என் மலர்
விளையாட்டு
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா டாப்-10 இடத்திற்குள் நுழைந்துள்ளார்.
துபாய்:
இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அவரைவிட 1 புள்ளி மட்டுமே பின்தங்கி இருந்த இந்திய கேப்டன் விராட் கோலிக்கு மீண்டும் முதலிடத்தை எட்டுவதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் முதல் இன்னிங்சில் மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதிலும் அவர் 12 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். இதனால் 10 புள்ளிகளை இழந்துள்ள கோலி 2-வது இடத்தில் தொடருகிறார்.
இந்த டெஸ்டில் 212 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்திய இந்திய வீரர் ரோகித் சர்மா கிடுகிடுவென 12 இடங்கள் எகிறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன்பாக 44-வது இடத்தில் இருந்த ரோகித் சர்மா இந்த தொடரில் மொத்தம் 529 ரன்கள் குவித்ததன் மூலம் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளார்.
இதன் மூலம் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் டாப்-10 இடத்திற்குள் நுழைந்த 3-வது இந்தியர் என்ற சிறப்பை பெற்றார். ஏற்கனவே ஒரு நாள் போட்டியில் அதிகபட்சமாக 2-வது இடத்திலும் (2018-ம் ஆண்டு பிப்ரவரி), சர்வதேச 20 ஓவர் போட்டியில் 7-வது இடத்திலும் (2018-ம் ஆண்டு நவம்பர்) இருந்துள்ளார். விராட் கோலி மூன்று வடிவிலான போட்டிகளிலும் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரித்து இருக்கிறார். ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் டெஸ்ட், 20 ஓவர் போட்டியில் முதலிடத்திலும், ஒரு நாள் போட்டியில் 8-வது இடத்திலும் இருந்துள்ளார்.
ராஞ்சி டெஸ்டில் 115 ரன்கள் விளாசிய இந்திய துணை கேப்டன் அஜிங்யா ரஹானே 4 இடங்கள் உயர்ந்து 5-வது இடத்துக்கு வந்துள்ளார். புஜாரா 4-வது இடத்திலும், மயங்க் அகர்வால் 18-வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா 2-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள். காயத்தால் தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரை தவற விட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 3-ல் இருந்து 4-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். கடைசி டெஸ்டில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3 இடங்கள் சறுக்கி 10-வது இடத்துக்கு சரிந்துள்ளார். மற்ற இந்திய பவுலர்கள் முகமது ஷமி 15-வது இடத்திலும் (ஒரு இடம் அதிகரிப்பு), உமேஷ் யாதவ் 24-வது இடத்திலும் (ஒரு இடம் உயர்வு) இருக்கிறார்கள்.
டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர் முதலிடமும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 2-வது இடமும் வகிக்கிறார்கள். அஸ்வின் ஒரு இடம் பின்தங்கி 6-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.
அணிகளின் தரவரிசையில் இந்தியா நம்பர் ஒன் இடத்தில் கம்பீரமாக பயணிக்கிறது. தென்ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றியதன் மூலம் கூடுதலாக 5 புள்ளிகளை பெற்ற இந்தியா மொத்தம் 119 புள்ளிகளுடன் இருக்கிறது. அதே சமயம் தொடரை பறிகொடுத்ததால் 7 புள்ளிகளை இழந்துள்ள தென்ஆப்பிரிக்கா 102 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. நியூசிலாந்து 2-வது இடத்திலும் (109 புள்ளி), இங்கிலாந்து 3-வது இடத்திலும் (104 புள்ளி), ஆஸ்திரேலியா 5-வது இடத்திலும் (99 புள்ளி) உள்ளன.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த தொடரில் வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அவரைவிட 1 புள்ளி மட்டுமே பின்தங்கி இருந்த இந்திய கேப்டன் விராட் கோலிக்கு மீண்டும் முதலிடத்தை எட்டுவதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் முதல் இன்னிங்சில் மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதிலும் அவர் 12 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். இதனால் 10 புள்ளிகளை இழந்துள்ள கோலி 2-வது இடத்தில் தொடருகிறார்.
இந்த டெஸ்டில் 212 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்திய இந்திய வீரர் ரோகித் சர்மா கிடுகிடுவென 12 இடங்கள் எகிறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன்பாக 44-வது இடத்தில் இருந்த ரோகித் சர்மா இந்த தொடரில் மொத்தம் 529 ரன்கள் குவித்ததன் மூலம் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளார்.
இதன் மூலம் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் டாப்-10 இடத்திற்குள் நுழைந்த 3-வது இந்தியர் என்ற சிறப்பை பெற்றார். ஏற்கனவே ஒரு நாள் போட்டியில் அதிகபட்சமாக 2-வது இடத்திலும் (2018-ம் ஆண்டு பிப்ரவரி), சர்வதேச 20 ஓவர் போட்டியில் 7-வது இடத்திலும் (2018-ம் ஆண்டு நவம்பர்) இருந்துள்ளார். விராட் கோலி மூன்று வடிவிலான போட்டிகளிலும் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரித்து இருக்கிறார். ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் டெஸ்ட், 20 ஓவர் போட்டியில் முதலிடத்திலும், ஒரு நாள் போட்டியில் 8-வது இடத்திலும் இருந்துள்ளார்.
ராஞ்சி டெஸ்டில் 115 ரன்கள் விளாசிய இந்திய துணை கேப்டன் அஜிங்யா ரஹானே 4 இடங்கள் உயர்ந்து 5-வது இடத்துக்கு வந்துள்ளார். புஜாரா 4-வது இடத்திலும், மயங்க் அகர்வால் 18-வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா 2-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள். காயத்தால் தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரை தவற விட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 3-ல் இருந்து 4-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். கடைசி டெஸ்டில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3 இடங்கள் சறுக்கி 10-வது இடத்துக்கு சரிந்துள்ளார். மற்ற இந்திய பவுலர்கள் முகமது ஷமி 15-வது இடத்திலும் (ஒரு இடம் அதிகரிப்பு), உமேஷ் யாதவ் 24-வது இடத்திலும் (ஒரு இடம் உயர்வு) இருக்கிறார்கள்.
டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர் முதலிடமும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 2-வது இடமும் வகிக்கிறார்கள். அஸ்வின் ஒரு இடம் பின்தங்கி 6-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.
அணிகளின் தரவரிசையில் இந்தியா நம்பர் ஒன் இடத்தில் கம்பீரமாக பயணிக்கிறது. தென்ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்றியதன் மூலம் கூடுதலாக 5 புள்ளிகளை பெற்ற இந்தியா மொத்தம் 119 புள்ளிகளுடன் இருக்கிறது. அதே சமயம் தொடரை பறிகொடுத்ததால் 7 புள்ளிகளை இழந்துள்ள தென்ஆப்பிரிக்கா 102 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. நியூசிலாந்து 2-வது இடத்திலும் (109 புள்ளி), இங்கிலாந்து 3-வது இடத்திலும் (104 புள்ளி), ஆஸ்திரேலியா 5-வது இடத்திலும் (99 புள்ளி) உள்ளன.
யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் ஸ்டெர்லிங், கிலியன் மப்பே அபாரமாக விளையாட மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி அணிகள் அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன.
யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் சிட்டி - அட்லாண்டா அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் சிட்டி 5-1 என வெற்றி பெற்றது. ரஹீம் ஸ்டெர்லிங் மூன்று கோல்களும், செர்ஜியோ அக்யூரோ இரண்டு கோல்களும் அடித்தனர்.

டோட்டன்ஹாம் ஸ்வேஸ்டா அணியை 5-0 என தோற்கடித்தது. ஹாரி கேன் இரண்டு கோல்கள் அடித்தார்.
யுவான்டஸ் 2-1 என லோகோமோட்டிவ் மாஸ்கோ அணியை வீழ்த்தியது. பேயர்ன் முனிச், ரியல் மாட்ரிட், அட்லாண்டிகோ மாட்ரிட் அணிகளும் வெற்றி பெற்றன.
மற்றொரு ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் ப்ரூக் அணியை 5-0 என வீழ்த்தியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கிலியன் மப்பே மூன்று கோல்களும், இக்கார்டி இரண்டு கோல்களும் அடித்தனர்.

டோட்டன்ஹாம் ஸ்வேஸ்டா அணியை 5-0 என தோற்கடித்தது. ஹாரி கேன் இரண்டு கோல்கள் அடித்தார்.
யுவான்டஸ் 2-1 என லோகோமோட்டிவ் மாஸ்கோ அணியை வீழ்த்தியது. பேயர்ன் முனிச், ரியல் மாட்ரிட், அட்லாண்டிகோ மாட்ரிட் அணிகளும் வெற்றி பெற்றன.
கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணியை கோவா அணி வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
கோவா:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் கோவாவின் நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவாவை சந்தித்தது.
ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் கோவா அணியின் செய்மின்லென் டங்கல் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
தொடர்ந்து, இரண்டாவது பாதியில் 62வது நிமிடத்தில் பெரான் கரோமினாஸ் 2வது கோல் அடித்தார். சென்னை அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
கடைசி கட்டத்தில் ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் கர்லோஸ் பெனா 3வது கோல் அடித்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப் சி அணியை வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்தது.
அபுதாபியில் நடைபெற இருக்கும் டி10 கிரிக்கெட் லீக் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அபுதாபியில் 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான லீக் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள ஏராளமான பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் போர்டு தடையில்லா சான்றிதழ் வழங்கியிருந்தது.
தற்போது அந்த தடையில்லா சான்றிதழ் திரும்பப் பெற்றுள்ளது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் டி10 லீக்கில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வீரர்களின் உடற்தகுதி, வேலைப்பளு மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
இந்த முடிவால் குவாலண்டர்ஸ் அணி பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாகித் அப்ரிடி, முகமது ஹபீஸ், இமாத் வாசிம், பஹீம் அஷ்ரப், இம்ரான் நசீர் ஆகியோரை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வங்காளதேச அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, பும்ராவுக்கு பதில் புது வீரர் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன எம்எஸ் டோனிக்கு மாற்று வீரராக ரிஷப் பந்தை உருவாக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் விரும்புகிறது.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய திறமைப் படைத்த ரிஷப் பந்தால் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக விக்கெட் கீப்பிங் தகுதியை வைத்து தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சகாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான வீரர்களின் தேர்வு நாளை நடக்கிறது. இதில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
அதன்பின் ரிஷப் பந்த் நிலை குறித்து பேசப்படும். ஒருவேளை அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ரிஷப் பந்துக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டால், வங்காளதேச தொடரில் இடம்பெறுவார்.
இல்லையெனில் அவருக்கு போட்டியாக கருதப்படும் சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. ஒருவேளை சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டால் ரிஷப் பந்துக்கு கடும் நெருக்கடி ஏற்படும். தொடர்ந்து மூன்று வகை கிரிக்கெட்டிலும் அவரால் எளிதாக பங்கேற்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.

வேகப்பந்து வீச்சில் பும்ரா இல்லை. அவருக்குப் பதிலாக இசாந்த் சர்மா அல்லது நவ்தீப் சைனி சேர்க்கப்படலாம். ஏற்கனவே உமேஷ் யாதவ், முகமது ஷமி உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக ரிஷப் பந்த் தேர்வு குறித்துதான் அதிக அளவில் விவாதம் நடக்கும் எனத் தெரிகிறது.

ஹர்திக் பாண்டியா காயத்திற்காக ஆபரேசன் செய்துள்ளதால், அவரால் இடம் பெற முடியாது. ஒருவேளை அணி நிர்வாகம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் தேவை என்று விரும்பினால், ஷிவம் டுபே தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

வேகப்பந்து வீச்சில் பும்ரா இல்லை. அவருக்குப் பதிலாக இசாந்த் சர்மா அல்லது நவ்தீப் சைனி சேர்க்கப்படலாம். ஏற்கனவே உமேஷ் யாதவ், முகமது ஷமி உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக ரிஷப் பந்த் தேர்வு குறித்துதான் அதிக அளவில் விவாதம் நடக்கும் எனத் தெரிகிறது.
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீரர்காளன ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, காஷ்யப் ஆகியோர் தொடரின் தொடக்கத்திலேயே வெளியேறினர்.
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டனில் இந்தியா சார்பில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்டவர்கள் தொடக்கத்திலேயே ஏமாற்றம் அளித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் சமீர் வர்மா கென்ட்டா நிஷிமோட்டோவை எதிர்கொண்டார். இதில் 22-20, 18-21, 18-21 என தோல்வியடைந்தார்.
காஷ்யப் லாங் அங்குஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் காஷ்யப் 11-21, 9-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
ஸ்ரீகாந்த் கிடாம்பி உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சோயு தியென் சென்-ஐ எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 21-15, 7-21, 14-21 எனத் தோல்வியடைந்து வெளியேறினார். சென்னுக்கு எதிராக ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக நான்கு முறை தோல்விகளை சந்தித்துள்ளார்.

மற்றொரு ஆட்டத்தில் சமீர் வர்மா கென்ட்டா நிஷிமோட்டோவை எதிர்கொண்டார். இதில் 22-20, 18-21, 18-21 என தோல்வியடைந்தார்.
காஷ்யப் லாங் அங்குஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் காஷ்யப் 11-21, 9-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
குஜராத்தை ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விஜய் ஹசாரே டிராபி தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு.
விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. பெங்களூருவில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு - குஜராத் அணிகள் மோதின.
டாஸ் வென்ற தமிழ்நாடு பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. மழைக்காரணமாக அவுட்பீல்டு ஈரப்பதமாக காணப்பட்டதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் போட்டி 40 ஓவராக குறைக்கப்பட்டது. தமிழ்நாடு அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் குஜராத் பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்க திணறினர். இறுதியில் குஜராத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ராவல் 40 ரன்களும், பட்டேல் 47 ரன்களும் சேர்த்தனர். தமிழ்நாடு அணி சார்பில் முகமது மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணியின் அபிநவ் முகுந்த், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முரளி விஜய் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார். அடுத்த வந்த பாபா அபரஜித் 6 ரன்னில் வெளியேறினார்.
அபிநவ் முகுந்த் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 47 பந்தில் 47 ரன்கள் சேர்த்து நம்பிக்கையூட்டினார். ஷாருக் கான் ஆட்டமிழக்காமல் 46 பந்தில் 56 ரன்கள் சேர்க்க தமிழ்நாடு 39 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்து ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
தமிழ்நாடு, குஜராத் அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்திருந்தனர். லீக் ஆட்டத்திலும் குஜராத் அணியை தமிழ்நாடு வீழ்த்தியிருந்தது குறுப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் சத்தீஷ்கர் - கர்நாடகா அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய சத்தீஷ்கர் பேட்ஸ்மேன்கள் கர்நாடகாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.
அமன்தீப் கார் 78 ரன்களும், ருய்கர் 40 ரன்களும் சேர்க்க 49.4 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது சத்தீஷ்கர்.
பின்னர் 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா களம் இறங்கியது. தொடக்க வீரர்களான கேஎல் ராகுல், படிக்கல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். படிக்கல் 98 பந்தில் 92 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து மயங்க் அகர்வால் களம் இறங்கினார். கேஎல் ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். கர்காடகா 40 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கேஎல் ராகுல் 88 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 47 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நாளை மறுநாள் பெங்களூருவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தென்ஆப்பிரிக்கா படுதோல்வி அடைந்தது. இதனால் முன்னாள் வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்ப இருப்பதாக செய்திகள் உலா வருகின்றன.
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரர்களான டி வில்லியர்ஸ், ஹசிம் அம்லா, ஸ்டெயின் போன்ற முன்னணி வீரர்கள் ஓய்வுக்குப் பிறகு அந்த அணி தத்தளித்து வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என படுமோசமாக இழந்தது. இதனால் ஹசிம் அம்லா ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்புகிறார் என செய்தி உலா வந்தனர்.
ஆனால் ஹசிம் அம்லா இந்த செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார். இதுகுறித்து அம்லா கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்க தேசிய அணிக்கு நான் மீண்டும் திரும்பவதற்கான வழியே இல்லை. 15 வருடங்கள் அணிக்காக விளையாடிய பின்னர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு முடிவை அறிவித்தேன்’’ என்றார்.

கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் முக்கியமான நபர். எனது முழு ஆதரவும் அவருக்கு உண்டு என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இன்று அதிகாரப்பூர்வமாக தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
தலைவர் பதவியை ஏற்ற பிறகு அவர் பேசுகையில் ‘‘இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான நபர் கேப்டன் விராட் கோலி. அவருக்கு எனது முழு ஆதரவும் உண்டும். நாளை அவருடன் பேச இருக்கிறேன்’’ என்றார்.
மேலும், ‘‘நம்பகத்தன்மையில் எந்த சமரசமும் இல்லை. இந்திய அணியின் கேப்டனாக எப்படி செயல்பட்டனோ, அதேபோல் பிசிசிஐ-யை வழி நடத்துவேன். டெஸ்ட் கிரிக்கெட்டை பிரபலமாக்குவது எப்படி என்பது குறித்து ஆராய வேண்டும்.
கிரிக்கெட் போட்டியில் பல மாற்றங்களை கொண்டு வருவது சிறந்தது அல்ல. மாற்றங்களை கொண்டு வரும்போது போட்டியை புரிந்து கொள்ள கடினமாக உள்ளது. இதுவரை எம்எஸ் டோனியை நான் சந்திக்கவில்லை. சந்தித்த பின்னர்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையிலான உறவு இணக்கமானதாக இருக்கும். அவர் இந்திய அணியை வேறு லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளார். முதல்தர கிரிக்கெட் மீது அதிக கவனம் செலுத்தப்படும். ரஞ்சி டிராபியை சிறந்த போட்டித் தொடராக உருவாக்குவோம். டோனி, விராட் கோலி, ரகானே, ரோகித் சர்மா போன்றோர் அங்கிருந்து வந்தவர்கள்தான்’’ என்றார்.

எம்எஸ் டோனி இந்திய அணியில் விளையாடுவாரா என்பது புரியாத புதிராக உள்ள நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி அதுகுறித்து பதில் அளித்துள்ளார்.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. கேப்டன் பதவிகளில் இருந்து விலகிய அவர், தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.
சமீப காலமாக போட்டியை சிறப்பாக முடிப்பதில் எம்எஸ் டோனி திணறி வருகிறார். 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் டோனி சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருக்கிறார்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.
ஆனால், கிரிக்கெட் துறையைச் சேர்ந்தவர்கள் ஓய்வு என்பது எம்எஸ் டோனியுடன் முடிவு. அவர்தான் ஓய்வு குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் பிசிசிஐ தலைவராக இன்று பொறுப்பேற்ற சவுரவ் கங்குலியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது கங்குலி ‘‘சாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெற்று விடமாட்டார்கள். நான் அவருடன் இதுகுறித்து பேச இருக்கிறேன்’’ என்றார்.
இதனால் எம்எஸ் டோனி தற்போது ஓய்வு பெற மாட்டார் என்பது தெளிவாகியுள்ளது.

தென்ஆப்பிரிக்கா தொடரில் மூன்று சதங்களுடன் 500 ரன்களுக்கு மேல் குவித்த ரோகித் சர்மா பேட்ஸ்மேன் தரவரிசையில் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா ஒரு இரட்டை சதத்துடன் மூன்று சதங்கள் விளாசினார். 500 ரன்களுக்கு மேல் குவித்த ரோகித் சர்மா, ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் மிகப்பெரிய அளவில் ஜம்ப் ஆகியுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா தொடருக்கு முன் 54-வது இடத்தில் இருந்தார். தற்போது 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஏற்கனவே விராட் கோலி 2-வது இடத்திலும், புஜாரா 4-வது இடத்திலும், ரகானே ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். தற்போது ரோகித் சர்மாவும் 10-வது இடத்திற்குள் நுழைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39-வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 2016 ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது முறைகேடு வழக்கு பதிவானது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை சீரமைப்பதற்காக நீதிபதி லோதா தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாததால் பி.சி.சி.ஐ தலைவர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரின் பதவி பறிக்கப்பட்டது.
இதையடுத்து பி.சி.சி.ஐ.யை நிர்வகிக்க உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. புதிதாக கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் பதவியேற்றவுடன் இந்த நிர்வாக குழு பதவி விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து பி.சி.சி.ஐ நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவரே ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.
உச்சநீதிமன்றத்தின் நிர்வாக குழுவின் 33 மாத நிர்வாகம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் பி.சி.சி.ஐ தலைவராக அதிகாரப்பூர்வமாக சவுரவ் கங்குலி இன்று பதவியேற்றார். மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அவர் பதவியேற்றார். அடுத்த 9 மாதங்களுக்கு கங்குலி பிசிசிஐ-க்கு தலைமை தாங்குவார்.
மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மஹிம் வர்மா புதிய துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் மகன் ஜே ஷா செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர்களும் இன்று பதவியேற்றனர்.
முன்னாள் பி.சி.சி.ஐ தலைவரும், நிதித்துறை இணை மந்திரியுமான அனுராக் தாக்கூரின் தம்பி அருண் துமால் பொருளாளராகவும், கேரளாவைச் சேர்ந்த ஜெயேஷ் ஜார்ஜ் இணை செயலாளராகவும் பதவியேற்றுள்ளனர்.
மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த சவுரவ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.