ஜூரெல் கவனித்து வருகிறார்.
இதற்கிடையே 5-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு ஆலோசித்து வருகிறது. இதில் இங்கிலாந்தில் கவுண்டி டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இஷான் கிஷனை அணியில் சேர்க்க முடிவு செய்து அவருக்கு தேர்வுக் குழு அழைப்பு விடுத்தது.
ஆனால் தான் கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படுவதாகவும், இதனால் தன்னால் 5-வது டெஸ்டில் ஆட முடியாது என்றும் இஷான் கிஷன் மறுப்பு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையடுத்து வேறு வீரர்களை தேர்வுக்குழு பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்றாக தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசனை அணியில் சேர்க்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.






