டிஎன்பிஎல்: மதுரை வெற்றிபெற 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேலம்

முதலில் ஆடிய சேலம் 180 ரன்களை குவித்தது. அந்த அணியின் கவின், விஷால் வைத்யா அரை சதமடித்தனர்.
டிஎன்பிஎல்: மதுரை வெற்றிபெற 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேலம்
Published on

சேலம்:

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக கவின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 70 ரன்னில் அவுட்டானார். விஷால் வைத்யா சிறப்பாக ஆடி அரை சதமடித்து 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், சேலம் அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

மதுரை அணி சார்பில் முருகன் அஷ்வின் 3 விக்கெட்டும், அலெக்சாண்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com