என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சோதி சுழலில் சிக்கிய ஜிம்பாப்வே: 130 ரன்னில் ஆல் அவுட்- நியூசிலாந்து அபார வெற்றி
    X

    சோதி சுழலில் சிக்கிய ஜிம்பாப்வே: 130 ரன்னில் ஆல் அவுட்- நியூசிலாந்து அபார வெற்றி

    • 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடியது.
    • நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    இதையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் ரிச்சர்ட் ந்ங்கரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணி விளையாடியது. அந்த அணியில் 3 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி 18.5 ஓவரில் 130 ரன்னில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக டோனி முன்யோங்கா 40 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி வருகிற 26-ந் தேதி நடக்கிறது. இதில் நியூசிலாந்தும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதுகிறது.

    Next Story
    ×