என் மலர்
விளையாட்டு
- எம்.எஸ். டோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
- எம்.எஸ். டோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி எம்.எஸ். டோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்த கொண்டாட்டத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டு எம்.எஸ். டோனிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் எம்ம்.எஸ். டோனிக்கு ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலத்தரப்பினரும் எம்.எஸ். டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எம்.எஸ். டோனியின் பிறந்தநாளை ஒட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் சிறப்பு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பையை டோனியிடம் கொடுப்பது போன்ற AI படத்தை பகிர்ந்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அதில், 'பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல' என்று பதிவிட்டுள்ளது.
- கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.
- முருகன் அஷ்வின் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மதுரை அணியை வெற்றி பெறவைத்தார்.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக கவின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார். விஷால் வைத்யா சிறப்பாக ஆடி அரை சதமடித்து 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், சேலம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது. மதுரை அணி சார்பில் முருகன் அஷ்வின் 3 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான சுரேஷ் 38 பந்துகளில் 69 ரன்கள் விளாசி அவுட்டானார். நிதானமாக விளையாடிய ஜெகதீசன் 57 ரன்கள் அடித்தார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், களத்தில் இருந்த முருகன் அஷ்வின் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மதுரை அணியை வெற்றி பெறவைத்தார்.
3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மதுரையை வெற்றி பெற வைத்த முருகன் அஷ்வின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டிலிருந்து மேலும் ஒரு தடகள வீரர் தகுதி பெற்றுள்ளார்.
- வரும் ஜூலை 26ம் தேதி பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் மிகப்பெரிய கனவாக கருதப்படுகிறது. சமீபகாலமாக இந்தியாவில் இருந்து ஏராளமானோர் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இந்த சூழலில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரினுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. வரும் ஜூலை 26ம் தேதி பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. இந்த போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடக்கிறது.
சிறு வயது முதலே நீளம் தாண்டுதலில் சிறந்து விளங்கும் ஜெஸ்வின் 2022ம் ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றார். ஆனால், இறுதிப்போட்டிக்கு அவரால் முன்னேற முடியவில்லை. ஆனால், 2023ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலுக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அந்த இறுதிப்போட்டியில் 12ம் இடமான கடைசி இடத்தையே அவரால் பிடிக்க முடிந்தது. இருப்பினும் அவரது விடாமுயற்சி மற்றும் பயிற்சியால் தரவரிசை அடிப்படையில் தற்போது அவருக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டிலிருந்து மேலும் ஒரு தடகள வீரர் தகுதி பெற்றுள்ளார். நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். தமிழ்நாட்டிலிருந்து ஏற்கனவே 5 வீரர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு தடகள வீரர் தகுதி பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் வரலாற்றில் தமிழ்நாட்டில் இருந்து அதிக தடகள வீரர்கள் தேர்வாகி இருப்பது இது முதல்முறையாகும்
- நடிகர் சல்மான் கான் எம்.எஸ். டோனிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
- ருதுராஜ் கெய்க்வாட் எம்.எஸ். டோனிக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி எம்.எஸ். டோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இதைத் தொடர்ந்து டோனியின் மனைவி சாக்ஷி தனது கணவருக்கு கேக் ஊட்டிவிட்டு, அவரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டு எம்.எஸ். டோனிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
எம்.எஸ். டோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் எம்ம்.எஸ். டோனிக்கு ரவீந்திர ஜடேஜா தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சி.எஸ்.கே. அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எம்.எஸ். டோனிக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர்கள் தவிர சமூக வலைதளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலத்தரப்பினரும் எம்.எஸ். டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- யூரோ கோப்பை தொடரில் நேற்றிரவு 2 காலிறுதி போட்டிகள் நடைபெற்றன.
- ஜூலை 10 ஆம் தேதி அரையிறுதி போட்டிகள் துவங்குகின்றன.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் 2024 யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. நேற்றிரவு நடைபெற்ற காலிறுதி போட்டிகளில் இங்கிலாந்து - சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து - துருக்கி அணிகள் மோதின.
முதலில் நடைபெற்ற இங்கிலாந்து - சுவிட்சர்லாந்து அணிகள் இடையிலான போட்டி பரபரப்பாக முடிந்தது. போட்டி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு அடித்திருந்ததால் பெனால்டி கிக் முறை கொண்டுவரப்பட்டது. இதில் இங்கிலாந்து 5-3 என்ற முறையில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் நெதர்லாந்து - துருக்கி அணிகள் மோதின. இந்த போட்டியில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கணக்கில் துருக்கியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இதையடுத்து வருகிற 10 ஆம் தேதி நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகளும், வருகிற 11 ஆம் தேதி நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோத உள்ளன.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் வென்றார்.
லண்டன்
டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ், இங்கிலாந்தின் கேமரூன் நூரியுடன் மோதினார்.
பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வரேவ் 6-4, 6-4, 7-6 (17-15) என்ற செட் கணக்கில் நூரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தப் போட்டியை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கண்டு களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய சேலம் 180 ரன்களை குவித்தது.
- அந்த அணியின் கவின், விஷால் வைத்யா அரை சதமடித்தனர்.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக கவின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார். விஷால் வைத்யா சிறப்பாக ஆடி அரை சதமடித்து 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், சேலம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.
மதுரை அணி சார்பில் முருகன் அஷ்வின் 3 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
- டென்னிஸ் கோர்ட்டில் அறிமுகப்படுத்தியபோது சச்சின் எழுந்து நின்று கையசைத்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி, வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் நடைபெற்று வரும் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இங்கிலாந்தின் கேமரூன் நூரி ஆகியோர் விளையாடினர்.
இந்தப் போட்டியை நேரில் காண இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சென்றார். அப்போது அவரை டென்னிஸ் கோர்ட்டில் அறிமுகப்படுத்தியபோது எழுந்து நின்று கை அசைத்தார். அவருடன் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோரும் இந்தப் போட்டியை கண்டுகளித்தனர்.
It's great to welcome you back to Centre Court, @sachin_rt ?#Wimbledon | @BCCI | @ICC pic.twitter.com/SwIMwsYVLa
— Wimbledon (@Wimbledon) July 6, 2024
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே 115 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய இந்தியா 102 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஹராரே:
ஜிம்பாப்வே, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கிளைவ் மதானே 29 ரன்கள் எடுத்தார். பிரையன் பென்னட் மற்றும் டியான் மேயர்ஸ் ஆகியோர் 23 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 4 ஓவரில் 2 மெய்டன் உள்பட 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். வாஷிங்டன் ஓரளவு ஆடி 27 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இந்திய அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.
டி20 தொடரில் ஜிம்பாப்வே 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, சதாரா 3 விக்கெட் வீழ்த்தினர்.
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனையான கோகோ காப், பிரிட்டிஷ் வீராங்கனை சோனா கர்தால் உடன் மோதினார்.
இதில் கோகோ காப் 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்டியூக்கை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- முதலில் ஆடிய திண்டுக்கல் 160 ரன்களை எடுத்தது.
- அடுத்து ஆடிய திருச்சி 144 ரன்கள் எடுத்து தோற்றது.
சேலம்:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில், மாலை 3.15 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் அரை சதமடித்து 78 ரன்னில் அவுட்டானார். பாபா இந்திரஜித் 33 ரன்னில் வெளியேறினார்.
திருச்சி அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஈஸ்வரன் ஹாட்ரிக் உள்பட 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. அந்த அணியில் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.
அந்த அணியின் ராஜ்குமார் 17 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இதன்மூலம் நடப்பு தொடரில் திண்டுக்கல் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
திண்டுக்கல் அணி சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே 115 ரன்கள் எடுத்தது.
ஹராரே:
ஜிம்பாப்வே, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த அணியில் பிரையன் பென்னட் மற்றும் டியான் மேயர்ஸ் ஆகியோர் 23 ரன்கள் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய கிளைவ் மதானே 29 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 4 ஓவரில் 2 மெய்டன் உள்பட 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் வீழ்த்தினார்.






