என் மலர்
விளையாட்டு
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையரில் நடந்த 2வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ரொமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-0,7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று முன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையரில் இந்திய ஜோடி காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.
மக்காவ்:
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் சூங் ஹோன் ஜியான் - முகமது ஹைகல் ஜோடி உடன் மோதியது.
இதில் 21-14 என முதல் செட்டை மலேசியா ஜோடி வென்றது. 2வது செட்டை இந்திய ஜோடி 21-13 என கைப்பற்றியது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மலேசியா ஜோடி 22-20 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
- கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது.
- ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 3வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
டொரன்டோ:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையரில் நேற்று நடைபெற்ற 3வது சுற்று ஆட்டத்தில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாபிரின் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5 என முதல் செட்டை கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட ஆஸ்திரேலிய வீரர் அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஜாக் கிராலி, ஹாரி புரூக் அரை சதம் அடித்தனர்.
ஓவல்:
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜாக் கிராலி, ஹாரி புரூக் அரை சதம் அடித்தனர்.
இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 23 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்தியா 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார். கே எல் ராகுல் 7 ரன்னிலும், சாய் சுதர்சன் 11 ரன்னிலும் அவுட்டாகினர். ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 53 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜெய்ஸ்வால் 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- இந்தியா முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் எடுத்தார்.
ஓவல்:
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருந்தது. கருண் நாயர் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இந்தியா 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஜோஷ் டாங்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது.
முதல் விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்த நிலையில், பென் டக்கெட் 43 ரன்னில் அவுட்டானார். ஜாக் கிராலி அரை சதம் கடந்து 64 ரன்னில் வெளியேறினார். ஜோ ரூட் 29 ரன்னிலும், ஒல்லி போப் 22 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஹாரி புரூக் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இந்திய வீரர் லக்ஷயா சென் காலிறுதி சுற்றில் வென்றார்.
மக்காவ்:
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் சூ சுவான் சென் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-14, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் மன்னேபல்லி சீனாவின் ஹூ ஜென்னை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
- மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 199 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
- இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 200 விக்கெட்டுகளை கடந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 224 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தும் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.
முகமது சிராஜ் போப், ஜோ ரூட், முகமது சிராஜ் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டிக்கு முன்னதாக முகமது சிராஜ் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 199 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஒல்லி போப் விக்கெட்டை வீழ்த்தியபோது, சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- தென் ஆப்பிரிக்கா ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ள உலக சாம்பியன்ஷிப் லெஜென்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. கடைசி பந்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைபட்ட நிலையில் அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது.
இதனால் தென் ஆப்பிரிக்கா ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நாளை நடைபெறும் இறுதி ஆட் டத்தில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
- ஜிம்பாப்வே இரண்டு இன்னிங்சிலும் முறையே 149 ரன்களும், 165 ரன்கள் எடுத்தது.
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 307 ரன்கள் குவித்தது.
ஜிம்பாப்வே- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் புலவாயோவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து வீரர் மாட் ஹென்ரி 6 விக்கெட் வீழ்த்தினார். நாதன் ஸ்மித் 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 307 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. டேவன் கான்வே 88 ரன்களும், டேரில் மிட்செல் 80 ரன்களும் அடித்தனர். 158 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே 2ஆவது இன்னிங்சை தொடங்கியது.
நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 2 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே 165 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மிட்செல் சான்ட்னெர் 4 விக்கெட்டும் மாட் ஹென்ரி மற்றும் ஓ'ரூர்கே ஆகியோர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஜிம்பாப்வே 165 ரன்களில் சுருண்டதால், ஒட்டுமொத்தமாக 7 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. இதனால் 8 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 1 விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்திய தரப்பில் கருண் நாயர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட் வீழ்த்தினார்.
ஓவல்:
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கே.எல்.ராகுல் 14 ரன்னில் அவுட்டானார். சாய் சுதர்சனுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.
3வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 21 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடிய சாய் சுதர்சன் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 9 ரன்னில் அவுட்டானார். மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.
7வது விக்கெட்டுக்கு கருண் நாயருடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. பொறுப்புடன் ஆடிய கருண் நாயர் அரை சதம் கடந்தார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கருண் நாயர் 57 ரன்னிலும் வாஷிங்டன் சுந்தர் 26 ரன்னிலும் சிராஜ் 0, பிரஷித் கிருஷ்ணா 0 எனவும் வெளியேறினார்.
இதனால் இந்திய அணி 224 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட் வீழ்த்தினார்.
- முதல் இன்னிங்சில் 2 விக்கெட் வீழ்த்தினார்.
- 2ஆவது இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றினார்.
இங்கிலாந்தின் செஸ்டரில் துர்காம்- சுர்ரே அணிகளுக்கு இடையிலான கவுன்ட்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. சுர்ரே அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் விளையாடி வருகிறார்.
முதல் இன்னிங்சில் துர்காம் 153 ரன்னில் சுருண்டது. சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் சுர்ரே முதல் இன்னிங்சில் 322 ரன்கள் குவித்தது.
169 ரன்கள் பின்தங்கிய நிலையில் துர்காம் அணி 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. அந்த அணி 344 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. சாய் கிஷோர் அபாரமான பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். 113.4 ஓவரில் 41.4 ஓவர்கள் வீசினார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சுர்ரே 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- டிசம்பர் 24ஆம் தேதி மும்பை வான்கடே மைதானம் வருகை தருகிறார்.
- கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவார் எனத் தகவல்.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.
பார்சிலோனா, பிஎஸ்ஜி அணிகளுக்காக விளையாடிய நிலையில், தற்போது அமெரிக்காவில் உள்ள இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மெஸ்சி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வான்கடே மைதானம் வரும் மெஸ்சி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தற்போதைய கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மெஸ்சி வருகை தொடர்பான அனைத்து விசயங்களும் இறுதி செய்யப்பட்டபின், முழு அட்டவணையை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வெளியிடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.






