என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்காவ் ஓபன் பேட்மிண்டன்"

    • மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

    மக்காவ்:

    மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் ஆல்வின் பர்ஹான் உடன் மோதினார்.

    இதில் 16-21, 9-21 என்ற செட் கணக்கில் லக்ஷ்யா சென் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் இந்திய வீரர் தருண் மன்னேபல்லி மலேசியாவின் ஜஸ்டின் ஹோவிடம் வீழ்ந்தார்.

    • மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையரில் இந்திய ஜோடி காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.

    மக்காவ்:

    மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் சூங் ஹோன் ஜியான் - முகமது ஹைகல் ஜோடி உடன் மோதியது.

    இதில் 21-14 என முதல் செட்டை மலேசியா ஜோடி வென்றது. 2வது செட்டை இந்திய ஜோடி 21-13 என கைப்பற்றியது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை மலேசியா ஜோடி 22-20 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இந்திய வீரர் லக்‌ஷயா சென் காலிறுதி சுற்றில் வென்றார்.

    மக்காவ்:

    மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் சூ சுவான் சென் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-14, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் மன்னேபல்லி சீனாவின் ஹூ ஜென்னை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். 

    • மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையரில் இந்திய ஜோடி 2வது சுற்றில் வெற்றி பெற்றது.

    மக்காவ்:

    மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் ஹிரோகி நிஷி-காகேரு குமாகாய் ஜோடி உடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 10-21 என இழந்த இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 22-20, 21-16 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் சாய் பிரதீக்-பிருதிவி கிருஷ்ணமூர்த்தி ராய் ஜோடி, மலேசிய ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

    • மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இந்திய வீரர் லக்‌ஷயா சென் 2வது சுற்றில் வென்றார்.

    மக்காவ்:

    மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் வார்டயோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-14, 14-21, 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் மன்னேபல்லி ஹாங்காங் வீரரை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    ×