search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 54-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறினார் ரோகித் சர்மா

    தென்ஆப்பிரிக்கா தொடரில் மூன்று சதங்களுடன் 500 ரன்களுக்கு மேல் குவித்த ரோகித் சர்மா பேட்ஸ்மேன் தரவரிசையில் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா ஒரு இரட்டை சதத்துடன் மூன்று சதங்கள் விளாசினார். 500 ரன்களுக்கு மேல் குவித்த ரோகித் சர்மா, ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் மிகப்பெரிய அளவில் ஜம்ப் ஆகியுள்ளார்.

    ஐசிசி டெஸ்ட் தரவரிசை

    தென்ஆப்பிரிக்கா தொடருக்கு முன் 54-வது இடத்தில் இருந்தார். தற்போது 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஏற்கனவே விராட் கோலி 2-வது இடத்திலும், புஜாரா 4-வது இடத்திலும், ரகானே ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். தற்போது ரோகித் சர்மாவும் 10-வது இடத்திற்குள் நுழைந்துள்ளார்.
    Next Story
    ×