என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கேப்டன் பதவியை துறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், எதற்கும் தயார் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
    மூன்று வகை கிரிக்கெட்டிலும் நியூசிலாந்து அணி கேப்டனாக கேன் வில்லியம்சன் உள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்திருந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று போட்டிகளிலும் ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். கேன் வில்லியம்சனும் ரன்கள் குவிக்கவில்லை.

    இதனால் குறைந்தபட்சம் டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியையாவது ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் அணிக்கு உதவும் என்றால் கேப்டன் பதவியை துறக்க தயார் என்று கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், உங்களுடைய பிரார்த்தனையில் எங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்ற வங்காளதேச வீரரின் டுவிட் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    வங்காளதேசம் கிரிக்கெட்  அணி  பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து  இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள்  ஒருநாள் போட்டி கொண்ட  தொடரில் விளையாட உள்ளது. முதலில் டி20 தொடர் நடக்கிறது. அதன்பின் ஒரு டெஸ்ட் போட்டி நடக்கிறது. இறுதியாக ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி நடக்கிறது. பாதுகாப்பு காரணத்திற்காக இப்படி நடத்தப்படுகிறது.

    முன்னதாக பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை மோசமாக இருப்பதால் வங்காள தேச கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடருக்காக பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை. முஷ்பிகுர் ரஹிம் போன்ற மூத்த வீரர்கள் தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாகிஸ்தான் செல்ல தயங்கினர். அதன்பிறகு, வங்காளதேச இளம் வீரர்களும்  சுற்று பயணத்திலிருந்து வெளியேற இருந்தனர்.

    இருப்பினும், இரு அணிகளின் அதிகாரிகளும் துபாயில் பலகட்ட ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு   வங்காளதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி) தங்கள் அணியை கிரிக்கெட் தொடருக்கு அனுப்ப ஒப்புக்கொண்டது. ஆனால் நிர்பந்தம் செய்ய மாட்டோம் என வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தெரிவித்தது.

    இந்த நிலையில் நேற்று வங்காளதேச அணி வீரர்கள் பாகிஸ்தான் புறப்பட்டு சென்றனர். அதற்கு முன்  முஸ்டாபிஜூர் ரஹ்மான் செய்த ட்விட் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

    அணி புறப்படுவதற்கு முன்னர் தனது அணியினருடன் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்த ரஹ்மான் அதில் டுவிட்டரில் பதிவிட்டு  தம்மைப் பின்பற்றுபவர்களிடம் அவர்களுக்காக பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டார்: அதில் "பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், உங்கள் பிரார்த்தனைகளில் எங்களை நினைவில் கொள்ளுங்கள்’’ என கூறி உள்ளார்.

    பாகிஸ்தானின் பாதுகாப்பு காரணத்தை சுட்டிக்காட்டிதான் இப்படி டுவிட் செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
    இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான ஏழு மணி நேர வேறுபாட்டை அனுசரித்துக் கொள்வது மிகவும் கடினம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 3-வது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19-ந்தேதி) நடைபெற்றது.

    இந்த போட்டி முடிந்த உடன் இந்தியா நியூசிலாந்து புறப்பட்டுச் சென்றது. நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை (24-ந்தேதி) தொடங்குகிறது. ஆஸ்திரேலியா தொடருக்கும் நியூசிலாந்து தொடருக்கும் இடையில் நான்கு நாட்கள் மட்டுமே இடைவெளி இருக்கிறது. இதற்குள் இந்தியா நியூசிலாந்து செல்ல வேண்டும்.

    இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான நேர வித்தியாசம் 7 மணி நேரமாகும். நான்கு நாட்களுக்குள் ஏழு மணி நேர வேறுபாட்டை அனுசரித்துக் கொள்வது மிகவும் கடினம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இதுபோன்று பயணம் செய்து வரும்போது இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான ஏழு மணி நேர வித்தியாசத்தை உடனடியாக அனுசரித்துக் கொள்வது மிகவும் கடினம். வரும் காலத்தில் இதுபோன்று நடக்காத வண்ணம் ஆலோசிக்கப்படும் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும்.

    நியூசிலாந்து பயணத்துக்கு முன் நாங்கள் ஆஸ்திரேலியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடினோம். அப்போது நாங்கள் அதிக நேரம் மைதானத்தில் செலவழித்தோம். ஆனால், அதற்கு முன் சில டி20 போட்டிகளில்தான் விளையாடினோம். டி20-யை விட அதிகமான போட்டிகளில் விளையாடியதால் இங்கே தயாராகுவதற்கான நேரமை் குறைவான இருந்தாலும் எளிதான வழியை கண்டு பிடிப்போம்.

    இந்த தொடரை நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இந்த வருடம் உலக கோப்பை தொடர் இருப்பதால் ஒவ்வொரு டி20 போட்டியும் முக்கியமானது.

    இந்த சீதோஷ்ண நிலையில் நியூசிலாந்து மிக மிக வலிமையான அணி. சொந்த மண்ணில் அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பது தெரியும். ஆடுகளம் எப்படி செயல்படும் உள்ளிட்ட முக்கியம்சங்களை அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள்.

    சொந்த மண்ணில் அவர்கள் விளையாடுவது சற்று சாதகமாக இருந்தாலும், நாங்கள் நியூசிலாந்து மண்ணில் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளோம். கடந்த முறை நாங்கள் இங்கே இரண்டு தொடர்களையும் வென்றுள்ளோம். அதனால் நம்பிக்கையுடன் தொடரை எதிர்கொள்வோம்’’ என்றார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஒட்டிஸ் கிப்சனை வங்காளதேசம் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.
    வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த ஒட்டிஸ் கிப்சன் (வயது 50), தென்ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். உலக கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் நீக்கப்பட்டார்.

    தற்போது வங்காளதேசம் ஒட்டிஸ் கிப்சனை பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது. இவர் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

    இவர் வங்காளதேச அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக 2022 வரை செயல்படுவார். வங்காளதேசம் பாகிஸ்தான் சென்று விளையாடுகிறது. அப்போது ஒட்டிஸ் கிப்சன் அணியில் இணைவார்.
    டிராவல்ஸ் ஏஜென்சியின் உரிமையாளர் என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ரூ. 100 கோடி மான நஷ்ட வழக்கு தொடருவேன் என அசாருதீன் தெரிவித்துள்ளார்.
    மராட்டிய மாநில அவுரங்காபாத் நகரில் உள்ள டேனிஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் ஏஜென்சியின் உரிமையாளர்  முகமது ஷாஹாப் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் மற்றும் கான், அவாக்கல் ஆகிய 2 பேர் மீது சிட்டி சவுக் போலீஸ் நிலையத்தில் ரூ.20.96 லட்சம்  மோசடி செய்ததாக புகார் அளித்து உள்ளார்.

    அவர் அளித்துள்ள புகாரில்  கடந்த ஆண்டு நவம்பரில் முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன்   தனிப்பட்ட உதவியாளரின் வேண்டுகோளின் பேரில் அவருக்கும்  மற்றும் சிலருக்கு ரூ. 20.96 லட்சம் மதிப்புள்ள பல்வேறு சர்வதேச விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததாக தனது புகாரில் குற்றம் சாட்டி உள்ளார்.

    மேலும்  ஆன்லைனில் பணம் செலுத்துவதாக பலமுறை உறுதி அளிக்கப்பட்டதாகவும் ஆனால் பணம் எதுவும் கிடைக்கவில்லை எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.

    இதுகுறித்து போலீஸ் முகமது அசாருதீன் மற்றும் கான், அவாக்கல் ஆகிய மூன்று பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 (மோசடி), 406 ( நம்பிக்கையை மீறுதல்) மற்றும் 34 (பொதுவான நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த குற்றச்சாட்டு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில்,  ‘‘இந்த புகாரில் எந்த உண்மையும் இல்லை, மேலும் இது வெளிச்சத்திற்கு வரும்படி செய்யப்படுகிறது. புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. புகார்தாரருக்கு எதிராக ரூ. 100 கோடி  மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்வேன்’’ என கூறி உள்ளார்.
    நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் எம்எஸ் டோனியின் சாதனையை முறியடிக்க இருக்கிறார் விராட் கோலி.
    நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் டோனியின் சாதனையை விராட் கோலி முறியடிக்கிறார். டோனி 20 ஓவர் போட்டியில் கேப்டனாக பணியாற்றி 1112 ரன் எடுத்துள்ளார். அவர் 62 இன்னிங்சில் கேப்டனாக இருந்துள்ளார். விராட் கோலி 32 இன்னிங்சில் கேப்டனாக பணியாற்றி 1032 ரன் எடுத்துள்ளார். சராசரி 46.90.

    டோனியின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 81 ரன்களே தேவை. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரின்போது அவர் இந்த சாதனையை முறியடிப்பார்.

    தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டு பிளிஸ்சிஸ் 20 ஓவரில் கேப்டன் பதவியில் அதிக ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அவர் 40 இன்னிங்சில் 1273 ரன் எடுத்துள்ளார். டோனி 2-வது இடத்திலும், வில்லியம்சன் (நியூசிலாந்து) 1083 ரன்னுடன் 3-வது இடத்திலும், கோலி அதற்கு அடுத்த இடத்திலும் உள்ளனர்.

    இந்தியா-நியூசிலாந்து இடையேயான 20 ஓவர் தொடரின் போது வில்லியம்சனும், கோலியும் முன்னேற்றம் அடைவார்கள்.

    20 ஓவர் போட்டியில் விராட் கோலி மொத்தம் 2689 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 2633 ரன்னுடன் 2-வது இடத்திலும், கப்தில் (நியூசிலாந்து) 2436 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    இலங்கைக்கு எதிரான தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டதால் ரோகித் சர்மாவை கோலி முந்தினார். இந்த தொடரில் இருவருக்கும் இடையே முன்னிலை பெறுவது தொடர்பாக கடும் போட்டி இருக்கும்.
    இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் நாளை நடக்க உள்ள நிலையில் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    ஆக்லாந்து:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஆக்லாந்தில் நாளை (24-ந்தேதி) நடக்கிறது.

    இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    இந்தியா கடைசியாக ஆடிய ஐந்து 20 தொடர்களில் 4 தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 முறையும் (3-0, 2-1), வங்காளதேசம் (2-1), இலங்கை (2-0) அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறையும் வென்றது. தென்னாப்பிரிக்கா உடனான தொடரை சமன் (1-1) செய்தது.

    இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதால் நியூசிலாந்துக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.

    அதே நேரத்தில் அந்த அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது இந்தியாவுக்கு கடும் சவாலாகஇருக்கும்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்து சென்ற போது 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது.

    பேட்டிங்கில் கேப்டன் விராட்கோலி, ரோகித்சர்மா, லோகேஷ் ராகுல், ஷிரேயாஸ் அய்யர் ஆகியோரும், பந்து வீச்சில் முகமது‌ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ், ‌ஷர்துல்தாகூர் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    விக்கெட் கீப்பரும், இளம் வீரருமான ரி‌ஷப்பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. ராகுல் கீப்பிங் பணியிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தவான் விளையாடாததால் ராகுல் தொடக்க வரிசையில் ஆடுவார். இதனால் மிடில் வரிசையில் ரி‌ஷப்பண்ட் இடம் பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனீஷ்பாண்டே அவரது இடத்தை பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளார்.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலமே. முன்னாள் கேப்டன் டெய்லர், கிராண்ட்ஹோம், காலின்முன்ரோ, குப்தில், பென்னட், சவுத்தி, சான்ட்னர் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள்.

    நியூசிலாந்து அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 2-3 கணக்கில் சொந்த மண்ணில் இழந்தது. இதை இந்தியா சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 12-வது போட்டியாகும். இதுவரை நடந்த 11 ஆட்டத்தில் இந்தியா 3-ல், நியூசிலாந்து 8-ல் வெற்றி பெற்றுள்ளன.

    20 ஓவர் போட்டியில் சிறப்பாக ஆடக்கூடிய நியூசிலாந்தை வீழ்த்த இந்திய அணி கடுமையாக போராடும். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    இந்திய நேரப்படி மதியம் 12.20 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் ஆட்டம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: விராட்கோலி (கேப்டன்) ரோகித்சர்மா, லோகேஷ் ராகுல், ஷிரேயாஸ் அய்யர், ரி‌ஷப்பண்ட், ஜடேஜா, ஷிசிம்துபே, குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது ‌ஷமி, பும்ரா, ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, மனீஷ் பாண்டே, சஞ்சுசாம்சன்.

    நியூசிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), குப்தில், டாம்புரூஸ், டெய்லர், சான்ட்னா, காலின் முன்ரோ, கிராண்ட்ஹோம், பென்னட், சவுத்தி, சோதி, டக்னெர், மிச்சேல், ஸ்காட் குஜ்லின்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா மற்றும் பெலின்டா பென்சிக் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 2-வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த லவுராவை எதிர் கொண்டார். இதில் பிறிஸ்கோவா 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    6-வது வரிசையில் உள்ள பெலின்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து) 2-வது சுற்று ஆட்டத்தில் 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜெலீனாவை (லாத்வியா) தோற்கடித்தார்.

    மற்ற ஆட்டங்களில் 19-வது வரிசையில் உள்ள வெதிக் (குரோஷியா), முகுருரசா (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    உலகின் 4-ம் நிலை வீரரான மெட்வதேவ் (ரஷியா) 2-வது சுற்றில் 7-5, 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மார்ட்டினசை (ஸ்பெயின்) வீழ்த்தினார்.
    ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தனது 2-வது ஆட்டத்திலும் தோல்வி அடைந்து வெளியேறியது.
    போட்செப்ஸ்ட்ரூம்:

    16 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த ‘டி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ஆப்கானிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுக்கு 265 ரன்கள் சேர்த்தது. இப்ராஹிம் ஜட்ரன் (87 ரன்), ரமனுல்லா (81 ரன்) அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 32.4 ஓவர்களில் 105 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 160 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி கால்இறுதிக்கு தகுதி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் ஷபியுல்லா கபாரி 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை புரட்டியெடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

    ‘ஏ’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இலங்கை அணி நிர்ணயித்த 243 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்ட போது, நியூசிலாந்து வீரர் கிறிஸ்டியன் கிளார்க் (9 ரன்), 5-வது பந்தை சிக்சருக்கு விரட்டி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ந்து 2-வது தோல்வியை தழுவிய இலங்கை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

    ‘சி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி 2-வது வெற்றியோடு கால்இறுதியை உறுதி செய்தது. இந்த பிரிவில் வங்காளதேமும் (4 புள்ளி) ஏற்கனவே கால்இறுதியை எட்டி விட்டது. 2-வது தோல்வியை சந்தித்த ஜிம்பாப்வே அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது.

    இன்றைய லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து, நைஜீரியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா தோல்வியடைந்தார்.
    பாங்காக்:

    தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், டென்மார்க் வீராங்கனை லின் ஹோஜ்மார்க்கை சந்தித்தார். 47 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா 13-21, 21-17, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். 5-வது முறையாக லின் ஹோஜ்மார்க்குடன் மோதிய சாய்னா சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 14-21, 11-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஷிசர் ஹிரெனிடம் தோல்வி அடைந்தார். இதே போல் சமீர் வர்மா, பிரனாய் ஆகிய இந்தியர்களும் முதல் சுற்றுடன் நடையை கட்டினர். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து ஆட திட்டமிட்டு இருந்த நிலையில் சானியா மிர்சா விலகி உள்ளார்.
    இந்திய வீராங்கனை 33 வயதான சானியா மிர்சா, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து ஆட திட்டமிட்டு இருந்தார்.

    ஆனால் வலது பின்னங்காலில் பிரச்சினை இருப்பதால் கடைசி நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து சானியா விலகிவிட்டார்.

    அதே சமயம் பெண்கள் இரட்டையர் பிரிவில் அவர் உக்ரைனின் நாடியா கிச்செனோக்குடன் கைகோர்த்து களம் இறங்குகிறார். சானியா-கிச்செனோக் ஜோடி தங்களது முதலாவது சுற்றில் இன்று சீனாவின் ஸின்யுன் ஹான்- லின் ஜூ ஜோடியை சந்திக்கிறது.
    மூன்று வடிவிலான போட்டிகளிலும் வியப்பூட்டும் வகையில் விளையாடி வரும் விராட் கோலி பல சாதனைகளை முறியடிப்பார் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய முன்னணி கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கேப்டன் விராட் கோலி மூன்று வடிவிலான போட்டிகளிலும் நம்ப முடியாத அளவுக்கு வியப்பூட்டும் வகையில் விளையாடி வருகிறார்.

    அவர் ஏற்கனவே பல சாதனைகள் படைத்துள்ளார். இன்னும் பல சாதனைகளை அவர் முறியடிக்கப்போவதை நாம் பார்க்கப்போகிறோம். அவர் ரன் குவிக்கும் வேட்கையுடன் பயணிக்கிறார். அதை தடுப்பது கடினம். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் போது அவரை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இதே போல் கேப்டன்ஷிப்பிலும் அற்புதமாக செயல்படுகிறார்.’ என்றார்.
    ×